Tuesday, December 31, 2013

காவல்துறை அதிகாரியுடன் அதிரை தமுமுக பொறுப்பாளர்கள் சந்திப்பு

பட்டுக்கோட்டை வட்டார காவல்துறை அதிகாரியுடன் அதிரை தமுமுக கிளையின் பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.

சந்திப்பின்போது மாவட்ட செயலர் அகமது ஹாஜா, அதிரை நகர பொருளாலர் M.O செய்யது முஹம்மது புகாரி மற்றும் அதிரை தமுமுக நகர துணைச்செயலாளர் கமாலுத்தீன் ஆகியோர் உடனிருந்தனர்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள செல்லபாண்டியன் அவர்களுக்கு அதிரை தமுமுக சார்பில் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது.

புத்தாண்டு கொண்டாட்டமும், முஸ்லிம்களும்.

இன்று செவ்வாய்க்கிழமை இரவு 12 மணியுடன் 2013 நிறைவடைந்து 01-01-2014 புது வருடம் பிறக்கின்றது.

புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்?.

தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதற்காக அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது என்பது ஒரு விதத்திலும் அறிவுப்பூர்வமான விடயமாக இருக்க முடியாது. மாறாக தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே! என்று கவலைப்பட்டு, அதைப் பின்னோக்கிப்பார்த்து தனது கடந்த வருடத்தின் குறை நிறைகளை சரி செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற ஒரு அடியானாக தன்னை எவ்வாறு மாற்றிக்கொள்வது என்பதைப் பற்றி சிந்திப்பவனே உண்மையான புத்திசாலியாக இருக்க முடியும்.
இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரிய எழுச்சியையும், புரட்சியையும் ஏற்படுத்திய ஹிஜ்ரத் எனும் வரலாற்று சிறப்பு மிகு பயணத்தை வைத்துத்தான் இஸ்லாமிய காலண்டர் உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் துவக்கத்தில் ஏற்படாத புத்துணர்வும், எழுச்சியும் ஜனவரி முதல் நாள் இஸ்லாமிய உள்ளங்களுக்கு ஏற்படுகின்றது என்றால் இந்த அறியாமையை எங்கு போய் சொல்வது?.

அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ يُوقِنُونَ
“அஞ்ஞான காலத்துத் தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வை விட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?” (அல்மாயிதா 5: 50).

அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தராத அனைத்தும் அறியாமை (ஜாஹிலிய்யத்) என்பதை இந்த வசனம் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் நமக்குக் காட்டிய வழி எது?

“அறியாமை கால மக்களிடம் வருடத்தில் இரு நாட்கள் கொண்டாடி மகிழ்வதற்காக இருந்தன. அல்லாஹ்வின் தூதர் மதினாவுக் ஹிஜ்ரத் செய்து வந்தபோது, நீங்கள் வருடத்தில் விளையாடி மகிழும் இந்த இரு நாட்களை விட சிறந்த இரு நாட்களை அதற்குப் பகரமாக அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கின்றான். அவைகள்: நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் என குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள், நூல்: நஸாஈ).

ஹாபிஃழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இந்த நபி மொழியை விளக்கும்போது: ‘நிராகரிப்பாளர்களின் பெருநாட்களை கொண்டாடுவதும், அவர்களுக்கு ஒப்பாகுவதும் வெறுப்பான ஒரு விடயம் எனக் குறிப்பிடுகின்றார்கள்’.

அல்லாஹ்வின் தூதர் தனது உம்மத்துக்கு கொண்டாடி மகிழ்வதற்கு வழிகாட்டிய இரு பெருநாட்களும் எவை? என்பதை மிகத் தெளிவாக இந்த ஹதீஸ் கூறிக்கொண்டிருக்கின்றது. இதை விட்டு விட்டு வேறு வழிகளைத் தேடுவது அறியாமையிலும், வழிகேட்டிலும் தவிர வேறு எதில்தான் கொண்டு போய் சேர்க்கும் என்பதை இவர்கள் சற்று சிந்திக்க வேண்டாமா?

ஹிஜ்ரி ஆண்டின் துவக்கத்தை, முஹர்ரம் முதல் நாளை கொண்டாடுவதை கூடாது பித்அத் வழிகேடு என்று சொல்கின்றோம். அல்லாஹ்வின் தூதரிடம் அதற்கு எந்த முன்மாதிரியும் இல்லை என்கின்றோம். ஆனால் கிறிஸ்தவர்கள், ஏனைய சமூகங்கள் கொண்டாடும் ஜனவரி முதல் திகதியை கொண்டாடுகின்றோம். இது எவ்வளவு பெரிய முரண்பாடு, வழிகேடு என்பதை ஏன் நாம் சிந்திக்க மறுக்கின்றோம்?.

புது வருடம் பிறந்து விட்டது என்று அன்றைய இரவில் எத்தனை எத்தனை அனாச்சாரங்கள், விபச்சாரம், மதுபானம், இசை, ஆடல் பாடல்கள் இவைகள் ஒரு புறம், பட்டாசு வெடிகள் என்று பல கோடிக் கணக்கான ரூபாய்கள் வாரி இறைக்கப்படுவது மறு புறம். இவைகளுக்காக முஸ்லிம் நாடுகள் வாரி இறைக்கும் பணம் பல மில்லியன்கள் என்பது இன்னும் வேதனையான விடயம். உலகின் பல பாகங்களிலும் கோடிக்கணக்கான மக்கள் உண்ண உணவின்றி, தங்க இடமின்றி வாடி வதங்கிக்கொண்டிருக்கின்றனர், எந்தப் பயனும் இன்றி வீண் விரயம் செய்யப்படும் இந்த கோடிகளை அவைகளுக்கு பயன்படுத்தப்படுமென்றால் அந்த மக்கள் எவ்வளவு நிம்மதி அடைவர்.

இன்னும் பல மூட நம்பிக்கைகள் இந்நாளில் பரவி இருப்பதையம் பார்க்க முடியும்: கடன் வாங்குவதோ, கொடுப்பதோ கிடையாது, ஏனேனில் அன்றைய நாளில் கடன் வாங்கினாலோ, கொடுத்தாலோ அது தொடர்ந்து கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கை தான் இதற்குக் காரணம். இது தெளிவான மூட நம்பிக்கை இல்லையா? இது ஒரு உதாரணம் மாத்திரம் தான். இது போன்று எண்ணற்ற மூட நம்பிக்கைகள் அந்நாளில் பரவிக்கிடக்கின்றன.

அல்லாஹ்வின் தூதர் தனது வாழ்நாளில் எச்சரித்த ஒரு விடயத்தை இவர்கள் உண்மைப் படுத்தும் வேதனையான ஒரு நிலையைத் தான் இங்கு பார்க்க முடிகின்றது:

“நீங்கள் உங்களுக்கு முன் சென்றவர்களின் வழி முறைகளை சானுக்கு சான், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள் அவர்கள் ஓர் உடும்பு பொந்துக்குல் புகுந்து விட்டால் அவர்களைத் தொடர்ந்து நீங்களும் புகுந்து விடுவீர்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா குறிப்பீடுகின்றீர்
கள்? என்று நாங்கள் கேட்டபோது, வேறு யாரை? என்று அல்லாஹ்வின் தூதர் திருப்பிக் கேட்டார்கள்”. அறிவிப்பவர்: அபூ ஸஈத் (ரலி) அவர்கள், புஹாரி).

பலர் இந் நாளில் உதயத்துடன் புது வருடம் பிறந்து விட்டது (Happy New Year) என்று வாழ்த்துக்கள் தெரிவிப்பதையும், ஏனையவர்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலம், குறுஞ் செய்திகள் மூலம் ஈமெயில்கள் மூலம் வாழ்த்து தெரிவிப்பதையும் பரவலாக பார்க்க முடிகின்றது. ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் இந்த அறியாமைகளில், வழிகேடுகளில் வீழ்ந்துவிடாமல் எச்சரிக்கையாகவே இருப்பான். இன்னும் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்பட மாட்டான்.

“எவன் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகச் செயல்படுகின்றானோ அவனும் அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவனே” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவுத்).

இது எவ்வளவு கடும் எச்சரிக்கை, இதில் எவ்வாறு ஒரு முஸ்லிம் அலடச்சியமாக இருக்க முடியும்?

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் புவானா எனும் இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்திருந்தார். அதை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அனுமதி கேட்டபோது நபியவர்கள் அவ்விடத்தில் அறியாமைக் காலத்தில் ஏதும் சிலைகள் வணங்கப்பட்டனவா? அதற்கு இல்லை என்று சொன்னார்கள், அறியாமை கால பெருநாட்கள் ஏதும் அவ்விடத்தில் கொண்டாடப்பட்டனவா? என்று கேட்டார்கள் அதற்கும் இல்லை என்று சொன்னார்கள். அப்படியென்றால் உனது நேர்ச்சையை நிறைவேற்றும்” என்று கூறினார்கள். (அபூதாவுத்).

அல்லாஹ்வுக்காக நிறைவேற்றும் ஒரு நேர்ச்சை, அது நிறைவேற்றப்படும் இடத்தில் கூட பிற மதத்தவர்களுக்கு ஒப்பாகி விடக்கூடாது என்பதில் எந்தளவு அல்லாஹ்வின் தூதர் கண்டிப்பாக இருந்தார்கள் என்று பாருங்கள்.

அல்லாஹ்வுக்காக நாம் நிறைவேற்றும் பல வணக்கங்களில், நடை முறை வாழ்க்கை தொடர்பான விடயங்களில் யூதர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் நமக்கு பணித்திருக்கின்றார்கள். சூரியன் உதிக்கும், மறையும் நேரங்களில் சுன்னத்தான தொழுகைகள தொழுவதற்கு அல்லாஹ்வின் தூதர் தடை விதித்தார்கள். காரணம் அந்நேரத்தில் இறை நிராகரிப்பாளர்கள் தங்கள் கடவுள்களை வணங்கும் நேரம் என்பதற்காக (இந்த செய்தி முஸ்லிமில் பதிவாகியுள்ளது).

இவைகளை நாம் எடுத்துச் சொல்லும்போது சிலர் இது மத நல்லிணக்கத்திற்கு எதிரானது இது இஸ்லாத்தைப் பற்றித் தவறான ஒரு தோற்றத்தையே பிற மதத்தவரிடம் ஏற்படுத்தும் என்று கூற ஆரம்பித்து விடுகின்றனர். இது இவர்களின் வெறும் ஒரு வீணாண கற்பனையைத் தவிர வேறு இல்லை. அல்லாஹ் தனது தூதரைப் பற்றி கூறும்போது

” மேலும், (நபியே!) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்”. (68:4).

என்று போற்றுகிறான் அவரை விட அழகிய முறையில் இந்த உலகிற்கு நற்பண்புகளை போதித்தவர் வேறு எவரும் இருக்க முடியாது. அவர்கள் பிற மதத்தவர்களுடன் நடந்து கொள்ளும்போது எந்த உயரிய வழி முறைகளைக் கடைபிடித்தார்களோ அது தான் நமக்கு மிகச்சிறந்த முன் மாதிரி. அதல்லாத வேறு ஒரு முன்மாதிரி நமக்குக் கிடையாது.

கிறிஸ்மஸை, ஜனவரி முதல் திகதியை, ஏனைய மதத்தவர்களின் பண்டிகைகளைக் கொண்டாடியதன் மூலம், அல்லது அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தன் மூலம்தான் அல்லாஹ்வின் தூதர் மத நல்லிணக்கத்தை கடைபிடித்தார்கள் என்று இவர்கள் சொல்ல வருகின்றார்களா? அதற்கு துளியும் அன்னாரது வாழ்வில் ஆதாரம் இல்லை. மாறாக எந்த வகையிலும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்படக்கூடாது என்பதில்தான் அவர்கள் மிக உறுதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் கடைபிடித்த அந்த உயரிய வரையறைகள் மிகத் தெளிவாக சுன்னாவில் பதிவாகியுள்ளன. (அதை வேண்டுமானால் அல்லாஹ்வின் தூதர் பிற மதத்தவர்களுடன் எவ்வளவு பண்பாக நடந்துகொண்டார்கள் என்பதை தனிக் கட்டுரையாக விளக்கலாம்). ஆனால் நாம் இங்கு குறிப்பிடும் வரம்புகளை முரண்படாமல் நீங்கள் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மிடம் ஒரு ஹிந்து நண்பரோ, பௌத்த நண்பரோ விருந்துக்கு வருகின்றார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவரது உணவு சைவம்தான் என்பதை அறிந்து அதற்கேற்ப உணவைத் தயாரித்து அதைப் பரிமாறுகின்றோம். இது போன்று நமது நிலைகளையும், கொள்கை கோட்பாடுகளையும் அவர்களுக்கு கூறியிருப்போமென்றால் அவர்கள் நிச்சயமாக நம்முடன் அதற்கேற்பத்தான் நடந்துகொள்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர்கள் தெரிந்து வைத்திருக்கும் சில விடயங்களில் அவ்வாறு தான் நம்முடன் நடந்துகொள்கின்றார்கள் என்பதும் இதற்கு மிகப் பெரிய ஆதாரம். ஆனால் நாம் விட்ட தவறென்ன? நமது கொள்கை கோட்பாடுகளை சரியாக அவர்களுக்கு புரிய வைக்காததே. இதை உணராமல் நம்மில் சிலர் இஸ்லாத்தின் மீது குறை காண்பது அறிவீனமாகும்.

இறுதியாக அல்குர்ஆனின் ஒரு வசனத்தை உங்களுக்கு நினைவு கூறி நிறைவு செய்கின்றேன்:

وَاللَّهُ وَرَسُولُهُ أَحَقُّ أَنْ يُرْضُوهُ إِنْ كَانُوا مُؤْمِنِينَ
“அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான்.” (9: 62).

தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி
நன்றி : இஸ்லாம்கல்வி .காம் 

அதிமுக பொதுக்குழு தீர்மான விளக்க கூட்டத்தில் அதிரையர்கள் பங்கேற்பு

அதிமுக சார்பில் கட்சியின் பொதுக்குழு தீர்மான விளக்க கூட்டம் பட்டுக்கோட்டையில் நடந்தது.

கூட்டத்திற்கு, சட்டமன்ற தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் மதுக்கூர் துரை செந்தில், பட்டுக்கோட்டை சுப்பிரமணியன், பேரூர் செயலாளர்கள் அதிராம்பட்டினம் பிச்சை, மதுக்கூர் முகமதுஷெரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பட்டுக்கோட்டை நகர செயலாளர் வி.கே.டி.பாரதி வரவேற்றார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், கழக பேச்சாளர் குண சேகரன் ஆகியோர் பொதுக்குழு தீர்மானங்களை விளக்கிப் பேசினர்.

முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், மாவட்ட அவைத் தலைவர் மெய்க்கப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மலை அய்யன், மாவட்ட சிறு பான்மை பிரிவு செயலாளர் அப்துல்அஜீஸ், நகராட்சி தலைவர் ஜவஹர்பாபு மற்றும் நகர, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் பிரகாசம் நன்றி கூறினார்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்

மத்திய அரசு கொண்டுவரும் மீத்தேன் வாயு திட்டத்தினால் தஞ்சை மாவட்ட விவசாய நிலங்கள் பாதிக்கபடும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த பிரபல வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குறித்து நமது தளத்தில் சமீபத்தில் செய்தி  வெளியிட்டிருந்தது அறிவீர்கள். 

நேற்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த அத்திவெட்டி கிராமத்திற்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார். இரவு 8 மணி அளவில் அவர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் நம்மாழ்வார். (வயது 75). வேளாண்மை துறையில் உதவி அதிகாரியாக பணியாற்றி வந்த அவர் கடந்த 1970–ம் ஆண்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டு இயற்கை வேளாண்மையில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

இயற்கை உரங்கனை போட்டு சாகுபடி செய்ய வேண்டும் என்று ஊர், ஊராக சென்று பிரசாரம் செய்து வந்தார். இதற்கு முன்னோடியாக திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கடவூரில் ஒரு வேளாண்மை பண்ணையை அமைத்து, அதில் இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்து வந்தார். இதனால் இயற்கை வேளாண்மை விஞ்ஞானி என்று அழைக்கப்பட்டார்.
மரணம் அடைந்த நம்மாழ்வார் தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.இளங்கோவனின் சகோதரர் ஆவார். நம்மாழ்வாருக்கு சாவித்திரி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். நம்மாழ்வார் இறுதி சடங்குகள் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கடவூரில் இன்று (31-12-2013) செவ்வாய்க்கிழமை  நடைபெறுகிறது

எழுச்சியுடன் நடந்து முடிந்த இளம்பிறை மாநாடு - ஆளூர் ஷாநவாஸ்!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 'இளம்பிறை மாநாடு' திருச்சியில் மிகுந்த எழுச்சியோடு நடந்து முடிந்திருக்கிறது.

இதே திருச்சியில் அண்மையில் பா.ஜ.க நடத்திய இளந்தாமரை மாநாட்டை தூக்கி வைத்துக் கொண்டாடிய ஊடகங்கள், முஸ்லிம் லீக் மாநாட்டை கண்டுகொள்ளவே இல்லை. பா.ஜ.க மாநாட்டில் மோடியும், மற்றவர்களும் பேசியது போல வெறுப்பின் அடிப்படையிலான எந்தப் பேச்சையும் முஸ்லிம் லீக் மாநாட்டில் பார்க்க முடியவில்லை. முழுக்க முழுக்க அன்பை விதைக்கும் பேச்சுக்களும், சமூக நல்லிணக்கத்துக்கான தீர்மானங்களுமே ஓங்கி நின்றன. ஆனால், சமூகங்களைப் பிளவுபடுத்தும் சக்திகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவம், சமூகங்களின் இணைப்புக்காகக் களமாடுபவர்களுக்குக் கிடைக்காதிருப்பதுதான் பெரும் அவலம்.

முஸ்லிம் லீக் முதியவர்களின் கட்சி, முஸ்லிம்களிடம் செல்வாக்கு இழந்த கட்சி என்றெல்லாம் செய்யப்படும் பரப்புரைகள், எவ்வளவு பொய்யானவை என்பதை அம்பலப்படுத்தும் வகையில் இருந்தது திருச்சியில் கூடிய பெருங்கூட்டம். முஸ்லிம் சமூகத்தின் அடிநாதமாய் விளங்கும் முஹல்லா ஜமாஅத்துகளை ஒருங்கிணைத்ததன் மூலம், தமது வலிமை என்ன என்பதை முஸ்லிம் லீக் வெளிக்காட்டியுள்ளது. கட்சிக்கு கிளை இல்லாமல் கூட ஊர்கள் இருக்கலாம்; ஆனால், ஜமாஅத் இல்லாமல் எந்த ஊரும் இருக்காது. அந்த வகையில், எல்லா ஜமாஅத்களிலும் முஸ்லிம் லீக்குக்கு செல்வாக்கு உண்டு எனும்போது, அந்த வலிமை எதனோடும் ஒப்பிட முடியாத உயரத்தில் உள்ளது.

முஸ்லிம் லீக்குக்கு உள்ள தனிச்சிறப்பே இதுதான். இந்த வலிமை தான் அவ்வியக்கத்தை அதிகாரத்தை நோக்கி நகர வைத்தது. பிரிவினைக்கு முன்னும் சரி, பின்னும் சரி முஸ்லிம் சமூகம் அடைந்த அனைத்துப் பயன்களுக்கும் அவ்வியக்கமே காரணம்.

இந்தியாவிலேயே முதன்முதலில் சமூக நீதியைப் பெற்றவர்கள் முஸ்லிம்கள் தான். 1909 இல் மிண்ட்டோ மார்லி சீர்திருத்தங்களின் மூலம், தனி வாக்காளர் தொகுதி முறை, அரசுப் பணிகளிலும் அமைச்சரவையிலும் இடஒதுக்கீடு, அவை சரியாக நிறைவேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் என, முஸ்லிம்களுக்கான உரிமைகளையும் – அந்த உரிமைகளுக்கான பாதுகாப்பையும் பெற்றுத் தந்தது அகில இந்திய முஸ்லிம் லீக்.

பிரிவினைக்குப் பின் அகில இந்திய முஸ்லிம் லீக் என்பது பாகிஸ்தான் கட்சி என்றாகிவிட்ட நிலையில், இந்தியாவில் முஸ்லிம் லீக்கின் பெயரை உச்சரிக்கவோ, இந்திய முஸ்லிம்களை வழி நடத்தவோ நாதியற்றிருந்த சூழலில், துணிந்து தலைமை கொடுத்தவர் காயிதே மில்லத்.
இந்தியாவில் முஸ்லிம் லீக்கை கலைத்து விடுமாறும், காங்கிரசில் இணைந்து உயர் பதவிகளை பெற்றுக் கொள்ளுமாறும் நேரு போன்ற தலைவர்கள் வலியுறுத்தியபோது அதை அடியோடு நிராகரித்தவர் காயிதே மில்லத்.

பணக்கார முஸ்லிம்கள், பாரம்பரிய முஸ்லிம் லீக்கர்கள் பலரும் அரசின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி அடையாளத்தை மாற்றிக் கொண்ட போதும், தனித்து நின்று தனித்துவத்தை நிலைநாட்டியவர் காயிதே மில்லத்.

பிரிவினைப் பழி சுமத்தி முஸ்லிம்களை தனிமைப்படுத்த வல்லபாய் பட்டேல் போன்ற வகுப்புவாத சக்திகள் சூழ்ச்சி செய்தபோது, தன் மதிநுட்பத்தால் அதை முறியடித்து பொதுநீரோட்டத்தில் முஸ்லிம்களை இணைத்தவர் காயிதே மில்லத்.

திராவிட இயக்கத்தவர்களுடன் தமிழ் நாட்டிலும், கம்யூனிஸ்ட்களுடன் கேரளாவிலும் கூட்டணி கண்டு, தன் உத்திகளின் மூலம் அரசியல் அரங்கில் முஸ்லிம்களுக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தவர் காயிதே மில்லத்.

அரசு அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் தன் சுய லாபங்களுக்கு பயன்படுத்தாமல், முழுக்க முழுக்க சமூக மேம்பாட்டிற்காக பயன்படுத்தி, ஏராளமான கல்லூரிகள் உருவாகக் காரணமாயிருந்தவர் காயிதே மில்லத்.

தொலைநோக்கும், அர்ப்பணிப்பும், எதன் பொருட்டும் சமூகத்தைக் கூறுபோடாத தன்மையுடைய தலைமையும், அந்தத் தலைமையை வழிவழியாய்ப் பின்பற்றும் தொண்டர்களுமாக எழுந்தது முஸ்லிம் லீக்.

நல்ல அம்சங்கள் நிறைய இருந்தும், 1990 களுக்குப் பிந்தைய முஸ்லிம் அரசியலில் முஸ்லிம் லீக் பின்னடைவைச் சந்திக்க வேண்டி வந்தது ஏன்? என்பதும் ஆய்வுக்கு உரியது.

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தது முஸ்லிம் லீக். காங்கிரசுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்றார் அன்றைய முஸ்லிம் லீக் தலைவர் இப்றாகிம் சுலைமான் சேட். முடியாது என்றனர் மற்றவர்கள். வேறு வழியின்றி இயக்கத்திலிருந்து வெளியேறி தேசிய லீக்கைத் தொடங்கினார் அவர். முஸ்லிம் லீக் மீதான அதிருப்தியின் விளைவாக கேரளாவிலும், தமிழகத்திலும் புதிய புதிய முஸ்லிம் இயக்கங்கள் தோன்றின. அங்கே மதானி வீச்சுடன் புறப்பட்டார். இங்கே த.மு.மு.க தொடங்கப்பட்டது. புதிய இயக்கங்களை நோக்கி பெருங்கொண்ட இளைஞர்கள் சென்றபோது, அவர்களை ஈர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருந்ததுவே முஸ்லிம் லீக் செய்த பிழை.

கேரளாவில் தனித்துவத்தை நிலை நாட்டினாலும், காயிதே மில்லத்துக்குப் பிந்தைய முஸ்லிம் லீக் தமிழகத்தில் சற்று தடுமாறியது. குறிப்பாக காங்கிரசின் சின்னத்திலும், தி.மு.க.வின் சின்னத்திலும் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் போட்டியிட்டது மிகப்பெரும் பின்னடைவுக்கு வழிவகுத்தது. பிற கட்சிகளின் சின்னத்தில் நின்று சட்டமன்ற நாடாளுமன்ற அவைகளில் நுழைந்த போதும் – அங்கே முஸ்லிம்களின் குரலாகவே ஒலித்தனர் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள். எனினும், இந்த சின்னம் பிரச்சனை பெரும் பிரச்சனையாகி விட்டது. முஸ்லிம் லீக்கை விமர்சிக்கும் மற்ற அமைப்புகளுக்கு இது மிகப்பெரும் வாய்ப்பாகவும் அமைந்து விட்டது.

நவீன தொழில்நுட்ப வடிவங்களைக் கையாண்டு, இயக்கத்தின் வரலாறுகளை இளையதலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதில் முஸ்லிம் லீக் தலைமை கவனமின்றி இருந்ததும் அதன் பின்னடைவுக்கு இன்னொரு காரணம்.

ஆனால், இத்தகைய நிலைமைகள் இன்று மாறிவருவதைக் காண முடிகிறது. முஸ்லிம் லீக்கீன் 'ஏணி' சின்னத்திலேயே இனி போட்டியிடுவோம் என அறிவித்துள்ளனர். தொலைக்காட்சி, இணையதளம் ஆகிய நவீன ஊடகங்களில் முஸ்லிம் லீக்கினர் வலம் வருகின்றனர். மாணவர் மாநாடு, இளைஞர் மாநாடு என முஸ்லிம் லீக்கில் இளம் தலைமுறையினரின் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் தொடர வேண்டும்.

'முஸ்லிம் லீக்கை எவராலும் அழிக்க முடியாது; ஏனெனில், அது சமுதாயத்தின் சொத்து' என்றார் காயிதே மில்லத். கண்ணியமான அந்தத் தலைவரின் வாக்கு ஒருபோதும் பொய்யாகாது.

ஆளூர் ஷாநவாஸ்

Monday, December 30, 2013

தண்ணீரைத்தேடி புதிய முயற்சி (காணொளி)
நமதூர் குளங்களுக்குத் தண்னீர் கொண்டுவருவதற்காக கடந்த சில வாரங்களாக தன்னார்வலர்களுடன் இணைந்து அதிரை பேரூராட்சி சேர்மன் S.H.அஸ்லம் அவர்களின் முயற்சி, சிலரின் சூழ்ச்சியால் தடைபட்டுள்ளது.

எனினும், தண்ணீர் கொண்டு வரும் முயற்சியைக்கைவிடாமல் மாற்றுவழிகளில் தண்ணீர் கொண்டுவருவற்கான ஏற்பாடுகளையும் பரிசீலித்து வரும் சேர்மன் அஸ்லம் அவர்களுடன் அதிரை தன்னார்வலர்கள்.நன்றி: அதிரை சேர்மன் முகநூல் பக்கம்

அதிரையில் SDPI செயல்வீரர்கள் கூட்டம்

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சியின் தஞ்சை மாவட்டம் (தெற்கு) பகுதி செயல்வீரர்கள் கூட்டம் வரும் ஜனவரி-1,2014 அன்று அதிரை சேதுசாலையிலுள்ள சாரா திருமண மண்டபத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாவம் பாமரன்... ஊரு நிலவரம் அவனுக்கு தெரியாதுல...

செய்தி: தமிழகத்திற்கு 333 புதிய பேருந்துகளை முதலமைச்சர் ஜெயலலதா இன்று கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார் .

பாமரன்: என்னது நம்மூருக்கு பழையபடி 333 பஸ்ஸு வரபோவுதா ?

படித்தவன்: அடபோடா அது 333 பஸ்ஸ புதுசா விட்டுருக்காங்க அது திருவள்ளுவர்  த்ரி தேர்ட்டி த்ரி இல்ல  புரிஞ்சிக்கோ ...  இதுவரைக்கும் நம்மூரில்  இருந்து புடுங்கபட்டது என்னடா திரும்ப வந்து இருக்குது ... 

அடே.. உதரணமா நமூரில் இருந்து போன ரயிலு வரல ... அப்புறம் முன்னாடி இருந்த துறைமுகம் இல்ல ,அப்புறம் சட்டமன்ற தொகுதி இல்ல ,இன்னும் நிறைய இருக்குடா.. 

நான் கெளம்புறேன் ..வரட்டா .. டேய் ஒன்னு சொல்லுறேன் கேட்டுக்கோ வர்ற எலக்சன்ல யாரும் ஒட்டு போடமாட்டோம்ன்னு அறிவிச்சால் ஒழிய நம்மூருக்கு ஒன்னும் நடக்காது இத போயி ஊருல சொல்லு...   

Sunday, December 29, 2013

குளங்களுக்குத் தண்ணீர் வருவதை தடுத்துவிட்டார்களே! - அதிரை சேர்மன் வேதனை. (காணொளி )

பல ஆண்டுகளாக வரண்டு கிடந்த அதிரையின் குளங்களுக்கு, பல்வேறு முயற்சிகளுக்கிடையில் சிரமப்பட்டு கொண்டுவரப்பட்ட ஆற்றுநீரை, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தடுத்துவிட்டார்கள். அதிரை சேர்மனின் தன்னிலை விளக்கம்.

நன்றி:அதிரைசேர்மன் முகநூல் பக்கம்

அதிரையில் "இளம் இஸ்லாமியன்" மார்க்க அறிவு போட்டி முன்பதிவு ஆரம்பம்!

அதிரையில் வருகின்ற ஜனவரி மாதம் 15 ஆம் தேதி AL பள்ளியில் அணைத்து பள்ளி மாணவர்களுக்கும்  "இளம் இஸ்லாமியன்" என்னும் மார்க்க அறிவு போட்டி நடைபெற இருக்கிறது.

அமைப்பு சாரா அதிரை இளைஞர்களால் நடத்தப்படும் இப்போட்டிக்கு தற்போது அதற்கான முன்பதிவு மொய்தீன் ஜும்மா பள்ளி அருகாமையில் உள்ள பூங்காவில் நடைபெற்று கொண்டு இருக்கிறது.  


தவறாக வெளியிட்ட செய்திக்கு AX குழுமம் வருந்துகிறது !

விஜய் தொலைக்காட்சியின் நீயா? நானா? நிகழ்ச்சியில் மஃரிப் தொழுகை! என்ற தலைப்பில்  நமது தளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தோம் 

இதனை படித்த நமது வாசகர்கள். இந்த புகைப்படம் சமிபத்தில் சர்ச்சைக்குள்ளான  விஜய் டீவினால் ஒளிபரப்ப இருந்த புர்க்கா சம்பந்தமான நீயா நானா நிகழ்ச்சியின் பொழுது எடுக்கப்பட்ட மாதிரி புகை படம் என்றும் இதனை நீக்க கோரியும் வேண்டினர் . 

இதனை தொடர்ந்து நாமும் பல மீடியா நண்பர்களிடம் கேட்டபொழுது இதனையே கூறினர். மேலும் நமது தளத்தில் வெளியானதை தொடர்ந்து முகநூல் நண்பர்கள் இதனை பெருமளவில் பகிர்ந்து வருகின்றனர். இதனை தயவு செய்து தவிர்த்து  கொள்ள இதன் வாயிலாக அதிரை எக்ஸ்பிரஸ் கேட்டு கொள்வதுடன் இனி இது போன்ற தகவல்களை ஆய்வு செய்த பின்னரே பதிய உள்ளோம் என்பதனை தெரிவித்து கொள்கிறோம்  

இதற்காக அதிரை எக்ஸ்பிரஸ் குழுமம் வருத்தம் தெரிவித்து கொள்கிறது .

அதிரையையும் கொஞ்சம் கவனிங்க எம்.எல்.ஏ சார்!

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 5 லட்சம் செலவில் அமிர்தம் நகரில் புதிய சிமெண்டு சாலை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை ரெங்கராஜன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் ஜவகர்பாபு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதில் நகராட்சி ஆணையர் ரெங்கராசு, உதவி பொறியாளர் செங்குட்டுவன், நகர்மன்ற உறுப்பினர்கள் கண்ணன், நாடிமுத்து, செல்ல.நாகராஜன், நகர இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
நன்றி: தினத்தந்தி

அதிரையில் தொடர் திருட்டில் ஈடுபட்டவன் பிடிபட்டான்

அதிரையில் பெரும்பான்மையாக திருட்டு சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 5.00 மணியளவில் ஆலடி தெருவில் ஒருவன் திருட்டில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது அப்பகுதிவாசியால் திருடன் பிடிபட்டான்.

இவன் பல குழுக்களாக சென்று திருடி வந்தது தெரியவந்து உள்ளது.தற்போது காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டு பிடிபட்ட திருடனை தொடர்ந்து விசாரிக்க பட்டு வருகிறது.மேலும் காவல்துறையிடம் இது குறித்து கேட்டபோது:இவர்கள் அதிகளவில் முஸ்லிம் பகுதியாக இருந்தால் ஆண்கள் சுபுஹு தொழுகைக்கு செல்லும் போது வீட்டினுள் நுழைந்து திருடிகிரார்கள்.இவர்கள் குழுக்களாக
செயல்படுகிறார்கள்.பிடிபட்டவன் பல முறை  திருட்டில் ஈடுபட்டு சிறைக்கு சென்றவன் எனபது குறிப்பிடத்தக்கது.   

அதிரையில் "இளம் இஸ்லாமியன்" என்னும் மார்க்க அறிவு போட்டி..!எதிர்வரும் ஜனவரி 1 15 ஆம் தேதி அதிரை மாணவர்களுக்காக "இளம் இஸ்லாமியன்" என்னும் மார்க்க அறிவு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை எந்தவொரு  அமைப்பும் இன்றி அதிரை இளைஞர்களின் முயர்ச்சியில் இன்ஷா அல்லாஹ் நடைப்பெற உள்ளது. 

நோக்கம்:

1. தற்பொழுது நமதூர் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை எடுத்துக்கொண்டால் பலரும் உலக கல்வியின் மீது தான் ஆர்வமாக உள்ளனர்.

2. மேலும் பல மாணவர்கள் இஸ்லாமிய சட்ட திட்டங்களைவரலாறுகளை அறியாதவர்களாக உள்ளனர்.

3. எனவே நமதூர் மாணவர்களிடம் மார்க்க கல்வி மற்றும் மார்க்க சட்ட திட்டங்கள்வரலாறுகளை அறிய ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த போட்டியை நடத்த உள்ளோம்.

பரிசுகள்
பிரிவு-1
(6 முதல் வகுப்பு வரை)
பிரிவு-2
(9 முதல் 11 வகுப்பு வரை)
முதல் பரிசு

இரண்டாம் பரிசு

மூன்றாம் பரிசு
3000 (மதிப்பிலான பொருள்)

2000 (மதிப்பிலான பொருள்)

1000 (மதிப்பிலான பொருள்)
3000 (மதிப்பிலான பொருள்)

2000 (மதிப்பிலான பொருள்)

1000 (மதிப்பிலான பொருள்)

விதிமுறைகள்:

1. 100 மதிப்பெண் கொண்ட போட்டியான இது எழுத்துமுறையில் நடைபெறும்.

2. இந்த போட்டிக்கான கேள்வி பதில் கொண்ட புத்தகத்தை அதிரை டிஜிடெக் கம்பியூட்டர்ஸில் பெற்றுக்கொள்ளவும்.

3. இந்த போட்டிக்கு தங்கள் பெயரை பதிவதற்க்கு அதிரை முகைதீன் பள்ளி அருகே உள்ள பூங்காவில் இம்மாதம் 28-30 தேதி காலை 10:00- 12:30, மதியம் 2:00- 3:30 மணி வரை.

புத்தகம் பெறும் இடம்: அதிரை டிஜிடெக் கம்பியூட்டர்ஸ்காதிர் முகைதீன் கல்லூரி எதிரில்அதிராம்பட்டினம்.

போட்டிக்கு முன்பதிவு செய்யும் இடம்: அதிரை முகைதீன் பள்ளி அருகில் உள்ள பூங்காவில்

போட்டி நடைபெறும் இடம்: A.L. மெட்ரிக் பள்ளிஅதிராம்பட்டினம்.

நாள்: 15- 01- 2014                    
நேரம்: காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை

மேலும் விபரங்களுக்கு: 9597773359, 7200563300, 7200364700, 8122848088                                                                                                                       இங்ஙனம்,
                                                                                                    இளம் இஸ்லாமியன் கமிட்டி
தகவல்: அதிரை பிறைAAMF-ன் டிசம்பர் மாத கூட்டம்

                                                      பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்,

                                                     அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்],

இடம் : து.தலைவர்.முஹம்மது இஸ்மாயில்.

தேதி: 27.12.2013, வெள்ளிக்கிழமை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமீரக  AAMF-ன்  டிசம்பர் மாத  செயற்குழு  கூட்டம் 

தலைவா்  A.தமீம்  அவா்கள்  தலைமையில்  நடைபெற்றது.  இக்கூட்டத்தில் ஆலோசித்து 

1. கடந்த ஆண்டைப்போன்று, AAMF-ன் 2014-ம் ஆண்டுக்கான காலண்டர் விஷயமாக 

விவாதிக்கப்பட்டு அதனை அச்சடிப்பது என்று முடிவு செய்யப்பட்டு, இதனுடைய 

செலவுகளை அனைத்து மஹல்லாஹ் நிர்வாகிகள் பகிர்ந்து கொள்வது என்றும் 

முடிவு செய்யப்பட்டது.

2. இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி மாதம் 24-ம் தேதி அன்று, புதிய நிர்வாகிகளின் 

தேர்வு (ஒவ்வொரு மஹல்லா சார்பில் பறிந்துரைக்கப்பட்ட 3 நபர்களை கொண்டு) 

சகோ.இபுராஹீம் டேய்ரா இல்லத்தில் நடைபெரும்.

3. கூட்டத்திற்கு வராத பிற மஹல்லாஹ் உறுப்பினர்களை தொடர்பு கொண்டு, அடுத்த 

கூட்டத்திற்கு கண்டிப்பாக வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பது.
 
Saturday, December 28, 2013

இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் இளம்பிறை மாநாடு (காணொளி )
விரிவான செய்திகள் விரைவில் ...

புகைப்படம் உதவி: அப்துல் ரஹ்மான்

மரண அறிவிப்பு (ஆஸ்பத்திரி ரோடு ஃபாத்திமா அம்மாள்)

அஸ்ஸலாமு அலைக்கும் 

ஆஸ்பத்திரி ரோடு  அபுல் காசிம் அவர்களிம் மனைவியும், சரபுதீன் (ஜித்தா ஜி.சி.டி), தமீம் அன்சாரி ஆகியோரின் தாயாருமாகிய ஃபாத்திமா அம்மாள் இன்று (சனிக்கிழமை) காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா இன்று மாலை தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

அன்னாரது ஹக்கில் துஆ செய்வோமாகஅதிரையை அலங்கரிக்கும் ப்ளாஸ்டிக் பந்தல்கள்
அதிரையில் தற்போது கல்யாண சீசன்.கடந்த வாரத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளன.

திருமண வீடுகளை அடையாளம் காட்டுவது பந்தல்கள். கொல்லையில் சமைக்கவும், விருந்தினர்களை சர்பத், காப்பி கொடுத்து வரவேற்று உபசரிக்கவும் பந்தல்கள் பயன்படுகின்றன.

பல்லாண்டுகளாக கீற்று பந்தல்தான். பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பிறகு தகர பந்தலும் பயன்படுத்தப்பட்டன. தற்போது ப்ளாஸ்டிக் பந்தல் அறிமுகம் ஆகியுள்ளது. 

கல்யான வீடுகளின் அழகுக்கு அழகு சேர்க்கும் இந்தப் பந்தல்கள் அதிரைக்கு புதுமையானது.

அரை மணிநேரத்திற்குள் இதை நிறுவ முடிவதால் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பந்தல்கள் பார்க்க மிகவும் அழகாகவும் உள்ளன.

திருச்சி இளம்பிறை பேரணி, மாநாடு - தயார் நிலையில் திருச்சி!

திருச்சியில் இன்று மாலை நடைபெறும் இளம்பிறை பேரணி மற்றும் மாநாட்டிற்கு திருச்சி மாநகரம் தயார் நிலையில் உள்ளது.

மாலை 03:30 மணிக்கு கோஹினூர் திரையரங்கத்திலிருந்து பேரணி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


லண்டன் FATV யில் வெளியான கவியன்பன் கலாமின் கவிதை(காணொளி)

பாடல் எழுதியவர் : கவியன்பன் அபுல் கலாம்
பாடல் பாடியவர் : அதிரை ஜாஃபர்

பொருளீட்டும் போதினிலே
......பொறுமையைநீ போற்றிடுவாய்
இருள்நீங்க வாழ்வினிலே
.......இடுக்கணையும் மாற்றிடுவாய்!

சதிகாரக் கும்பலையும்
.......சரியாகக் கண்டிடுவாய்
அதிகாரத் தோரணையை
........அழகாக வென்றிடுவாய்!

குறைகூறும் மக்களையும்
.......குணத்தாலே மாற்றிடுவாய்
மறைகூறும் பாதையினை
......மகிழ்வாக ஏற்றிடுவாய்!

பணியாவும் திட்டமுடன்
..........பகிர்ந்தேநீ செய்திடுவாய்
துணிவானத் தோற்றமதைத்
........துணையாகக் கொய்திடுவாய்!

கனிவான வார்த்தைகளைக்
........கவனித்தே பேசிடுவாய்
இனியாவும் வெற்றியாக
......இதமாக வாதிடுவாய்!

அறங்கூறும் பாதையிலே
,,,,,.,அசையாமல் நின்றிடுவாய்
புறங்கூறும் வாக்குகளைப்
.......புறந்தள்ளிச் சென்றிடுவாய்!

தெளிதூய்மை ஆடையிலே
.......தெரிவாக்கிப் பூணிடுவாய்
ஒளிவீசும் வாய்மையினை
......ஒழுக்கத்தைப் பேணிடுவாய்!

பலம்கொண்ட கல்வியாலே
......பயன்கொள்ளச் சேர்த்திடுவாய்
நலம்காட்டும் ஆற்றலினால்
......நயமூட்டப் பார்த்திடுவாய்!

Friday, December 27, 2013

மரண அறிவிப்பு (கீழத்தெரு அரிசிக்கடை M.ஹாஜா அலாவுதீன் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும்

கீழத்தெருவை சேர்ந்த பாட்டன் வீட்டு மர்ஹூம் மஸ்தான் கனி அவர்களின் மகனாரும், மர்ஹூம் தியாகி S.S.இப்ராஹீம் அவர்களின் மருமகனும்   மர்ஹூம் பக்கீர் முகம்மது, மர்ஹூம் செய்கு நசுருதீன் ஆகியோரின் சகோதரரும் , H.அலிஅக்பர்கான், H.நிஜாமுதீன்,H.இம்ரான்கான் ஆகியோரின் தகப்பனாருமாகி அரிசிக்கடை ஹாஜா என்கிற M.ஹாஜா அலாவுதீன் அவர்கள் (26/12/2013) இன்று இரவு 8.00 மணிக்கு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா 27/12/2013 (வெள்ளிக்கிழமை)காலை 10 மணியளவில் பெரிய ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

தகவல்: ADIRAIEAST GROUP
நன்றி: theadirainews

மூன்றாம் பருவ பாடபுத்தகங்கள் எப்போது வழங்கப்படும்?

தமிழகத்தில் 1 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முப்பருவத்தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

இதற்கான பாடப்புத்தகங்கள் பள்ளி தொடக்கத்தில் ஒரு கட்டமாகவும், காலாண்டு தேர்வு முடிந்து பள்ளி தொடங்கியவுடன் 2–ம் கட்டமாகவும், அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளி தொடங்கியவுடன் 3–ம் கட்டமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது அரையாண்டு தேர்வு விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 3ஆம் பருவ தேர்விற்கான பாடப்புத்தகங்கள் வரவழைக்கப்பட்டு அந்தந்த கல்வி மாவட்டங்களில் வைக்கப்பட்டு இருந்தன. இந்தப்பாடப்புத்தகங்கள் நேற்று முதல் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.

தஞ்சை கல்வி மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை தஞ்சை மேம்பாலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி தமிழரசு நேற்று வழங்கினார். 

மேலும் 6–ம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புத்தகப்பையினையும், சத்துணவு சாப்பிடும் அனைத்து மாணவர்களுக்கு 4–வது செட் சீருடைகளையும் வழங்குவதற்காக அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியரிடம் அவர் வழங்கினார். 

இதே போல் கும்பகோணம், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் இருந்தும் பாடப்புத்தகங்கள், புத்தகப்பை, சீருடை அந்தந்த பள்ளிகளுக்கு நேற்று வழங்கப்பட்டன.

பின்னர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி தமிழரசு நிருபர்களிடம் கூறியதாவது:–

தஞ்சை மாவட்டத்தில் 6–ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 33 ஆயிரத்து 307 பேருக்கும், 7–ம் வகுப்பு பயிலும் 32 ஆயிரத்து 664 பேருக்கும், 8–ம் வகுப்பு பயிலும் 33 ஆயிரத்து 573 பேருக்கும், 9–ம் வகுப்பு பயிலும் 36 ஆயிரத்து 105 பேருக்கும் என மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 679 மாணவ, மாணவிகளுக்கு இந்த பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

தஞ்சை கல்வி மாவட்டத்தில் 84 பள்ளிகளிலும், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 136 பள்ளிகளிலும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 83 பள்ளிகளிலும் என மொத்தம் 303 பள்ளிகளில் இந்தப்பாடப்புத்தகங்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினத்தந்தி 

அதிரை சிறுவர்கள் கால்பந்து தொடர் போட்டி


நமதூரில்  14 வயதுக்கு உட்பட்ட  சிறுவர்கள் நடத்தும் கால்பந்து தொடர்போட்டி வெள்ளிக்கிழமை 27 12 2013 முதல் 30 12 2013 வரை நடைபெற இருக்கிறது.

இதைக் கண்டு சிறுவர்களை ஊக்கப்படுத்தி எங்களை விளையாட்டு துறையிலும் முன்னேற கேட்டுக் கொள்கிறோம்.

இங்ஙனம்
முகம்மது ஜாபிர்
S/O  A.R. சேக் மதீனா
(LKFC நண்பர்கள் குழு சார்பாக)

Thursday, December 26, 2013

முஸ்லிம் லீக் இளம்பிறை பேரணி இடம் மாற்றம்!!இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் மற்றும் அரசியல் விழிப்புணர்வு மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் எதிர்வரும்  டிசம்பர் 28ம் தேதி நடைபெறுகிறது.


இந்த இளம்பிறை மாநாட்டில் முஸ்லிம் லீக் மாணவரணி (MSF), இளைஞர் அணி (MYL) , தொழிலாளர் அணியினர் (STU)a- பல்லாயிரக்கணக்கில் பங்கேற்கும் "இளம் பிறை பேரணியும்' நடக்கிறது. 


பெரும் எண்ணிக்கையில் செயல் வீரர்கள் பங்கேற்பதையொட்டி, காவல்துறை உயர் அதிகாரிகள் கேட்டுகொண்டதற்கிணங்க, ஏற்கனவே அறிவித்த இடத்திற்கு பதிலாக திருச்சி, தில்லை நகர் சாலைரோடு, கோஹினூர் தியேட்டர் அருகில் இருந்து ‘இளம்பிறை எழுச்சி பேரணி' புறப்பட்டு தென்னூர் உழவர் சந்தை மைதானத்தை சென்றைடையும் என்று தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.அபுபக்கர் தெரிவித்தார்.


நாடாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் தமிழக முஸ்லிம்கள் தங்களது உரிய பிரதிநித்துவத்தைப் பெறுவதை இம்மாநாடு உறுதி செய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 


நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரையில் 4 தொகுதி களை முஸ்லிம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதும், அதில் இரண்டு தொகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு தர வேண்டும் என்பதும் எங்கள் நிலைப்பாடு. 

இத் தொகுதிகள் குறித்து நாங்கள் ஆய்வு மேற் கொண்டு வருகிறோம். எங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் நாங்கள் `ஏணி’ சின்த்தில் தேர்தலை சந்திப்போம் என்றும் அவர் கூறினார்.

Source : Mutthupettai Express

அமெரிக்க அதிரையர்கள் ஒன்றுகூடல்!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பே ஏரியா தமிழ் சங்கமும் அதிரையர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி சகோதரர் மீயன்னா சலீம் அவர்களின் இல்ல அலுவலக கான்பரென்ஸ் ஹாலில் நடைபெற்றது.

 இன்று அமெரிக்காவில் டிசம்பர் 25 விடுமுறை தினம் ஆதலால் அதிரையர்களும் தமிழ் சங்கத்தை சேர்ந்தவர்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டு விருந்துண்டு மகிழ்ந்து பரஸ்பரம் நலம் விசாரித்துகொண்டனர் .

இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் அனைவரும் விளையாடி மகிழ்ந்தனர். மதிய உணவு மற்றும் மாலை ஒன்று கூடல் ஏற்பாடுகளை சகோதரர் மீயன்னா சலீம் அவர்களும் சகோதரர் கபூர் அவர்களும், தமிழ் சங்கத்தை சேர்ந்த சகோதரர் கம்பம் அப்துல்லாஹ் அவர்களும் சகோதரர் தஞ்சை  வல்லம் ஜுபைர் அவர்களும்   சகோதரர் கம்பம் அசீம் அவர்களும் மற்றும் பே ஏரியா தமிழ் சங்கத்தை சேர்ந்தவர்களும் மிக சிறப்பாக செய்திருந்தனர் .                                            அதிரைக்கு வரும் பாகிஸ்தான் விருந்தாளிகள்

அதிரைக்கு வரும் பாகிஸ்தான் விருந்தாளிகள்

இன்றைய தினகரன் நாளிதழில் வந்துள்ள செய்திதான் இது. பயப்படும்படி ஒன்றுமில்லை அமெரிக்கா, ஜப்பான், சைபீரியா, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து இருபதுக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வருவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.சிலகாலம் அதிரையில் தங்கியிருந்து முட்டையிட்டு பிறகு குஞ்சுகளுடன் தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் செல்லும் இந்தப்பறவைகளுக்குத் தெரியுமாநாடுகளின் பெயரால் அரசியல்வாதிகள் செய்யும் அட்டகாசம்?


தாகமெடுத்த தண்ணீர்! (சுனாமி நினைவு)

குடியிருந்த வீடும் போச்சு
கூண்டோடு ஊரும் போச்சு
பழகிய முகங்கலெல்லாம்
பலதிசையில் சடலமாச்சி
இதையெல்லாம் பார்க்கத்தானா
என்னை மட்டும் விட்டுபோச்சு?

தங்கமே தங்கமென்று
தாலாட்டி வளர்த்த ரெண்டு
பிள்ளைகள் உயிரைக்கொண்டு
போனதே பேயலை இன்று!

தாய் தகப்பன் தண்ணியோட
தம்பியவன் மன்ணுக்குள்ள
நான் மட்டும் கரையொதுங்கி
நாதியற்று போனேனே.

அந்திக்கு வீடுவந்தா
அன்போட செல்லமக
கழுத்தை கட்டிக்கொண்டு
கன்னத்தில் முத்தமிடும்.
முத்தமிடும் சிரிப்பலையை
முறித்துவிட்ட பேரலையே!
இனி...
அந்திவரும் நாள்தோறும்
அந்த முத்தம் யார்தருவா?

நீரும் நிலமும்
நிகழ்த்திய வன்முறை...
கல்லறையானதே - ஒரு
கடலோர தலைமுறை.

தாங்காது கடலம்மா!-நீ
தந்த துயர் போதுமம்மா.
இன்னோரு முறைவந்தா
ஏமாந்து போயிடுவ
மனிதரெல்லாம் மாண்டபின்
மறுபடி நீ என்ன செய்வ?
தாகம் தீர்ந்ததா தண்ணீரே!?
உன்னால்...
தரணி சிந்துதே கண்ணீரே!.
------------------

இந்த வாரம் மூன் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான வெளிச்சம் நிகழ்ச்சியில் சுனாமி பற்றிய ஒரு தொகுப்பை திரு ராய் தொகுத்து வழங்கியுள்ளார் அதன் காணொளி இதோ.