அதிரையில் புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் ஆரம்பம்

அதிரை ஜாவியாவில் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற(06-10-13) ஞாயிறுகிழமை ஆரம்பம் செய்யப்படுகிறது. தினசரி காலை 6.00 மணிக்கு தொடங்கி மார்க்க அறிஞர்களின் பயானுடன் நிறைவுபெறும். அதிரை முஸ்லீம் பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு மஜ்லிஸை சிற‌ப்படைய செய்வதுடன் அல்லாஹ்வின் ரஹ்மத்தையும் பரக்கத்தையும் பெற்று பயன் அடைவோமாக.
Share:

அதிரை தமுமுக கூட்டு குர்பானி மாடு, ஒட்டக பங்கு விலை அறிவிப்பு

அதிரை தமுமுக சார்பாக வருகின்ற ஹஜ் பெருநாள் கூட்டு குர்பானி திட்டத்தினை நமதூர் இணையதளங்களில் சென்ற வாரம் அறிவிப்பு செய்தது. மேலும் தற்போது மாடு மற்றும் ஒட்டக பங்கிற்கான விலையை தற்போது வெளியிட்டு இருக்கிறது.
மாடு 1 பங்கின் விலை: ரூபாய்1100

ஒட்டகம் 1 பங்கின் விலை: ரூபாய் 9000

ஒட்டகம் கறி 1 கிலோ  450 ரூபாய்க்கு விற்பனைக்கும் கிடைக்கும்.


தொடர்புக்கு:9944424995,9942033233,9944997021,9944449848 Share:

அதிரை அருகே பள்ளி மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் -பொதுமக்கள் கட்டி வைத்து உதை

 பட்டுக்கோட்டை சேர்ந்தவர் சிலம்பு இவன்  நேற்று முன்தினம் அதிரை அருகே பரக்கலக்கோட்டை கிராமத்தில் உள்ள பாலத்தின் அருகில் மதியம் கோரை புற்களுக்குள் மறைந்து உட்கார்ந்திருந்தார். அப்போது சிலம்பு அந்த வழியாக வந்த  பள்ளி மாணவிகளை அழைத்து தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் சுதாரித்துக்கொண்டு தப்பி ஓடி பெற்றோர்களிடம்  கூறினார்கள். உடனே சம்பவ இடத்துக்கு வந்த மாணவிகளின் பெற்றோர்கள் சிலம்புவை அவன் மறைந்திருந்த இடத்தில் இருந்து சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவனை பரக்கலக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். பின்னர் இது குறித்து மதுக்கூர் போலீசாருக்கு தகவல் கொடுத்து அவரை கைது செய்தனர். 

மாணவிகள்  கவனத்திற்கு:பள்ளிகளுக்கு நடந்து செல்லும் மாணவிகளே நீங்கள் செல்லும் வழிகளில் அறிமுகம் இல்லாதவர்கள் அழைக்கும் போது சற்று கவனமுடன் இருந்து கொள்ளுங்கள்.  
Share:

அதிரை இஜாபா மஸ்ஜித் 4ஆம் ஆண்டு விழா (புகைப்படம்)

அதிரை சிஎம்பி லைன் இஜாபா மஸ்ஜித்தில் அப்துல் ஹாதி மௌலானா அவர்களால் சிறப்புடன் செயல்பட்டுவரும் மக்தப் மதரஸாவின் 4ஆம் ஆண்டு விழா இன்று மாலை 4.00 மணிக்கு துவங்கி சிறப்புடன் நடைபெற்றது.இதில் மக்தப் மாணவர்களின் ஹதிஸ்,கிராஅத்,போட்டிகள் நடைபெற்றது.மேலும் மும்பையில் இருந்து ஆல் -இந்திய மக்தப் கமிட்டியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.இறுதியாக போட்டிகளில் வெற்றி பெற்ற அணைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் அளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் 100 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த மக்தபில் 80 மேற்ப்பட்ட மாணவர்கள் மார்க்க கல்வி பயில்கிறார்கள் எனபது குறிப்பிடத்தக்கது.


தகவல் மற்றும் புகைப்படம் :நமது AX பங்களிப்பாளர் MKS. அப்துல் ரஹ்மான் 

Share:

மரண அறிவிப்பு (சென்னை தி நகர் மொய்தீன்)

சிஎம்பி லைனை  சேர்ந்த மர்ஹூம் நல்ல அபூபக்கர் அவர்களின் மகனும், மர்ஹூம் அபுல் ஹசன் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மருமகனும், பைசல் அஹமது, தெளபிக் அஹமது, அப்துர் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாரும், மர்ஹூம் ஹபீப் ரஹ்மதுல்லா, சேக் மதினா, ஹிதயதுல்லா ஆகியோரின் மைத்துனருமாகிய அல்ஹாஜ் மொய்தீன் அப்துல் காதர் அவர்கள் இன்று காலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்குபின் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

courtesy:adirainews
Share:

FLASH NEWS:அதிரை அருகே பஸ் - லாரி மோதல்


பட்டுகோட்டையிலுருந்து அதிரைக்கு  இன்று மதியம் 1:55 மணிக்கு சேண்டா கோட்டை வழியாக சென்று கொண்டு இருந்த  ASM தனியார் பேருந்தை பின்னால் வந்த லாரி மோதியதில் பேருந்தின் பின் பகுதி  சேதம் அடைந்தது .பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் இது குறித்து அதிரை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தகவல் & புகைப்படம் நமது AX செய்தியாளர் ஹசன் முராத் 
Share:

மரண அறிவிப்பு (பாத்திமா பீவி, சின்ன தைக்கால் தெரு)

அஸ்ஸலாமு அலைக்கும்

சின்ன தைக்கால் தெருவை சார்ந்த மர்ஹூம் கமால் பாட்சா அவர்களின் மாமியாரும், சரபுதீன், கமருதீன் ஆகியோரின் உம்மம்மாவுமாகிய பாத்திமா பீவி அவர்கள் இன்று  ( 29-09-2013) வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 10 மணியளவில் தக்வாப் பள்ளி மையவாடியில் நடைபெறுகிறது.

 அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
Share:

அதிரை எத்தீம்கானா மதரஸா கூட்டு குர்பானி விலை அறிவிப்பு

அதிரை A.J.எத்தீம்கானா மதரஸா சார்பாக ஹஜ் பெருநாள் கூட்டு குர்பானி விலை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது 
Share:

நல்லதொருகுடும்பம் - - - - கணவன் – மனைவி

  
குறிப்பு:- இந்த ஆக்கம் யாரையும் குறிப்பிட்டோ, அல்லது குத்திக் காட்டியோ எழுதப்பட்டது அல்ல, பொதுவாக மானிடர் வாழ்வில் நடக்கின்ற சம்பவங்களை பல நாட்களுக்கு மத்தியில் பல கோணங்களில் சிந்தித்து மற்றும் பெரும்பான்மையான குடும்பங்களை சந்தித்து தொகுக்கப்பட்ட ஒரு ஆக்கமாகும்.

மானிடவியலில் எத்தனை உறவுகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சுவாரஸ்யமானவை. அப்பா-உம்மம்மா, வாப்பா-உம்மா, காக்கா-தம்பி, ராத்தா-தங்கச்சி, மாமா-மாமி, மச்சான்-மச்சி, பெரியப்பா-சின்னவாப்பா, பெரியம்மா-சின்னம்மா, இன்னும் அநேக உறவு வட்டங்கள் நம் மத்தியில் வட்டமடித்துக் கொண்டு இருந்தாலும் அதையும் தாண்டி உள்ள ஒரு உன்னதமான உறவுதான் கணவன் மனைவி என்ற உறவு. இந்த கணவன் மனைவி உறவு சிலருக்கு சந்தோஷமாக அமைவதுண்டு, இன்னும் சிலருக்கு பாதிக்கு பாதி தேவலாம் என்றும், பலருக்கு ஏன்தான் இப்படி அமைந்ததோ என்றும் இருப்பதுண்டு. ஆக மொத்தத்தில் திருப்த்தி அடைவது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

இந்த உலகத்தில் சந்ததிகளை, குடும்பங்களை, மக்கள் செல்வங்களைப் பெருக்க இறைவனுக்கு இரண்டு பாத்திரங்கள் தேவை, அதில் ஒன்று ஆண், மற்றொன்று பெண், இதே போன்று தான் எல்லா ஜீவராசிகளுக்கும், இறைவன் தான் விரும்பியபடி ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் என்று ஜோடிகளை சேர்த்து வைக்கின்றான், ஆக மொத்தத்தில் கணவனுக்கு மனைவி அடிமை இல்லை, மனைவிக்கு கணவன் அடிமை இல்லை, இரண்டு பேரும் சரிசம உரிமைகளை பெற்றவர்கள். அப்படி சம உரிமைகளை மனைவி பெற்றிருந்தாலும் கணவனுக்கு கீழ்படிய கடமை பட்டவள், அப்படி கணவனுக்கு கீழ்ப்படிந்து நடந்தாலும் கணவன் மனைவிக்கு உண்மையாக நடந்து கொள்ள கடமைப்  பட்டவன், அதுபோல் மனைவியும் கணவனுக்கு உண்மையாக நடந்து கொள்ள கடமைப் பட்டவள், இந்த விஷயத்தில் ஒரு துளிகூட தடம் மாறாமல் இருக்க வேண்டிய பொறுப்பு கணவன் மனைவி இருவருக்கும் உண்டு.

பொதுவாக மனைவிமார்கள்(இல்லத்தரசிகள்) வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வதிலும், கணவன்மார்கள் பொருள் ஈட்டுவதற்காக வீட்டை விட்டு வெளியில் செல்வது வழக்கம், இதுதான் மரபும் கூட. கணவன்மார்கள் குடும்பத்தை பிரிந்து ஊர் எல்லைகளைக் கடந்தும், மாவட்ட எல்லைகளைக் கடந்தும், மாநில எல்லைகளைக் கடந்தும், பல தேசங்களையும் கடல்களையும் கடந்து பொருள் ஈட்டுவதற்காக சென்றுவிடுகின்றனர். உள்நாடுகளில் இருப்பவர்கள் சமயம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்தை பார்த்துவிட்டு போவது வழக்கம், வெளிநாட்டில் இருப்பவர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு முறையோ, இரண்டு வருடத்திற்கு ஒரு முறையோ, மூன்று வருடத்திற்கு ஒரு முறையோ குடும்பத்தை வந்து பார்த்து விட்டு மீண்டும் திரும்பிச் செல்வது வழக்கம், இன்னும் சிலர் குடும்பத்தோடு அங்கு இருப்பதும் உண்டு,  இன்னும் சிலர் இதையெல்லாம் கடந்து ஊருக்கே வராமல் உடம்பில் இருக்கின்ற பலம் குன்றும் அளவுக்கு, தலை முடியெல்லாம் வெழுத்து, பற்களெல்லாம் பழுதாகி, முகத்தோற்றம் உருமாறி, அடையாளம் சிதைந்து குழைந்து ஊர் வருவதும் உண்டு, இன்னும் சிலர் ஊர் வராமலேயே அப்படியே போய்விடுவதும் உண்டு, இதையும் கடந்து வேறு சிலர் தகாத உறவுகளோடு திருட்டுத்தனமாக வாழ்வதும் உண்டு, இப்படி பல சம்பவங்கள் இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

பெண்ணுக்கு சுதந்திரம் வீட்டில்தான், வெளியில் கிடையாது, பெண் ஏதேனும் வேலை விஷயமாக வெளியில் செல்வதாக இருந்தால் தகுந்த துணையோடு செல்ல வேண்டியது பெண்களின் கடமை, அதை கவனமாக பார்த்துக் கொள்வது கணவன், பெற்றோர்கள், உடன் பிறந்த சகோதரன், இருபது வயதை கடந்த மகன், தாய் மாமா, மாமியா மாமனார் இவர்களின் தலையாய கடமை. பெண் வெளியில் செல்லும் முன் கணவன், பெற்றோர்கள், உடன் பிறந்த சகோதரன், இருபது வயதை கடந்த மகன், தாய் மாமா, மாமியா மாமனார், இவர்களில் யார் அருகில் இருக்கின்றாரோ அவரிடத்தில் முறையாக அனுமதி பெறுவதோடு தகுந்த துணையோடு போகவேண்டும். என்ன வேலையாக போகின்றோம் எப்போ திரும்பி வருவோம் போன்ற விபரத்தையும் அந்த பெண் தர வேண்டும். பல வேளைகளில் பெண்கள் தகுந்த துணையோடு வெளியில் செல்லாததினால் ஜீரணிக்க முடியாத பல மோசமான சம்பவங்கள் நடந்து அனைவரையும் ஆழ்ந்த துக்கத்தில் கொண்டு போய் விடுகின்றது.

பெண்களே! நீங்கள் தேர்ந்து எடுக்கும் உடைகள் ஒரு ரூபாயோ அல்லது ஒரு கோடியோ அது முக்கியமல்ல மானத்தை பாதுகாக்கக்கூடியதாக, விலையில் சிக்கனமானதாக உள்ள உடையாக தேர்ந்து எடுக்க வேண்டும். ஆண்களே! நீங்கள், பெண்களை அவர்கள் இஷ்டத்துக்கு விட்டு விடாதீர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும், இதற்க்கு பெண்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இன்று எத்தனை பெண்கள் பெற்றோர்கள், குடும்பத்தார்கள் மற்றும் கணவர் சொல்படி நடந்து கொள்கின்றனர்? பெண்களே, மேலே சொல்லப்பட்டவைகளில் நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்கள் என்று நீங்களே உங்களை நன்கு ஆராய்ந்து பார்த்தது உண்டா?

பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் முறையாக நன்கு வளர்த்து பெரியவளாக்கி ஒருத்தனுக்கு மனைவியாக கொடுக்கின்றனர். கணவனாக வருகின்றவன் தன் மகளை நன்கு வாழவைப்பார், சந்தோஷமாக வைத்துக் கொள்வார், கண் கலங்க விடமாட்டார், எந்த சூழ்நிலையிலும் மனைவியாக வைத்து பாதுகாப்பார், இறுதிவரை(மரணம் சம்பவிக்கும்வரை) கணவன் மனைவியாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கையோடு அனுப்பி வைக்கின்றனர்.

ஒருத்தனுக்கு மனைவியாக போகும் அந்தப் பெண் ஒரு மெல்லிய கண்ணாடி பாத்திரத்தை (கிளாஸ்) போன்றவள், அந்த மெல்லிய கண்ணாடி பாத்திரத்தை (கிளாஸ்) நெருக்கி பிடித்தாலும் உடைந்துவிடும், அப்படி உடைந்துவிடும் என்று நினைத்து பிடியை தளர்த்தினாலும் கீழே விழுந்து உடைந்துவிடும், மனைவியும் அப்படித்தான்..  

தன்னை நம்பி வந்த மனைவியை அடிப்பதற்கோ, நொசுவனை செய்வதற்கோ, வாயில் வந்தபடி திட்டுவதற்கோ, மன நோக அடைவதற்கோ, மனைவிக்கு எதிராக நடப்பதற்கோ கணவனுக்கு ஒரு துளிகூட உரிமை கிடையாது, அதேபோல கணவனுக்கு எதிராக நடந்துகொள்ள மனைவிக்கும் ஒரு துளிகூட உரிமை கிடையாது. ஏதேனும் தவறுகள்  நடக்குமேயானால் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் முறையிட்டு சரி செய்து கொள்ளவேண்டும்.

குடுபத்தின் தேவைகளை மனைவி கணவனுக்கு தெரியப்படுத்துவது கட்டாய கடமைகளில் ஒன்று, அதை முறையாக ஆலோசித்து சரிபார்த்து சிந்தித்து செயல்படுவது கணவனின் முழுப் பொறுப்பு, உள்ளூரிலோ, வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ கணவன் இருந்தாலும் குடும்பம் சம்பத்தப்பட்ட அனைத்து தேவைகள் நடவடிக்கைகளையும் நன்கு கவனிப்பதோடு தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருத்தல் அவசியம். தேவையை நன்கு ஆராய்ந்து அறிந்து பணத்தை பெற்றோர்களுக்கு அனுப்பி வைத்து மனைவிக்கு கொடுக்கச் சொல்லலாம், அல்லது நேரடியாகவே மனைவிக்குக்கூட அனுப்பலாம்.
   
பல கணவன்மார்கள் தங்கள் மனைவிக்கு அதிக சுதந்திரத்தை கொடுப்பதோடு கணக்கில்லாமல் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் அள்ளி அள்ளி கொடுக்கின்றனர் / கொடுத்துக் கொண்டும் வருகின்றனர்.

இது மட்டுமா? இன்னும் இருக்குது, ஒரு சில மனைவிகள் கணவன் அனுப்பிவைத்த பணத்தை சிக்கனப்படுத்தி மீதியை சேர்த்து வைக்கின்றனர், ஆனால் பலர் அப்படி இருக்காமல் கண்டபடி சிலவு செய்துவிட்டு அதுவும் போதாமல், கணவனுக்கும் குடும்பத்தாருக்கும் தெரியாமல் வெளியில் வட்டிக்கு கடன் வாங்கியோ அல்லது வங்கியில் நகைகளை அடகு வைத்தோ மீதமுள்ள ஆடம்பர சிலவுகளை செய்கின்றனர். கணவன் ஊர் வந்து கணக்கு கேட்டால் ஈரான் ஈராக்கு போர்தான். இதன் காரணமாக நிம்மதி குழைந்து மன உளைச்சலுக்கு ஆளான எத்தனையோ குடும்பங்கள் உண்டு, அதுமட்டுமா? விவாகரத்து வரை சென்ற குடும்பங்களும் உண்டு.

இங்கு ஒரு உண்மை சம்பவத்தை மட்டும் சொல்ல விரும்புகின்றேன். அது யார் எந்த ஊர் போன்ற விபரங்கள் மறைக்கப்பட்டுள்ளது, நான் கடந்த சிலவாரங்களுக்கு முன் ஒரு கடைக்கு போய் இருந்தேன், அங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சாமான்கள் விற்பனை செய்யப்படுகின்றது. நான் அந்த கடைக்கு சென்ற நேரம் ஒரு பெண் அங்கு வந்து பல புடவைகளை பார்த்து விட்டு ஒரு புடவையை மட்டும் தேர்ந்து எடுத்து விலையை கேட்டாள், விலை 1550 ரூபாய் என்று கடைக்காரர் சொன்னார், அந்தப் பெண் அந்தப் புடவையை விலைகொடுத்து வாங்கியபின், கடைகாரரிடம் என் கணவர் உங்களிடம் கேட்டால் நீங்கள் 2750 ரூபாய் என்று சொல்லவும் என்று சொல்ல, அதற்கும் கடைகாரர் புன்சிரிப்போடு தலையை ஆட்டி தன் சம்மதத்தை தெரிவித்தார்.   

இதுமாதிரி எல்லாம் நடப்பதற்கு யார் காரணம்? கணவனான ஆண்களே நீங்கள்தான். ஒவ்வொரு உறவு முறைகளையும் அந்தந்த ஸ்தானத்தில் வைத்து பார்க்க வேண்டும். மனைவியை மனைவி என்ற ஸ்தானத்தில் வைத்து பார்க்க வேண்டும்.

இன்றைய சில/பல பெண்களுக்கு தோழிகள் வட்டாரங்கள் மிகவும் அதிக அளவில் பெருகிவிட்டது. கூடவே செல்போன்களின் ரேட்கட்டர் வசதிகள் வரவே, ஒரு நாளைக்கு சராசரியாக அதிகப்படியான நேரங்களை தோழிகளிடத்தில் செல்போனில் பேசுவதையே கழிக்கின்றனர், அதாவது ATSS ( எனி டைம் ஸ்பீகிங் சிஸ்டம்). மேலும் வெளிநாட்டில் உள்ள கணவனிடத்தில் நெட் கால் மூலமாகவும், இன்டர்நெட் வசதியுடன் ஸ்கைப்பில் முகம் பார்த்து பேசுவதிலும் நேரங்களை கடத்துக்கின்றனர், தேவையான விஷயங்களை பேசுவதில் தவறில்லை. அதுவும் அளவோடு பேசினால் நல்லது. தேவையற்ற விஷயங்களை பேசுவதினால் என்ன இலாபம்?

விளைவு:-
ஐவேளை தொழுகைகள், அன்றாட வீட்டு வேலைகள், பள்ளி மற்றும் பள்ளிக் கூடம் செல்லும் குழந்தைகளின் கவனிப்புகள் இன்னும் அனேக காரியங்கள் அந்தந்த நேரங்களில் முடியாமல் தடைப்பட்டு ஒவ்வொரு நாளும் இப்படியே கழிகின்றதாம்.

இதை நானாக எழுதவில்லை, பல பெற்றோர்களின் குமுறல்கள் என் காதுகளுக்கு விழவே இப்படி எழுதத் தூண்டியது. மேலும் அந்த பெற்றோர்கள் சொன்னது, மருமகன் வந்து மனைவி மக்களுக்கு ஒரு லேப்டாப் கம்ப்யூடர் வாங்கி கொடுத்து இன்டர்நெட் இணைப்பும் எடுத்து கொடுத்துவிட்டார், இந்த புள்ளைங்க சொல்லு கேட்பதே கிடையாது.    

அன்பான பொறுப்பான கணவர்களே, பொருள் ஈட்ட வீட்டை விட்டு வெளியில் செல்லும் நீங்கள் எந்த அளவுக்கு முழுப் பொறுப்புடன் இருக்கின்றீர்கள் என்று உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். உங்கள் குடும்பம், மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக பொருள்களை ஈட்டி குடும்ப தேவைகளை சந்தித்து கொண்டிருக்கும் நீங்கள், தீனுடைய காரியங்களை குறித்து கவலைப்பட்டதுண்டா? அதை உங்கள் குடும்பத்திற்கு சரியாக முறையாக உண்மையாக எத்தி வைத்தது உண்டா?

அன்பான பொறுப்பான கணவர்களே, உலக வாழ்க்கைக்கு தீனு(உணவு) அவசியம் வேணும், மறுமை வாழ்க்கைக்கு தீனு(அமல்) அவசியம் வேணும். சிந்தித்து பாருங்கள்.

இன்னும் எழுதிக்கொண்டே போகலாம். இதைப் படிக்கும் உங்களுக்கு அழுப்பு வந்துவிடக்கூடாது, அதனால் இப்போதைக்கு இது போதும்

ஆக மொத்தத்தில் கணவனும் தவறு செய்கின்றான், மனைவியும் தவறு செய்கின்றாள். எப்போது கணவன் மனைவி இவர்கள் வாழ்வில் நல்ல அமல்களை கடைப்பிடிப்பதோடு ஒருத்தருக்கொருத்தர் உண்மையாக, உறுதியாக, பாசமாக இருக்கின்றனரோ அன்று முதல் அந்தக் குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சீராக இருக்கும்.

இப்படிக்கு.
K.M.A.ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். கோ.மு. முஹம்மது அலியார்,
உரிமையாளர், அதிரை 13 வாடி வண்டிப்பேட்டை.


Share:

மரண அறிவிப்பு (மு.செ.மு.நெய்னா முகம்மதுவின் தாயார்)

அஸ்ஸலாமு அலைக்கும்,

நடுத்தெரு மர்ஹூம் மு.செ.மு அபுல் ஹசன் ஹாஜியார் அவர்களின் மகளும்,  மர்ஹூம் மு.செ.மு பாட்சா மரைக்காயர் அவர்களின்  காக்கா மகளும்,மர்ஹூம் முகம்மது சேக்காதியார், முகம்மது சம்சுதீன்,முகம்மது ஹனீபா, ஹாபிஸ் முகம்மது அப்துல்லாஹ், நூருள் அமீன் இவர்களின் சகோதரியும்,

மு.க.செ. முகம்மது உமர் அவர்களின் மாமியாரும், மு.செ.மு. முகம்மது இப்ராஹிம் அவர்களின் மனைவியும், நெய்னா முகம்மது அவர்களின் தாயாருமாகிய சித்தி ஸபா  அவர்கள் நேற்று (27-09-2013) வெள்ளிக்கிழமை பின்னேரம் 1-30 மணிக்கு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாஸா ஜனாஸா இன்று அஸருக்குப் பின் மரைக்காயர் பள்ளி மைய வாடியில்    நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மஃபிரத்துக்காக துஆ செய்வோமாக!

தகவல்: மு.செ.மு. ஜஹபர் சாதிக்
Share:

அதிரையை குலுக்கிய லியோனி பட்டிமன்றம்!!

4000ஆயிரதிற்கும்  மேற்பட்டோர் பங்கேற்ப்பு !!!

அதிரையில் அறிஞர் அண்ணா 105 வது பிறந்த நாள் முன்னிட்டு அதிரை நகர திமுக சார்பாக  திண்டுக்கல் ஐ லியோனி பட்டிமன்ற நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு துவங்கி சிறப்புடன் நடை பெற்றது.

இதில் அதிரை பேரூராட்சித் தலைவர் S.H.அஸ்லம்  தலைமை தாங்கினார். அதிரை தி.மு.கழக செயலாளர் திரு இராம.குணசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். திரு.S.S. ராஜ்குமார்  அவர்கள் முன்னிலை வகித்தார்.

மற்றும் முன்னாள் மத்திய அமைசரும் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு..S.S.பழனிமாணிக்கம்  அவர்கள் சிறப்பு வவிருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் திமுக முன்னோடிகள் உறுப்பினர்கள்,கட்சி  தொண்டர்கள் என 4,000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள்  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


புகைப்படங்கள் :அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள் :அப்துல் வஹாப் & ஜுபைர்.
Share:

FLASH NEWS :அதிரையில் 4000 மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்ப்பு

அதிரையில் இன்று திமுக நடத்திய பட்டிமன்ற நிகழ்ச்சியில் 4000 மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்ப்பு

விரைவில் செய்தி மற்றும் புகைப்படங்கள் 
Share:

அல் ஹிக்மத் மாத இதழ் ஆசிரியர் மரணம்!


அல் ஹிக்மத் மாத இதழ் ஆசிரியர் பிரபல இமாம்  மௌலவி சர்புதீன் ஆலிம் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை திருச்சியில் வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்வோமாக

தொடர்புக்கு :

மௌலவி ஜலீல் சுல்தான்

திருச்சி டவுண் காஜி

Share:

மரண அறிவிப்பு (ஹபீப் முஹம்மது கடற்கரைத்தெரு)


அஸ்ஸலாமு அலைக்கும்

கடற்கரைதெருவை சார்ந்த மர்ஹூம் சா.மு.கி. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஒலி சாகிப் மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அபூ சாலிஹ் அவர்களின் மைத்துனரும், 0.M. பாரூக் அவர்களின் மச்சானும், மர்ஹூம் அப்துல் அஜீஸ், மர்ஹூம் அப்துல் ஜப்பார், மர்ஹூம் மீரா சாஹிப், மர்ஹூம் முகம்மது அலி மரைக்காயர் இவர்களின் சகோதரரும், சாகுல் ஹமீது, ஹாஜா முகைதீன், சேக் அப்துல் காதர், சபீர் அகமது, சிராஜுதீன் இவர்களின் மாமனாரும், முகைதீன் அப்துல் காதர் அவர்களின் தகப்பனாருமாகிய ஹபீப் முகமது அவர்கள் நேற்று இரவு காலமாகி விட்டார்கள். 

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன், 

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் கடற்கரை தெரு ஜூம்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 
அன்னாரின் மறுமை வாழ்விற்கு துஆ செய்வோமாக! 

ஜஹபர் சாதிக்
Share:

உயர் கல்விக்கு வசதியில்லாதோருக்கு உதவி - ஆலோசனை வழங்க கால நீட்டிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும்

ஆஸ்திரேலியா சிட்னி அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகத்தினால் எடுக்கப் பட்ட முடிவின்படி உயர் கல்வியை தொடர வசதியில்லாத இஸ்லாமிய மாணவ மாணவியர்களுக்கு வரும் கல்வியாண்டிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்குவது என்று தீர்மாணிக்கப் பட்டது.

இது தொடர்பான பதிவு ஏற்கனவே 'உயர் கல்விக்கு வசதியில்லாதோருக்கு உதவி - ஆஸ்திரேலியா சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகள் தீர்மானம்!' என்ற தலைப்பில் நமது தளத்தில் வெளியிட்டு இருந்தோம் 

இந்நிலையில் அதில் குறிப்பிட்டிருந்தபடி இதுகுறித்து அதிரை மக்களின் ஆலோசனைகளை ஆஸ்திரேலியா சிட்னி சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகம் வழங்குமாறு கோரியிருந்தோம்.  மேலும் செப்டம்பர் 30 க்குள் ஆலோசனை வழங்குமாறும் அதில் குறிப்பிட்டு இருந்தோம்.

தற்போது மேலும் பல ஆலோசனைகளை எதிர்பார்ப்பதால் வரும் நவம்பர் 30 வரை உங்கள் ஆலோசனைகளை வழங்க கால நீட்டிப்பு செய்துள்ளோம்.

எனவே உங்கள் ஆலோசனைகளை பின்னூட்டமாகவோ அல்லது sismaadirai@gmail.com என்ற ஈ மெயிலுக்கோ அனுப்பி வைக்கலாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்:
சிட்னி ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகள்,
ஆஸ்திரேலியா.
 sismaadirai@gmail.com 
Share:

அதிரையில் குர்பானி ஆடுகள் விற்பனை

அதிரையில் ஹஜ் பெருநாள் குர்பானி ஆடுகள் மிக குறைந்த விலையில் வாங்க 

தொடர்புக்கு:

குலாபுஜான் அன்சாரி:  99762 38137

அப்பாதுரை ஜமால்: 99521 27872

ஹாஜா சகபுதீன்: 99422 297016

அன்சாரி: 90424 61159

ஹாஜா முகைதீன்: 97913 62614
Share:

அதிரை TNTJ கிளையின் கூட்டுக் குர்பானி திட்டம் அறிவிப்பு

அதிரை TNTJ கிளையின் ஹஜ் பெருநாள் கூட்டு குர்பானி திட்டம் 

தகவல் அப்துல் ஜப்பார்  
Share:

பாலைவனமாக மாறி வரும் சோலைவனம், அதிரையை பற்றிய அதிர்ச்சி தகவல்..!


நமதூரில் மாறி வரும் கால நிலை, தாங்கமுடியாத வெயிலின் வாட்டம், நிலத்தடி நீர் குறைப்பாடு, சுகாதார சீர்கேடு, சுகாதாரம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமை, தவிர்க்க முடியாத கால்வாய் பிரச்சனை, இவை யாவும்தான் என்னை இந்த பதிவை எழுத தூண்டியது. கடந்த பத்து வருடங்களை எடுத்துக்கொண்டால் அதிராம்பட்டினம் எண்ணில் அடங்காத வளர்ச்சியை கண்டுள்ளது என்பது மறக்கமுடியாத உண்மை. இவை ஒரு பக்கம் இருக்க இந்த வளர்ச்சியால் நமதூருக்கு கிடைத்த நன்மைகள் பல என்றாலும் அதற்க்கு நிகராக தீமைகளும் இருக்கவே செய்கின்றன. உதாரணத்திற்க்கு வைத்துக்கொண்டால் நமதூரில் அண்மை காலமாக நிலவி வரும் தண்ணீர் பற்றாகுறை ஒரு சான்று, இதற்க்கு என்னதான் தீர்வு என்பது ஒருபக்கம் இருக்க இதற்க்கு காரணம் என்ன என்பதை நாம் ஆராய்ந்தால் தெரியும். இதற்க்கு முக்கிய காரணமே விஞ்ஞான வளர்ச்சியை அளவுக்கு அதிகமாக தேவையின்றி நாம் பயன்படுத்தியது என்பதே காரணம். ஆம் முன்பெல்லாம் நெடுந்தூரம் நடந்து குளர்த்திற்க்கும் ஏரிக்கும் நடந்து சென்று தண்ணீரை எடுத்து வந்தனர் மக்கள், அதனால் அந்த கஷ்டத்தை புரிந்துக்கொண்டு தண்ணீரை சிக்கனமாக செலவு செய்தனர்.


ஆனால் இப்பொழுது அப்படியா..! ஸ்விட்ச்சை ஒரு அமுக்கு அமுக்கினால் ஒருவாரத்திற்க்கு தேவையான தண்ணீர் நம் வீட்டு தண்ணீர் தேக்கத் தொட்டியில் ஐந்து நிமிடத்தில் நிரம்பிவிடும் இதனால் நமக்கு தண்ணீரின் அருமை தெரியாமல் இஷ்டத்துக்கு செலவு செய்கிறோம். சரி முன்பெல்லாம் வாய்க்காள்களிலாவது ஓரளவு தண்ணிர் வந்துகொண்டிருந்தது அதையும் குப்பைகளை போட்டு மூடிவிட்டோம்.


விளைவு........தண்ணீர் தட்டுப்பாடு


குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவலம். இதையே நம்மால் தாங்க முடியவில்லை என்றால் வரும் காலங்களை யோசித்துப் பாருங்கள், தண்ணீரை பெட்ரோல், டீசல் போன்று பங்குகளில் விலை கொடுத்து அளந்து வாங்கக்கூடிய நீலை வரக்கூடும் என்ற அச்சம் இப்பொழுது நடக்கும் நிகழ்வுகளை கண்டால் நமக்கு தோன்றுகிறது.


இது நமக்கு தேவையா? 
இறைவன் நமக்கு வழங்கிய அருட்கொடையை சரியாக பயன்படுத்தாமல் இருந்ததன் விளைவு தான் இது என்பது மறுக்க முடியாத உண்மை. ஏற்கனவே நம் ஊரின் முக்கிய நீர் ஆதரங்களான குளங்கள் அனைத்தும் சிறுவர்களின் விளையாட்டுத் திடலாகவும், கழிவு நீர் தேங்கும் இடமாகவும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

           இதற்க்கு என்ன தான் வழி? நீங்களே உங்கள் கருத்தை கூறுங்கள்....

ஆக்கம்:அதிரை பிறை நூருல்  
Share:

அதிரை பைத்துல்மாலின் குர்பானித் திட்ட அறிவிப்பு!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அதிரை பைத்துல்மாலின் குர்பானித் திட்ட அறிவிப்பு - 2013

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

வருகின்ற தியாகத்திருநாள் ஹஜ் பெருநாளை முன்னிட்டு அதிரை பைத்துல்மாலின் கீழ்க்கண்ட விபரப்படி குர்பானித் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுக் குர்பானி

பங்கு ஒன்றுக்கு ரூ 1,100/-

முழு குர்பானி ஆடு

(தரமான செம்மறி முழு ஆடுகள் உயிரோடு நியாயமான விலையில் தரப்படும்)

நமது சமுதாயத்தில் ஏழை,எளிய மாணவ,மாணவியருக்கு இலவசக் கல்விக் கட்டணம், பள்ளிச் சீருடை, ஆதரவற்ற முதியோர், விதவைகள் ஆகியோருக்கு மாதாந்திர பென்ஷன், இலவச மருத்துவ உதவி என எண்ணற்ற சேவைகளைச் செய்திட குர்பானி திட்டத்தின் மூலம் கிடைக்கும் இலாபம் பயன்படுத்துப்படுகிறது.

எனவே, குர்பானித் திட்டத்தில் சேர்ந்து ஆடு மற்றும் மாட்டுப் பங்குகள் வாங்கியும் குர்பானித் தோல்களை அதிரை பைத்துல்மாலுக்கு வழங்கியும் உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தாங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள்:

அதிரை பைத்துல்மால் அலுவலகம்

04373 - 241690

ஹாஜி ஜனாப். S. பர்கத் [தலைவர்]

99 425 20 199

ஹாஜி ஜனாப். S. அப்துல் ஹமீது [செயலாளர்]

99 521 20 166

ஹாஜி ஜனாப். S.M. முஹம்மது முஹைதீன்

94 434 48 115

ஹாஜி ஜனாப். A.S. அஹ்மது ஜலீல்

99 424 36 036சென்ற ஆண்டு அதிரை பைத்துல்மாலின் குர்பானித் திட்டத்தில் சேர்ந்து ஆதரவு நல்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு

நிர்வாகம் - அதிரை பைத்துல்மால்
Share:

கண்மாசியா ஆளயேக் காணோம்? - ஊர்சுத்தி

என்னா காக்கா ஆளையேக் கண்மாசியா காணோம்?

அட யாங்கேக்குறா! வெலவாசி ஏறுனதால உள்ளூர்ல சமாளிக்க முடியலே. அதான் ஏதாச்சும் வேலைகிடைக்கிதான்னு  தூத்துக்குடி பக்கம் போயிட்டு வந்தேன்.

இந்தவயசிலயும் வேலைசெஞ்சி சம்பாதிக்க நினைக்கும் உங்கள நெனச்சா ரொம்ப சந்தோசமா ஈக்கிது காக்கா.

சதுரவாழ்வு ராஹத்தா ஈக்கிற வரைக்கிம் ஒழைக்கறதுல தப்பே இல்லை. சரி ஊரெல்லாம் எப்புடி ஈக்கிது. மழைலாம்  நல்லா பேஞ்சிருக்கிறமாதிரி ஈக்கிது.

மழை சுமாரா பேஞ்சிச்சு காக்கா.ஈந்தாலும் அதனால நம்மூருக்கு சொல்லிகிடுறமாதிரி பயனில்லே. கொளத்துலைலாம்  தண்ணி ஓரளவு ஈந்தாலும் குடிக்கிற நல்லதண்ணிக்கி பஞ்சம் வந்திடுச்சே காக்கா.

அதான் பேரூராட்சி தண்ணி ஒருநா உட்டு ஒருநா வருதாம்ல.

வருதுதான் காக்கா ஈந்தாலும் பெரும்பாலான ஊட்டுல மோட்ரு போட்டாதான் தண்ணி பிடிக்க முடியும். மேடான  பகுதிகளான நெசவுகாரத்தெரு,புதுமனைத்தெரு, சிம்.எம்.பி லைன் ஏரியாவுலைலாம் மோட்டுரு போடலான்னாலும்,  தண்ணி வர்ரநேரத்துல கரண்டும் போயிடுது. எப்பிடியோ இந்த அந்தான்னு போயிக்கிட்டு ஈக்கிது காக்கா.

சில பகுதில சாக்கடை நீரும் கலந்து வருதுன்னு கேள்விப்பட்டேனே உண்மையா?

வாஸ்தவம்தான் காக்கா. இதுக்குக் காரணம் யாருண்ணு பார்த்தா நாமளும் ஒருவகையில காரணமா ஈக்கிறோம்னா  பேரூராட்சியும் ஒருவகைல காரணம்.

கொஞ்சம் புரியும்படிதான் சொல்லேன். சாக்கடை தண்ணிய குழாய்ல அனுப்புறாங்களா?

இல்ல காக்கா. பல எடங்கள்ல தண்ணீரப் பிடிக்கிறதுக்காக தொட்டி கட்டி, அதுலேர்ந்து மோட்ரு போட்டு தண்ணிய  எடுக்குறாங்கல்ல.அப்புடி தண்ணிய புடிச்சு முடிஞ்சதும் மிச்சதண்ணி தொட்டியில கட்டிக்கடக்குதுல.மத்தவங்க மோட்ரு  போடும்போது அந்த தண்ணியும் குழாய்வழியா கலந்துடுது. இது எங்கேந்து கலக்குதுன்னு பேரூராட்சிக்கே தெரியல.

அப்பண்டா இதுமாதிரி தொட்டில தண்ணி புடிச்சு முடிஞ்சதும் குழாய அடைச்சு வச்சிட்டு, கட்டிக்கிடக்குற தண்ணிய  ஒடனே சுத்தம் பண்ணிடனும்.அப்புடி செஞ்சா தொட்டில கட்டியிருக்கிற தண்ணி திரும்ப குழாய்க்குள்ள போவாது.  தப்பு நம்ம பக்கம்லப்பா ஈக்கிற மாதிரி தெரியுது.

அதான் சொன்னேனெ. நம்ம சைடுல ஈக்கிறத கொறைகளை நாம சரிசெஞ்சிடனும். பஞ்சாயத்து போர்டும் கொஞ்சம்  ஃபோர்ஸா தண்ணிய அனுப்புனா கட்டிக்கடக்குற தண்ணி கலக்காம ஈக்கிம்.அதிகாரிங்கட்ட யாராச்சும் இதைசொன்னா  அவங்களும் அதுக்கேத்தமாதிரி செய்வாங்க.

அடுத்த எலக்சன்ல மோடிதான் பிரதமர்னு எல்லா பேப்பர்லயும் பேசிக்கிறாங்களே அதப்பத்தி என்னா நெனைக்கிற?

இவனுங்க இப்புடித்தான் காக்கா.போன எலக்சனுக்கும் மிந்தின எலக்சன்ல இந்தியா ஒளிர்கிறதுன்னு பீலா உட்டாங்க.  அதுமாதிரிதான் இதுவும். என்னமோ மோடி வந்தாக்கா எல்லா பிரச்சினையும் தீர்ந்துடும்னு எதவச்சிக்கிட்டு இவங்க  இப்புடி கத உடுறானுவன்னு தெரியலே.

நம்ம முஸ்லிம்களேகூட மோடி பிரதமரா வர்ரத விரும்புறாங்கண்டுல்லாம் நெட்டுல போட்டிருக்காம்லப்பா.

காக்கா இவனுங்களுக்கு ஆள்பிடிக்கிறதுக்கா கஷ்டம்? சமுதாயத்துக்கு ஒன்னுக்கும் ஒதவாத ஒதவாக்கரைங்களுக்கு  தொப்பிய போட்டுவுட்டு, மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து பேனர்ல போட்டவப் போட்டுட்டா அவனுங்க எல்லாம்  முஸ்லிம்கன்னு ஆயிடுமா? பிரியானி பட்டையும்,குவாட்டர் பாட்டிலும் கொடுத்தால் பொதுக்கூட்டத்துக்கு வர்ரகேஸு  மாதிரிதான் இவனுங்களும். தெரியாமத்தான் கேட்கிறேன். முஸ்லிம்கள் ஆதரவுன்னா அதுல தொப்பி போட்டவனா  மட்டும் காட்டுறது ஏன்? எல்லா முஸ்லிமும் தொப்பி போட்டுக்கிட்டா திரியுறாங்க? இதல்லாம் ஏமாத்து வேலகாக்கா.

அதுசரி. நல்லா நுனுக்கமாகத்தான் கவனிச்சிருக்கிறா. சரி நம்ம மொதலமைச்சர் ஜெயலலிதா யாருக்கு ஆதரவாம்?

இப்போதைக்கு தனியா நிப்போம்னு சொல்லிக்கிட்டு ஈந்தாலும் கடைசில பிஜேபிக்கு ஆதரவாக தாவக்கூடும். அதான்  அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லே - நிரந்தர எதிரியும் இல்லேன்னு சொல்லி வச்சிருக்காங்களே.

ஆமாமா இதுக்கு மட்டும் கொறைச்சலில்லே. மின்னாடி வாஜ்பாய் கவர்மெண்ட கவுத்திவிட்டு இனி பிஜேபியோடக்க  கூட்டு வைக்கமாட்டேன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் ரொம்ப நெருங்கலே. இந்தவாட்டி சோ பேச்சக்கேட்டுக்கிட்டு  மோடிய ஆதரிச்சாங்கன்னா,அப்றம் ஜெயலலிதாவுக்கு செலக்டிவ் அம்னீசியான்னு அத்வானி சொன்னாலும்சொல்வார்.

நிறைய விசயம் பேசனும் காக்கா வாங்களேன் மெயின்ரோட்டுல பானிபூரியும் கவாபும் சாப்புட்டு பேசுவோம்.

ஒவுத்துக்கு கொஞ்சம் சரியில்லே.வா சேதுரோட்டுல ஹவான் ஹோட்டல்ல காடை பெரட்டலும் தோசையும் சாப்புட்டு  எதுத்தாப்ல மதவுல உட்கார்ந்து பேசலாம்.

சரி காக்கா, அப்பறம் தூத்துக்குடிக்கு மட்டும்தான் போனியலா?

இல்லப்பா அப்புடியே குற்றாலத்துக்கும் போயிட்டு வந்தேன். நல்லா சீசானாத்தான் ஈக்கிது. சொல்ல மறந்துட்டேனே.  குற்றாலத்துக்குப் போனா சீஸன்ல ரூமு கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம். நம்ம பொண்டுவல கூட்டிக்கிட்டு போனா  கண்ட கண்ட லாட்ஜுலயும் தங்குறதும் சரியாப்படலே. மெயின் அருவிக்கிட்ட ஈக்கிற மூலிகை பூங்காவுக்கு எதுக்க  ஒரு ஜாமியா பள்ளி ஈக்கிதுப்பா. அதுல குடும்பத்தோட தங்குறதுக்குப் பாதுகாப்பான ரூம் வசதி ஈக்கிது. முக்கியமா  அஞ்சுவேல தொழுவிடலாம். அருவியும் பக்கங்கறதால போய்வரவும் வசதி. நெனச்சநேரம் குளிக்கலாம்.

பரவாயில்லயே. நம்ம மக்க டூர் போற எடத்துல தொழுகை விசயத்துல கொஞ்சம் மெதனமாத்தான் ஈக்கிறாஹ. இந்த  விசயம் பலருக்கும் தெரிஞ்சா நல்லது. இப்பவும் அருவில நல்ல தண்ணியாமே.

ஆமாம்பா. எடையில கொஞ்சம் கொறைஞ்சிச்சு. இப்ப நல்லா கொட்டுதாம். அப்பறம், இந்த ஜாமிஆ பள்ளிக்கு  சீஸனில் கிடைக்கும் ரூம் வாடகைதான் வருமானமாம்.அதனால நம்ம மக்கள் இதைபயன்படுத்திக்கிட்டு அவங்களுக்கு  உதவலாம். நமக்கும் வசதி.கீழக்கரை செல்வந்தர் K.V.M அப்துல் கறீம் காக்காதான் இந்த பள்ளியக் கட்டிகொடுத்து  ஈக்கிறஹலாம். பள்ளியாசல்ல ஈந்த நிர்வாகிகள் பெயரில் நம்ம வக்கீல் ரஜாக் காக்கா (A.J.அப்துல் ரஜாக் B.A.B.L)  அதிராம்பட்டினம்னும் பார்த்தேன். சந்தோசமா ஈந்துச்சு.

ரொம்ப சந்தோசம்காக்கா. அப்பறம் ஒரு விசயம் கவனிச்சியலா. நம்ம ஷிஃபா ஆஸ்பத்திரில கடந்த மூனுநாட்களாக  நடந்த எல்லா பிரசவமும் சொகப்பிரசவமாம்.டாக்டர் செல்வராணி அம்மா நல்லா கவனிக்கிறாஹன்னு நம்ம அபுல்சன்  சொன்னாப்ல.

மாஷா அல்லாஹ். ரொம்ப முக்கியமான விசயம்பா. ஒரு காலத்துல ஷிஃபா ஆஸ்பத்திரின்னாலே சுகப்பிரசவம்தாண்டு  ஈந்துச்சு. அந்த நெலம மீண்டும் திரும்பட்டும். நம்ம மக்களும் இத மனசுல வச்சிக்கிட்டு ஆதரவளிச்சா பழையநிலம  திரும்பும்.

ஆமா காக்கா. வாங்க நாம ஊட்டுக்குத் திரும்பலாம்.

இப்படிக்கு,
www.ஊர்சுத்தி.com
Share:

பேசும் படம்

நீங்கள் பார்க்கும் இந்த புகைப்படம் நேற்று மாலை சென்னையில் நமது நிருபரால் எடுக்கப்பட்டவை.


இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வால் வாகனங்களை உபயோகப்படுத்த யோசிக்கும் மக்களுக்கு இந்த புகைப்படம் ஒரு ஆறுதல்.


நீங்களும் சைக்கிள் இருந்தா இது போன்று அமைத்து பாருங்க.... உங்களுக்கும் பைக்கில் போவது போன்று ஒரு பீலிங் இருக்கும்.


புகைப்படம்:AX ரிபோட்டர் முஜீப்  


Share:

AX செய்தி எதிரொலி!!


நமதூர் அதிரை புதுத் தெருவில் கடந்த 2 நாட்களாக தெரு விளக்குகள் எரியாமல் புதுத் தெரு இருளில் தத்தளித்து வந்தது.இதனையடுத்து  நமது "அதிரை எக்ஸ்ப்ரஸில் "நேற்று இது பற்றிய செய்தி பதிவிட்டு இருந்தோம்.. 

அதன் விளைவாக இன்று புதுத் தெருவில் உள்ள தெருவிளக்குகளை  உடனடியாக  சரி செய்து தந்த அதிரை பேரூராட்சிக்கு இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்..
Share:

மரண அறிவிப்பு (O.M.அமீர்ஹம்ஜா கடற்கரைத் தெரு)

கடற்கரைத் தெருவைச்  சேர்ந்த மர்ஹூம் ஒ.உமர்தம்பி மரைக்காயர் மகனும், A.H. அஹமது மொய்தீன், முஹம்மது இப்ராஹிம் ஆகியோரின் தகப்பானாருமாகிய O.M.அமீர்ஹம்ஜா அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் ஜனாஸா நாளை (26-09-2013) காலை 9.00 மணியளவில் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.அன்னாரின் மறுமை வாழ்விற்கு நாம் துஆ செய்வோம்..
Share:

மோடி வருகை -ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்கள் வெளியேற்றம்

அதிரை மாணவர்கள் அதிகளவில் படிக்கும் கல்லூரியான திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரிக்கு இளம் தாமரை மாநாட்டிதிற்கு மோடி வருகையால் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் விடுதியும் விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
இது குறித்து நமது செய்தியாளர் யூசுப் அவர்களிடம்  கேட்டதற்கு:திருச்சியில் மோடி வருகையால் மாணவர்களுக்கு காவல்துறையால் அதிக கெடுபிடியாக இருக்கிறது.குறிப்பாக சொல்ல போனால் ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்களுக்கு.மேலும் நமதூர் மாணவர்கள் அதிகளவில் படிக்கும் இந்த கல்லூரியில் பெரும்பான்மையான மாணவர்கள் வாடைகைக்கு வீடு எடுத்து 10 முதல் 15 வரை ஒரு குழுவாக இருந்து வருகின்றனர்.இவர்களும் இன்று ஊர்களுக்கு செல்கின்றனர். மோடி வருகையால் முஸ்லிம் மாணவர்களால் எதாவது அசம்பாவிதம் நடைபெற்று விடுமோ என்று காவல்துறை நினைக்கிறது.ஆதலால் அணைத்து மாணவர்களும் இன்று வெளியேற்ற படுகிறார்கள்.

திருச்சியிளுருந்து AX செய்தியாளர்: முஹம்மது யூசுப்         

மோடி பிரதமர் இல்லாமல் இருக்கும் போதே இப்படி என்றால் .... பிரதமராக வந்தால் சிறுபான்மையருக்கு எப்படிப்பட்ட  அச்சுறுத்தல் இருக்கும் என்பதற்கு இந்த கல்லூரி விடுமுறை ஒரு பெரிய சான்று  

Share:

அதிரையின் முதல் IAS பட்டதாரி (நேர்காணல் காணொளி இணைப்பு)


கடந்த வருடம் முதல் ஊரளவில் மட்டுமின்றி மாவட்ட,மாநிலளவில் சாதனைபடைக்கும் திறமையான மாணாக்கர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் "அதிரை எக்ஸ்பிரஸ்" கல்வி விருதுகளை அறிவித்து ஊக்குவித்து வருகிறோம்.

அதேபோல சகோதர வலைத்தளம் அதிரை நிருபர் கல்வி விழிப்புணர்வு மாநாட்டையும் நடத்தியது.

இதற்கான பலன் கடந்த கல்வியாண்டில் கிடைத்து, நமதூரைச் சார்ந்த மாணாக்கர்கள் பலர் மாநில அளவில் சாதனை படைத்து நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

கல்விச்சேவைகளில் நூறாண்டுகளைத் தாண்டிய கல்வி நிறுவனம், பரந்து விரிந்த கல்லூரி கல்லூரி வளாகம், ஊரின் நாலாப்பகமும் தென்படும் ஆங்கிலவழி/ தமிழ்வழி பள்ளிகள்.அதிரையின் அக்கம்பக்க ஊர்களிலிருந்தெல்லாம் வந்து படித்துச்செல்லும் தரமான கல்வி நிலையங்களைக் கொண்டிருக்கும் நமதூரிலிருந்து சொல்லிக் கொள்ளும்படியாக உயர் பதவியிலோ,அரசு ஆட்சிப்பணிகளிலோ யாருமில்லையே என்ற ஏக்கம் நம் எல்லோருக்கும் உண்டு.

இந்த ஏக்கமும் விரைவில் நீங்கும் வகையில் நமதூரைச் சார்ந்த சென்னை புரசைவாக்கத்திலிருக்கும் சகோ. M.ஜமால் முஹம்மது அவர்களின் மகன் J.மீராசாகிப் UPSC மற்றும் TNPSC குரூப்-1 தேர்வுகளில் வெற்றிகரமாகத் தேர்ச்சிபெற்று 2014 ஆம் ஆண்டு நடைபெறும் IAS தேர்வு எழுதவுள்ளார். பொறியியல் பட்டம் பெற்றுள்ள J.மீராசாகிப், சென்னை அண்ணா சாலையிலுள்ள அழகிய கடன் IAS அகாடமியில் இதற்கான பயிற்சிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

1) அதிரையிலிருந்து IAS அதிகாரிகள் உருவாக வேண்டுமென்ற ஏக்கத்தில் நான்காண்டுகளுக்குமுன் நமது தளத்தில் வெளியான பதிவு 

2)  முனைவர் முஹம்மது அலி IPS அவர்களின் பதிவு 

3)சகோதரதளம் அதிரை நிருபரில் வெளியான ஆக்கம் http://adirainirubar.blogspot.com/2011/03/blog-post_02.html

இதற்கிடையே இந்தியாவின் முன்னணி செய்தித் நிறுவனமான ndtv யில் சகோ J.மீராசாகிப் அளித்த

நேர்காணல் மற்றும் தொடர்புடைய செய்தி காணொளிமேலும் இது தொடர்பான The Hindu ஆங்கில நாளிதழ் செய்தி : http://www.thehindu.com/todays-paper/mosque-helps-students-crack-ias-exam/article5143672.ece 

இன்ஷா அல்லாஹ் அதிரையின் முதல் IAS பட்டதாரி J.மீராசாகிப்,அதற்கான ஊக்கமளித்த பெற்றோர்களையும், இந்த பயிற்சிகளை வழங்கிவரும் சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் சகோ.சம்சுதீன் காஷிமி அவர்களையும் வாழ்த்துவதில் அதிரை எக்ஸ்பிரஸ் மகிழ்ச்சியடைகிறது. 

வருங்கால IAS அதிகாரிக்கு வாசகர்களும் முன்கூட்டியே வாழ்த்துகளையும் துஆவையும் தெரிவித்து, மென்மேலும் ஊக்கப்படுத்தலாமே!


காணொளி நன்றி : NDTV

தகவல் :Kuthbudeen Ahmed Jaleel (Kuthub)


Share:

அதிரையின் சைலன்ட் சமூக சேவகர்.

அதிரையில் அன்றாடம் உள்ள பிரச்சனைகளை அரசின் செவிட்டு காதுகளுக்கு எடுத்து செல்லும் உன்னத பணியை நமதூர் நடுத்தெருவை சார்ந்த ஹாலிக் மரைக்காயர் செய்து வருகிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

நடுதெருவை சார்ந்த ஜனாப் ஹாலிக் அவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நமதூரில் இவர் செய்து வரும் சாதனைகளை பட்டியலிட முடியாது அந்த  அளவிற்கு  நீ.......ண்டு கொண்டே போகும்.

அவைகளில் சில.....

  • ஊரின் அநேக மின்கம்பங்களை மாற்ற "தினத்தந்தியின் மக்கள்மேடை"என்ற பகுதிக்கு அடிகடி அஞ்சல் அட்டை மூலம் தெரியபடுத்தி உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
  • நடுத்தெருவில் உள்ள வடிகால்களை சுத்தம் செய்ய பேரூர் நிர்வாகதிற்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதி  சாதித்தவர்.
  • நடுத்தெரு சாலைகளில் சேரும் மணல்களை அள்ள அரும்பாடு பட்டவர் .
  • அநேக பழுதடைந்த மின்மாற்றிகளை மாற்றியமைக்க பாடுபட்டு வெற்றி கண்டவர்.
  • அதிரை பகுதியில் அதிகமாக நடக்கும் சாலை விபத்துக்களயும் அதன் காரனக்களையும் பட்டியலிட்டு வட்டார போக்குவரத்து அலுவக்ளகத்துக்கு கடிதம் எழுதியவர்
  • பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக  உள்ளதை புகைப்படம் ஆதாரங்கள் மூலம்  சம்பந்தபட்ட இலாகாவிற்கு தெரியபடுத்தியவர்.
  • சமிபத்தில் அதிரை எக்ஸ்பிரசில் வெளியான கவனிக்கப்படாமல் இருக்கும் குடிநீர் அடி பைப்! என்ற தலைப்பில் வெளியான புகார் பதிவை அப்பொழுதே சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு தெரியபடுத்தியவர்.

சமூக பணி செய்கிறோம் என்று பவட்டுக்காக பவனி வருபவர்களுக்கு மத்தியில்   இது போல் ஏராளமான சமூக பணிகளை சைலன்ட்டாக செய்து வரும் இவரை வாழ்த்துவதையும் அவருக்காக துஆ செய்வதையும் தவிர வேறொன்றும் தெரியவில்லை.
Share:

ஹஜ் கமிட்டி ஹாஜிகள் முதல் குழு சென்னையிலிருந்து நேற்று புறப்பட்டுச் சென்றது!

தமிழகத்திலிருந்து ஹஜ் செல்லும் ஹஜ் கமிட்டி முதல் விமானம், சென்னை விமான நிலையத்திலிருந்து நேற்று காலை 9மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இதில் 275 பயணிகள் இடம் பெற்றனர்.

புனித பயணம் மேற்கொண்டவர்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அப்துல் ரகீம், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், ஹஜ் கமிட்டி தலைவர் முகம்மது ஜான் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

 அப்போது பிற்பட்டோர் நலத்துறை செயலாளர் அருள்மொழி உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

 அதேபோல நேற்று  இரவு 245 ஹஜ் பயணிகளுடன் மற்றொரு விமானம் புறப்பட்டுச் சென்றது.. 

தொடர்ந்து இம்மாதம்  30-ம் தேதி வரை 14 விமானங்கள் இயக்கப்படுகின்றன.என்பது குறிப்பிடத்தக்கது.
Share:

அதிரையர்கள் கொண்டாடிய சவூதி அரேபியா தேசியதினம்அஸ்ஸலாம் அழைக்கும் (வரஹ்)

சவுதி அரேபியாவின் 83வது தேசிய தினம் (National Day) நேற்று 23/09/13 அன்று  நாடுமுழுவதும் விமர்சியாக கொண்டாடப்பட்டது.வீதி தோரும் மின்விழக்குகளாலும் ,கொடிகளாலும் கம்பங்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

ரியாத்,ஜித்தாஹ்,தம்மாம் மற்றும் பிற நகரங்களில் மாலை நேரங்களில் வான வேடிக்கைகளுடன் அமர்கலப்பட்டன .

நமது அதிரை சகோதரர்கள் தன் தாய் திருநாட்டின் தேசிய உணர்வுகளுடன் ,தாம் பொருள் ஈட்டி வரும் சவுதி அரேபியாவில் அரபுகளை ,மண்ணின் மைந்தர்களை  INDO - ARAB நேசப்படி  வாழ்த்து சொல்லி மகிழ்ந்தனர்.

தலைநகர் ரியாத் நகரில் உள்ள ஹாராவில் நிகழ்ச்சி  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இந்த நிகழ்ச்சிக்கு  சிறப்பு விருந்தினராக முன்னால் அய்டா தலைவர்  சகோதரர்.ராபியா அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களிடம் நாங்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ABM ரியாத் கிளை பற்றியும், ஜித்தாவில் அய்டாவின் செயல்படுதல் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது .

இன்னும்  அவர்கள், தன்னுடைய பொது சேவையில் நடந்த பல நல்ல சம்பவங்களை பரிமார்க்கொண்டது மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருந்தது.அதுமட்டுமல்லாமல் நமதூர் நலனை முன்னுறுத்தி  பல்வேறு சம்மந்தமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டது.

இஷா தொழுகையுடன் அமர்வு இனிதே நிறைவடைந்தது.

Share:

அதிரையில் எரியாத தெரு விளக்குகள் : கண்டுகொள்ளாத பேரூராட்சி!!

நமதூர் அதிரை புதுத் தெருவில் கடந்த 2 நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை.இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இவ் வழியே பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு செல்ல கூடியவர்களும், டியூசனுக்கு சென்று வரக் கூடிய மாணவ,மாணவிகளும், வயதானவர்களும் மிகவும் துன்பமுறுகின்றனர். புதுத் தெரு வடபுறம் கடை வீதிக்கு செல்ல கூடிய பாதை என்பதால் பொதுமக்கள் அவதிபடுகின்றனர்.

இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  உடனடியாக நடவடிக்கை எடுத்து எரியாத தெருவிளக்குகளை சரி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு...

மக்களின் எதிர்பார்ப்பை உடனடியாக நிறைவேற்றுமா இந்த அதிரை பேரூராட்சி..???
Share:

அதிரை சகோதரர் அவர்களின் உரை

துபாய் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குர்ஆனை புரிந்துக்கொள்ளுங்கள் என்ற தலைப்பில் அதிரை சேர்ந்த  சகோதரர் தாஜுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.  அதன் வீடியோ காணொளி உங்கள் பார்வைக்கு. 

Share:

Flash News: 14ஆம் வார்டு உறுப்பினர் திமுகவிலிருந்து விலகலா?

கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது 14வது வார்டில் திமுகவின் சார்பில் போட்டியிட்டு அதிரையிலேயே அதிக வாக்கு  வித்தியாசத்துடன் வெற்றி பெற்றவர் முகமது ஷரிப் இவர் திமுகவின் முன்னோடி NKS  ஜெக்கரியா அவர்களின் பேரனாகிய இவர் திமுகவின் தீவிர உறுப்பினராவார் இவர் அப்பொழுதே அவரது அப்பா(தாத்தா) வின் வார்டு பணிகளை செய்து வந்தார் தாத்தாவின் மறைவிற்கு பிறகு கடந்த உள்ளாட்சி தேர்தலின் பொழுது  மேற்கண்ட வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவர்.

ஆனால் சமிப காலமாக இவரை நகர திமுக எதிலும் கண்டு கொள்ளவில்லை உதரணமாக வருகின்ற 27ஆம் தேதி நடைபெற இருக்கும் அண்ணாவின் பிறந்த நாள் நிகழ்சிக்காக அச்சிடப்பட்ட நோட்டிசில் இவரது பெயரை வேண்டும் என்றே விட்டுள்ளனர்.

இது பற்றி நகர நிர்வாகத்திடம் கேட்டால் அச்சு பிழை என சப்பை கட்டு கட்டுகிறது.

இது பற்றி சரிப் அவர்கள் நம்மிடம்  கூறும் பொழுது ....

நகர திமுகவில் தனிநபர் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது சக வார்டு உறுப்பினரால் முடித்து கொடுக்க முடியாத பல பணிகளை நான் வசிக்கும் பகுதி மக்கள் என்னை தொடர்புகொண்டு சில பணிகளை செய்து கேட்கின்றனர் மனிதாபிமான அடிப்படையில் நானும் அதை இலகுவாக செய்து கொடுக்கிறேன் இதனை பொறுக்காத அந்த உறுப்பினர் என்னை வேண்டும் என்றே என்னை பழிவாங்கி வருகிறார் நோட்டிசில் பெயர் வரதாதால் குடி ஒன்றும் மூழ்கிட போவதில்லை ஒரு தனிநபர் ஆதிக்கம் மேலோங்கி வருவதை நகர திமுக கண்டுகொல்லாததே இதற்க்கு காரணம்.

இதே போக்கு நீடித்தால் விரைவில் நல்லதொரு முடிவை தானும் என்னுடன் சில உறுப்பினர்களும்  எடுக்க உள்ளதாக கூறினார்.
Share:

அதிரையில் பல நாட்களாக கவனிக்கப் படாமல் இருக்கும் குடிநீர் அடி பைப்!

நமதூர் ஆஸ்பத்திரித் தெரு மற்றும் நடுத்தெருவில் பல மாதங்களாக இயங்காமல் இருந்துவரும் இந்த குடிநீர் அடிபைப் கவனிப்பாரற்று இருக்கிறது.
பலமுறை இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் பேரூர் நிர்வாகம் இதனை கவனத்தில் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது கார்பரேஷன் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அடிபைப் சரி செய்யப் பட்டால் இப்பகுதி மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்று பலர் ஆதங்கப்படுகிறார்கள்.
ஓரளவுக்கு நல்ல பெயரை சம்பாதித்திருக்கும் இப்பகுதி வார்டு உறுப்பினர் இதை கவனத்தில் கொண்டு பேருர் நிர்வாகத்தின் பார்வைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று  இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.

Share:

பயணங்கள் புதிதில்லை - ரஃபியா!

விடுமுறையில் ஊருக்குச் சென்று திரும்பிய அடுத்தநாள்...

செல்ஃபோன் சிணுங்கியது...   

'அஸ்ஸலாமு அலைக்கும்."
'வஅலைக்கும் முஸ்ஸலாம்.".என் நெருங்கிய நண்பர் பதிலளித்தார்.   
'எப்ப பாய் ஊர்லேர்ந்து வந்தீங்க?"
"நேற்றுதான் வந்தேன்" என்றேன்
'வெல்கம் பேக் - அல்ஹம்துலில்லாஹ் சலாமா!"  என ஆங்கிலத்திலும் அரபியிலும் வரவேற்றுவிட்டு, பிற விசாரிப்புகள் தாய்மொழியில்  அரங்கேறியது.

மேலும்,  உடம்பு தேவலையா?  ரெகுலர் செக்-அப் எல்லாம் செய்தீர்களா? டாக்டர் என்ன சொன்னார்? என்றும், டூட்டியில் ஜாயின் பண்ணிட்டீங்களா?... எனவும் நண்பரின் நம்பர் ஆப்ஃ கொசின்ஸ் ஏறிக்கொண்டே சென்றது.

எனக்கும் வேலை இருந்ததால்  உங்களை சந்திக்ணும். இன்று மாலை ஃப்ரீயா..? என வினவ நாளை மதியம் சந்திக்கலாம்.. நான் டயத்தை அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேனென்றார். 

"பீ ரெடி வித் இஹ்ராம்" என்றேன்.  உம்ரா செல்வதற்காக அவரையும் தயாராக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தேன்.. அவரும் சம்மதித்தார்.
மக்கா போகும் வழியில் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. எனினும் "டல்லா இருக்கிறீர்களே?..நலக்குறைவோ.. பயணக்களைப்போ நன்றாகத்தெறிகின்றது! அப்படியான நிலையில் ஏன் இன்றைக்கே அவசர  உம்ரா பயணம்? என்றார்

மக்கா சென்ற பிறகு சொல்கிறேன் என்றவாறு மக்காவை அடைந்தவுடன் (கஃபாவை வலம் வரும்போது) தவாஃபின் போது சொன்னேன்
" ஒருவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றணும்" அதற்குத்தான் இந்த அவசர உம்ரா, .அதற்குள் எமக்கு ஏதாவது ஆகிவிடுமோ..   நீங்களும் அவர்களுக்காக துஆ செய்யுங்கள்"  என்ற எமது கடன்பட்டார் நெஞ்ச அஞ்சல்களை தெரிவித்தேன்..

உம்ராவை முடித்து...

மக்காவிலிருந்து ஜித்தா திரும்புகையில் நல்ல பயணம் நல்ல உணவு தந்து எளிதாக ஓர் உம்ரா செய்வித்த வல்ல இறைவனுக்கே எல்லா புகழும் என நன்றி கூரியவர்களாய் வாகனம் முன்னே செல்ல, நிகழ்ந்த சம்பவ நிகழ்சிகள் பின்னே செல்ல ஏனிந்த அவசர உம்ரா பயணம் என்பதை நண்பருக்கு விவரித்தேன்.. 

ஃப்ளாஷ்பேக்...


சென்னையிலிருந்து தஞ்சை செல்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டு... 

"டேய்! காலை 9 மணிக்கே இப்படி வெயில் உருக்குகிறதே...? "டேய்"Day எக்ஸ்பிரஸ்ஸில் அதுவும் அன்சிரர்வ்டில்  நானாவது சமாளிச்சுக்குவேன் ஆனால் உன் உம்மா எப்படிடா?" என வழியனுப்ப வந்த என் மகனிடம் எரிச்சலுடன் வினவ.

 "உங்கள் இருவரில் ஒருத்தருக்கு மட்டும் ஏ.சி.கோச்சில் கிடைத்திருக்கிறது. வண்டியில் ஏரிக்கொண்டு T.T யிடம் முயற்சித்தால் இன்னொன்றும் கிடைக்கலாம் " எனக்கூறி என் மகன் டாட்டா கூறிவிட்டான். ரயில் நகரத்தொடங்கியது. கிடைத்த ஒன்றை என் துணைவியாருக்கு வழக்கமாக தாரைவார்த்து(She is always lucky) எனத்தந்துவிட்டு அடுத்த பெட்டிக்கு ஓடும் ரயிலிலேயே ஊடுருவினேன்..

TTE வந்தார் - பல்லை இளித்தேன். A/C வேண்டினேன். அதற்கு மறுத்து "இல்லை" எனக்கூறிவிட்டு "நீங்கள் ஆன் லைனில் டிக்கட் எடுத்துள்ளீர்கள். அப்கிரேட் வேண்டுமானால் ஸ்டேஷனில் வந்து ஆர்டுனரி/சாதா டிக்கட் எடுத்து வந்து TTE யிடம் முயற்சித்தால்தான் கிட்டும் " என்று நியதியை சொன்னார். (ஒரு வழியாக சீட் வாங்கிவிட்டது வேறு விஷயம்.) என் துனைவிக்காக தரப்பட்ட இருக்கையில் சுற்றி ஆண் பயணிகளாக இருந்ததால் பக்கத்து போர்ஷனில் அமர்ந்திருந்த ஒரு அம்மையாரிடம்  இவங்க உங்களுடன் அமர்ந்து வரட்டும், இந்த சீட்டுக்கு வரப்போற பயணி அங்கு மாறி அமர வேண்டுவோம் என கேட்டுக்கொண்டதற்கு "ஷரி நோ ப்ராப்ளம்" எனச்சொல்லி ஒதுங்கி இடம் தந்த விதத்தில் அந்த அம்மணி படித்தவர் - எந்த சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதை ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது.

ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் சில நடக்க முடியாதோர்(மாற்றுத் திறனாளிகள்) விற்பனை செய்த கடலை,கொய்யாப்பழம், சுண்டல்,இஞ்சி முரப்பா, சமூசா எல்லாம் ருசிக்கப்பட்டது. நம் நாட்டில் ரயில் பயணங்களில் ... அதுவும் பகல் நேரப்பயணங்களில் இன்பமே அலாதி!

பல காரங்கள் கரம் மாறின! பழங்கள் பறிமாறப்பட்டன. விட்டுக்கொடா விருந்தோம்பல் விமரிசையாயின. பிரயாணத்தில் முன்பின் அறியாதோர் தரும் தின்பண்டங்களை தவிர்க்க வேண்டும் என்பதும் நினைவு கூறப்பட்டது. அப்பெண்மணி தனக்காக தாமே கேட்டு வாங்கும் பொருளுக்கு நானே பணம் செலுத்துவேன்  (நீங்கள் கொடுக்கவேண்டாம்) என குறியாக இருந்தார்.  

இடையிடையே அலைப்பேசியில் அப்பெண்மணிக்கு அழைப்பு வர ஆங்கிலம், ஹிந்தி சில நேரம் தமிழில் பல தடவை நறுக்கென்று பேசியது அம்மணி.. ஒரு அழைப்பில் "பால்வாஷே.. கீ காபூர்..இத்தாய்..?! "என உரைத்ததை வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஹி..ஹீ! ஒண்ணுமில்லே கொல்கட்டாவிலிருந்து எங்கள் FLAT வாட்ச்மேன் ஃபோன் பண்ணிணான். நான் பேசியது பெங்காலி மொழி" என்றது. அது ஒரியா அல்லது மைத்திலி அல்லது ஸ்பானிஷ் என்று நீங்க சொன்னாலும் நான் கேட்டுக்குவேன் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். உரிய நேரம் வர தொழுகைக்கு அந்த அம்மணி இடம் ஒதுங்கி ஒத்துழைப்புத்தந்தது. முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவது எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்ப பிடிக்கும் என்றது எனக்கு ஆனந்தம் கலந்த ஆச்சர்யம். ஏன் என்றேன். நம்மளோட அழகை நம்ம ஆம்படையான்தாம் ரசிக்கணும் என்று அழகிய கருத்துரைத்தது. வேற..வேற.. என்னவெல்லாம் இசுலாத்தில் உங்களுக்கு பிடிச்சது மேடம்?என்று விஜய் டி.வி.கோபிநாத் ரேஞ்சுகுக்கு வாயை கிளறினேன். மற்றவர்களுக்கு இந்த காலகட்டத்தில் இஸ்லாத்தின் மீது விருப்பம் ஏர்படவில்லையென்றாலும் அட்லீஸ்ட் வெறுப்பை குறைக்க நாம் பாடுபடவேண்டும். 

சொந்த ஊர் உத்தியோகம் செய்யும் ஊர் - குடும்பம் - குசலம் இரு தரப்பில் விசாரிக்க நாங்கள் அனைவரும் சற்று நெருக்கமாகி கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டோம். அப்பெண்மணியின் கணவர் அடிக்கடி வெளிநாட்டு செல்லும் வர்த்தகர் என்றும் அவருக்கு IT சப்போர்ட் மற்றும் டாகுமேண்டேஷனில் இந்த அம்மணி முடிந்த அளவிற்கு ஒத்தாசையாய் இருப்பதாகவும் கூறியது. மேலும் அத்தம்பதியருக்கு ஒரே பிள்ளையாகிய அவரின் மகன் அமெரிக்காவில் நாசா சம்மந்தப்பட்ட ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல நிலையில் இருப்பதாகவும், திருமணமாகி 9 வருடம் இப்போ மாட்டுப்பொண்ணும் (மருமகளும்) 4 வருடமா யு.எஸ் ஸில் கூடவே வேலை செகிறாள், என்றது. "இன்னும் குழந்தையில்லை" என்பதை மெல்லிய சோக இழையோடு சொல்லியது. மற்றும் நாட்டு நடப்பு - பொருளாதாரம் - நாம் பணிபுரியும் விதம் - மக்காவின் மகிமை - அரபுக்கலாச்சாரம்  - இந்திய உணவு என் பல வகையாக பேசிக்கொண்டிர்க்கையில் தஞ்சை நெருங்க நாங்கள் இறங்குவதற்கு தயாரானோம். பிரயாணத்தை தொடரும் அப்பெண்மணியிடம் விடை பெறுகையில் "மேடம், சவூதி திரும்பியதும் மெக்காவில் உங்கள் ஹிதாயத்திற்காகவும், மகனுக்கு புத்திர பாக்கியத்துக்காக பிரார்த்திப்போம்." என அருகில் சென்று வாக்களித்தேன்.. 

இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த தாய், ஏதோ முனங்கை நரம்பில் யாரோ சுண்டி விட்டது போல துள்ளிவிட்டது..ஆச்சர்யம்/ஆனந்தம்/நன்றியுணர்வு/கரிசனம் என பல ஒளிக்கதிர்களுடன் அம்முகம் பரிணமித்து பனித்த கண்களை பார்க்க தைரியமற்ற நாங்கள் பிளாட்பாரத்தில் டிராலிபேக்கை இழுத்துக்கொண்டு நகர...ரயில் எதிர்திசையில் நகர சில வினாடிகள் எதேர்ச்சையாக  நானும் என் துணைவியாரும்  திரும்பிப்பார்க்க... அப்பெண்மணி நகரும் ரயில் பெட்டியின் வாசலிலேயே நின்றுக்கொண்டு அந்த தாய் எங்கள் திசை நோக்கி இரு கரம் கூம்பியவளாய் உணர்ச்சி பிழம்பாய்...    

.........பாவமாய்............பிம்பமாய் ... புள்ளியாய்.....

பயணங்கள் புதிதில்லை. ஆனால்,
பாரங்கள் மட்டும் புதிது!!

-பயணங்கள் தொடரும்

வாழ்க வளமுடன் 
ரஃபியா
ஜித்தா
Share: