Monday, April 30, 2012

காதிர்முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவ-மாணவிகள் சங்க தொடக்கவிழா காட்சிகள்

காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப் பள்ளிகள் முன்னாள் மாணவ-மாணவிகள் சங்க தொடக்க விழா 29/04/2012 மற்றும் 30/04/2012 காதிர் முகைதீன் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க துவக்கவிழா 30/04/2012, திங்கட் கிழமை மாலை நடைபெற்றது. 

நிகழ்ச்சி தீனியாத் ஆசிரியர் நஜ்முத்தீன் கராஅத்துடன் துவங்கியது. பள்ளித் தலைமை ஆசிரியயை திருமதி ரோஸம்மா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.


 தாளாலர் ஹாஜி ஜனாப் டாக்டர் அஸ்லம் அவர்கள் பள்ளியின் வரலாறு மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் அத்தியாவசியம் குறித்து விளக்கினார்கள்.
காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் முன்னாள் மாணவர்கள் சங்கத்தை வாழ்த்தி பேசினார்கள்.
காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர். அப்துல் காதர் அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள்.
காதிர் முகைதீன் கல்லூரி பேரா.ஜெயராமன், பேரா.அப்துல்காதர்,பேரா.கணபதி ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இறுதியில் காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மஹபூப் அலி நன்றியுரை கூறினார்.
நிகழ்ச்சியை காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் அஜ்முதீன் தொகுத்து வழங்கினார்.


நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:

வாவேற்புரை வழங்கிய தலைமை ஆசிரியை திருமதி ரோஸம்மா அவர்கள் பேசும் போது அதிரை எக்ஸ்பிரசில் முன்னாள் மாணவர் சங்க துவக்க விழா அழைப்பிதழில் வந்த அனைத்து பின்னூட்டங்களையும் படித்துக் காட்டி  இந்த் சங்கத்திற்கு இருக்கும் ஆதரவை விளக்கினார்கள்.

தாளாலர் டாக்டர் அஸ்லம் அவர்கள் இக்கல்வி நிறுவனத்தின் வளர்சிக்காக நம் முன்னோர்கள், கல்வித்தந்தை ஹாஜி எஸ்.எம்.எஸ். சேக் ஜலாலுதீன் மரைக்காயர், ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார்,ஹாஜி பாட்சா மரைக்காயர் ஆகியோர் பட்ட கஷ்டங்களை எடுத்துரைத்தார்கள்.

பேரா.அப்துல் காதர் அவர்கள் பேசும்போது, இக்கல்வி நிறுவனத்திற்கும் அவருக்கும் ஒரே வயது என கூறியதோடு முதல் முன்னாள் மாணவனாக ரூபாய் 10,000 இந்த முன்னாள் மாணவர்கள் சங்கத்திற்கு நன்கொடை அளித்தார்கள்.

பேரா.ஜெயராமன், பேரா.அப்துல்காதர்,பேரா.கணபதி ஆகியோரும் நன்கொடை வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர்.

மேலும் நன்றியுரை வழங்கிய ஆசிரியர் மஹபூப் அலி அவர்கள், ஏற்கனவே முன்னாள் மாணவர் ஒருவர் பள்ளிக்கு இன்வெட்டர் வாங்கிக் கொடுத்துள்ளதை நினைவு கூர்ந்தார்.

நிகழ்ச்சிக்கு அதிரை பேரூராட்சித் தலைவர் சகோ. அஸ்லம் மற்றும் துணைத் தலைவர் திரு பிச்சை மாற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர் சேர்க்கை படிவம் பள்ளி தலைமை ஆசிரியையை அனுகினால் கிடைக்கும்.


ஒத்துழைப்பு தாருங்கள்...

ஊரில் தற்பொழுது கல்யாண சீஷன் / பள்ளி விடுமுறை என ஊரே..கலகலப்பாக காட்சி தருகிறது. .

இது ஒருபுறமிருக்க ஊரில் நடைபெறும் திருமணங்களில் (அண்டைவீட்டர்களுக்கு உணவுகளை அனுப்ப ) எடுப்பு சகனுக்கு பதில் பிளாஸ்ட்டிக் பைகளை பயன்படுத்தும் முறை நமதூரில் உள்ளது.

தற்பொழுது அதிரையில் பிளாஸ்ட்டிக் பைகளுக்கு தடை உள்ளதால் எப்படி இதை சமாளிக்க போகிறார்கள்....?

இது பற்றி திருமண வீட்டார் ஒருவரிடம் கேட்டபொழுது..

நாங்க சென்னையில வசிக்கிறோம் கடந்த வருஷத்தை போல இந்த வருஷமும் கோடை விடுமுறையில் ஊர் வந்திருக்கிறோம் ஆனால் ஊரில் ஒரு வித்யாசம் தெரிகிறது யாருமே கீஸ் பை யூஸ் பண்ணுறது இல்ல இது ரொம்ப நல்ல விஷயம் ஆனால் என்னட பேத்திக்கு அடுத்த மாசம் கல்யாணம் வச்சிருக்கோம் எடுப்பு சகனுக்கு பழையபடி மாறிட வேண்டியதுதான் ஊரோட ஒத்து போகணும் அதான் ஊருக்கும் நமக்கும் நல்லது.....என்றார் அந்த 60 வயது முதியவர் 

இது போல ஊரில் நடக்க விருக்கும் திருமணங்கள் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளில் பிளாஸ்ட்டிக் பைகளை தவிர்க்க வேண்டும் என அதிரையின் சேர்மன் சகோதரர் அஸ்லம் அவர்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிரையில் திருமணம் நடக்கவிருக்கும் வீட்டார்களை சந்தித்து இது பற்றிய விழிப்புணர்வை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார் .

ஊரின் நலன் விரும்பும் யாரும் இந்த தடையை ஏற்றுகொள்வார்கள் தானே.....?

“ரூபாய்” : தெரிந்ததும்...! தெரியாததும்...!!
நல்ல தமிழ் எழுதுவோம் – 12

சென்ற பதினொன்றாம் பதிவின் பின்னூட்டத்தில் சகோ. சேக்கனா நிஜாம், தமிழில் கலந்துள்ள, அல்லது தமிழில் தவிர்க்க முடியாமல் கலந்துவிட்ட பிறமொழிச் சொற்களைப் பற்றி ஒரு பதிவை எழுதுமாறு கேட்டிருந்தார். இது ‘நல்ல தமிழ் எழுதுவோம்’ எனும் இத்தொடருக்குப் பொருந்துமா என்று சிந்தித்தேன்.  ‘பொருந்தும்’ என்பதற்கு, வெளிநாட்டிலிருந்து வந்த தொலைபேசித் தகவல் ஒன்று உரம் சேர்த்தது.

பிற நாட்டு மொழிக் கலப்பு பற்றிக் காணும் முன்பு, நம் நாட்டின் வடபுலத்து சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகளின் சொற்கலப்பு தமிழில் எவ்வாறு வந்தது என்பது பற்றிப் பார்ப்போம் இத்தகைய மொழிக் கலப்பு பற்றி மொழியறிஞர்கள் கூறும்போது, ‘வடசொல்’ அல்லது ‘திசைச்சொல்’ என்று வரம்பு கட்டுகின்றனர். ஒருசிலர் பிறமொழி கலவாத தனித்தமிழ்ப் பயன்பாட்டை வலியுறுத்துவர். இன்னும் சிலரோ, அரிதாகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பர்.

முதல்வகைத் தமிழ் அறிஞர் ஒருவரை எனது உயர்நிலைப் பள்ளிப் பருவத்தில் சந்தித்து, அவரிடம் பாடம் பயின்றேன். அவர், தஞ்சைத் திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த புலவர் கி.கு. அப்துல் வகாப் என்பவர்.  “தூய்மை என்று சொல்லடா; ‘சுத்தம்’ வடமொழியடா” என்று மாணவர்களை இடித்துரைப்பார். அப்போதுதான் இதன் மீது ஆய்வையும் ஆர்வத்தையும் செலுத்தத் தொடங்கினேன். பிற்றை நாள்களில் ‘தனித்தமிழ் இயக்கம்’ என்ற ஒன்று தமிழகத்தில் இருப்பது பற்றியும், அதன் தலைவராக ‘மொழிஞாயிறு’ தேவநேயப்பாவாணர் என்ற தமிழ்ப் பேராசிரியர் இருந்து தமிழ்ப் பணி செய்துவந்தது பற்றியும் அறிந்து, அதில் எனது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் பெருக்கினேன்.

Ironically, அந்தக் காலகட்டத்தில்தான், நான் இந்தி மொழியைச் சிறப்புப் பாடமாகத் தேர்ந்தெடுத்து, அதில் இரண்டு அரசுத் தேர்வுகளையும் எழுதித் தேர்ச்சி பெற்றிருந்தேன்! அப்போது தமிழ்நாட்டில் ‘இந்தி எதிர்ப்பு’ முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருந்தது! அந்த நேரத்திலும், நான் SSLC முழு ஆண்டுத் தேர்வின்போது, முழுமையாக மூன்று மணி நேரம் இந்தித் தேர்வை எழுதினேன். நான் ஒருவன் மட்டும்தான்! மற்றவர்கள் எல்லோரும் வினாத்தாளை அப்படியே அச்சு மாறாமல் எழுதி வைத்துவிட்டு, அரை மணி நேரத்தில் வகுப்புகளைவிட்டு வெளியே வந்து, என்னை ஓர் அபூர்வப் பிராணியைப் போல் நோக்கிவிட்டுச் சென்றனர்! சரி, சுயபுராணம் நீண்டுவிட்டது. இனிப் பதிவுக்குள் நுழைவோம்.

வடசொல் தமிழில் நுழைந்தது எப்போது என்று ஆயும்போது, நமக்குக் கிடைக்கும் தகவலானது, நம் கண்களை விரியச் செய்கின்றது! ஏனெனில், கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த தொல்காப்பியர் என்ற இலக்கண வல்லார், திசைச் சொல்லும் வடசொல்லும் தமிழில் பயன்படும் முறையை இவ்வாறு கூறினார்:

“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி”

என்றும்,

“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”

என்றும் இலக்கணம் அமைத்து, தமிழ் மொழியில் அவற்றிற்கும் ஓர் இடமுண்டு என்பதைச் சுட்டுகின்றார்.

இந்தச் சிறு அனுமதியைப் பயன்படுத்தி, வடமொழி நூல்களில் காணப்படும் சமயக் கருத்துகள் தமிழகத்தில் புகுந்த காலத்திலும், வடமொழிப் புராணங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட காலத்திலும் வடசொற்கள் தமிழில் மிகுதியாகப் புகுந்துவிட்டன.  கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழில் வடசொல் கலந்து எழுதும் பழக்கம் மிகவும் மலிந்திருந்தது.  அக்காலத்தில் வடசொல்லை மிகையாக்கிப் பேசுவதும் எழுதுவதும் பெருமையாய்க் கருதப்பட்டன.  இப்படிச் செய்துவந்ததால், வடமொழியிலிருந்துதான் தமிழ்மொழி பிறந்தது என்று சிலர் தவறாக எண்ணியதோடு, வடமொழியின் உதவியின்றித் தமிழ் இயங்காது என்று எண்ணத் தொடங்கினர்!

இந்தத் தவறான கருத்தை உடைக்கத் தோன்றியதுதான் ‘தனித்தமிழ் இயக்கம்’ எனும் புரட்சிப் பாசறை.  இவ்வழியில் தமிழறிஞர் பலர் ஆய்வு செய்து, ‘நெல்லொடு சேர்ந்த கல்லெடு முயற்சியாய்’ வடசொற்களையும் அவற்றிற்கு நேரான தமிழ்ச் சொற்களையும் பட்டியல் இட்டுத் தந்தனர்.  அப்பட்டியலை, இன்ஷா அல்லாஹ், அடுத்த பதிவில் காண்போம்.

( தொடரும் )

- அதிரை அஹ்மது
பகுதி-11 ஐ வாசிக்க

Sunday, April 29, 2012

அதிரை AFFA நடத்திய கால்பந்து இறுதிப் போட்டி


அதிரை AFFA நடத்திய கால்பந்து இறுதிப் போட்டி 29/04/2012 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணியளவில் அதிரை கிராணி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் தஞ்சை அணியும், சென்னை அணியும் மோதின இதில், சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

இந்நிகழ்ச்சியில் அதிரை காவல்துறை அதிகாரி திரு செங்கமலைக் கண்ணன் மற்றும் காதிர் முகைதீன் முன்னாள் முதல்வர் பேரா. அப்துல் காதர் , மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தி பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.
அரசாங்கம் வரம் கொடுத்தும் அமைச்சர்கள் விடமாட்டார்கள்!

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்ட பிறகு திமுக கோட்டையான அதிராம்பட்டினத்திற்கு விடிவுகாலம் ஏற்படும் என்று நம்பினோம். ஆனால், ஊடகங்களில் வெளியாகும் உள்ளடி அரசியல் செய்திகளைப் பார்க்கும்போது, இரு அமைச்சர்களிடையே நிலவும் அதிகார போட்டி காரணமாக இப்பகுதி மக்களுக்குக் கிடைக்கும் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டுவிடுமோ என்ற கவலை ஏற்படுகிறது.

இந்தவாரம் 02-05-2012 ஜூனியர் விகடன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையை அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களின் கவனத்திற்கு வைக்கிறோம்.
அரசாங்கம் வரம் கொடுத்தும் அமைச்சர்கள் விடமாட்டார்கள்!

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்ட பிறகு திமுக கோட்டையான அதிராம்பட்டினத்திற்கு விடிவுகாலம் ஏற்படும் என்று நம்பினோம். ஆனால், ஊடகங்களில் வெளியாகும் உள்ளடி அரசியல் செய்திகளைப் பார்க்கும்போது, இரு அமைச்சர்களிடையே நிலவும் அதிகார போட்டி காரணமாக இப்பகுதி மக்களுக்குக் கிடைக்கும் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டுவிடுமோ என்ற கவலை ஏற்படுகிறது.

இந்தவாரம் 02-05-2012 ஜூனியர் விகடன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையை அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களின் கவனத்திற்கு வைக்கிறோம்
கூகிலின் பார்வையில்பட்ட குட்டிமாமா கடை

நமதூர் பேரூராட்சிமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிரை-பட்டுக்கோட்டை ரோட்டிலுள்ள சேர்மன்வாடி, கூகில் இணையதள வரைபடத்தில் நடுத்தெருவுக்கு இடம் மாறியதை "

அதிரையை உற்று நோக்கிய (Google) கூகில்.!

" என்ற பதிவில் எழுதியிருந்தேன். வலைப்பூக்கள் மற்றும் இணையத்தில் சேர்மன், அதிரை என்ற குறிச்சொற்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டதால் கூகிலின் தானியிங்கி தேடல் (SPY-BOT) நுட்பத்தில் இது சாத்தியமாகி இருக்கக்கூடும். தற்போது வெளியாகியுள்ள உலகவரைபடத்தின் (GOOGLE MAP-2012) மேம்பட்ட பதிப்பில் கூகிலின் கழுகுக்கண்கள் அதிரையின் சந்துபொந்துகளிலெல்லாம் நுழைந்துள்ளது வியப்பாகவும், பிரமிப்பாகவும் உள்ளது!

அதிரையில் பிறந்த எத்தனை பேருக்கு நெசவுக்காரதெருவிலுள்ள குட்டிமாமாகடை தெரியும்? கூகில் அதையும்கூட துல்லியமாக உலக வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளது! சேட்டிலைட்டிலிருந்து எடுக்கப்பட்ட வரைபடத்தை சுமார் 50 மீட்டர் (கிட்டத்தட்ட தென்னைமர) உயரத்திலிருந்து பார்ப்பதைப்போன்று தெளிவாக பார்க்க முடிகிறது. மட்டுமின்றி, கடைத்தெருவிலுள்ள கிராணி மளிகை, நூர்லாட்ஜ், தக்வா பள்ளி மையவாடி முதற்கொண்டு துல்லியமாகக் காண முடிகிறது.

2003 இல் ஈராக்கை ஆக்கிரமிக்க நடந்த இரண்டாவது யுத்தத்தின்போது அப்போதைய அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்ஃபீல்ட் "அமெரிக்க சாட்டிலைட் ஈராக்கிலுள்ள ஒவ்வொரு வீட்டின் ஜன்னலையும் ஊடுறுவி துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டும்" என்று சொன்னார். தற்போதைய யுத்தங்களில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் இத்தகைய நவீன தொலைநுட்ப உதவிகள்மூலமே எதிரிகளின் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி, ஆக்கிரமிப்புப் போர்களில் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது!

கூகிலில் இலவசமாகக் கிடைக்கும் இந்த வசதியின்மூலம் உலகின் எந்தப்பகுதியையும் எங்கிருந்தும் பார்க்கலாம். கூகில் எர்த் இணையத்தில் வெளியான புதிதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனரும் உலக பணக்காரர்களில் ஒருவரும் ஆன பில்கேட்ஸ் வீட்டின் வாகன நிறுத்தம்வரை படம்பிடிக்கப்பட்டு இணையத்தில் உலாவந்தது. நமது முன்னாள் குடியரசு தலைவர் மேதகு.A.P.J.அப்துல் கலாம் அவர்களும் இந்த வசதியால் நம்நாட்டு பாதுகாப்பு அரண்கள்குறித்த தகவல் தீவிரவாதிகளிடமும் எதிரிநாட்டிடமும் செல்லக்கூடும் என்று அச்சம் தெரிவித்தார். இணைய தொழில்நுட்ப வளர்ச்சி,ஒருபக்கம் வியப்பாக இருந்தாலும் இன்னொரு பக்கம் தனிமனித சுதந்திரத்தில் எல்லைமீறுகிறதோ என்ற கவலையும் நியாயமாகவே படுகிறது.

ஒருகாலத்தில் மாடு காணாமல்போனால் 14 ஆம் நம்பர் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தால் எல்லா கிராமங்களையும்  பேரூந்து சுற்றிக்கொண்டு பட்டுக்கோட்டைக்குச் செல்வற்குள் வழியில் மாட்டைக் கண்டுபிடித்து விடலாம் என்று நகைச்சுவையாகச் சொல்லப்பட்டது. உலகம் போகிற போக்கைப் பார்த்தால், காணாமல்போன மாட்டையும் கூகில் வரைபட உதவியால் எதிர்காலத்தில் கண்டுபிடிக்க முடிந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!

நெசவுத்தெரு குட்டிமாமா கடைவரை வரையில் கூகிலும், ஈராக் வீடுகளிலுள்ள ஜன்னல்வரையில் அமெரிக்காவின் சாட்டிலைட்டும் கண்காணிப்பதற்கே கவலைப்படுபவர்கள், மனிதமனம் பேசுவதை,அவர்களின் பிடரியிலுள்ள உயிர் நரம்பைவிடச் சமீபமாக நெருங்கி கண்காணிப்பதாக ஒருவன் சொல்லும்போதும் அச்சம் ஏற்பட வேண்டும்தானே! :)

050.016 : மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் அறிவோம்;அன்றியும் (அவன்) பிடரியிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்குச் சமீபமாகவே இருக்கின்றோம்.

050.016 وَلَقَدْ خَلَقْنَا الإنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ

050.016 It was We Who created man, and We know what dark suggestions his soul makes to him: for We are nearer to him than (his) jugular vein.

Saturday, April 28, 2012

இலங்கை பள்ளிவிவகாரம் :இந்திய தவ்ஹீத் ஜமாத்தினர் கைது !

இலங்கை மாத்தளை பகுதியில் உள்ள தம்புல்ல ஜும்மா பள்ளிவாசலை இடித்து தரைமட்டம் ஆக்கிய புத்த பிக்குகளையும் ராஜ பக்ஷேவின் அரசாங்கத்தையும் கண்டிக்கும் விதமாக இன்று இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டனர்.
இன்று மாலை 4 மணியளவில் ராயப்பேட்டை பள்ளிவாயிலில் புறப்பட்ட போராட்டக்காரர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர் இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படும் ராதா கிருஷ்ணன் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன .
போராட்ட காரர்கள் ராஜ பக்ஷேவின் உருவ பொம்மையை எரித்ததால் அங்கு சிறிது பதற்றம் நிலவியது .
பின்னர் தாயராக இருந்த காவல்துறையின் வாகங்களில் கைது படலம் துவங்கியது கைது செய்யப்பட அனைவரையும் தேனாம்பேட்டை அங்கண் வாடி கட்டிடத்திற்கு கொண்டு சென்றனர் .
அங்கண் வாடி கட்டிடத்தில் பெண்களுக்கு மாநில பேச்சாளர் மசோதா ஆலிமாவும் ஆண்களுக்கு இதஜவின் தாயி ஆலிம் அல் புகாரி மார்க்க உரை நிகழ்த்தினார்கள் பின்னர் மக்ரிபுக்கு முன்னதாக கைதானவர்கள் விடுவிக்கப்பட்டனர் .

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் துவக்கவிழா அழைப்பு


காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, முன்னாள் மாணவர்கள் சங்கம்(OLD STUDENTS ASSOCIATION).துவக்க விழா, மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி வரும்,30/04/2012) திங்கட்கிழமை அன்று மாலை 3 மணி முதல் 5 மணிக்குள். காதிர் முகைதீன் கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது.

அது சமயம் அனைத்து முன்னாள் மாணவர்களையும் வருக... வருக என அன்போடு அழைக்கிறோம்.

இங்ஙனம்,

தலைமை ஆசிரியர்,
ஆசிரியர்கள்,
மாணவர்கள்
(காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி)
'எலுமிச்சை' சர்வ ரோக நிவாரணி!

எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.
மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது. எலுமிச்சையின் தாயகம் பாரதம்தான். முதன்முதலாக 1784-ல் கார்ஸ்வில் ஹெம்மீலி என்பவர் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதைக் கண்டுபிடித்தார்.
மருத்துவர் ப்ளென்னின் (1875) ஆராய்ச்சியில் கெட்ட இரத்தத்தை தூய்மைப்படுத்தும் மருந்துகளில் எலுமிச்சையை விட சிறந்தது வேறு இல்லை என கண்டறிந்தார். உதாரணமாக இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய வீரர்களின் காயத்தில் இருந்து ஒழுகும் இரத்தத்தை உடனடியாக நிறுத்த எலுமிச்சையை உபயோகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தியர்களை விட மேலை நாட்டினர் எலுமிச்சை பழத்தையும், அதன் விதை, தோல் அனைத்தையும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து வாசனைப் பொருட்களும் தயாரிக்கின்றனர். இந்தியர்களின் வீடுகளில் எலுமிச்சை ஊறுகாய் இல்லாமல் இருக்காது.
கண்களைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காட்சிதரும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.
100 கிராம் எலுமிச்சை பழத்தில்,
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி
எலுமிச்சையின் பயன்கள்:
வயிறு பொருமலுக்கு:
சிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன்போல காணப்படும். வாயுவும் சேர்த்துத் தொல்லைக் கொடுக்க ஆரம்பிக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து அதில் வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் மேற்கண்ட தொல்லைகள் நீங்கும்.
தாகத்தைத் தணிக்க:
தற்போது கோடைக்காலத்தின் ஆரம்பத்தில் இருக்கிறோம். கோடை வெயிலின் தாக்கத்தால் அடிக்கடி தாகம் ஏற்படும். சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு கப் நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு:
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.
கல்லீரல் பலப்பட:
எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.
தலைவலி நீங்க:
ஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.
நீர்க் கடுப்பு நீங்க:
வெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சினை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச்சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும். இரத்தக் கட்டுக்கு உடம்பில் எங்காவது அடிபட்டாலோ, வீங்கினாலோ ரத்தம் கட்டி இருக்கும். இந்தப் பகுதியை தொட்டாலே சிலருக்கு வலியெடுக்கும். இந்த ரத்தக்கட்டு நீங்க சுத்தமான இரும்புக் கரண்டியில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிதளவு கரிய போளத்தைப் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) போட்டு காய்ச்ச குழம்பு போல வரும். அதனை எடுத்து பொறுக்கும் அளவு சூட்டுடன் இரத்தக்கட்டு உள்ள பகுதிகளில் பற்று போட வேண்டும். இவ்வாறு காலை, மாலை இரு வேளையும் சுத்தம் செய்து பற்று போட்டு வந்தால் ரத்தக்கட்டு குணமாகும்.
பித்தம் குறைய:
எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.
எலுமிச்சை தோல்:
எலுமிச்சை பழத்தின் தோல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எலுமிச்சம் பழத்தோலில் அதிக சக்தி கொண்ட எண்ணெய் இருப்பதை அறிந்தனர். இது பலவகையான நறுமணத் தைலங்கள் செய்வதற்கும் உபயோகமாகிறது. மேலும் வாதம், எரிச்சல், தொண்டைப்புண் போன்றவற்றிற்கு நல்லது. நகச் சுற்று கொண்டவர்கள் எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைத்தால் நகச்சுற்று குணமாகும். கிராமப் புறங்களில் இன்றும் இம்மருத்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
எலுமிச்சம் பழத்தோலை உரித்தவுடன் அதன் மேல் வெள்ளையாக இருக்கும் சிறு தோலில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.
* எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.
* எலுமிச்சம் பழச்சாற்றை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.
* தாதுவைக் கெட்டிப்படுத்தும்.
* உடல் நமைச்சலைப் போக்கும்
* மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.
* மூலத்திற்கு சிறந்த மருந்தாகும். எலுமிச்சம் பழத்தின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். இதன் மருத்துவப் பயனை உணர்ந்து ஆரோக்கியம் பெறுங்கள்.
 Web sources
Engr.Sulthan

புத்தகம் - புத்தம் புது காதலியாய்.. என்றும் ♥♥♥

 " 
சென்ற வாரம் “புத்தக தினம்” என்றதும்
என்னுள்ளத்தில் புத்தகம் காதலியாகவே நித்தமும் கருதுபவனாதலால்,
இக்கவிதையினை யாத்தேன்:
"  நூலகத்தில் உலகைக் கண்டேன் - இந்த
.. நீளுலகில் நூலகத்தைக் கண்டேன்
பாலகனாய் வாழ்ந்த போதும் - என்றும்
.. படிப்பதில் இன்பம் கொண்டேன்

சிற்றின்பப் போதை பாலினத்தில்- இங்கு
.. சிறப்பான போதை நூலினத்தில்
கற்றலில் இனபம் ஏற்றியது - அதுவே
.. காதலாய் நூலினத்தில் மாற்றியது

மூடிக் கிடந்தது நூலேடு! - கை
.. மெதுவாய்த் திறக்க முகங்கண்டேன்!
தேடித் தவித்தவன் பாலையிலே - ஓர்
.. தெள்ளிய நீர்ச்சுனை கண்டதைப்போல்!

எத்தனை வண்ணம் நூலினத்தில்! - அவைகள்
.. இதுவரை ஏனெனைத் தீண்டவிலை?
புத்தம் புதிதாய் இன்றிருந்தும் - நிலை
.. புதிதிலை நித்தம் பரிச்சயமே!

சொல்லால் சுகம்பல ஊட்டிடவும் - புதுச்
.. சுருதியை நெஞ்சினில் மீட்டிடவும்
எல்லாம் முடித்தேன் எனும்போதும் - வே(று)
.. எதையோ தினந்தினம் காட்டிடவும்

விரலால் வரைந்தேன் நூலுடலில் - பக்கம்
.. விதவித மாக நெளிந்திடவே
குரலால் மொழிந்தேன் நூல்மொழியை! - கை
.. கொண்டு அணைத்தேன் நூலடலை

கண்ணால் நூலுடல் மேய்ந்திடினும் - நூல்
.. காட்டும் அதிசயம் தீரவில்லை!
எண்ணா துறங்கும் கணமாயும் - எனக்கு
.. இன்பம் தருவன நூற்களே!

நூலோ அதன்பொருள் நுண்ணியதோ? - நான்
.. நுணங்கிடும் போதது நொய்ந்திடுமோ?
பாலோ தேனோ ஈடில்லை - இரவு
.. பகலாய் பரவசப் படுத்திடுமோ?

சொற்கள் கற்பிக்கும் மௌனமவள்! - புதுச்
.. சுவையை கற்பதில் ஏற்றுபவள்!
பற்கள் பதியா தொருநிலையில் - இதழ்
.. பதிக்கும் கலைபோல் பதிப்பவள்!

கண்டும் கேட்டும் உண்டுயிர்த்தும் - அவள்
.. கலையா எழிலை உற்றறிந்தும்
அண்டி அவளின் அரவணைப்பில் - மனம்
.. ஆழ்ந்து கிடக்க அலைபாயும்!

என்னவள்! நான்தான் இதழ்ச்சுகிப்பேன்! - முறை .. எத்தனை ஆயும் இனிப்பெனக்கே!
பொன்னவள் நெஞ்சில் பெயரெழுதி - என்
.. பொறுப்பில் புதிதாய்த் துகில்கொடுத்தேன்!

காலம் கடந்தும் எனதுளத்தில் - எழும்
.. காயம் அழித்திடும் கன்னியவள்!
ஞாலம் அறிந்திடும் முன்னரெனை - மிக
.. நன்றாய் அறிந்ததில் அன்னையவள்!இப்பாடல் முச்சீரிரட்டை சமனிலைச் சிந்து வகையைச் சேர்ந்ததாகும்.

--
கவியன்பன்” கலாம்

அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)


வேலை வாய்ப்பு !

வூதி அரபியாவின் பிரபல சூப்பர் மார்கெட் நிறுவனத்தில் பணிபுரிய ஏராளாமான ஆட்கள் தேவை நல்ல சம்பளம் தங்குமிடம் இலவசம் உடனடி பயணம் .

தோஹா(DOHA) துறைமுகத்தில் பணியாற்ற கீழ் காணும் நபர்கள் தேவை.நல்ல சம்பளம் தங்குமிடம் இலவசம் .
  1. Wing Man
  2. Pay Loader.
  3. Saval Operator
  4. Tally clerk
  5. Checker
  6. Foreman
  7. Supervoiser
  8. cleaning labours
சவுதியில் உள்ள பிரபல மோட்டார் நிறுவனமான ஹுண்டாய் நிறுவனத்திற்கு கணினி அறிவுள்ள இரண்டு நபர்கள் தேவை உடனடி பயணம் நல்ல சம்பளம் தங்குமிடம் இலவசம்.

மேற்காணும் பணிகளுக்கு செல்ல விருப்பம் உள்ளோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்று கொள்ளலாம்.

A.ஷாகுல் ஹமீது
அஜ்மீர் ஏஜென்சிஸ்
31.k.கடைதெரு
அதிராம்பட்டினம்-614701
போன்:04347 42728 / 9894 555 982
-------------------------------------------------------------------------------------------------------------
<<இது ஒரு இலவச சேவை . இந்த அறிவிப்பு பலதரப்பட்ட மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நன்னோக்கத்தில் அதிரை எக்ஸ்பிரஸில் வெளியிடுகிறோம்.இதன்மூலம் அதிரை எக்பிரஸுக்கு எந்தவொரு லாபமும் இல்லை. சேவையின் தரத்தை நன்கு விசாரித்து கொள்ளவும்.>>

அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் தேர்தல் (2012)

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

அதிரை பைத்துல்மால் தேர்தல் 27/04/2012 வெள்ளிக்கிழமை மாலை மஃக்ரிப் தொழுகைக்குப் பின்னர் பைத்துல்மால் நடுத்தெரு அலுவலகத்தில் , மவுலவி அப்துல்காதர் அவர்கள் கராஅத்துடன் துவங்கியது.அவர்களே சபை ஒழுக்கம் குறித்து மார்க்க அடிப்படையில் விளக்கம் அளித்தார்கள்.
தேர்தல் நடத்தலாமா? அல்லது நிர்வாகிகளை நியமன அடிப்படையில் நியமிக்கலாமா? என ஓட்டெடுப்பு நடத்தியதில்,தேர்தல் நடத்த வேண்டும் என்று 18பேரும்  நியமனம் வேண்டும் என்று 14 பேரும் வாக்களித்ததால்  பெரும்பாலான நபர்கள் தேர்தல் நடத்த வேண்டும் என கூறியதால் , இறுதியில் தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவெடுக்கப் பட்டது.

தலைவர் பதவிக்கு சென்ற மாதமே அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் போட்டியின்றி. பேரா. பரக்கத் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்ட சூழலில், மீதமுள்ள பதவிகளுக்கு தேர்தல் நடத்தப் பட்டது.

துணைத் தலைவர்களாக  ஹாஜி. எஸ்.கே.எம்.ஹாஜாமுகைதீன், ஹாஜி. முஹம்மது முகைதீன்,ஹாஜி வழக்கறிஞர் ஏ.அப்துல் முனாஃப் ஆகியோரும்,செயலாளராக ஹாஜி  அப்துல் ஹமீது(தமீம் கன்ஸ்ட்ரக்‌ஷன்) , அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள், இணைச்செயலாள்ராக, சி.முஹம்மது இப்ராஹீம்,ஒ.சாகுல் ஹமீது,ஏ எஸ்.ஜலீல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
பொருளாலராக, ஹாஜி,ஓ.கே.எம் சிபஹத்துல்லாஹ் அவர்களும், இணை பொருளாலர்களாக, ஜனாப். M.Zஅப்துல் மாலிக், ஜனாப் S.M.A.முஹம்மது புஹாரி, முஹம்மது இப்ராஹீம்(மெம்பர்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.

ஒருங்கிணைப்பாளராக ஹாஜி.எஸ்.எம்.முஹம்மது முஹைதீன்(ஜலீலா ஜுவல்லரி) அவர்களும், ஜனாப்.எஸ்.அப்துல் ஜலீல் அவர்கள் மக்கள் தொடர்பு அலுவலராக (பி.ஆர்.ஓ) தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.

இத்தேர்தலுக்கு சிறப்பு விருந்தினர்களாக அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்ற தலைவர். சகோ.அஸ்லம் அவர்களும் ஹாஜி.K.S.Aஅப்துற்றஹ்மான் ஆகியோரும், இன்னும் பல அதிரை சகோதரர்களும் கலந்து கொண்டனர்.

புதிய நிர்வாகிகளுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீது ஜும்ஆ பயான்

அதிரை மஸ்ஜிதுத் தவ்ஹீது ஜும்ஆ பயான்

தவணை முறையில் குடிதண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம்

தொடர்புக்கு;

Mohamed nasar
AQUA NATURAL PURE
CHENNAI  AND  ADIRAI
94444 73011 AND  73584  70075

<<இது ஒரு இலவச விளம்பரம். அதிரைவாசிகளின் வர்த்தகப் பொருட்கள் பலதரப்பட்ட மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நன்னோக்கத்தில் அதிரை எக்ஸ்பிரஸில் வெளியிடுகிறோம்.இதன்மூலம் அதிரை எக்பிரஸுக்கு எந்தவொரு லாபமும் இல்லை. சேவை மற்றும் பொருளின் தரத்தை வாங்க விருப்பமுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட விற்பனையாளரிடம் நன்கு விசாரித்து வாங்கவும். இதுபோல், தங்கள் பொருட்களை இலவசமாக விளம்பரம் செய்ய விரும்பும் அதிரை வர்த்தகர்கள் முழுவிபரங்களுடன் தொடர்பு கொள்ளலாம்>>

Friday, April 27, 2012

ஏன் சுமக்க வேண்டும் பொதியை?

குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அயல் தேசங்களில் பணிபுரியும் நமது சகோதரர்கள் விடுமுறையில் ஊர் செல்ல சில நாட்களுக்கு முன்னதாகவே குருவி சேர்ப்பதுபோல் கொஞ்சம் கொஞ்சமாக பொருட்களை சேர்த்து ஊர் செல்லும் நாளை எண்ணி கொண்டிருப்பார்கள் .


குழந்தைகள் குதூகலிக்க பிள்ளைகளுக்கு சாக்லேட் மனைவியின் மனம் மகிழ துணிமணிகள் அலங்கார பொருட்கள் ,உம்மாவுக்கு தைலம்..வெளிநாட்டு சோப்பு ,ஷாம்பு  என அத்தனையையும் போட்டு பொட்டிகட்டி இந்த பொதியை சுமந்து விமான நிலையம் அடைந்து போர்டிங் வாங்கி விமானத்தில் ஏறி தாயகம் இறங்கியதும் பெரும்பாலானவர்களின் லக்கேஜி மிஸ் ஆன அனுபவங்கள் நிறைய பேருக்கு உண்டு இந்த ஏமாற்றங்களை தடுக்க ....!!இப்பொழுது வெளிநாட்டு பொருட்கள் நமது தாயகத்திலேயே அதே தரத்துடன் அதே விலையுடன் நமது ஊரில் கிடைக்கும் பொழுது இங்கேயே வாங்கி செல்லாமே..!

இப்பொழுது சென்னை மன்னடி பகுதியில் இருக்கும் ஸ்டாப்&சாப் நிறுவனத்தில் வெளிநாட்டு பொருட்களான ,தைலம் வகைகள் ,சாக்லேட் வகைகள்,நறுமண ஸ்ப்ரே வகைகள் ,வெளிநாட்டு நாவல்டீஸ் வகைகள் என ஏராளமான வெளிநாட்டு பொருட்களை ஒரே இடத்தில் வாங்கிடலாம் .

மேலும் தாங்கள் வெளிநாட்டிலிருந்தாலும் கீழ்காணும் மின்மடலில் ஆர்டர் செய்தால் உங்கள் இல்லம் நாடி பொருட்களை டோர் டெலிவெரி செய்கிறார்கள் .வேறென்ன ......? 

கைவீசம்மா..... கைவீசு... கடைக்கு போகலாம் கைவீசு .......


கடையின் முகவரி

U. Aboobacker,(mk)
Stop N Shop,
New No 6,Old No.52 Post Office Street,
Mannady,
Chennai : 600 001
Tel: 9840549700 
<<இது ஒரு இலவச விளம்பரம். அதிரைவாசிகளின் வர்த்தகப் பொருட்கள் பலதரப்பட்ட மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நன்னோக்கத்தில் அதிரை எக்ஸ்பிரஸில் வெளியிடுகிறோம்.இதன்மூலம் அதிரை எக்பிரஸுக்கு எந்தவொரு லாபமும் இல்லை. சேவை மற்றும் பொருளின் தரத்தை வாங்க விருப்பமுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட விற்பனையாளரிடம் நன்கு விசாரித்து வாங்கவும். இதுபோல், தங்கள் பொருட்களை இலவசமாக விளம்பரம் செய்ய விரும்பும் அதிரை வர்த்தகர்கள் முழுவிபரங்களுடன் தொடர்பு கொள்ளலாம்>>

மே-1 முதல் பட்டுக்கோட்டையிலும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை

கடந்த மார்ச்-5,2012 முதல் நமதூர் அதிராம்பட்டினத்தில் நகர பேரூராட்சி மன்ற தலைவர் S.H.அஸ்லம் முயற்சியால் ப்ளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் ப்ளாஸ்டிக் பைகள் கடைகளில் விற்பதும், பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. 

மேலும், அக்கம்பக்க ஊர்களிலும் இதைத் தடைசெய்ய சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. இதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் மே 1- ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது .

இதுகுறித்து பட்டுக்கோட்டை நகராட்சி என்ஜினீயர் மற்றும் ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 40 மைக்ரான் தடிமானத்திற்கு கீழ் உள்ள பொருட்கள் பயன்பாட்டிற்கும் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், பொதுமக்கள் 40 மைக்ரானுக்குட்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணி பை, பேப்பர் கப், பாத்திரங்களை பயன்படுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்துவோரிடம் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வதுடன் அபராதம் விதிக்கப்பட்டு சட்ட ரீதியான மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் 40 மைக்ரான் தடிமானத்திற்கு மேற்பட்ட பிளாஸ்டிக் பைகளை தயாரிப்பாளரின் பெயர் மற்றும் முகவரி, பையின் அடர்த்தி, ஐ.எஸ்.ஐ. தரச்சான்று குறியீட்டு எண் ஆகியவை அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.

40 மைக்ரானுக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க கூடாது. குறிப்பிட்ட விலை நிர்ணயித்து அதை வசூல் செய்த பின்னரே விற்பனை செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து சுற்றுப்புற சூழல் பாதுகாக்க நகராட்சி நிர்வாகத்துடன் பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும். மே 1-ஆம்தேதி முதல் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பட்டுக்கோட்டைக்கு முன்னோடியாக அதிராம்பட்டினம் செயல்பட்டதோடு அதற்கான நடவடிக்கைகளைப் பரவலாக்கியதை வாசகர்கள் சார்பில் அதிரை பேரூராட்சி நிர்வாகம், சேர்மன், துணை சேர்மன் மற்றும் ஊர்மக்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

குறைந்த விலையில் INVERTER அறிமுகம்தொடர் மின்வெட்டால் சிக்கித் தவிப்பவர்களுக்கு விடிவுகாலம் வந்துவிட்டது.
உள்நாடு மற்றும் வெளிநாடுவாழ் சகோதரர்கள் தங்கள் வீ்டுகளுக்குத்
தேவையான INVERTER மிகவும் குறைந்த விலையில் 4 வருட உத்திரவாத்துடன் கிடைக்கிறது.

கீழ் கண்ட ஊர்களில் இலவசமாக INVERTER ஐ பொருத்தித் தருகிறோம்.

1. அதிராம்பட்டினம்
2. முத்துப்பேட்டை
3. மதுக்கூர்
4. பட்டுக்கோட்டை
5. மல்லிப்பட்டினம்
6. புதுப்பட்டினம்
7. மன்னார்குடி
8. கும்பகோணம்
9. தஞ்சாவூர்
10.திருச்சி
11. பேராவூரனி*condition apply

தொடர்புக்கு.
ஆஃபியா டிரேடிங்..
சாகுல் ஹமீது
+91 9500 822 092

<<இது ஒரு இலவச விளம்பரம். அதிரைவாசிகளின் வர்த்தகப் பொருட்கள் பலதரப்பட்ட மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நன்னோக்கத்தில் அதிரை எக்ஸ்பிரஸில் வெளியிடுகிறோம்.இதன்மூலம் அதிரை எக்பிரஸுக்கு எந்தவொரு லாபமும் இல்லை. சேவை மற்றும் பொருளின் தரத்தை வாங்க விருப்பமுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட விற்பனையாளரிடம் நன்கு விசாரித்து வாங்கவும். இதுபோல், தங்கள் பொருட்களை இலவசமாக விளம்பரம் செய்ய விரும்பும் அதிரை வர்த்தகர்கள் முழுவிபரங்களுடன் தொடர்பு கொள்ளலாம்>>

Thursday, April 26, 2012

பேரா.பரக்கத் - அதிரைக்கு வந்த பரக்கத்!

1994 ஆம் ஆண்டு வாக்கில் நமதூர் கரையூர் தெருவிலிருக்கும் மார்க்கெட்டில் மீன் விற்றுக் கொண்டிருந்த முஸ்லிம் பெண்ணிடம், ஒருவர் கோபமாகத் திட்டிக்கொண்டிருந்தார். அப்போது மீன் வாங்கச்சென்றவருக்கு அதிர்ச்சியாக இருந்தது! 

அப்பெண்ணிடம் வம்பு செய்தவர் சென்றபிறகு மீன் வாங்கச் சென்ற 'அவர்' என்ன காரணத்தால் இந்த வசவுகளம்மா? என்று ஆறுதலாக விசாரித்தபோது, வாங்கிய கடனை சொன்ன தேதியில் திருப்பிக் கொடுக்காததால் கடனீந்தவர்  திட்டிச் செல்கிறார் என்றும்,இது வழக்கமான நிகழ்வு என்றும் அப்பெண்மணி விம்மலுடன் கூற, எவ்வளவு கடன் வாங்கினீர்கள்? என்று விசாரித்தபோது ரூ.2000 மட்டுமே என்று சொன்னார் அந்தப் பெண்மணி!

அவசரத் தேவைக்காகவும், சிறுதொழில்களுக்காக்வும் அநியாய வட்டிக்குக் கடன்வாங்கிவிட்டு உடனடியாகத் திருப்பிக் கொடுக்க முடியாதவர்கள் சந்திக்கும் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றுதான் இது. 

காலையில் 900 ரூபாய் வாங்கிக் கொண்டு மாலையில் 1000 ரூபாயாக திருப்பிச் செலுத்தவேண்டும். வாங்கிய 900 ரூபாயில் காய்கனிகள்/மீன் அல்லது அப்போதைய விற்பனை சாத்தியமுள்ள பொருட்களின் சந்தையை அறிந்து வெயில்/மழையில் வாங்கி விற்றதில் லாபம்போக,கூடுதலாக 100 ரூபாய் சேர்த்துக் கொடுக்க வேண்டும். 

வியாபாரத்தில் லாபமோ நஷ்டமோ கடன்கொடுத்தவர் முன்கூட்டியே வட்டியைக் கழித்துக்கொண்டு விட்டதால் அவருக்கு நிச்சயம் நஷ்டம் இல்லை.ஆனால், கடன் வாங்கியவருக்கோ பொருளை வாங்கி, நியாயமான லாபம் சேர்த்து அன்றைய மாலைக்குள் விற்று, முதலை திருப்பிச் செலுத்தா விட்டால் இன்னொரு 100 ரூபாய் வட்டி சேர்த்து இரண்டாம்நாள் மாலைக்குள் செலுத்தியாக வேண்டும்!

இப்படியாக வெவ்வேறு வடிவங்களில் வலம்வரும் கொடும் வட்டியிலிருந்து மீளமுடியாத பலர் அதன் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.இஸ்லாம் வெருத்து ஒதுக்கும் வட்டிக்கு மாற்றாக அழகிய வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளது.அதனடிப்படையில் உருவானதே அதிரை பைத்துல்மால். 

நிதியகம் என்பதன் அரபு மொழிச்சொல்லே பைத்துல்மால்.செல்வந்தர்கள் தங்களிடமுள்ள உபரியிலிருந்து 'ஜகாத்' கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும். மேலும்,ஸதகா,ஃபித்ரா போன்ற கூடுதல் தர்மங்களை வசூல் செய்து, தேவை உள்ள ஏழைகளுக்கு குர்ஆன்,ஹதீஸ் வகுத்துள்ள வழிகாட்டல்களின்படி பகிர்ந்தளித்து,குறைந்தபட்ச வாழ்வாதாரத் தேவைகளுக்கு உதவுவதோடு வட்டி மற்றும் பல்வேறு பொருளியல் சுரண்டல்களிலிருந்து ஏழைகளை மீட்டெடுப்பதற்காக அதிரை பைத்துல்மால் கடந்த 18 வருடங்களாகப் பாடுபட்டு வருகிறது.

கனரா வங்கி,இந்தியன் வங்கி,தனலெட்சுமி வங்கி,ஸ்டேட் வங்கி, கூட்டுறவு வங்கி ஆகியவற்றோடு நிதிநிறுவனம் என்ற பெயரில் இயங்கும் வட்டிக் கடை மட்டுமின்றி பட்டுக்கோட்டையிலிருந்து வட்டிக்குப் பணம் கொடுப்பதற்காக வீடுவீடாகவும் பலர் வந்து செல்கின்றனர். தனால் ஆண்களில்லாத வீடுகளில் ஏற்படக்கூடிய வரம்புமீறும் அபாயம் ஒருபக்கமிருக்க,வட்டியை தொழிலாகக் கொண்டிருக்கும் மார்வாரி சேட்களும் சுற்றுவட்டாரத்தில் பெருகியுள்ளதால் நம்மைச்சூழ்ந்துள்ள வட்டியிலிருந்து நமதூர் மக்களை மீட்டெடுக்கும் உன்னத நோக்கத்துடன் செயல்பட்டுவரும் அதிரை பைத்துல்மாலின் நீண்டகால செயல்திட்டங்களை தொடர்ந்துசெயல்படுத்த இவற்றைப் புரிந்துகொண்டுள்ள சீரிய தலைமை தேவை.

முதல்பத்தியில் சொன்ன,வட்டியை ஒழிப்பதற்கு நீண்டகாலத் திட்டத்துடன் இயங்கும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து,கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நமதூரிலேயே தங்கி சிறப்பான கல்விப்பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகும்,பல்துறை,பன்மொழி ஆளுமைகளுடன் கடந்த 18 வருடங்களாகத் தலைவராக இருப்பதோடு,வட்டியில்லாக் கடன் திட்டத்தை பரவலாக்கவும், அதை துரிதப்படுத்தவும்,பைத்துல்மாலின் தொடக்ககால நோக்கங்களை நன்கறிந்துள்ளதோடு, பெரும்பாலோரின் நன்மதிப்பையும் பெற்றுள்ள பேரா.பரக்கத் சார் அவர்களே மீண்டும் தலைமையேற்க வேண்டும் என்பதே எம்போன்ற அதிரை பைத்துல்மால் அபிமானிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 27-04-2012 அன்று அதிரையில் நடைபெறவுள்ள அதிரை பைத்துல்மால் பொறுப்பாளர் தேர்தலில் பேரா. பரக்கத் சாருடன் இணைந்து செயல்படவிருக்கும் தன்னார்வலர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்போமே!

இலங்கை பள்ளி விவகாரம்... (காணொளி )

இலங்கை தம்புல்ல ஜும்மா பள்ளி தகர்ப்பை பற்றிய செய்தி தொகுப்பை பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ளது அதன் காணொளியை நமது அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களின் பார்வைக்காக இங்கே பதியப்பட்டுள்ளது .

சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு : முஸ்லிம்களின் கவனத்திற்கு ……!

இந்தியாவில் உள்ள பல்வேறு சாதி மக்களின் சமூக, பொருளாதார, சாதி, கல்வி விபரங்களை தொகுப்பதற்காக சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் 23-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது.  1931-ம் ஆண்டுக்குப் பிறகு இது மாதிரியான சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்தப்படவில்லை.
சுதந்திர இந்தியாவில் இதுதான் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பின் முடிவில் சாதிவாரி மக்கள் தொகை விபரம் துள்ளியமாக தெரியும்.

இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் எதிர்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகார இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

விகிதாச்சார இட ஒதுக்கீடு என்பது இன்று பேச்சளவில் மட்டுமே இருக்கிறது. இந்த கணக்கெடுப்பு முடிந்தபிறகு விகிதாச்சார இட ஒதுக்கீடுக்கான குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கும். தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பட்டியலில்

1) தக்னி முஸ்லிம்
2) தூதுகோலா
3) லெப்பை, ராவுத்தர், மரைக்காயர்
4) மாப்பிள்ளா
என 4 சாதியினராக பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் போது இந்த 4 சாதிகளில் ஒன்றை குறிப்பிட்டு, அது பள்ளி மாற்றுச் சான்றிதழில் இடம் பெற்றால் தான் அந்த குழந்தைக்கு வட்டாட்சியர் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதிச் சான்றிதழை வழங்குவார்.

இந்த சாதிச் சான்றிதழை வைத்து தான் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடும், கல்வி உதவித் தொகைகளும் பெற முடியும்.

பல முஸ்லிம்கள் இந்த விபரம் தெரியாமல் பட்டாணி, சாஹிப், பரிமளம் போன்ற உட்பிரிவுகளையும், குடும்பப் பெயர்களையும் சாதி என்ற இடத்தில் குறித்து விடுகின்றனர்.

பெற்றோர்கள் தெரியாமல் செய்யும் இந்தத் தவறின் காரணமாக மாணவச் செல்வங்களின் எதிர்காலம் பாழ்பட்டு போய்விடுகிறது.

எனவே மதம் என்று குறிப்பிடப்படும் இடங்களில் “இஸ்லாம்” என்றும் சாதி என்று குறிப்பிடப்படும் இடங்களில் மேற்கண்ட 4 பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவை மட்டுமே முஸ்லிம்கள் குறிப்பிட வேண்டும்.

வேறு எந்த பெயரையும் குறிப்பிடக்கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பின் போதும் இதே வழிமுறையைத் தான் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்த சாதி வாரி கணக்கெடுப்போடு சேர்த்து பொருளாதார கணக்கெடுப்பும் எடுக்கப்படுகிறது. சில முஸ்லிம் குடும்பங்களின் மாத வருமானம் 2 ஆயிரம் ரூபாய்தான் இருக்கும். ஆனால் கவுரவத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என கருதி மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் என்று பொய்யாக சொல்கிறார்கள். இது மாதிரியான பொய்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாழாக்கி விடும் என்பதை மறந்துவிடக்கூடாது.

இந்த ஆண்டு வரை மருத்துவம், பொறியியல் படிக்கும் ஏழை மாணவர்கள் அரசின் கல்வி உதவித் தொகையை பெற வேண்டுமெனில் குடும்பத் தலைவரின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த அளவுக்கு உண்மையிலேயே வருமானம் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத் தலைவர் கவுரவத்திற்காக மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் என்று கொடுத்தால் ஆண்டு வருமானம் 1.20 லட்சம் ரூபாயாகி, இவர் ஏழை அல்ல என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டு, இவருடைய பிள்ளைகளுக்கு அரசின் கல்வி உதவித் தொகை கிடைக்காமல் போய்விடும்.

சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள அடிப்படை கல்வி உரிமைச் சட்டத்தின் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளும் கூட 25 சதவீது இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.

ஒரு முஸ்லிம் குடும்பம் வருமானத்தை அதிகப்படுத்தி காண்பித்தால் இந்த இடஒதுக்கீடும் கிடைக்காமல் போய்விடும். இப்படி முஸ்லிம்கள் சாதாரணமாக சொல்லும் சிறிய பொய் கூட எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் என்பதை புரிந்து கொண்டு பொருளாதார நிலவரங்களை கேட்கும் போது பிள்ளைகளுக்கு கிடைக்கும் அரசின் கல்வி உதவித் தொகை பாதிக்காதவாறு பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தில் சாதிப் பாகுபாடுகள் கிடையாது. அதனால் சாதி இல்லை என்று தான் நாங்கள் விபரம் தருவோம் என்று சிலர் அடம் பிடிக்கிறார்கள். இஸ்லாத்தில் சாதிகள் கிடையாது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

இந்த உண்மை முஸ்லிமல்லாதவர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் இஸ்லாத்தை நோக்கி மக்கள் அணி அணியாக வருகிறார்கள். சில விஷயங்கள் நம்மை மீறி நடந்துவிடும். அதில் ஒன்றுதான் சாதி ரீதியான இட ஒதுக்கீடு. இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது சாதிரிதீயில் தரப்படுகிறதே தவிர மத ரீதியில் தரப்படவில்லை. அப்படி இருக்கும் போது சாதி இல்லை என்று முஸ்லிம்கள் குறிப்பிட்டால் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பயன் கிடைக்காமல் போய், அவர் தம் சந்ததியினர் கல்வி, வேலைவாய்ப்பில் அறவே ஒதுக்கப்பட்டு விடுவார்கள்.

அரசியல் சட்டம் வகுக்கப்படும் போது தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு சாதி ரீதியில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதுபோல் பின் தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கவும் வழி வகை செய்யப்பட்டது.
அதோடு சேர்த்து இஸ்லாத்தில் சாதிகள் இல்லை. அதனால் முஸ்லிம்களுக்கு சாதி ரீதியான இடஒதுக்கீடு கொடுப்பது சரிப்படாது.

எனவே அவர்களுக்கு மத ரீதியில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் விதி செய்யப்பட்டிருந்தால் இஸ்லாத்தில் இல்லாத சாதிகளை குறிப்பிடும் அவசியம் இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்காது. அதில் நம் முன்னோர்கள் கோட்டை விட்டு விட்டனர்.

இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் தான் இருக்கவேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையில் உரத்து முழக்கமிட்ட காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் கூட முஸ்லிம்களுக்கு சாதி ரீதியான இட ஒதுக்கீடு சரிப்படாது. மதரீதியான இட ஒதுக்கீடுதான் சாத்தியப்படும் என்று கொள்கை முழக்கம் செய்யத் தவறிவிட்டார்.

அதனால் இந்துக்களை சாதிரீதியாக பிரித்தது போல் முஸ்லிம்களையும் சாதிரீதியாக பிரித்து இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
இதைமாற்ற வேண்டுமெனில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அப்படி திருத்தம் கொண்டு வந்த பிறகுதான் முஸ்லிம்கள் “சாதி இல்லை” என்று சொல்ல வேண்டும்.

 அதற்கான கோரிக்கைகளையும், போராட்டங்களையும் முஸ்லிம்கள் முன்னெடுத்துச் சென்று வெல்ல வேண்டும். அந்த கோரிக்கையில் வென்று, அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்பே “சாதி இல்லை” என்று ஒரு முஸ்லிம் குறிப்பிட்டால் மத்திய, மாநில அரசுகளின் கல்வி,வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீடுகளையும், சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை, வங்கி வட்டி குறைப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் பறி கொடுக்க நேரிடும். இதை கவனத்தில் கொண்டு சமூக, பொருளாதார சாதி கணக்கெடுப்பின் போது முஸ்லிம்கள் சரிவர நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

நன்றி: ததஜ
தகவல் : சகோ.ஜாஹிர் ஹுசைன்

இலங்கை பள்ளி இடிப்பு விவகாரம் ! இலங்கை தூதரகம் முற்றுகை !!


புத்த பிக்குகளின் புனித பூமியென்று இலங்கை தம்புல்ல ஜும்மா பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்கிய சிங்கள அரசை கண்டிக்கும் விதாமாக இலங்கை தூதரகத்தை முற்றுகை போராட்டத்தை அறிவித்திருக்கிறது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் .

அன்று அயோத்தியில் பாபர் பள்ளியை இடித்த பாணியை பயன்படுத்தியே இந்த தம்புல்ல பள்ளியை இடித்து தரை மட்டமாகி இருக்கிறார்கள்.

இந்த அநீதிக்கு எதிராக வருகின்ற 28/04/12(சனிகிழமை) மாலை 4 மணியவில் இலங்கை தூதரகத்தை முற்றுகை இட இருக்கிறது இந்த போராட்டத்தில் அணியணியாய் குடும்பத்துடன் பங்கேற்க அழைக்கிறது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

Wednesday, April 25, 2012

காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஃப்ரான்ஸிஸ் பணி நிறைவு பாராட்டு விழா


காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஃப்ரான்ஸிஸ் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா 25.04.2012 புதன் கிழமை மாலை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ரோஸம்மா அவர்கள் தலைமை வகித்தார்கள், பள்ளியின் தினியாத் ஆசிரியர் நஜ்முத்தீன் கராஅத் ஓதினார்.

விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியைகள் திரு ஃப்ரான்சிஸ் அவர்களை வாழ்த்திப் பேசினார்கள்.

குறிப்பாக வாழ்த்திப் பேசிய தலைமை ஆசிரியை திருமதி ரோஸம்மா அவர்கள் கண்ணீருடன், திரு ஃப்ரான்சிஸ் அவர்களின் நற்பன்புகளை எடுத்துக் கூறியது நெகிழ்ச்சியாக இருந்தது.

ஆசிரியர் ஹஜி முஹம்மது அவர்கள் பேசும்போது, அவருக்கே உரிய நடையில், 32 ஆண்டுகள் 4 மாதங்கள் 15 நாட்கள் என , திரு ஃப்ரான்சிஸ் அவர்கள் வேலை செய்த நாட்களை கணக்கிட்டு கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மேலும் ஹாஜி சார் பேசும்போது,ஆங்கிலத்தில் சில சந்தேகங்களை திரு ஃப்ரான்சிஸ் அவர்களிடம்தான் கற்றுக்கொண்டேன் என கூறினார்.

பல வருடங்களுக்கு பிறகு நானும் ஒரு மாணவனாய் ஹாஜி சார் அவர்களின்  பேச்சை அவர் முன்பு அமர்ந்து கேட்கும்போது,அன்று அவர் பாடம் நடத்திய அதே முறை, என்னை பழைய நினைவுகளுக்கு இழுத்துச் சென்றது.

திரு ஃப்ரான்சிஸ் அவர்கள் மிக செல்வந்தர் வீட்டில் பிறந்தாலும், ஏழ்மையுடன் காட்சி தருவது, மாணவர்களை அன்பாக அரவனைத்துச் செல்வது, வெளியில் தெரியாத சில உதவிகள் செய்தது என இவரின் பல்வேறு நற்பண்புகள் நினைவு கூறப் பட்டது.

-ஜாஃபர்