மருத்துவ உதவித் தொகை அதிரை பைத்துல்மால் வசம் ஒப்படைக்கப் பட்டது!

அஸ்ஸலாமு அலைக்கும்.

குழந்தை ஆஃப்ரினுக்கு இதய சிகிச்சைக்காக உதவிகோரி அதிரை எக்ஸ்பிரஸில் வெளியான பதிவைத் தொடர்ந்து வெளிநாடுகளிலுள்ள அதிரை சகோதரர்கள் நிதிவசூல் செய்து உதவும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகிகளை குவைத்திலிருந்து தொடர்பு கொண்ட குழந்தையின் தாய்மாமனாகிய சகோ.இக்பால், குழந்தையின் சிகிச்சைக்கு உதவும் நோக்கில் நல்லெண்ணங்கொண்டு உதவ முன்வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, சிகிச்சைக்கான முழுசெலவுகளையும் தாமே பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்து, வசூலான தொகையை அதிரை பைத்துல்மாலில் கொடுத்துவிடும்படி உருக்கமான வேண்டுகோளையும் வைத்தார்.
 
அதன்பேரில், சகோ.அதிரைக்காரன் மூலமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசூலான தொகையின் இந்திய மதிப்பு ரூ.12,000 ஐ அதிரை பைத்துல்மால் துணைத்தலைவர் சகோ.வக்கீல் முனாஃப் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சகோ.இக்பாலின் விருப்பத்தின்பேரில் அதிரை பைத்துல்மாலின் மருத்துவஉதவி நிதியில் சேர்ப்பிக்கப்பட்டு, அதற்கான ஒப்புகையும் பெறப்பட்டது.
 
அதிரை எக்ஸ்பிரஸில் வெளியான மருத்துவ உதவிகோரிய பதிவுக்கு ஆதரவளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.


Share:

பொதக்குடியில் மரணமடைந்த அதிரை சகோதரருக்கு த.மு.மு.க கிளையின் தொண்டு!


நேற்று  27:02:2013 காலை சுமார் 5:00 மணியளவில் அதிராம்பட்டினத்தை சார்ந்த ஏழை  சகோதரர் .நாகூர் பிச்சை அவர்கள் பொதக்குடியில் பேருந்து நிலையத்தில் மரணம் அடைந்துவிட்டார்.(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

இதுகுறித்து த .மு .மு .க மாவட்ட தலைவர் K.H நூர்தீன் மற்றும் மாவட்ட செயலாளர் A.குத்புதீன் ஆகியோருக்கு  தகவல் கிடைத்ததும் த .மு .மு .க பொதக்குடி கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் துரிதமாக செயல்பட்டு பொதக்குடி ஜமாத் நிர்வாகிகள் மற்றும் காவல்துறைக்கும் தவகல் கொடுக்கப் பட்டது.

உடன் பொதக்குடி நண்பர்களோடு சேர்ந்து தமுமுகவினரும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

எல்லாப்புகழும் அல்லாஹ்க்கே ! ! !

சமுதாயப் பணியில் தமுமுக வின் தொண்டு தொடர துஆ செய்வோம்.


தகவல்: அபூபக்கர் அமோஜான்
Share:

நாளை மார்ச் 1 முதல் பிளஸ் 2 தேர்வுகள் தொடக்கம்! (தேர்வு அட்டவணை இணைப்பு)

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நாளை மார்ச் 1 முதல் தொடங்குகிறது. மொத்தம் 8.56 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். 

தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 2004 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 வரை தேர்வு நடக்கிறது. முதல் 15 நிமிடங்கள் விடைத்தாளில் பதிவு எண்ணை எழுதவும், கேள்வித்தாளை படித்து பார்க்கவும் அனுமதிக்கப்படும். பின்னர் 10.15 மணிக்கு தேர்வு எழுத தொடங்க வேண்டும். மாணவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.

தேர்வில் முறைகேடுகள் செய்பவர்கள், குற்றங்களில் ஈடுபடுவோரை தடுக்கவும், கண்டுபிடிக்கவும் எஸ்.பி.க்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அந்தந்த தேர்வு மையங்களுக்கு, உரிய நேரத்தில் கேள்வித்தாள் எடுத்து செல்வதற்கு வசதியாக மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை கலெக்டர்கள் தலைமையில் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 தேர்வு அட்டவணை

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15க்கு முடிகிறது.

தேதி        பாடம்
மார்ச் 1    மொழித்தாள் 1
மார்ச் 4    மொழித்தாள் 2
மார்ச் 6    ஆங்கிலம் 1
மார்ச் 7    ஆங்கிலம் 2
மார்ச் 11    இயற்பியல், பொருளியல்
மார்ச் 14    கணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல், சத்துணவு
மார்ச் 15    வணிகவியல், மனையியல், புவியியல்
மார்ச் 18    வேதியியல், கணக்குப் பதிவியல்
மார்ச் 21    உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்
மார்ச் 25    தொடர்பு ஆங்கிலம், இந்தியபண்பாடு, கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழிப் பாடம் தட்டச்சு
மார்ச் 27    அரசியல்அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழில்பாட எழுத்து தேர்வுகள்

மாணவ, மாணவியர்  தேர்வுகளை சிறப்பாக எழுதி 100 சதவீத வெற்றியை பெற்று நமதூருக்கு பெருமை சேர்க்க அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக வாழ்த்துகிறோம்.
Share:

அதிரை அருகே விலையில்லா பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் அருகே உள்ள மழவேனிற்காடு ஊராட்சியில் விலையில்லா பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழக அரசின் விலையில்லா பொருட்களான மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகிய பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கப் பட்டது.

விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா மணியரசன் வரவேற்றார், தமிழ்நாடு தென்னை வாரிய முன்னாள் உறுப்பினர் மலைஅய்யன் ஒருவருக்கு பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

விழாவில் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், தாசில்தார் முத்துக்குமரன், வட்ட வழங்கல் அதிகாரி துரைராஜ், கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share:

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் மாற்று திறனாளிகளை ஊக்குவிக்கும் கருத்தரங்கு

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் மாற்று திறனாளிகளை ஊக்குவிக்கும் கருத்தரங்கு கல்லூரி வேதியியல் துறை ஆய்வு அரங்கத்தில் நடை பெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சாதனை மனிதர் மாற்று திறனாளி ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி தலைமை காசாளர் கலைமாமணி திரு.எஸ்.மாசிலாமணி அவர்கள் கலந்து கொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு மாணவர்களை ஊக்கமூட்டும் வகையில் சிறப்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர்.ஏ.ஜலால் தலைமை உரை ஆற்றினார். நிகழ்ச்சியில் கல்லூரியில் பயிலும் மாற்று திறனாளி மாணவர்கள் ஏனைய மாணவ மாணவிகள் மாற்றும் பேராசிரிய பேராசிரியைகள் ஆசிரியரல்லா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக வேதியியல் துறை இணை பேராசிரியர். டாக்டர்.ஏ.எம்.உதுமான் முகைதீன் வரவேற்புரையாற்ற, அலுவலக கண்காணிப்பாளர் திரு. எஸ்..ரவிச்சந்திரன் நன்றி கூறினார்
Share:

பிற உயிர்களிடமும் பரிவு காட்டுவோம்..!
இந்தப் படத்தின் கருத்தில் மாறுபாடு இருக்கலாம் ஆனால் இதை கண்டவுடன் என் மனதை வருடியதால் இந்த பகிர்வு..

இந்த உயிரினத்திற்கு வாய் இருந்திருந்தால்...?
Share:

அதிரையில் தாருத் தவ்ஹீத் நடத்தும் மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்.

அதிரையில் தாருத் தவ்ஹீத்  நடத்தும் மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்.  

Share:

மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் பட்டுக்கோட்டை - தஞ்சை புதிய ரெயில்பாதை!

மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில்பாதை அமைக்க நடவடிக்கை எடுககப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் 2013 - 2014 ஆம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும்  தஞ்சாவூர் பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில்பாதை அமைக்க நடவடிக்கை எடுககப்படும் என்று கூறப் பட்டுள்ளது.

இது பட்டுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் இருந்து வந்தது. இதை அல்லாமல் நமதூர் நீண்டகால கனவான அகலரெயில்பாதைத் திட்டம் வேறு வடிவத்தில் செயல் பட்டு வருகிறது. ஆனால் இதுகுறித்து இன்றைய பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப் படவில்லை.

Share:

அதிரையில் துவங்கியது பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு!

தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியின் அடிப்படையில் அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வுகள் தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வருகிறது.அதன் படி அதிரையில் நேற்று முதல் பத்தாம் வகுப்பிற்க்கான செய்முறை தேர்வுகள் துவங்கியது. நேற்று முதல் கட்டமாக காதர்முகைதீன் ஆண்கள /பெண்கள் மேனிலை பள்ளி,அதிரை அரசு பெண்கள்  உயர் நிலைப் பள்ளிகளுக்கு நடைபெற்றது இன்று காலையில் இமாம் ஷாபி பள்ளி மாணவ/ மாணவிகளுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெற்றது. 
Share:

அதிரையில் காது கேளா தோர் பேச இயலாதோர் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது


அதிரையில் தஞ்சை மாவட்ட மாற்று திறனாளிகளின் 3ம் ஆண்டு துவக்க விழா, மற்றும் காது கேளா தோர் பேச இயலாதோர் நலச்சங்க கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அறக்கட்டளையின்  தலைவர் சாகுல் ஹமீது அவர்கள் தலைமை வகித்தார். 
இக்கூட்டத்தில் நான்கு  முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.அரசு வேலை வாய்ப்பில் வாய் பேச இயலாதோர்களுக்கு அதிக அளவில் இட ஒதுக்கீடு செய்யவேண்டும்.  

2.மத்திய அரசின் ஆதர் அட்டை அனைவரும் கிடைக்க வேண்டும். பஸ் பாஸ் இல்லாதவர்களுக்கு பஸ் பாஸ் உடனே வழங்க வேண்டும். 

3.மாற்று திறனாளிகள் குழந்தைகளுக்கு தஞ்சையில் காதுகேளார் மற்றும் வாய் பேசாதோர் பயிற்சி பள்ளியில் அனைவரையும் நிபந்தனை இன்றி சேர்த்து கொள்ள வேண்டும். 

4.கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண் கண்ணாடி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் தேசிய அறக்கட்டளையின்  மாற்று
திறனாளிகளுக்கான தஞ்சை மாவட்ட எல்எல்சி உறுப்பினர் ராதாகிருஷ்ணன், சட்ட ஆலோசகர் ஜீவ குமார், துணைத் தலைவர் ஹாஜா  ஷரிப் பொது செய லாளர் சிராஜுதீன், உமர்தம்பி, பொருளாளர் ஜெகபர் சாதிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Share:

லட்சக் கணக்கானோர் பங்குபெற்ற மாபெரும் தப்லீஃக் இஜ்திமா!
சென்னை,திருவள்ளூர்,காஞ்சீபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் ஒருங்கிணைந்த மாபெரும் தப்லீக் இஜ்திமா சென்னை புறநகர் பகுதியான செங்குன்றம் பகுதியில் உள்ள, அலமாதி என்னும் ஊரில் பிப்ரவரி 23,24 ஆகிய தேதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

லட்சக் கணக்கானோர் கூடிய இந்த மாபெரும் இஜ்திமாவில்  தமிழக அரசின் சார்பில் 500 க்கும் மேற்பட்ட அரசு  பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தன.

எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் பல லட்சம் பேரை ஒன்று கூட்டி அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடிய இந்த மாபெரும் இஜ்திமாவை கண்டு பொதுமக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
புகைப்பட உதவி:  முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்
Share:

பி.காம் தேர்வு முடிவுகள் வெளியீடு!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், பி.காம்., தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் மாதத்தில் பி.காம்., படிப்புக்கான தேர்வு நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.

மறுமதிப்பீட்டுக்க விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இணையதளத்தில் அல்லது பல்கலைக்கழக வளாகத்தில் கேட்டறியலாம்.

தேர்வு முடிவுகளை காண http://www.bdu.ac.in/results2012/nov2012/index_ug.php என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

நமதூர் காதிர் முகைதீன் கல்லூரியும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல் படும் கல்லூரி என்பது குறிப்பிடத் தக்கது.
Share:

இலங்கையில் அதிரை அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் சமூக சேவை பங்களிப்பு!

இலங்கையில் அதிரை அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் சமூக சேவை பங்களிப்பு!
இலங்கை ஹிரா பவுண்டேசனினால் ஏழை தமிழ் முஸ்லிம் குடும்பங்களுக்கு குடிநீர் பெறுவதற்கான கொடுப்பணவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம்  23.02.2013 அன்று  காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.இலங்கை ஹிரா பவுண்டேசனின் சர்வதேச பணிப்பாளார் அஷ்-ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஹிரா பவுண்டேசனின் தவிசாளரும் பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஜம்இய்யத்துல் பலாஹ் அரபுக்கல்லூரி அதிபர் சங்கைக்குரிய மௌலானா மௌலவி அப்துல்லாஹ் ரஹ்மாணி, நிதாஉல் கைர் நிறுவனத்தின் தலைவரும் பொதுநலன் விரும்பியுமான அபூ ஸாலிஹ் ஹாலித்தாவூத், மன்தூப் அல் ஹய் அல் ஆலமிய்யா லிதன்சியா அல்பசரியா அமைப்பின் மனித வள அபிவிருத்திக்கான சர்வதேச அமைப்பின் சிரேஷ்ட பிரதிநிதி அஷ்-ஷெய்க் ஹசன் இப்னு முகம்மத் அஷ்செய்க்,  சவூதிஅரேபியாவைச் சேர்ந்த அவ் அமைப்பின் பிரதிநிதிகளும் அகில உலக பயிற்சிக்கும் அபிவிருத்திற்குமான உலக இஸ்லாமிய கல்வி கலாசார நிலைய சிரேஷ்ட உறுப்பினரும் தென் கிழக்கு பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய கற்கை பிரிவு விரிவுரையாளர்  ஏ.எம்.அலியார் றியாதி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக்,முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் பேஸ் இமாம் மௌலவி ஏ.ஜீ.எம் அமீன் பலாஹி , காத்தான்குடி நகரசபை உறப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வின் போது தமிழ் முஸ்லிம்  ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 650 பேர்களுக்கு தேசிய நீர் வடிகாலமைப்புச் சபையின் நீர் இணைப்பினை பெற்றுக்கொள்ளவதற்கான கொடுப்பணவுகள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

இதுபோன்று இலங்கையில் நடைபெறும் பல்வேறு சமுதாய நிகழ்ச்சிகளில் சப்தமின்றி சேவை செய்துவரும் நமதூரில் பிறந்து இலங்கையின் எல்லா இனத்தவர்களாலும் மரியாதையுடன் கெளரவிக்கப்படும் ஆலிம் சங்கைக்குரிய மௌலானா மௌலவி அப்துல்லாஹ் ரஹ்மாணி என்பது குறிப்பிடத்தக்கது.
Share:

அதிரைக்கு சென்னை பிரபல மருத்துவமனையின் மருத்துவர் வருகை

சென்னை அப்போலோ மருத்துவமனையின்  சிறப்பு மருத்துவர் வருகை 
நாள்:03-03-13 ஞாயிற்றுக்கிழமை 

சென்னை பிரபல அப்போலோ  மருத்துவமனையிலிருந்து இருதய நோய் சிகிச்சையில் புகழ் பெற்ற சிறப்பு மருத்துவர் Dr. K.N. சீனிவாசன் (M.D.,GEN,MED.)DNB(CARDIOLOGY)அவர்கள் அதிரை பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் கீழ் தளத்தில் இயங்கி வரும் தாஜ் 24 X 7 மருத்துவமனைக்கு வருகை தந்து காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இருதய நோய்,இரத்த  கொதிப்பு  இரத்தத்தில் கொழுப்பு, போன்ற இருதய சம்பந்தப்பட்ட நோய்களை பரிசோதனை செய்து சிறந்த முறை ஆலோசனை வழங்குகிறார்கள்.

அதிரை சகோதர/சகோதரிகளே! நீங்களும் மருத்துவ ஆலோசனை பெற நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளவும்.மேலும் விபரங்களுக்கு :9443342389,9500271931

இப்படிக்கு .
தாஜ் 24 மணி நேர சேவை  மருத்துவமனை &
சென்னை அப்போலோ  மருத்துவமனை தகவல் மையம்
எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் கீழ் தளம் 
பேருந்து நிலையம் எதிரில்.அதிரை  
Share:

அதிரை tntj கிளையின் சார்பாக குடும்ப நல மற்றும் மருத்துவ உதவிகள் விபரம்

தமிழக தவ்ஹீத் ஜமாத் - அதிரை கிளையின் சார்பாக வழங்கப்பட்ட குடும்ப நல மற்றும் மருத்துவ உதவிகள் விவரம்

Share:

வாகன விபத்தில் அதிரை சகோதரர் மரணம்


அதிரை பிலால் நகரை சேர்ந்த  சரபுதீன் அவர்களின் மகன் தெளபீக். இவர் கத்தார் நாட்டில் பணி புரிந்து வருகிறார்.இவர்  கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு  இன்று காலை [ 24-02-2013 ] சிகிச்சை பலனின்றி  வபதாகிவிட்டார்.

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 

அன்னாரின் நல்லடக்கம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். 
Share:

அதிரையை அடுத்த மஞ்சவயல் பகுதிக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்க நிதிஒதுக்கீடு!

பட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட 3 ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளில் குடிநீர் வசதிக்காக ஆழ்குழாய் கிணறு அமைக்க ரூ.6½ லட்சம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கி இருப்பதாக என்.ஆர்.ரெங்கராஜன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

அந்த வகையில் மஞ்சவயல், நாட்டுச்சாலை, சாந்தாங்காடு ஆகிய ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளில் குடிநீர் வசதி செய்துதர வேண்டும் என்று கிராம மக்களிடம் இருந்து கோரிக்கைள் வந்தன. அதைத்தொடர்ந்து 3 ஊராட்சிகளிலும் உள்ள தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.ரெங்கராஜன் முடிவு செய்தார். 

அதன்படி 3 ஊராட்சிகளிலும் தலா 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் தொட்டியுடன் கூடிய ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பதற்காக ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

அதிரை பொதுமக்களுக்கு ஒர் அறிவிப்பு.கடந்த பல வருடங்களாக தமிழகம் முழுக்க மின் வெட்டு இருந்து வருவது குறித்து அனைவரும் அறந்ததே, அதே சமயத்தில் சில வருடங்களாக மின் வெட்டின் நேரங்கள் பல மணி நேரங்கள் அதிகரித்து பொதுமக்களை பாடாய் படுத்தி வருகிறது,

அதிரையின் மின் துண்டிப்பு நேரங்கள்:-

காலை 6 மணி முதல் 9 மணி வரை,

பகல் 12 மணி முதல் 3 மணி வரை,

மாலை 6 மணி முதல் 7 மணி வரை,

இரவு 9 மணி முதல் 10 மணி வரை,

நல்லிரவு 12 மணி முதல் 1 மணி வரை.

இப்படியாக மின் துண்டிப்பு அமலில் உள்ளது. இதனால் பல வேலைகள் பாதித்தாலும் குறிப்பாக காலை 6 மணி என்பது எல்லா வகையிலும் மிகவும் முக்கியமான நேரமாகும்.

இதை கருத்தில் கொண்டு உயர் அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதில் 6 மணி முதல் 9 மணி வரை இருந்ததை 7 மணி முதல் 9 மணி வரையாக மாற்றி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஓரளவுக்கு சரிசெய்த தஞ்சை மண்டல மின்வாரிய அனைத்து அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் அதிரை பொதுமக்கள் சார்பாக நன்றிகளும் பாராட்டுக்களும்.


வாழ்க வளமுடன்.

அன்புடன்.

K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.Mohamed Aliyar (late)
Share:

தஞ்சை மாவட்டத்தில் 2–ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாம்!


தஞ்சை மாவட்டத்தில் 2–ம் கட்டமாக 2½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக் கிழமை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இந்தியாவில் கடந்த 1995–ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 18–வது சுற்றின் 2–வது தவணை முகாம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது. இந்த முகாமின் நோக்கமானது போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதாகும்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த மாதம் 20–ந் தேதி நடைபெற்ற முதல் முகாமில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 52 உள்ளூர் மற்றும் வெளியூர் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாளை தஞ்சை மாவட்டத்தில் 2–வது தவணை போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணியில் 6 ஆயிரத்து 40 பணியாளர்களும், 178 மேற்பார்வையாளர்களும், 120 மருத்துவ அலுவலர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

1,510 மையங்கள்

நகரப்பகுதிகளில் 128 மையங்களும், ஊரக பகுதிகளில் 1382 மையங்களும் என மொத்தம் 1,510 மையங்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், ரெயில்நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் நாளை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் சொட்டு மருந்து வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுசுகாதாரத்துறை, ஊட்டச்சத்துத்துறை, சமூகநலத்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, ஊரகவளர்ச்சித்துறை, நகராட்சிகள், உள்ளாட்சித்துறை, அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் இந்த திட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளன.

இந்த திட்டம் சார்ந்த மேற்பார்வை பணிக்கு தகுந்த ஏற்பாடுகள் மற்றும் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் குழந்தைகள் யாராக இருந்தாலும் சொட்டு மருந்து வழங்கப்பட்டு குழந்தையின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும். வேலை நிமித்தமாக வெளிமாநிலங்களில் இருந்து வந்து தற்காலிகமாக தங்கியிருக்கும் மக்களின் குழந்தைகளுக்கும் மற்றும் நாடோடிகளாக இடம் பெயர்ந்து செல்லும் மக்களின் குழந்தைகளுக்கும் விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு நடமாடும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share:

மின்சார வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு!

அதிரையில் நேற்று மின்சார வாரிய அதிகாரிகள் நமதூரில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர்களை நேரில் ஆய்வு செய்து கணக்கு எடுத்தனர். இதில் அடிக்கடி பழுதாகும் டிரான்ஸ்ஃபார்மர்கள் விரைவில் மாற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Share:

மதுக்கூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா!


மதுக்கூரில் புதிய பள்ளிவாசல் 'மஸ்ஜித்  ஹாரப் அல் நயீமி'  இன்று (22.02.2013) வெள்ளிக்கிழமை திறக்கப் பட்டது.

இன்று காலை சுமார் 10:30 மணிக்கு  பள்ளிவாசல் எதிர்புறம் அமைக்கப்பட்டிருந்த மர்ஹும் P.S.K.N.நூர்தீன் ராவுத்தர் ,S.N.A நத்தர்ஷா ஆகியோர் நினைவு விழா மேடையில் ஜாமிஆ பள்ளிவாசல் துணை இமாம் மெளலவி M.முகம்மது அலி நூரி அவர்கள் இறை வசனம் ஓத நிகழ்ச்சி இனிதே தொடங்கியது,நிகழ்ச்சிக்கு ஜாமிஆ மஸ்ஜித பரிபாலன கமிட்டியின் தலைவர் சகோதரர் PSKA அமானுல்லா அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.மிப்தாஹுல் இஸ்லாம் சங்க முன்னாள் செயலாளர் சகோதரர் A.M. முகம்மது பாரூக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மேலப்பள்ளிவாசலின் இமாம் மெளலவி M.முகம்மது முகைதீன் நூரி,மஸ்ஜித் நூர் பள்ளி இமாம் மெளலவி M.முகம்மது யூசுப் அவர்கள்,ஜாமிஆ மஸ்ஜித் செயலாளர் சகோதர முகம்மது பாரூக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.சகோதரர் K.M.H.ஷாகுல்ஹமீது அவர்களும் இப்பள்ளிக்காக ஒழைத்தவர்களை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பெரியப்பள்ளிவாசலின் இமாம் மெளலவி S.M.முகம்மது யூசுப் அவர்கள் உரைநிகழ்த்தினார்.

உரைகளுக்கு மத்தியில் மதுக்கூர் அல்ஃபாஸ் கம்யூட்டர்ஸ் உரிமையாளர் சகோதரர் K.T.M.J.நிசார் அகமது அவர்களின் முயற்சியில் உருவான பள்ளிவாசல் திறப்புவிழா சிறப்பு மலரை ராசல்கைமா அரபியர் சகோதரர் ராஷித் ஹாரப் சாலம் அல் நயீமி அவர்கள் முதல் பிரதியினை  வெளியிட நமதூர் ஜமாத் தலைவர் சகோதரர் PSKA அமானுல்லா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

மெளலவி M.சேக் முஹ்யித்தீன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இறுதியில் மிப்தாஹுல் இஸ்லாம் சங்க இணைச்செயலாளர் சகோதரர் R.செய்யது சலீம் மெளலானா அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூகளிலிருந்து ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் கலந்துகொண்டு நிக்ழச்சியினை சிறப்பித்தனர்.


படங்கள் மற்று தகவல் உதவி : த.மு.மு.க 

Share:

FFCC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர்போட்டி!

அதிரையில் FFCC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர்போட்டி இன்று காலை 9.30 முதல் 12 மணி வரை கருத்தமையல் திடலில் நடைப்பெறுகிறது.

Share:

அதிரை புதிய பஸ் நிலைய வேலைகள் - மத்திய அமைச்சருடன் பேரூராட்சித் தலைவர் சந்திப்பு!

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு பஸ் நிலையம் கட்ட 38 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார் இந்தத் தகவலை அதிரை பேரூராட்சித் தலைவர் எஸ்.ஹெச்.அஸ்லம் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் எஸ் பழனி மானிக்கம் அவர்களை நேரில் சந்தித்து அதிரை பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட அதிரை பிரமுகர்கள் அதிரை பேரூராட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் அதிரை பஸ் நிலையத்தில் பஸ் நிலையத்துடன் கூடிய கடைகள் கட்டப் பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப் பட்டது. இதற்கும் மத்திய அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மத்திய அமைச்சர் எஸ். பழனி மானிக்கம் வீட்டில் நடைபெற்ற இச்சந்திப்பில் அதிரை பேரூராட்சித் தலைவர் எஸ்.ஹெச். அஸ்லம், கவுன்சிலர்கள், அப்துல்காதர், செய்யது முஹம்மது, இப்ராஹீம்,அய்யாவு, பாஞ்சாலன், முஹம்மது சரீப்,பசுல்கான், உம்மல் மர்ஜான்,நிலோபர் யூசுப், சிதரா தங்கராஜ் ஆகியோர் மத்திய அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.
Share:

அது ஓர் அழகிய பொற்காலம் - 2

லீஃபா உமர் (ரலி) தமக்கு ஆளுநராகத் தேர்ந்தெடுப்பவரிடம் தகுதி இருக்கிறதா, நம்பகமானவரா, மற்றவரைவிட இவர் இப்பணிக்கு எப்படி

‘சாலப் பொருந்துவார்’ என்று மாய்ந்து மெனக்கெடுவார். இன்றும் தகுதி, நம்பகத்தன்மை என்பனவெல்லாம் பதவிக்கான அடிப்படைகள்தாமே, இதில் என்ன விசேஷம் என்று கேட்கலாம்.

இவற்றின் இலக்கணத்தை மிக அழுத்தமான சான்றாய் வரலாற்றில் பதித்தவர்தாம் கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் (ரலி).

இங்கு சில முன்னெச்சரிக்கைகளுடன் மனத்தைப் பக்குவப்படுத்திக்கொள்வது நலம். பின்னர் ஆங்காங்கே நமக்கு ஏற்படவிருக்கும் அதிர்ச்சியிலிருந்து அது நம்மை மீட்கும். அதாவது அரசியல், பட்டம், பதவி, நீதி, நேர்மை, நியாயம், இறைபக்தி போன்ற நமக்கு நன்கு அறிமுகமான சொற்கள் இருக்கின்றனவே, அவற்றுக்கு நமது மனம் அறிந்துள்ள புரிந்துள்ள அர்த்தங்களை கையில் கிடைக்கும் ஆகப்பெரிய ரப்பர் கொண்டு அழித்துவிடுவது நல்லது. சிரமம்தான். இருந்தாலும் முயலவேண்டும்.

ஏன் அப்படி? பார்ப்போம்.

“என்னைத் தேர்ந்தெடுங்கள்” என்று வருபவருக்கு உமரின் (ரலி) பதில் ‘வேலை காலியில்லை.’ தயவு இன்றி, தாட்சண்யமின்றி அவருக்குப் பதவி மறுக்கப்படும். ஏனெனில், மக்களின் ஆளுநர்களைத் தேர்ந்தெடுப்பதென்பது தமக்கு அளிக்கப்பட்டுள்ள அமானிதம்; அவ்விஷயத்தில் பொறுப்பற்று, மனம்போன போக்கில் நடந்துகொள்வது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களுக்கும் இழைக்கும் அநீதி என்பது உமரின் அழுத்தந்திருத்தமான எண்ணம்!

“ஒரு குழுவினர் மத்தியில் அல்லாஹ்வுக்கு உவப்பான ஒருவர் இருக்கும்போது, அவரை விடுத்து மற்றொருவரை அக்குழுவினருக்குப் பொறுப்பாளராய் நியமிப்பது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் இழைக்கும் துரோகமாகும்” என்று குறிப்பிடுவார் உமர்.

தகுதியிலும் நம்பிக்கையிலும் ஒருவரைவிட மற்றவர் ஒருபடி மிகைத்திருந்தால், முன்னவர் ஏற்கெனவே பதவியில் அமர்த்தப்பட்டிருந்தாலும் அவரிடமிருந்து அப்பதவி பறிக்கப்பட்டு தகுதியானவருக்கு வழங்கப்படும். சமகாலத்தில் சகட்டுமேனிக்கு நடைபெறும் மந்திரிசபை மாற்றம், அதிகாரிகளைத் தூக்கி அடித்து ஆடப்படும் பந்தாட்டம் போன்றவற்றுடன் இவற்றைக் குழப்பிக்கொள்ளக் கூடாது. அது அபத்தம்.

ஒருமுறை ஷுராஹ்பீல் இப்னு ஹஸனாஹ்வை நீக்கிவிட்டு அப்பதவிக்கு முஆவியாவை நியமித்துவிட்டார் உமர். “அமீருல் மூஃமினீன்! என் பணி திருப்திகரமானதாய் இல்லை என்பதற்காக என்னைப் பதவி நீக்கினீர்களா?” என்று உமரிடமே நேரடியாகக் கேட்டார் ஷுராஹ்பீல் இப்னு ஹஸனாஹ் (ரலி).

“இல்லை. நான் உம்மைப் பற்றி நல்லெண்ணம் கொண்டுள்ளேன். ஆனால் உம்மைவிட தகுதியானவர் எனக்குத் தேவைப்பட்டார்.” நேரடியான கேள்வி; நேரடியான பதில். தகுதி என்பது இருவரிடம் சமமாய் அமைந்திருந்தாலும் செயல் திறன் எவரிடம் அதிகம் மிகைத்திருக்கிறதோ அவருக்கே வாய்ப்பு. தீர்ந்தது விஷயம்.

இவ்விஷயத்தில் உமரின் கவலையும் அச்சமும் எந்தளவு இருந்ததென்றால், “யா அல்லாஹ்! தகுதி அமையப்பெற்ற கொடியவன், தகுதி அமையப்பெறாத நம்பகமானவன் ஆகியோரைப்பற்றி உன்னிடமே முறையிடுகிறேன்,” என்று இறைஞ்சுவது உமரின் வழக்கம். தகுதிகள் அமையப்பெற்ற அயோக்கியன், தகுதியற்ற யோக்கியன் இவர்கள் மக்களை ஆளும்போது என்னாகும்? சமகால உலகு சான்று கூறும்.

அதே நேரத்தில் தகுதிகள் அனைத்தும் இருந்தபோதிலும், “முஸ்லிம்களின் சில விவகாரங்களுக்கு ஒருவர் பொறுப்பாளராய் நியமிக்கப்பட்டு, அவர் தமக்குரிய பணியாளர்களை நட்பு, இரத்த பந்தம் போன்றவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பாராயின் அவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகம் இழைக்கிறார்” என்பதும் கலீஃபா உமரின் தெளிவான கருத்து.

வெற்றுப் பேச்சல்ல. தம்முடைய உறவினர்களுக்குப் பதவி அளிப்பதை கவனமாக, மிகக் கவனமாகத் தவிர்த்துள்ளார் உமர். கூஃபா நகரத்து மக்கள் தங்களின் ஆளுநர்மீது அதிருப்தியுற்றுள்ளதாக உமருக்குத் தகவல் வந்தபோது. “தகுதியுடைய வேறு யாரைத் தேடுவது” என்று உமர் ஆலோசனை புரிந்துகொண்டிருந்தார்.

“மிகவும் தகுதியுள்ள ஒருவரை நான் அறிவேன்” என்றார் ஒருவர்.

உமர் மிகவும் ஆவலுடன், “யார் அவர்?” என்றார்.

“அப்துல்லாஹ் இப்னு உமர்” உமரின் மைந்தரைப் பரிந்துரைத்தார் அவர்.

“உமக்கு கேடு விளைய! அல்லாஹ்வைத் திருப்திப்படுத்த நீர் இதைச் சொல்லவில்லை. ஒருவன் தமக்குரிய பணியாளர்களை நட்பு, இரத்த பந்தம் போன்றவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பானாயின் அவன் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகம் இழைக்கிறான்” என்று அவரின் வாயை அடைத்தார் உமர்.

இத்தனைக்கும் பரிந்துரைத்தவர் தகுதியற்ற ஒருவரை கைகாட்டவில்லை. அப்துல்லாஹ் இப்னு உமருக்கு அனைத்து தகுதிகளும் இருந்தன என்பது அவரது வரலாற்றைப் பார்த்தால் புரியும். ஆனால் அது இங்கு இரண்டாம்பட்சம். ‘நீ எனக்கு இரத்த பந்தமா, சொந்தமா, பங்காளியா – ம்ஹும்! உனக்குப் பதவி கிடையாது.’

இவை தவிர, இரக்க உணர்வும் ஆளுநர்களின் தகுதிகளில் ஒன்று. ‘தம் மக்களிடம் பரிவும் இரக்கமும் கொண்டவரே ஆளுநராக அமைய வேண்டும்’ என்பார் உமர். பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவரை ஒரு பதவிக்கு நியமனம் செய்து கடிதம் எழுதியிருந்தார் உமர். உமரை வந்து சந்தித்தார் அவர். அந்நேரம் உமரின் மடியில் பிள்ளை. அதைக் கொஞ்சி முத்தம் ஈந்துகொண்டிருந்தார் உமர்.

பெரும் ஆச்சரியத்துடன் “ஓ அமீருல் முஃமினீன். தாங்கள் பிள்ளைகளுக்கு முத்தமிடுவீர்களா? நான் என்னுடைய பிள்ளைகளை முத்தமிட்டதே இல்லையே” என்றார் அவர்.

“எனில், நீர் மக்களிடம் இரக்கமில்லாதவர். நீர் எனக்காக எந்த நிர்வாகப் பணியும் புரிய முடியாது” என்று அவரை வந்த வழியே திருப்பி அனுப்பிவிட்டார் உமர். அந்த மனிதரது நியமனம் உடனே நீக்கப்பட்டது.

தம்முடைய ஆளுநர்களுக்கு உமரின் அறிவுரை, “தம் மக்களிடம் அன்புடனும் பரிவுடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ளும் தலைவர்களின் செயலே அல்லாஹ்வுக்கு மிகவும் உவப்பானதும் நெருக்கமானதும் ஆகும். அறியாமையும் முட்டாள்தனமும் கொண்ட தலைவர்களின் செயல்களே அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானதும் நெருக்கமற்றதும் ஆகும்.”

இவையெல்லாம் …. விசித்திரமாயில்லை?

அது ஓர் அழகிய பொற்காலம்.

(ஒளிரும்)

-நூருத்தீன்source: http://www.darulislamfamily.com/

Share:

கடல் உணவு - மட்டி

கடல் உணவு

கடலில் கணக்கில் அடங்கா நீர்வாழ் பிராணிகள் இருந்தாலும் அவைகளில் நமக்கு நன்கு அறிந்தது ஒரு சில வகைகளே, அதில் ஒன்றுதான் இந்த மட்டி என்று அழைக்கப்படும் ஒரு வகை கடல் உணவு.

மட்டி இது கடலில் கிடைக்கும் உணவு. இதன் ருசியே தனி. இது சிப்பிக்குள் இருக்கும். அதனை ஒரு அகன்ற பாத்திரத்தில் சிறு தண்ணீர்விட்டு வேகவைக்கவும். அது வெந்ததும் சிப்பி சற்று வாய்திறக்கும் அதனை


இப்படி நகத்தால் சற்று நீக்கினால் நன்றாக திறக்ககும் அதனுள் இருக்கும் மட்டியை ஒவ்வொன்றாக எடுத்து


தனி தட்டில் வைத்துக்கொள்ளவும், அதை சமைக்க தேவையானவைகள்.-3
மட்டி தேவையான அளவு, கத்தரிக்காய், சிறிய வெங்காயம், தேங்காய்பால், பொரியரிசி மாவு, இஞ்சிபூண்டு, மஞ்சல்தூள், மிளகாய்த்தூள், சீரக சோம்புத்தூள், மல்லித்தூள், பச்சைமிளகாய், கருவேப்பில்லை, தக்காளி, உப்பு, எண்ணெய், இன்னும் ருசி தேவைப்பட்டால் விருப்பப்பட்டதை சேர்த்துக்கொள்ளலாம். குக்கரில் மட்டி நறுக்கிய காய்கறிகளையும் மசாலா அதோடு கொஞ்சம் தண்ணீர்விட்டு கரைத்து உப்பிட்டு குக்கரை மூடிவைக்கவும். உப்பு சற்று குறைவாக சேர்த்துதர்ன சமைக்கனும் இதில் இயற்கையிலேயே உப்பு இருக்கும்.-4

ஐந்து விசில் வந்ததும் ஆவியை போக்கிவிட்டு மூடியை திறந்து-5
பொரியரிசிமாவைபோட்டு கிளறிவிட்டு பிரண்டதுபோல் வந்ததும்-6
தேங்காய்பாலை ஊற்றி சற்று கொதிவந்ததும்-7
சிறிய சட்டியில் எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய சிறியவெங்காயம் கருவேப்பில்லை போட்டு தாளித்து-8
ரெடியான மட்டிகலவையோடு தாளித்தவைகளையும் சேர்க்கவும்-9

இப்போது சுவையான மட்டிக்கறி ரெடி, ரசம் வைத்து வெள்ளை சோற்றோடு சாப்பிட சூப்பர் சுவையாக இருக்கும், அப்பம், தோசைகளுக்கும் தொட்டுக்கொள்ளலாம், இது ஒரு தனி சுவையில் சாப்பிட மிக ருசியாக இருக்கும்.

குறிப்பு:- அலர்ஜி உள்ளவர்கள் மட்டி சாப்பிடுவதை அடியோடு தவிர்ப்பது நல்லது.வாழ்க வளமுடன்.

அன்புடன்.

K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.Mohamed Aliyar (late)
Share:

தஞ்சை மற்றும் திருச்சியில் வரும் 23-ஆம் தேதி ஹஜ் பயணிகளுக்கான சிறப்பு பாஸ்போர்ட் முகாம்!


வரும், 23ம் தேதி திருச்சி மற்றும் தஞ்சையில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கான சிறப்பு பாஸ்போர்ட் முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் கூறியிருப்பதாவது:

ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வோர் வரும், மார்ச், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால், புதிதாக பாஸ்போர்ட் எடுக்க அல்லது புதுப்பிக்கவும் அரசு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது. அதன்படி ஹஜ் பயணத்துக்கான பாஸ்போர்ட், குறைந்தபட்சம், 2014ம் ஆண்டு மார்ச், 31ம் தேதி வரையில் செல்லுபடியுள்ளதாக இருப்பது அவசியம்.முன்பதிவின்றி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம். அதற்கான சிறப்பு முகாம் திருச்சி, தஞ்சை பாஸ்போர்ட் சேவை மையங்களில், ஃபிப்., 23ம் தேதி நடக்கிறது. காலை, 9 மணி முதல், 11 மணி வரை, புதிய விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்.

அதன்பின், விண்ணப்பங்கள் குறித்த பரிசீலனை நடக்கும். இதற்காக ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பித்த நகல் மட்டும் இருந்தால் போதுமானது. தேதி, நேரம் குறித்த முன்பதிவு அவசியமில்லை.பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான போலீஸ் சான்றுகள் சிறப்பு தகுதி அடிப்படையில், டி.எஸ்.பி., அலுவலகம் மூலம் விசாரிக்கப்பட்டு, அதன்பின், பாஸ்போர்ட் வழங்கப்படும். எனவே, ஹஜ் பயணிம் மேற்கொள்வோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். ஹஜ் பயணிக்கான பாஸ்போர்ட் தொடர்பான பிற குறைதீர் மனுக்கள் மீதான பரிசீலனை, வரும் ஃபிப்., 25ம் தேதி முதல், மார்ச், 20ம் தேதி வரை நடக்கிறது.

ஹஜ் செல்ல தீர்மாணித்துள்ள நமதூர் சகோதர சகோதரிகள் இதில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


Share:

வாட்டர் ஹீட்டர் பொருத்த வந்தவனின் வக்கிர புத்தி - ஒரு உஷார் ரிப்போர்ட்!


இது அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை!

வாட்டர் ஹீட்டர் பொருத்த வந்தவர் பாத்ரூமில் கேமராவை பிக்ஸ் செய்து 8 மாதம் படம் பார்த்த வக்கிரப் புத்திக்கார எலக்ட்ரீசியன் கைது செய்யப் பட்டுள்ளான்.

கேரளா, திருவனந்தபுரம், முட்டட மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த. எலக்ட்ரீஷியன். எட்டு மாதங்களுக்கு முன், பக்கத்து வீட்டு குளியலறையில், வாட்டர் ஹீட்டர் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, யாருக்கும் தெரியாமல், அதனுள் சிறிய ரக கேமராவையும் பொருத்தியுள்ளார். ரேடியோ ஏ.வி., டிரான்ஸ்மீட்டருடன் கூடிய, அந்த சிறிய ரக கேமராவில் பதிவாகும் காட்சிகளை, தன் வீட்டில் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட ரிசீவர் மூலம் பெற்று, பார்த்து வந்துள்ளார். 

கடந்த, எட்டு மாதங்களாக இதைச் செய்துள்ளார். இவர் வாட்டர் ஹீட்டர் பொருத்திய பக்கத்து வீட்டில், திருமணமான, இரண்டு பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். சகோதரிகளான அவர்கள் இருவரின் கணவர்களும், வெளிநாட்டில் வேலை பார்க்கின்றனர்.

 சமீபத்தில், இந்த பெண்களின் வீட்டிற்கு வந்த, அவர்களின் உறவினர் ஒருவருக்கு, குளியலறையில் பொருத்தப்பட்டுள்ள, வாட்டர் ஹீட்டர் கருவி மீது, சந்தேகம் வந்தது. இதையடுத்து, வேறொரு நபரை அழைத்து வந்து, அக்கருவியை பரிசோதித்தபோது, அதனுள் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர், போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி, எலக்ட்ரீஷியனை கைது செய்தனர். அவர் வீட்டிலிருந்த கம்ப்யூட்டர் மற்றும் ரிசீவர்களை, பறிமுதல் செய்தனர். இதேபோல், அப்பகுதியில் வேறு ஏதாவது வீடுகளில், ரகசிய கேமராக்களை, ரகுநாத் பொருத்தியுள்ளாரா என்பது குறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.


வாசகர்களே உஷாரா இருங்க, சிறிய சிறிய கேமராக்கள் என அதி நவீனமாகியுள்ள உலகில் எந்த வேலையை செய்ய அனுமதித்தாலும் முழுவதுமாக சோதனை செய்யுங்கள்.Share:

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி கலையரங்கம் திறப்பு விழா

காதிர் முகைதீன் கல்லூரியில் புதுபிக்கப்பட்ட கல்லூரி கலையரங்கத்தின் திறப்பு விழா இன்று காலையில் மிக சிறப்பான முறையில்  காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஹாஜி.கே.எஸ்.சர்புதீன் அவர்களின் தலைமையில் நடை பெற்றது . இவ் விழாவில் கல்லூரி ஆட்சி மன்றக்குழு தலைவர் ஏ.அப்துல் சுக்கூர் மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுபினர்கள், கல்லூரி முதல்வர் முனைவர்.ஏ .ஜலால் ,முனைவர்.ஏ .எம் .உதுமான் முகைதீன் , பேராசிரிய, பேராசிரியைகள் ,அலுவலக மற்றும் ஆய்வகப் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.புதுபிக்கப்பட்ட கலையரங்கானது அனைத்து வசதிகளுடன் புதுப்பொலிவுடன் திகழ்கிறது.விழாவின் முடிவில் முதல்வர் முனைவர்.எ.ஜலால் நன்றி கூறினார்.                               தகவல் மற்றும் புகைப்படங்கள்:முஹம்மது சலீம் (2year b.com)Share:

அதிரையில் பிஜே சொற்பொழிவு காணொளி திரையில் ஒளிப்பரப்பு !

சென்னயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17-02-13) அன்று மண்ணடி தம்புசெட்டி தெருவில் நடைபெற்ற பொதுக் கூட்டதில் சகோதரர்  ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை சரியா ? என்கின்ற தலைப்பில் உரையாற்றினார். அதில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர். 

அதிரையில் சகோதரர் ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பேசிய இந்த சொற்பொழிவை நேற்று (19-02-13) தக்வா பள்ளி அருகில் அதிரை tntj கிளை நிர்வாகிகள் திரையில் ஒளிபரப்பு செய்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் 

  புகைப்படம்  சகோ. அப்துல் ரஹ்மான்
Share: