Tuesday, April 30, 2013

இன்று அதிரை தக்வா பள்ளியில் பாங்குக்கு தாமதம்?


அதிரை தக்வா பள்ளியில் இன்று மஹரிப் மற்றும் இஷா தொழுகைக்கான பாங்கு மைக்கில் சொல்ல படவில்லை. இதனால் குழப்பம் அடைந்த முஹல்லா வாசிகள் பள்ளிக்கு சென்று பள்ளியின் ஊழியரிடம் கேட்டதற்க்கு பள்ளியின் தலைவர் ஒலிபெருக்கி அறையை பூட்டி விட்டு சாவியை எடுத்து சென்றுவிட்டதாக கூறினார்.

மேலும் அதிரை தக்வா பள்ளியில் வழக்கத்திற்க்கு தாமதமாக ஒலி பெருக்கி இல்லாமல் பாங்கு சொல்ல பட்டது. இதனால் முஹல்லா வாசிகள் தாமதமாக தொழுகைக்கு வந்தனர்.

அதிரையில் 4 லட்சம் செலவில் குடிநீர் விநியோகம் செய்ய பணிகள் மும்முரம்
அதிரை நடுதெரு 14 வது வார்டுக்கு உட்பட்ட நடுத்தெரு மேல்புறம்  , காலியார் தெரு, வெற்றிலைக்காரத்தெரு ஆகிய பகுதிகளில் பல வருங்களாக குடிநீர் விநியோகம் சரி வர இல்லாமல் இருந்து வந்தது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் குடி தண்ணீர் இல்லாமல் .பெரும்  அவதிக்கு உள்ளாயினர்.இதனால் அப்பகுதி மக்கள் நமதூர் பேருராட்சிக்கு கோரிக்கை மேல் கோரிக்கை வைத்தனர்.இந்த கோரிக்கையை ஏற்ற பேரூர் நிர்வாகம்  4 இலட்சம் செலவில் மிலாரிக்காடு பகுதியில் இருந்து  நேரடியாக குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் மிலாரிகாடு, cmp லைன்,புதுமனை தெரு,நெசவு தெரு வழியாக பைப் லைன் அமைப்பதற்கு பள்ளம் தோண்டும்  பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.      

AFCC அணி வீரர் ஐந்து விக்கெட் எடுத்து சாதனை (Updated)

AFCA சார்பில் நடத்தப்படும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியில் நேற்று AFCC மற்றும் RCCC அணியினரும் மோதினர். இதில் அதிரையின் நட்சத்திர அணியான AFCC அணியினர் வெற்றி பெற்றனர். இந்த போட்டியில் அப்துல் வஹாப் அவர்கள் 3.5 ஓவருக்கு ஐந்து விக்கெட் எடுத்து  சாதனை படைத்தார்.அதிரையில் தற்போது முதல் முறையாக  கிரிக்கெட் பந்தினை பயன்படுத்தி வருகின்றனர். 
வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அப்துல் வஹாப் அவர்களுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கபட்டது .


Monday, April 29, 2013

கோப்பையை கைப்பற்றியது அதிரை சிட்னி சிக்ஸர் அணி


அதிரை சிட்னி சிக்ஸர் அணி சார்பாக நடைபெற்று  வந்த கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி நேற்று  சிட்னி மைதானத்தில் நடைபெற்றது.அப் போட்டியில் அதிரை சிட்னி சிக்ஸர் அணி வெஸ்டர்ன் பார்க் மேலத்தெரு அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றது.

முதல் மூன்று   இடங்களை பெற்ற அணிகளின் விபரம் பின்வருமாறு:

முதல் பரிசு: ரூ. 2013  அதிரை சிட்னி சிக்ஸர் அணி

இரண்டாம் பரிசு: ரூ.1400 வெஸ்டர்ன் பார்க் அணி

மூன்றாம் பரிசு: ரூ. 888 XXX மிலாரிகாடு அணி 

சிறப்பு பரிசு பெறும் வீரர்களின் விபரம் பின் வருமாறு:

சிறந்த கேப்டனுக்கான விருது சர்ஜீஸ் (சிட்னி சிக்ஸர் அணி)

சிறந்த பேட்ஸ்மேனுக்கான விருது பைசல்

சிறந்த பவுலர்க்கான விருது முஹம்மது ஃபஜார்  

ஜித்தாவில் நடந்த துஆ மனனப் போட்டி - பரிசு பெற்ற அதிரை சிறுவர்,சிறுமியர்!


சவூதி அரேபியாவின்  ஜித்தாவில் கடந்த வாரம் துஆ மனனப் போட்டி நடைபெற்றது.  பெரியவர்கள் சிறுவர்கள் என பல பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், அதிரையை சேர்ந்தவர்கள் சிறுவர்கள் சிறுமியர்களுடன்  மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டினர்.

இதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சி கடந்த வியாழன் அன்று இரவு நடைபெற்றது

இதில்  7 வயதிற்குட்பட்டோர்/15 வயதுக்குட்பட்டோர்/அதற்கு மேற்பட்ட வயதினர் மற்றும் பெற்றோர்கள் என பல பிரிவுகளாக போட்டி நடைபெற்றது..

(100/100 மதிப்பெண் பெற்ற அதிரை சிறுமி தஹ்சினா பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றபோது எடுத்த படம்)

இதில்  7 வயதிற்குட்பட்டோர்களுக்கான போட்டியில் 100/100 மதிப்பெண் என்ற வகையில் லெவல் ஒன்றில் அதிரையைச் சேர்ந்த சிறுமி தஹ்சினா (த/பெ. A.J. தாஜுத்தீன்) முதல் பரிசை தட்டிச் சென்றார் இவருடன் சில வெளியூர் சிறுவர்/சிறுமிகளும் வெற்றி பெற்றனர்.

மேலும் 15 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் பங்கேற்ற சிறுவன் இம்ரான், சிறுமி ஆயிஷா ஆகியோர் சிறப்பு சான்றிதழ் பெற்றார்கள். இதுவல்லாது 15 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டியில் நமதூரைச் சேர்ந்த அஹமது அலி அவர்களின் மகள்கள் மற்றும் தமீம் அன்சாரி அவர்களின் மகள்கள் ஆகியோர் முதல் பரிசை தட்டிச் சென்றனர்.

மேலும் மாணவ மாணவிகள் அல்லாது பெற்றோர்களும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.


இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மக்கா ஹரம் ஷரீஃபின் கல்வி வளர்ச்சிக்கன உதவித் தலைவர் ஷைஹ் .முஹம்மது ரியாத் சல்ஹாம் அவர்கள் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிதார். இது  பலரையும்  உற்சாகப் படுத்தியது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜித்தா இஸ்லாமிய அழைப்பகம் சிறப்பாக செய்திருந்தது.

தவறுக்கு மன்னிப்பு கேட்ட தினமலர்!


சென்னை: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப் பட்ட அதிராம்பட்டினத்தை சேர்ந்த தமீம் அன்சாரி கைதை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இதுகுறித்து தினமலர் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் தவறான முறையில் ம.ம.க. பொதுச் செயலாளர் எம்.தமீமுன் அன்சாரியின் புகைப் படத்தை இணைத்திருந்தது.

அதற்கு பலதரப்பிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தினமலர் பத்திரிகையின் லெணின் உட்பட மூன்றுபேர் கொண்ட குழு ம.ம.க அலுவலகம் சென்று மன்னிப்பு கேட்டுள்ளது.

இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"(27-4-2013) அன்று வெளியான தினமலர் நாளிதழ் 11ஆம் பக்கத்தில் வெளியிட்டிருந்த 'தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தமீம் அன்சாரி கைது:ஐகோர்ட் ரத்து' என்ற செய்தியில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமீமுன் அன்சாரி அவர்களின் புகைப்படமும் அவருக்கு சம்மந்தமே இல்லாத செய்தியும் பிரசுரிக்கப்பட்டது.

இச்செய்தி படித்து தமிழகம் முழுவதிலிருந்தும் தினமலர் நாளிதழுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து சென்னை தினமலர் செய்திக்குழுவின் சார்பாக செய்தி ஆசிரியர் லெனின் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு தமுமுக தலைமையகத்திற்கு வருகை தந்து என்னிடம் (தலைவர் ஜே.எஸ்.ரிபாயி) மேற்படி தவறுக்காக வருத்தம் தெரிவிப்பதாகவும், இதற்கு நாளையே மறுப்பும் மமக தலைவரின் அறிக்கையும் வெளியிடுவதாகவும் தெரிவித்தனர். மேலும் தினமலர் இணையத்திளத்தில் உள்ள செய்தியில் தவறான புகைப்படத்தை அப்புறப்படுத்திவிட்டதாகவும், தெரிவித்தனர்.

இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இப்பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டது. இப்பேச்சு வார்த்தையின் போது மாநிலச் செயலாளர், பி.எஸ். ஹமீது, வடசென்னை மாவட்ட தலைவர் எப். உஸ்மான் அலி, தென் சென்னை மாவட்ட தலைவர் சீனி முகம்மது உட்பட மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பின்பு திருத்தி வெளியிடப் பட்ட புகைப் படம்:


மேலும் தினமலர் குழு வாக்களித்தபடி நேற்றைய நாளிதழில் தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதுSunday, April 28, 2013

அதிரையில் கோலாகலமாக துவங்கியது அதிரை பெஸ்டிவல் ( Updated )

அதிரை மக்கள் அனைவரும் எதிர்பார்த்து இருந்த அதிரை பெஸ்டிவல் இன்று மாலை 6.00 மணியளவில் நமதூர் பேருராட்சி தலைவர் S .H அஸ்லம் அவர்கள் திறந்து வைத்தார்.மேலும் இன்று துவக்க விழா காரணமாக நுழைவு கட்டணம் வசூலிக்க படவில்லை.இன்னும் பல பொழுதுபோக்கு அம்சங்கள் வர இருப்பதாக நிர்வாகிகள் கூறினர்.
  

களத்தில்- முஹம்மது  சாலிஹ், அப்துல் வஹாப், முஹம்மது   பைசல்,ஹாசிம்

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி ஆண்டு விழா


அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின்  58 வது ஆண்டு விழா இன்று (28-04-2013) ஞாயிறு காலை 10:30  மணியளவில்  நடைபெற்றது.

பேராசிரியர் A. முஹம்மது சித்திக் அவர்கள் கராஅத் ஓத நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. MKN ட்ரஸ்டின் தற்காலிக நிர்வாகி நீதிபதி K. சம்பத் அவர்கள் தலைமை தாங்கினார்.  மேஜர் பேராசிரியர் கணபதி அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். துணை முதல்வர் பேராசிரியர்.A.M. உதுமான் முகைதீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் பேராசிரியர் A. ஜலால் அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் V. மாணிக்க வாசகம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினார்.

பணி ஓய்வு பெரும் வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் M. சீனி முஹம்மது, வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் T. இதயதுல்லாக்கான், வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரிய G. பாலசுப்பிரமணியன்ய ஆகியோர் கவுரவிக்கப் பட்டனர்.

பல்வேறு துறைகளில் சாதணை படைத்த  மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்க பேராசிரிய N. செயவீரன் அவர்களால் நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அதிரை முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாணவ மாணவியர் பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

அதிரை தமீம் அன்சாரி தீர்ப்பு! முகத்தை மாற்றிய தின-மலர்!

அதிரை தமீம் அன்சாரி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவரது மனைவி, " தன் கணவர் எவ்வித குற்றத்திலும் ஈடுபடாதவர்.காவல்துறையினர் கட்டாயப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். இவர் மீது பாய்ந்துள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் - என்.எஸ்.ஏ.,வில் கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இதுகுறித்த விசாரணையின் பின்பு நீதிபதி  ஏ.செல்வம், எம்.சத்தியநாராயணன் பிறப்பித்த உத்தரவில் , "தமீம் அன்சாரி வெறும் யூகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் மேலும் எந்த ஆதாரங்களையும், அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப் படவில்லை, எனவே தமீம் அன்சாரி என்.எஸ்.ஏ.,வில் கைது செய்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது." இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக செய்தி வெளியிட்ட தின-மலர் அதிரை தமீம் அன்சாரியின் புகைப்படத்திற்கு பதிலாக மமக-வின் பொதுச்செயலாளர் தமீமுல்அன்சாரி அவர்களின் புகைப்படத்தை பிரசுரம் செய்து பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.


அதிரை தமீம் அன்சாரி கைது உத்தரவு - உயர் நீதிமன்றம் ரத்து

மதுரை: தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரியின் கைது உத்தரவை மதுரை உயர் நீதிமன்றம்  ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி இந்திய இராணுவ ரகசியங்கள், இராணுவப் பயிற்சி மையம், கடலோரக் காவல்படையின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள், ஒளிப்பதிவுகள், வரைபடங்களை இலங்கைக்கு கடத்த முயன்றதாக திருச்சி கியூ பிரிவு காவல் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.


இந்த நிலையில் இதனை எதிர்த்து அவரது மனைவி, " தன் கணவர் எவ்வித குற்றத்திலும் ஈடுபடாதவர்.காவல்துறையினர் கட்டாயப்படுத்தி, ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். இவர் மீது பாய்ந்துள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் - என்.எஸ்.ஏ.,வில் கைது செய்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்" என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


இதுகுறித்த விசாரணையின் பின்பு நீதிபதி  ஏ.செல்வம், எம்.சத்தியநாராயணன் பிறப்பித்த உத்தரவில் , "தமீம் அன்சாரி வெறும் யூகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் மேலும் எந்த ஆதாரங்களையும், அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப் படவில்லை, எனவே தமீம் அன்சாரி என்.எஸ்.ஏ.,வில் கைது செய்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது." இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
inneram.com

அதிரையில் மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்!

அதிரை நகர த.மு.மு.க சார்பாக நேற்று மாலை 4.30 மணியளவில் "தொடர்ந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது" செய்யப்படுபவதை கண்டித்து மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக நமதூர் தக்வாப் பள்ளி அருகிலிருந்து பேரணியாக புறப்பட்டு பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு வழியாக அதிரை பேருந்து நிலையத்தை அடைந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  த.மு.மு.க வின் மாநில பொதுச்செயலாளர் P. அப்துல் சமது அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். பிறகு காவல் துறைக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்ப பட்டன.

Saturday, April 27, 2013

கவிஞர் அபுல் கலாமின் முழக்கம்


முழக்கம்.......

சங்கொலியின் முழக்கம்தான் சகலர்க்கும் அறிவிப்பு

பாங்கொலியின் முழக்கம்தான் படைத்தவனின் அறிவிப்பு

பொங்கிவரும் அலைமுழக்கம் பேரழிவின் அறிவிப்பு


மங்கையவள் மவுனமும்தான் மனமெங்கும் முழக்கமாமே!

நிலநடுக்க முழக்கத்தால் நிம்மதியை நாமிழந்து


குலைநடுங்கும் போக்கினையே குவலயமும் கண்டதிங்கு

இலையிங்குப் பயமும்தான் இறைவனவன் மீதினிலே

அலைகளிலும் தரையினிலும் அவன்காட்டும் முழக்கமாமே!

எழுகின்ற இடிமுழக்கம் எச்சரிக்கும் புயலுக்கு


விழுகின்ற ஏழைகளின் விரக்தியின் முழக்கம்தான்

பழுக்கின்ற புரட்சியாகப் பாய்ந்துவிடும் விரைவாக

அழுக்காறுக் கொண்டுள்ள அரசியலார் அறிவீரே!

அறுதியிட்டு வருகின்ற அலையலையாய்ப் பாவங்கள்


சிறுமியையும் கற்பழித்துச் சீரழிக்கும் பூவுலகில்

இறுதிநாளின் வருகைக்கு எச்சரிக்கை முழக்கம்தான்
உறுதியாக வருமொருநாள் ஊதுகின்ற குழல்வழியே


-----கவிஞர் அபுல் கலாம் 

அதிரை அடையும் தொழில்நுட்ப வளர்ச்சி! (Banner)

அதிரை தற்போது நகரத்திற்க்கு இணையான தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துவருகிறது. இந்த கால கட்டங்களில் நமக்கு நேரமும் போதுமானதாக தெரியவில்லை. அவ்வாறு இருக்க நமதூரில் உள்ள ஜும்மா ஹைடெக் டிஜிட்டல் ஸ்டுடியோவில் 5 நிமிடத்தில் ஃபோட்டோக்கள் பிரிண்ட் செய்து தரபடுகிறது. அது மட்டுமல்லாமல் இங்கு தமிழக மின் தடையால் எந்த விதமான பாதிப்பும் வராமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.குறிப்பு: அதிரை எக்ஸ்பிரஸில் இடம்பெறும் விளம்பரங்கள் அதிரையர்களின் நிறுவனங்கள் மற்றும் பொருட்களை விளம்பரப்படுத்தும் நோக்கில் எத்தகைய கட்டணமுமின்றி இலவசமாக வெளியிடப்படுகிறது என்பதுடன் இதன்மூலம் எத்தகைய லாபநோக்கமும் இல்லை என்பதால் லாப/நட்டங்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பல்ல.

Friday, April 26, 2013

Flash News: அதிரை தமீம் அன்சாரி விடுதலை!


அதிரை தமீம் அன்சாரி தேசிய பாதுகாப்பு சட்டத்திலிருந்து மதுரை ஐகோர்ட்டால் விடுவிக்கப்பட்டுள்ளார். வழக்கின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல் விரைவில் ......

அதிரை TIYA-விற்க்கு SDPI நன்றி அறிவிப்பு!


அதிரை SDPI மேற்க்கு கிளை சார்பில் தாஜூல் இஸ்லாம் சங்கத்திடம் மேலத் தெருவில் உள்ள ரேஷன் கடைக்கு நிழல் பந்தல் அமைப்பது தொடர்பாக வேண்டுக்கோள் வைக்கப்பட்டது. இதனை ஏற்று  தாஜூல் இஸ்லாம் சங்கம் சார்பில் தற்போது நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக SDPI நிர்வாகிகளிடம் கேட்டதற்க்கு "எங்களின் கோரிக்கையை ஏற்று மக்கள் நலனில் அக்கறை கொண்டு விரைந்து நிழல் பந்தல் அமைத்த  தாஜூல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறினர்.

இது போல் நமதூரில் உள்ள சங்ககளும், அமைப்புகளும் சேர்ந்து சேவை செய்தால் அதிரை ஒரு ஒற்றுமை உள்ள அமைதி பூங்காவாக இருக்கும் என்பதில் சந்தேகம்  இல்லை. இன்ஷா அல்லாஹ்...

அதிரையில் பலத்த மழை -கிரிக்கெட் போட்டிகள் ரத்து!அதிரையில் இன்று அதிகாலை பலத்த மழை பெய்தது. இதனால்  இன்று Sydney 6ers சார்பில் நடக்க வேண்டிய கிரிக்கெட் காலிறுதிப் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது போல் அதிரையில் நடக்க கூடிய பல விளையாட்டு போட்டிகளும் மழை காரணத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


கடும் வெயிலால் தவித்து வந்த அதிரை பொதுமக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியும் விளையாட்டு வீரர்களுக்கு சற்று ஓய்வையும் கொடுத்துள்ளது.

AX Summer Team

அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது - போராட அழைக்கிறது அதிரை தமுமுக!


தமிழகத்தில் தொடர்ந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த நமதூர் நகர தமுமுக சார்பில் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 4-மணியளவில் தக்வா பள்ளி அருகிலிருந்து பேரணியாக புறப்பட்டு அதிரை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெறும். இதில் தமுமுகவின் மாநில பொதுச்செயலாளர் P.அப்துல் சமது அவர்கள் கண்டன உரையாற்றுவார்கள்.

இரா உலா - 1(இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எழுத்தாளர் நூருத்தீன் அவர்களின் 'அது ஓர் அழகிய பொற்காலம்' தொடர் சென்ற வாரத்துடன் நிறைவுற்றது. இந்த வாரம் முதல் நூருத்தீன் அவர்களின் இரா உலா குறுந்தொடர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இன்ஷா அல்லாஹ் வெளி வரும். ஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலம். மதீனா நகரம்தான் அப்பொழுது இஸ்லாமிய ஆட்சியின் தலைநகர். அந்நகரினுள் வணிகம் புரிய வெளியூரிலிருந்து வணிகர்கள் சிலர் வந்திருந்தனர். விடுதிகள் போன்ற வசதிகள் இல்லாத காலம் அது. பகலில் வணிகத்தில் ஈடுபவார்கள். இரவில் நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் அருகில் அவர்கள் தங்கிக் கொள்வார்கள். தங்களின் மனைவி, பிள்ளைகள், வாகனம், வணிகச் சரக்கு, இதர பண்டங்களுடன் அப்படி அங்கு அவர்கள் தங்கியிருந்தனர்.

கலீஃபா உமர் தோழர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபை அழைத்தார். “நமது நகருக்கு வந்து வணிகர்கள் தங்கியுள்ளார்களே, இன்றிரவு நாம் சென்று அவர்களுக்குப் பாதுகாவலாய் காவல் புரிவோம், வருகிறீர்களா?”

வணிகர்கள் பாதுகாவல் கேட்டும் கலீஃபாவை அணுகவில்லை; கலீஃபாவும் பணியாட்கள், சேவகர்கள் என்று அழைத்து, ”சென்று அவர்களுக்குக் காவலிருங்கள்” என்று அனுப்பவில்லை. தாமே வெளியூர்வாசிகளுக்குப் பாதுகாவல் அளிக்க்க் கிளம்பிச் செல்கிறார். அது என்னவோ, அப்படித்தான் அவர் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்!

பெருமைக்குரிய தோழர் உமரை ஒரு தோழராய், மாவீரராய், கலீஃபாவாய் பல பரிமாணங்களில் நாம் அறிந்திருந்தாலும் அவரது ஆட்சியும் அப்பொழுது அவர் செயல் புரிந்தவிதமும் இக்கால அரசியல் கூத்துகளையும் அரசாங்கங்களின் அழிச்சாட்டியத்தையும் காணும் நமக்கு வெகு புதுமையாக இருக்கும். ஆனால்,

அது மேன்மை! அது உன்னதம்!

வரலாற்றுக் கதைகளிலும் மன்னர் தொடர்பான நகைச்சுவைகளிலும் மன்னரின் இரவு நகர்வலம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம். அவையெல்லாம் உண்மையோ, கற்பனையோ - ஆனால் இஸ்லாமிய வரலாற்றில் அப்படியொன்று நிஜமாகவே நிகழ்ந்தது. கலீஃபா உமர் இரவு நேரங்களில் மதீனா நகரில் சுற்றிச் சுற்றி ரோந்து புரிந்து பாதுகாவலளித்தது, சுவையான தகவல்கள் அடங்கிய தனி வரலாறு. நமக்குப் பல படிப்பினைகளை அளிக்கும் வரலாறு அது.

நண்பர்கள் சேர்ந்து சொகுசாய் ஊர் சுற்றக் கிளம்புவார்களே, அப்படி அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபும், ”“ஓ போகலாமே!” என்று கிளம்பிவிட்டார்.

வணிகர்கள் தங்குயிருந்த பள்ளிவாசலுக்குக் கிளம்பிச் சென்றார்கள் இருவரும். அந்த வெளியூர் வணிகர்கள் தங்களுக்குப் பாதுகாவலாய் நாடாளும் கலீஃபாவும், மற்றொரு உன்னத நபித்தோழரும் வந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாமல் உறங்க ஆரம்பித்துவிட்டனர். பாதுகாவலுக்குச் சென்ற இருவரும் தூக்கம் வராமலிருக்க பேசிப் பொழுதைக் கழிக்காமல், பின்னிரவுத் தொழுகை தொழ ஆரம்பித்துவிட்டார்கள். தொழுகை, அதுவும் இரவுத் தொழுகை அவர்களுக்கு அனைத்தையும்விட மிக மிக முக்கியமானது. அவர்களுக்கு ஆன்ம பலத்தை அள்ளியளித்த மகா உன்னத இறை வழிபாடு அது.

தொழுகை நிகழ்ந்து கொண்டிருந்தது.

அப்பொழுது குழந்தையொன்று அழும் ஒலி கேட்டது. விடாது அழும் ஒலி. தாங்க முடியவில்லை. தொழுகையை முடித்த உமர் இருட்டில் அந்தக் குழந்தையின் அருகில் சென்று அதன் தாயிடம், “அல்லாஹ்விற்குப் பயந்து கொள்ளுங்கள். குழந்தை இப்படிக் கதறி அழுகிறதே. சரியாகக் கவனித்துக் கொள்ளுங்கள்,” என்று அறிவுறுத்திவிட்டு வந்துவிட்டார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் குழந்தை அழும் ஒலி கேட்டது. தாய் சமாதானப்படுத்தவில்லையோ, குழந்தை கேட்கவில்லையோ தெரியாது, ஆனால் கடுமையான அழுகை ஒலி. வேகமாய்க் கிளம்பி குழந்தையின் அருகில் சென்ற உமர் அதன் தாயிடம், “என்ன அம்மா நீ? உன் குழந்தை ஏன் இரவு முழுக்க அழுது கொண்டிருக்கிறது? நீ அதைச் சமாதானப்படுத்தாமல் இருக்கிறாயே. என்னாச்சு உனக்கு?” என்றார் கோபத்துடன்.

உமரை கலீஃபா என அறிந்திராத அந்தத் தாய் பதில் அளித்தார். சற்று விசித்திரமான பதில். “ஓ அல்லாஹ்வின் அடிமையே! குழந்தை தாய்ப்பால் கேட்கிறது. நான் கொடுக்காமல் அவன் கவனத்தைத் திசை திருப்பப் பார்க்கிறேன். அதை ஏற்காமல் அழுது கொண்டிருக்கிறது. வேறொன்றுமில்லை.”

பசிக்கும் குழந்தைக்கு தாய்ப் பாலூட்ட மறுக்கிறாரா? என்ன அநியாயம்? “ஏன்?” என்றார் உமர்.

“கலீஃபா உமர் சட்டமிட்டிருக்கிறார். பால்குடி மறக்காத குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப் படுவதில்லையாம். அதனால்தான் நான் அவனுக்குப் பால்குடி மறக்கப் பழக்கப்படுத்துகிறேன்.”

அப்பொழுதெல்லாம் அரசின் கருவூலமான பைத்துல்மாலிலிருந்து மக்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. உதவித்தொகை பெறத் தகுதியுள்ள குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் அது வழங்கப்பட்டது. ஆனால் கைக்குழந்தைகள் இருப்பின் அந்தக் குழந்தைக்குத் தாய்ப்பால் மறக்கச் செய்யப்படும் வரை தனிநபராகக் கணக்கிடக் கூடாது என்று சட்டமியற்றி இருந்தார் உமர். அதனால் ஏழு பேர் உள்ள குடும்பத்தில் ஒன்று பால்குடி வயதிலுள்ள குழந்தை ஒன்று இருந்தால் அதற்கு உதவித் தொகையில் பங்கு கிடையாது.

“அது தானே சட்டம்? இருக்கட்டும் விரைவில் என் குழந்தைக்கு நான் தாய்ப்பால் மறக்கச் செய்கிறேன். அவனுக்கும் ஒரு பங்கு கிடைக்கும்” என்பது அந்தத் தாயின் திட்டம்.

திகைத்துப்போன உமர், “”உன் குழந்தைக்கு என்ன வயதாகிறது?”

சில மாதங்கள் ஆகியிருந்தன அந்தக் குழந்தைக்கு. தெரிவித்தார் தாய்.

“என்ன கேடு உனக்கு? ஏன் இப்படி பால் நிறுத்த அவசரப்படுகிறாய்? அப்படிச் செய்யாதே” என்று தெரிவித்துவிட்டுச் சென்றுவிட்டார்.

இரவு முடிந்து ஃபஜ்ரு தொழுகைக்காகத் தமது பள்ளிவாசலுக்குத் திரும்பிவிட்டார் உமர். தொழ ஆரம்பித்து ஓத ஆரம்பித்தவர், அழ ஆரம்பித்துவிட்டார்! நாடாளும் கலீஃபா, வீரர் உமர் தொழுகையில் அழ ஆரம்பித்துவிட்டார்! அடக்க மாட்டாமல் விம்மியதில் அவருக்குப் பின்னால் தொழுகையில் நின்றிருந்த தோழர்களுக்கு அவர் ஓதியது கூட சரிவரக் கேட்கவில்லை.

தொழுது முடித்தவர் மக்களிடம் திரும்பி, “உமருக்குக் கேடே! இப்படி எத்தனை முஸ்லிம் குழந்தைகளை அவர் கொன்றிருக்கிறாரோ தெரியவில்லையே?” என்று மாய்ந்து அங்கலாய்த்தவர் தனது பணியாள் ஒருவரை அழைத்தார்.

சகலமானவருக்கும் அறிவிக்கவும், “குழந்தைகளுக்குப் பால்குடி மறக்கச் செய்வதில் யாரும் அவசரப்படக் கூடாது. குடும்பங்களில் பிறந்துள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இனி உதவித் தொகை வழங்கப்படும்.”

செய்தி அறிவிக்கப்பட்டது. உத்தரவு எழுத்தில் வடிக்கப்பெற்று அனைத்துப் பகுதி நிர்வாகிகளுக்கும் ஆளுநர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு குழந்தையைப் பற்றிய தகவலும் அரசாங்கப் பதிவுகளில் குறித்துக் கொள்ளப்பட்டு, அனைவருக்கும் பைத்துல்மாலிலிருந்து நிதி உதவி அளிக்க ஏற்பாடானது.

அவையெல்லாம் தேர்தல் வாக்குறுதித் திட்டங்களல்ல. இறை பயத்தில், இறை உவப்பிற்காக மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டவை. எனவே நீதி தழைத்தது. மக்கள் செழித்தனர்!

-தொடரும்

-நூருத்தீன்


source: http://www.darulislamfamily.com/

Thursday, April 25, 2013

அதிரையர்களே!வாருங்கள் விளையாட்டால் ஒன்றுபடுவோம்

தமிழகத்திலதற்போது பல இடங்களில் விளையாட்டு விழா நடைபெறுகிறது அதிலும் குறிப்பாக நமதூரில் சிறு குழந்தை முதல் பெரியவர் வரைக்கும் இதை பார்த்து வருகிறார்கள். இவ்வாண்டு பல இடஙகளில் பல தெருக்களில் நடைபெறுகிறது ஒரு சில இடங்களில் டென்னிஸ் என்ற பெயரிலும் வாலிபால் என்ற பெயரிலும் இரவு நேரங்களிலும் நடைபெறுகிறது. 

இதனால் பல ரூபாய்கள் செலவு செய்யப்படுகிறது பல மணி நேரம் வீணா முறையில் செலவு செய்யப்படுகிறதுசில இடங்களில் முறையாகவும் சில இடங்களில் இதை தவறான முறையிலும் செலவு செய்யப்படுகிறது
1990ம் ஆண்டு வரைக்கும் நமதூரில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திடலில்  விளையாட்டு போட்டி நடைபெறும் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பார்த்த நிகழ்ச்சி இப்பொழுது ஞாபகம் வருகிறது அதை போல்  அதிரை விளையாட்டு குழு என்று ஏற்பாடு செய்தால் நாம் அனைவரும் இவ்விளையாட்டை ரசிக்கலாம்;
இன்று பல திடல்களிலும் நடைபெறுகிறது இளைஞர்களும் மாணவர்கள் சோந்து நடத்துகிறார்கள், இப்போட்டி நடைபெறும் சமயத்தில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுவதால் அவர்களுடைய கவனம் படிப்பில் இல்லை இதை நாம் முறைப்படுத்த வேண்டும்.
மேலும் விளையாட்டு போட்டி நடத்துவதற்க்கு வசூல் என்ற பெயரில் கடை கடையாக சென்று இளம் சிறார்கள் வசூல் செய்கிறார்கள் சில கடைகளில் பணம் கொடுக்கப்படுகிறது, சிலர் கொடுப்தில்லை இனால் றாக எடுத்துக் கொள்வாய்ப்பு உள்து.
இளம் வயதினர் அந்த பணத்தை வைத்துக் கொண்டு தவறான வழியில் செலவு செய்தையும் நாம் காண்கிறோம்.

தேபோ சில கடைகளில் பணம் இல்லை கூறினால் கட்டாயப்படுத்தி பணத்தை வசூல் செய்தையும் நாம் காண்கிறோம். 
நுழைவு கட்டணம் செலுத்திய பிறகு போட்டியில் தோல்வி ஏற்பட்டால் தோல்வியுற்று விட்டோமே என்று லை கொள்கிறார்கள். எல்லோரும் ஒன்றுபட்டு. நட்புடன் விளையாட்டை விளையாட்டாக எடுத்து விளைவேண்டும்.
இன்று நமதூர் மாணவர்களும் இளைஞர்களும் கல்வி திறனும் மார்க் திறனும் மிகக் குறைவாக இருப்பதனால் அவர்களுக்கு அந்தந் தெருவை சார்ந்த தன்னார்லர்கள் சிறப்பு வகுப்புக்கு முயற்ச்சி எடுக்க வேண்டும்.
ஒரே மைதானத்தில் நமதூரில் வாழும் சிறுவர் பெரியவர் அல்லது சிறுவர்களுக்கு ஒரு மைதானம் பெரியவர்களுக்கு ஒரு மைதானம் என்று பிரித்து விட்டால் தவறான பணமும் நேரமும் முறையாக பயண்படுத்தலாம்.
நமதூரில் வாழும் இளைஞர்கள் விளையாட்டில் திறமைகள் இருக்கிறது அதை முறையாக பயண்படுத்தினால் அவர்கள் மாநில அளவில் பங்கு கொள்ள உறுதுணையாக இருக்க அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே நாம் சாதனை செய்ய முடியும். எல்லா தெருவிரும் தூர் என்துடன் செயல்பட்டு விளையாடினால் தூருக்கு பெருமை சேர்க்லாம்
விளையாட்டு விழா என்ற பெயரில் இளம் வயதினருக்கு நேரம் பறிபோகுகிறது அவர்களுக்கு கோடை காலத்தில் மார்க்க விளக்கம் வகுப்பு வைக்க வேண்டும் மாலை நேரத்தில் விளையாடவேண்டும் 
இஸ்லாம் நேரத்தை முக்கியத்தின் நன்கு உணர்த்தும் மார்க்கமாகும.; அல்லாஹ் பல இடங்களில் நேரத்தைபற்றி கூறுகிறான். வாழ்க்கை என்பது அல்லாஹ் கொடுத்த நிஃமத் (அருட்கொடை) அதைப் பற்றி மறுமையில் நாளில் கேள்வி கேட்க்கப்படும் 4 கேள்விக்கு பதில் சொல்லாமல்  தனது இடத்தை விட்டும் நகற்றமுடியாது! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
1.தனது வாழ்க்கையை எவ்வாறு கழித்தாய்? 2.தனது வாலிபத்தை எவ்வாறு கழித்தாய் 3.தனது செல்வதை;தைப் எவ்வாறு சம்பாறித்தாய்? எவ்வாறு செலவு செய்தாய்? 4.தான் பெற்ற கல்வின் படி எவ்வாறு அமல் செய்தாய்? இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் தன்னுடைய பாதத்தை நகற்ற முடியாது.

வே ஒன்று டுவோம்.. விளையாடுவோம் நேத்தை வீடிக்காமல் மார்த்திற்கு புறம்பாசெயல்டாமல் விளையாடுவோம்.
நஜ்முதீன் (காதர் முகைதீன் தீனீயாத் ஆசிரியர்)