Thursday, October 31, 2013

மாநகராட்சியாக மாறும் தஞ்சை -அதிரை மக்களுக்கு சில யோசனை.

கடந்த பட்ஜெட் கூட்டத் தொட ரின்போது, தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப் படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த 2 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்ட மசோ தாக்களை தமிழக சட்டப் பேரவை யில் திங்கள்கிழமை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தாக்கல் செய்தார்.அந்த மசோதாக்களில், “மக்கள் தொகை அதிகரித்தல், ஆண்டு வருமானத்தில் முன்னேற்றம் மற்றும் மக்கள்தொகை பெருக்கத் துக்கேற்ப அடிப்படைத் தேவை களைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு வகை செய்யப்பட வேண்டிய குடிமைப் பணிகளின் அளவீட்டையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம் படுத்துவதைக் கருத்தில் கொண்டு தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என முதல் வர் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்திருந்தார். மேற்சொன்ன அறிவிப்புகளுக்கு வடிவம் கொடுப்பதற்காக, 1981-ம் ஆண்டு கோவை மாநகராட்சி சட்டத்தின் வகைமுறைகளைத் தழுவி ஒரு சிறப்புத் திட்டத்தினை இயற்றுவதென அரசு முடிவு செய்துள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது. 2 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படுவதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மாநக ராட்சிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்கிறது.


அதிரை மக்களுக்கு சில யோசனைகள்...
தஞ்சாவூர் மாநகராட்சி என்கிற அந்தஸ்து கிடைக்கிறபோது. அதற்கு மத்திய மாநில அரசுகளிடமிருந்து பல சலுகைகள், திட்டங்கள் கிடைக்கும். 

தொழில் வளம் கூடும். மக்கள் தொகை அதிகரிக்கும். இந்த நிலையில், தஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் இருக்கும் நிலங்களுக்கு விலையேற்றம் அதிகரிக்கும். 

அதிரை மக்களுக்கு தஞ்சாவூர் மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களில் இறையருளால் நிலங்கள் நிறையவே உண்டு. அதனை அவசரப்பட்டு விற்றுவிடாமல், பொருமைகாக்க வேண்டும். நாளுக்கு நாள் நிலத்தின் விலை கூடுமேதவிர இறங்கப்போவதில்லை.

வீடுகள், வியாபார வளாகம்,அலுவலகம் போன்றவற்றை கட்டி வாடகைக்கு விட்டால் நல்ல வருமானம் வரும். அத்துடன் அதிரை இளைஞர்கள் பலர் புதிய தொழில் துவங்க எத்தனித்து வருகிறார்கள் அவர்கள் தஞ்சாவூரில் துவங்கலாம்.

சென்னையில் அதிரைமக்கள் பல்லாயிரம்பேர் இருந்தும் பல தொழில்கள் செய்தும் சொந்த நிலம்,வீடு,கடை,கட்டிடங்கள் வைத்திருப்போர் மிகமிக சொற்ப்பமே! 

சென்னையில் முன்னொரு காலத்தில், நிலத்தின் விலை கடுகளவு இருந்த போது அலட்சியம் செய்தநாம் இன்று கிடுகிடு விலையேற்றத்தால் தட்டுதடுமாறி நிற்கின்றோம். வீடு,கடை,அலுவலகம் போன்றவற்றிக்கு நாம் வாடகை கொடுத்தே நமது உழைப்பு விழலுக்கு இறைத்தநீராகி போகின்றது.
அந்த தவரை தஞ்சையில் செய்யவேண்டாம் என்பதே நமது கருத்தாகும்.

courtesy - அதிரை போஸ்ட்


அதிரை மாணவர் ஆண் அழகன் போட்டியில் சாதனை

தஞ்சை மாவட்ட அளவில் நேற்று நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைகழகம் ஆண் அழகன் போட்டியில் நமதூர் காதர் முகைதீன் கல்லூரி M.COM இரண்டாம் ஆண்டு படிக்கும் ஃபயாஸ் அஹமது தா/பெ அப்துல் ஜலீல்  அவர்கள் 70 கிலோ எடை பிரிவில் முதல் இடமும் மற்றும் ஓவர் ஆல் சாம்பியன் பட்டதையும் வென்று சாதனை படைத்து  உள்ளார். இவர் அதிரையில் உள்ள 3 ஸ்டார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்றார்.மேலும்  இவர் காலியார் தெருவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இம்மாணவனை வாழ்த்துவதில் அதிரை எக்ஸ்பிரஸ் பெருமை கொள்கிறது.

Wednesday, October 30, 2013

சாயத் துடிக்கும் மின் கம்பம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா அதிரை மின்சார வாரியம்?

அதிராம்பட்டினம் கீழத் தெருவில் பெரிய ஜும்மா பள்ளி எதிர்புறம் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மின் கம்பம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

 இந்த மின் கம்பம் அமைந்துள்ள பகுதி போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதியாகும், இதனால் இந்த பகுதியால் பயன் பெறும் பொதுமக்கள். குடியிருப்பு வாசிகள். பள்ளி. கல்லூரி மாணவ மாணவியர்கள் அச்சத்துடன் பழுதடைந்த மின் கம்பத்தை கடக்க வேண்டியுள்ளது.

ஆகவே. உடன் பழுதடைந்த மின் கம்பத்தை தள ஆய்வு செய்து பழுதடைந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்றி பெரும் விபத்தினை தடுக்கவேண்டுமென இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

 
தகவல் &புகைப்படம்: எ,முகம்மது ராவுத்தர்.
                                                                                                              ,
     அதிராம்பட்டினம்                                                                                                                  
                                        

அதிரையில் மர்ம படகு -7 1/2 கிலோ தங்கம் மீட்பு

அதிரை கடற்கரைப் பகுதியில் 2 தினங்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத படகு ஒன்று கரை ஒதுங்கியது. இதையடுத்து கோவையில் இயங்கும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் சுங்க இலாகா அதிகாரிகளுடன் இணைந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர்.
 பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நேற்று முன் தினம் சோதனை நடத்திய போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் அங்கு சென்ற இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.அதில் இருந்த 3 பேரிடம் ஏழரைக் கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தங்கம் கடல் வழியாக கடத்தப்பட்டு, தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டதா என்ற கோணத்தில் அவர்களிடம் விசாரணை நடத்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறைனர், அவர்களை திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 செய்தி:புதிய தலைமுறை  

அதிரையில் நூதன மோசடி-ஏமாற்றம் அடைந்த கடை உரிமையாளர்

ஏமாற்றுபவர்கள்  இருக்கும் வரையில் ஏமாறுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என முன்னோர்கள் சொல்ல கேட்டுள்ளோம் ஆனால் இன்று யாரை ஏமாற்றுகிறோம் என்பது கூட தெரியாமல்  கீழ் காணும் ரூபாய் நோட்டை கண் பார்வை மங்கிய ஒருவரிடம் கொடுத்து பொருள்களை வாங்கி சென்றுள்ளார்.


அந்து பீய்ந்து போன ரூபாய் நோட்டை அதே கலருள்ள பேப்பரை ஒட்டி இந்த முதியவரிடம் தள்ளிவிட்டு சென்றுவிட்டார்.
பாவம் அந்த பெரியவர்.  
இடம்: கடைதெரு .

Tuesday, October 29, 2013

அதிரை தக்வா பள்ளி அருகே சிதறி கிடக்கும் குப்பைகள் -பொதுமக்கள் அவதி

அதிரை தக்வா பள்ளி அருகில் பல நாட்களாக குப்பைகளை அல்ல படாமல் இருந்து வருகிறது.இதனால் அப்பகுதயில்  துர்நாற்றம் வீசி வருவதாக அப்பகுதி மக்களால் கூறபடுகிறது.சம்மந்தப்பட்ட வார்டு மெம்பெர் இதனை கவனத்தில் எடுத்து கொண்டு விரைவில் குப்பைகளை அல்ல பொதுமக்களால் கேட்டு கொள்ளப்படுகிறது. 

மேலும்  பள்ளி வளாகத்தில் இருக்கும் இந்த  குப்பை தொட்டியையும் மாற்றி வேறு இடத்தில அமைக்கவும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
--AX ரிஜ்வான் 

குவ்வ்வ் .....புகை வண்டியார் பதில்....... "ஒரு தரப்பை மட்டும் குறை சொல்வது தவறு அதிரை பேரூர் நிர்வாகத்திற்கு எப்படி குப்பைகளை அள்ளுவதற்கு கடமை இருக்கிறதோ .பொது மக்களும் அந்த குப்பைகளை ரோடுகளில் கொட்டாமல் முறையாக குப்பை தொட்டிகளில் கொட்டுவது கடமை".  

அதிரையில் தாறுமாறாக ஓடும் வாகனங்கள் -விபத்தில் இரண்டு குட்டி ஆடுகள் பலி

அதிரை ஷிபா மருத்துவமனை  அருகில் தாறுமாறாக ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் சிக்கி இரண்டு ஆடுகள் பலியாகின.வாகனத்தை ஓட்டிவந்த நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில்  பறந்து விட்டனர். 
சில வருடங்களுக்கு முன்பு அதிரை காதர் முகைதீன் கல்லூரி அருகில் ஆடு மந்தைகள் லாரியில் மோதி இறந்த சம்பவம் குறிப்பிடதக்கது. 

குப்பைகளால் தேங்கிக்கிடக்கும் சாக்கடை!(புகைப்படங்கள்)

அதிரை புதுதெரு தென்புறம் 11 ஆம் வார்டில் குப்பைகளை சுத்தம் செய்யாமல் 8 நாட்கள் அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை அள்ளுவதால், குப்பைகள் சாக்கடையில் விழுந்து சாக்கடை அடைபட்டு அப்பகுதி வீடுகளில் சாக்கடை தேங்கி கொசுத்தொல்லை அதிகரிப்பதாகவும் இதனால் சுகாதாரக் கேடுகளும் வியாதிகளாலும் அப்பகுதி மக்கள் அவதியுறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

இப்புகைப்படத்துடன் தகவல் தந்த வாசகர் ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். அதாவது அங்கு குப்பைக்கென்று தனித் தொட்டி அமைத்து அதில் குப்பைகளை கொட்ட வகை செய்ய வேண்டும் என்றும், இதன்மூலம் குப்பைகள் சாக்கடையில் விழுந்து அடைப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.

இப்பகுதியில் உள்ள குப்பைகள அவ்வப்போது சுத்தம் செய்து சுகாதார சீர்கேடு வராமல் தடுக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் வேண்டுகோளாகும்

மேலும் அதிரை பைத்துல்மால் டியூஷன் செண்டர் இப்பகுதியில்தான் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்கள் கீழே

தகவல்& புகைப்பபடம்: பகுருதீன்

Monday, October 28, 2013

பட்டுக்கோட்டையில் 31ம் தேதி விரைவு பட்டா மாறுதல் முகாம்

பட்டுக்கோட்டையில் 31ம் தேதி விரைவு பட்டா மாறுதல் முகாம் நடக்கிறது.
குறித்து பட்டுக்கோட்டை தாசில்தார் முத்துக்குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

பட்டுக்கோட்டை தாலுகா எல்லைக்குள் உள்ள நிலங்களில் பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவு செய்து பட்டா வழங்குவதற்கான விரைவு பட்டா மாறுதல் சிறப்பு முகாம் 31ம் தேதி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தஞ்சாவூர் கலெக்டர் சுப்பையன் தலைமையில் நடக்கிறது. இதில் டிஆர்ஓ சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில் கொடுக்கப்படும் தனிப்பட்டா மனுக்களுக்குரிய உத்தரவினை நவ. 15ம் தேதியும், உட்பிரிவுடன் கூடிய பட்டாக்களுக்கான உத்தரவினை நவ. 28ம் தேதியும் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நேரடியாக மனுதாரர்களுக்கு வழங்கப்படும். 

இந்த விரைவு பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்கள் நிலங்களுக்குரிய பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவின் மூலம் பட்டா கோரும் மனுக்களை அளித்து மக்கள் பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முகாமினை  அதிரை பொதுமக்கள் பயன்படுத்துமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள். 

அதிரையில் சாலை மறியல்-டிராக்டர்கள் சிறைபிடிப்பு

அதிரை செட்டியா குளம் தூர்வாரும் சகதிகளை கொண்டு செல்லும் போது சாலைகளில் விழுகின்றன அதனை உடனுக்குடன் துப்புரவு செய்ய வேண்டும் என முன்பு தமுமுக வினர் டிராக்டர்களை சிறை பிடித்தனர். பின்பு பேச்சுவார்த்தைக்கு பின் விடுவிக்கப்பட்டது.அதே போல் இன்று சேர்மன் வாடி அருகில் 100 மேற்பட்ட பொதுமக்கள் டிராக்டர்களை சிறைப்பிடித்து உள்ளனர்.மேலும் சிறைபிடிக்கப்பட்ட  டிராக்டர் ஓட்டுனர்கள் காவல்துறையில் புகார் அளித்து உள்ளனர்.இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது மேலும் பொதுமக்களால் சிறை பிடிக்கப்பட்ட அணைத்து டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டு அதிரை காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது  
அதிரையிளுருந்து நமது செய்தியாளர் ரிஜ்வான்,ஹசன் முராத்  

ஜன்னலை பூட்டிவிட்டு படுங்க...ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

அதிரையில் செல்போன் கலாச்சரம் மேலோங்கி  உள்ள நிலையில் இதனை பெரும்பாலான இளைஞர்கள் வீணான தேவையற்ற செயல்களுக்கே பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு சமிபத்தில் நமது சக பதிவரிடம் மாட்டிகொண்ட இளைஞரே சாட்சி...  

அப்படி அவன் என்னதான் செய்தான்?

அதிரை நகரில்  உள்ள வீடுகளில் கணவன் மனைவி உறங்கும் வீடு ஜன்னல்களில் தனது செல்போன்காமிரா மூலம் படமெடுத்து வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் படி நோட்டமிட்ட நமது பதிவர் அவரை பிடித்து அவரின் செல்போனை பறிமுதல் செய்து பார்த்தபொழுது இதில் பெண்கள்,கணவன்,மனைவி தூங்கும் காட்சிகள் மற்றும் இன்னும் ஏராளமான அந்தரங்க புகைபடங்ககள் மற்றும் நீலபடங்கள் இருந்தன.

பின்னர் நல்லவிதமாக கவனிக்கப்பட்ட அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

எனவே தயவு கூர்ந்து வீடுகளில் படுக்க போகும் முன் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடிவிட்டு படுக்க செல்லுங்கள் இது நமக்கு பாதுக்காப்பாகும்.
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           

பள்ளிவாசல் அருகே குப்பைகூளங்கலால் பொதுமக்கள் அவதி!
அதிரை அல் அமீன் பள்ளி அருகே குப்பைகளை துப்புரவு ஊழியர்கள் சரியாக சுத்தம் செய்யாமல் சென்றதால் அப்பகுதி முழுவதும் குப்பைகளாக காட்சியளிக்கிறது.

இதனால் அல் அமீன் பள்ளிக்கு தொழுகைக்குச் செல்பவர்களுக்கும், பேருந்து நிலையத்திற்குச் செல்லும் பயணிகளுக்கும் சிரமமாகவும் சுகாதாரக் குறைவாகவும் இருப்பதாகவும் அதிரை பேரூராட்சி விரைவில்,இப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.Sunday, October 27, 2013

அதிரை SMA நகரில் மனை விற்பனைக்கு

அதிரை SMA (மரியம் பள்ளி) நகரில்  (CMP லேன் பின் புறம்)  

40*80= 3200 சதுர அடியுள்ள மனை விற்பனைக்கு உள்ளது. 

தொடர்புக்கு : 8148480807

மரண அறிவிப்பு

சேது ரோட்டை சேர்ந்த  மர்ஹூம்  அப்துல் கரீம் அவர்களின் மகனும், ஜபருல்லாகான், அயூப்கான், அஜ்மல்கான், நெய்னாகான் ஆகியோரின் சகோதரரும்  அரஃபாத் அவர்களின் தகப்பனாருமான அஷ்ரப் அலி அவர்கள் இன்று (27-10-2013) காலை 9 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.இவர் சாரா,லாவண்யா  கல்யாண மண்டபம் உரிமையாளர் மர்ஹூம் பாருக் மரைக்காயர் அவர்களின் மைத்துனர் என்பது குறிப்பிடதக்கது. 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் நல்லடக்கம் இன்று மாலை 4 மணியளவில் பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நடைபெறும்.

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி எப்படி? - நக்கீரன் சர்வே.


நமது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் திரு.பழனிமாணிக்கம் எ.பி. அவர்களின் செயல்பாடுகள் குறித்து தொகுதிமக்களின் எண்ணத்தை நக்கீரன் (22-10-2013) இதழ் வெளியிட்டுள்ளது. அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்காக நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகிறது.

நமதூர் அடங்கும் பட்டுக்கோட்டை தொகுதி குறித்த கருத்துகளைக் கவனமாக வாசித்து, உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யுங்கள். தேர்தல் நெருங்கி வருவதால் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குச் செல்லக்கூடும்.

நேர்மையான, தனிநபர் தாக்குதலற்ற உண்மைப்பெயருடன் பதிவாகும் பின்னூட்ட கருத்துகளை தொகுத்து அனுப்பப்படும் என்பதால் அதிரையர்கள் அவசியம் தங்களது மேலான கருத்துகளைப் பின்னூட்டமாகப் பதியவும்.

நன்றி: நக்கீரன் & சர்வே டீம்

Saturday, October 26, 2013

அதிரை கடைதெரு சாலைகள் சீர் செய்யும் பணி மும்முரம்

அதிரை கடைத்தெருவிலிருந்து  மகிலாங்கோட்டை செல்லும் சாலைகளை தற்போது சீர் செய்யும் பணி நடந்து வருகிறது.

நமது நிருபரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு 

--ரிஜ்வான்