பிறையால் பிளவுபடலாமா சமுதாயம்?

நேரங்களைக் கணிக்கவும், துல்லியமாக அறியவும் பல வசதிகளும் கருவிகளும் வந்துவிட்டன.1400 வருடங்களுக்கு முன்பு இவற்றை தோரயமாகக் கணிப்பதற்கு சூரியனும்,சந்திரனும் மட்டுமே கருவிகளாக இருந்தன. அதற்கு முன்பும் இவற்றின் அடிப்படையில்தான் காலம் கணிக்கப்பட்டது. இஸ்லாத்தைப் பொருத்தவரை காலக் கணிப்பு வழிபாட்டுடன் தொடர்புடையது. இதனடிப்படையாக சந்திரனின் தேய்வு/வளர்ச்சி நிலைகள் இருந்து வருகின்றன.சந்திரனின்/பிறையின் அடிப்படையிலான கணிப்பீட்டில் மட்டுமல்லாமல் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் துருவங்களையும் துல்லியமாகக் கணித்து,அவற்றுக்குப் பெயரிட்ட பெருமைக்குரியவர்கள் முஸ்லிம்கள்.
 
நபி (ஸல்) அவர்கள் காலம் தொட்டு முஸ்லிம்களின் வழிபாட்டிற்கு அடிப்படையாக இருக்கும் நேரக் கணிப்பீட்டில் பெருமளவில் குழப்பங்கள் எழுந்ததாக அறியமுடியவில்லை.அவ்வாறு ஏற்பட்டிருந்தாலும் அதை குர்ஆன்-ஹதீஸ்களின் அடிப்படையில் நம்முன்னோர்களின் அறிவுக்கெட்டியபடி தீர்வு கண்டிருப்பார்கள். 14 நூற்றாண்டுகளாக முஸ்லிம்களின் இருபெரும் பண்டிகைகளில் குறிப்பாக நோன்புப் பிறைகாணும் விசயத்தில் இத்தகைய குழப்பங்கள் எழுந்திருந்தாலும், மார்க்க ரீதியான தீர்வுகளை முஸ்லிம் உலகம் கண்டு, அவற்றையும் வெற்றிகரமாகக் கடந்தே வந்துள்ளது.
 
ஆனால், சமீப ஆண்டுகளாக பிறை விசயத்தில் முஸ்லிம் அறிஞர்களிடையே இருவகைப்பட்ட விளக்கங்கள் இருந்த நிலைமாறி கடந்த சிலவருடங்களுக்குமுன் மூன்று தரப்பினராகப் பிரிந்தனர்.ஒரே அல்லாஹ். ஒரே குர்ஆன், ஒரே சமுதாயத்திற்கு பிறைமட்டும் மூன்றா? என பிறமதத்தவர்கள் கேலிசெய்யும் அளவுக்கு பிறை காண்பது குறித்த நிலை சங்கடத்தை ஏற்படுத்தியது. உள்நோக்கமின்றி மூன்று தரப்பினருமே மார்க்க ரீதியான தீர்வாகவே தம்நிலைப்பாட்டைச் சொன்னாலும் இவற்றில் எதுசரி? யார் சொல்வது பொருத்தமானது என்று சீர்தூக்கியறிந்து செயல்படுத்தும் அளவுக்கு முஸ்லிம்களிடம் ஒத்தகருத்துடைய தலைமை இல்லை. இறுதிநாள்வரை அனைத்தும் தெளிவாக முன்னறிவிக்கப்பட்ட இயற்கை மார்க்கமான இஸ்லாத்தில், முஸ்லிம்களின் மகிழ்ச்சிக்குரியதும் நன்மைகளை வாரிவழங்கும் ரமழான் பிறை கணிப்பில் தெளிவில்லை என்பது வேதனைக்குரியது.
 
சாமான்ய முஸ்லிம்களுக்கு எதுசரி என்று சுயமாக அறியுமளவுக்கு மார்க்க புரிதலில் வேறுபாடுகள் நிலவுகிறது, நமது அறிவுக்கு எட்டிய வகையிலும் எதிர் தரப்பினரின் கருத்துகளைச் சாடாமலும் சுமூக கருத்துப் பரிமாற்றங்களின் மூலம் தெளிவுகாணும் முயற்சியாக கீழ்கண்ட கேள்விகளை முன்வைக்கிறோம். பிறைகுறித்த பல்வேறு கட்டுரைகள் இணைய தளங்களில் மலிந்து கிடக்கின்றன. அவற்றின் சுட்டிகளை மட்டும் கொடுக்காமல், அவற்றிலிருந்து உள்வாங்கி புரிந்து கொண்டதை அழகிய முறையில் விவாதமாக எடுத்து வைக்கலாம்.

 
1) பிறையைக் மனிதக் கண்களால் கண்டுதான் நோன்பு/பெருநாள் கடைபிடிப்பதே சரி.

2) சூரியனையும்,நிலவையும் காலங்களைக் கணிக்கும் அளவீடுகளாகப் படைத்திருப்பதாக அல்லாஹ் குர்ஆனில் கூறி  இருப்பதால் சூரியனின் அடிப்படையிலான காலக்கணிப்பும் சரியே.

3) முஸ்லிம்களுக்கென தனியாக அரசோ,ஆட்சியாளரோ இல்லாத நிலையில் வாழும் நாட்டின் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள காஜியின் அறிவிப்பை ஏற்று அதன்படி கடைபிடிப்பதே சரியாகும்.
 
ஆகிய மூன்று நிலைப்பாடுகளில் நீங்கள் எந்த வகையைச் சரியென நம்புகிறீர்கள்?உங்கள் தெளிவான,மென்மையான, பிறர் மனம் புண்படாத கருத்துகளை பின்னூட்டமாக இடலாம். மிகநீண்ட விளக்கமாக இருப்பின் முழுவிபரங்களுடன் தனிப்பதிவாகவும் அனுப்பி வைக்கலாம்.எவ்வகையிலும் நமக்குள் பிரிவினையை வளர்ப்பதாக அல்லது பிறரைச்சாடும் கருத்துகள் இல்லாமல்,தானறிந்ததை மற்றவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் அல்லது மற்றவர்களின் புரிதலின்மூலம் தம்முடையை மார்க்க ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாகக் கொண்டு பலருக்கும் பயனுள்ள வகையில் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாமே!
 
குறிப்பு: நம்சகோதரர்களிடையே ஆரோக்கியமான கருத்து பரிமாற்றத்தை ஊக்குவிப்பதும்,மார்க்க விசயத்தில் தெளிவு ஏற்படுத்த உதவுவதே இப்பதிவின் நோக்கம்.மேற்கண்ட வரம்புகளை மீறாத அனைத்து கருத்துகளும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும். இதில் எத்தகைய முன்முடிவும், சார்புநிலையும் இல்லை.

- ஜாஃபர் 

Post a Comment

பல கருத்துக்களைக் கொண்ட மார்க்க அறிஞர்கள் மற்றும் இஸ்லாமிய விஞ்ஞானிகள் கூடி நவீன கால தகவல் பரிமாற்று வசதியையும் அடிப்படையாக வைத்து தெளிவான முடிவுக்கு வரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

முந்தைய காலங்களில் தொழுகை நேரம் என்பது இன்று இருப்பதுபோல் குறிப்பிட்ட நிமிடத்தில் ஆரம்பமாகும் என்று துல்லியமாக கூறமுடியாத சூழ்நிலை இருந்தது.. தற்போது ஏற்பட்டுள்ள விஞ்ஞான வளர்ச்சியைக்கொண்டு கடிகாரங்களை வைத்து ஐந்து வேலை தொழுகை, சூரிய மறைவும்,உதயம் போன்றவை கணக்கிடப்படுகின்றது.. அதுபோல் பிறைக்கும் விஞ்ஞானத்தை நாடுவதில் தவறுண்டா? என்று எமக்குத்தெரியவில்லை.. பிறை தற்போது எந்த திசையில் இருக்கின்றது என்பதைக்கூட தற்போது செயற்கைக்கோல்மூலம் கண்டுபிடித்து வலைத்தளங்களில் வெளியாகின்றது..

எதுவாக இருப்பினும் ஒரு அமீரின் கூற்றை ஏற்கமாட்டேன் என்று அடித்துக்கொல்லும்வரை இதற்கு தீர்வில்லை என்றே தோன்றுகின்றது.. சவூதி அரேபியாவில் மூத்த மார்க்க அறிஞர் சொல்வதையே கடைப்பிடிப்பதால் இந்த பிளவுக்கு வாய்ப்பில்லாமல் சுமூகமாக இருக்கின்றது..

// 2) சூரியனையும்,நிலவையும் காலங்களைக் கணிக்கும் அளவீடுகளாகப் படைத்திருப்பதாக அல்லாஹ் குர்ஆனில் கூறி இருப்பதால் சூரியனின் அடிப்படையிலான காலக்கணிப்பும் சரியே.//

இதில் சூரியனின் அடிப்படையிலான என்பதற்கு பதில் சந்திரனின் அடிப்படையிலான என்று இருக்கவேண்டும்.


"அவன்தான் சூரியனை ஒளியுடையதாகவும், சந்திரனை ஒளியை பிரதிபலிப்பதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மையை கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான். (10:5)

சூரியனும் சந்திரனும் கணக்கின்படியே இருக்கின்றன. (55:5) "

கணிப்பீட்டின் முறையே சரி என்பதற்க்கான விபரங்கள் இங்கும் ஆராயப்படுகிறது.
http://www.mooncalendar.in


அப்துல் கபூர்.
துபை

ஆலிம்கள் மற்றும் மார்க்க அறிஞகர்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறார்கள் இவர்கள் எல்லாம் ஒன்று கூடி அரசாங்கம் சார்பாக காஜி என்று ஒருவரை நியமித்து இருக்கிறார்கள் அவர்களையும் அணுகி எந்த வித பிரச்சனைகளும் இல்லாமல் உங்களுடைய புனித மிக ரமலானை தொடங்குங்கள்.

ரமலானில் பிறையை பார்த்துதான் நோன்பு வைக்கணும் மற்றும் பிறையை பார்த்துதான் நோன்பை விடனும். ஒவ்வொரு ஊர்களிலும் கண்டிப்பாக பிறையை பார்க்க முயற்சி செய்கிறார்கள். ஒரு சில நேரத்தில் தென்படுவதில்லை மற்ற மற்ற ஊர்களில் பிறை தென்பட்டு செய்திகள் வந்தாலும் உடனே அரசாங்கத்தால் நியமிக்க பட்ட காஜிக்கு தெரிவிப்பார்கள். அதிலும் அந்த காஜி உடனே எல்லாம் ஒத்துக்கொள்ள மாட்டார் ஆலிம்களை கூப்பிட்டு மசூரா செய்த பிறகு தான் அவர் நோன்புக்கோ அல்லது பெருநாளைக்கோ ஒத்துக்கொள்வார். அல்லாஹ்வின் உதவியால் இந்த வருடமாவது எந்த வித குழப்பபும்,கூச்சலும் இல்லாமல் சரியான நாட்களில் நோன்பு பிடிப்பதற்கு இறைவன் அருள் புரிவானாகவும் ஆமீன்.

BROTHER MEERASHA RAFIA ....

நம் ஊரில் யாரை அமீராக தேர்ந்தெடுக்கலாம் சொல்லூங்க்கள். 20 நபர்கள் பட்டியல் இடுகிறேன்
அப்துல் லத்தீப் ஆலிம்
முகம்மது குட்டி ஆலிம்
ஹைதர் அலி ஆலிம்
அப்துல்லாஹ் ஆலிம்
யூசுப் மௌலானா
அதிரை த மு மு க தலைவர்
அதிரை தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்
இப்ராஹிம் மௌலானா
அப்துல் காதிர் ஆலிம்
ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர்
மற்றும் அனைத்து தெறு சங்க தலைவர்கள்
அதிரை பேறுராட்சி தலைவர்
அதிரை Popular front of INdia and SDPI தலைவர்
உங்களுக்கு தெரிந்த மற்ற தலைவர்கள்
மேற்ச்சொன்ன அனைவரும் கியாமத் நாள் வருவதற்குள் ஒன்று சேர்ந்து விட்டாலே அதுவே நம் சமுதாயத்துக்கு கிடைத்த வெற்றி - இந்த சூழ்னிலையில் யாருமா? எப்படிமா அமீர்? அல்லாஹ்தான் நம் அனைவரையும் ஒற்றுமையாக்கி வைத்து சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும்.

As an Islamic view , there should not be riven in our society. If there is any partition. it might be 2. But here in our community it is numerous; this is the non-sense we are. There is a bitter truth in Adirai is, in one family they are celebrating Eid 3 days. Father one day, Son one day and son in law one day. Which Amir they are following?. In a particular family they have 3 ….in the Street? In the Town? …Ya Allah pay your grace and pity to unite our society in one Amir who follows severely your command and the word of Prophet Sal.

சகோ. முஹம்மது அஷ்ரப் அவர்களின் கருத்து

இப்போது உள்ள எல்லா மார்கக அறிஞர்களும் ஏற்றுக்கொண்ட விசயத்தை முதலில் அமல்படுத்த முயற்சிப்போம் ஸஹர் பாங்கு நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சொன்னார்கள் என்று தெளிவான ஆதராங்கள் இருந்தும் அதை ஏன் சொல்ல மறுக்கிறார்கள்

இரவுத் தொழுகை 8+3 என்று இருந்தும் ஏன் பிடிவாதம் செய்கிறார்கள்

சூரியன் மறையும் நேரம் தெளிவாக தெரிந்த பின்பும் 5 நிமிடம் தாமதமாக ஏன் பாங்கு சொல்லுகிறார்கள்.

பிறையை பார்த்து நோன்பை முடிவு செய்வதே நபி வழி

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர்கள் கருத்துக்களில் தனி நபர் பெயர் சாடலோ அல்லது பதிவுக்கு தொடர்பில்லாத வாசகங்களோ இருப்பின் அவ்வகை கருத்துக்கள் நீக்கம் செய்யப் படும்.

ஆரோக்கியமாக கருத்துறுவாக்கம் ஏற்படுத்தவே இந்தப் பதிவு.

பதிவுக்கு நன்றி.

அமைதியோடும், பொறுமையோடும், ஒற்றுமையோடும் செயல் படுவோம்.

இப்படிக்கு.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

Assalamu Alaikkum

Dear brothers and sisters,

All of the brothers' and sisters' wish and suggestions are good. But there is a personal ego, and there is a group ego. Those egos will not allow to become united(Each and every individual and group are thinking that they are right and others wrong - mis-match-in-understanding).

So, it seems impossible to make united community not only in moon sight but each and every possibilities of unity, peace and harmony.

Brothers and sisters..., lets ponder about how can we relieve from the egos for the sake of Allah to make peace and harmony among us.

Thanks and best regards

B. Ahamed Ameen from Dubai

www.dubaibuyer.blogspot.com

அ . எ. நிர்வாகத்திற்கு பதிவிற்கு தொடர்பில்லாத கருத்துக்கள் நீக்கப்படுவது சரியே .......ஆனால் பதிவிற்கு தொடர்பான சில கருத்துக்களும் நீக்கபடுகின்றனவே அது ஏன் ?


006:096 குர்ஆன் வசனத்தின்படி, "அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக்கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆகவே, மனிதர்களுக்கு எப்போதெல்லாம் காலக்கணக்கை அறியவேண்டிய அவசியம் ஏற்படுகிறதோ அப்போது எல்லாம் சந்திரனையும், சூரியனையும் அளவீடாகக் கொள்ளலாம் என்றே நம்புகிறேன்.

//அ . எ. நிர்வாகத்திற்கு பதிவிற்கு தொடர்பில்லாத கருத்துக்கள் நீக்கப்படுவது சரியே .......ஆனால் பதிவிற்கு தொடர்பான சில கருத்துக்களும் நீக்கபடுகின்றனவே அது ஏன் ? //

சகோ. அபூபக்கர் அவர்கள் கூறுவதுபோல் பதிவிற்கு தொடர்பான நாகரீகமான அவச்சொல் இல்லாத எந்த பின்னூட்டமும் நீக்கப் படுவதில்லை.

தனி நபர் தாக்குதல் அல்லது பிறரை/அமைப்பினரை எல்லை மீறி தாக்கும் பட்சத்தில் பதிவிற்கு தொடர்பிருந்தாலும் அவ்வகை பின்னூட்டங்கள் நீக்கப் படுகிறது.

கீழ்கணட ஹதீஸ்கள் அனைத்தையும் முஸ்லீம் சமுதாயம் பேனுமேயானால் ஒரு குழப்பமும் ஏற்படாது. இன்ஷாஅல்லாஹ். ஆனால் துரதிஷ்ட வசமாக மார்கத்தில் இஸ்லாமிய சமுதாய்த்தினர் பெரும்பான்மையோர் ஆய்வு செய்வதில்லை. அதுதான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணமாகி விடுகிறது.

அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1909

மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1907

பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1906

நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ

பயனுள்ள தகவல்களின் விளக்கம் (ஹதீஸ்)மக்களால் முறையாக ஏற்றுக் கொள்ளப் படவில்லையா? அல்லது விளக்கப் படவில்லையா? இந்த ஹதீஸின் படி பார்த்தால் நோன்பு பிடிப்பதற்கு மட்டுமே என்றால் பெருநாள குழப்பம் தொடர்வதாகவே உள்ளது.

அப்படியே பார்த்தாலும் பிறையை காணா பட்சத்தில் ஒரு நாள் தாமதித்து நோன்போ அல்லது பெருநாளோ கொண்டாடலாம் ஆனால் பிடிவாதமாக இரண்டு நாள் தாமதித்து பெருநாள் கொண்டாடிய வரலாறும் உள்ளதே. எந்த ஹதீஸின் அடிப்படையில் என்று விளக்க முடியுமா? இந்தக் கேள்வி விவாதத்திற்காக அல்ல விளக்கம் பெறவே.

உலக நாடுகள் அனைத்தும் சவூதி அரேபியாவின் அறிவிப்பை வைத்துத்தான் நோன்பு பிடிக்கிறார்கள். ஆனால் வெறும் இரண்டரை மணிநேர இடைவெளி மட்டுமே உள்ள இந்தியாவில் சவூதியை பின்பற்றுவதில் என்ன தவறு உள்ளது? அவர்களும் மேற்கூறப் பட்ட ஹதீஸ்களை பின்பற்றித்தானே நடைமுறை படுத்துவார்கள்.

சகோதரர் ஜாஃபர் ஹசன் அவர்களே, இந்த விளக்கம் தெளிவாகவே உள்ளது. பெருநாள குழப்பம் ஒன்றும் இல்லை. ஹதீஸில் மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1906. என்ப்து நோன்பு பிடிப்பதற்கும், பெருநாளை கொண்டாடுவதற்கும் என்று தெளிவாகவே குறிப்பிடுகிறது

ஓர் ஊரில் பிறை பார்த்தால்,வெகு தொலைவில்
உள்ளவர்களுக்கு அது பொருந்தாது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த)
குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் (ஒரு வேலை நிமித்தம்) என்னை ஷாம் (சிரியா) நாட்டிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் ஷாம் சென்று அவரது தேவையை நிறைவுசெய்தேன். நான் ஷாமில் இருந்தபோது ரமளான் (முதல்)பிறை எனக்குத் தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவில் நான் பிறையைக் கண்டேன்.
பிறகு அந்த (ரமளான்) மாதத்தின் இறுதியில் நான் மதீனா வந்துசேர்ந்தேன்.

அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் (பயணம் குறித்து) என்னிடம் விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தும் பேசினார்கள். அப்போது "நீங்கள் (ஷாமில்) எப்போது பிறை பார்த்தீர்கள்?" என்று கேட்டார்கள். நான், "நாங்கள் வெள்ளியன்று பிறை கண்டோம்" என்று பதிலளித்தேன். அவர்கள், "நீயே அதைக் கண்டாயா?" என்று கேட்டார்கள். நான், "ஆம் (நானும் கண்டேன்). மக்களும் அதைக் கண்டார்கள். மக்களும் நோன்பு நோற்றனர். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு நோற்றார்கள்" என்று கூறினேன்.

அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், "ஆனால், நாங்கள் சனிக்கிழமை இரவுதான் (முதல்) பிறை கண்டோம். எனவே, நாங்கள் (ரமளான் மாதத்தின்) எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமையாக்கும் வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறையைப் பார்க்கும்வரை நோன்பு நோற்றுக்கொண்டேயிருப்போம்" என்று சொன்னார்கள்.

அதற்கு நான், "முஆவியா (ரலி) அவர்கள் (முதல்பிறை) கண்டு, நோன்பு நோற்றது உங்களுக்குப் போதாதா?" என்று கேட்டேன். அதற்கு, "இல்லை. இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்" என்று பதிலளித்தார்கள்.

ஆதாரம் ஸஹீஹுல் முஸ்லிம் 1983.

TNTJ யின் பிறை நிலைப்பாடு பற்றி அறிந்துகொள்ள
பிறை பார்பதே நபி வழி
http://www.adiraitntj.com/2013/07/blog-post_4.html

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget