Wednesday, July 31, 2013

TIYA இஃப்தார் அழைப்பிதழ்



தகவல்: சகோ. முஹம்மது மாலிக்

சென்னை மஃமூர் பள்ளி கியாமுல் லைல் தொழுகை!

சென்னை மன்னடி அங்கப்பன் நாயக்கன் தெரு புகழ் பெற்ற (மஸ்ஜிதே மஃமூர்) மஃமூர் பள்ளிவாசளில் நேற்று நோன்பு 21 ஆம் இரவை சிறப்பிக்கும் வண்ணம் நடைபெற்ற கியாமுல் லைல் தொழுகையில் சுமார் 1500க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

இத்தொழுகையி ஏராளமான அதிரையர்களும் கலந்து கொண்டனர். தொழுகையின் முடிவில் அனைவருக்கும் நார்ஸா வழங்கப் பட்டது.

ரமழானின் இறுதி பத்து நாட்கள் (மீள்பதிவு) வீடியோ

ரமழானின் இறுதி பத்து நாட்கள் (மீள்பதிவு)

சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தஃவா நிலையம்)






நன்றி: இஸ்லாம் கல்வி டாட் காம்

Tuesday, July 30, 2013

ரமளானில் வாரி வழங்கிடுவீர்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் சேவை நிறுவனங்களுக்கு ரமளானில் வாரி வழங்கிடுவீர்கள்!

தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி
அவனியாபுரம் , மதுரை.

ஒரு வருட ஆ­லிமா பட்டப்படிப்பு வகுப்பில்  நபி வழிச் சட்டங்கள், அரபி இலக்கணம், நபி (ஸல்) அவர்கள் வரலாறு, திருக்குர்ஆன் ஓதும் சட்டங்கள், இஸ்லாமியக் கொள்கை விளக்கம், அரபி மொழியியல், வாரிசுரிமைச் சட்டங்கள், சொற்பயிற்சி, கட்டுரை பயிற்சி, சிறு தொழில் பயிற்சி, கணணி பயிற்சி மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் தகுதியான ஆசிரியைகளைக் கொண்டு பாடம் நடைபெறுகிறது.


அல் ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்
திருமங்கலம் ,  மதுரை.

இஸ்லாத்தின் உண்மையான கொள்கையை புரிந்து கொண்டு அதை முழுமையாக அறிவதற்காக ஏராளமானோர் வருகை தருகிறார்கள். அவர்களில் ஆண்களுக்காக மதுரையில் மூன்று மாதம் இஸ்லாமிய பயிற்சி ஆண்கள் தஃவா சென்டரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாடு மற்றும் கண்காணிப்பில் அளிக்கப்படுகின்றது.

பாடத்திட்டங்கள்:

இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை
திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி
துஆ மனனம்
தொழுமை முறை
நபிகளார் வரலாறு
இஸ்லாமிய ஒழுங்குகள்
மேலும் பயிற்சி காலத்தில் உணவு, அத்தியாவசியத் தேவைகள், தங்குமிடம், மருத்துவ செலவுகள், திருக்குர்ஆன் மொழபெயர்ப்பு, இஸ்லாமிய நூல்கள், போக்குவரத்து செலவுகள் போன்ற அணைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றது.
இதை போன்று இலவசமாக  இஸ்லாத்தை தழுவியதை அதிகாரப்பூர்வமாக்கும் அபிடவிட்டும் போட்டுத் தரப்படுகின்றது.

 தொலைபேசி : 9790892220 – 9842199976


இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்.

செலவு விபரங்கள்:


அர்ரஹீம் முதியோர் இல்லம்
பண்டாரவடை, தஞ்சை.

பிள்ளைகள் மற்றும உறவினர்களால் கைவிடப்பட்டவர்களுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்டத்தில் முதியோர் இல்லம் நடத்தி வருகின்றது.



இதில் சேருவதற்கான நிபந்தனைகள்:

பிள்ளைகள் மற்றும் உறவினர்களால் கைவிடப்பட்டவராக இருக்க வேண்டும்
அவருடைய தேவையை (மலம் ஜலம் கழித்தல், குளித்தல் மட்டும்) அவரே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முதியோர் இல்லத்திற்கு வந்த பிறகு அவர்களுக்கு எந்நிலை ஏற்பட்டாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதை கவனித்துக் கொள்ளும்.

இல்லத்தில் சேருவோருக்கு
உணவு,
தங்குமிடம்,
மருத்துவம்,
ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு இதர செலவிற்கு பணமும் வழங்கப்படும்.
சேருவதற்கு எந்த கட்டணமும் கிடையாது.

 தொலைபேசி :04374 250837

இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள் நன்கொடைகளை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

செலவு விபரங்கள்:




அல் ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்
அவனியாபுரம் , மதுரை.

இஸ்லாத்தின் உண்மையான கொள்கையை புரிந்து கொண்டு அதை முழுமையாக அறிவதற்காக ஏராளமான பெண்கள் வருகை தருகிறார்கள். அவர்களுக்காக மதுரையில் மூன்று மாதம் இஸ்லாமிய பயிற்சி பெண்கள் தஃவா சென்டரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாடு மற்றும் கண்காணிப்பில் அளிக்கப்படுகின்றது.

பாடத்திட்டங்கள்:

இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை
பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்
திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி
துஆ மனனம்
தொழுமை முறை
நபிகளார் வரலாறு
இஸ்லாமிய ஒழுங்குகள்
பெண்கள் என்பதால் மிகுந்த பாதுகாப்போடும் சரியான கண்காணிப்புடனும் இந்நிறுவனம் நடத்தப்படுகின்றது.
மேலும் பயிற்சி காலத்தில் உணவு, அத்தியாவசியத் தேவைகள், தங்குமிடம், மருத்துவ செலவுகள், திருக்குர்ஆன் மொழபெயர்ப்பு, இஸ்லாமிய நூல்கள், போக்குவரத்து செலவுகள் போன்ற அணைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றது.
இதை போன்று இலவசமாக இஸ்லாத்தை தழுவியதை அதிகாரப்பூர்வமாக்கும் அபிடவிட்டும் போட்டுத் தரப்படுகின்றது.
தொலைபேசி : 0452 2676222,9976649599
இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்

செலவு விபரங்கள்


அர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்
சுவாமிமலை, கும்பகோணம்.

பெற்றோர்களால் கைவிடப்பட்டு திக்கற்று நிற்கும் ஆண் குழந்தைகளுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் அநாதை இல்லம் நடத்தி வருகின்றது.

இதில் சேருவதற்கான நிபந்தனைகள்:

பெற்றோர்கள் இல்லாமல் இருக்க வேண்டும்
அல்லது பெற்றோர்கள் இருந்தும் பயனில்லாமல் இருக்க வேண்டும்
குறைந்த பட்சம் 8 வயது இருக்க வேண்டும்.

இல்லத்தில் சேர்க்கப்பட்ட பிறகு:
இவர்கள் அரசு பள்ளியில் சேர்த்து கல்வி பயில வைக்கப்படுவார்.
இவர்களுக்கு மாலையில் சிறந்த ஆசிரியர்கள் மூலம் டியூஷன் எடுக்கப்படும்
காலையில் TNTJ தாயிகள் மூலம் இஸ்லாமிய வகுப்புகள் நடத்தப்படும்
நல்லொழுக்க பயிற்றிகள் அளிக்கப்படும்
மேலும் இவர்களுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவம், ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு இதர செலவிற்கு பணமும் வழங்கப்படும்.
தொலைபேசி :04352454486,9150505009

இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்

செலவு விபரங்கள்


அர்ரஹ்மான் சிறுமியர் ஆதரவு இல்லம்
அவனியாபுரம் , மதுரை.

பெற்றோர்களால் கைவிடப்பட்டு திக்கற்று நிற்கும் பெண் குழந்தைகளுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரையில் அநாதை இல்லம் நடத்தி வருகின்றது.

தொலைபேசி : தொலைபேசி : 0452 2676222,9976649599

இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்

செலவு விபரங்கள்


தகவல்: அதிரை த.த.ஜ.

சென்னையில் செக்கடிமேடு நண்பர்களின் சஹர் நிகழ்ச்சி

சென்னை மண்ணடியில் அதிரை செக்கடிமேடு  நண்பர்களால் சஹர்  உணவு ஏற்பாடு  நேற்று முன்தினம்  நடை பெற்றது. இதில் அதிரையை  சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
 




புகைப்படம்
நமது நிருபர்: ஷேக் மைதீன் (சென்னை பிரிவு )

இன்றைய முஸ்லிம்களின் இப்தார்

இது நம்ம இப்தார் 

சோமாலியா முஸ்லிம்களின் இப்தார்  

. யா அல்லாஹ் இவர்களுக்கு நீ நல்ல உணவை அளிப்பாயாக.

பரிந்துரை:MK  

முத்துப்பேட்டையில் இந்துக்கள் இஸ்லாமியர்களை அழைத்து நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!


அரசியல் கட்சியை சார்தவர்கள் தற்பொழுது நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை ஒரு வணிக நிகழ்ச்சியாகவும், பொழுது போக்காகவும் முஸ்லிம்களை ஏமாற்றும் நிகழ்ச்சியாகவும் நடத்தி வரும் இந்த சூழ்நிலையில்,  மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக முத்துப்பேட்டையில் இந்து மதத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் இணைந்து  இஸ்லாமியர்களுக்காக இப்தார் நிகழ்ச்சி நடத்தியிருப்பது மனித நேயத்தையும், மத நல்லிணக்கத்தையும் பறைசாற்றும் வகையில்இருந்தது .

முத்துப்பேட்டை ஜாம்புவோனோடையை சேர்ந்தவர் நடுப்பண்ணை என்கிற ஆத்மநாதன். அதே போல் உப்பூரை சேர்ந்தவர் வீரசேகரன் ஆகிய இருவரும் கடந்த மூன்று வருடங்களாக மனித நேயத்தை பறைசாற்றும் வகையில் இஸ்லாமியர்களுக்கு தனது சொந்த செலவில் இஃப்தார் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். மூன்றாவது வருடமான இப்தார் நிகழ்ச்சி நேற்று முன்தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது .

முன்னதாக தமிழக மனித உரிமை கழகத்தின் மாநிலத்தலைவர் கவிஞர் G. பஷீர் அஹமது அவர்கள் "இஸ்லாமும் மனித நேயமும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் இதில் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து ஜமாத்தார்களும், இளைஞர்களும், பெரியோர்களும் பாகுபாடின்றி திறந்த மனதுடன் திரளாக வந்து கலந்து கொண்டனர். சரியாக 6:40 மணியளவில் கொய்யா மகாலில் உள்ள முதல் தளத்தில் அமர்ந்திருந்த அனைவரும் நோன்பு திறப்பதற்காக கீழ்த்தளத்தை நோக்கி சென்றனர்.

 கீழ்தளத்தில் நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்காக பேரிதம்பழம் , நோன்பு கஞ்சி, கடல் பாசி, கேசரி, சமூசா, போன்ற உணவுப்பொருட்கள் வரிசையாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. நோன்பு திறந்தவுடன் இங்கு மக்ரிப் தொழுகையும் நடைபெற்றது. அதன் பின்பு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களான ஆத்மநாதன் மற்றும் உப்பூர் வீரசேகரன்  ஆகியோரை அனைவரும்  மனமார வாழ்த்தி ஆர தழுவி இருவரையும் இறைவனிடத்தில் பிரார்த்தனை  செய்ததாகவும் கூறினார்கள். 


நன்றி: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்

அதிரை பேருந்து விபத்து - அதிரை சமுதாய இயக்கங்களின் மனித நேயமிக்க களப் பணி!

 

நேற்று அதிரை அருகே காளிக் கோயில் பகுதியில் பேருந்து, ஆட்டோ நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பெருத்த சேதமும் சுமார் 40 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் நடந்த உடன் அதிரையிலிருந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரை அனைத்து சமுதாய இயக்க சகோதரர்களும் துரிதமாக செயல் பட்டு பாதிக்கப் பட்டவர்களுக்கு முதலுதவி உள்ளிட்ட சேவைகளை வெகுவாக செய்தனர்.

இதில் குறிப்பாக தமுமுக தொண்டர்கள், த.த.ஜ தொண்டர்கள், எஸ்டிபிஐ மேலும் இன்ன பிற சமுதாய அமைப்பினர் மற்றும் அமைப்பு சாரா பொதுமக்கள் சம்பவ இடத்தில் முன்னின்று சேவையாற்றினார்கள்.

யார் என்றே முன் பின் அறியாத பாதிக்கப் பட்ட அனைவருக்காகவும். சமூக சிந்தனையோடும் மனித நேயத்தோடும் செயல் பட்ட அதிரை சமுதாய இயக்கத்தினரையும் பொதுமக்களையும் பலர் வெகுவாகப் பாராட்டினார்கள்.

இந்த சம்பவத்தில் 108 ஆம்புலன்ஸோடு அதிரை தமுமுக ஆம்புலன்ஸும் இணைந்து செயலாற்றியது குறிப்பிடத் தக்கது.

தண்ணீர்…தண்ணீர்

அண்மைய அதிரை வலைப்பதிவுகளில் தண்ணீர்…தண்ணீரென குடிநீர்ப் பற்றாக்குறை, நிலத்தடி நீரை சேமிக்காததால் வறண்ட நமதூர் நீர்வளம் குறித்த தகவல்களைக் காண நேர்ந்தது.

ஊரில் மழையே இல்லாமல் குடிநீர்க்குழாயில் நீர் வராதிருந்தபோது "எனக்கு குளிக்கக் குடிநீர் கிடைக்கவில்லை" என கருத்திட்டதையும் கண்டு சிரிக்காமலிருக்க இயலவில்லை!

நேற்றைய அரை நாள் அதிரைப் பயணத்தின்போது, சேதுச்சாலையில் ஹாஜா நகர்/கடற்கரைத்தெரு துவக்கத்திற்கெதிரே பேரூராட்சி இலவசக் குடிநீர் குழாயிலிருந்து தண்ணீர் அருகிலுள்ள குட்டையில் விரயமாகும் காட்சி (காணொளியாக இணைப்பில்).
video

குறுகிய கால அவகாசமே இருந்ததால் உரிய தடுப்பேதும் செய்ய இயலவில்லை. சில நேரம் கழித்து இரண்டொரு பெண்கள் அங்கு தண்ணீர் சேகரிக்க குடங்களுடன் வந்து விட்டனர்!

இதுபோல் நீர் விரயமாவதைத் தடுக்க, நகரங்களில் உள்ளது போன்று இலவசக் குடிநீர்க் குழாய்களுக்கு பூட்டுப் போட்டு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பொதுமக்கள் பயன்படுத்துமாறு சேவையாற்ற அந்தந்த பகுதி பேரூராட்சி உறுப்பினர்களையோ அல்லது குடிநீர் நிலையப் பணியாளர்களையோ அதிரை பேரூராட்சி நிர்வாகம் பணிக்கலாமே.

-Shafi M.I.

Monday, July 29, 2013

அதிரை பேருந்து விபத்து! வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு நேர்ந்த கொடுமை!


இன்று பகல் அதிரை To பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் நடந்த கோர விபத்தில் அபுதாபியிலிருந்து அதிரைக்கு வந்த சேக் அலி என்றவரும் சிக்கி தற்பொழுது தஞ்சை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் நடுத் தெருவை சேர்ந்தவர் என்றும் தன் இரண்டு மகள்களின் திருமணத்திற்க்காக அதிரைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

அபுதாபியிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்க்கு வந்த சேக் அலி அங்கிருந்து மதுக்கூருக்கு செல்லும் வாகனத்தில் பட்டுக்கோட்டை வந்துள்ளார். பின் ஆட்டோவில் ஏறிய இவர் தன் சொந்த ஊரான அதிரை செல்லும் வழியில் இந்த விபத்தில் சிக்கினார்.

இவர் கொண்டு வந்த உடைமைகள் அனைத்தையும் நமதூர் சகோதரர்கள் இவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீஸ்சார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

அதிரை பேருந்து விபத்து- மாணவ/மாணவிகள் பலத்த காயம்-போக்குவரத்து சேவை நிறுத்தம்.

இன்று மதியம்  1:50 மணியளவில்  மதியம் மல்லிப்பட்டினத்தில் இருந்து அதிரை வழியாக பட்டுக்கோட்டை செல்லும் SRM பேருந்து காளி கோயில் அருகில் எதிரே வந்த ஆட்டோவின் மீது மோதியதில் பேருந்து கவிழ்ந்தது.கல்லூரி முடிந்து பேருந்து வீடு திரும்பி கொண்டிருந்த காதிர் முகைதீன்  கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.மாணவ,மாணவிகளை த.மு.மு.க ஆம்புலன்ஸ் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனால் அதிரை-பட்டுக்கோட்டை பேருந்து போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

FLASH NEWS அதிரையில் பேருந்து விபத்து- மூன்று பேர் கவலைக்கிடம்

அதிரையிலுருந்து பட்டுகோட்டை நோக்கி சென்று கொண்டு இருந்த தனியார்  பேருந்து காளி கோயில் அருகில் எதிரே வந்த ஆட்டோவின் மீது நேருக்கு நேர் மோதியதில் பேருந்து டிரைவர் கட்டுபாட்டை இழந்து வாய்காலில் கவிழ்ந்தது.இதில் பயணம் செய்த பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.  மேலும் மூன்று பேர் கவலைக் கிடமாக இருக்கிறார்கள்.








அதிரை புதிய இணைய தளம் அறிமுகம் (Adirai home Dowry)

அதிரையில் காலங்காலமாக நடைப்பெற்று வரும் பழக்கமான மாப்பிள்ளைக்கு வீட்டு சீதனம் தருவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா இல்லையா,வீட்டுச்சீதனம் வரதட்சனையில் சேருமா இல்லை?அன்பளிப்பில் சேருமா? இது போன்ற விளக்கங்களை முன்வைத்து நடத்தப்பட்ட ஆலிம்களின் பயான்கள்,கட்டுரைகளை உள்ளடக்கிய ஒரு இனைய தளமாக adiraihomedowry.blogspot.com என்ற தளத்தை துவங்கி உள்ளனர்.
தகவல்:அமீன்

Sunday, July 28, 2013

சகோ. பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் ஜூனியர் விகடன் பேட்டி!

'இந்து அமைப்பினர் அடுத்தடுத்துக் கொலை செய்யப்படுவதன் பின்னணியில் சில  முஸ்லிம்கள் இருப்பதாக பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றனவே?''

''ஒரு மனிதன் கொல்லப்படுவதற்குக் குடும்பப் பகை, பெண் விவகாரம், தொழில் போட்டி என்று ஏராளமான காரணங்கள் இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்க வேண்டியதும் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டியதும் காவல் துறையின் வேலை. கொலையானவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, அதை முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்று பரப்புவதும், போஸ்டர்கள் ஒட்டுவதும் திட்டமிட்ட சதி. தாடி வைத்தவன், தலையில் குல்லாய் வைத்தவனை எல்லாம் தீவிரவாதி என்று சித்திரித்து, அண்ணன் தம்பிகளாகப் பழகிக் கொண்டிருப்பவருக்கிடையே பிளவை ஏற்படுத்துகிறார்கள். இதன் மூலம் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தைச் சீர்குலைக்க பி.ஜே.பி. உள்ளிட்ட இந்து அமைப்புகள் முயற்சிக்கின்றன. அந்த வெறுப்பை மக்களிடம் விதைப்பதன் மூலம் தங்கள் இயக்கத்தை வலுப்படுத்த நினைக்கின்றனர்.''

''உங்களுடைய இந்தக் குற்றச்சாட்டுக்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது?''

''ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போதே, காந்தியைக் கொன்றது இஸ்மாயில் என்ற முஸ்லிம்தான் என்று செய்தி பரப்பப்பட்டது. நாடு முழுவதும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். தமிழ்நாட்டில்  அப்போது திருப்பூரில் ஒரு இஸ்லாமியர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார். அன்றிலிருந்து, மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் வரை இதுதானே நிலைமை? முதலில் முஸ்லிம்கள் மீது பழிபோடுவதும், கலவரங்களைக் கட்டவிழ்த்துவிடுவதும் பிறகு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான் என்று தெரியவரும்போது பாராமுகமாக இருப்பதும்தான் நடக்கிறது.''

''தமிழகத்திலும் அப்படித்தான் நடக்கிறது என்கிறீர்களா?''

''சத்தியமங்கலம், அருகே உள்ள சதுமுகை என்னும் ஊரில் விநாயகர் சிலைக்கு சிலர் செருப்பு மாலை அணிவித்தனர். இதற்குக் காரணம் முஸ்லிம்களும் திராவிடர் கழகத்தினரும்தான் என்று குற்றம்சாட்டி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், போலீஸ் விசாரணையில் அதைச் செய்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த செல்வகுமார், மஞ்சுநாதன் ஆகியோர் என்பது தெளிவானது. நெல்லை மாவட்டத்தில் கோயில் தேருக்கு சில விஷமிகள் தீ வைத்தனர். அப்போதும் முஸ்லிம்கள்தான் அதைச்செய்தார்கள் என்று பொய்ப் பிரசாரம் செய்தனர். விசாரணையில், இந்து முன்னணியினர்தான் அதற்கும் காரணம் என்று தெரிந்தது. தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தபோது, முஸ்லிம்கள்தான் இதற்குக் காரணம் என்று கூறி ராமகோபாலன் உள்ளிட்ட இந்துத் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், போலீஸ் விசாரணையில், குண்டு வைத்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், லட்சுமி நாராயண சர்மா என்பது நிரூபிக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குண்டு வெடித்தபோதும், 'இஸ்லாமிய தீவிரவாதிகளை கைதுசெய்' என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அப்போது, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி. எதிர்க் கட்சியாக இருந்த அ.தி.மு.கலிவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர்தான், தி.மு.கலிவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அதைச் செய்தார் என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெளிவானது.

தமிழகத்தில் நடந்த கொலைச் சம்பவங்களை எடுத்துக்கொண்டால், கோயம்பேட்டில் கொல்லப்பட்ட பாரதிய ஜனதா பிரமுகர் விட்டல், கந்து வட்டி பிரச்னையால் கொல்லப்பட்டதாக நிரூபிக்கப்பட்டது. பரமக்குடி முருகன் கொலை, பெண் விவகாரத்தால் நடந்தது. ராமேஸ்வரம் குட்ட நம்பு கொலை வழக்கிலும் தனிப்பட்ட விரோதம்தான் காரணம். இப்படி தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்த கொலைகளையும், நிரூபிக்கப்படாத குற்றங்களையும் முஸ்லிம்கள் மீது சுமத்துவதும், அவதூறு பரப்புவதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.''

''தமிழகத்தில் முஸ்லிம்கள் தீவிரவாத செயல்கள் எதையும் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?''

''தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு கரும்புள்ளி. அல் உம்மா இயக்கத்தால் உணர்ச்சிவசப்பட்டு நடத்தப்பட்டது. அதை அப்பாவி முஸ்லிம்கள் யாரும் ஆதரிக்கவில்லை. அதில் இறந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களில் முஸ்லிம்களும் உள்ளனர். இங்குள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் நாம் சிறுபான்மை சமூகம் என்ற அறிவு உள்ளது. ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவன், பெரும்பான்மை சமூகத்தை எப்படி கொலை செய்ய முடியும்? நாங்கள் ஒரு கொலைசெய்தால், அவர்கள் பத்து கொலைசெய்வார்கள் என்ற சாதாரணப் புரிதலும் அச்சமும் எங்களுக்கு உள்ளது. இந்தியா வந்து குண்டு வைக்கும் பாகிஸ்தான்காரனை அந்நிய நாட்டுத் தீவிரவாதியாகப் பாருங்கள். அவனையும் இங்குள்ள சகோதார முஸ்லிமையும் ஒன்றாக  அடையாளப்படுத்தாதீர்கள்.''

ஜோ.ஸ்டாலின், படம்: வீ.நாகமணி
நன்றி ஜுனியா் விகடன்

Saturday, July 27, 2013

தேசிய அடையாள அட்டைக்கு (விடுபட்டவர்களுக்கு) புகைப்படம் எடுக்கும் பணி!

அதிரையில் பதுரு படை! வீடுகளுக்கு படை எடுத்த சிறுவர்கள்!

நேற்று பதுரு போர் நடந்ததை நினைவு கூறும் வகையில் அதிரையில் உள்ள பள்ளிகளில் சிறுவர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு அக்குழுக்கள் மூலம் நமதூரில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேங்காய், பதுர் ரொட்டி, அவல், வெல்லக்கட்டி போன்ற பொருட்கள் வசூல் செய்யப்பட்டது. இவ்வனைத்து பொருட்களும் அந்தந்த முஹல்லாவிற்க்கு உடபட்ட பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டு பின் அனைவருக்கும் நார்சாவாக வழங்கப்பட்டது. நமதூரின் இந்த பதுர் நார்சா உலக புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்பட வடிவமைப்பு : ஷேக்மைதீன்  (சென்னை) 

அதிரை பைத்துல்மாலின் தலைவர் - செயலாளர் உள்ளிட்ட சக நிர்வாகிகளின் அன்பான வேண்டுகோள் [ காணொளி ] !

அதிரை பைத்துல்மாலில் வட்டியில்லா நகைக் கடன் வழங்கும் திட்டம், கைவிடப்பட்ட முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான பென்ஷன் வழங்கும் திட்டம், ஏழைக்குமர்களுக்கான திருமண உதவி வழங்கும் திட்டம், வறிய மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி வழங்கும் திட்டம் மற்றும் மருத்துவ உதவி சிறுவர்களுக்கு ஹத்னா செய்தல் ஆகியன சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 

இத்திட்டங்கள் யாவும் ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் ஜக்காத் நிதியைக்கொண்டும், கூட்டுகுர்பானி திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் நன்கொடைகளைக்கொண்டும் அல்லாஹ்வின் உதவியால் நடைபெற்று வருகின்றன. 

ஆகவே, நல்லுள்ளம் படைத்த தாங்கள் கடந்த வருடம்போல் இவ்வருடமும் தங்களுடைய ஜக்காத் மற்றும் பித்ரா நிதியை அதிரை பைத்துல்மாலுக்கு அதிகமதிகம் வழங்க சொல்லி,

 அதிரை பைத்துல்மாலின் தலைவர் பேராசிரியர் S. பர்கத், செயலாளர் S. அப்துல் ஹமீது, துணைத்தலைவர்கள் வழக்கறிஞர் A. அப்துல் முனாப், A. முஹம்மது மொய்தீன், துணைச்செயலாளர்கள் O. சாகுல் ஹமீது, A.S. அப்துல் ஜலீல் மற்றும் ஆதம் நகர் மஹல்லாவின் நிர்வாகி E. வாப்பு மரைக்காயர் ஆகிய நிர்வாகிகள் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.




இப்படிக்கு
அதிரை பைத்துல்மால்
 No.23/1,நடுத்தெரு 
அதிராம்பட்டினம் - 614 701
தஞ்சை மாவட்டம் 
போன்       : (+91) 04373 241690
ஈமெயில் : abmchq@gmail.com, adiraibaithulmal@yahoo.com


நன்றி: அதிரை நியூஸ்

பத்ரு களம்- பதறும் உளம்!


ஆயிரம் எதிரிகள் அங்கே
.....ஆயுதம் அற்றவர் இங்கே
ஆயினும் இணங்கினர் அல்லாஹ்(வின்)
...ஆணையைத் தயக்கமும் இன்றி!


சொற்பமாய் இருப்பினும் வெற்றிச்
....சோபனம் தருவதே அல்லாஹ்(வின்)
அற்புதம் என்பதை அங்கே
.... அனைவரும் உணர்ந்திடச் செய்தான்!

வானவர்க் கூட்டமும் வந்து
.....வாளினால் வெட்டிட உதவ
ஆணவக் கூட்டமும் ஒழிந்து
...அக்களம் வென்றனர் காணீர்!

இச்சிறு கூட்டமும் வெற்றி
....இன்றியே அழியுமே யானால்
அச்சமாய் உன்னையும் அல்லாஹ்(என்று)
....அழைத்திட எவருமே உண்டோ”

நெற்றியைத் தரையினில் வைத்து
....நெகிழ்வுடன் நபிகளார்(ஸல்) வேண்ட
வெற்றியைத் தருவதை அல்லாஹ்
....வேகமாய் நிறைவுற செய்தான்!

தீனெனும் செடியினைக் காத்த
...தியாகிகள் இலையெனில் நாமும்
தீன்குல பிறப்பினில் இல்லை
...தியாகிகள் நினைவுகள் வேண்டும்


நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தலைமையில் முஸ்லிம்களின் முதல் போரான பத்ரு போர் ஹிஜ்ரி 2, ரமலான் பிறை 17ல் (மார்ச் 13, 624 ல்) மக்கத்து குரைசிகளுக்கு எதிராக நடைபெற்ற இடம். அந்த இடத்தில் உள்ள வீடுகள் இடிந்த நிலையில் யான்போ மற்றும் ராபியா நகரங்களுக்கு இடையில்.

Photo by: Saudi Press Agency (SPA

In this photo from the Saudi Press Agency (SPA), the ruins of ancient houses are seen in Badr, between the western cities of Yanbu and Rabigh, where the early Muslims led by Prophet Muhammad (pbuh) fought and won a decisive battle against the Quraishi forces of Makkah on March 13, 624 (Ramadan 17, 2 AH in the Islamic calendar).


--


அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Friday, July 26, 2013

பத்ரு போர் தரும் படிப்பினைகள்!!


இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த தியாக நிகழ்ச்சியே 'பத்ர்'ப் போராகும். போதிய முன்னேற்பாடுகள் இல்லாத சுமார் 313 பேர்கள், 1000 பேர் கொண்ட யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானிய பலத்தாலும், தியாக குணத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று சிதறடித்த நிகழ்ச்சி அதுவாகும். இந்த ''பத்ர்'' போர் வரலாற்றின் மூலம் நாங்கள் வேறு படிப்பினைகளைப் பெறலாம். அவற்றைச் சுருக்கமாக முன்வைப்பதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும். 



சுருக்கமான தகவல் 

ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமளான் பிறை 17-ல் நடந்த) 'பத்ர்' போர் குறித்த ஒரு சுருக்கமான தகவலை முதலில் முன்வைப்பது பொருத்தமென நினைக்கின்றேன். அபூ சுப்யான் மிகப் பெரும் வர்த்தகப் பொருட்களுடன் மதீனாவை அண்டிய பகுதியால் வருகின்றார் என்ற செய்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கிடைக்கின்றது. அந்த வியாபாரக் குழுவை மடக்கிப் பிடிப்பதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ஒரு கூட்டத்தை அழைத்துக்கொண்டு செல்கின்றார்கள். அபூ சுப்யான் உளவு பார்த்ததில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னைப் பிடிக்கக் கூடும் என்று அறிந்து மக்காவுக்கு செய்தி அனுப்புகின்றார். இதுதான் சந்தர்ப்பம் என நினைத்த மக்காவாசிகள் முஸ்லிம்களைப் பூண்டோடு அழிப்பதற்காகப் படைதிரட்டி வருகின்றனர்.

பின்னர் அபூ சுப்யான் வேறு வழியாக மக்கா சென்றுவிட முஸ்லிம்கள் ஆயுதக்குழுவுடன் மோதும் நிலை ஏற்படுகின்றது! ஈற்றில் இந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெருவதுடன் அபூ சுப்யான், அபூலஹப் போன்ற போரில் பங்கெடுக்காத குறைஷித் தலைவர்கள் போக மீதி முக்கியஸ்தர்கள் அனைவரும் 'பத்ரி'ல் கொல்லப்பட்டு குறைஷிக் கூட்டம் வலு இழக்கச் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகளை நோக்குவோம்.



அல்லாஹ்வின் கழாவை ஏற்றுக்கொள்ளல்

வானங்கள், பூமியைப் படைப்பதற்கு 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே படைப்பினங்களின் 'கத்ரை' (விதியை) அல்லாஹ் விதித்துவிட்டான்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ரிப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹுநூல் : முஸ்லிம்


பத்ர்' யுத்தம் அல்லாஹ்வின் 'கத்ரின்' வல்லமையை மிகத்தெளிவாக உணர்த்தும் ஒரு நிகழ்ச்சியாகும். நபித் தோழர்கள் வியாபாரக் கோஷ்டியை இலக்கு வைத்தனர். அல்லாஹ் அவர்கள் யுத்தக் குழுவுடன் மோத முடிவுசெய்துவிட்டான். எனவே, இவர்கள் எத்தனை திட்டங்கள் போட்டாலும் அவர்களால் அல்லாஹ்வின் நாட்டத்தை மீறி வியாபாரக் குழுவைப் பிடிக்க முடியவில்லை.

அபூ சுப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம், அபூ ஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள். (ஆனால்,) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும், காஃபிர்களை வெறுக்கவுமே நாடுகிறான்''. (8:7) மேலும், குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து (ஹக்கை) உண்மையை நிலை நாட்டவே (நாடுகிறான்)'' (8:8).
இங்கே அல்லாஹ்வின் நாட்டம் தான் நடைபெற்றது. இதுகுறித்து கஃப் இப்னு மாலிக் குறிப்பிடும் போது,

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறைஷி களின் வியாபாரக் கூட்டத்தை இலக்கு வைத் துத்தான் வெளியேறினார்கள். எனினும் எவ்வித முன் ஏற்பாடோ, சந்திக்கும் நேரம் குறித்த பேச்சுக்களோ இல்லாது அல்லாஹ் அவர்களையும், காபிர்களையும் பத்ரில் ஒன்று சேர்த்தான் எனக் குறிப்பிடுகின்றார்கள் (புகாரி).
இது குறித்து அல்லாஹ் குறிப்பிடும் போது,



பத்ர் போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப் புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம், இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும், அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாக கருத்துவேற்றுமை கொண்டிருப்பீர்கள். ஆனால், செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப்பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்). நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.'' (8:42)

அருகருகில் இருந்தும் நீங்கள் வியாபாரக்குழுவை சந்திக்கவில்லை. முன்னரே முறைப்படி யுத்தம் செய்வதாக முடிவுசெய்து திட்டமிட்டிருந்தால் கூட குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு வருவதில் உங்களுக்கிடையில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். எனினும், அல்லாஹ்வின் விதி அதற்கான சூழலை ஏற்படுத்தி உங்களை ஒன்றுசேர்த்தது என்ற கருத்தை இந்த வசனம் தருகின்றது.

எனவே, வாழ்வில் ஏற்படும் இன்பமோ, துன்பமோ இரண்டுமே அல்லாஹ்வின் விதி என்பதை ஏற்று இன்பத்தில் தலைகால் தெரியாது ஆட்டம் போடாது, துன்பத்தில் துவண்டு போகாது இரண்டையும் சமமாக ஏற்று வாழும் பக்குவத்தைப் பெறவேண்டும். அதே நேரத்தில், விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை போகும் என்று முயற்சி செய்யாமல் முடங்கிக் கிடக்கவும் கூடாது!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் திட்டமிடல் முனைப்புடனான செயற்பாடுகள் இதை எமக்குணர்த்துகின்றன.



கலந்தாலோசித்தலின் அவசியம்

மார்க்க விவகாரங்களில் அறிஞர்களுடனும், உலக விவகாரங்களில் குறித்த துறையில் ஆற்றல் 
உள்ளவர்களிடமும் ஆலோசனை செய்வது அல்லாஹ்வின் உதவியும், முஸ்லிம்களின் உலகியல் விவகாரங்களில் நன்மை நடப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் முக்கிய அம்சமாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போருக்கு முன்னர் நபித்தோழர்களிடம் ஆலோசனை கேட்டார்கள். தாம் விரும்பும் முடிவை சில தோழர்கள் முன் வைத்தனர். அப்போது கூட அவர்கள் திடீர் முடிவு செய்யாது மதீனத்து தோழர்களின் முடிவை அறியும் ஆர்வத்தில் தொடர்ந்தும் ஆலோசனை செய்தார்கள். அவர்களின் ஆலோசனையும் சாதகமாக அமைந்த பின்னரே போர் செய்யும் முடிவை எடுத்தார்கள். இது ஆலோசனை செய்வதின் அவசியத்தை உணர்த்துகின்றது.

மற்றுமொரு நிகழ்ச்சியையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.



நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''பத்ர்'' களம் சென்று மதீனா பகுதிக்கு நேராக இருக்கும் முதலாவது கிணற்றுக்கருகில் தமது கூடாரங்களை அமைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள். அப்போது ஹுபாப் இப்னுல் முன்தீர் என்ற நபித்தோழர் ''அல்லாஹ்வின் தூதரே! இந்த இடத்தில் நாம் கூடாரமிடவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையா? அப்படியாயின் நாம் இதை விட்டும் ஒரு அடி முன்னாலோ, பின்னாலோ நகர மாட்டோம்! அல்லது உங்களது சொந்த அபிப்பிராயப்படி நீங்கள் தீர்மானித்த இடம் என்றால், என்னிடம் மாற்று அபிப்பிராயம் உள்ளது!''என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது சொந்த முடிவு என்றதும், ''அல்லாஹ்வின் தூதரே! இதற்கு பின்னரும் தொட்டிகள் உள்ளன. 

நாம் முன்னேறிச் சென்று அவற்றையும் எம் வசப்படுத்திக்கொள்ள வேண்டும். அதைத் தாண்டியிருக்கும் சிறிய நீர் தொட்டிகளிலிருந்து தண்ணீரை நாம் எடுத்துக் கொள்வோம். அப்போது நாம் தண்ணீர் குடிக்க அவர்கள் தாகத்தோடு போராடுவார்கள்'' என்று தனது அபிப்பிராயத்தைக் கூற அது போர்த்தந்திரத்திற்கும், எதிரிகளைப் பலவீணப்படுத்தவும் ஏற்ற யுக்தியாகத் திகழ்ந்ததால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது முடிவை மாற்றி அவர் கருத்துப்படி செயற்பட்டார்கள்'' (அஸ்ஸீரதுன்னபவிய்யா-இப்னு ஹிஸாம்., அத் தபகாத்-இப்னு ஸஃத்).


நபியவர்கள் சுய கௌரவம் பாராது அடுத்தவர் கருத்தையும் மதித்து நடந்ததால், முஸ்லிம்களுக்கு நன்மை விளைந்தது. இது கலந்தாலோசனை செய்வதன் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது.


எதிரிகள் குறித்த விழிப்புணர்வு


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் இருக்கும் போதும் எதிரிகளின் நடமாட்டம் குறித்து புலனாய்வு செய்தார்கள். ''பத்ர்'' களம் வந்த போதும் பலரை அனுப்பி புலணாய்வுத் தகவல் களைத் திரட்டினார்கள். ஒரு முறை அவர்களும் அபூபக்கர்(ரலி) அவர்களும் சேர்ந்து, களத்தில் தகவல் அறியச் சென்றனர். மற்றொரு முறை அலி, சுபைர் இப்னுல் அவ்வாம், ஸஃத் இப்னு அபீவக்காஸ் ஆகிய நபித்தோழர்களை அனுப்பி அவர்கள் மூலம் குறைஷிகளுக்கு தண்ணீர் இறைக்கும் இளைஞர்களைக் கைது செய்து அவர்கள் மூலம் எதிரிகளின் எண்ணிக்கை, படைபலம், முக்கிய தளபதிகள் குறித்த தகவல்கள் என்பவற்றை அறிந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சி எதிரிகளின் செயல்திட்டங்கள், பலம், பலவீனம் பற்றிய அறிவின் அவசியத்தைத் உணர்த்துகின்றது. இந்த விழிப்புணர்வு முஸ்லிம்களிடம், அதிலும் குறிப்பாக சமூகத் தலைவர்களிடம் அவசியம் இருந்தாக வேண்டும்.


அல்லாஹ்வின் உதவியில் நம்பிக்கை வைத்தல்


 உலகியல் ரீதியில் முடிந்த வரை முயற்சி செய்யும் அதேவேளை ஆயுதத்திலோ, ஆட்பலத்திலோ நம்பிக்கை கொள்ளாமல் அல்லாஹ்வின் மூலமே உதவி கிடைக்கும் என்ற ஈமானிய பலத்தில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்.
நபித் தோழர்களிடம் போதிய யுத்த சாதனங்கள் இருக்கவில்லை. 70 ஒட்டகங்களும், 60 கேடயங்களும் சுபைர் இப்னுல் அவ்வாம்(ரலி), மிக்தாத் இப்னு அஸ்வர் ஆகிய இருவரிடம் மட்டும் இரு குதிரைகளும் இருந்தன (அப்பிதாயா வன்னிஹாயா).
பௌதீக காரணிகளை வைத்து ஆராய்ந்தால் முஸ்லிம்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால், இந்த சிறுகூட்டம் அந்தப் பெரும் கூட்டத்தை சிதறடித்தது.



'' ''எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்'' என்று கூறினார்கள். (2:249)
எனவே, முஸ்லிம்களின் முழுமையான நம்பிக்கை அல்லாஹ்வின் மீதே இருக்க வேண்டும். இந்தப் போரின் போது மழை பொழிந்து அது முஸ்லிம்களுக்குச் சாதகமாகவும், காஃபிர் களுக்குப் பாதகமாகவும் அமைந்து, மலக்குகள் முஸ்லிம்களுக்குத் துணையாகப் போரிட்டனர் என்பதை குர்ஆன் குறிப்பிடுகின்றது. (பார்க்க 8:9-12., 8:17).



கட்டுப்படுதலும் தூய பிரார்த்தனையும் உதவியைப் பெற்றுத்தரும்

 போர் நிகழ முன்னரே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகமதிகம் அழுதழுது அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அவர்கள் அழுததால் ஏற்பட்ட உடல் அசைவினால் அவர்களது தோலில் போட்டிருந்த போர்வை கீழே விழ, அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அதை எடுத்து அவர்களின் தோலில் போட்டவாறு ஆறுதல் கூறுவார்கள். (முஸ்லிம்)
இவ்வாறே நபித்தோழர்களும் அல்லாஹ் விடம் துஆ செய்தார்கள்.



 ''(நினைவு கூறுங்கள்) உங்களை இரட்சிக்குமாறு உங்களிறைவனின் உதவியை நாடியபோது ''(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்'' என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.'' (8:9).
இவ்வகையில் பிரார்த்தனை முஃமீனின் பலமான ஆயுதமாகும். எனவே, இஹ்லாசுடன் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்துவோமாக!



இஸ்லாத்தின் எதிரிகளுடன் நேச உறவு இல்லை

 ''பத்ர்'' யுத்தம், கொள்கை உறவு தொப்புள் கொடி உறவை விட பலம் வாய்ந்தது என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய ஒரு நிகழ்வாகும். தந்தை, பிள்ளை, சகோதரன் என்ற பாசம் இன்றி சத்திய கொள்கைக்கும், அசத்திய கோட்பாடுகளுக்குமிடையில் நடந்த போர் இது. தந்தை சத்தியத்தில்-தனயன் அசத்தியத்தில், தனயன் சத்தியத்தில்-தந்தை அசத்தியத்தில் என்ற நிலையில் இடம்பெற்ற இப்போரில் கொள்கையை இலட்சியமாகக் கொண்டு உறவுகள் எடுத்தெறியப்பட்டன. இஸ்லாத்தை எதிர்ப்போர் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும் அவர்களிடம் நேச உறவு இருக்கக்கூடாது என்ற கோட்பாட்டை இது முஸ்லிம் உலகுக்கு வழங்கியது.

கருத்துவேறுபாட்டின் போது குர்ஆன் சுன்னாவின் பால் மீளுதல்

 ''போரில் கிடைத்த வெற்றிப் பொருள் (அன்ஃபால்) களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக. ''அன்ஃபால்'' அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமான தாகும். ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் முஃமீன்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்'' (8:1).

என்ற வசனம் இறங்கியது. இதன் அடிப் படையில் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது! எனவே, எமக்குள் ஏற்படும் பிணக்குகளையும், குர்ஆன், சுன்னா ஒளியில் தீர்த்துக்கொள்ள நாம் முயல்வோம்.

-

அறிவின் முக்கியத்துவம்

 ''பத்ர்'' போரில் கைதிகளாக 70 காஃபிர்கள் பிடிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் 3 அல்லது 4 ஆயிரம் திர்கங்களை ஈட்டுத் தொகையாகக் கொடுத்து அல்லது 10 முஸ்லிம் சிறுவர்களுக்கு எழுத வாசிக்கக் கற்றுக்கொடுத்து விட்டு விடுதலை பெறலாம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவித்தார்கள். இவ்வாறு எழுத வாசிக்கக் கற்றுக்கொண்டவர்களில் ஒருவர் தான் ஸைத் பின் தாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்களாவார்கள்'' (அத்தபகா துல் குப்ரா - இப்னு ஸஅத் 2116).


ஷைத்தான் தன் தோழர்களுக்கு சதி செய்வான்:

ஷைத்தான் மனிதனது பகிரங்க விரோதியாவான். அவன் எம்மை எப்படியும் நரகத்தில் தள்ளவே முயற்சி செய்வான்.''பத்ர்'' யுத்தத்தில் இது தான் நடந்தது. காபிர்களின் உள்ளத்தில் கர்வத்தையும், மமதையையும் தூண்டி உங்களை யாராலும் ஜெயிக்க முடியாது என்ற எண்ணத்தை ஷைத்தான் ஏற்றினான். இறுதியில் ''பத்ர்'' களத்தில் மலக்குகளைக் கண்ட போது, நீங்கள் பார்க்காததையெல்லாம் நான் பார்க்கின்றேன் எனக்கூறி தன்னைப் பின்பற்றியவர்களைக் கை விட்டு விட்டான்.



 ''அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.'' (51:16)
என்ற வசனமும் இதை உணர்த்து கின்றது. 

எனவே ஷைத்தானை அறிந்து விழிப்புடன் இருக்கவேண்டும். மறுமையிலும் ஷைத்தான் தன் தோழர்களைக் கைவிட்டுவிடுவான்.

 ''மறுமையில் இவர்கள் பற்றித்) தீர்ப்புக் கூறப்பெற்றதும் ஷைத்தான் (இவர்களை நோக்கி)

 ''நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையானதையே வாக்களித்திருந்தான். ஆனால், நான் உங்களுக்கு வாக்களித்திருந்தேன் என்றான். நான் உங்களுக்குக் கொடுத்த வாக்கில் மாறுசெய்துவிட்டேன். நான் உங்களை அழைத்தேன். அப்போது நீங்கள் என் அழைப்பை ஏற்றுக்கொண்டீர்கள் என்பதைத் தவிர எனக்கு உங்கள் மீது எந்த அதிகாரமுமில்லை. ஆகவே, நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள். உங்களை நான் காப்பாற்றுபவனில்லை. நீங்களும் என்னைக் காப்பாற்றுகிறவர்களில்லை. 

நீங்கள் முன்னால் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும், நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன். நிச்சயமாக அக்கிரமக் காரர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு' என்று கூறுவான்.'' (14:22)

எனவே, ஷைத்தானை எமது பகிரங்க எதிரியாகவே எடுத்து அவனை விட்டு விலகி வாழ முயற்சிப்போமாக!



நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அழகிய முன்மாதிரி

 ''அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன் மாதிரி உங்களுக்கு இருக்கிறது'' (33:21).


நபியவர்களே எமது முன்மாதிரியாவார்கள். அவர்களின் அழகிய முன்மாதிரியை நாம் ''பத்ர்'' போரின் போது பல அடிப்படையிலும் காணமுடிகின்றது.

'' ''ஒருவர் ஏறிவர, இருவர் நடந்து வர வேண்டும்'' என்று சுழற்சி முறையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் நடந்துவர நேரிட்டபோது, இவ்விருவரும் ''அல்லாஹ்வின் தூதரே நாம் நடந்தே வருகின்றோம். நீங்கள் ஒட்டகத்தில் ஏறி வாருங்கள்'' என்று கூறினர்.  அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீங்கள் இருவரும் என்னை விடப் பலமிக்கவர்களுமல்லர்; உங்களைவிட நன்மையைத் தேடிக்கொள்ளும் விடயத்தில் நான் தேவையற்றவனுமல்ல'' எனக் கூறினார்கள்'' (அஹ்மத்).


குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு கட்டளையிடும் தளபதியாக அவர் இருந்ததில்லை. தோழர்களுடன் தோழனாக அவர்களைப் போன்றே சிரமங்களைத் தாங்கிக்கொண்டு களத்திலிருந்த தலைவர் அவர்கள்.
இவ்வாறு, ''பத்ர்'' களத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகிய முன்மாதிரிகளுக்கான பல்வேறு உதாரணங்களையும் காணலாம். எனவே, முஹம்மத்(ஸல்) அவர்களே எமது முன்மாதிரியாவார்கள். அவரின் முன்மாதிரியை முழு வாழ்விலும் எடுத்து அவரைப் பின்பற்றுவது எமது தலையாய கடமையாகும்.
இவ்வாறு நோக்கும்போது, பத்ர் யுத்தமும் அதில் முஸ்லிம்கள் பெற்ற வெற்றியும் எமக்குப் பல்வேறு படிப்பினைகளைத் தருகின்றன. 

இவ்வாறே, இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் படிப்பினைகள் நிறைந்தே உள்ளன. அவற்றையெல்லாம் சிந்தித்து, எமது நிகழ்காலத்தையும் எதிர் காலத்தையும் எழுச்சி மிக்கதாக மாற்றிக் கொள்ள முயல்வோமாக!
நன்றி,
அப்துல் ரஷீத் மற்றும் (கவியன்பன்) கலாம் காதிர்.

அபுதாபி இஃப்தார் நிகழ்வில் சமுதாய இயக்கங்களுக்கு அய்மான் சங்கத்தின் ஒரு வரி கோரிக்கை!


 ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் செயல்பட்டு வரும் அய்மான் சங்கம் சார்பில் முப்பெரும் நிகழ்வுகள் நடைபெற்றது.

அய்மான் மக்கள் மன்றம்,பத்ர் நினைவு தினம்,மற்றும் இஃப்தார் ஆகிய முப்பெரும் நிகழ்வுகள் அபுதாபி செட்டிநாடு உணவாக அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீது தலைமை வகித்தார்.

திருச்சி அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜியார் முன்னிலை வகித்தார்.
அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது வரவேற்று பேசினார்.

தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த திருமலர் மீரான் சிறப்பு கவிதை வாசித்தார்.

புனித மிக்க ரமலான் மாதத்தில் நிகழ்ந்த பத்ர் போரின் நிகழ்வுகளையும்,அதன் மூலம் பெற வேண்டிய படிப்பினைகள் குறித்தும் அய்மான் சங்கத்தின் மார்க்கத்துறை செயலாளர் மெளலவி ஹாபிள் ஹுஸைன் மக்கி ஆலிம் மஹ்ளரி விரிவான உரை நிகழ்த்தினார்.

மக்கள் மன்றம் 

இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் சமுதாய இயக்கங்களுக்கு அய்மான் சங்கத்தின் ஒரு வரி கோரிக்கை “ஒன்றுபடுங்கள் நன்று பெறுங்கள்”  என்ற தலைப்பில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

எதிர்வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் சமுதாய அமைப்பினர் ஒரே த்தொகுதியில் போட்டியிடும் சூழலை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.
துவக்கமாக திருச்சி அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் கீழக்கரை சைய்யது ஜாஃபர் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்தும் சமுதாயம் அய்மான் கல்லூரிக்கு நல்க வேண்டிய ஒத்துழைப்பு குறித்தும் விளக்கி உரை நிகழ்த்தினார்.

அதிரை கவியன்பன் கலாம் அவர்கள் கவிதை வாசித்ததை தொடர்ந்து சமுதாய இயக்கங்களின் சார்பில் பிரதிநிதிகள் தங்களின் கருத்தை பதிவு செய்தனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அமீரக காயிதேமில்லத் பேரவையின் அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மண்டலச் செயலாளர் திருச்சி அப்துல் ரஹ்மான்எஸ்.டி.பி.ஐ.சார்பில் அபுதாபி செயலாளர் உடன்குடி முஹைதீன் ஆகியோர் தங்களின் கருத்துக்களை எடுத்துரைத்தனர். அமீரக காயிதேமில்லத் பேரவையின் துபாய் மண்டலச் செயலாளர் முதுவை ஹிதாயத் வாழ்த்துரை வழங்கினார்.

நிர்வாகிகள் பதவியேற்பு

அய்மான் சங்கத்தின் துணைத் தலைவராக திருவாடுதுறை எ.அன்சாரி பாஷா அவர்களும், அய்மான் சங்கத்தின் மக்கள் தொடர்பு செயலாளராக காயல்பட்டினம் முஹம்மது அன்சாரி அவர்களும் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் பனியாஸ் நிறுவன அதிபர் அப்துல் ஹமீத் மரைக்காயர்,அமீரக காயிதேமில்லத் பேரவை மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி,பாரதி  நட்புக்காக அமைப்பின்  சார்பில் அதன் செயலாளர்  கலீல் மற்றும்  அதிரை  காதற்  மொகிதீன் துபாய் காயிதே மில்லத்  பேரவை  சார்பாக  முதுவை  ஹிதாயத் மற்றும் காயல்பட்டினம்,அதிராம்பட்டினம், கீழக்கரை, லால்பேட்டை,நாகூர்,உள்ளிட்ட ஊர் ஜமாஅத் நிர்வாகிகள் பெரியபட்டினம்  பைத்துல் மால்  தலைவர்  ஜஹாங்கீர்,சமுதாய அமைப்புக்களின் பிரதிநிதிகள்,அய்மான் சங்கம் மற்றும் கல்லூரியின் பிரமுகர்கள்,பல்வேறு ஊர்களின் ஜமாஅத் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அபுதாபி அய்மான் சங்க நிர்வாகிகளான லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,களமருதூர் ஷர்புத்தீன்,ஏர்வாடி அப்துல் சத்தார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். ஆலிம் அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.


நன்றி: முதுகுளத்தூர் டைம்ஸ், முதுவை ஹிதாயத்துல்லாஹ்,

தகவல்: கவியன்பன் அபுல்கலாம்

மூன்றாம் உலகப்போர் அதிரையிலிருந்தா ??

அல்லாஹ் இந்த உலகிற்கு அளித்த அருட்கொடைகளில் ஒன்றான தண்ணீர், நாளுக்குநாள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.எந்த அளவுக்கெனில் இனியொரு உலகப்போர் அதாவது - மூன்றாம் உலகப்போர் வருமானால் அது தண்ணீருக்காகதான் என விஞ்ஞானிகள் சமூகவியளாலர்கள் எச்சரித்து வருகின்றனர்.

குடிநீர், சுகாதாரம், விவசாயம், கால்நடைகளுக்கு என பல வழிகளில் தண்ணீரின் பயன்பாடு அதிகம், ஏன் இந்த நீர் இல்லையேல் உலகில்லை. இதைத்தான் "நீரின்றி அமையாது உலகு” என்பார்கள். அந்த நீர்தான் இன்று கானல் நீராகி வருகிறது.

பாசனத்திற்கு, கண்மாய்கள்; பொதுப் பயன்பாட்டுக்கு, குளங்கள்; குடிநீர் தேவைக்கு, ஊருணிகள் என்று, இனம்பிரித்து வளமாக வாழ்ந்தனர் அன்றைய மக்கள். இன்று..? எல்லாம் தலைகீழ் மாற்றம். மேற்சொன்னவைகள் இன்றைய தலைமுறைகளுக்கு என்னவென்றே தெரியாது!

அதிரையின் நிலை?

அதிரையில் முன்னொரு காலத்தில் குளத்தில் குடிநீர் எடுத்து வருவார்கள். அந்த குளங்கள் அவ்வளவு சுத்தமாகவும் முழு பாதுகாப்பு வசதி கொண்டதாகவும் இருக்கும். காலம் மாறியது. குளங்களின் சுத்தமும் போனது; வரண்டும் போனது. வீட்டிற்கு வீடு கிணறு வெட்டி அதில் வீட்டுத் தேவைகளுக்கும் குடிநீருக்கும் பயன் படுத்தினார்கள். இருபது வருடங்களுக்குமுன் அதிரையில் தண்ணீர் தட்டுப்பாடு, அப்போது நிலத்தடி நீர் வெகுவாக குறைந்தது. இதனால் ஆள்துளை கிணறுகளை வீடுகள் தோறும் போட்டு நீர் உரிஞ்சினார்கள். தேவைகளை விடவும் அதிகமாகவே பயன்படுத்தினார்கள் விழலுக்கு இறைத்த நீராகிப் போனது.

மீண்டும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட துவங்கியுள்ளது. இப்போதும் நாம் விழிந்துக் கொள்ளவில்லை என்றால்... நீருக்காக பெரும் கஷ்ட்டத்தை அனுபவிக்க வேண்டி வரும் என்பது நிதர்சனமான உண்மை!

அதிரையில் இப்போது இருக்கும் நிலத்தடி நீர் அளவு (இந்த அளவுகோளில் ஏற்ற / இறக்கமான அளவு அல்லது இதில் சில அடிகள் கூடலாம் குறையலாம்)

சி.எம்.பி.லேன், மிலாரிக்காடு அதை சுற்றியுள்ள பகுதிகள்  100-110 அடியும்

செக்கடிப் பள்ளிவாசலை சுற்றியும் புதிய,பழைய ஆலடிக்குளம் பகுதிகளில் 90-100 அடியும்

ஆஸ்பத்திரித் தெரு, புதுத்தெரு, பழஞ்செட்டித் தெரு பகுதிகளில் 50-60 அடியும்

கடைத்தெரு, நடுத்தெரு கீழ் மற்றும் மேல் பகுதிகளிலும் மேலத்தெரு, சானவயல் பகுதிகளில் 65-75 அடியும்,

கீழத்தெரு, பிலால் நகர் பகுதிகளில் 40-50 அடிகள்

ஆதம் நகர், அதன் தாழ்வானப் பகுதிகள் மற்றும் கடற்கரைத் தெரு தரகர் தெரு பகுதிகளில் 40-30 அடிகள் இருப்பதாக ஆள்துளை கிணறு போடுபவர்கள், பிள்மபிங் வேலை செய்பவர்கள் சொல்கிறார்கள்.

இந்த பகுதிகளில் ஏற்கனவே அதாவது 2,3 வருடங்களுக்கு முன்பு வரை இப்போதுள்ள நிலத்தடிநீர் மட்டம் இருபத்தைந்து,முப்பது அடிகள் உயர்ந்திருந்தது என்பது இங்கு கவனிக்க வேண்டியது அவசியமாகும்!

அல்லாஹ் தனது திருமறையில் எடுத்துரைக்கிறான்:

"மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்." (அத்தியாயம் : 23 வசனம் : 18)

நிலத்தடி நீர் குறைவதற்கு மழை பற்றாக்குறை என்பது உண்மைதான். ஆனால், அதற்காக அதையே காரணம் சொல்லி கொண்டிருப்பது அறிவுடமையாகாது.

வீட்டிற்கு வீடு இதற்கான முயற்சி எடுத்தாலே குறைந்து வரும் நீர் மட்டத்தை காக்க முடியும்! இன்ஷா அல்லாஹ்!! 

நம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் கிணறு, ஆள்துளை கிணறு பக்கத்தில் நாம் பயன்படுத்தும் நீர்களை (மழை நீர் சேகரிப்பு தொட்டி போன்று) தொட்டி அமைத்து அதில் விடலாம். தேவையற்ற முறையில் தண்ணீர் பயன்படுத்தாமலும் இருக்க வேண்டும்.

இன்னும் சில வழிமுறைகள் உள்ளன.எல்லாவற்றிர்க்கும் மேலாக இறையருள் நிறம்பிய இந்த ரமளான் மாததில் அல்லாஹ்விடம் கையேந்துவோம்! இன்ஷா அல்லாஹ் !

 அ.ர.ஹிதாயத்துல்லாஹ்