ஸ்ரீ லங்காவில் உள்ள பள்ளிவாசலை திறந்து வைத்த அதிரை ஆலிம்

இலங்கை காத்தான்குடி டீன் வீதியில் அமைந்து இருக்கும் மஸ்ஜிதுஸ் ஸகீனத் பள்ளிவாசல் புதுப்பித்து  சென்ற வாரம் செவ்வாய்கிழமை அன்று நமது ஊரை சேர்ந்தவரும் இலங்கை காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரி முதல்வருமான  செய்குல் பலாஹ் M .A அப்துல்லாஹ் ரஹ்மானி அவர்களால்  திறந்து வைக்கப்பட்டது.  மேலும் இந்நிகழ்ச்சியில் சவூதி அரேபிய நிதாஉல் கைர் அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அபூ ஸாலிஹ் ஹாலித் அத்தாவூத், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்  உள்ளிட்ட சவூதி அரேபிய அறிஞர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் , காத்தான்குடி நகர சபைத் எஸ்.எச்.எம்.அஸ்பர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் மற்றும் உலமாக்கள் முக்கியஸ்தர்கள்,பொதுமக்கள் என   பலரும் கலந்து கொண்டனர்.

Share:

அதிரை சுதந்திர போராட்ட தியாகி அவர்களின் மகன் அவர்கள் மரணம்

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் தியாகி சி.சு. முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மகனாரும்  பரோஸ்கான்  என்கிற ஹல்லாஜி,அப்துல் ஹமீது,அன்சாரி,அப்துல் கபூர் ஆகியோரின் சகோதரரும்   சேட் என்கிற S.அகமது இப்ராஹீம் அவர்களின் தகப்பனாரும் சி.மு.முகம்மது நூர்தீன்,J.ரியாஸ்கான் ஆகியோரின் மாமனாருமாகிய I.சுலைமான்   அவர்கள் இன்று [ 31-08-2013 ] காலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம்  செய்யபடும்

நல்லடக்கம் நேரம் குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப் படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.


நன்றி : அதிரை நியூஸ்
Share:

கட்டுமஸ்தான உடலமைப்பை பெற விரும்புகிறீர்களா?


பெண்கள் பொதுவாக அழகை மேம்படுத்த பல அழகு சாதனங்களைப் பயன்படுத்தி தோற்றத்தை மெருகேற்றுவர். ஆனால் ஆண்கள் தங்கள் அழகை வெளிக்காட்ட, உடல் கட்டமைப்பை மெருகேற்ற எண்ணுவார்கள். அதையே தான் பெண்களும் ஆண்களிடம் விரும்புகிறார்கள். அதனால் ஆண்கள் சல்மான் கான் போல், உடம்பை ஏற்ற மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிடுகிறார்கள். நல்ல உடல்கட்டு வேண்டும் என்று எண்ணுபவர்கள் எப்போதும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டால் மட்டும் போதாது. 

உடல் கட்டமைப்பில் உண்ணும் உணவும் முக்கிய இடம் பிடிக்கிறது. ஆகவே போதிய உடற்பயிற்சியுடன், சரியான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் அவசியம். உடற்பயிற்சிக்கு ஈடாக ஆரோக்கியமான உணவும் உடல் கட்டமைப்பை மெருகேற்ற உதவுகிறது. இப்போது அழகான உடல் கட்டமைப்பைப் பெறுவதற்கு எந்த உணவுகளையெல்லாம் சாப்பிட வேண்டுமென்று பார்ப்போம்.
ஓட்ஸ் கஞ்சி:
ஓட்ஸ் கஞ்சியில் அதிக நார்ச்சத்து உள்ளதால், உடலில் உள்ள கொழுப்பு மற்றும் டைப்-2 சர்க்கரை நோயை குறைக்கும். மேலும் இது உடம்பில் உட்சேர்க்கைக்குரிய (anabolic) செய்முறையை அதிகரித்து, சிதைமாற்றம் (catabolism) மற்றும் கொழுப்பு தேங்குதலை குறைக்கிறது.
மோர்:
மோர், புரதச்சத்து அதிகமுள்ள பானமாகும். உடற்பயிற்சி செய்த பின் மோரை குடித்தால், உடலானது புரதச்சத்தை உடனே உறிஞ்சிக் கொள்ளும். இதனால் அதிகப்படியான புரதச்சத்தை பெறலாம். மேலும் கெட்டியான மோர் அல்லது தண்ணீர் கலந்த மோரை பருகினால், உடம்பின் ஆற்றல் அதிகரிக்கும்.
முட்டை:
உடல் கட்டமைப்பை ஏற்ற நினைப்பவர்கள் கண்டிப்பாக முட்டைகளை சாப்பிட வேண்டும். இதில் வைட்டமின் ஏ, டி, ஈ, கோலைன், நல்ல கொழுப்பு மற்றும் புரதச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
பாலாடைக்கட்டி:
உடல் கட்டமைப்பை ஏற்ற விரும்புபவர்களுக்கு பாலாடைக்கட்டி ஒரு வரப்பிரசாதமே. இதில் பால் மற்றும் மோரின் புரதம் அதிக அளவில் உள்ளது.
வேர்க்கடலை:
வெண்ணெய் புரதச்சத்து, வைட்டமின்கள், மக்னீசியம், நார்ச்சத்து, போலேட் (folate) மற்றும் அர்ஜினைன் (arginine) போன்றவை நிறைந்தது தான் நிலக்கடலை வெண்ணெய். இதை அளவாக எடுத்துக் கொண்டால், இதய தசைகளை மேம்படுத்தி, கொழுப்பை குறைக்க உதவும்.
நண்டு:
நண்டு, எலும்பின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். இதில் ஜிங்க் மற்றும் தேவையான ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் நிறைந்துள்ளதால், இது தசைக்கு பலத்தையும், உடலில் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
கடல் சிப்பிகள்:
கடல் சிப்பிகளில், உடலுக்கு தேவையான கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இது பாலுணர்வூட்டியாகவும் விளங்குகிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
வாழைப்பழம்:
உடலை ஏற்றுபவர்கள் பலரும் அதிகப்படியாக சாப்பிடுவது வாழைப்பழத்தை தான். இதில் ட்ரிப்டோபைன் நிறைந்திருப்பதால், இது செரோடோனின் உற்பத்திக்கு உறுதுணையாக இருந்து, நரம்புகளை சாந்தப்படுத்தும். மேலும் இதில் உணவு கட்டுப்பாட்டுக்கு உறுதுணையாக நிற்கும் மக்னீசியம் மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால், எலும்பின் ஆரோக்கியத்திற்கு பக்க பலமாக இருக்கும்.
மிளகாய்:
உணவில் மிளகாய் சேர்ப்பதனால், உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதை இது தடுக்கும். மிளகாயில் பீட்டா கரோட்டீன்கள் நிறைந்திருப்பதால், அவை உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்.
சர்க்கரைவள்ளி:
கிழங்கு சர்க்கரைவள்ளி கிழங்குகளில் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்து உள்ளது. இதிலுள்ள சர்க்கரை ஆக்கத்திறன் மற்றும் தாங்கு திறனை அதிகரிக்க செய்யும்.
அத்திப்பழம்:
இரும்பு போல உடலை வளர்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும். அத்திப்பழத்தில் தேவையான கனிமச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், உடலில் உள்ள அமிலம் மற்றும் காரத்தின் (Alkali) அளவை சமநிலையோடு வைத்துக் கொள்ளலாம்.
இறைச்சி:
ஆட்டு இறைச்சியில் அதிகமான அளவில் விலங்கின புரதம் இருக்கிறது. மேலும் இதில் அர்ஜினைன் (arginine) மற்றும் அமினோ அமிலங்கள் அடங்கியிருப்பதால், தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
பருப்பு வகைகள்:
சரியான உடல் கட்டமைப்பு வேண்டுமானால், பருப்பு வகைகளை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் வளமையான புரதச்சத்து, அதிமுக்கிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளதால், தசைகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்...

நன்றி, 
அயூப் கான் 

தகவல் : கவியென்பன்  கலாம் காதிர் 
Share:

முறிவுஇந்த யூட்யூப் இணைப்பில் என் இக்கவிதை இலண்டன் வானொலியில் ஒலிபரப்பானதன் பதிவைக் கேட்டு மகிழலாம்.

http://youtu.be/bRh5gXtfm3U?t=43m10sமணமுறிவு ஏற்படுதற் காரணம்
....மனமுறிவு உண்டாதல் ஆகுமே
குணமறிந்து விட்டுக்கொ டுத்தலே
...குடும்பத்தில் இன்பத்தை வளர்க்குமே
பணம்பறிக்கும் எண்ணமெலாம் இல்லறம்
...பாழ்பட்டுப் போவதற்கு அறிகுறி
உணர்வறிந்தப் பாலியலில் இன்பமே
...உதட்டளவில் பழகுவதால் துன்பமே!


இணைகோடு இணையாது போயினும்
....இணைபிரியா உறவுகளில் இரயிலின்
இணைசேரா தண்டவாளம் மீதினில்
...இரயிலும்தான் செல்லுதலைப் போலவே
துணையோடு ஒத்துபோகும் நீயுமே
....துன்பமிலாப் பயணத்தில் வெல்லுக
வீணையோடு இணைகின்ற பாடலும்
....வெற்றியான தாம்பத்யம் போலவே!


முதலாளி தொழிலாளி உறவினில்
......முறிவும்தான் ஏற்படுதற் காரணம்
முதலில்நீ ஒப்பந்த நிபந்தனை
...முறித்துவிட்டு விருப்பம்போல் நடப்பதே
உதவாத காரணங்கள் சொல்லியே
..ஒதுங்குகின்றாய்ப் பணிநேர கடமையில்
அதனாலே உங்கட்குள் முறிவுகள்
....அனுதினமும் வருவதையும் காண்பீரே!


சந்தேகம் கொண்டாலே நட்பினில்
...சந்தோசம் முறிந்துவிடும் விரைவுடன்
உந்தேகம் அவன்தேகம் வேறுதான்
....உயிருக்குள் உயிராகப் பழகினால்
உந்தேசம் அவன்தேசம் மாறியும்
...உள்ளன்பில் வென்றிடுவாய் யாரையும்
வந்தாரை வாழவைக்கும் தமிழகம்
...வண்டமிழ்போல் போற்றுவது நட்பையே!
Share:

அதிரை எக்ஸ்பிரஸிலிருந்து ஓய்வு பெறும் நிருபர்கள்! புதிய நிருபர்கள் தேர்வு வெளியீடு!


அதிரை எக்ஸ்பிரஸில் சிறப்பாக தன் பணியை செய்து வந்த Z.முகம்மது சாலிஹ் மற்றும் S.ஃபைஜல் ஆகியோர் இன்று முதல் தற்காலிகமாக தங்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றனர் என்பதனை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். அதுசமயம் இவர்களுக்கு அளிக்கப்பட்ட AX பதிவர்க்கான அனுமதி அடுத்த ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. மேலும் இவர்கள் விட்டு சென்ற பணிகளை நமது புதிய நிருபர்களான முஜீப், நூருல் ( அதிரை பிறை ) மற்றும் அபுல்ஹசன் ஆகியோர் மேற்க்கொள்வார்கள்.

இவர்களின் பதிவர்க்கான அனுமதி நமது அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாக குழுவின் பரிந்துரையை ஏற்று தலைமை நிர்வாகி முபீன் அவர்களால் அளிக்கப்பட்டுள்ளது. புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிருபர்கள் தங்களின் கடமை உணர்ந்து சமுதாய பொறுப்புடன் தங்கள் இனிய பணிகளை மேற்க்கொள்ள வேண்டும் என்பதனை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாக குழு.
Share:

மரண அறிவிப்பு

பெரிய நெசவு தெருவை சேர்ந்த  மர்ஹூம் அஹமது ஜலாலுதீன் அவர்களின்  மனைவியும், காதிர் முகைதீன், அஜ்மல்கான், ஹபீபுல்லாஹ் ஆகியோரின் தாயாருமான ஜெய்புனிஷா அவர்கள்  இன்று    30-08-2013  காலை  வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று  மாலை 5 மணியளவில் மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மறுமை வாழ்விற்காக துஆ செய்வோமாக
Share:

மரண அறிவிப்பு (ரெஜினா ஸ்டோர் நூர்தீன் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

புதுக்குடி நெசவு தெருவைச் சார்ந்த மர்ஹூம் சேக் நூர்தீன் அவர்களின் பேரனும்,மர்ஹூம் முகம்மது யூசுப் அவர்களின் மகனாரும், அக்பர் அலி அவர்களின் சகோதரரும்,முகம்மது அஸ்லம்,அபுல் ஹசன் ஆகியோரின் தகப்பனாரும் முஜாஹிதீன் அவர்களின் மாமனாரும்,முகம்மது அலி,நெய்னா முகம்மது ஹாஜா,நெய்னா முகம்மது, அப்துல் முத்தலீஃப், அப்துல் முனாப்,முகம்மது காசீம் நூர் முகம்மது ஆகியோரின் மச்சானுமாகிய  ரெஜினா ஸ்டோர் உரிமையாளர் நூர்தீன் ஜவஹர் அவர்கள் இன்று [30/08/2013]காலை M.S.M. நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா  நல்லடக்கம் குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப்படும். 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.


நன்றி அதிரை நியூஸ்
Share:

தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் மருத்துவ உதவி

அதிரை  சேது ரோட்டை  சேர்ந்த ஏழ்மை நிலையில் உள்ள சகோதரின் அறுவை சிகிச்சைக்காக ரூ 4000 அதிரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வழங்கப்பட்டது

Share:

மரணப் படுக்கையில் இந்திய பொருளாதாரம்?

 கடந்த சில நாட்களாக இந்திய பொருளாதரத்தில் வராலாறு காணாத வீழ்ச்சியை இந்திய பொருளாதார சந்தை சந்தித்து வருகிறது இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சந்தோசப்பட்டாலும் ஊரில் விலை வாசி  விண்ணை தொடும் அளவில் உள்ளது.

குறிப்பாக வெங்காயம் இல்லாத சமையலே இல்லை எனாலாம் ஆனால் இந்த வெங்காயத்தின் விலையை கேட்டாலே தலை சுற்றி விடும் அந்த அளவிற்கு அனைத்து சமையல் பொருகளின் விலை உயர்ந்துள்ளது.

இதனை கேலி செய்யும் விதமாக சமிபத்தில் முகநூலில் பகிரப்பட்ட ஒரு காணொளியை இங்கே பதிவது சிறந்ததாகும்.இப்படியே போனால் இது போன்று தலைப்பிட்டு ஊடகங்களில் செய்திகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை....

வெங்காயத்துடன் வந்திறங்கிய வெளிநாட்டு பயணி!
ஏர்போர்ட்டில் பரபரப்பு!! 
Share:

மரண அறிவிப்பு - (புதுமனைத் தெரு ஜுலைஹா அம்மாள்)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் இப்ராஹீம்(மிலிட்டரி) மர்ஹூம் அஷ்ரப் சம்சுத்தீன் ஆகியோரின் தாயாரும் மர்ஹூம் அப்துல் குத்தூஸ் மற்றும் சாலிம் ரஸ்ஸாத், அபூபக்கர் ஆகியோரின் மாமியாருமாகிய ஜுலைஹா அம்மாள் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் நல்லடக்கம் குறித்த தகவல் பின்பு அறிவிக்கப் படும்.

அன்னாரது மறுமை வாழ்விற்காக துஆ செய்வோமாக..
Share:

அதிரையை குளிர்வித்த திடீர் மழை!

மழையை பார்த்து பல நாட்களாகிவிட்ட அதிரை மக்களுக்கு நேற்றைய திடீர் மழை சிறிது ஆறுதலைத் தந்தது.

கடந்த சில நாட்களாக மழையை எதிர் பார்த்து ஏமாந்த அதிரையர்களை அடிக்கடி மேக மூட்டம் வந்து ஏமாற்றிச் சென்றதுதான் மிச்சம். இந்த நிலையில் நேற்றைய மழையாள் அதிரையில் குளிர்ச்சியை உணர முடிந்தது.

மேலும் நடுத்தெரு, புதுமனைத்தெரு,சி.எம்.பி.லேன் உள்ளிட்ட பகுதிகளில்  கார்பரேஷன் தண்ணீர் பொய்த்தபோதெல்லாம் போர் தண்ணீர் உதவி வந்த வேளையில் நிலத்தடி நீர் இல்லாமல் பலர் அவதியுற்றனர். நேற்றைய மழையால் சிறிது நிலத்தடி நீர் வரத்து இருக்க வாய்ப்புள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.

 
Share:

அதிரை மாணவர்கள் மாவட்ட அளவில் சாதனை!


அதிரை காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மாவட்ட அளவில் நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியில் சாதனை படைத்துள்ளனர். தஞ்சையில் நடந்த போட்டியில் வெற்றிபெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றி விவரம்:

ஒற்றையர் பிரிவில் +2 மாணவர் ஜமருத்தீன் (புகைப்படத்தில் ஊதா நிறம் சட்டை அணிந்திருப்பவர்) சாம்பியன் பட்டம் வென்றார்.

இரட்டையர் பிரிவில் ஜமருத்தீன் மற்றும் அப்துல்லாஹ்(சாம்பல் நிற சட்டை அணிந்திருப்பவர்) சாம்பியன் பட்டம் வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் வாழ்த்துகிறோம்.


Share:

அதிரை ஹஜ் பயணிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு!

இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் புனித பயணிகளுக்கு இன்ஷா அல்லாஹ் வருகின்ற 01,02,03-09-13 ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்பு பயிர்ச்சி முகாம் நடுத்தெருவில் உள்ள அப்துல் லத்தீப் ஆலிம்சா அவர்கள் இல்லத்தில் மாலை அஸர்  தொழுகைக்குப்பின் மஃரிப் வரையில் நடைபெற உள்ளது.

எனவே இந்த அறிய சந்தர்ப்பத்தை  அனைவரும் பயன் படுத்தி இறைவனுக்கு பொருத்தமான ஹஜ் பயணம் அமைந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .


தகவல்:M .F .முஹம்மது சலீம்
Share:

சென்னை - தஞ்சைக்கு 1–ந்தேதி முதல் புதிய விரைவு ரெயில் பழனிமாணிக்கம் எம்.பி. தகவல்

சென்னையில் இருந்து தஞ்சைக்கு வருகிற 1–ந் தேதி முதல் புதிய விரைவு ரெயில் இயக்கப்படும் என எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. கூறினார்.

புதிய விரைவு ரெயில்

கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் மலைக்கோட்டை விரைவு ரெயில் திருச்சியில் இருந்து இயக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்தது. அதற்கு ஏற்ப சென்னை எழும்பூரில் இருந்து கும்பகோணத்திற்கு செல்லும் 16177 என்ற எண்ணுடைய மலைக்கோட்டை விரைவு ரெயிலில் தற்போது 30–ந் தேதி வரை முன்பதிவு செய்யப்படும் என்றும், கும்பகோணத்தில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் 16178 என்ற எண்ணுடைய மலைக்கோட்டை விரைவு ரெயிலில் 31–ந் தேதி வரை முன்பதிவு செய்யப்படும் என்றும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதனால் தஞ்சையில் இருந்து சென்னைக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் புதிய விரைவு ரெயில் இயக்கப்படும் என்று அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி வருகிற 1–ந் தேதி முதல் தஞ்சையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து தஞ்சைக்கும் புதிய ரெயில் இயக்கப்படும் எனறு ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

பிரகதீஸ்வரர் எக்ஸ்பிரஸ்?

இதுகுறித்து தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் நிருபர்களிடம் கூறியதாவது:–

தஞ்சையில் இருந்து சென்னைக்கு புதிய ரெயில் இயக்க வேண்டும் என்பது தஞ்சை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும், தேவையுமாகும். அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 1–ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல் இரவு 8.25 மணிக்கு தஞ்சையில் இருந்து சென்னைக்கு புதிய விரைவு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே வாரியம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. இதற்கான தொடக்க விழா மிக எளிமையாக தஞ்சை ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளது.

அதே நாளில் சென்னையில் இருந்து தஞ்சைக்கு இரவு 11.30 மணிக்கு புதிய விரைவு ரெயில் இயக்கப்படுகிறது. பெரியகோவில் ஆயிரம் ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் இந்த புதிய ரெயிலுக்கு பிரகதீஸ்வரர் விரைவு ரெயில் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தஞ்சைக்கு பொருத்தமான பெயரை புதிய ரெயிலுக்கு சூட்டுவதாக ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. அதுவரை தஞ்சை–சென்னை விரைவு ரெயில் என்றே அழைக்கப்படும்

முன்னதாக புறப்பட நடவடிக்கை

தஞ்சையில் இருந்து புறப்படும் இந்த ரெயில் கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு அதிகாலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் சென்றடையும். சென்னையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 10.30 மணி முதல் 11 மணிக்குள் புறப்பட வேண்டும் என்று ரெயில்வே வாரியத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் இரட்டை ரெயில்பாதை பணி முடிந்தவுடன் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


நன்றி : தினத் தந்தி


Share:

அதிரை மின் வாரியத்தின் தொடர் அலட்சியம்!


இப்புகைப் படத்தில் உள்ள பகுதி அதிரை புதுமனைத் தெருவிலிருந்து சி.எம்.பி லேனுக்கு செல்லும் வழி.

இங்கு உள்ள மின் விளக்குகள் பல நாட்களாக செயல்படவில்லை. இப்பகுதி மக்கள் புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

எனவே வார்டு உறுப்பினரும், மின்வாரியமும் துரித நடவடிக்கை எடுத்து இப்பகுதி இருளை போக்க வேண்டும் என்று மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

குறிப்பு: புகைப்படத்தில் இருக்கும் வெளிச்சம் புகைப்படம் எடுப்பதற்காக தற்காலிகமாக டார்ச் லைட் மூலம் வெளிச்சம் தரப்பட்டுள்ளதே தவிர இது மின் வாரியத்தின் தெரு விளக்கு வெளிச்சம் அல்ல

தகவல் ; உமர்
Share:

அதிரையில் ஆதார் அட்டை பதிவு தொடக்கம்!

அதிரையில் 'ஆதார் அட்டை' பதிவு  நேற்று முதல் தொடங்கியது.

மெயின் ரோட்டில் உள்ள ஒன்றாம் நம்பர் பள்ளியில் 'ஆதார் அட்டை' பதிவு நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது இது நாளை 28.08.2013 வரை தொடரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

எனவே அதிரை பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட மக்கள்,  ரேஷன் கார்டு, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை, பாஸ் போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆதாரத்துடன் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டப் படுகிறார்கள்.

Share:

மரண அறிவிப்பு (அஹமது அனஸ், மேலத்தெரு)


அஸ்ஸலாமு அலைக்கும்

மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் மஸ்தான் கனி அவர்களின் மகனும், மர்ஹூம் K.S.M. அப்துல் வஹாப், மர்ஹூம்  K.S.M. சேக்தாவூது,  K.S.M. பகுருதீன்,  K.S.M. புஹாரி ஆகியோரின் மருமகனும், S.M. ரபி முஹம்மது, S.M. முத்து  மரைக்கான், S.M. ஜலாலுதீன் ஆகியோரின் சகோதரரும், இப்ராஹிம்சா, ஜாபர் அலி ஆகியோரின் மைத்துனரும், ஜெஹபர் சாதிக் அவர்களின் தகப்பனாருமாகிய நாகூர் பிச்சை என்கிற அஹமது அனஸ் அவர்கள் நள்ளிரவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று [ 27-08-2013 ] காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.


நன்றி : அதிரை நியூஸ்
Share:

மதுக்கடைகளை அப்புறப் படுத்துக - அதிரையில் ஆர்ப்பாட்டம்!

அதிரை சேதுரோட்டில் உள்ள மதுக்கடைகளை அப்புறப் படுத்தக் கோரி  தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் ஆர்பாடடம் நடைபெற்றது.

இதில் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் AJ. ஜியாவுதீன், தலைமை கழக செயலாளர் A.K.N ஷாஜஹான், மாநில பொருளாளர் N.S.M. நஜ்முதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த ஆர்பாட்டத்தில் அதிரை பேரூராட்சித் தலைவர் எஸ்.ஹெச். அஸ்லம் மற்றும் அதிரை அன்வர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுபானக் கடைகளை அப்புறப்படுத்துதல், அதிரைப்பகுதியில் அடிக்கடி நிகழும் வாகன விபத்துகளை தடுக்கும் நோக்கில் சாலைகளின் பிராதானப் பகுதியில் வேகத்தடை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.
Share:

அதிரையில் இரு வேறு விபத்துகளில் கடற்கரை தெருவை சேர்ந்த 2 நபர்கள் படுகாயம்

அதிரை கடற்கரைத் தெருவை சேர்ந்த ஜஹாங்கீர் இன்று காலை முத்துப்பேட்டைக்கு செல்லும் போது பெட்ரோல் பங்க் அருகே எதிரே வந்த மினி வேன் மோதியதில் பலத்த படு காயம் அடைந்தார்.தற்போது இவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு விபத்து 

அதிரை  முத்தம்மாள் தெரு ஆர்ச் அருகில் எதிர் எதிரே வந்த இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் கடற்கரை தெருவை சேர்ந்த ஆஷிக் என்பவர்   பலத்த காயங்களுடன் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
Share:

Flash news அதிரையில் மினி வேன் பைக் விபத்து இருவர் காயம் - ஒருவர் கவலைக்கிடம்!

அதிரை சேது சாலையில்  பெட்ரோல் பேங்க் அருகில் முத்துப்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த மினி வேன் பைக் மோதியதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.

காயமடைந்தவர்கள் உடனடியாக அவசர ஊர்தி மூலம் தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளனர்.

வேன் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
தகவல்: அ.எ செய்தியாளர்: அபுல் ஹசன் 


Share:

ஹோட்டல் ஹவான் புதிய கிளை திறப்பு

அதிரை பிரபலமான அறுசுவை அசைவ உணவகமான ஹவான் ஹோட்டலின் புதிய கிளை ECR அதிரை தவ்ஹீத் பள்ளியின் அருகில் வெள்ளிகிழமை அன்று  சிறப்புடன் துவங்கப்பட்டது.ஹவான் ஹோட்டலில் காடை ,கோழி  மிக பிரபலம் .மேலும் இதனை சாப்பிடுவதற்காக மல்லிபட்டினம் ,புதுபட்டினம் ,முத்துபேட்டை போன்ற ஊர்களில் இருந்து மக்கள் வருவது குறிப்பிடத்தக்கது. 

 தகவல்:நமது செய்தியாளர் அதிரை பிறை நூருல் 
Share:

அதிரை வண்டிப்பேட்டை பள்ளியில் நாளை முகைதீன் ஜும்மாபள்ளி ஹல்கா மஸூரா


வண்டிப்பேட்டை பள்ளியில் நாளை(26-08-13) முகைதீன் ஜும்மா பள்ளி ஹல்கா கூட்டம் நடைப்பெற உள்ளது. நமதூர் ஆலடித்தெரு முகைதீன் ஜும்மா பள்ளி ஹல்காவிற்க்கு உட்பட்ட மக்தூம் பள்ளி, இஜாபா பள்ளி,வண்டிப்பேட்டை பள்ளி, மற்றும் இந்த ஹல்காவிற்க்குள் அடங்கிய சில  கிராமங்கள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு வண்டிப்பேட்டை பள்ளியில் நாளை காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணிவரை ஹல்கா கூட்டம் நடைப்பெற உள்ளது.அனைவரும் கலந்துக்கொண்டு பயன் அடையுமாறு கேட்டு கொள்ளபடுகிறது.

தகவல்:எமது செய்தியாளர் நூருல்   
Share:

அதிரை சாலைகளுக்கு ஒட்டு, ஆட்சியாளர்களுக்கு ஓட்டு, மக்களுக்கு வேட்டு!!!

அதிரையில் என்னேரமும் வாகனம் செல்லக்கூடிய மிக முக்கிய சாலையாக கருதப்படும் அதிரை மெயின் ரோடு மிகவும் பழுதடைந்து அரசால் கண்டுக்கொள்ளாத நிலையில் நாதியின்றி கிடக்கிறது .குண்டும் குழியுமான சாலையை கடந்து செல்வதற்க்கே மக்கள் மிகவும் அவதிபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இந்த சாலையை விரைவில் சீரமைப்பார்கள் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.ஆனால் நேற்று முதினம் இந்த சாலைகளில் குழியான பகுதிகளில் ஒட்டுப் (பேஜ் ஒர்க்) போடப்பட்டிருந்தது.இதற்க்கு குழியான சாலைகளே மேல் என்று நினைக்கும் அளவுக்கு வெறும் கடமைக்காக போட்டுள்ளனர்.வெறும் மூன்றே நாட்களில் ஜல்லிகலெல்லம் பெயர்ந்து வாகன ஓட்டிகளை மிகவும் சிரமப்பட வைத்துள்ளது.
  - அதிரை பிறை நூருல்
Share:

மதரசா கட்டிட வளாகத்தை தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்ட அதிரை PFI

அதிரை புதுமனை தெருவில் உள்ள உஸ்வதூற் ரசூல் மதரசதுன் நிஸ்வான் பெண்கள் அரபிக் கல்லூரியை தூய்மை படுத்தும் பணியில் பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அதிரை கிளையின் உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.  

www.facebook.com/sdpi.adiraiShare:

“சிறுகச் சிறுக செத்துப் பிழைத்தோம்!” ஒரு குடும்பத்தின் கண்ணீர்க் கதை

“சிறுகச் சிறுக செத்துப் பிழைத்தோம்!”ஒரு குடும்பத்தின் கண்ணீர்க் கதை

ம.கா.செந்தில்குமார்
படங்கள்: கே.ராஜசேகரன், சொ.பாலசுப்ரமணியன், பா.கார்த்திக்

வேலூர் அருகே சிறு கிராமத்தில் மகிழ்ச்சியாக வசித்தஏழைக் குடும்பம் ஒன்றை, 'அல்போர்ட் சிண்ட் ரோம்’ என்ற மரபுவழி சிறுநீரகக் குறைபாடு, சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு ஒண்டுக்குடித்தனத்தில் சுருட்டிப் போட்டுள்ளது!

வேலூர் மாவட்டம், அகரஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத்- ரெஜினா பேகம் தம்பதிக்கு... அஸ்லாம் பாஷா, அன்வர், யாசின் என்று மூன்று மகன்கள். மூன்று பேருமே 'அல் போர்ட் சிண்ட்ரோம்’ என்ற நோயால் சீறுநீரகக் குறைபாட்டுக்கு உள்ளாகியி ருக்கிறார்கள். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே மூவரும் பிழைக்க முடியும் என்கிற நிலையில், மூத்த மகன்கள் இருவருக்கும் அறுவை சிகிச்சையை பெரும்பாடுபட்டு முடித்துவிட்டார் அப்துல் மஜீத். இப்போது, கடைசி மகனின் சிறுநீரக சிகிச் சைக்காகக் காத்திருக்கிறார். மகன்கள் பிழைத்துக்கிடப்பதற்காக மட்டுமே ஒவ்வொரு நாளின், ஒவ்வொரு நிமிடத்தையும்  செலவழிக்கும் அப்துல் மஜீத், தங்கள் குடும்பத்தைப் பற்றிய சோகக்கதையைச் சொல்லத்  தொடங்கினார்.  

''கிராமத்தில் காய்கறி வியாபாரம் பார்த்தேன். சைக்கிள்ல சுத்திச் சுத்தி வித்தா... ஒரு நாளைக்கு சுமார் 300 ரூபா வரும். கஷ்ட ஜீவனம். ஆனாலும்,  பசங்களை நல்லபடியா படிக்கவெச்சேன். மூணு வருஷம் முன்னாடி திடீர்னு ரெண்டாவது பையன் அன்வ ருக்கு உடம்புக்கு சுகம் இல் லாமப்போச்சு. கைகால், முகம் எல்லாம் வீங்கிரும். ரத்த ரத்தமா வாந்தி எடுப்பான். அப்பப்போ மயங்கி விழுவான். 'வயித்துல உப்பு அதிகமாகிருச்சு. சென்னையில இருக்கிற பெரிய கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு அழைச் சுட்டுப் போங்க. பையனைக் காப்பாத்திடலாம்’னு சொன் னாங்க.

சென்னைக்கு அழைச்சுட்டு வந்தா, 'பையனுக்கு ரெண்டு கிட்னியும் செயல் இழந்திருச்சு. கிட்னி மாத்துனாதான் பிழைக்கவைக்க முடியும்’னு சொல்லிட்டாங்க. தொடர்ந்து ஆறு மாசம், வாரம் ரெண்டு தடவை டயாலிசிஸ் பண்ணோம். அப்புறம் என்னோட கிட்னியை எடுத்து அன்வருக்குப் பொருத்தினாங்க!'' என்று சட்டை யைத் தூக்கி, தான் அறுவைசிகிச்சை செய்துகொண்ட அடையாளத்தைக் காட்டிவிட்டுத் தொடர்கிறார்.

''அன்வருக்குச் சிகிச்சை செய்த  செலவைச் சமாளிக்கிறதுக்காக, மூத்தவன் திருப்பூர்ல வேலை பார்த்துட்டு இருந்தான். அன்வருக்கு கிட்னி பொருத்துன பிறகு, நம்ம குடும்பத்தைப் பிடிச்ச கஷ்டம் வில குச்சுனு நினைச்சு கொஞ்சம் நிம்மதி ஆனோம். ஆனா, அப்பத்தான் இடி மேல இடி விழுந்திச்சு!'' என்று அப்துல் நிறுத்த, அவருடைய மூத்த மகன் அஸ்லாம் பாஷா தொடர்கிறார்.

''தம்பியைப் பார்த்துட்டு வரலாம்னு திருப்பூர்லேர்ந்து சென் னைக்கு ரயில்ல வந்துட்டு இருந் தேன். ஆனா, சென்னைக்கு உயிரோட போய்ச் சேருவோமானு  நினைக்கிற மாதிரி, ரயில்ல என் நிலைமை ரொம்ப மோசமாயிருச்சு. பரிசோதிச்சுப் பார்த்தா, எனக்கும் அதே பிரச்னை. உடனே சிறுநீரகத்தை மாத்தணும்னு சொல்லிட்டாங்க. 'இது ஏதோ பரம்பரை வியாதி மாதிரி தெரியுது. எதுக்கும் உங்க தம்பியையும் பரிசோதிச்சுப் பார்த்துடலாம்’னு சொல்லி, யாசி னுக்கும் டெஸ்ட் பண்ணாங்க. அவனுக்கும் அதே பிரச்னை. அடி மேல அடி!  இன்னமே சொந்தக் கிராமத்துல குடியிருக்க முடியாதுனு முடிவு பண்ணி, செம்மஞ்சேரி சுனாமி குடி யிருப்புல ஆயிரம் ரூபா வாடகைக்கு குடிவந்தோம். ஆனா, அந்த வீட்டுக்கு வேஸ்ட்டா வாடகைக் கொடுத்துட்டு இருக் கோம். மொத்தக் குடும்பமும் ஆஸ்பத்திரியில தானே தங்கியிருக்கோம். எப்ப ஊருக்குப் போவோம்னு இப்போ வரைக்கும் தெரியவே இல்லை!'' என்று வெறுமையாகச் சிரிக்கும் அஸ்லாம், பி.ஏ., பொருளாதாரப் படிப்பில்  கல்லூரி அளவில் முதல் இடம் பிடித்தவர்.  

மகன்களின் துயரத்தைப் பகிர்ந்துகொண்டார் ரெஜினா பேகம். ''அஸ்லாமுக்கு என் கிட்னியை எடுத்துக்கங்கனு சொன்னேன். ஆனா, 'ஒரே குடும்பத்துல அப்பா, அம்மா ரெண்டு பேரும் சிறுநீரக தானம் செய்ய முடி யாது’னு சட்டமே இருக்காமே! அதனால அஸ்லாம், யாசின் ரெண்டு பேருக்கும் சிறு நீரக தானத்துக்காக பதிஞ்சுவெச்சுட்டு, டயாலிசிஸ் பண்ணிட்டே இருந்தோம். இந்த டயாலிசிஸ், மருந்து மாத்திரை செலவுகளுக்காக அவர் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சம் இல்லை. வாரத்துக்கு ரெண்டு தடவை டயா லிசிஸ் பண்ணணும். பெரியவனுக்கு ஒரு தடவை பண்ண 900 ரூபாய். சின்னவனுக்கு 1,770 ரூபாய். இது தவிர, ஒரு ஊசி 500 ரூபாய். எட்டு டயாலிசிஸுக்கு ஒரு தடவை மாத்துற கிட் 1,100 ரூபாய். மூணு மாசத்துக்கு ஒரு தடவை ரெண்டு யூனிட் ரத்தம்னு டயாலி சிஸுக்கே இதுவரைக்கும் ஏழெட்டு லட்சம் செலவாயிட்டு. அவ்வளவு செலவையும் பல பேரோட நிதி உதவி மூலமாத்தான் சமாளிச் சோம்!'' என்று நெகிழ்கிறார் ரெஜினா.

சென்ற மார்ச் மாதம் மூளைச் சாவுஅடைந்த குருசாமி என்பவரின் கிட்னியை அஸ்லாமுக்குப் பொருத்தியுள்ளார்கள். தற்போது யாசின் மட்டும் தனக்கான அறுவைசிகிச்சையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ''2010-ல இருந்து நானும் அண்ணனும் டயாலிசிஸ் பண்ணிட்டு இருக்கோம். அன்வருக்கு 46 டயாலிசிஸுக்கு அப்புறம் கிட்னி கிடைச்சிருச்சு. பெரிய அண்ணனுக்கு 250-ஐ தாண்டி ஓடுச்சு. எனக்கு வெற்றிகரமா 400 டயாலிசிஸ் தாண்டி ஓடிட்டு இருக்கு!'' என்று சொல்லும் யாசின், மேலும் தொடர்ந்தார்.

''கிட்னி தானம் கேட்டுப் பதிவுசெய்தவர் கள்ல  சீனியாரிட்டி அடிப்படையில் நான் தான் ஃபர்ஸ்ட். அதனால எப்பவோ எனக்கு சிறுநீரகம் கிடைச்சிருக்கும். ஆனா, திடீர்னு என்னை மஞ்சள் காமாலை தாக்கிட்டு.  எங்க குடும்பத்துல யாருக்குமே மஞ்சள் காமாலை வந்தது இல்லை. ஒரு தடவை தனியார் ஆஸ்பத்திரியில டயாலிசிஸ் பண்றப்ப, சரியா சுத்தம் பண்ணாத உபகரணங்களைப் பயன்படுத்தி இருக்காங்க. அதனால எனக்கு வைரஸ் கிருமி தொத்திட்டு. என் உடம்புல அந்தக் கிருமி பரவி 20 லட்சமா பெருகிடுச் சாம். அதனால, ஒவ்வொரு தடவை டயாலிசிஸ் பண்றப் பவும் அந்தக் கிருமிங்க அழியுறதுக்காக, ஒரு ஊசி போட்டுட்டு இருக்காங்க. அதோட விலை, வெளி மார்க்கெட்ல ஒரு லட்சம் ரூபாய். அந்தக் கிருமிங்களை ஒட்டுமொத்தமா அழிக்காம, சிறுநீரக மாற்று ஆபரேஷன் பண்றது வீண் வேலை. அந்தக் கிருமி மொத்தமா அழியறதுக்காகக் காத்துருக்கோம். எல்லா சங்க டத்தையும் சமாளிச்சுட்டேன். ஆனா, ஒரு நாளைக்கு 400 மில்லிக்கு மேல தண்ணி குடிக்கக் கூடாதுங்றதுதான் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. பால் 100 மில்லி, சாதத்துல 200 மில்லி, தண்ணீர் 100 மில்லி... இதுக்கு மேல என் உடம்புல தண்ணிச் சத்து சேரக் கூடாதாம். இந்த அளவுல, கொஞ்சம் அதிகரிச்சாலும்  மூச்சுத்திணறல் வந்துடும். மத்தவங்க தண்ணி குடிக்கிறதைப் பார்த்தா நான் வருத்தப்படுவேன்னு நினைச்சு, எங்க வீட்ல எல்லாரும் எனக்குத் தெரியாம மறைஞ்சு மறைஞ்சு தான் தண்ணி குடிக்கிறாங்க. இதுக்காகவே எனக்கு சீக்கிரம் ஆபரேஷன் நடந்தா நல்லா இருக்கும்னு தோணுது.

'இதுக்கான செலவை எல்லாம் எப்படிச் சமாளிக்கிறீங்க’னு கேட்கிறீங்களா? ஒவ்வொரு பள்ளிவாசலாப் போய், மருத்துவச் சான்றிதழ், எங்க ஊர் பள்ளிவாசல்ல கொடுத்த கடிதங்களைக் காட்டி உதவி கேட்போம். அவங்க எங்களை ஒவ்வொருவெள்ளிக் கிழமைக்கும் வரச் சொல்வாங்க. மைக்குல, 'விருப்பம் இருக்கிறவங்க இந்தக் குடும்பத்துக்கு உதவலாம்’னு அறிவிப்பாங்க. துண்டேந்தி நிப்போம். தொழுகை முடிச்சுட்டுப் போறவங்க, கையில இருக்கிறதைக் கொடுப்பாங்க. அந்தப் பணமும், நல்ல மனசுள்ள டாக்டர்களோட உதவியும், எங்க சமுதாய மக்களோட கருணையும்தான் எங்களை இப்போ வரைக்கும் காப்பாத்திட்டு இருக்கு!'' என்று முடிக்கிறார் யாசின்.

அறுவைசிகிச்சை முடிந்த மூத்த மகன்கள் இரண்டு பேரையும் தொடர் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்வது, சிறுநீரக தானம் தந்த இவரும் சோதனை செய்துகொள்வது, கடைசி மகன் யாசினை டயாலிசிஸுக்கு அழைத்துச் செல்வது என அப்துல் மஜீத்துக்கு உட்காரவே நேரம் இல்லை.

''ஊர்ல இருக்கிற வீட்டைத் திறந்து மூணு வருஷமாவுது. ஆதார் அடையாள அட்டை எடுக்க குடும்பத்தோட வர ணும்னு சொல்லியிருந்தாங்க. மூணு வருஷம் கழிச்சு எல்லாரும் போனோம். செடியும்கொடி யுமா பாழடைஞ்ச வீட்டைப் பார்த்துட்டு, பசங்க அழ ஆரம்பிச்சுட்டாங்க. விளையாடுன இடம், படிச்ச பள்ளிக்கூடம்னு அங்கே இங்கே உட்காரவெச்சுக் கூட்டிட்டு வந்தேன். இப்போ ரம்ஜானுக்காக ஊருக்குப் போகலாமானு கேட்டேன்.  'இன்னொரு தடவை அந்த வீட்டை அப்படிப் பார்க்குற தைரியம் எங்களுக்கு இல்லை வாப்பா’னு பசங்க சொல்லிட் டாங்க. இந்த வருஷ ரம்ஜானும் ஆஸ்பத்திரியிலதான் போச்சு. அடுத்த வருஷ ரம்ஜானையாச் சும் ஊர்ல கொண்டாடுவோம்னு நம்புறோம். இப்பெல்லாம் நம்பிக்கை மட்டும்தான் எங்களோட சொத்து!'' என்று மென்மையாகச் சிரிக்கிறார் அப்துல் மஜீத்.

அவருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் மௌனமாக விடைபெற்றேன்!

===============

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையின் சிறுநீரகயியல் துறைத் தலைவர், டாக்டர் என்.கோபாலகிருஷ்ணன், அப்துல் மஜீத் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்னையின் பின்னணியை விவரித்தார்...  
''சிறுநீரகச் செயலிழப்பில் இரண்டு வகை உண்டு. ஒன்று, அக்யூட் கிட்னி ஃபெயிலியர். இது, டயாலிசிஸ் மூலமே நாளடைவில் சரியாகிவிடும். அடுத்து க்ரானிக் கிட்னி ஃபெயிலியர். இதற்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைதான் ஒரே வழி. ஆனால், இவர்கள் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து டயாலிசிஸ் செய்தபடியும் ஆயுளைக் கழிக்கலாம். பொதுவாக உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், வலி நிவாரண மாத்தி ரைகளை அதிகம் உட்கொள்வது, சிறுநீர் பாதை யிலோ சிறுநீரகங்களிலோ கற்கள் உருவாவது போன்றவற்றால் பெரும்பாலும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். இதற்கு நம்முடைய உணவு முறை களும் பழக்கவழக்கங்களும் மாறிவிட்டதும் ஒரு காரணம். அல்போர்ட் சிண்ட்ரோம் எனும் தாய்வழி மரபணு மூலமாக வரும் சிறுநீரகக் குறைபாட்டால் தான் அப்துல் மஜீத்தின் மகன்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். செவித்திறன் குறைவும் பார்வைக் குறைபாடும் இதன் ஆரம்ப அறிகுறிகள். அதைத் தொடர்ந்து சிறுநீரகம் செயல் இழக்கத் தொடங்கும்.

இதுபோன்ற அறிகுறி  களோடு மட்டும்தான் க்ரானிக் கிட்னி ஃபெயி லியர் வரும் என்று சொல்ல முடியாது. அதனால், குறிப்பிட்ட இடைவெளியில் அனை வருமே மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது!''

நன்றி: விகடன்
Share:

முடங்கிக் கிடக்கும் பேருந்து நிலைய கட்டுமான பணி,அதிரை மக்களின் கனவு நிறைவேறுமா?

நமதூரின் பேருந்து நிலையத்தை சீரமைத்துத் தர வேண்டும்,வணிக வளாகம் அமைத்துத் தர வேண்டும் என்ற நமதூர் மக்களின் பல நாள் கோரிக்கை (கனவு) நிறைவேறும் வகையில் சென்ற ஆண்டு அதிரை பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம்
கட்டுவதற்க்கான பணிகள் துவங்கப்பட்டன.இச்செய்தியை அறிந்த நமதூர் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.ஆனால் அவர்களின் மகிழ்ச்சி வெகு நாட்கள் நீடிக்கவில்லை என்றே கூற வேண்டும்.வணிக வளாக கட்டுமான பணி மின்னல் வேகத்தில் நடைப்பெற்று வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக எந்த ஒரு பணியும் நடைப்பெறாமல் முடங்கியுள்ளது.வேலைகள் முடிந்து வியாபாரம் நடக்க வேண்டிய இந்த கட்டடம் தற்பொழுது எப்படி உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?.....கயவர்கள் இரவு சீட்டாடும் இடமாகவும்,மது அருந்தும் இடமாகவும் தான் தற்பொழுது இருந்து வருகிறது.இதற்க்கு என்ன தான் முடிவு? நமதூர் மக்களின் கனவு நனவாகுமா? பொருத்திருந்து பார்ப்போம்.  - அதிரை பிறை நூருல்
Share:

அதிரையில் TATA DOCOMO-வின் Super Offer!அதிரையில் தொலைதொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி விண்ணை தொடும் அளவிற்க்கு வளர்ந்து வருகிறது. அதனை ஊக்கப்படுத்தும் வகையில் தொலைதொடர்பு நிறுவனங்களும் பல சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது TATA DOCOMO நிறுவனம் அதிரடி சலுகைகளை அறிவித்துயுள்ளது அதன் விபரம் பின்வருமாறு.

லோக்கல் டாடா கால்கள் : 1p/6sec (10p/min)
மற்ற லோக்கல் மொபைல் கால்கள் : 1/2p/sec (30p/min)
இலவசம்! இலவசம்!! இலவசம்!!!
 தினமும் 60 நிமிட இரவு டாடா கால்கள் (11pm-6am 3 மாதங்களுக்கு)
+
தினமும் 100 SMS டாடா To டாடா ( 3 மாதங்களுக்கு )
+
200MB ஒவ்வொரு மாதமும் ( 3 மாதங்களுக்கு )
டாக்டைம்             சிம்
                                                             Rs.147                    Rs.100
இவை அனைத்தும் சில மணி நேரத்தில் ஆக்டிவேட் செய்து தரப்படும்... 

தொடர்புக்கு: 8122-84-81-63, 8148-3946-02
Share:

அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற [inspection] ஆண்டாய்வில் அசத்திய பள்ளி மாணவர்கள்!!!அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் தலைமையில் ஆண்டாய்வு [சோதனை]

நடத்தப்பட்டது. இதில் மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள்  கலந்துக்கொண்டு மாணவர் மத்தியில் பாடம் மற்றும் பொது அறிவு சம்மந்தமான பல கேள்விகளை கேட்டு மாணவர்களை சோதனை செய்தார்.எதைக் கண்டும் அசராத நமதூர் மாணவர்கள் அனைத்து கேள்விகளையும் அல்வா சாப்பிடுவது போல,மிகச்சரியாக பதிலளித்தனர்.இதனால் உற்ச்சாகம் அடைந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் மாணவர்களை பாராட்டிச்  சென்றார்.

இதற்கு முன்னதாக காதிர் முஹைதீன்  பள்ளியில் நடைபெற்ற இறை வழிபாட்டுக்கூட்டத்தில் சென்ற ஆண்டு சாதனை படைத்த மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் கவ்ரவம் செய்யப்பட்டது.

இந்த ஆண்டாய்வுச் சோதனை நமதூரின் அனைத்து பள்ளிகளிலும் நடைப்பெற்றது .

       - அதிரை பிறை நூருல்
Share:

பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!

பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!
பாவையை விட்டு வந்து
….பாலையின் சூட்டில் நொந்து
தேவையைக் கருத்திற் கொண்டு
…தேடினோம் செல்வம் இன்று
யாவையும் மறக்கும் நெஞ்சம்
..யாழிசை மழலை கொஞ்சும்
பூவையும் மிஞ்சும் பிள்ளை
..பிரிவினைத் தாங்க வில்லை!
விடையினைக் கொடுத்த நேரம்
…விலகியே நிற்கும் தூரம்
தடைகளாய்ப் போன தூக்கம்
..தவிப்பினில் நெஞ்சில் ஏக்கம்
மடையெனத் திறக்கும் கண்ணீர்
..மனத்தினில் கொதிக்கும் செந்நீர்
உடைந்திடும் இளமைக் கட்டும்
..உடையினில் வேடம் மட்டும்!

வாயினைக் கட்டிப் பூட்டி
…வயிற்றினைப் பசியால் வாட்டி
காயமும் தாங்கிக் கொண்டு
…கயிற்றினில் தொங்கிக் கொண்டு
தாயகத் தேவை ஆசை
..தீர்ப்பது எங்கள் காசே
மாயமாம் இந்த மோகம்
…மடியுமோ இந்த வேகம்?வாடிய பயிராய் வாழ்க்கை..
...வளமுள காசின் சேர்க்கை
தேடிய செல்வம் தீரும்
..தேவையோ நாளும் ஊறும்
 ஓடியே களைத்து மீண்டும்
...ஓடவே நம்மைத் தூண்டும்
ஓடிடும் விலையின் ஏற்றம்
..ஓட்டுமே ஊரை விட்டும்ஒட்டகம் போல நாங்கள்
  ஓய்விலாச்  சுமைகள் தாங்க
ஒட்டகம் மேயும் நாட்டில்
..உழைப்பதைச் சொன்னேன் பாட்டில்
பெட்டகம் நிறைய வில்லை
...பெரிதினும் பெரிதாய் இங்கே
கட்டிடம் கட்டும் வேலை
....கரணமும் விட்டால் மேலே!
ABUL KALAM BIN SHAICK ABDUL KADER"கவித்தீபம்”, “கவியன்பன்” கலாம்
அதிராம்பட்டினம்  பாடசாலை), 
அபுதபி               (தொழிற்சாலை)
வலைப்பூந் தோட்டம்
http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
http://gardenofpoem.blogspot.ae/ (For English poems only)

அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844/ 055 7956007
மின்னஞ்சல்kalaamkathir7@gmail.com , kalamkader2@gmail.com
skype: id: kalamkader3


Share: