Friday, May 31, 2013

அதிரை WSC அணி அதிர்ச்சி தோல்வி

அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய மாநில அளவிலான  13 ஆம்  ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி மேலத்தெரு பெரிய ஜும் ஆ பள்ளி பின்புறம் அமைந்துள்ள கைபந்து மைதானத்தில் நேற்று  30-05-2013  இரவு  துவங்கி இரண்டு நாள் ஆட்டமாக நடைபெற்று வந்தது.அதில் இன்று இறுதி ஆட்டமாக   அதிரை WSC அணியும்  vs திருவாரூர் அணியும் மோதின.அதில் திருவாரூர்  அணி வெற்றி பெற்றது. மேலும் இறுதி ஆட்டத்தில் கலந்து கொண்ட இரு அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. 
நன்றி:ஜஹபர் சாதிக் & சாகுல் ஹமீது  

மரண அறிவிப்பு

நடுத்தெரு கீழ்புறம் (வாய்க்கால் தெரு) கொ . வீட்டை சேர்ந்த மர்ஹும் ஹாபிஸ் செ.மு.முஹம்மது  ஹுசைன் அவர்களின் மகளும், மர்ஹும் செ.ந. அஹமது  முஹைதீன் அவர்களின் மனைவியும், ஜமால் முஹம்மது அவர்களின் சகோதரியுமான ஹாஜிமா ஆயிஷா அம்மாள் (ஆயிஷா  மச்சி ) அவர்கள் காலமகிவிட்டர்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று 9:30 மணியளவில்  தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்: முஸ்லிம்மலர் ஹசன் 

updated மூன்று பாடத்தில் சதம் கண்டு அதிரை பள்ளி மாணவன் புதிய சாதனை

அதிரை காதர் முகைதீன் ஆண்கள் மேனிலை பள்ளி  மாணவன் Y.அப்துஸ் ஷகூர் த/பெ யாகூப்   அவர்கள் பத்தாம்  வகுப்பு பொது தேர்வில் 478 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் முதல் இடமும் மேலும் கணக்கு,அறிவியல்.மற்றும்  சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களில் சதம் எடுத்து காதர் முகைதீன் பள்ளி வரலாற்றிலேயே புதிய சாதனை படைத்து உள்ளார்.
ABDUS SHAKOOR Y 
SUBJECT MARKS
LANGUAGE 090 
ENGLISH088 
MATHS100 
SCIENCE ( Theory + Practical )( 075 + 025 )   100
SOCIAL 100 
TOTAL 478 
RESULTPASS 

சாதனை படைத்த மாணவனுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்  


அதிரை எக்ஸ்பிரஸ் முன்னாள் தலைமை நிர்வாகி மகள் சாதனை

SUHYMA A K 
SUBJECT MARKS
LANGUAGE 095 
ENGLISH095 
MATHS100 
SCIENCE ( Theory + Practical )( 075 + 025 )   100
SOCIAL 099 
TOTAL 489 
RESULTPASS 
    அதிரை இமாம் ஷாபி பள்ளியில் படிக்கும் A.K.சுஹைமா அவர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 489 மதிப்பெண் பெற்று பள்ளி மற்றும் அதிரை அளவில் முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.மேலும் கணக்கு மற்றும் அறிவியல் பாடத்தில் 100 மதிப் பெண் பெற்று உள்ளார்.இவர் அதிரை எக்ஸ்பிரஸ் முன்னால் தலைமை நிர்வாகி அப்துல் கரீம் அவர்களின் மகள் ஆவார்.
    சாதனை படைத்த சுஹைமா அவர்களுக்கு  அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் குழு சார்பாக வாழ்த்துகளை தெருவித்து கொள்கிறோம்.  
10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து முஸ்லிம் மாணவர்களுக்கும் கல்வி ஊக்கத்தொகை!

ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவும்,தேசப்பற்றில் இந்திய முஸ்லிம்களுக்கு உள்ள தீவிரவாதத்தின் அடையாளமாகவும், ஆங்கிலேய அதிகாரி மெக்-காலே அறிமுகம் செய்த கல்வியையும், ஆங்கிலத்தையும் இந்திய முஸ்லிம்கள் புறக்கணித்ததனர்.

இதன் விளைவாக சுதந்திர இந்தியாவின் வளங்களையும், அரசு மற்றும் கல்வி வாய்ப்புகளையும் முஸ்லிம்கள் பெருமளவில் இழந்து பின்தங்கியுள்ளனர். நீதிபதி சச்சார் கமிஷனின் பரிந்துரை வழங்கப்பட்ட  பிறகும் இட ஒதுக்கீட்டிற்காக இன்றளவும் போராடிக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கல்வியை ஊக்குவிக்கும் புனிதப்பணியில் நாடெங்கிலும் இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு வகைகளில் இறங்கியுள்ளன. அவ்வகையில் அதிரை எக்ஸ்பிரஸும் கடந்த கல்வியாண்டு முதல் மாவட்ட/மாநில அளவில் அதிரை கல்வி நிலையங்களில் பயின்று சாதனை படைக்கும் மாணவ - மாணவிகளுக்கு விருதும், பரிசும் வழங்கி கவுரவித்து வருவதை அறிவீர்கள்,

கூடுதலாக,10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து முஸ்லிம் மாணாக்கர்களுக்கு திருச்சி "MVRC" அறக்கட்டளை 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று "விண்ணப்பிக்கும் அனைவருக்கும்" மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மதிப்பெண் வார்ரையரைக்குள் வரும் அதிரை மாணாக்கர்கள் உடனடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக தகவலுக்கு http://mvrc.miet.edu/ சுட்டியில் சென்று பார்க்கவும்.

இமாம் ஷாபி பெண்கள் பள்ளி பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவிகள் .

இமாம் ஷாபி பெண்கள் பள்ளி பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த   மாணவிகள் 

A.K.  சுஹைமா 489/500 பெற்று முதல் இடம்பெற்று உள்ளார்: 

2வது இடம் பிடித்த மாணவி A.ரிஹானா நர்கிஸ் 485/500 மதிப்பெண் பெற்றுஉள்ளார்.

3வதுஇடம் பிடித்த  மாணவி A.ஆப்ரின் 482/500 மதிப்பெண் பெற்றுஉள்ளார்.

தேர்ச்சி விகிதம் 97%

இமாம் ஷாபி ஆண்கள் பள்ளி பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவர்கள்.

இமாம் ஷாபி ஆண்கள் பள்ளி பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த  மாணவர்கள். 

 முஹம்மது அல்-ஹம்தி 462/500 பெற்று முதல் இடம்பெற்று உள்ளார்: 

2வது இடம் பிடித்த மாணவன் S. ஷபீக் அஹமத் 457/500 மதிப்பெண் பெற்றுஉள்ளார்.

3வதுஇடம் பிடித்த மாணவன் T. இர்ஷாத் அஹமது 453/500 பெற்றுஉள்ளார்.

காதர்முகைதீன் ஆண்கள் பள்ளி பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவர்கள்.

காதர்முகைதீன் ஆண்கள் பள்ளியில் பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த  மாணவர்கள். 


Y அப்துல் சுக்கூர் 478/500 பெற்று முதல் இடம்பெற்று உள்ளார்: 

2வது இடம் பிடித்த மாணவன் K சர்சா 460//500 மதிப்பெண் பெற்றுஉள்ளார்.

3வதுஇடம் பிடித்த மாணவன் ஹரிஹரன் 457/500 பெற்றுஉள்ளார்.

பள்ளியின் தேர்ச்சி விகதம் 85%

அதிரை அரசு NO.1பெண்கள் பள்ளியில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவிகள் விபரம்.

அதிரை அரசு NO.1பெண்கள்  பள்ளியில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவிகள் விபரம். 

 D.சீதை அம்மாள் 481பெற்று முதல் இடம் பெற்றுள்ளார்: 

2வது இடம் பிடித்த மாணவி K .பவித்ரா 480/500 மதிப்பெண் பெற்றுள்ளார்:

3வதுஇடம் பிடித்த மாணவி M.கௌசல்யா 479/500  மதிப்பெண் பெற்றுள்ளார்.

தேர்ச்சி விகிதம் 97%

காதர்முகைதீன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவிகள்.

காதர்முகைதீன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த  மாணவிகள்


M.யாஸ்மீன் 485/500 பெற்று முதல் இடம்பெற்று உள்ளார்: 

2வது இடம் பிடித்தமாணவி A மரியம் பாத்திமா 480/500   பெற்றுஉள்ளார்:

3வதுஇடம் பிடித்த மாணவி M.சப்ரின் பஜ்ரியா 473/500 பெற்றுஉள்ளார்.

பள்ளியின் தேர்ச்சி விகதம் 99.3%

AL-SANA-வில் 2013 - 2014 ஆம் கல்வியாண்டிற்கான Pre K.G முதல் V வரை அட்மிசன் நடைபெறுகிறது

அன்புள்ளம் கொண்டோரே.....

உங்களின் தேவைக்காகவே எங்களின் - சேவை

AL-SANA NURSERY & PRIMARY SCHOOL

S - Sincerity
C - Capacity
H - Honesty
O - Obediently
O - Orderlines
L - Learning

AL - The
S - Student
A - Active
N - Neatness
A - Awareness

இறைவனின் கிருபையாலும், பெற்றோர்களின் ஆதரவினாலும் நம் பள்ளி வருகின்ற கல்வியாண்டு ( 2013 - 2014 )-ற்கான Pre K.G முதல் V வரை அட்மிசன் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. ஆகவே, பெற்றோர்களே! தாங்கள் அன்பான குழந்தைகளை நம் பள்ளியில் சேர்த்து விட்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மழலைகளுக்கு தத்தம் மழலை மொழியிலும் அவர்களின் மனநலம் அறிந்து செயல்படவும், தாயைப் போன்ற அரவணைப்பும், அன்பு கொண்டு சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்படுகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் இவற்றுள் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அடுத்ததாக ஆசிரியர்களே உள்ளனர். இந்த வார்த்தையை தாங்கள் மதித்து உங்கள் மழலைகளை தங்கள் மழலைகள் போல கல்வியில் மட்டுமல்லாமல், பல்வேறு விளையாட்டு துறைகளிலும் திறமைசாலிகளாக உருவாக்கி அவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்துகிறோம். AL-SANA இந்த பெயரில் மட்டுமல்லாமல் உங்கள் மழலைகளின் வாழ்வில் பிரகாசித்திட மழலைகளின் வாழ்வு மலர AL-SANA Nursery & Primary School -ல் சேர்த்து விடுங்கள் பூமியில் விதைக்கப்பட்ட விதை எவ்வாறு சூரியனின் பிரகாசத்தினால் நாளுக்கு நாள் வளர்ச்சியடைகிறதோ அவ்வாறு தங்கள் மழலைகளின் வாழ்வு AL-SANA என்ற பிரகாசத்தினால் அறியாமை என்ற இருள் நீங்கிட, அவர்கள் வாழ்வில் வளர்ச்சியை எய்திட இங்கு வாழ்வியல் நெறிமுறைகளுக்கு சிறப்பாக பயிற்றுவிக்கப்படுகிறது.

" ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது " என்பது போல் உங்கள் பிள்ளைகளுக்கு அன்பு, மரியாதை, பண்பு, பாசம், பணிவு, நாகரிகம் ஆகிய அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. ( SANA ) இந்த நான்கும் இருந்தால் ஒரு மனிதன் தன்னுடைய அனைத்து இலக்குகளையும் அடைந்து பெருமை பெறுவான் இந்த நான்கையும் தம் பள்ளி பெயரிலேயே கொண்டு உள்ளது.

பெற்றோர்களே! நம் பள்ளியில் கல்விக் கட்டணம் அதிகம் இல்லை, அதைப்போலவே பாடபுத்தகமும் அதிகம் இல்லை, தாங்கள் குழந்தைகள் வீட்டிலிருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து வீட்டுக்கும் செல்ல தம் பள்ளியிலேயே வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாங்கள் குழந்தைகளை வீட்டில் எவ்வாறு கவனித்து கொள்க்றீர்களோ! அதைப்போலவே நல்ல அரவணைப்போடும், பாசத்தோடும் கவனித்து கொள்ளப்படும். பள்ளி முடிந்தவுடன் குர்ஆன் மற்றும் Tuition நடைபெறுகிறது. குழந்தைகளை பங்குபெற செய்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


தொடர்புக்கு,

M.I.NAINA MOHAMED M.Com.,M.Phil.,B.Ed.,
Correspondent, AL-SANA NURSERY & PRIMARY SCHOOL,
28/12A, Mahdoom Masjid Street,
ADIRAMPATTINAM.
Cell: 9629608209
Phone: 04373-240710

இன்று பத்தாம் வகுப்பு (SSLC) தேர்வு முடிவுகள் வெளியீடு!


இன்று 31.05.2013 வெள்ளிக்கிழமை காலை 9:15 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தமிழகமெங்கும் வெளியாகின்றது.

தேர்வு முடிவுகளை அதிரை எக்ஸ்பிரசின் முகப்பின் வலது பக்கத்தில் உள்ள SSLC RESULTS என்ற இணைப்பை சுட்டி

அல்லது 


என்ற இணைப்பில் சென்று மாணவ-மாணவிகள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை குறிப்பிட்டு மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.

Thursday, May 30, 2013

நாளை (மே 31) சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்!!நாளை சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம். ஆண்டிற்கு உலக அளவில் 40 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோயிகளால் இறக்கின்றனர்.

பெரும்பாலான மக்களுக்கு புகைப்பிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கானது என்பது தெரிந்திருந்த போதும், புகையிலையினால் உண்டாகும் தீமையின் அளவு குறித்த விழிப்புணர்வு பெரிய அளவில் இல்லை எனலாம். புகையிலை நிறுவனங்கள், புகையிலைப் பெட்டிகளை, பொட்டலங்களை அழகாக, வசீகரமாகத் தயாரித்து வழங்குவதன் மூலமும் வித்தியாசமான விளம்பர உத்திகள் பலவற்றின் மூலமும் புகையிலை விற்பனையைப் பெருக்கி, உடல்நலத்திற்கு புகையிலை உண்டாக்கும் தீமைகளை மக்கள் அறிந்துக்கொள்ள முடியாதவாறு திசை திருப்புகின்றன.

புகையிலையைப் பயன்படுத்துவதால் வரும் தீமைகளை மக்கள் உணருமாறு செய்யச் சிறந்த சிக்கனமான, பயனுள்ள வழி, புகையிலைப் பெட்டிகள் / பொட்டலங்களின் மீது புகைப்பதனால் வரும் தீங்கினைக் குறித்த எச்சரிக்கை செய்வதோடு, படங்களோடு கூடிய எச்சரிக்கை வாசகங்கள் பொறிக்கப்படுவது மிகுந்த பலனளிக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ள உண்மையாகும். மக்கள், புகைப்பிடிப்பதைக் குறைத்துக் கொள்ளவும் முழுமையாக நிறுத்திக்கொள்ளவும் இந்த எச்சரிக்கைப் படங்களும் வாசகங்களும் பெரிதும் உதவுகின்றன. படிப்பறிவில்லாத பாமர மக்களுக்கும் எச்சரிக்கைப் படங்கள், தெளிவான உடனடியான எச்சரிக்கையைத் தருகின்றன எனலாம்.  புகையிலை பயன் படுத்துவதால் வாய்,தொண்டை,நுரையீரல்,வயிறு,சிறுநீரகம்,சிறுநீர்ப்பை போன்ற உடல் பாகங்களால் புற்று நோய் ஏற்பட புகையிலை காரணமாகிறது.

புகையிலையினால் ஏற்படுகிற வாய்ப்புற்று நோய் கொண்ட நோயாளிகள், உலகிலேயே, இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில்  உள்ளனர்.

இந்தியாவில், ஆண்கள் மற்றும் பெண்களில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு, முறையே 56.4% மற்றும் 44.9% புகையிலை காரணமாயிருக்கிறது.

90%கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற நுரையீரல் நோய்களை, புகைபிடித்தல் ஏற்படுத்துகிறது.

சிகரெட், நீங்கள் நுனியில் பற்ற வைக்கும் தீ,நீங்கள் உங்களுக்கே வைத்து கொள்ளும் தீ..


ஆகவே வேண்டாம் இனி இந்த புகையிலை...!AX செய்தி எதிரொலி: சின்ன அமேஜான் காடு அழிக்கும் பணி தொடக்கம்! ( புகைப்படங்கள் )

அதிரையில் சின்ன அமேஜான் காடு கண்டுபிடிப்பு! ஓர் அதிர்ச்சி ரிபோர்ட்! என்ற தலைப்பில் கடந்த 24-05-2013 அன்று நமது தளத்தில் செட்டியாகுளம் பற்றி செய்தியாக வெளியிட்டு இருந்தோம். இதில் அதிரை பேருராட்சி நிர்வாகிகள் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்ட ஒரு பணியை இன்னும் விரைந்து முடிக்காமல் இருப்பதன் நோக்கம் என்ன?அதிரை பேரூ ராட்சி   செட்டியாகுளத்திற்க்காக ஒதுக்கிய  50 இலட்சம் எங்கே?என பொதுமக்கள் மனதில் எழும் கேள்விகளை கேட்டு இருந்தோம்.

இதனை தொடர்ந்து இன்று காலை முதல் அதனை சுத்தம் செய்யும் பணிகளை தொடங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் விரைந்து பணிகளை தொடங்கிய அதிரை பேரூராட்சி தலைவர் S.H.அஸ்லம் மற்றும் நிர்வாகிகளுக்கும் தங்களது நன்றியினை தெருவித்து கொண்டனர்.


இன்று தொடங்கிய இந்த பணி வெறும் கண்தொடைப்பாக இருக்குமா? அல்லது மக்கள்  நலனில் அக்கறை கொண்டு விரைந்து முழுமை பெருமா?போன்ற கேள்விக்கான பதில் விரைவில் தெரியும்.   

அதிரை யானையான் குளத்தில் மர்ம நபர்கள் தீ வைப்பு

அதிரை தச்சத்  தெரு சேர்மன் வாடி அருகில் அமைந்து உள்ள யானையான் குளத்தில் இன்று யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து குளத்தின் முக்கால் வாசி பகுதி தீ கரை ஆனது.மேலும் குளத்தில் மேல் பகுதியில் இருக்கும் வீடுகளுக்கும் தீ பரவ தொடங்கியது.இதனை அறிந்து அப்பகுதி மக்கள் உடனேயே தீ அணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து தீயை அணைத்தனர்.


   
புகைப்படம்: ஷபீப் லூட்   

அதிரை தக்வா பள்ளிக்கு புதிதாக 4 AC! சொல்லுகின்றார் தலைவர் சுக்கூர் ( காணொளி )

அதிரை தக்வா பள்ளியின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் ஆகிய நிலையில். இவர்களின் அதிரடி திட்டங்கள் முஹல்லா வாசிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மார்கெட் ஏலம், புதிய சந்தாக்கு, அதிரையிலேயே முதல் முறையாக பள்ளிக்கு AC அமைத்தல் என நீளுகின்றது இவர்களது வளர்ச்சி பட்டியல். இதுபோல் அதிரையில் போதிய வருமானம் இல்லாத பள்ளிகளுக்கு தக்வா பள்ளி நிதியிலிருந்து சற்று உதவினால் இறைவனில் அருளை பெற்றுக்கொள்ளலாம்.


  காணொளி : அதிரை நியூஸ்

வரதட்சினையை ஒழிக்க முடியுமா..?

ரதட்சினை என்ற கொடிய நோய் குறித்து பல காலமாக அலசிக் கொண்டு இருக்கிறோம் ஆனால் முழுமையான தீர்வு எறபடாமலேயே இது ஒரு வைரஸாக வளர்ந்துகொண்டு இருக்கிறது.

இதுகுறித்து  பல வகைகளில் விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அதில் வரதட்சினையின் ஒரு சிறு பகுதி மட்டுமே விவாதிக்கப் படுகிறது.

வரதட்சினை கூடாது, ஹராம், கேவலம் என்றெல்லாம் எழுதுவதும் பேசுவதும் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறையில் இதை ஒழிக்க முடியாததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தற்கால தலைமுறையினராவது வரதட்சினை வாங்கக்கூடாது என்ற மனநிலையில் ஓரளவு உள்ளனர். ஆனால், இதற்கு முந்தைய தலைமுறையினரிடம் இதுகுறித்த விழிப்புணர்வோ அல்லது குற்ற உணர்வோ இல்லை. ஏனெனில்,நமதூரின் சமூக வாழ்க்கைமுறை அப்படி!

18-20 வயது வரை கல்லூரி படிப்புபோக அவரவர் தகுதிப்படி அல்லது வசதிப்படி வளைகுடா அல்லது சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கோ சென்று 25 வயதுவரை சம்பாதிக்கின்றனர். சம்பாத்தியத்திற்கும் திருமணத்திற்க்கும் இடைப்பட்ட ஐந்தாண்டுகளிலேயே நேரடி வரதட்சினையாகவோ அல்லது மறைமுக லொட்டு லொசுக்குகளாகவோ விலை பேசப்படுகின்றனர். இந்த விபரம் திருமணத்திற்கு முன்பாக பெரும்பாலான மணமகன்களுக்குத் தெரிவதில்லை.

வளைகுடாவுக்குச் செல்வதற்குமுன்பு (அறியாமைக்காலத்தில் அல்லது யாரும் அறியாமல்:) வாங்கிய வரதட்சினையை 'அக்மார்க் தவ்ஹீது' முத்திரைபெற்று ஊர்வந்தபிறகு சிலர் திருப்பிக் கொடுக்கும் நிகழ்வுகளும் 5-6 வருடங்கள்வரை நடந்தன. 10-15 வருடத்திற்கு முன்பு 50,000 பெற்றவர், 10-20 வருடம் கழித்து அதே தொகையைத்  திருப்பிக் கொடுப்பாராம்! அப்போது இருந்த விலைவாசி என்ன? அதைத்திரட்ட அப்போது பட்ட கஷ்டங்கள் என்ன என்பதையெல்லாம் யார் ஈடுசெய்வது என்ற விபரமில்லை. 1965களில் ஒரு பவுன் 100 ரூபாயாக இருந்தது. அக்காலகட்டத்தில் 1000 ரூபாய் வரதட்சினை வாங்கியவர்  40 வருடங்கள் கழித்து அதே 1000 ரூபாய் கொடுத்தால் சரியாகிவிடுமா?

அப்புறம், நாங்களெல்லாம் வரதட்சினை பொருளாகவோ, பணமாகவோ வாங்கவும் இல்லை கொடுக்கவும் இல்லை என்றும் சிலர் சொல்வர். மேலோட்டமாக இதில் உண்மையிருந்தாலும் கவுரமாகவும்,கோத்திரமாகவும் வரதட்சினை வாங்கியிருப்பர்? இதென்ன புதுக்கரடி? அதான் சார் குண்டான் மாற்று! அதாவது சகோதரிக்கு மாப்பிள்ளை வாங்கி, மச்சானின் சகோதரிக்கு மாப்பிள்ளையாக விற்கப்படும் பண்டமாற்று! இதற்கு தவ்ஹீதுவாதிகளும் விதிவிலக்கல்ல!  

மார்க்கப்படி இதில் தவறில்லை என்றாலும், இதுவும் ஒருவகையான தட்சினைதான். பரம்பரை சொத்துக்கள் புதிதாக வேறு குடும்பத்திற்குச் சென்றுவிடக்கூடாது என்று நல்லெண்ணமும் ஒரு காரணம்! இருவீட்டிலும் ஜோடிகள் இருந்தால் மாற்றிக்   கொள்ளலாம்.   அதில் ஒருவீட்டில் ஏதோஒன்று குறைந்தாலும் குண்டான்மாற்று கிடையாது.பதிலுக்கு மாப்பிள்ளை இல்லாத குடும்பத்தில் மாப்பிள்ளை மட்டும் கொடுத்து திருமணம் செய்வதற்கு எத்தனைபேர் தயாரென கைதூக்குங்க பார்ப்போம்! 10-20 குடும்பங்கள் தேறுமா? விரல்விட்டு எண்ணிவிடலாம்! சரி, இதில் எங்கே வரதட்சனை வந்தது?

100 ரூபாய்க்குப் பகரமாக இன்னொரு 100 ரூபாயை அல்லது அதற்கு ஈடான பொருளை மாற்றிக்கொண்டால் அதில் குழப்பமில்லை.ஆனால், 200 ரூபாயைக்கு 100 ரூபாயைத் திரும்பப்பெற விரும்பாததன்மூலம் இந்த பரிவர்த்தனையில் பொதிந்துள்ள மறைமுக லாப-நட்டக் கணக்கீட்டையே சொல்கிறேன்.புரியவில்லையா! நாங்கள் என்ன பணம்/நகையா கேட்கிறோம். மாப்பிள்ளைக்கு பதில் மாப்பிள்ளைதானே கேட்கிறோம் என்ற கல்யாணச் சந்தை நியாயங்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

தங்கள் குடும்பத்தைவிட்டு பிறகுடும்பத்தில்,தெருவைவிட்டு பிறதெருவில், ஊரைவிட்டு பிற ஊர்களில் திருமண உறவு கொள்வதற்கு மார்க்கத்தில் தடையேதும் உள்ளதா? தவ்ஹீதுபேசுபவர்களில் எத்தனைபேர் இந்த மனத்தடைகளிலிருந்து விடுபட்டுள்ளோம் என்று அவரவர் சுயபரிசோதனை செய்துகொள்ளட்டும்! நடந்துமுடிந்துவிட்டது. அதைப்பற்றிப்பேசி பயனில்லை என்றாலும், தங்கள் குழந்தைகளையேனும் மேற்கண்ட சமூக மனத்தடைகளைத் தகர்த்து நபிவழிதிருமணம் செய்தாலன்றி வரதட்சினை அல்லது அதுசார்ந்த பொருளாதார பரிவர்த்தனையை ஒழிக்கவோ குறைக்கவோ முடியாது.  

அகமும்,புறமும் சமூக அழுக்குகளுடன் உழன்றுகொண்டு,ஒரே குடும்பத்திற்குள் அல்லது குண்டான் மாற்று திருமணம் முடித்துள்ள தைரியத்தில் வரதட்சினை குறித்த வியாக்கியானங்கள் வெறும் ஏட்டுச்சுரைக்காயாகவே இருக்க முடியும். வரதட்சினை ஓர் நோய் என்றால், அதை ஊட்டிவளர்க்கும் சமூகக் காரணிகளுக்கும் சேர்த்து மருந்துண்டாலன்றி முழுதாக ஒழிக்க முடியாது.வரதட்சினையை மறைமுகமாக ஊக்குவிக்கும் சில சமூகக் காரணிகளாக நான் கருதுவது.

1) உள்ளூரில்,ஒரேதெருவில்/முஹல்லாவில் மட்டுமே திருமண உறவு .

2) குடும்பம் மாறி திருமண உறவில்லை என்ற குலப்பெருமை,

3) ஆயிரங்களில் இருந்த வீட்டுமனைகளின் விலையை அரைகோடியாக உயர்த்திய நிலத்தரகர்கள்.

4) சம்பாதிக்கும் மாப்பிள்ளைக்கே வரன் கொடுப்போம் என்ற அவநம்பிக்கை கலந்த எதிர்பார்ப்பு.

இதுபோல் பல்வேறு காரணிகளுடன் பின்னிப்பிணைந்துள்ள சமூகத்திலிருந்து வரதட்சினையை மட்டும் விரட்டலாம் என்பது இடியாப்பத்தை பிரித்துச் சாப்பிடுவதற்குச் சமம்.

- ஜாஃபர் 

Wednesday, May 29, 2013

அதிரை கணினிகளை வேட்டையாடும் புதுவகை வைரஸ்: உஷார்!!!


வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று அதிரை இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
இது முன்பு வந்த 'Win32/Ramnit' என்ற வைரஸின் புதிய அவதாரமாக உள்ளது என்று இந்திய இணையவெளியில் மேற்கொள்ளப்படும் திருட்டுகளைக் கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response TeamIndia (CERTIn)) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வைரஸ் தான் நுழைந்த கணினிகளில் உள்ள EXE, dll அல்லது html ஆகிய பைல்களைக் கண்டறிந்து அவற்றை இயக்கும் முதல் நடவடிக்கைக்குத் தேவையான குறியீடுகளை மாற்றி அமைக்கிறது.
பின்னர், இணையச் செயல்பாட்டில் உள்ள புரோடோகால் எனப்படும் வழிமுறைகள், வங்கிக் கணக்குகளுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்கள் ஆகியவற்றைத் திருடுகிறது.
கணினி  இணைத்துச் செயல்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ் போன்ற சாதனங்களையும் இது விட்டுவைப்பதில்லை. கணனியில் உள்ள பிரவுசர் செட்டிங்ஸ் மற்றும் டவுண்லோட் செட்டிங்ஸ் ஆகியவற்றையும் மாற்றி அமைக்கிறது.
இந்த வைரஸ் தன்னை, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலிருந்து முழுவதுமாக மறைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கணினிகளைப் பயன்படுத்தும் இமெயில் சேவையை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. கணனியில் இணைத்து எடுத்துச் செயல்படுத்தும் அனைத்து சாதனங்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதில் உள்ள பைல்கள் அனைத்தையும் ரீசைக்கிள் பின்னில் காப்பி செய்கிறது.
அத்தகைய சாதனங்களில் autorun.inf என்னும் பைலை அமைக்கிறது. தான் தங்கிய கணினி ில் உள்ள EXE, dll அல்லது html பைல்களில் தான் அமைத்துள்ள குறியீடுகளை இணைத்து அவற்றைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது.
இதன் மூலம், கணினி இணைக்கப்பட்டுள்ள சர்வர்கள் மற்றும் இணையவெளியில் தொடர்பு கொள்ளும் அனைத்து சிஸ்டங்களின் இயக்கங்களும் இதன் கட்டுப்பாட்டில் வருகின்றன.
இதனால், இவற்றின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிறது. இவற்றைத் தடுக்க CERTIn குழு, கீழ்க்காணும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டுள்ளது.
நமக்குத் தெரியாத நபர்களிடமிருந்து வரும் இமெயில்களில் உள்ள இணைப்புகளை டவுண்லோட் செய்திடக் கூடாது. அவற்றைத் திறந்து பார்க்கவும் கூடாது.
நம்பிக்கையானவர்கள் மற்றும் நமக்குத் தெரிந்தவர்களிடம் இருந்து திடீரென வரும் இணைப்புகளையும் நம்பக் கூடாது. தேவையற்ற இணைய தளங்களுக்கான லிங்க் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றில் கிளிக் செய்திடக் கூடாது.
டெஸ்க்டாப் கணினிளில் பயர்வால் அமைப்பினை ஏற்படுத்தி இயக்க வேண்டும். நமக்குத் தேவைப்படாத, அறிமுகம் இல்லாத போர்ட்களை செயல் இழக்கச் செய்திட வேண்டும்.
இதற்க்கு அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர்களின் கணினியும் விதி விலக்கல்ல....,

அதிரை AFFA அணி அபார வெற்றி


மேலநத்தம் கால்பந்து கழகம் நடத்தி வரும் கால்பந்து போட்டியில் நமதூர் AFFA அணி கலந்து கொண்டு விளையாடி வருகிறது.அதன் படி இன்று மாலை நடந்த முதல் லீக் போட்டியில் மன்னார்குடி அணியை எதிர்கொண்டு 2-0 என்கின்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.இப்போட்டியில் AFFA அணி வீரர்கள் முபிஸ் மற்றும் சபாவுதீன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 

குறிப்பு:இன்று இளயாங்குடியில்  தஞ்சை அணிக்காக விளையாட இருந்த AFFA அணியின் வீரர்கள் இன்று AFFA அணிக்கு போட்டி இருந்ததால் மாற்று வீரர்கள் தஞ்சை அணிக்காக விளையாட சென்று உள்ளனர்.   

தகவல்:AFFA செய்தி தொடர்பாளர்  ஜுபைர் 

துலுக்காப் பள்ளி மீன் மார்கெட் ஏல அறிவிப்பு

அதிரை தக்வா பள்ளிக்கு சொந்தமான பெரிய கடைத்தெரு மீன் மார்க்கெட் ஏல  அறிவிப்புகள் நாளிதழ் மற்றும் பள்ளிவாசல் அறிவிப்பு பலகையிலும் நிர்வாகம் சார்பாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

துலுக்காப் பள்ளி ட்ரஸ்ட் பெரிய மார்கெட் ஏல அறிவிப்பு 
இடம் :தக்வா பள்ளி வாசல் 
நாள்: 1-06-13 சனிக்கிழமை 

1.மீன் ஏலம் சம்மாட்டி மூலம் ரூ 100க்கு - 1.5 % கமிஷன் 

2.இறால் ஏலம் சம்மாட்டி மூலம் ரூ 100க்கு - 1.5 % கமிஷன் ரூ 

3.மீன் விற்பனை மேஜை 1 க்கு (ஆண் /பெண் )- 15 ரூ 

4.மீன் கொண்டு வரும் வேன்,மற்றும் கோழி கொண்டு வரும் வேன் 1 க்கு  ரூ 20-/

5.மீன்  வாங்க வரும் நபர் (சைக்கள் பைக்) 1 க்கு ரூ10-/ 

6.அங்காடி வைப்பவர்கள் நபர் 1 க்கு ரூ 15-/

7.மீன் கூடை பாத்திரம் வாங்கி செல்லும் நபர் 1க்கு ரூ 10-/

8.பள்ளிவாசல் மின் புறம் விற்பனை செய்யும் நாட்டுக்கோழி பல வண்டி கறி பொரியல் வண்டி நபர் 1 க்கு ரூ 20-/

9.சூப் விற்பனை நபர் 1 க்கு ரூ 10-/

ஏலம் எடுப்பவர்கள் மேற்கண்ட படி வசூல் செய்து கொள்ளவும் -
ஏல நிபந்தனைகள் 

ஏல கோருபவர்கள் உரிய டேவணித் தொகை 5.000 ரொக்கமாக செலுத்தி ஏலம்  கேட்க வேண்டும்.

உயர்ந்த ஏல கேள்வி கேட்பவர்க்கே ஏலம் உறுதி செய்யப்படும். 

ஏலம்  மன்ற அங்கீகாரத்திற்கு உட்பட்டது. 

ஏலம் முடிந்ததும் ஏல தொகை ஆறு மாத  தொகையை முழுவதையும் ரொக்கமாய செலுத்தி ரசீது பெற்று கொள்ளவும் 

குத்தகை பாக்கி உள்ளவர்கள் ஏலம் கேட்க அனுமதிக்கப் படமாட்டர்கள்

அறிவிக்கப்பட்ட ஏலங்களை ஏலம் ஆரம்பிக்கும் முன்போ நடக்கும் போதோ எந்த நிலையிலும் நிறுத்தி வைக்கவோ ஒத்தி வைக்கவோ ரத்து செய்து விடவோ செயலாளருக்கு உரிமை உண்டு.

ஏல காலம் முடிந்ததும் ஏல இனங்கள் துலுக்கா பள்ளிவாசல் கமிட்டிக்கு ஒப்படைத்தது  ஆகிவிடும்(01-06-2013 முதல் 01-05-2014)  ஏல  காலம்  1 வருடம். 

இப்படிக்கு 
செயலாளர் 
துலுக்கா பள்ளி டிரஸ்ட் 
அதிரை 

அதிரையில் நடைபெற்ற நபிவழி திருமணம் ( புகைப்படங்கள் )


அதிரை கடற்கரை தெருவை சார்ந்த மணபெண்னுக்கும் கும்பகோணம் நாச்சியார் கோவிலை சேர்ந்த மணமகனுக்கும் 26.05.13 அன்று நபிவழிப்படி திருமணம் நடைபெற்றது


இதில் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்து மார்க்க பிரச்சாரம் செய்தார்கள். இதில் திரளான தவ்ஹீத் சொந்தங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ் !!!


தகவல் : அதிரை TNTJ

தஞ்சை அணிக்காக விளையாடும் அதிரை AFFA அணி வீரர்கள்

சம்சுல்  ஹக் ஸ்டார் முஸ்லிம் கால்பந்து கழகம் நடத்தும் மாவட்டம் தழுவிய கால்பந்து போட்டி  இளையாங்குடியில் நடைபெற்று வருகிறது.இதற்க்கான  முதல் பரிசு 25,000 மற்றும் இரண்டாம் பரிசு 15,000 இதில் தஞ்சாவூர் மாவட்டத்திற்காக தஞ்சை கால்பந்து கழகம் என்ற பெயரில் அதிரை AFFA அணியின் 7 வீரரும் பட்டுக்கோட்டை அணியின்  4 வீரரும் பங்கு பெற்று கடந்த (25/05/2013) சனிக்கிழமை அன்று காரைக்குடி கால்பந்து கழகம் அணியினருடன் விளையாடி 2 கோல் அடித்து தஞ்சை அணி வெற்றி பெற்றுள்ளது.இதில் பட்டுக்கோட்டை சேர்ந்த சேது 1 கோலும் அதிரை AFFA அணியை சேர்ந்த ராஜிக் அஹமது 1 கோலும் அடித்து அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றனர்.
தஞசை கால்பந்து கழகம் அணி வீரர்கள் விபரம் பின் வருமாறு: :
1.முஃபிஸ் (AFFA)
2.ராஜிக் அஹமது(AFFA)
3.சபாவுதீன்(AFFA)
4.சலாவுதீன்(AFFA)
5.அஷார்(AFFA)
6.ஆசிப்(AFFA)
7.சம்சுல்  ஹக்(AFFA)
8.காமராஜ்(PKT)
9.அருள்(PKT)
10.சேது(PKT)
11.சரண்(PKT)
அடுத்து கால்இறுதி ஆட்டமாக இன்று  (29/05/2013) புதன்கிழமை அன்று சம்சுல்  ஹக் ஸ்டார் முஸ்லிம் கால்பந்து கழகம் அணியினருடன் விளையாட உள்ளார்கள் என்பதனை கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு அறிய தருகிறோம்.

மரண அறிவிப்புபழைய போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்த மர்ஹூம் சுலைமான் ராவுத்தர் அவர்களின் மகனும்,  சேக்தாவூது, முஹம்மது யூசுப், இஸ்மாயில், முஹம்மது ரவுப், சுலைமான் ஆகியோரின் தகப்பனாருமாகிய S.S.M.புஹாரி அவர்கள் இன்று ( 29-05-2013 ) அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஷர்  தொழுகைக்கு பின் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

.தகவல்: பைசல் 

மரண அறிவிப்பு (முஹம்மது முஸ்தஃபா-ஆஸ்பத்திரி தெரு)

அஸ்ஸலாமு அலைக்கும். 

நமதூர் (அதிரை) ஆஸ்பத்திரி தெருவைச் சார்ந்த மர்ஹும் சி.அஸனா மரைக்காயர் அவர்களின் மகனும், ஹாஜா அலாவுதீன், அஹமது இப்ராஹிம் ஆகியோரின் சகோதரரும், அமானுல்லாஹ், அஷ்ரப் அலி, அபூபக்கர் மற்றும் ஜமாலுதீன் (அதிரைக்காரன்) ஆகியோரின் தாய்மாமாவுமாகிய "இளஞ்சிங்கம்" முஹம்மது முஸ்தஃபா (இந்தியன் ரெஸ்டாரன்ட்-மாலத்தீவு) அவர்கள் நேற்று 28-05-2013 (செவ்வாய் கிழமை) மாலை 5:00 மணியளவில் புதுக்கோட்டையில் வஃபாத் ஆகி விட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.குறிப்பு: அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் விபரம் பிறகு அறிவிக்கப்படும்.

மர்ஹூம் முஹம்மது முஸ்தஃபா அவர்களின் மறுமை வாழ்வை இலேசாக்கி வைக்க அவர்களின் ஹக்கில் அல்லாஹ்விடம் துஆ செய்யும்படி குடும்பத்தினர் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

21:35. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
21:35   كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۗ وَنَبْلُوكُم بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً  ۖ وَإِلَيْنَا تُرْجَعُونَ

Tuesday, May 28, 2013

அதிரை பள்ளிகள் திறப்பு ஒருவார காலம் ஒத்தி வைப்பு

தமிழகத்தில் ஜூன் 3-ந் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் கோடை வெயிலின் தாக்கம் தொடர்வதால் ஒருவாரம் கழித்து வரும் 10-ந் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறைந்து போய்விடவில்லை.  இந்நிலையில் இன்று தமிழக பள்ளிக் கல்வித் துறையும் பள்ளிகள் திறப்பை ஒருவார காலம் ஒத்தி வைத்துள்ளது. 

செக்கடிப் பள்ளியில் மார்க்க சிறப்பு சொற்பொழிவு பயான்!!

அதிரை செக்கடி பள்ளியில் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக நடந்து வரும் மார்க்க சிறப்பு சொற்பொழிவு (பயான்) இன்று மாலை 5.00 மணிக்கு தொடங்கி  இரவு 8:30 மணிவரை நடைபெற்றது. இந்த மார்க்க சிறப்பு சொற்பொழிவிற்கு பெண்களுக்காக தனி இடம் (ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில்) ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மார்க்க சிறப்பு சொற்பொழிவில்  1500 க்கும் மேற்பட்ட ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். 

மேலும் இந்த நிகழ்ச்சிக்கான நேரலைஏற்பாடுகளை நமது அதிரை எக்ஸ்பிரஸ் குழுவினர்,  SIS முகம்மது, மற்றும் சேக்கனா நிஜாம் ஆகியோர் மிக சிறப்பாக செய்து இருந்தனர்.

சவூதி புதிய வேலைவாய்ப்புச் சட்டம் - கால நீட்டிப்பு சாத்தியமில்லை:தொழிலாளர் அமைச்சர்!


ரியாத்: சவூதி அரேபியாவின் புதிய வேலைவாய்ப்புச் சட்டம் (நிதாகத்) காலக்கெடுவை நீட்டிக்கும் சாத்தியம் இல்லை என்று அந்நாட்டு தொழிலாளர் அமைச்சர் ஆதில் ஃபக்கி தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் அந்நாட்டினருக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக, புதிய அதிரடி சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி, அந்நாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு மக்கள் 10 சதவீதம் பேரை கட்டாயம் தங்களுடைய நிறுவனத்தில் பணி அமர்த்த வேண்டும். இதனால் தற்போது சவுதி அரேபிய நிறுவனங்களில் பணியாற்றிவரும் லட்சக்கணக்கான இந்தியர்கள், மற்றும் பிற நாட்டினர் பணியிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  அவர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள்(ஜூலை 3 க்குள்) நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் இந்த மூன்று மாத கால அவகாசத்தை நீட்டிக்கும் வாய்ப்பு உள்ளதாக வதந்திகள் பரப்படுவதாக சவூதி தொழிலாளர் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த வதந்தியை நம்பி பலர் அவரவர்களின் துதரகத்டையோ அல்லது தொழிலாளர் மற்றும் குடியிருப்பு அலுவலகங்களையோ அணுகாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே இந்த குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் வெளிநாட்டினர் அவரவர்களின் பிரச்சனைகளை சரி செய்யப் படவில்லையென்றால் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அனைவரும் கடும் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.நேர்மையாக பேசு: ஒரு வார காலத்திற்க்குள் CMP Line வடிகால் சுத்தமாகும்! ( நேர்காணல் )

அதிரை பேரூராட்சி தலைவரின் சின்ன சிங்கப்பூர் கனவு? தடை போடும் CMP லேன்! என்ற தலைப்பில் கடந்த 22-05-2013 அன்று நமது தளத்தில் புகைப்பட ஆதாரங்களுடன் செய்தியாக வெளியிட்டுயிருந்தோம். அதனை பார்த்த பலரும் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட வார்டு உறுப்பினரிடம் நேர்காணல் நடத்தி அதனை தங்களது இணையத்தில் பதிய வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தனர். அதனை ஏற்று நமது பதிவாளர்கள் சம்மந்தப்பட்ட வார்டு உறுப்பினரை நேரில் சந்தித்து இது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கேள்விகளை கேட்டரிந்தோம்.


அப்பொழுது CMP Line வடிகாலில் உள்ள காடுகள் மற்றும் குப்பைகளை ஒரு வார காலத்திற்குள் ( 26-05-2013 முதல் ) சுத்தம் செய்து தருவதாக நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார்கள். சொன்னதை செய்வார்களா....? என்பதை பொறுத்தியிருந்து பார்ப்போம்.

குறிப்பு: இந்த வீடியோவில் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக 26-05-2013 என்ற தேதி சரியாக தெரியவில்லை.

மரண அறிவிப்பு [முஹம்மது அலியார் சார் அவர்களின் மனைவி ]

கீழத்தெரு பாட்டன் வீட்டைச்  சேர்ந்த மர்ஹூம் முஹம்மது ஹனீபா அவர்களின் மகளும், சாகுல் ஹமீத் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் சிங்கப்பூர் முஹம்மது அலி வாத்தியார் அவர்களின் மருமகளும், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் முஹம்மது அலியார் அவர்களின் மனைவியுமாகிய ஷஹுபானத்துல் பஜ்ரியா அவர்கள் இன்று( 28-05-2013)  வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் பெரிய  ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இனிப்பான பொருள் பற்றிய கசப்பான தகவல்!

ங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), '(உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும்படி) பரிந்துரை(யாவது) செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் (நற்)கூலி கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ், தான் (அவருக்குக் கொடுக்க) நாடியதை, தன் தூதருடைய (என்னுடைய) நாவினால் நிறைவேற்றித் தருவான்'' எனக் கூறினார்கள். - புஹாரி

தகவல்:
Kaja Magdoom.
Annamalai University, Parangi Pettai