Friday, February 28, 2014

அதிரையில் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கல்

அதிரை பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கல் பணி இன்று தொடங்கியது.

காதிர் முஹைதீன் பள்ளிகளில் இன்று தொடங்கிய இப்பணி நாளை இமாம் ஷாஃபி பள்ளியிலும் தொடங்கப்படும்.

அதிரை எக்ஸ்பிரஸ்சின் செய்தி எதிரொலி !

அதிரை பகுதிக்கு விரைவில் அரசின் விலையில்லா பொருட்கள் வழங்க இருப்பதாக ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

கடந்த செப்டம்பர் மாதம்  நமது தளத்தில் வடை மடித்த வாக்குறுதிகள் !! என்ற தலைப்பில் அதிரைபகுதிக்கு அரசின் விலை இல்லா பொருட்கள் வழங்கிட நகர அதிமுகவினரால் கொடுக்கப்பட்ட படிவங்களை எடைக்கு போட்டு பின்னர் வடைமடிக்க உதவியதை நமது பதிவர் ஆதாரத்துடன் பதிந்து இருந்தார்.
அதனை தொடர்ந்து அதிரைபுதியவன் கடந்த மாதம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்து இருந்தார் .

இந்நிலையில் ஏறிபுறகரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட அதிரை பிலால் நகர் பகுதிக்கு அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டதை அடுத்து பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நமதூர் பகுதிக்கு அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கிட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே...

அதிரை ஆலிம்கள் முன்னிலையில் இலங்கையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா!

இலங்கை காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழாவும நூல் வெளியீட்டு விழாவும் இன்று 27.02.2014 வியாழக்கிழமை மதரசா மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி ஜாமிஆவின் முதல்வர் மௌலானா மௌலவி எம்.ஏ.முகம்மது அப்துல்லாஹ் ஆலிம் (றஹ்மானி) ‘ஷைகுல் பலாஹ்’ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென் இந்தியா அதிராம் பட்டினத்தை சேர்ந்த ரஹ்மாணியா அறபுக்கல்லுரியின் முதல்வர்) கேரளா கே.டி. முஹம்மதுக் குட்டி முஸ்லியார்(பாஸில் பாகவீ) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் நிறைவேற்றுக்குழு இணைப்பாளரும், கொழும்பு மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்ஹ் எம்.ஏ.சீ.எம்.பாஸில்(குமைதி)அவர்களின் விசேட சிறப்புரையும் இடம் பெறறது.

இதன்போது ‘ஷைகுல் பலாஹ்’ அவர்களதும் அன்னாரின் சகோதரர் மர்ஹும் அப்துர்றஹ்மான் அவர்களினதும் சிறப்புக் கூறும் “என்றும் இலங்கும் இரு மணிகள்” என்னும் நூல் வெளியிடப்பட்டதுடன் இந்நூலில் ‘ஷைகுல் பலாஹ்’ பற்றி சிறப்புக் கவிதை புனைந்த மௌலவி ஏ.எல.எம்.எம்.முஸ்தபா பலாஹி(சூபி ஹஸரத்) அவர்கள் அதிதிகளால் மக்கத்துச் சால்வை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இவ் விழாவில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், தென் இந்தியா அதிராம் பட்டின றஹ்மானியா அறபுக் கல்லுர்ரி பேராசிரியர் ஏ.ஜே முஹம்மத் நெய்னா ஆலிம் ஸாஹிப் (றஹ்மானி அத்றமீ), சம்மாங் கோட்டுப் பள்ளிவாயல் பிரதம இமாம் மௌலானா மௌலவி எஸ்.ஓ.எம் காழி அலாவுதீன் ஆலிம் பாஸில் பாகவீ உட்பட உள்ளுர் வெளியூர் உலமாக்கள், புத்தி ஜீவிகள், மார்க்க அறிஞர்கள், பாதுகாப்பு படை அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது ஒன்பது ஹாபிழ்களுக்கும் ஏழு மௌலவிமார்களுக்கும் “பலாஹி” பட்டமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“பலாஹி”  மௌலவி பட்டம் பெற்றவர்களின் பெயர் விபரம்
எம்.எஸ்.எம்.பயாஸ் – காத்தான்குடி, எம்.எச்.எம்.அனஸ் – புநொச்சிமுனை, எம்.எம்.எம்.நுஸ்ரி – காத்தான்குடி, எம்.ஜே.எம்.ஜப்ரான் – காத்தான்குடி, எம்.எ.எம்.ஹபிழ் – பாலமுனை, எம்.எ.எம்.அஸ்பர் – வாழைச்சேனை, ஐ.சப்ராஸ் – ஓட்டமாவடி.

தகவல்: அபூ உசாமா

 நன்றி www.newsbest.net

இன்று ஒரு தகவல் - பாசிப்பருப்பு

பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும்.

அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.

Thursday, February 27, 2014

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் கடந்த 14/02/2014 வெள்ளி அன்று மலாஸ் ஏரியாவில் இனிதே நடைப்பெற்றது.


தொகுப்பு :
தலைமை : சகோ. சரபுதீன் 

கிராத் : சகோ. அப்துல் ரஷீத் 

வரவேற்புரை : சகோ. ஜலீல்

சிறப்புரை : சகோ. அபூபக்கர்

மாதாந்திர அறிக்கை : சகோ. அப்துல் ரஷீத்


தீர்மானங்கள் :

1. ஜனாஸா குளிப்பாட்டும் தொட்டி ரியாத் சார்பாக ஒன்று ABM க்கு 
வழங்குவதென முடிவுசெய்யப்பட்டது .


2. மாத சந்தா தொகையை ஒவ்வொரு மாதமும் அனைத்து  

உறுப்பினர்களிடம் வசூல் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 

அதற்கு பகுதி வாரியாக பொருப்புதாரிகள் நியமிக்கப்பட்டது .

மலாஸ் : அப்துல் ரஷீத் 
ஓலையா : அஹ்மத் அஷ்ரப்
ஹாரா     : அப்துல் காதர் /ஹாஜா ஷரிப் 
பத்தா       : ஜமால்
நஸ்ரியா : சரபுதீன் 

மேலும் 5ஆம் தேதிக்குள் சந்தா தொகையை அனைவரிடமும் வசூல் செய்வதென முடிவு செய்யப்பட்டது .

3. சவுதி அரேபியாவில் உள்ள புரைதா நகரில் ABM கிளை தொடங்குவது விசயமாக ஆலோசிக்கப்பட்டது .

4.அடுத்த அமர்வு மார்ச் 14ஆம் தேதி கூடுவது என முடிவு செய்யப்பட்டது .

5. வருடத்தில் 3 அமர்வுகள் அதிரை மக்கள் அனைவரையும் ஒன்று கூட்டி ஒரு சிறப்பு ஏற்பாடு செய்வதென முடிவு செய்யப்பட்டது .அதன் அடிப்படையில்  ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மெகா கூட்டம் கூடுவது  என முடிவு செய்யப்பட்டது .

நன்றியுரை : சகோ : சரபுதீன்.

இன்று +2 மாணாக்கர்கள் ஹால்டிக்கெட் தரவிறக்கம் செய்யலாம்

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் இன்று முதல் இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறியுள்ளதாவது:

"பிளஸ்2 தேர்வு வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத 'சிறப்பு அனுமதி திட்டத்தின்' (தக்கல்) கீழ் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று மதியம் முதல் (www.tndge.in) என்ற இணையதளத்தில் தங்களது விண்ணப்ப எண்ணையும், பிறந்த தேதியினையும் பதிவு செய்து 'ஹால்டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வு செய்ய வேண்டிய தேதிகள் பற்றிய விவரங்கள் குறித்து, தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ளலாம்.

ஏற்கனவே உரிய நேரத்தில் பிளஸ்2 தேர்வு எழுத ஆன் லைனில் விண்ணப்பித்து ஹால்டிக்கெட்டுகளை இதுவரையில் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளாத தனித்தேர்வர்களும், மேற்குறிப்பிட்ட இணையதளத்தின் மூலம் உடனடியாக ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: ஒன்இந்தியா.காம்

இன்று ஒரு தகவல் - முட்டை!

தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், நாள் முழுவதும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளும்.

பி.கு: முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகம் உள்ளதால் பெரியவர்கள் தவிர்ப்பது நல்லது.

நெய்னா'ஸ் கிச்சன் (ஆட்டுக்கால் கேக்) - காணொளி

ஆட்டுக்கால் சூப் தெரியும்! ஆட்டுக்கால் பாயா தெரியும்!! அதென்ன ஆட்டுக்கால் கேக்?

நாமும் செய்துதான் பார்ப்போமே என்ற ஆர்வத்தில் ஆட்டுக்கால் வாங்க இறைச்சிக் கடைக்குப் போகவேண்டியது இல்லை.

சகோ.நெய்னா அவர்கள் தரும் செய்முறை விளக்கத்தைப் பாருங்கள். ரொம்ப இலகுவான முறையில் சுவையான பலகாரம் ரெடி.


Wednesday, February 26, 2014

இன்று ஒரு தகவல் - தேன்

காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால், குடலியக்கம் சீராக இயங்குவதோடு, உடலும் ஒல்லியாகும்.

ஊடகங்கள் மூடி மறைத்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்யக் கோரியும், மேலும் பல ஆண்டுகளாக சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக் கோரியும் சென்னையில் இந்திய தேசிய லீக் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

முதலில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை, பின்னர் ஜிம்கானா அருகில், பிறகு அங்கிருந்து கைது செய்யப்பட்டு தாசர்மக்கான் சமுதாயக் கூடம், பின்னர் அங்கிருந்து திருவல்லிக்கேணி அல்மாலிக் மஹால் என காவல் துறை அலைக்களிப்பாலும் ,
இரண்டு நாள் உண்ணாவிரதத்தின் பலவீனம் உடலில் இருந்தாலும், சிறைவாசிகள் விடுதலை எனும் கோரிக்கையை வென்று எடுக்கும் வரை உண்ணாவிரதத்தை கை விடப் போவதில்லை எனும் உள்ள உறுதியுடன் இருக்கிறார்கள் தடா ரஹீம் மற்றும் அவரோடு இருக்கும் சகோதரர்கள் !

உண்ணா விரதம் எனும் போராட்ட வழிமுறையில் நமக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் நீதி முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மறுக்கபட்டால் அதற்க்காக் போராட வேண்டும் என்பதிலும், அதற்கான சரியான தருணம் இது என்பதிலும் நம்மில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது!

அதே போன்று சிறைவாசிகள் விஷயத்தில் அவருடைய இந்தப் போராட்டம் என்பது விளம்பரத்திற்கோ வேறு நோக்கங்களுக்கோ கிடையாது அது உணர்வுப் பூர்வமானது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று ! ஏன் எனில் பல வருடங்களாக தங்களின் இளமையை சிறையில் தொலைத்தவர்களில் அவரும் ஒருவர் !

இன்று திருவல்லிக்கேணி அல் மாலிக் மஹாலில் அவரையும் ஏர்வாடி காசிம் மன்னடி அப்துல்லா உள்ளிட்ட சகோதரர்களை சந்தித்த போது உண்ணா விரதத்தில் பங்கேற்க முடியாத எங்களை போன்றவர்கள் என்ன செய்ய வேண்டும் ? எனக் கேட்ட போது 

உங்களுக்கு மட்டுமல்ல இங்கு இருக்கும் எல்லா சகோதரர்களுக்கும் எல்லோருக்கும் நான் சொல்வது என்னவென்றால் நீங்கள் என்னோடு இங்கு உட்கார்ந்து இருப்பதால் எந்த நன்மையையும் இல்லை ! நான் இங்கு உண்ணா விரதம் இருக்கிறேன் ! நம்முடைய இந்தப் போராட்டத்தை எந்த ஊடகமும் மக்களுக்கு கொண்டு செல்லாது ஆகையால் அதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு, அல்லது சுவரொட்டிகள் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் , அல்லது ஜுமுஆகளில் அறிவிப்பு செய்வதன் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல உதவுங்கள் !

சிறைவாசிகள் விடுதலைக்காக துஆ செய்ய சொல்லுங்கள் ! என்றார் !


நன்றி :முகநூல் பக்கங்கள்.

Tuesday, February 25, 2014

அதிராம்பட்டினத்தில் நாளை மின்தடை !


மதுக்கூர் மின்பகிர்மான வட்டத்தில் நாளையதினம் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளைய தினம் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை நமதூரில் மின் விநியோகம் இருக்காது என அதிரை மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் இன்றே தங்கள் வீடுகளில் மின்சார்ந்த தேவைகளை பூர்த்தி  செய்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள் மேலும் அடிகடி மின்வாரிய அலுவலகத்திற்கு போன்  செய்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுகொள்ளபடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .

ஏழை பெண்மணிக்கு தையல் மெஷின் உதவி!

அதிராம்பட்டினம் பாத்திமா நகரில் வசித்துவரும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக அதிரை ததஜ கிளை சார்பாக தையல் மிஷின் வழங்கப்பட்டது. 

தகவல்: அப்துல் ஜப்பார்

Monday, February 24, 2014

மதீனா நெட்வொர்க் - ஸ்கூல் ஸ்டோர் (இலவச விளம்பரம்)

அதிரையில் MADEENA NETWORK  என்ற புதிய வர்த்தக நிறுவனம் மூலம் கீழ்காணும் சேவைகளைச் செய்து தருகிறோம்.
 • ஈமெயில்
 • ஸ்கேனிங்
 • நகல்
 • கலர் பிரிண்டிங்
 • மின்சார கட்டணம் செலுத்துதல்
 • பள்ளி நோட்டுகள்
 • புக்ஸ் பைண்டிங்
 • லாமினேசன்
 • பாஸ்போர்ட் அப்பாயிண்ட்மெண்ட் 
 • PAN கார்ட்
 • தமிழக அரசு அலுவலக ஃபார்ம்ஸ் 

போன்றவை  குறைந்த கட்டணத்தில் செய்து தருகிறோம்.

தொடர்புக்கு:
சாகுல் மர்வான்
24A OLD POST OFFICE ROAD
ADIRAMPATTINAM
செல்பேசி:        9952200890                             தொலைபேசி: 04373-240445
ஈமெயில் : shmarwan2010@gmail.com    

****அதிரை எக்ஸ்பிரஸ் எச்சரிக்கை**** 
இஃது ஓர் இலவச விளம்பரம். இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தீர ஆராய்ந்து செயல்பட வேண்டுகிறோம். அதிரையர்களின் நிறுவனங்களை இலவசமாக விளம்பரப்படுத்தும் நோக்கில் வெளியாகும் இந்த பதிவுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் குழு பொறுப்பல்ல.
******************************************                                          

அமெரிக்க அதிரையர்களின் (AAF) அமைப்புக் கூட்டம் (புகைப்படங்கள்)

 
 அமெரிக்கா அதிரையகளின் ( AAF) அமைப்பின்  முதல் காலாண்டு கூட்டம் கலிபோர்னியா மஹானத்தில் உள்ள வல்லேஹோ இஸ்லாமிக் சென்டரில் கடந்த (23-2-2014) ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது.

சகோ இக்பால் M. சாலிஹ் அவர்களின் மகன் மாஸ்டர்  இஸ்மாயில் இக்பால் அவர்கள் கிராத் ஓத நிகழ்ச்சி இனிதே தொடங்கியது..

AAF'ன் தலைவர் சகோதரர் ஹக்கீம் அவர்கள் நிகழ்சியில் தலைமை வகித்த இந்த கூட்டத்தில் AAF'ன் வரவு செலவு கணக்குகள் குறித்த தகவலை பொருளாளர் சகோதரர் இக்பால் M. சாலிஹ் சமர்ப்பித்தார். AAF'ன் செயல்பாடுகள் குறித்த தகவலை செயலாளர் சகோதரர் நசீர் அவர்கள் விவரித்தார். இறுதியாக AAF'ன் துணைத்தலைவர் சகோதரர் ஷிப்லி அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

இந்த கூட்டத்தில் வடக்கு கலிபோர்னியாவின் அனைத்து பகுதிகளில் வசித்து வரும் அனைத்து உருபினர்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இன்றைய கூட்டத்தின் முக்கிய அஜெண்டாவாக சமீபத்தில் அமெரிக்காவில் மரணமடைந்த மர்ஹும் நைனா முகமது பெயரில் குரான் ஓதி அவர்கள் மஹ்ஃபிரத்திற்காக துஆ செய்ய வேண்டுகோள் வைக்கப்பட்டது. 

மேலும் அதிரையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் மர்ஹும் பாட்சா முகைதீன் மரைக்காயர் அவர்களின் புதல்வர் சகோதரர் நல்ல அபூபக்கர் அவர்களின் உடல் நலம் பூர்ண குணமடையவும் துவா செய்ய வேண்டுகோள் வைக்கப்பட்டது.

தகவல் மற்றும் புகைப்படங்கள்:  M.M.S. பகுருதீன் (கலிஃபோர்னியா)

தஞ்சை தொகுதி அதிமுக எம்.பி வேட்பாளர் கு.பரசுராமன் B.SC.,


இன்று 24-02-2014 முதல்வர் ஜெயலலிதா, 16 ஆவது மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். தஞ்சாவூர் தொகுதியின் அதிமுக வேட்பாளராக திரு.கு.பரசுராமன் அறிவிக்கப்பட்டுள்ளார்.இவர், தஞ்சாவூர் அருகிலுள்ள நீலகிரி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதையை தஞ்சாவூர் தொகுதி திமுக எம்.பி பழனி மாணிக்கம் அல்லது புதிதாக இத்தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு திமுக சார்பில் போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியிலுள்ள கம்யூனிஸ்டுகளுக்கு இன்னும் தொகுதி ஒதுக்கப்படவில்லை என்பதால், வேட்பாளர் அறிவிக்கப்பட்ட 40 தொகுதிகளில் சில தொகுதிகளை விட்டுக்கொடுக்கும் பட்சத்தில் ஒருசில தொகுதிகளில் வேட்பாளர் மாற்றம் இருக்கலாம். எனினும், தஞ்சாவூர் தொகுதியில் அதற்கான வாய்ப்பில்லை.

இந்த தொகுதியில் யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும் ஆனால், முடக்கப்பட்டுள்ள கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை மீண்டும் விரைந்து தொடங்க யார் உறுதியளிக்கிறாரோ அவருக்கே அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரனி வாக்காளர்களின் ஓட்டுகள் விழும் என்பதால்,தேர்தல் அறிக்கையை தொகுதி வாக்காளர்கள் உன்னிப்பாக எதிர்பார்த்துள்ளனர்

அதிரையில் மழை : மக்கள் மகிழ்ச்சி!!


அதிரையில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது.அவ்வப்போது சில கருமேகங்கள் சூழும் பொழுது மழை வராதா என மக்கள் எங்காத நாட்கள் இல்லை.

தற்பொழுது அந்த ஏக்கத்திற்கு பலன் கிடைத்துள்ளது. ஆம்..! இன்று அதிகாலை 5.45 மணிக்கு அதிரையை மழை  எட்டிப் பார்த்து, தற்பொழுது பெய்து வருகிறது.

காலை நேரத்தில் மிதமான மழை பெய்தாலும் 11 மணியளவில் வெளுத்து வாங்கியது.வெயிலின் தாக்கத்தில் இருந்த அதிரை மக்களை தற்பொழுது பெய்துள்ள  மழை குளு குளுவென குஷிபடுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னுமா தயக்கம் ...?

தருமபுரி மாவட்டத்தில் ஆற்றுபாலம் கட்டித்ராத அரசை கண்டித்து கடந்த 18ஆம் தேதியன்று அக்கிராம மக்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தனர்.

அப்பொழுது எங்கள் பகுதி அரசால் தொடர்ந்து புரக்கனிக்கப்ட்டு வருவதால் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறகணிக்க இருப்பதாகவும் எங்கள் பகுதிக்கு எந்த அரசியல் வாதிகளும் ஒட்டு கேட்டு வரகூடாது என்று கோரிக்கையும் வைத்து இருந்தனர்.

 இந்நிலையில் இதனை அறிந்த மாநில அரசு உடனடியாக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து இரண்டு மாதகாலத்திற்குள் இந்த தரைப்பாலம் கட்டி முடிக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

ஆமாம் இதுக்கும் நமக்கும் என்னசம்பந்தம்ன்னு கேக்குறீங்களா?

ஊருக்கு அகல ரயில் பாதை வரணும்மான இந்த பாணியை பின்பற்றுங்க.... இல்லாட்டி ம்ம்ஹூம்...  

ஆம் - ஆத்மி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் - அதிரையர்கள் பங்கேற்பு!

ஊழல், லஞ்சத்தை ஒழிப்போம். தன்னாட்சி வேண்டும். சுரண்டல் சக்திகளிடம் இருந்து இந்தியாவை காக்க ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தஞ்சை ரெயிலடியில் இருந்து ஆம்ஆத்மி கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டு முக்கியவீதிகள் வழியாக பனகல் கட்டிடத்தை சென்றடைந்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினாசாமி தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் வரவேற்றார். நிர்வாகிகள் பழனிராஜன், தட்சிணாமூர்த்தி, மணிகண்டன், உமர்தம்பி, குமாரவேலு, ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு ஆம்ஆத்மி கட்சியின் சின்னமான துடைப்பத்தை கையில் ஏந்தி கோஷங்கள் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சன் டிவி வீரபாண்டியன் கலந்து கொள்ளும் ஊடக விழிப்புணர்வு கருத்தரங்கம்!


குவைத் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் (IGC) சார்பில் நடத்தப்படவிருக்கும் சமூக மற்றும் ஊடக விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி

சன் டிவி நேருக்கு நேர் புகழ் திரு. வீரபாண்டியன் M.A  அவர்கள் இன்றைய ஊடகமும் மாற்று ஊடகத்தின் அவசியம் குறித்து உரையாற்றவுள்ளார்கள்.

 வரும் 26-02-2014, புதன் கிழமை மாலை நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சிக்கு தாங்கள், தங்களது அமைப்பினர், சங்கத்தினர், நண்பர்கள் அனைவரும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சுற்றம் சூழ வருகைத் தந்து சமூக மற்றும் ஊடக விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்நிகழ்ச்சியை சிறப்பித்துத் தருமாறு அன்போடு அழைக்கிறோம்.

குறிப்பு: 
* இரவு உணவு (சைவம் / அசைவம்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* குவைத்தின் பல பகுதிகளில் இருந்து வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.

Sunday, February 23, 2014

அதிரையில் போலியோ சொட்டு மருந்து முகாம்!!

இன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. நமதூர் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில்  போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெற்றது. இதில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.

காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரையிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்ந்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தாமதிக்க வேண்டாம் பெற்றோர்களே...!!

இன்று தமிழகம் முழுவதும் போலியோ முகாம்

போலியோவை உண்டாக்கும் வைரஸ் நுண்கிருமிகள் குழந்தைகளை பாதிக்கச் செ‌ய்வதோடு, குழந்தைகளின் கை, கால்கள் மற்றும் உடம்பின் சில பகுதிகளை நிரந்தரமாக ஊனமடையச் செ‌ய்கின்றன.

இந்நோ‌ய் வந்த பின் அவதிப்படுவதை விட வருமுன் காப்பதற்கு ஒரே வழி, ஆண்டுதோறும் நடத்தப்படும் 'போலியோ’ முகாம்களில் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து கொடுப்பதுதான்.

பிறக்கும் போது ஊனமாக பிறந்துவிட்டால் விதியே என்று விட்டுவிடலாம். ஆனால் சுகமாக பிறந்து நன்றாக ஓடி ஆடி விளையாடிய பிள்ளைகள் திடீரென நோய் தாக்கி நடக்க முடியாமல் ஊனமடைவது என்பது தாங்க இயலாத துயரம். இந்த துயரத்திற்கு முடிவு கட்டும் வகையில் ஹிலாரி கோப்ரோவ்க்ஸ்கி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துதான் போலியோ சொட்டு மருந்து.

தாமதிக்க வேண்டாம் பெற்றோர்களே..!  நமதூர் அரசு சுகாதார நிலையங்களில் நடத்தப்படும் போலியோ சொட்டுமருந்து முகாமில் கலந்துகொண்டு சொட்டுமருந்து இட்டு இன்றே உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

போலியோ முகாம் இன்று நடைபெறுகிறது.


ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்கள் என தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 சொட்டு மருந்து மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

காலை 7 மணி முதல்...: சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாள்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாள்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

முக்கிய பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் மொத்தம் 1652 நகரும் மையங்கள் நிறுவப்பட் டுள்ளன. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தை களுக்கென்று 1000 நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முகாமில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், ரோட்டரி இன்டர்நேஷனல் போன்ற தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

Saturday, February 22, 2014

காதிர் முஹைதீன் (ஆண்கள்) மேல்நிலைப்பள்ளியில் 65 வது ஆண்டு விழா!! (புகைப்படங்கள்)

நமதூர் அதிரை காதிர் முகைதீன் (ஆண்கள்) மேல்நிலைப்பள்ளியின் 65வது  ஆண்டு விழா இன்று மாலை 4.30 மணியளவில் பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளியின் தமிழ்துறை ஆசிரியர் அஜ்முதீன்  வரவேற்புரை நிகழ்த்தினார்.
காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்கள் தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார். இதன் பின்பு  பள்ளியின் தலைமை ஆசிரியர் A. மஹபூப் அலி ஆண்டறிக்கை வாசித்தார். 

அந்த ஆண்டறிக்கையில்  கல்வி, விளையாட்டில் மாணவர்கள் - ஆசிரியர்கள் நிகழ்த்திய பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டார். 

இவ் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மறுதான்தளை அரசு மேல்நிலைபள்ளி முதுகலை ஆசிரியர் மகா. சுந்தர் மாணவர்களுக்கு  நகைச்சுவையில்  சிந்தனை தரும்சிறப்பு சொற்பொழிவாற்றினார். 

32 ஆண்டுகாலம் அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் துறையில் கொடிகட்டி பறந்து தற்பொழுது பணியிலிருந்து ஓய்வு பெரும் பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் ஹாஜி முஹம்மது அவர்களுக்கு பள்ளியின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.  முதுகலை ஆசிரியர் கணேசன் அவர்கள்விருப்ப ஓய்வு  பெற இருக்கின்றார்.

இவ்விழாவினை தமிழ்துறை ஆசிரியர் உமர் பாரூக் அவர்கள் அழகிய முறையில் தொகுத்து வழங்கினார்.

இவ்விழாவில் MKN  டிரஸ்ட் நிர்வாகிகள் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், முன்னாள் ஆசிரியர்கள் -முன்னாள்  மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

பள்ளித் தலைமை ஆசிரியர் ஆண்டறிக்கை வாசிக்கிறார்.


மாணவர்களுக்கு சிறப்பு சொற்பொழிவு ஆற்றுகிறார்.
ஹாஜி சார் அவர்களுடன் பள்ளியின் முன்னாள் மாணவரும், நமது அதிரை எக்ஸ்பிரஸ் சக பதிவர்.விழாவில் திரண்ட பள்ளி மாணவர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.