Thursday, January 31, 2013

மரண அறிவிப்பு

அதிரை நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் முகிஅல்லா பிச்சை அவர்களின் மகனும் அஹ்மத் அலி அவர்களின் சகோதரரும்,  ரபிக் அஹ்மது,அஹ்மது அஸ்லம் ஹாஜா ஷரிப்,அபுல் ஹசன் ஷாதுலி (sis முஹம்மது) ஆகியோறின் தந்தையும், ஜாகிர் உசைன் அவர்களின் மாமனாருமான ஹாஜி M.K.A.முஹம்மது அபூபக்கர் அவர்கள் இன்று மாலை 4:40 மணிக்கு வபாதாகி விட்டார்கள். அன்னாரின் நல்லடக்கம் நாளை (1-2-13) காலை 9.00 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நடைபெறும்.

 இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
 


எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்.

அதிரை மாணவ/மாணவிகளின் கனிவான கவனத்திற்கு

அன்பார்ந்த மாணவ/மாணவிகளே ! பெற்றோர்களே! அஸ்ஸலாமு அலைக்கும், தற்போது உள்ள காலம் தேர்வுகாலம் முக்கியமாக எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வு காலம். காலமெல்லாம் பள்ளிக்கூடம் என்று எதற்காக சென்றோமோ அந்த நோக்கத்தை அடையக்கூடிய தேர்வுதான் பிளஸ் 2 தேர்வு இதைக்கொண்டுதான் வாழ்க்கையின் இலட்சியம் தொடக்கமாகிறது. என்னதான் பதினொன்று வருடங்கள் படித்திருந்தாலும் அதன் பிரதிபலன் இந்த பன்னிரெண்டாம் வருடத்தில்தான் கிட்டும். ஆகவே மாணாக்கர்களே உங்கள் வருங்கால நோக்கம் என்ன என்று தெரியாமல் ஏதோ பள்ளிக்கு வந்தோம் போனோம் என்று நினைக்காமல், இருக்கும் காலத்தை எதிர்கால நோக்கத்தை கருத்தில் கொண்டு பயன்படுத்தினால் நல்ல முன்னேற்றத்தை அடையலாம் என்பது திண்ணம்,

தேர்வுஇன்னும் ஒரு மாதத்தில் துவங்க இருக்கறது. இந்த ஒரு மாதத்தை நன்றாக பயன்படுத்தினால் கண்டிப்பாக நீங்கள் நல்ல பலனை அடையலாம். மேலும் இதற்கான முயற்சியை மாணவர்கள் எடுக்க வேண்டும் அதற்காக பெற்றோர்களும் அவர்களுக்கான ஊக்கத்தை கொடுக்க வேண்டும். நமதூரில் அதிகபடியான மாணவர்கள் படிப்பை பள்ளியோடும் டியூசனுடனும் நிறுத்திவிடுகின்றனர். இதுதான் இந்த காலத்தில் உள்ள மாபெரும் தவறு. வீட்டிலும் ஓரளவு பள்ளி, டியூசனில் படித்ததை திருப்பி பார்க்க வேண்டும். அதிகரிக்கும்

1.இந்த மாதம் (பிப்ரவரி) கடும் குளிர் உள்ள மாதம். ஆகவே தயவு கூர்ந்து பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வெளியில் சுற்றுவதை தவிர்த்துக்கொள்ளவும். ஏனெனில் ஜலதோஷம், காய்ச்சல் ஏற்படலாம். ஒரு மாதத்தையும் மருத்துவமனை, மருந்துகளில் செலவிட நேரிடும்.
2.மாணாக்கர்கள் அதிகாலையிலேயே எழுந்து படிக்கும் பழக்கத்தை இந்த மாதத்திலேயே துவங்கவேண்டும். அதிகாலை 4.00 மணிக்கெல்லாம் எழுந்து தஹஜ்ஜத் தொழுதுவிட்டு ஆரம்பம் செய்யுங்கள் கண்டிப்பாக பலன் கிடைக்கும். அதிகாலை நேரம் அமைதியும், அல்லாஹ்வின் அருளும் இறங்கும் நேரம். மேலும் உடல் முழுதும் ஓய்வெடுத்து புத்துணர்வுடன் இருக்கும் நேரம். ஓரிரு நாட்கள் சிரமமாக இருந்தாலும் அடுத்தடுத்த நாள் பழகிவிடும்.
3.அதிகாலை மற்ற நேரங்களை விட நினைவாற்றல் கூடும் நேரம் ஆகவே மற்ற நேரங்களில் 5 முறை படித்து மனதில் ஏற்றுவதைக்காட்டிலும் ஓரிரு முறையுடன் மனதில் பதியக்கூடிய நேரம்.
 
4.பிள்ளைகளின் அதிகாலை படிப்பிற்கு பெற்றோர்கள் உதவிட வேண்டும் தங்கள் பிள்ளைகளை 4.00 மணிக்கே எழவைக்க வேண்டும், தஹஜ்ஜத் தொழ வைத்து அவர்களுக்காக படிக்கும்போது தூக்கம் வராமலிருக்க தேனீர் போன்றவைகள் கொடுக்க வேண்டும்.
 
5.மாணவர்கள் ஒரு பகுதியை மனதில் பதிய வைத்தவுடன் ஓரிரு முறை எழுதி பார்த்துவிடவும். என்னதான் படித்தாலும் ஒருமுறையாவது எழுதி பார்த்தால்தான் மனதில் நீண்டநாள் நிற்கும். இது அனுபவபூர்வமான உண்மை.
 
6.காலையிலேயே எழுவதற்காக இரவு படுக்கைக்கு 10 மணிக்கு சென்றுவிடவும். இரவு நேரத்தில் (10 மணிக்கு மேல்) படிப்பது உடல் மன சோர்வு ஏற்படுவதுடன் படிப்பது எளிதில் மனதில் பதியாது நீண்ட நாட்களுக்கு நினைவில் நிற்காது.
 
7.படிக்கும் போது ஒரே பாடத்தை படிக்காமல் அனைத்து பாடத்தையும் மாறி மாறி படிக்கவும் ஒரு நாளைக்கு அனைத்து பாடங்களையும் படிக்கவும் அதற்கு தகுந்தாற்போல் நேரத்தை பிரித்து கொள்ளவேண்டும்.
 
8.புதிய பாடங்களை அதிகாலையில் படிக்க வேண்டும். ஆகவே புதிய பாடத்திற்காக அதிகாலை நேரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
 
9.தேர்வு முடிவில் அதிகமான மாணவர்கள் தோல்வியை தழுவுவது கணித பாடத்தில்தான் ஆகவே கணித பாடத்திற்கு மற்ற பாடத்தை காட்டிலும் சிறிது அதிக நேரத்தை ஒதுக்கவும். கணித பாடத்தின் தீர்வுகளை வெருமனே பார்ப்பது என்பது அதிக பலன் தராது. ஆகவே அந்த தீர்வுகளை ஓரிரு முறை பார்க்காமல் எழுதி பார்ப்பதுதான் நீண்ட நாட்கள் நினைவில் நிற்கும்.
.
 10.சென்றவருடங்களின் அரசு கேள்வி தாள்களில் திரும்ப திரும்ப கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை நன்கு படித்து வைத்துக்கொள்ளவும். இவை கல்விச்சோலை இணய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் அதற்கான இணைப்பு http://www.kalvisolai.info/2012/03/tamil-nadu-plus-two-study-materials.html
 
11.முக்கியமாக பாடத்தை சிறிது சிறிதாக படித்தவுடன் எழுதி பார்த்துவிடவும். இதனை பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு ஆர்வமூட்டவேண்டும். அதிகமான மாண்வர்கள் இதனை செயல்படுத்துவது இல்லை. எனவே தான் அரசாங்கமே ஒரு வருடத்தில் (இந்த காலங்களில்) ஒரு மாதத்திற்கு ஒருமுறை தேர்வு நடத்துகிறது என்பதை அறியவும்.
 
12.தற்போது அரசே ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டு மூன்று நாட்கள் இடைவெளி கொடுத்துள்ளது. அதில் அனைத்தையும் படித்து விடலாம் என்பது அதிகமான மாணாக்கர்களின் நினைப்பு. இது மிகவும் தவறு, அந்த இடைவெளியான நாட்களில் படித்ததை திருப்பி பார்க்கலாமே தவிர மற்றபடி புதிதாக படிப்பது அந்த பதற்றமான சூழ்நிலையில் நினைவில் நிற்காது என்பதை மாணாக்கர்கள் அறிந்துக்கொள்ளவேண்டும்.  

13.பிள்ளைகள் நினைவாற்றல் குறைந்தவர்களாக இருக்கின்றனர் காரணம் முன்பு இருந்த உணவுகளில் உள்ள கலோரி சத்துகள் இப்பொழுது உண்ணும் உணவில் இல்லை. அனைத்தும் செயற்கை உரத்தில் வளர்ந்த உணவுகள். ஆகவே உணவில் சத்துள்ள உணவாக நினைவாற்றல் வளர்க்க கூடிய உணவாக இருக்கும் காலத்திலாவது கொடுக்கவும். ( அன்றாடம் வெண்டைக்காய், வல்லாரை போன்றவைகளை கொடுக்கவும் இதனால் நினைவாற்றல் )..
 
14.மாணவர்கள் தனது குடும்ப பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்த்துக்கொள்ளவும். அதுபோல் பெற்றோர்கள் இந்த விசயத்தில் கண்காணிப்பாக இருக்கவேண்டும்.
 
15.அதிக மின்வெட்டு ஏற்படுவதால் நமதூர் கல்வி நிறுவனங்கள் தங்களது பள்ளிகளில் இரவு நேர படிப்பிற்காக இன்வெர்டர் வசதியை செய்துள்ளன. அதனை மாணவர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
தொகுப்பு:காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்.

தகவல்:சஹாபுதீன்