Friday, November 30, 2012

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரிப் பாதம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் உணவுப் பொருட்கள் பற்றிய ஆய்வு மேற்கொண்டனர். அதில் பாதம் பருப்பானது நீரிழிவினை ஏற்படுத்தும் காரணிகளைக் கட்டுப்படுத்துவதாகக் கண்டறிந்துள்ளனர்.

இன்சுலின் சுரப்பு:

நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுகோஸை சக்தியாக மாற்றும் ஹார்மோனைஒ பயன்படுத்தும் திறன் குறையலாம்.
நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திராவிட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்குத் தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளைச் சேதப்படுத்திவிடும். தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வில், பாதம் பருப்பைச் சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, நீரிழிவு நோய் வருவதற்கான முந்தைய நிலையில் இருக்கும் கெட்டக் கொழுப்பின் அளவும் குறைவதாகத்  தெரியவந்துள்ளது.

நீரிழிவு நோயாளிகள்:

நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருந்த 65 பேரிடம் பாதம் பருப்பைக் கொடுத்துச் சாப்பிடச் சொல்லி அவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் நீரிழிவுக்கு முந்தைய நிலை என்பது ரத்தத்தில் இருக்கும் குளுகோஸின் அளவு வழக்கமாக இருப்பதைவிட அதிகமாக இருப்பது ஆகும். அதே சமயம் அதனை நீரிழிவு நோயாகவும் கருதிவிட முடியாது.
பாதாம் பருப்பைச் சாப்பிடக் கொடுக்காத, அதே சமயம் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருந்த மற்றொரு குழுவினரைக் காட்டிலும், பாதாம் பருப்பைச் சாப்பிட்டவர்களிடம் இன்சுலின் சுரப்பில் வியக்கத்தகு முன்னேற்றம் இருந்ததோடு, கெட்டக் கொழுப்பின் அளவும் குறைந்தது தெரியவந்தது.

உடல்பருமன்;

பாதாம் மட்டுமல்லாது இதரக் கொட்டைப்  பருப்புகளும் கூட டைப் 2 நீரிழிவு நோயைக்  குணப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் பாதாம் மற்றும் இதர க்கொட்டைப்  பருப்புகள் உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய ப்பங்காற்றுகிறதாம். மேலும் உடற் பயிற்சி இல்லால் இருப்பவர்களுக்கு இருதய நோய் ஏற்படுவதற்குக் காரணமான மூலக் காரணிகளையும் அது தடுக்கிறதாம். இது குறித்துக்  கருத்துத் தெரிவித்துள்ள மருத்துவ விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் மிக்கேல் வியேன் பாதாம் பருப்பைப்  பக்கத்தில் வைத்துக்கொண்டால் நீரிழிவு, இருதய நோய்கள் அருகில் அண்டாது என்று அடித்துக் கூறுகிறார்.அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.comThursday, November 29, 2012

TIPS FOR WRITING SUCCESSFUL RESUME


Writing a resume is very different than writing a CV. A resume is usually used with individuals who have work experience and skill sets rather than fresh graduates with no precious work experience. Here are a few tips to enhance your resume that every employee forgets.
1- Keep it short: long paragraphs are not favored when it comes to resumes. Keep your resume short and to the point; use bullet-points to illustrate related education or work experience in each specific area rather than a paragraph of writing.
2-Market yourself: using positive action words throughout your resume will reflect on your personality. Such words like: eager, punctual, accomplished, etc… will help you grab the employer’s attention to your strong personality.
3-Highlight your strengths: even if you have to be repetitive. Your Objective statement in a resume should be a powerful one, something like a mini personal mission statement that highlights your best qualities.
4-Put everything in order: after your Objective statement, make sure you put your qualifications and accomplishments first. Many HR managers agree that order of importance is necessary and time saving.
5-Show them what you can do: don't focus on what THEY want from you, show them what you have to offer. Rather than tailoring your resume around your responsibilities, focus on what you've previously accomplished in other companies.
6-Don't use big words: big words are nice if you manage to use them correctly. Avoid jargon and words that your employer might not understand, in the end you want to get the message across fast and effectively.
7-Update: regularly update your resume and customize to each job you apply for by re-arranging experience according to new job responsibilities. Also make sure you use a recent photo of yourself.
8-Spell check: YES! Many resumes have spelling mistakes that just prove to the employer that you were not interested enough in the job to go through the effort of spell-checking your own resume.
9-Education: doesn't mean only in school. In this part of your resume, any classes, crash courses, programs, and organizations you've been involved in should be stated. That will add to your experience level.
10-Confidence: that’s all you need when you hand in your resume. A well-written cover letter and a re-presentable candidate will not be turned down.
ABUL KALAM BIN SHAICK ABDULKADER

Golden days missed from us.


Laughing faces do not mean that there is absence of sorrow!
But it means that they have the ability to deal with it...!


Really we are  missing those days.
-- 
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.co

நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?


நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.
நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கியக் கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன. அவை;
1. தன்னம்பிக்கை
2. ஆர்வம்
3. செயல் ஊக்கம்
4. விழிப்புணர்வு
5. புரிந்துகொள்ளல்
6. உடல் நலம்.
இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.
1. தன்னம்பிக்கை (Self Confidence)
“என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது” என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். “நான் எப்படித்தான் இவற்றையெல்லாம் படித்து நினைவில் வைக்கப் போகிறேனோ, எனக்கு ஞாபக சக்தியே சற்றுக் குறைவாகத்தான் இருக்கிறது. அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது” – என்று தங்களைப் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையை விட வேண்டும்.
“நினைவாற்றல்” என்பது மூளையின் ஒரு திறமை. அதனைப் பயன்படுத்தப் பயன்படுத்த, பயிற்சியாலும் முயற்சியாலும் அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு, நினைவாற்றலை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் அற்புத நினைவாற்றல் பெறமுடியும்!
2.ஆர்வம் (Interest)
ஆர்வம் காட்டுகிற விசயங்கள் நினைவில் நன்றாகப் பதியும். இயற்கையாக ஆர்வம் இல்லாவிட்டால் கூட ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு கவனித்தால், பதியவைத்தால் நினைவில் நிற்கும்.
3. செயல் ஊக்கம் (Motivation)
இந்தச் செய்திகளை ஏன் நான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு எவ்வகையில் இது பயன்படும் என்று உங்களோடு இணைத்துத் தெளிவுபடுத்திக் கொண்டால் செய்திகள் நன்றாகப் பதியும்.
உதாரணத்திற்கு “ஹோட்டல் ரெசிடென்ஸிக்கு நாளை காலை 4 மணிக்கு நீங்கள் வந்தால் உங்களுக்கு 5 லட்ச ரூபாய்க் கொடுக்கப்படும்” என்று ஒருவர் உங்களிடம் சொன்னால் நீங்கள் மறந்து விடுவீர்களா?
தேவையை, அவசியத்தை நன்றாக உணர்ந்த விசயங்கள் நன்றாகப் பதிகின்றன.
4. விழிப்புணர்வு (Awareness)
மனம் விழிப்பு நிலையில் இருக்கும்பொழுதுக் கவனமும், ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும் விழிப்புணர்வு அதிகரிக்கத் தியானம் துணைபுரியும்.
5. புரிந்துகொள்ளல் (Understanding)
புரிந்து கொண்ட விசயங்கள் நினைவில் நன்றாக இருக்கின்றன. புரியாவிட்டால் – தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? எங்கு? யார்? என்று கேள்விகளைக் கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள்.
6. உடல் ஆரோக்கியம் (Health)
உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது நினைவாற்றல் நன்றாக இருக்கும். ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டுத் தளர்ந்திருக்கும் நேரத்தில் செய்திகளை நினைவில் வைப்பதே சிரமமாக இருக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளைச் சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
சத்தான உணவுகளைக் கொடுப்பதன் மூலம் அனைவருக்கும் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
மூளைச் சோர்வைத் தடுக்கும்
அன்றாடம் வீட்டுச் சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை குழந்தைகளின் மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிடக் கொடுக்கவேண்டும்.
ஊறவைத்த பாதாம் பருப்பு
பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்புக் காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும்
அக்ரூட், திராட்சை
அக்ரூட் பருப்புகளுடன் உலர்ந்தத் திராட்சைப் பழத்தைத் தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். அதேபோல் வேர்க்கடலை சாப்பிட்டாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.
மூளைக்குச் சுறுசுறுப்பு
நினைவாற்றல் அதிகரிக்க வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரைத் தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் குழந்தைகளும், பெரியவர்களும் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். திப்பிலியை வல்லாரைச் சாறில் ஊற வைத்துக் காய வைத்துப் பொடிச் செய்து தினமும் இரண்டு கிராம் அளவில் தேனில் குழைத்துச்  சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட்டால் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம்.
பசலைக்கீரை 
பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்
 நெல்லிக்காய் 
மாணவர்கள்  நெல்லிக்காய்த் தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வைத் தெளிவாகும்.


அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்:  kalaamkathir7@gmail.com

கோபத்தை கட்டுப்படுத்துங்கள்
காதிர் முகைதீன் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையின் பணி நிறைவு விழா !!!


அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ரோசம்மாள் அவர்களின் பணி நிறைவு விழா இன்று [ 29-11-2012 ] மாலை 3.00 மணியளவில் பள்ளியின் வளாகத்தில் இனிதே துவங்கியது.

நமது காதிர் முகைதீன் மேல் நிலைப்பள்ளியில் கடந்த 1981 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உடற்கல்வி ஆசிரியையாக தனது பணியை துவக்கினார். 7 ஆண்டுகள் தலைமை ஆசிரியைப் பணியோடு மொத்தம் 31 ஆண்டுகள் ஆசிரியையாக இப்பள்ளியில் தொடர்ந்து பணியாற்றியவர். 

பள்ளியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதத்தை முறையே 97% - 99 % சாதனையைப் பெற்றுத் தந்த இவர் சக ஆசிரிய ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளியின் நிர்வாகம் ஆகியோருடனான அணுகுமுறையை இலகுவாக அமைத்துக்கொண்டு சிறப்பாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது. 

நிகழ்ச்சியின் நிரலாக...

1. கிராஅத் : தீனியாத் ஆசிரியர் நஜ்முதீன் 

2. வரவேற்புரை : ஆசிரியர் குணசேகரன்

3. வாழ்த்துரை : ஆசிரியர்கள் ஹாஜி முஹம்மது, மஹபூப் அலி, நாகராஜன், அன்பழகன், கணேஷன், ராஜா, மொய்தீன் சாகுல் ஹமீத், நஜ்முதீன் ஆகியோர்கள்

4. ஏற்புரை : தலைமை ஆசிரியை ரோசம்மாள்

5. நன்றியுரை : ஆசிரியை பர்வீன் பானு

சேக்கனா M. நிஜாம்

அதிரை பிலால் நகரில் தாருத் தவ்ஹீத் நடத்தும் பெண்கள் பயான்!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
அல்லாஹ்வின் பேரருளால் அதிரை தாருத் தவ்ஹீத்அமைப்பினால் பிலால் நகரில் புத்தம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தாருத் தர்பிய்யா மையத்தில் எதிர் வரும் வெள்ளிக்கிழமை (30-11-2012) அஸ்ருத் தொழுகைக்குப் பின்னர் சிறப்பு பயான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைப்பு : "இளைய தலைமுறையினரின் எதிர்காலம்"

சிறப்புரை : அஃப்ழலுல் உலமா ஷஃபான், ஆலிமா ஸித்தீக்கியா (முதல்வர், அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி, அதிரை)

பிலால் நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலிருக்கும் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடைய அன்புடன் வேண்டுகிறோம்.

அதிமுக்கியமாக, ஆண்களுக்கு தனியிட வசதியுண்டு.


தகவல்:AIM

தொங்கும் மின் இணைப்பு ஒயர்

இம்மாத 21ந் தேதி பின்னுட்டம் மூலம் தெரியப்படுத்திய அதிர்ச்சி தகவல்

 CMP லைனில் முஹைதீன் மளிகை கடை எதிரே மிக மிக தாழ்வாக மின் இணைப்பு ஒயர்கள் தொங்கிக்கொண்டிருக்கிறது என்பதை இதன் மூலம் தெரியப்படுத்துகிறேன்.

மிக நீண்ட இடைவெளியில் அமைந்திருக்கு மின் கம்பத்தினால் இந்த ஒயர்கள் தொங்கிக்கொண்டிருகிறது ஆகையால் நீண்ட இடைவெளிக்கு நடுவே ஒரு புதிய மின் கம்பம் இருந்தால் அசம்பாவிதத்திளிருந்து தப்பலாம்.

அதன் புகைப்படம் இதோ... அதிரை தென்றல்

வாரம் ஒரு அரபுச்சொல் (3)

அரபு மொழியின் சிறுசிறு சொற்களை தமிழ் /ஆங்கிலம் வழியாக அறிந்து கொள்ளும் நோக்கில் புதுப்பள்ளி அறிவிப்புப் பலகையில் எழுதப்படுள்ள இந்தவாரச் சொல்.

முன்விரோதம் !?


இன்று மக்களிடையே முன்விரோதம் பலவிதங்களில் வளந்து விட்டது.

முன்விரோதங்களினால் சம்பவிக்கும் எத்தனையோ குற்றங்கள் தினந்தோரும் அச்சு ஊடகங்கள் வாயிலாகவும் இணைய ஊடகங்கள் வாயிலாகவும வந்தபடி இருக்கின்றது.

காதலில் முன்விரோதம் பணம் கொடுக்கல் வாங்களில் முன்விரோதம் நிலத்தகராரில் முன்விரோதம் வியாபாரத்தில் முன்விரோதம் சொத்து சேர்ப்பதில் முன்விரோதம் ஆடம்பர வாழ்வில் முன்விரோதம் அரசியல் கட்சிகளில் முன்விரோதம் பொதுச் சேவையில் முன்விரோதம் நண்பர்கள் மத்தியில் முன்விரோதம் படிப்பில் முன்விரோதம் குடும்பத்தில் முன்விரோதம் கணவன் மணைவிக்குள் முன்விரோதம் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த முன்விரோதத்திற்கு முடிவுதான் என்ன ? அது கொலை. ஆமாம் எதிராளியை கொலை செய்துவிட்டால் அவரால் ஏற்பட்ட முன்விரோதம் மற்றவரை விட்டு அகன்று விடுகிறதா ? இல்லை மாறாக முன்பிருந்ததைக் காட்டிலும் பல தகாத விபரீதங்கள் உண்டாக வாய்ப்பு அதிகரிக்கிறது.

முன்விரோதங்களில் பல வகைகள் இருந்தாலும் எல்லா வற்றையையும் எல்லோரிடமும் சொல்லி சமாதானம் அடையமுடியாது. அந்த வகையில் பார்க்கும்போது சில வகை முன்விரோதங்களை நீதிமன்றங்கள்வரை சென்றால்தான் நீதி கிடைக்கும் சில வகை முன்விரோதங்களை பஞ்சாயத்து என்று சொல்லக் கூடிய பெரியோர்கள்வரை சென்று சமாதானத்தை பெறமுடியும் சில வகை முன்விரோதங்களை பெற்றோர்கள்வரை சென்று ஒற்றுமையை பெறமுடியும் இன்னும் சில வகை முன்விரோதங்களை நண்பர்கள் மூலமாக சரிசெய்து கொள்ளலாம். 

இதற்கும் மேலாய் ஒரு முன்விரோதம் இருக்கு அதை யாரிடமும் சொல்ல முடியாது அப்படியான பட்சத்தில் அந்த இருவர் மட்டும் சந்தித்து சுயமாக ஒரு சுமூகமான முடிவு எடுத்து ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுக்கும்போது சமாதானம் கிடைப்பதோடு நட்பும் வளருகின்றது இதைதான் அன்று சான்றோர்கள் ஒருவர் பொறுத்தல் இருவர் நட்பு என்று சொன்னார்கள்.

இருவரும் விட்டுக்கொடுக்காது இருக்கும்போது நீயா ? அல்லது நானா ? என்று வருகிறது. அந்த நேரத்தில்தான் கடுமையான கோபத்தை வளர்த்துக் கொண்டு பழிதீர்க்க வழிவகுக்கின்றனர்.

இப்படியே போய் கொண்டிருந்தால் இதற்கு முடிவே கிடையாதா ? இவ்வளவு பாரம்பரியமிக்க நமதூர் எத்தனையோ மார்க்க வல்லுனர்களை பெற்ற ஊர் அனேக சமூக அமைப்புகளை உண்டாக்கிய ஊர் வழிபாடுஸ்தலத்திற்கு குறைவே இல்லாத ஊர் எத்தனையோ அறிஞர்கள் ஆசிரியர்கள் மேதாதைகள் என்று பலராலும் தவழ்ந்து வளம் வந்த ஊர்.

மாணவச்செல்வங்களே சகோதரர்களே பெரியோர்களே சிந்தித்து இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முன்வருவோமா

இங்கு உள்ளுர் வாசியோ அல்லது வெளியூர் வாசியோ அது கணக்கு அல்ல நாம் எல்லோரும் மனிதர்கள் அதைத்தான் கணக்கில் கொள்ளவேண்டும்.

இதைப் படிப்பவர்கள் யாராக இருந்தாலும் தங்கள் யோசனைகளை தெரிவிக்கலாம் ஒரு நபர் ஒரு அடி எடுத்து வைக்கும்போது இன்னொரு நபர் நிச்சயம் ஒரு அடி எடுத்து வைப்பார்.

நன்றி
இப்படிக்கு,
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Wednesday, November 28, 2012

ஆ!ஆபத்தான மின் கம்பம்

அதிராம்பட்டினத்தில் உள்ள புதுமனைத்தெரு -செக்கடிக்குளம் வடக்கு கரை பக்கம் உள்ளது நீங்கள் காணும் மின் கம்பம்.அது மிகவும் பழுதடைந்து எந்த நேரமும் விழலாம் என்ற நிலையில் உள்ளது.இதை மின்வாரியமோ இதுவரை கண்டு கொள்ளவில்லை.இந்த ஆபத்தான மின் கம்பத்தை உடன் அகற்றவேண்டும்,
இல்லையெனில் அது எந்நேரமும் விழுந்து மனித உயிர்களுக்கு ஆபத்தும்,வீடுகளுக்கு பொருட் சேதமும் ஏற்பட வாய்ப்புண்டு.

அந்த இடத்தைக் கடந்து பள்ளி செல்லும் குழந்தைகள்,மதரசா செல்லும் மாணவிகள்,தொழுகைக்கு செல்லும் மக்கள் என்று எந்த நேரமும் பிசியாக உள்ள இடம்.
இதை மின் வாரிய அதிகாரிகளிடம் உரிய முறையில் எடுத்து சொல்லியும் பலன் இல்லை.
எனவே உடனடியாக இதை அகற்றி வேறொன்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமாய் அப்பகுதி மக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

கம்பன் விட்டுச்சென்ற சுவடுகள் (புகைப்படம்)

அரைநூற்றாண்டுகளுக்கும் மேலாக அதிரை வழியாகச் சென்று கொண்டிருந்த கம்பன்  எக்ஸ்ப்ரஸ் மீட்டர்கேஜ் ரயில் பாதை மற்றும் ஸ்டேசனை தரிசிக்கச் சென்றபோது கண்ணில்பட்ட சில பழங்கால பொருட்களை கேமராவில் சுட்டேன்.

Tuesday, November 27, 2012

அதிரையில் மராத்தான் நெடுந்தூர ஓட்டப் போட்டி – ஒரு முன்னோட்டம் [ காணொளி ]


விளையாட்டு போட்டிகள் – ஒருவருக்கு மன வலிமை, புத்துணர்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தை வழங்கி உடல்நலம் மேன்மையுறச் செய்கின்றது.


அந்தவகையில் நமதூரைச் சேர்ந்த முன்னோர்கள் பலர் தாங்கள் கல்வி பயின்ற காலக்கட்டங்களில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களைப் பெற்று நமதூருக்கு பெருமையை தேடித்தந்தார்கள். அவர்களால் நமதூருக்கு கிடைத்த சிறப்புகளை இன்றைய இளைஞர்களிடம் எடுத்துச்சென்று அவர்களிடமுள்ள விளையாட்டு திறமையை / ஆர்வத்தை வெளிக்கொணர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழக அளவில் வருடந்தோறும் அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் [ ASC ] சார்பாக நடத்தி வருகின்ற மராத்தான் நெடுந்தூர ஓட்டப் பந்தய போட்டியில் பல்வேறு ஊர்களிலிருந்து வீரர்கள் பலர் நமதூருக்கு வருகை புரிந்து போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை தட்டிச்சென்றுள்ளனர்.

இவை அனைத்தும் நமதூருக்கு பெருமை தேடித்தருவதோடு மட்டுமல்லாமல் மத நல்லிணக்கத்துக்கு சிறந்த ஊர் என்ற பெருமையையும் தட்டிச்செல்லும். இதற்கு வலுவூட்டும் விதமாக அரசு அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு சமய சிறப்பு விருந்தினர்கள் என கலந்துகொண்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களை ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

என்றும் போல இந்த வருடமும் சீரும் சிறப்போடு போட்டிகளை வருகின்ற 2013 ஜனவரி முதல் வாரத்தில் நடத்திட உத்தேசித்துள்ளதையடுத்து மாநில அமைச்சர் ஒருவரையும், மாவட்ட ஆட்சியர் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நமதூரைச் சேர்ந்த...

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு, அதிரை பைத்துல் மால், அதிரை வர்த்தக சங்கம், மனித உரிமைக் கழகம், அதிரை நல் வாழ்வு பேரவை போன்ற சமூதாய அமைப்புகளின் தலைமை நிர்வாகிகள், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் [ அதிரை கிளை ], தமிழக தவ்ஹீது ஜமாஅத் [ அதிரை கிளை ], இந்திய தவ்ஹீத் ஜமாஅத் [ அதிரை கிளை ], இந்திய முஸ்லீம் லீக் [ அதிரை கிளை ], தி.மு.க [ அதிரை கிளை ], அ.தி.மு.க [ அதிரை கிளை ], காங்கிரஸ் [ அதிரை கிளை ], தே.மு.தி.க [ அதிரை கிளை ], இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் [ அதிரை கிளை ] போன்ற அரசியல் கட்சிகளின் தலைமை நிர்வாகிகள் மற்றும் ஏரிபுறக்கரை கிராமம், கரையூர் தெரு, காந்தி நகர், பழஞ்செட்டித் தெரு போன்ற பஞ்சாயத்தார்கள் உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்பைக் கோருவது என்றும், இதற்கும் மேலாக அதிரை காவல்துறை, அதிரை பேரூராட்சி, ஏரிபுறக்கரை கிராம ஊராட்சி, அரசு மருத்துவமனை போன்றவற்றின் சார்பாக வழங்கும் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ASC சார்பாக போட்டிற்கான பரிசுத்தொகை மற்றும் சிறப்பு பரிசுகள் கீழ்கண்டவாறு முடிவு செய்யப்பட்டுள்ளது.

1. முதல் பரிசு : ரூபாய் 11,111 
2. இரண்டாம் பரிசு : ரூபாய் 8,888 
3. மூன்றாம் பரிசு : ரூபாய் 5,555 [Confirmed by one brother who is living in London  
4. நான்காம் பரிசு : ரூபாய் 3,333
5. சிறப்பு பரிசுகள் : 50 நபர்களுக்கு
6. சீருடை அன்பளிப்பு : 300 நபர்களுக்கு
7. மேடை மற்றும் சவுண்ட் சர்வீஸ்
8. தண்ணீர் : 150 மூடைகள்
9. எனர்ஜி ட்ரீங் :  300 நபர்களுக்கு
10. விளம்பரம் [ ஆட்டோ + நோட்டீஸ் ] 
11. முதலுதவி

மேற்கண்ட பரிசுகள் மற்றும் இதர செலவினங்களில் ஏதாவது ஒன்றை அல்லது குறிபிட்ட சிலவற்றை தனியாகவோ அல்லது பகிர்ந்தோ அல்லது நிறுவனம் சார்பாகவோ அல்லது அமைப்பு சார்பாகவோ ஏற்றுக்கொள்வோர் கீழ்க்கண்ட அலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ள தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகொள்ள வேண்டிய அலைப்பேசி எண்கள் :
 0091 9994068870 9944499691 /  9566377607

மேலும் நமதூரில் கடந்த இரு முறை நடைபெற்ற போட்டிகளுக்கு பரிசுகள்  மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய ஆலோசனைகளை வழங்கி கெளரவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களின் நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் நடத்த இருக்கின்ற மராத்தான் நெடுந்தூர ஓட்டப் போட்டிக்கு தங்களின் மேலான ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பை அன்புடன் எதிர்பார்க்கின்றோம்.

இப்படிக்கு,
நிர்வாகம் - அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் [ASC ]

எங்கே ஒற்றுமை?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நமாதூர் தமிழ் நாட்டில் பெரும் புகழ் மிக்க ஊர். இந்திய தேச தியாகிகளையும், உலக கல்வியாளர்களையும், சன்மார்க்க அறிஞர்களையும் தர்ம கொடையாளர்களையும் பெற்ற நம் ஊர், ஒரு சில நாட்களாக காணக்கூடிய சம்பவகளினால் நாமெல்லாம் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளோம்.

எத்தனையோ அரசியல் கட்சிகள், அத்தனையும் மீறி நம் சகோதர்களின் சமுதாய அமைப்புகள் விளைவோ? நம் சகோதரர்களுக்கிடையில் பிளவுகள் பிரச்சனைகள்.. எங்கே ஒற்றுமை?

நம் கண்மணியான நபி பெருமானார் (ஸல்) போற்றுவித்த ஒற்றுமை, அன்பார்ந்த சகோதரர்களே சிந்திப்பீர்! நம் குல சகோதரர்களையும் நம் குல பச்சில குழந்தைகளையும் எங்கே எல்லாம் இழந்துகொண்டு இருக்கிறோம் சிந்திபீர்,

இறுதியாக நான்கு நாட்களுக்கு முன் நடந்த கொடூர கொலையுண்டு மரணித்த சகோதரன் ஹாஜாவை இழந்தோம். அதுவே இறுதியாகட்டும், சிந்திபீர் அன்பார்த்த சகோதரர்களே வேண்டாம் பிளவுகள்.அரசியல் கடந்து, அமைப்புகள் கடந்து, நாமெல்லாம் ஒரு குலத்தார் ஓர் ஊரார் என்கிற கட்டுபாட்டில் ஒற்றுமையாக ஓர் அணியாக வாழ்வோம் வெற்றி பெறுவோம்.

வஸ்ஸலாம்

மான். ஷேக்
கீழ தெரு
கேம்ப்: கனடா 

Monday, November 26, 2012

அதிரையில் நாளை மின் தடை


அதிரை  மின்சார வாரியத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை  (27-11-12) செவ்வாய்கிழமை   காலை 9 முதல் மாலை 6.00 மணி வரை  நடக்கிறது. இதனால்  அதிரை சுற்று வட்டார பகுதிகளில் நாளை ஒரு நாள் மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரிய அதிகாரிகளால் கூறப்படுகிறது. 

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் புதிய முதல்வராக பேராசிரியர் ஜலால் பதவியேற்பு !!!


அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் வணிகவியல் துறையில் பணியாற்றிய பேராசிரியர் A. ஜலால் அவர்கள் இன்று [ 26-11-2012 ] முதல் கல்லூரியின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். உடனிருந்த கல்லூரியின் தாளாளர் ஹாஜி ஜனாப் K.S. சரபுதீன் மற்றும் ஹாஜி ஜனாப் A.. அப்துல் சுக்கூர்  ஆகியோர் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட கல்லூரி முதல்வருக்கு தங்களின் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டனர்.அலர வைக்கும் மின்சாதனங்கள் ! அசர வைக்கும் டிப்ஸ் !!


மின்சாரம் இல்லாமல் இன்றைய வாழ்வே இல்லை. நமக்கு வரமாகக் கிடைத்திருக்கிற மின்சாரத்தை, சாபமாக்கிக் கொள்ளாமல் அதை சரியாகப் பயன்படுத்தும் விதம் பற்றி எடுத்துச் சொல்கிறார்கள் நிபுணர்கள்.

மின்சாதனப் பொருள்களை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார்,

ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கிறதா என்று பார்த்தே மின்சாதன பொருட்களை வாங்குங்கள்.

மூன்று பின்கள் உள்ள பிளக்கை பயன்படுத்துங்கள். ஸ்விட்ச் பாக்ஸ் தரைமட்டத்திலிருந்து 4 அடி உயரத்துக்கு மேல் இருக்கும்படி பொருத்துங்கள். விபரம் தெரியாத குழந்தைகளின் பாதுகாப்புக்கு இதுவே சிறந்த வழி.

ஸ்விட்ச் பாக்ஸை பொறுத்தவரை பாதுகாப்பான நிறைய வகைகள் இப்போது கிடைக்கின்றன. உதாரணமாக, பிளக்கில் 'பின்' செருகும்போது துவாரப் பகுதி திறந்தும், பின்னை வெளியே எடுக்கும்போது துவாரம் தானாகவே மூடும்படியான க்ளோசிங் வகை ஸ்விட்ச் பாக்ஸ்கள் உள்ளன. அவை மிகவும் பாதுகாப்பானவை.

டி.வி, ஃப்ரிட்ஜ், ஏ.சி. போன்ற மின்சாதனப் பொருட்களுக்கு ஸ்டெபிலைசர் வைப்பது மிகவும் பாதுகாப்பானது.

மின்சாதனங்களை பயன்படுத்தும்போது கவனிக்க-வேண்டிய முக்கிய விஷயங்களைப் பற்றிய தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர்.

முக்கியமான மின்சாதனங்களுக்கு [ஃப்ரிட்ஜ், ஏ.சி., கம்ப்யூட்டர், டி.வி. போன்றவை..] தனித் தனியாக 'எர்த் கனெக்ஷன்' கொடுப்பது பாதுகாப்பானது. எர்த் கொடுக்கும் போது அது சரியான முறையில் [ ஆறடிக்குக் குறையாத ஆழம் தோண்டி, உள்ளே கரித்துகள்கள், உப்பு, ஆற்று மணலைப் போட்டு'எர்த்' கொடுக்கவேண்டும் ] கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவேண்டும். எர்த் கொடுத்த இடத்தில் எப்போதும் ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது எர்த் சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்கவேண்டும்.

பிளாட்ஃபார கடைகளில் மின்சார பொருட்களை வாங்கவே கூடாது. தரமான ப்ராண்டட் பொருட்களை உபயோகிப்பதே சிறந்தது. மின்சாதனங்கள் பழுதுபட்டால், அவற்றுக்குரிய நிறுவனங்களில் கொடுத்துத்தான் சரிசெய்ய வேண்டும்.

வெவ்வேறு மின்சாதன பொருட்களுக்கு தனித் தனி 'பின்'களையே பயன்படுத்தவேண்டும். ஒரே பின்&ல் பல 'பிளக்'குகளை செருகிவைக்கக் கூடாது. தீய்ந்துபோன ஸ்விட்ச்சுகளை பயன்படுத்துவது, ஒயரை சீவிவிட்டு பின்னுக்குள் செருகி வைப்பது போன்றவற்றை செய்யவே கூடாது. சில சமயங்களில் ஸ்விட்ச் பாக்ஸில் கரையான் கூடு கட்டியிருக்கும். மழைக்காலத்தில் அது ஈரப்பதமாகி, விபத்து நிகழ அதிக வாய்ப்புண்டு. எலெக்ட்ரீஷியனை அழைத்து, கரையான் கூட்டை எடுத்துவிட வேண்டும்.

லேசாக ஷாக் வருகிற மாதிரி தெரிந்தால்கூட, சரி செய்யாமல் அப்பொருளை பயன்படுத்தவே கூடாது.

கிரைண்டர், மிக்ஸி, கெய்ஸர், ஹீட்டர் [ தண்ணீருக்குள் போட்டு சூடு செய்யும் கருவி ], டேபிள் ஃபேன் உள்ளிட்ட பொருட்களை துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். துருவின் மூலமாக வெளியே மின்சாரம் கசியக் கூடும்.

மின்பழுதுகளை சரிசெய்ய லைசன்ஸ் வாங்கிய எலெக்ட்ரீஷியன்களையே அழைக்க வேண்டும். நமது சொந்தத் திறமைகளை பரிசோதிக்கும் இடம் அது இல்லை என்பதையும் உணர வேண்டும். தொடர்ந்து ஒரே எலெக்ட்ரீஷியனையே கொண்டு பழுது பார்ப்பது நல்லது. அவருக்கு வீட்டின் மின் கட்டமைப்பு நன்கு தெரிந்திருக்கும் என்பதால், குறைபாட்டை முழுவதுமாக சரிசெய்ய முடியும்.

பாத்ரூமில் ஈரப்பதம் இருந்து கொண்டேயிருப்பதால், அங்கு பயன்படுத்தப்படும் மின்சாதனங்களுக்கான ஸ்விட்ச் பாக்ஸ் வெளியில் இருக்கவேண்டியது அவசியம். ஹீட்டர், கெய்ஸரை நிறுத்திய பின்னரே குளிக்கச் செல்ல வேண்டும்.

கூடுதல் பாதுகாப்புக்கு E L C B [ Earth Leaker Circle Breaker ] என்ற கருவியை மெயின்னில் பொருத்திக் கொள்ளலாம். எங்காவது சின்ன மின்கசிவு இருந்தால்கூட மொத்தமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இரண்டே நிமிடத்தில் மீண்டும் அதுவாகவே 'ஆன்' ஆகிவிடும் வசதி இந்தக் கருவியில் உண்டு. இந்த சிக்னலால் மின்கசிவைக் கண்டுபிடித்து உடனடியாக சரி செய்துவிடலாம்.''

மின் தாக்குதலுக்குள்ளானவரின் அருகிலிருப்பவர் செய்யவேண்டிய முதலுதவிகள் பற்றிச் சொல்கிறார் பொது மருத்துவ நிபுணர் டாக்டர் கணேசன்.

மின்சாரம் தாக்கியவரை தொடவே கூடாது. மின்சாரம் பாயாத ரப்பர்,மரக்கட்டை முதலான பொருட்களைக் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லையெனில், மெயினை ஆஃப் செய்து மின்சாரத்தை நிறுத்தவேண்டும்.

மின்சாரம் தாக்கியவர் நினைவின்றி இருக்கும்போது அவருக்கு உடனடியாக தண்ணீர் கொடுக்கக் கூடாது.அப்படிச் செய்தால், தண்ணீர் சுவாசக் குழாய் வழியாகச் சென்று மேலும் பிரச்னைகள் ஏற்படும். மின்சாரத்தால் தீக்காயம் ஏற்பட்டிருந்தால், காயத்தின் மேல் குளிர்ந்த தண்ணீரை ஊற்றவேண்டும்.

மின்கசிவு உள்ள இடத்தில் தண்ணீர் தேங்கியிருந்தால், அதில் காலை வைக்கவே கூடாது.

ஈரம் உள்ள இடத்தில் மின்கசிவு இருப்பின், எத்தனை அவசரமாக இருந்தாலும் ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டு தான் அருகில் செல்ல வேண்டும்.

மின்சாரம் உடலில் பாய்ந்த உடன் இதயம் நின்றுவிடும் அபாயம் இருக்கிறது. அதனால், இடது மார்புப் பகுதியை அழுத்தி இதயத்தை இயங்கச் செய்யவேண்டும். அந்த நபர் மூர்ச்சையாகியிருந்தால், வாய் வழியாக செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். பிறகு வாய் இறுக்கமாக மூடிக்கொள்ளாதவாறு நீளமான பொருளில் அல்லது ஒரு ஸ்பூனில் துணியைச் சுற்றி பற்களுக்கு இடையே வைத்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

K.M.A. ஜமால் முஹம்மது
Consumer & Human Rights.
S/o K.M.Mohamed Aliyar(late)

உங்கள் மின்னஞ்சல்(EMAIL) களவாடப் பட்டுள்ளதா? ஷஃபி அஹதுவின் விளக்கம்(காணொளி)

உங்கள் மின்னஞ்சல்(EMAIL) களவாடப் பட்டுள்ளதா? என்பதை தெரிந்துகொள்வது பற்றி அறிய சகோ. ஷஃபி அஹமதுமாவர்கள் தரும் விளக்கம்(காணொளி)

Sunday, November 25, 2012

உங்கள் வீடு அழகாய் அமைந்திட வேண்டுமா ! (விளம்பரம்)

உங்கள் வீடு அழகாய் அமைந்திட வேண்டுமா வாருங்கள் எண்ணற்ற டிசைன்களில் வீட்டின் வடிவமைப்புகள் செய்து தருகிறோம்.

எங்களிடம்...
*வீட்டின் முகப்பு அலங்காரம்,(ELEVATION)
*கட்டிட மதிப்பீடு,
*லே அவுட்,
*ப்ளூ ப்ரிண்ட்,
*3d views...

ஆகியவைகள் புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு சிறப்பாக செய்து தரப்படும்....

வாழ்வில் ஒரு முறையே கட்டும்.......உங்கள் கனவு இல்லத்தை.....இரண்டே மணி நேரத்தில்..... புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு....நாங்கள் உங்களிடம் ............உங்களின் மனதிருப்திக்கேற்ப்ப  செய்து தருகிறோம்.........மேலும் குறித்த நேரத்தில்,குறித்த காலத்தில் முடித்து தரப்படும்.....இணையதள முகவரி.

விபரங்களுக்கு...........

N-PLANNERs
MOHAMED NIZAMUDEEN.J.M  (junior architect)
s/o k.m.a jamal mohammed
+91 9600714877 
Nizanih4@gmail.com

அகல ரயில் பாதைக்கான பணிகள் அதிரையில் மும்முரம் !!!

கடந்த 30-12-2006 முதல் காரைக்குடி- திருவாரூர் வழியாக சென்னை வரை சென்று கொண்டிருந்த "கம்பன் எக்ஸ்பிரஸ்" ரயிலை நிறுத்தியதையடுத்து திருவாரூர் - காரைக்குடி அகல இரயில் பாதைப் பணிகளை விரைவாக முடித்துதர வேண்டும் என்பதற்காக மத்திய ரயில்வே அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளை அதிரை பிரமுகர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்து இருந்ததை நாம் அறிந்ததே.

அகல ரயில் பாதைப் பணிகள் தொடர்பாக ''அதிரை அகல ரயில்பாதை திட்டப்பணிகள் - களஆய்வு !' என்ற தலைப்பில் தளத்தில் அதன் உண்மை நிலவரத்தை நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்து பதிந்து இருந்தோம். இவற்றை நிருபிக்கும் விதத்தில் சமிபகாலமாக சில மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன குறிப்பாக கடந்த  [ 19-10-2012 ] அன்று முதல் மீட்டர்கேஜ் பாதையில் சென்று வந்த ரயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தி வைக்கப்பட்டது. தெற்கு ரயில்வேயில் மலைப்பாதை தவிர அகலப்பாதையாக மாற்றப்படாமல் உள்ள கடைசி மீட்டர்கேஜ் பாதையில் செல்லும் கடைசி ரயில் என்ற பெருமையை வண்டி எண் 56893 தட்டிச்சென்றன. அதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாகவே அதிரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதையில் உள்ள தண்டவாளங்களை பெயர்த்து எடுக்கும் பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் அடுத்தக்கட்டமாக தண்டவாளப் பாதையில் மண் சேகரித்து அகலப்படுத்தப்படும் பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவாரூர் - காரைக்குடி அகல இரயில்பாதைக்கான பணிகளில் மந்தநிலை ஏற்படாமல் துரிதமாக நடைபெற்று அனைத்து பணிகளும் விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அதிரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெரும்பாலான பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

சேக்கனா M. நிஜாம்

என் அருமை மருமகனே இனி எங்கு காண்பேன்...???


முகப்புத்தகத்தில் தினம் நீ முகம்பதிந்து...
அகம் மகிழச்செய்தாயே இனி உன் முகம்...
எங்கு காண்பேன் ..!

நய வஞ்சகனால் கொல்லப்பட்ட...
என் அருமை மருமகனே உன்னை இனி...
எங்கு காண்பேன் ..!

குடும்பம் சேர கொஞ்சிப்பேசி...
கரம் சேர்க்க நினைத்த உன்னை இனி...
எங்கு காண்பேன்...!

பார்ப்போரெல்லாம் உன் புகழ் சொல்லி...
பாராட்டிப்போற்றினரே உன்னை இனி...
எங்கு காண்பேன் ..!

மின்னலாய் ஒளிர்ந்து விட்டு...
மேகமாய் கலைந்தவனே உன்னை இனி ....
எங்கு காண்பேன்...!

கண்ணீரில் நனையவிட்டு...
மண்ணூரில் புதைந்தவனே உன்னை இனி...
எங்கு காண்பேன்...!

சிட்டாய் பறந்து திரிந்து ...
சுற்றிச்சுற்றி வந்த உன்னை இனி...
எங்கு காண்பேன் ..!

பட்டுப்போன நெஞ்சம் உன்னை...
விட்டுப்பிரிந்த பந்தம்....
தொட்டுக்கொள்ள வந்த நேரம்....
நீயும் தூர விட்டுச்சென்று விட்டாய்...!!!
உன்னை இனி எங்கு காண்பேன் ..!

என் வீட்டு ரோஜாவே...
என் அருமை ராஜாவே....
என் தங்க ஹாஜா வே ....
உன்னை இனி எங்கு காண்பேன்...!

கலங்கிய விழிகளுடன்...
உன் மாமா அதிரை மெய்சா