துபையில் நடந்த அமீரக கீழத்தெரு மஹல்லா மாதாந்திரக்கூட்டம்.!


அமீரக துபையில் கீழத்தெரு மஹல்லாவின் மாதாந்திரக்கூட்டம் நேற்று முன் தினம் 29/03/2013 வெள்ளிக்கிழமை அன்று    இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது.  கீழத்தெரு மஹல்லா தலைவர் ஜனாப் M.அப்துல் ஜலீல் அவர்கள் தலைமை ஏற்க சகோதரர் மீரான் ஹசனி  கஹ்ராத் ஓத சிறப்புடன் ஆரம்பமானது.

நமது ஊர்,மற்றும் நமது மஹல்லா வாசிகள் நலன் கருதி நல்ல பல விசயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதில் சில முக்கிய கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டன.
 

கூட்டத்தில் முன்வைத்து பேசப்பட்ட கோரிக்கைகளில்  முக்கியமானவைகள்.!
1,காட்டுப்பள்ளி அருகில் பெண்களுக்கென தனி சுகாதார வாளகம் [கழிப்பிடம்] கட்டியதை திறப்பதற்கான   முயற்ச்சி எடுப்பது பற்றி பேசப்பட்டன.

2,நமது தெருவாசிகளின் நலன் கருதி நமது தெருவுக்கென்று நுகர்பொருள் விநியோகத்திற்கான ரேசன் கடை அமைக்க தகுதியான இடம் விரைவில் பார்த்து அமைக்கப்படும்.  

3,பெண்களுக்கென மார்க்க அறிவுரை சொற்ப்பொழிவுகள்  நடத்த வசதியுடன் கூடியபொருத்தமான இடத்தை தேர்ந்தெடுத்து விரைவில் செயல்படுத்துவது பற்றி பேசப்பட்டன.


4, மிக முக்கியமாக கீழத்தெரு மஹல்லா வாசிகள் நமது தெரு மாத சந்தாவை சரியாக கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன. இன்னும் பல நல்ல திட்டங்களை நமது சார்பாக ஊருக்காகவும், நமது தெருக்காகவும் செய்து கொடுக்கலாம். அதில் அல்லாஹ் பரக்கத்தை வைத்திருக்கிறான்.

மற்றபல விசயங்கள் கலந்துரையாடலுக்குப்பின் சகோதரர் மீரான் ஹசனி துவா ஓத கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அமீரக கீழத்தெரு மஹல்லா தலைவர் நன்றி கூற கூட்டம் இனிதாய் முடிவுற்றன.

இப்படிக்கு அன்புடன் : அமீரக கீழத்தெரு முஹல்லா நிர்வாகிகள்

செய்தித்தொகுப்பு : அதிரை.மெய்சா

நன்றி: adirai-east-group
Share:

அதிரை பைத்துல்மால் மாத்தாந்திர கூட்டம் (கடல்கரைத் தெரு)


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மாலின் மாதாந்திரக்கூட்டம் கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்!

சென்ற மாத அதிரை பைத்துல்மாலின் மாதாந்திரக்கூட்டத்தில் இனி ஒவ்வொரு மஹல்லாஹ் பள்ளிவாசல்களிலும் மாதந்திரக் கூட்டத்தை நடத்துவது  என தீர்மானிக்கப்பட்டதை அடுத்து இன்று [ 29-03-2013 ] மாலை 4.30 மணியளவில் முதல் கூட்டமாக நமதூர் கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளி வளாகத்தில் அதிரை பைத்துல்மாலின் தலைவர் ஹாஜி. ஜனாப் S. பரகத் அவர்கள் தலைமையில், கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகளின் முன்னிலையில், பைத்துல்மால் நிர்வாகிகளின் பங்களிப்போடு இனிதே துவங்கியது.


நிகழ்ச்சியின் நிரல் :

1. கிரா-அத் : ஹாஜி. ஜனாப் சிஹாப்துல்லா ( பொருளாளர்)   

2. வரவேற்புரை : ஹாஜி. ஜனாப் A.S. அப்துல் ஜலீல் (இணைச் செயலாளர்)

3. மாதாந்திர அறிக்கை வாசித்தல் : ஹாஜி. ஜனாப் S. அஹ்மத் ஹமீது (செயலாளர்)

4. தெருவில் புழங்கும் சைக்கிள் வட்டியை படிப்படியாக குறைக்கும் நோக்கில் ரூபாய் 1000/- முதல் ரூபாய் 3000/- வரையிலான வட்டியில்லா சிறுதொகை கடன் திட்டத்தை கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகளின் பங்களிப்போடு அதிரை பைத்துல்மால் சார்பாக கடற்கரைத்தெரு மஹல்லாவில் செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதற்காக முதல் முயற்சியாக ரூபாய் 20,000/-த்தை ஒதுக்குவது எனவும் தீர்மாணிக்கப்பட்டுள்ளது. இவற்றை செயல்படுத்துவதற்காக கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகள் சகோ. அஹமது ஹாஜா, சாகுல் ஹமீது, சிராஜுதீன் ஆகியரோடு கடற்கரைத்தெரு மஹல்லாவைச் சார்ந்த அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் சகோ. இப்ராஹீம், அக்பர் ஹாஜியார் ஆகியோர் இணைந்து செயல்படுவார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

5. இன்ஷா அல்லாஹ் வரும் கல்வி ஆண்டு [ 2013-2014 ]  முதல் அதிரை பைத்துல்மாலின் “உயர்க்கல்வி திட்டத்தை” அமல்படுத்துவது தொடர்பாக கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகத்தினரிடம் ஒத்துழைப்பை கோரினார் அதிரை பைத்துல்மாலின் இணைச் செயலாளர் சகோ. A.S. அப்துல் ஜலீல் அவர்கள்.


6. நன்றியுரை : ஹாஜி. ஜனாப் S.K.M.ஹாஜா முஹைதீன் [ துணை தலைவர் ]

இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதாந்திரக்கூட்டம் நமதூர் தரகர்தெரு மஹல்லாவில் நடைபெறும்!



இப்படிக்கு 

நிர்வாகம் 
Share:

அதிரையில் அதிமுக பொதுக்கூட்டம்!

அதிரை அதிமுக கிளை சார்பில் நேற்று மாலை அதிரை பேருந்து நிலையத்தில் கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் நமதூர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
Share:

அதிரையில் வர்த்தக மற்றும் கலாச்சார பொருட்காட்சி தேதி வெளியீடு!

அதிரை வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பின் சார்பாக அதிரையில் மாபெரும் பொருட்காட்சி  வருகின்ற 28-04-2013 முதல் 12-05-2013 வரை நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த பொருட்காட்சி நமதூர்வாசிகளுக்கு பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக பயன்பாடுகளுக்காக நடத்தபடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Share:

அதிரையில் நடைபெற்ற விழிப்புணர்வு தெருமுனை கூட்டம்!

நிரந்தர நரகத்தை பெற்று தரும் தற்கொலை என்ற கொடிய பாவத்திற்கு எதிராக  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கடந்த 28.03.2013 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு  அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளி அருகில்    தற்கொலை சம்பவங்களுக்கு எதிராக விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான். வரம்பு மீறியும், அநீதி இழைத்தும் இதைச் செய்பவரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே உள்ளது.

[அல்குர்ஆன் 4:29, 30]

தகவல்: அதிரை TNTJ
Share:

கேஸ் சிலிண்டரும், பொதுமக்களும்


கற்கால மனிதர்கள் சிக்கி முக்கி கற்களை வைத்து நெருப்பு உண்டாக்கி உணவுகளை தயாரித்தான் என்று சிறுவயதாக இருக்கும் பொது படித்துருக்கோம். காலப்போக்கில் சுலபமாக நெருப்பை உண்டாக்கக்கூடிய எரிபொருள்களை கண்டுபிடித்தான், நவீனங்கள் வளரவே எரிபொருள்கள்  எரிவாயுவாக மாற்றம் அடைந்து சிலிண்டருக்குள் அடைப்பட்டு வீடு வீடாக சுற்றி சுற்றி வருகிறது. இது எல்லோரும் அறிந்ததே.

மூன்று ஆண்டுகளுக்கு முன் பட்டுக்கோட்டையிலிருந்து நாடியம்மன் கேஸ் ஏஜென்சி என்ற நிறுவனம் மூலம் நமதூர் மக்கள் கேஸ் சிலிண்டர்களை பெற்று வந்தார்கள், பதிவு செய்து இரண்டு மாதங்கள் ஆகியும் கேஸ் சிலிண்டர்கள் கிடைக்காமல் பல குளறுபடிகள் உண்டானதால் ஏகப்பட்ட குடும்பங்கள் அவதி பட்டது எல்லோரும் அறிந்ததுதான்.

முன்பு நடந்த சம்பவம்.

இது இப்போது நடக்கின்ற சம்பவம்.


தற்போது நமதூரிலேயே பாலு இன்டானே கேஸ் ஏஜென்சி என்ற நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தடையில்லா கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இப்ப பிரச்சனை என்ன வென்றால், (பொதுமக்களில் பெரும்பாலும் அங்கு பெண்கள்தான் அதிகம் வருகின்றனர்), அதாவது அந்த இடத்தில் கேஸ் சிலிண்டர்களுக்கு கொடுக்கப்படுகின்ற பாதுகாப்பு பொதுமக்களாகிய பெண்களுக்கு கொடுக்கப்படுகின்றதா?


அந்த இடம் ஒரு வனாந்திரம் போல் காட்சி அளிக்கிறது, அருகில் மதுபான கடை மட்டும் உண்டு, ஒரு டீ கடையோ, பெட்டிக்கடையோ கிடையாது, அவசர தேவைகளுக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடையாது, பேருந்து நிறுத்தம் கிடையாது, பெண்கள் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருக்கு, ஆகா மொத்தத்தில் பொதுமக்களாகிய இல்லத்தரசிகள் அங்கு போய்விட்டு திரும்பிவர மிகவும் சங்கடப்படுகின்றார்கள், மேலும் இந்த அலுவலகம் ஊருக்கு அப்பால் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

முறைப்படி பார்த்தால் கேஸ் சிலிண்டர்களை பாதுகாக்கும் இடம் (கோடான்) ஊருக்கு அப்பால் இருக்க வேண்டும், கேஸ் சிலிண்டர் சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு பொதுமக்கள் வந்து போகின்ற அலுவலகம் ஊருக்குள் இருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட நிறுவனம், நமதூரில் உள்ள மக்கள் நலனுக்காக செயல்படும் அமைப்புகள், மகளிர் அமைப்புகள், பொது அமைப்புகள், இன்னும்பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எல்லாம் ஒன்று இணைத்து இதை கருத்தில் எடுத்துக்கொண்டு அந்த அலுவலகத்தை ஊருக்குள் அமைத்து பொதுமக்களையும், பெண்களையும் சங்கடத்திலிருந்து பாதுகாத்தால் மிகவும் நல்லது.

இது பொதுமக்கள், பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி எழுதப்பட்டதாகும்.

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன், அன்புடன்.
K.M.A. ஜமால் முஹம்மது.
மூத்த குடிமகன், இந்தியன்.
Consumer & Human Rights.
S/o. K. Mohamed Aliyar (Late)
Share:

அது ஓர் அழகிய பொற்காலம் - 7


டுங்குற்றங்களுக்கு இஸ்லாம் நிர்ணயித்துள்ள தண்டனைகள் கடுமையானவை. அதை நிறைவேற்றுவது மக்களை ஆளும் தலைவரின் பொறுப்பு. எந்தளவு

மக்களிடம் ‘அன்பும் அறனும்’ உடையவராய் கலீஃபா உமர் (ரலி) விளங்கினாரோ அதேயளவு குற்றங்களுக்கு அளிக்கப்படும் நீதி அவரது ஆட்சியில் ‘பண்பும் பயனுமாய்த்’ திகழ்ந்தன. குற்றவாளி யாராக இருந்தாலும் சரி, எவராக இருந்தாலும் சரி, அவருக்கு அளிக்கப்படும் தண்டனைகளில் சுய வெறுப்பு விருப்போ, எல்லை மீறலோ அறவே கூடாது என்பதில் உமரின் கண்டிப்பு உச்சக்கட்ட ‘கறார்’தனம்.

ஏனெனில் தண்டனை வழங்குவதென்பதை, ‘இறைவனின் நீதியை நிலைநாட்டல்; சமூக அவலங்களைக் களைந்து ஒழுங்கை ஏற்படுத்துதல்’ என்பதாகத்தான் உமர் கருதினாரே தவிர, தனிப்பட்ட காரணங்களுக்கான பழிவாங்கல்; அதிகார துஷ்பிரயோகம்; கொடுங்கோல் போன்றவற்றின் நிழல்கூட நீதியின்மேல் விழுவது தகாது என்பது அவரது கண்டிப்பான நிலைப்பாடு.

உமர் (ரலி) மக்களிடம் திரும்பி, “அல்லாஹ்வின் மீது ஆணையாக. நான் உங்களிடம் ஆளுநர்களை அனுப்புவது உங்களை அடித்துத் துன்புறுத்துவதற்கோ, உங்களது செல்வங்களைப் பிடுங்குவதற்கோ அல்ல. அவர்கள் உங்களுக்கு இஸ்லாத்தைப் பயிற்றுவிக்கவும், நபியவர்களின் வழியைக் கற்றுத் தருவதற்காகவும்தான்” என்று வாக்குறுதி அளித்துவிட்டு,

மறுபுறம் ஆளுநர்களிடம் திரும்பி, “நான் உங்களுக்குப் பதவி அளித்துள்ளது மக்களின் முடியை மழிப்பதற்காகவும் அவர்களை அடித்துத் துன்புறுத்துவதற்காகவும் அல்ல. தொழுகையை நிலைநிறுத்தி, அவர்களுக்குக் குர்ஆனைக் கற்றுத்தருவதே உங்களின் தலையாய பணி” என்று அறிவுறுத்துவார்.

இதெல்லாம் படித்துப் பார்க்க நன்றாக இருக்கிறது; நடைமுறையில் எந்தளவு சாத்தியம் என்று தோன்றுமல்லவா? அதுதான் கலீஃபா உமர் ஆட்சியின் சிறப்பு. ஆளுநர்கள்மீது புகார்கள் கூறப்பட்டால் உடனே கவனிக்கப்படும்; நியாயம் வழங்கப்படும். குப்பைக்கூடைகள் குப்பைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட காலம்.

எகிப்து வசப்பட்டதும் அம்மக்களுக்கு அம்ரு இப்னுல் ஆஸை ஆளுநராக நியமித்தார் உமர். ஆட்சியும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒருநாள் மதீனாவுக்கு ஓடிவந்தார் எகிப்தியர் ஒருவர். ‘புஸ்.. புஸ்..’ என்று மூச்சு. முகத்தில் ஆத்திரம். கலீஃபா உமரிடம் புகார் கூறினார்.

‘உம் ஆளுநரின் மகன் எனக்கு அநீதி இழைத்துவிட்டார்.’

“நான் உமக்கு அபயம் அளிக்கிறேன். என்ன நிகழ்ந்தது?”

“நானும் ஆளுநர் அம்ரு இப்னுல் ஆஸின் மகனும் ஓட்டப்பந்தயத்தில் ஓடினோம். நான் அவரைத் தோல்வியுறச்செய்து விட்டேன். அதைப் பொறுக்க இயலாத அவர், ‘நான் உயர்குடியைச் சேர்ந்த மகன்’ என்று சொல்லிக்கொண்டே என்னைச் சாட்டையால் அடித்தார்.”

‘உடனே நீர் உம் மகனை அழைத்துக்கொண்டு மதீனா வரவும்’ என்று ஆளுநர் அம்ரு இப்னுல் ஆஸுக்குத் தகவல் சென்றது. கிளம்பி வந்தனர் தந்தையும் மகனும்.

விசாரனையில் ஆளுநரின் மகன் அநீதியான முறையில் நடந்துகொண்டது நிரூபணமானது. எகிப்தியரிடம் சாட்டையை அளித்து,

“ம்… உயர்குடியைச் சேர்ந்தவரின் மகனைப் பதிலுக்குப் பதில் பழி தீர்த்துக்கொள்ளுங்கள்” என்று தீர்ப்பு வழங்கிய உமர், அம்ரு இப்னுல் ஆஸிடம் கூறிய வாக்கியம் புகழ்பெற்று நிலைத்துப்போனது.

“தாய் தம் மக்களை சுதந்திரமானவர்களாக ஈன்றிருக்க, என்றிலிருந்து நீர் அவர்களை அடிமைப்படுத்தத் தொடங்கினீர்?”

“அமீருல் மூஃமினீன் அவர்களே. இந்த நிகழ்வைப் பற்றி எனக்குத் தெரியாது. அவர் என்னிடம் வந்து முறையிடவேயில்லை.”

இங்கு கலீஃபா வழங்கிய நீதி ஒருபுறமிருக்க மற்றொன்று மிக முக்கியம். பரந்து விரிந்த அரசாங்கத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் பொதுமக்களில் ஒருவர், இஸ்லாமிய ஆட்சியின் ஆக உயர்ந்த தலைவரான கலீஃபாவை எவ்விதச் சம்பிரதாயமும் இன்றி எளிதில் சந்திக்கிறார்; புகார் அளிக்கிறார். அதை அந்தத் தலைவரும் செவிமடுக்கிறார்; விசாரணை புரிந்து நீதி வழங்குகிறார். சமகாலத்திலுள்ள எந்த அரசாங்கத்தில் இது சாத்தியம்?

ஆளுநரின் மகன் என்றில்லை. ஆளுநராகவே இருந்தாலும் சரி, சலுகை கிடையாது. படைவீரர் ஒருவர் உமரிடம் வந்து முறையிட்டார். “என்னை முனாஃபிக் (நயவஞ்சகன்) என்று திட்டிவிட்டார் உங்கள் ஆளுநர் அம்ரு இப்னுல் ஆஸ்.”

ஆளுநருக்கு உடனே கடிதம் வந்தது. ‘அம்ரு இப்னுல் ஆஸ் பொதுமக்கள் முன்னிலையில் விசாரணை செய்யப்பட வேண்டும். படைவீரர் அளித்த புகார் மெய் எனில், அவர் ஆளுநருக்கு கசையடி அளித்து பழி தீர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று அதில் கட்டளையிடப்பட்டிருந்தது.

விசாரணை புகாரை உறுதி செய்தது. மக்களுள் சிலர் அந்தப் படைவீரரிடம் சமாதானம் பேசிப்பார்த்தனர். அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் சாட்டையுடன் ஆளுநர் அம்ரு இப்னுல் ஆஸை நெருங்கினார் அந்தப் படைவீரர்.

“நான் இப்பொழுது உமக்கு தண்டனை அளிக்கப்போகிறேன். தடுத்து நிறுத்த யாரேனும் உள்ளனரா?”

“இல்லை. உனக்கு இடப்பட்டுள்ள கட்டளையை நிறைவேற்று” என்றுார் அம்ரு இப்னுல் ஆஸ்.

“நான் உம்மை மன்னித்தேன்” என்றார் அந்தப் படைவீரர்.

அவருக்குத் தேவை நீதி. அது கிடைத்துவிட்டது. மற்றபடி ஆளுநரைத் தாக்கவேண்டும், பழிவாங்க வேண்டும் என்பது இரண்டாம்பட்சம். அது அவரது நோக்கமாகவும் இருக்கவில்லை.

இன்று முஸ்லிம்கள் சிறிதும் தயக்கமின்றி நம்முள் ஒருவரைத் தூற்ற மிக இலகுவாய் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அந்தச் சொல் எத்தகைய அவச்சொல்லாக இருந்திருந்தால், ஆதாரமின்றி அதை உரைத்தவர் ஆளுநராகவே இருந்தாலும் அவருக்கு அத்தகு கடுந்தண்டனையை அளிக்க உமர் கட்டளையிட்டிருப்பார்?

‘யாகவராயினும் நா காக்க’ என்பது வழக்கொழிந்து போன அவலம். நம் புத்தியில் நீர் தெளித்து, சுதாரித்து, அதை மீள்விக்க வேண்டியது மிக அவசரம்.

நீதி வழங்கும் விஷயத்தில் உமருக்கு எத்தகைய பாரபட்சமும் இருந்ததில்லை; புகாருக்கு உரியவர் தம்முடைய மகனாகவே இருந்தாலும்கூட.

எகிப்தில் வாழ்ந்துகொண்டிருந்தார் உமரின் மைந்தர்களுள் ஒருவரான அப்துர் ரஹ்மான். ஒருமுறை அவரும் மற்றொருவரும் போதையளிக்கும் பானம் ஒன்றை அறிந்தோ அறியாமலோ பருகிவிட்டனர். போதை தலைக்கேறியதும்தான் ‘அட இது கஷாயமெல்லாம் இல்லை போலிருக்கு’ என்று புரிந்திருக்கிறது அவர்களுக்கு. ஆளுநர் அம்ரு இப்னுல் ஆஸிடம் வந்தார்கள்.

‘ஆளுநரே பானமொன்று அருந்தி நாங்கள் போதையுற்றுவிட்டோம். தயவுசெய்து குடிகாரர்களுக்கு அளிக்கும் ‘ஹத்’ தண்டனையை எங்களுக்கு அளித்து நீதி செலுத்துங்கள்’ என்று கேட்டுக்கொண்டனர்.

‘தெரியாமல் செய்துவிட்டீர்கள் போலிருக்கிறது. இனிமேல் இவ்விதம் செய்யாதீர்கள்’ என்பதுபோல் ஏதோ சொல்லி அவர்களை வெளியேற்ற முனைந்தார் ஆளுநர்.

அதற்கு அப்துர் ரஹ்மான், “இதோ பாருங்கள். தாங்கள் மட்டும் எங்களுக்குத் தண்டனை அளிக்காவிட்டால், நான் என் தந்தையிடம் அதை முறையிடும்படி இருக்கும்” என்று மிரட்ட அதன் பின்விளைவு அம்ருவுக்கு நன்கு புரிந்தது.

எனவே அவர்களைத் தம் வீட்டிற்குள் அழைத்து வைத்து கசையடித் தண்டனையை நிறைவேற்றினார் ஆளுநர். குடிகாரர்களுக்கு வழங்கப்படும் தண்டனையான கசையடியும் முடியை மழித்தலும் பொதுமக்களின் முன்னிலையில் நடைபெறுவதே வழக்கம். மற்றவர்களுக்கு அது பாடமாக அமையும் என்பது அடிப்படை. கலீஃபாவின் மகன் என்பதால் அவருக்குத் தம் வீட்டினுள் வைத்து தண்டனை வழங்கி தனிச் சலுகை புரிந்துவிட்டார் அம்ரு இப்னுல் ஆஸ். இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். கலீஃபாவின் மகன் என்பதால் தண்டனையை ரத்து செய்யவில்லை. சற்றே சலுகை. அவ்வளவே. இச்செய்தி மதீனாவில் உமருக்குத் தெரிய வந்து, ஆளுநருக்கு உடனே ஓலை வந்தது.

“அப்துர் ரஹ்மானுக்கு உமது வீட்டினுள் வைத்து முடியை மழித்தீராமே! எனது விருப்பத்திற்கு முற்றிலும் மாறானது இது. என் மகன் அப்துர் ரஹ்மான் உமது ஆளுகைக்கு உட்பட்ட பொது மக்களுள் ஒருவர். இதர முஸ்லிம்களை நீர் எவ்விதம் நடத்துகிறீரோ அவ்விதமே அவரையும் நடத்த வேண்டும். அவர் கலீஃபாவின் மகன் என்பதற்காகத்தான் சலுகை அளித்துள்ளீர். அல்லாஹ்வுக்கான கடமைகளில் நான் எத்தகைய சமரசமும் செய்துகொள்வதில்லை என்பது உமக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் நீர் எப்படி இவ்விதம் நடந்துகொள்ளலாம்” என்று ஆளுநரை அதட்டித் தீர்த்திருந்தது கடிதம்.

அத்துடன் விடவில்லை. தம் மகன் அப்துர் ரஹ்மானை மதீனாவிற்கு வரவழைத்து பொதுமக்கள் முன்னிலையில் தண்டனையை நிறைவேற்றினார் உமர்.

அது ஓர் அழகிய பொற்காலம்.

(ஒளிரும்)


-நூருத்தீன்


source: http://www.darulislamfamily.com/
Share:

அதிரை தக்வா பள்ளி புதிய நிர்வாகிகள் அறிவிப்பு!

நமதூர் தக்வாப் பள்ளி புதிய ட்ரஸ்டிகள் ஏழுபேர் கொண்ட குழு நியமன உத்தரவு, தமிழ்நாடு வக்பு வாரியம் செயல் அலுவலரால் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

அதன்படி;

1) ஜனாப் எம்.பி முஹம்மது அபூபக்கர்,

2) ஹாஜி ஜனாப் மு. அப்துல் மஜீது

3) ஜனாப் தமீமுல் அன்சாரி

4) ஜனாப். அல்ஹாஜ் ஏ. அப்துல் சுக்கூர்

5) ஜனாப் ஜே. ஹாஜா பகுருதீன்

6) ஜனாப் கே.எஸ்.அப்துல் சுக்கூர்

7) ஜனாப்.எஸ்.முஹம்மது ஜெமீல்

( முஹம்மது சாஹிப் லெப்பை குடும்ப உறுப்பினர்)


ஆகிய  மேற்கண்ட நிர்வாகிகள் மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுவாகள்
Share:

நம்புங்கள்! சொல்வதெல்லாம் உண்மை.


21-வது வார்டின் ஒரு பகுதியான சி.எம்.பி.லைன் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் சில வீடுகளில் பி.எஸ்.என்.எல். வழங்கும் தொலைபேசி மற்றும் இன்டர்நெட் இணைப்புகள் சரிவர இயங்கவில்லை.

வாடிக்கையாளர்கள் சங்கடப்பட்டார்கள்., புகார்கள் கொடுப்பட்டது., பி.எஸ்.என்.எல். பணியாளர்கள் வந்தார்கள்., ஒரு சில இடங்களில் பள்ளம் தோண்டினார்கள்., பழுதை கண்டு பிடித்தார்கள்., சரிசெய்தார்கள்., தொண்டின பள்ளத்தை மூடாமல் அப்படியே விட்டுச் சென்று விட்டார்கள்., இன்றோடு ஒரு வாரம் ஆகுது, இது மாதிரி சம்பவம் காலாகாலமாக நடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

இப்போது வாடிக்கையாளர்கள் சந்தோஷப்படுகிறார்கள், ஆனால் அவ்வழியே செல்லக்கூடிய பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், பள்ளிவாகனங்கள் மற்றும் இதர வாகங்களும் சங்கடத்தில் உள்ளார்கள்.

இந்த பள்ளத்தை யார் மூடுவது?

பி.எஸ்.என்.எல். நிர்வாகமே இறுதிவரை முடித்து கொடுப்பது உங்களுடைய பொறுப்பு. காலம் தாழ்த்தாது சரிசெய்து கொடுத்தால் பொதுமக்கள் சந்தோஷப்படுவார்கள்.

பொதுமக்கள் சார்பாக நன்றி.






வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன், அன்புடன்.
K.M.A. ஜமால் முஹம்மது
Consumer & Human Rights.
S/o. K. Mohamed Aliyar (Late)
Share:

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு-பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 13105 மாணவர்கள் எழுதினர்.


தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்று தொடங்கியது. இதில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் மட்டும் 7020 மாணவர்களும், 6085 மாணவிகளும் என 13105 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

தேர்வு முறைகேடுகளை தடுக்க மற்றும் கண்காணிக்க சிறப்பு பறக்கும் படை நியமிக்கப் பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் கூறியுள்ளார். 

மொழிப் பாடத்தில் தமிழ் இலகுவாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்..

Share:

அதிரையில் அறிவிப்பில்லா மின்வெட்டு:விழி பிதுங்கும் மக்கள்!!



கோடை காலம் ஆரம்பித்து விட்ட நிலையில் இன்னும் தமிழகமெங்கும் இந்த மின்வெட்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது.அதிரையில் 10 மணி நேரத்திற்கும் மேலாக நிலவும் மின்வெட்டால், மக்கள் விழி பிதுங்குகின்றனர்.தேர்வுக்குத் தயாராகும் 10ம் வகுப்பு மாணவர்கள், மன ரீதியான பாதிப்புக்கு ஆளாகி  வருகின்றனர்.

எப்போது மின்சாரம் இருக்கும், எப்போது போகும் என்பது சரியாகத் தெரியவில்லை. விளைவு, வீட்டுவேலைகளை  சரியான நேரத்துக்குச் செய்யமுடிவதில்லை.  குழந்தைகள், முதியவர்கள் இருக்கும் வீடுகளில் மின்விசிறி இல்லாமல்  ஒரு நிமிடத்தைக்கூட நிம்மதியாகக் கடத்திவிட முடியாது. மோட்டார், ஃபிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி  என்று அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அத்தனையும் மின்சாரத்தில் இயங்கும் சூழ் நிலையில், மணிக்கணக்கில் மின்வெட்டு என்பதை பொதுமக்களால் எதிர்கொள்ள முடியவில்லை. தேர்வுக்குத் தயாராகிவரும் மாணவர்களின் படிக்கும் நேரம் முழுவதையும் மின்வெட்டு  கபளீகரம் செய்துவிடுகிறது. 

மின்சாரம் இருக்கிறது என்பதற்காக இரவில் கண்விழித்துப் படிக்கவேண்டிய நிலை. அதன்  பாதிப்பு மறுநாள் பள்ளி செல்லும்போது எதிரொலிக்கிறது. மின்வெட்டு படிப்பு நேரத்தை விழுங்கும்; மதிப் பெண்ணை விழுங்கும்; எதிர்காலத்தை விழுங்கும் என்பது பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் கவலை.

அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களிடையே எழும் ஒரே பேச்சு இது தான், 
தேர்வுகளுக்குப் படிக்கமுடியாம திணற வேண்டியிருக்கு. நாளைக்கு மார்க் கம்மியா வாங்கினா இண்டர்வியூவுல இதை (மின்வெட்டை)  காரணமா சொல்லமுடியுமா? என்கின்றனர்.

தங்கத்தை போல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் இந்த அறிவிப்பில்லா மின்வெட்டுக்கு தீர்வு எப்போது என்று தமிழக மக்கள் ஏக்கத்துடன் எதிர்பார்க்கின்றனர்.


Share:

நேற்று நடந்தது அன்று, இன்று நடப்பது நன்று, நாளை நடத்துவது யாரு?


நேற்று செவ்வாய்க் கிழமை 26-ம் திகதி பகல் ஒரு மணியளவில் “அதிரையின் அன்பு நெஞ்சங்களே, என்று தலைப்பிட்டு அதோடு பதின்மூன்று வண்ண புகைப்படங்களையும் இணைத்து மேலும் இந்த வாசகத்தையும் “அதிரையின் அன்பு நெஞ்சங்களே தயவு செய்து இந்த புகைப்படங்களை பாருங்கள், விபரங்கள் இன்னும் சில தினங்களில் என்று இந்த தளத்தில் ஒரு பதிவை கொடுத்து இருந்தேன்.

இதோ விபரங்களில் ஒரு சில:-

செய்தி – 26/03/2013
கண்டத்திலே மிகப் பெரியது ஆசியா கண்டம் - வார்டுகளிலே மிகப் பெரியது எங்கள் 21-வது வார்டு. உலகத்திலே பரபரப்பான விமான நிலையம் இலண்டன் ஹீத்ரோ விமான நிலையம் – 21-வது வார்டுலே பரபரப்பான இடம் சி.எம்.பி.லைன். தமிழகத்திலே மிகப் பெரிய கூவம் ஆறு தவழுவது சென்னையில் – 21வது வார்டில் மிகப் பெரிய கூவம் ஆறு தவழுவது சி.எம்.பி. லைனில்.

இந்த பரபரப்பான பகுதியில் அழகுமிகு விஷப் பார்வையுடன் எருக்கஞ்செடிகள், பசுமையான ஊசி மூஞ்சிகளைக் கொண்ட கருவ மரம், ஒரு மாதிரியான வெளிர் பச்சை நிற தண்டுகளோடு மஞ்சள் பூவோடு குட்டை வடிவில் வித்தியாசமான முட்களைக் கொண்ட செடிக் கூட்டங்கள்.  இன்னும் ஏராளமான அடர்த்தியான தீங்கு விளைவிக்கக்கூடிய அங்கும் இங்கும் பின்னிக்கொண்டு வளர்ந்து கொண்டே இருக்கும் செடிகள் கொடிகள், துர்நாற்றத்தோடு வண்ண வண்ண குப்பைகள், இதுகளோடு ஒரு மாதிரியான நிறத்தில் சாக்கடை கழிவு நீர் இவ்வளவும் சி.எம்.பி. லைன் முழுக்க எந்த நேரத்திலும் காணலாம்.

இருபத்தி நான்கு மணிநேரமும் புழக்கமாக இருக்கும் இந்தப் பகுதியில் அதிகாலை ஐந்து மணிமுதல் இரவு ஒன்பது மணிவரை மிகவும் பரபரப்பாக அதாவது மக்களும் வாகனங்களும் அப்படியும் இப்படியும் பின்னிக்கொண்டு காணப்படும். இந்த சூழலில் பகல் நேரங்களில் வீட்டுப் பிராணிகள், கால்நடைகள், வெறிநாய்கள். இரவு நேரங்களில் விஷ ஜந்துக்களாகிய பாம்புகள், தேள், நட்டுவாய்களி, சலங்கை பூரான், சலமண்டாலம், ஒரு வகையான சிலந்திகள், வண்டுகள், இன்னும் பெயர் - இனம் தெரியாத விஷப் பூச்சிகள், இவைகளோடு கொசுக்கள். இதுக்கு மேல் சொல்லவா வேண்டும். 
செய்தி – 27/03/2013 காலை 8.30
இன்று காலை துப்புரவு தொழிலாளி ஒருவர் அந்த தேவை இல்லாத செடிகளை வெட்டிக்கொண்டிருந்தார்.



அதிரை நகர பேரூராட்ச்சிக்கு நன்றி.

இனிமேல் இப்படி புகைப்படங்கள் எடுத்து போட்டால்தான் நடவடிக்கை எடுப்பார்களோ?

குறிப்பு:- 21-வது வார்டு எல்லா வகையிலும் கவணிப்பு இல்லாது படு மோசமாக உள்ளது. தயவு செய்து காலம் தாழ்த்தாது குறைகளை அகற்றுமாறு இப்பகுதி பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.  
  
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.Mohamed Aliyar (Late)
Share:

பத்தாம் வகுப்பு தேர்வு இன்று தொடக்கம் (மாணவ மாணவியருக்கு அதிரை எக்ஸ்பிரசின் வாழ்த்துக்கள்)



இன்று (மார்ச் 27) பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்குகிறது.

பத்து ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்து முதன் முறையாக மாநில அளவில் அரசு பொதுத் தேர்வுகளைச் சந்திக்கும் இனிய மாணவச் செல்வங்ளுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.. 

அதிரை அளவில் முதல் மூன்று இடம் பெறுபவருக்கு  அதிரை எக்ஸ்பிரஸ் கல்வி விருது அறிவித்துள்ளோம் அதையும் தட்டிச் செல்ல  மாணவர்களை வாழ்த்துகிறோம்.

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை

மார்ச் 27 : தமிழ் முதல் தாள்

மார்ச் 28 : தமிழ் 2ம் தாள்

ஏப்ரல் 1 : ஆங்கிலம் முதல் தாள்

ஏப்ரல் 2 : ஆங்கிலம் 2ம் தாள்

ஏப்ரல் 5 : கணிதம்

ஏப்ரல் 8 : அறிவியல்

ஏப்ரல் 12 : சமூக அறிவியல்
Share:

நம் வாழ்நாளை அழிக்கும் அழியாத அரக்கன்!


பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும்போது, பிளாஸ்டிக் சூடாகி வேதியியல் மாற்றங்களால் "ஹைட்ரோகார்பன்" மற்றும் "பியூரான்", 'கார்சினோஜினிக்" போன்ற நச்சு வாயுக்கள் உணவில் கலந்து விடுகின்றன. அந்த உணவை உண்பவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படுகிறது.அதுமட்டுமல்ளாமல் வயிற்றில் (ஸ்டொமக் கேன்சர்) ஜீன்களை தூண்டிவிடுகிறது.

மூளையில் சுரக்கும் சுரப்பியை மட்டுப்படுத்தி ஆண்மை குறைவை உண்டாக்குகிறது. இந்த அபாயம் புரியாமல்,பலரும் அவசர தேவைகளுக்காக சூடான உணவுப்பொருட்களை நேரடியாக பிளாஸ்டிக் கவர்களில் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த அவசர உலகில் பிளாஸ்டிக்கை (பாலி வினை குல்லோரைட்) எல்லா இடங்களிலும் பயன் படுத்துகிறோம். எடுத்துச்செல்ல எளிதாக இருக்கும் என்று நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் "கேரி பேக்'களுக்குள் ஒளிந்திருக்கும் பயங்கரம் பற்றி, பலருக்கும் புரிவதே இல்லை.

சாதாரண வெப்ப நிலையிலேயே (நம் அறையின் சுட்டிலேயே)நிரூடன் வினை புரியும் சக்தி பிளாஸ்டிக்குக்கு உண்டு.

உதா.ம்:-(பிளாஸ்டிக் பாட்டிலில் பாதி அளவுக்கு தண்ணீர் நிறப்பி வைக்க, சாதாரண வெப்ப நிலையிலேயே இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு பாட்டிலில் காலியாக உள்ள இடங்களில் நீர்துளிகள் ஆவியாகி படிந்து உள்ளதை பாருங்கள்).

ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள் பெரும் பாலும் 20 மைக்ரானுக்கும் குறை வானவை. இவற்றை விற்பதும், வாங்குவதும், பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால்,நகரத்தில் இதன் விற்பனை யும், பயன்பாடும் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. தடையை மீறி வாங்கும் நுகர்வோர் களும், அந்த பிளாஸ்டிக் டம்ளர் களை பயன்படுத்தும் விதம் குறித்து அறிந்து கொள்ளாமல் பயன்படுத்தும் போது, அதன் ரசாயன தன்மை உடலுக்குள் சென்று விடுகிறது. பாலிவினை குளோரைடு வேதிப்பொருள்,மனித உடலுக்குள் சென்றால், தீங்கு விளைவிக்கும்.

ஹோட்டல்களில் முன்பெல்லாம் வாழை இலை பயன் படுத்தப் பட்டது. ஆனால் அதற்கு பதிலாக தற்போது பிளாஸ்டிக் பயன் படுத்தப் படுகிறது.

இவ்வாறு நம் வாழ்வில் பிளாஸ்டிக்கை தவிர்க்க முடியாமல் செய்து நமது வாழ்நாளை குறைத்து விடுகின்றனர்.

உணவுப் பொருட்களில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்
வாழ்நாளில் திலைப்போம்.

ஓட்டல் உணவை தவிர்த்திடு

வீட்டு உணவையே சாப்பிடு


நன்றி: முகநூல்
Share:

தேசிய செயற்குழு கூட்டத்தில் அதிரையர் பங்கேற்பு!



தமிழ் இன மக்களை இனப்படுகொலைச் செய்த குற்றத்திற்காக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர் குற்றத்திற்காக விசாரணை நடத்தவேண்டும் என்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் நீர்த்துப்போன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.ந அவையில் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த தீர்மானத்தாலும் தமிழ் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை. எனவே ஐ.நா அவையே ஒரு தீர்மானம் எடுத்து இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை விசாரிக்க ஒரு சுதந்திரமான சர்வதேச குழுவை நியமிக்கவேண்டும். இனப்படுகொலைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் முழு ஆதரவை அளிக்கும் என்று தேசிய செயற்குழு தெரிவித்தது.
தேசிய செயற்குழு கூட்டத்தில் அதிரையை  சார்ந்த Z.முஹம்மது தம்பி அவர்கள் புதிய தேசிய செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
Share:

அதிரையின் அன்பு நெஞ்சங்களே.


அதிரையின் அன்பு நெஞ்சங்களே, தயவு செய்து இந்த புகைப்படங்களை பாருங்கள், விபரங்கள் இன்னும் சில தினங்களில். - நன்றி.
  






  

































வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.Mohamed Aliyar (Late)
Share:

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு.../என்னிடம் நிகழ்த்திய பேட்டி/ உரையாடல்:


தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு.../என்னிடம் நிகழ்த்திய பேட்டி/ உரையாடல்:

by கவியன்பன் கலாம் (குறிப்புகள்) on 25 மார்ச் 2013, 09:46 PM க்கு
கவியன்பன் கலாம் shared தடாகம் கலை இலக்கிய வட்டம்'s புகைப்படம்.
26 நிமிடங்களுக்கு முன்பு · 




 • கவி உலகில் தனக்கென்று ஓர் இடத்தை படித்திருக்கும் அன்பான சகோதரர் க வியன்பன் கலாம்இலங்கை மக்கள் மனங்களில் நிழலாடும் இந்தியக் கவிஞர் இந்த அன்பான சகோதரன் என் கேள்விகளுக்குள் பதிலாக அமர்ந்து கொண்டார் அவரை அன்போடு வரவேற்கின்றேன் ...............................................................................................................01)உங்கள் குடும்பம் வாழ்க்கை பற்றி கூறுங்கள்?உங்களைப் பற்றிக் கூறுங்கள்?இந்தியா என் தாய்நாடு; மாநிலம் தமிழ்நாடு;மாவட்டம் தஞ்சாவூர்; ஊர்: அழகியகடற்கரைக் கிராமம் “அதிராம்பட்டினம்” ; என் வாப்பா 1957 வரை உங்களின்இலங்கையில் - கொழும்பில் வணிகம் செய்தவர்கள்;பின்னர் இனக்கலவரத்தால்இந்தியாவிற்குத் திரும்பி வந்து வணிகம் செய்தார்கள்.(இப்பொழுது என்சாச்சா மட்டும் குடும்பத்தோடு கொழும்பில் இருக்கின்றார்கள்) அதனாற்றான்எனக்கும் இயல்பாகவே இலங்கையர்கள் மீது அளவற்ற பிரியம் உண்டாகின்றது.நானும் வணிகவியலில் ஆர்வம் கொண்டவனாதலால் வணிகவியல் பட்டம் பெற்றவன்(பி,காம்) 1980 முதல் இன்று வரை அயல்நாட்டின் பிழைப்பில் வாழ்கிறேன்.எனக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் மருமகன்(மகளின் கணவர்) மற்றும் அழகும்அறிவும் நிறைந்த பெயரன்(மகள் வழி) அடங்கிய ஒரு சிறு குடும்பம். என்னுடன்பிறந்தவர்கள் 2 அக்காள்கள், 2 தங்கைகள், ஓர் அண்ணன், ஒரு தம்பி. உம்மாஅவர்கள் இறந்து விட்டார்கள். வாப்பா அவர்கள் இருக்கின்றார்கள்.

  02எழுத்து தொடக்கம் எப்படி தொடங்குகியது?1973ல் பள்ளியிறுதியாண்டில் “யாப்பிலக்கணம்” வகுப்பில் தமிழாசிரியர்நடத்திய விளக்கங்களால் ஈர்க்கப்பட்டு அன்றே ஒரு வெண்பாவை வனைந்தேன்.(இலக்கணம் என்றால் தலைக்கனக்கும் என்று கைப்புடன் மற்ற மாணவர்கள் எல்லாம்அவ்வகுப்பை அவதானிக்காத பொழுது யான் மட்டுமே அவ்வகுப்பில் மிகவும்ஈடுபாட்டுடன் இருந்ததை அவதானித்த என் தமிழாசான் புலவர் திரு. சண்முகனார்அவர்கள் என்னை ஊக்கப்படுத்தினார்கள்) அன்று தொடக்கம் இன்று வரையாப்பிலக்கணமும், மரபுவழியும் என்னுயிராய் ஒட்டிக் கொண்டன. அவ்வாசானின்அறிவுறுத்தலுக்கிணங்க “நூலகமே என் உலகம்” என்று அவ்விளம் வயதில்வாசிப்பில் நேசிப்பைக் கொண்டேன். குறிப்பாக, யாப்பின் வகைகளில் எல்லாவகைப் பாடல்களையும் வனைய வேண்டும் என்ற பேரவா கொண்டேன். இடையில் பணிநிமித்தம் அயல்நாடுகள் (சவூதி, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள்)சென்றதால் எனக்கு இருந்த ஈடுபாடும் குன்றியது.03) தமிழ் கவிதை தமிழ் மொழி இவைகளுடனான (ஒரு ஆசிரியர்) உங்கள் நெருக்கம்பற்றி சொல்லுங்கள்?

  முதலில் சொன்ன என் தமிழாசிரியர் மட்டுமல்ல, எங்களூரின் தமிழறிஞரும்,எழுத்தாளரும், கவிஞருமான “அதிரை அஹ்மத் காக்கா” அவர்கள் என்னை மேலும்ஊக்கப்படுத்தினார்கள்; அவர்கள் என் வலைத்தளத்தில் வருகை புரிந்து ஒருபின்னூட்டம் எழுதினார்கள் இவ்வாறு:“இற்றைப் பொழுதினில் மரபுவழியினைப் பற்றிப் பிடித்தால் தமிழறிஞர்களின்பட்டியலில் இடம் பெறுவாய்” என்ற ஆசியுடன் வாழ்த்துரை அளித்தார்கள்; அன்றுமுதல் மீண்டும் யாப்பிலக்கணம் மேலும் கற்க அவர்களின் துணை நாடினேன்;மேலும், என் எழுத்தில் உண்டாகும் ஒற்றுப்பிழைகள்/ சந்திப்பிழைகள் கண்டுஅவற்றைத் திருத்தும் நல்லாசானாகவும் அவர்கள் விளங்குகின்றார்கள்.துபையில் ஒரு கவியரங்கத்தில் இலங்கைக் காப்பியக்கோ ஜின்னா ஷரிஃபுத்தின்வாப்பா அவர்களைச் சந்திக்கும் பேறு பெற்றேன்! அவர்களும் ,”என்னைப் போல்மரபு வழிப் பாக்கள் படைப்பதில் கவியன்பன் கலாம் எனக்கு வாரிசாகஇருப்பார்” என்று வாழ்த்துரை அளித்தார்கள்.இணையத்திலும், முகநூலிலும் எனக்கு யாப்பிலக்கணம் கற்பிக்கும் ஆசானகளாக:கலைமாமணி இலந்தையார் (நியூ ஜெர்சி - “சந்த வசந்தம் இணையம்” நிறுவனர்)மற்றும் புதுவையில் வாழும் புலவர் இராஜ. தியாகராஜனார் ஆகியோரும் என்வழிகாட்டிகளாய் நின்று யாப்பின் எல்லா வகைப் பாக்களையும் இயற்றும் திறனைஎன்னிடம் வழங்கி வருகின்றார்கள்.

  04.மரபுக் க்கவிதைகள் எழுதுவதிலும் நாட்டம் செலுத்துகிறீர்கள்புதுக்கவிதையும் எழுதி வருகின்றீர்கள் இதில் எதில் மன திருப்திபெறுகின்றீர்கள் ?உண்மைதான். முன்னர்ச் சொன்னபடி 1974 முதல் மரபுப் பாவின்பால் நாட்டம்அதிகம் உண்டானது; இடையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் “இதுவரை நான்”என்னும் கவிதைத் தொகுப்பைப் படித்தேன்; அதுவரை நான் மரபென்னும் கடலைவிட்டு, புதுமை என்னும் நதியில் நீராடத் துவங்கினேன். எளிமையாகஇருந்தாலும், என் மனம் மரபில் தான் மீண்டும் கலக்கின்றது; அதற்கு என்ஆசான்களின் ஆசிகற்றான் காரணியமாக அமையும் என்று நினைக்கிறேன். மரபுப்பாஇனிமை; புதுக்கவிதை என்பது புதுமை; துளிப்பா(ஹைகூ) எளிமை என்றகண்ணோட்டமும் என்னிடம் உண்டு. புதுக்கவிதையில் ஓர் உணர்வின் உயிரோசையைக்காண்கிறேன். அதனால் மூன்று வகையிலும் என்னால் இயற்ற முடியும்; நான் கவிதைஎழுதவில்லை; கவிதையாய் வாழ்கின்றேன்! தமிழே என் மூச்சு; கவிதையே என்பேச்சு!

  05.முத்த எழுத்தாளர்களின் எழுத்தக்களை வாசிக்கிறீர்களா? யாராவது நேரடியாகவழிகாட்டகிறார்களா?

  ஆம். வாசிப்பில் நேசிப்பைக் கொண்டவன் என்பதாலும், படிப்பாளிதான்படைப்பாளியாக ஆக முடியும் என்பதும் என் வாழ்வின் ஆரம்பப் பள்ளிக்காலத்திலும் உணர்ந்தவன். நூலகமே என் உலகம் என்று வாழ்ந்தவன்; இன்று,இணையமே என் இருதயம் என்று வாழ்கிறேன்.”தாய்” வார இதழின் ஆசிரியர்- வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் அவர்களின்எழுத்து நடையை வாசித்தேன்; புதுக்கவிதையை நேசித்தேன்என்றும் நான் போற்றும் கவிக்கோ அப்துற்றஹ்மான் அவர்களின் படைப்புகளைவாசிப்பதில் பெரிதும் ஆர்வம் உள்ளவன்; அவர்களை நேரில் காணும் பேறுபெற்றவன்.என்றும் என் மானசீகக் குருவாகக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைமுன்னிறுத்திக் கொண்டு அவர்கள் எப்படி எல்லாம் உணர்வின் ஓசையுடன்கவிதைகளைப் படைக்கின்றார்கள் என்று அவர்களின் கவியரங்க விழிமங்களைத்தேடிக் கேட்கிறேன்.முன்னர்ச் சொன்ன, என் ஆசான்களின் படைப்புகளை நேராகப் பெற்றும், இணையம்வழியாக மின்மடலில் பெற்றும் வாசிக்கிறேன்; அவர்களின் படைப்புகளில் எப்படிஇலக்கணங்களைக் கையாள்கின்றனர் என்று உன்னிப்பாக அவதானிக்கிறேன்.

  06படிப்பிப்போடு எழுத்தில் ஈடுபடுவதில் சிரமங்கள் இருக்கிறதா?

  இல்லவே இல்லை; இளமையில் கல் என்பது போல், இளமையில் எழுது என்று எனக்குள்ஏற்பட்ட ஓர் இனம் புரியாத பேரவா என்னுள் தீயாய் இருப்பதால் என்னால்எழுதுவதை ஒரு சிரமமாக நினைப்பதில்லை; ஆயினும், தற்பொழுது உடல்நிலைஒத்துக் கொள்ளாத நிலைமையைக் கண்டு என் துணைவியார் அவர்களும்,என்நண்பர்களும், என்னுடன் பணியாற்றும் மேலாளர்களும் என்னைக் கடிந்துகொள்கின்றனர் “ நீ எழுதுவதை நிறுத்தினால் உன் உடல் நலம் பெறும் ‘ என்று.ஆனால், என் மனம் எழுத்திலும், கற்பதிலும், கற்பிப்பதிலும் தான் பேரின்பம்= அலாதியான ஓர் ஆன்மத் திருப்தியை அடைவதை உணர்கிறேன்; தேனின் இன்பம்என்பதைச் சுவைத்தவர்க்கு மட்டும் தான் தெரியும்; புரிய வைக்க இயலாது!

  07சமகால கவிதைகளை எப்படி வாசித்து வருகிறீர்கள் எப்படி இருக்கின்றன

  எல்லாம் கவிதைகள் என்று வலம் வருகின்றன என்பதைத் தான் ஏற்க மறுத்தாலும்,உணர்வின் ஓசை யாகவே ஒலிக்கின்ற அவ்வரிகள் கவிதையின் தாக்கத்தைஏற்படுத்தத்தானே செய்கின்றன என்ற ஓர் உடன்பாட்டால் உளமேற்கும் நிலையில்உள்ளேன். ஆயினும், எந்த விதமான இசை/ஓசை நயமோ, எதுகை மோனை கூட இல்லாமல்,வரிகளை மடக்கி, மடக்கி எழுதி விட்டால் அதுவும் கவிதையாகும் என்ற ஓர் அவலநிலையைத் தான் என் மனமும் கவிதையின் உண்மையான ஆர்வலர்கள்/ பாவலர்கள்எல்லாரும் ஏறக மறுக்கின்றனர்.மரபுப்பாக்களை என் ஆசான் இலந்தையார் அவர்கள் நடத்தும் “சந்த வசந்தம்”என்னும் இணையத்திலும், புதுவைப் புலவர் இராஜ.தியாகராஜனார் அவர்களின்முகநூல் பக்கத்திலும் வாசிக்கிறேன்புதுக்கவிதைகளைக் கவிஞர் கனடா புகாரி, கவிஞர் பொத்துவில் அஸ்மின்,கவிஞர்பரங்கிப்பேட்டை இப்னுஹம்தூன், கவிஞர் குவைத் வித்யாசாகர், அதிரைகவிவேந்தர் சபீர் அபுசாருக்ஹ், முத்துப்பேட்டை கவியருவி மலிக்கா ஃபாருக்,கவிதாயினிஆச்சி தேனம்மை, கவிதாயினி வேதா இலங்காதிலகம் மற்றும் என்முகநூல் நண்பர்களின் படைப்புகள் வழியாகவும் தேடித் தேடி வாசிக்கிறேன்நவீனக் கவிதைகளைக் கவிஞர்கள் இத்ரீஸ், சிராஜ்டீன் சிறோ மற்றும் ஸமானின்கவிதைகளில் காண்கிறேன்ஹைகூ என்னும் துளிப்பாக்கள்: என் மின்மடல் தேடி வந்து விழுகின்றன;குறிப்பாக மதுரை இரா.இரவி. மற்றும் ரமேஷ் போன்ற ஹைகூ கவிஞர்களின் ஹைகூகவிதைகள் என் மின்மடலுக்கு நாடோறும் வருகின்றன.; அவைகளை இரசித்துவாசிப்பேன்.

  08கவிதைக்கான இணைய தளங்கள் உங்கள் எழுத்திற்கு எந்தளவில்உதவுகின்றன.கவிதைக்கான இணையத் தளங்களாகவே நான் தேடித் தேடி \இரவெலாம் விழித்துஇணையத்தில் புகுந்து நுழைந்து அனைத்துக் கவிதை விரும்பும் தமிழ்த்தளங்களிலும் என் படைப்புகளை வரவேற்கும் வண்ணம் நெருங்கிய நட்பைவைத்துள்ளேன்: அவற்றுள்தமிழ்த்தோட்டம்தமிழ்மணம்நீடூர்சன்ஸ்முதுகுளத்தூர்டைம்ஸ்அய்மான் டைம்ஸ்அதிரைநிருபர்அதிரை எக்ஸ்பிரஸ்சமூக விழிப்புணர்வுப் பக்கங்கள்மற்றும்இலண்டன் தமிழ் வானொலியின் “பா முகம்”,முகநூலின் கவிதைக் குழுமங்கள்சங்கமம் தொலைக்காட்சி,துபைஅய்மான் சங்கம், அபுதபிபாரதி நட்புக்காக, அபுதபியு ஏ இத் தமிழ்ச் சங்கம்வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பு,துபைதமிழர்ப் பண்பாட்டு நடுவண் கழகம், துபைதுபாய்த் தமிழர்ச் சங்கமம்ஆகிய தமிழர்கள் ஒன்று கூடும் நிகழ்வுகள்/ கவியரங்குகளில் என் கவிதைகள்வரவேற்கப்பட்டுள்ளன.குறிப்பாக: வானலை வளர்தமிழ் என்னும் இலக்கிய அமைப்பு மாதந்தோறும்நடத்தும் கவியரங்கில் ஒரு கவியரங்கில் என்னைத் தலைமைக் கவிஞராய் அமரவைத்து 33 கவிஞர்களை என் “மரபுப்பாவில்” அவர்களின் திறன் கூறிக் கவிபாடஅழைக்கும் பெரும்பணியை அவ்வமைப்பின் அமைப்பாளர் உயர்திரு. காவிரிமைந்தன்அவர்கள் எனக்களித்து என்னை மதித்து அக்கவிஞர்கட்குச் சான்றிதழ்களும் என்மரபுப்பாவில் வடித்து என்னையும் மேடையில் பரிசும் சான்றிதழும் கொடுத்துமதிப்பளித்ததை என் வாழ்நாளில் மறக்கவியலாத ஓர் அரிய தருணம்.இப்படியாக என் கவிதைகளை நாடிக் கேட்பவர்கட்குத் தவறாமல் அனுப்புகிறேன். அவற்றுள்உங்களின் “தடாகம் இலக்கிய வட்டம்” சர்வதேச அளவில் புகழ்பெற்று என்கவிதையையும் ஏற்றுள்ளது என்பது யான் பெற்ற பேறென்பேன்!09புதுக்கவிதை, நவீன கவிதை இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு பற்றிகூறமுடியுமா ?கவிதை பற்றி யாது கருதுகிறீர்கள்?புதுக்கவிதை எளிமையும் புதுமையும் கலந்த ஓர் உணர்வின் வடிவம்;நவீனக் கவிதை “ஞானத் தேடல்” போன்று உளவியல் அறிவுடன் உன்னிப்பாய்அவதானித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்ற ஓர் ஆழமான கடல்!கவிதை என்பது கற்பவரின் உள்ளத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்;கவிக்கோ அப்துற்றஹ்மானின் ஒரு கவிதையில்: அண்ணல் நபி(ஸல்)அவர்களைத்தாயிஃப் மக்கள் கல்லால் அடித்தார்கள் என்ற செய்தியைக் கவிதையில்சொல்வார்கள் இப்படியாக:\\கல்லின் மீது பூவை வீசியவர்கள்முதன்முதலாகபூவின் மீது கல்லை வீசினார்கள்!”மேலே சொன்ன விடயம் ஒன்றுதான் அதனை உரைநடையில் சொல்வதை விட இவ்வண்ணம்கவிநடையில் சொன்னால் உள்ளத்தில் உண்டாக்கும் தாக்கம் தான் கவிதை என்னும்ஆக்கம் தரும் நோக்கம்.10கவிதைகள் மூலம் சாதிக்க விரும்புவது என்ன ?கவிதைகள் என்பதும் ஒரு கற்பித்தலே; கற்பித்தலால் என்ன சாதிக்க முடியுமோஅதனையே கவிதையிலும் சாதிக்கலாம். உதாரணமாக என் கவிதை “வயசு வந்து போச்சு”என்ற கவிதையில் வரதக்‌ஷணை என்னும் கொடுமையைச் சாடியிருந்தேன்; அந்தக்கவிதையைப் படித்த ஓர் அன்பர் ”வரதக்‌ஷணை வாங்காமல் திருமணம் முடிப்பேன்”என்று எனக்கு மின்மடலில் மறுமொழி அனுப்பியதும்; அதே கவிதையைக்கவியரங்கில் பாடிய பொழுது ஓர் இளம் மங்கைக் கண்ணீர் மல்க,”எப்படி ஐயாஎங்களின் உணர்வுகளை இப்படி வடித்தீர்கள்” என்று வினவியதும் என் கவிதையின்தாக்கம் என்று உணர்கிறேன்!சமுதாயப் பிரச்சினைகள் என்னும் சமுத்திரப் பிரளயங்களை., நம் கவிதைகள்என்னும் சிரட்டையளவின் சிரத்தையால் தடுப்போம் என்பதே என் நிலைபாடு.11கவிதை மட்டும் தான் உங்களுக்கான வடிவமாக இருக்கின்றதா? நாவல், சிறுகதைஎன்று வேறு இலக்கிய வடிவங்களில் உங்களுக்கு ஆர்வமில்லையா ?துவக்கத்தில் சிறுகதைகள் எழுதினேன்; அவைகள் இதழாசிரியர்களால்ஏற்கப்படவில்லை; அதனால் நிறுத்தி விட்டேன்; ஆயினும், சிறுகதைகள்,நாவல்கள் மற்றும் இலக்கியத்தின் எல்லாப் பரிணாமங்களும் எனக்குவிருப்பமானவைகள் என்பதால் அவைகளையும் வாசிப்பேன்;நேசிப்பேன்.12உங்கள் முயற்சிக்கு தடையாக அமைந்த சந்தர்ப்பங்கள் உள்ளனவா ?ஆம். முதலில் சொன்னேன் அல்லவா. பணியின் காரணியமாக உலகம் சுற்றியதால்என்னால் ஓரிடத்தில் உட்கார்ந்து எழுத இயலாமற் பணி ஒன்றே நோக்கமாக அமைந்துவிடுதல்;உடல்நிலையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள முதுமை மற்றும் நோய்கள்துணைவியார், நண்பர்கள், மேலாளர்களின் அன்பான அறிவுறுத்தல்கள்இவைகள் என் எழுத்துப் பயணத்தின் தடைக் கற்கள்!முன்னர்ப் பள்ளியிறுதி வகுப்புத் தேர்வு முடிந்ததும் (1973) தமிழின்பால்கொண்ட காதலால், “புலவர்” பட்டயம் படிக்க வேண்டும் என்ற பேரவாவினால்அதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்திச் செய்த வேளையில், என் குடும்பத்தார்கூறினார்கள்: “ பாட்டுக் கட்டினால் நோட்டுக் கட்ட முடியாது” என்று.இயல்பாகவே வணிகக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவனாதலால்,“வணிகவியலை”பட்டப் படிப்பாக்கினேன்; இன்றும் வணிகவியலை இலவயமாகக்கற்பிக்கிறேன். என் வாழ்வில் இரு கண்கள்; கணக்குப் பதிவியலும்;கவிதையும்.கணக்குப் பதிவியல் (accountancy) என் தொழில்கவிதையியல் = என் இலக்கிய எழில்

  13-இறுதியாய் என்ன சொல்ல போகிறீகள்


  கண்டது கற்கின் பண்டிதனாவான்படிப்பாளியே படைப்பாளியாவான்கற்போம்;கற்பிப்போம்இலக்கியமென்னும் மடியில் இளைப்பாறுவோம்; இருதயம் இந்தத் “தடாகத்தின்”தென்றலால் இன்பம் அடையும்!

  14படிமங்களையும் குறியீடுகளையும் உங்களால் எவ்வாறு மிக இலாவகமாக கையாள முடிகிறது?

  படிக்கும் காலத்தில் பயிற்றுவிக்கும் நல்லாசான்கள் கிட்டியதன் அரும்பேறு என்பேன்.15எமது படைப்பாளிகள் மற்றும் படைப்புக்களின் நிலை எவ்வாறு உள்ளது?படைப்பாளிகள் எல்லாரும் தன் அனுபவங்களைத் தான் பலவேறு பரிணாமங்களுடன்இலக்கிய வடிவில் நமக்கு விருந்தாகப் படைத்து நம் அறிவுப் பசியாறவைக்கின்றார்கள். உணவில் வகைகளும், சுவைகளும் வேறுபடுகின்றன போலவே,இவர்களின் படைப்புகள் என்னும் இலக்கிய விருந்திலும் சுவைகளில்,உருவத்தில் வேறுபாடுகள் இருப்பினும் ஏற்புடையனவாகவே வலம் வருகின்றனஎன்பதே என் கண்ணோட்டம்.

  பொறுமையோடு எனது கேள்விகளுக்கு அமைதியாக .நிதானமாக பதில் தந்த உங்களுக்கு என் இதயம் கசியும் நன்றித்துளிள்வாழ்க மன நிறைவோடு மகிழ்வோடு மன மகிழ்வோடு ,நலமோடு வாழ்த்துக்கள் ......................................................................................................................பேட்டி --கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை அமைப்பாளர் தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு...

Share:

A.L மெட்ரிக் பள்ளியின் 12 வது ஆண்டு விழா!

நமதூர் A.L மெட்ரிக் பள்ளியின் 12 வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.முதலாவதாக கிராத்துடன் ஆண்டு விழா துவங்கியது. விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியரால் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது.பின்பு சிறார்களின் பல்சுவை நிகழ்சிகள் நடைபெற்றது.இதன் பின்பு மாணவ,மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவிற்கு பெற்றோர்களும்,பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

     புகைப்படங்கள் விரைவில்...
Share:

அதிரை காவல் துறை அதிகாரிக்கு SDPI கடும் கண்டனம்.

நமதூரைச் சேர்ந்த ஹாஜாஅலாவுதீன் என்ற மாற்றுத் திறனாளி மீது தாக்குதல் நடத்திய அதிரை காவல் துறை அதிகாரிக்கு SDPI கடும் கண்டனம் தெறிவித்துள்ளது.


இது பற்றி கூறப் படுவதாவது:

 ஹாஜா அலாவுதீனுக்கு அதிரை ரயில் நிலையம் அருகில் சொந்தமாக ஒரு வீடு இருக்கின்றது அந்த வீட்டை தம்பிகோட்டையை சேர்ந்தவர்களுக்கு வாடகைக்கு விட்டு இருந்தார்  அந்த இடத்தில் வாடகைக்கு வாங்கியவர்கள் CLUB வைத்து நடத்தி வந்துள்ளனர். இது நமதூர் காவல் துறைக்கு தெறியவே ஹாஜா அலாவுதீன் கவனத்திற்கும் வந்தது உடனே அந்த வீட்டில் வாடாகைக்கு இருந்தவர்கள் வெளியாக்கப் பட்டனர். . இருப்பினும் நமதூர் காவல்துறை அதிகாரி ஹாஜா அலாவுதீனை மிரட்டி அவரிடம் இருந்த கைபேசி, கைகடிகாரம் போன்றவற்றை பறித்து சென்று விட்டார். இதுதொடர்பாக நமது DSP-யிடம் ஹஜா அலாவுதீன் புகார் செய்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த குறிப்பிட்ட காவல்துறை அதிகாரி (23-03-2013) சனிக்கிழமை காலை சுமார் 11.45 மணியளவில் நமதூர் அரசு மருத்துவமனை அருகில் தனியாக நின்றுக்கொண்டு இருந்த ஹாஜா அலாவுதீனை லத்தியால் அடித்து மேலும் அவருக்கு சொந்தமான பைக்கையும் சேதப் படுத்தியுள்ளார்.

இதுபோல் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என  வழக்கறிஞர் நிஜாம் அவர்கள் தெரிவித்தார். மேலும் உண்மையை வெளிக்கொண்டு வர சட்டத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நமதூர்வாசிகள் விழிப்புணர்வுடன் அறிந்து செயல்பட வேண்டும்.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் SDPI நிர்வாகிகள் நேரில் சந்தித்த போது எடுத்த புகைப்படம்.



Share:

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 1–ந் தேதி முதல் பிளஸ்–2 தேர்வுகள் தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் 5,769 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

இந்த நிலையில் வரும் 27 ஆம் தேதியுடன் அனைத்துப் பாடங்களுக்கும் தேர்வு முடிவடையும் நிலையில், இன்று திங்கட் கிழமை முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப் படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வரலாறு, வேதியியல், கணக்கு பதிவியல், உயிரியல், பொருளாதாரம் போன்ற பாடத்தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், இதர பாடங்களுக்கான தேர்வுகளும் 27–ந் தேதியுடன் முடிகிறது. முதலில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழித்தாள் திருத்தப்படுகிறது. முதன்மைத் தேர்வாளர் உதவித் தேர்வாளர் என இரு பிரிவுகளில் ஒவ்வொரு விடைத்தாளும் திருத்தப் படும்.  ஒவ்வொரு பாடத்திலும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

source: inneram.com

Share:

FLASH NEWSஅதிரை AFCC அணி கோப்பையை கைப்பற்றியது


அதிரை AFCC அணி 24 ரன் வித்தியாசத்தில் ஆபார வெற்றி விபரம் விரைவில் 
Share: