Monday, March 31, 2014

அதிரை எஸ்டிபிஐ கட்சியினரை சந்தித்த அதிரை திமுக நிர்வாகிகள்

நாடாளமன்ற தேர்தலில் திமுக கட்சிக்கு  37 இடங்களில் எஸ்டிபிஐ கட்சி ஆதரவு தெருவித்து உள்ளது.இதற்க்கு நன்றி தெருவித்து அதிரை திமுக நிர்வாகிகள் நகர எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.மேலும் தஞ்சை தொகுதி வேட்பாளர் TR.பாலு அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொள்ளும்படியும் கேட்டு கொண்டனர்.   


தஞ்சையில் திமுகவினரிடையே மோதல் முன்னாள் அமைச்சர் உட்பட பலர் காயம்! (காணொளி)

திமுகவின் சார்பில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில்போட்டியிடும் டி ஆர் பாலுவை ஆதரித்து தஞ்சை  செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உபயதுல்லா உள்ளிட்ட திமுகவினர்  தஞ்சை பாத்திமா நகரில் வாக்கு  சேகரித்து கொண்டிருந்தனர் .

அப்பொழுது அங்கு வந்த திமுகவின் மற்றொரு தரப்பினர் உபையதுல்லா உள்ளிட்ட 10 பேர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.  இதில் 10 பேர் பலத்த காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பழனிமாணிக்கம் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தார் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது .


மனநிலை பாதிப்புக்குள்ளான அதிரை வாலிபர் சங்கரன் கோவிலில்!


இந்த புகைபடத்தில் இருப்பவரின் பெயர் காதர் மைதீன்.

தந்தை பெயர் ஜைனுலாப்தீன்,
ஊர் அதிராம்பட்டினம்இவர் இப்போது திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ளார். சற்று  மனநிலை பாதிக்கபட்டுள்ளதால் இந்த தகவல்களைதான் பெற முடிந்தது என அப்பகுதி ததஜ கிளையினர் தெரிவித்துள்ளனர் .எனவே இது பற்றி தகவல் தெரிந்தால் உடனே கீழ்கானும் நம்பருக்கு தகவல் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 96 598 24 380
( TNTJ சங்கரன் கோவில் கிளை )


தகவல் :அதிரை நியூஸ் 

முன்னாள் தமுமுக நிர்வாகிகளால் ! உருவானது புதிய அணி !!

மறுமலர்ச்சி தமுமுக என்ற புதிய இஸ்லாமிய அமைப்பின் துவக்க விழா நேற்று  சென்னையில் நடைபெற்றது .இதில் தமுமுக வின் முன்னாள் மாநில மாணவரணி செயலாளரும் வழக்கறிஞருமான காஞ்சி .ஜைனுலாபிதீன் ,தமுமுக வின் முன்னாள் மாநில துணை தலைவர் கேப்டன் அமீருதீன் ,தமுமுக வின் முன்னாள் மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் பாஷா தமுமுக வின் முன்னாள் மாநில உலமா அணி செயலாளர் யூசுப் எஸ் .பி , தமுமுக வின் முன்னாள் தலைமை நிலைய செயலாளர் திருவள்ளூர் இஸ்மாயீல்,தமுமுக வின் முன்னாள் மாநில மாணவரணி துணை செயலாளர் புளியங்குடி செய்யதலி ,தமுமுக வின் முன்னாள் நெல்லை மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர் .
இதில் வெள்ளை கருப்பு வெள்ளை நிறத்திலான மூவர்ண கொடியை மறுமலர்ச்சி தமுமுக வின் அமைப்பாளர் வழக்கறிஞர் காஞ்சி ஜைனுலாபிதீன் அறிமுகம் செய்து வைத்தார் .


பிஜேபியில் யார்?

தஞ்சை, வேலூர் மக்களவை தொகுதியில் பாஜகவின் சார்பில் போட்டியிட ஒரு பெண் உட்பட பலர் விருப்பம் தெரிவித்து இருந்தனர் இந்நிலையில் யாரை  வேட்பாளராக யாரை அறிவிப்பது என்பது இழுபறியாக இருந்து வந்தது.

இதற்காக முடிவெடுக்க இன்று பாஜகவின் கமலாலயத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று கொண்டுள்ளது . நமது தஞ்சை தொகுதியில் கருப்பு என்னும் முருகானந்தம் நிறுத்தபடுவதற்கு  அதிக வாய்ப்பு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.

Sunday, March 30, 2014

மரண அறிவிப்பு

தட்சத் தெருவை  சேர்ந்த மர்ஹூம் உ.அ.மு. முஸ்தபா மரைக்காயர் அவர்களின் மகனும்  மர்ஹூம் M .தாஜுதீன், M.சம்சுதீன் ஆகியோரின் சகோதரரும்,AK. ஹாஜா கமால் அவர்களின் தந்தையும் சென்னை ஏரோ ஸ்டார்  டிராவல்ஸ் நிறுவனர் S.அன்சாரி மற்றும் ஷகாபுதீன் ஆகியோரின் மாமனாருமான  M.அப்துல் காதர் அவர்கள் இன்று மாலை வபாத்தாகி விட்டார்கள்.அன்னாரின் நல்லடக்கம் குறித்த விபரம் பின்னர் பதியப்படும். 

தஞ்சை தொகுதி எனக்கு வேணும்-அடம் பிடிக்கும் ஜெ

தஞ்சை தொகுதி விவசாயத்துக்கு பெயர் போன ஒரு மாவட்டம்.தற்போது மாநகராட்சி அந்தஸ்து பெற்று உள்ளது .அதில் பெரும்பான்மையாக நாடாளமன்ற தேர்தலில் திமுக அதிகளவில் வெற்றி பெற்று திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கி வருகிறது.இருப்பினும் தற்போது நடைபெரும் தேர்தலில் தஞ்சை தொகுதியை கைப்பற்றியே வேண்டும் என்பது ஜெ அவர்களின் எண்ணம் மற்றும் ஆசை.இதனால் தஞ்சை பகுதியில் உள்ள அதிமுக வினர் பதட்டம் நிறைந்த விறுவிறுப்புடன் வேட்பாளரை வெற்றி பெற வைத்து ஜெ அவர்களுக்கு இந்த தஞ்சை தொகுதியை பரிசாக வழங்க ஆர்வமுடன் செயல்பட்டு வருகின்றனர்.

ஜெ அவர்களின் ஆசை நிறைவேறுமா பொருத்து  இருந்து பார்ப்போம். 

மரண அறிவிப்பு ( அப்துல் சமது)

புதுதெரு வட புறத்தை சேர்ந்த மர்ஹும் அம்ஜத் இப்ராஹிம் அவர்களின் மகனும் , ஹாஜா  அவர்களின் சகோதரும் .நிஜாம்,அப்துகாதர்,ஹம்ஜா  இவர்களின் மச்சானும் , இப்ராஹிம், முகம்மது, அப்துர்ரஹ்மான் இவர்களின் தகபானாருமான அப்துல் சமது இன்று காலமானார். (இன்னாளிலாஹி...) 

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்குப்பின் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யபடுவதாக அன்னாரது குடும்பத்தினர் தெரிவித்தனர் . 

அன்னாரின் மஃபிரத்து நல்  வாழ்விற்கு துஆ செய்ய வேண்டும் என  கேட்டுகொள்கிறோம்.  

SDPI போட்டியிடாத பகுதிகளில் திமுகவுக்கு ஆதரவு !

பாப்புலர் ஃப்ரண்ட் அறிவிப்பு !

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் SDPI வேட்பாளர்கள் அல்லாத இடங்களில் திமுகவிற்கு ஆதரவு அளிக்கப்படும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது . 

அதனை தொடர்ந்து அவ்வியக்கம் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையை இங்கு பதிந்துள்ளோம்.  


Saturday, March 29, 2014

அதிரையில் மமக TR பாலுவை ஆதரித்து பிரச்சாரம்

அதிரையில் திமுக வேட்பாளர் TR..பாலு அவர்களை ஆதரித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் இன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் மமகவின் அதிரை நகர பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி  மற்றும் திருச்சி ரபீக் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.இதில் பலரும் கலந்து கொண்டனர்.  

அதிரை AFCC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி

அதிரையில் அதிரை AFCC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி வருகின்ற எப்ரல் மாதம்  19ஆம் தேதி  அன்று ஷிபா மருத்துவமனை எதிரில்  அமைந்து இருக்கும் கிரானி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.அதற்கான அதிகாரப்புர்வ அறிவிப்பு AFCC நிர்வாகிகளால் இன்று வெளியிடப்பட்டு உள்ளது .
இதயத்திற்குதினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால், இதய பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்று தெரிய வந்துள்ளது.

ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால் அன்றாடம் ஒரு முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்று வாஷிங்டனில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

சத்து குறைந்த உணவு, உடல் பருமன், உடற்பயிற்சி இல்லாமல் இருத்தல் போன்றவற்றால் இதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் 30 - 40 விழுக்காடு வரை அதிகம் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

முட்டை ஊட்டச்சத்து மைய நிதியுதவியுடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முட்டையில் உள்ள கொழுப்பானது இதய நோயை உருவாக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக இதுவரை தெரிவிக்கப்பட்டு வந்துள்ள நிலையில், தற்போதைய ஆய்வு முடிவின்படி, அன்றாடம் முட்டை உண்பதால், இதய நோய் பாதிப்பில் இருந்து தப்பலாம் என்று தெரிய வந்துள்ளது.

என்றாலும் எல்லா வயதினருக்கும் இது பொருந்துமா என்பதை துல்லியமாகக் கூற முடியாது என்றும் ஆய்வில் பங்கேற்றவர்கள் கூறினர்.

மேலும் உடல் எடை அதிகம் கொண்டவர்கள் உணவுக் கட்டுப்பாட்டு முறையைக் கடைபிடிக்கும் நிலையில், காலை உணவாக 2 முட்டைகளை சாப்பிட்டு வந்தால், சுமார் 65 விழுக்காடு அளவுக்கு எடை குறைப்பை உணரலாம் என்று சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது

- இப்ராஹிம்

அதிரையில் சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரங்கள்

நாடாளமன்ற தேர்தல் அறிவித்த நிலையில் அதிரையில்  தேர்தல் பிரச்சாரங்கள்  மந்தமாக இருந்து வந்த நிலையில் தற்போது ஒரு வார காலமாக தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.அந்தந்த கட்சிகளுக்கு அதரவாக கட்சியின் முக்கிய தலைவர்கள்,திரைப்பட பிரபலங்கள் வாக்கு சேகரிப்பதற்காக அதிரைக்கு வருகை தர இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெருவிகின்றனர்.சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலின்,பாத்திமா பாபு அதிரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.   Friday, March 28, 2014

குவைத்திலிருந்து உம்ரா சென்ற தமிழ் பயணிகள் பேருந்து விபத்து - பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்!

உம்ரா பயணம் மேற்கொண்ட குவைத் வாழ் தமிழ் பயணிகள் பேருந்து பெரும் விபத்திலிருந்து தப்பியது.

குவைத்திலிருந்து உம்ராவிற்காக சென்ற அதிரையர் உடபட 50 பேர் பயணம் செய்தனர் . உம்ராவை முடித்துக் கொண்டு பயணிகள் மதீனா பயணித்தபோது, பேருந்து  ஜித்தாவை நெருங்கிக் கொண்டு இருந்தபோது பேருந்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு மேற்கூறை கழண்டது, அப்போது  அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்து நிலை தடுமாறியது. 

பேருந்தில் இருந்தவர்கள் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் இதனால் அதிர்ச்சியுற்றனர். எனினும் அல்லாஹ்வின் அருளால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதோடு, பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். எனினும் பேருந்து பெருத்த சேதமடைந்தது.

அப்போது பேருந்து நின்ற இடத்தில் வேறு வாகன உதவியோ, அல்லது, உணவோ இல்லாத பகுதி ஆதலா. பயணிகள் என்ன செய்வதென்று தவித்தனர். உடன் குவைத் தமிழ் சங்கத்திற்கு தொடர்பு கொண்டனர், அவர்கள் ஜித்தாவில் இருந்க்கும் அதிரை ரஃபியா அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளனர். 

உடன் தகவல் அறிந்த ரஃபியா அவர்கள் காரைக்காலை சேர்ந்த சமூக ஆர்வலர் அப்துல் மஜீத் அவர்களுடன் சம்பவ இடத்திற்கு உணவுப் பொருடகளுடன் விரைந்து சென்று அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் அமர வைத்து உணவுகள் பரிமாறி, உதவி புரிந்து வாகனம் ஜித்தா கொண்டுவரப்பட்டு பழுது பார்க்கப்பட்டு மதீனா அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த உம்ரா பயணிகளில் அதிரையைச் சேர்ந்தவரும் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: ரஃபியா 
                  ஜித்தா

அசத்தலான 'அரேபியன் குனாஃபா'


இது என்னப்பா குனாஃபா? என்று குழம்ப வேண்டாம். அரபுநாடுகளில் பரிமாறப்படும் சுவையான பதார்த்தம்தான் குனாஃபா.


இதை அதிரை தமிழில் அழகாகப்பேசி செய்து காட்டுகிறார் சகோ.நெய்னா முஹம்மது (முஷ் கிச்சன்).

மிதமான இனிப்புடன் முறுமுறுப்பாகவும் இருக்கும் இந்த பதார்த்தம், நிச்சயம் உங்கள் சுவையை ஈர்க்கும் 

உலகம் வியக்கும் ஜம்ஜம் கிணறு பற்றிய அதிசய தகவல்....!!

உலகம் வியக்கும் ஜம்ஜம் கிணறு பற்றிய அதிசய தகவல்....!!ஆழம் : 30 மீட்டர்வீதி 11.08ஒரு வினாடிக்கு 8000 லிட்டர்கள் தண்ணீர்....பம்ப் செய்யும் மணிக்கு 2 கோடியே 880 லட்சம் லிட்டர்கள். ...ஒரு மாதம் 2073 கோடியே 60 லட்சம் லிட்டர்கள்.ஒரு லிட்டர் தண்ணீரில் அடங்கியுள்ள மூலதனங்கள்....சோடியம் - 133.00mlகால்சியம் - 096.00mlமேக்கனிசியம் - 038.80mlபுளோரைட் -000-77mlபொட்டாசியம் - 043.03mlநைட்ரேட் - 124.08mlடைகார்ப்நெட் - 124.00mlசல்ஃபேட் - 124.00ml

அகல ரயில்பாதை:ஒரு துருப்பு சீட்டா?

அதிரை வழியாக அகலரயில்பாதை அமையாதது குறித்து பலரும் கோபத்தோடு எழுதியும் கருத்திட்டும் வருகிறார்கள்.

இன்று அதிரைவாசிகள் பலர் பல நிறுவனங்களை நடத்தியும் நிர்வாகித்தும் வருகிறார்கள். எந்த நிர்வாகத்திலும் ஒரு அடிப்படை விஷயம் இருக்கிறது. அதாவது எந்த ஒரு திட்ட முன்வரைவும் நியாயப் படுத்தப்படவேண்டும்(Justified). சுருக்கமாகச் சொன்னால் அந்த திட்டத்தால் நிறுவனத்துக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்று விளக்கவேண்டும்.

மயிலை-காரைக்குடி வழித்தடம் அப்படி என்ன முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரியவில்லை. இத்தடத்தில் வரும் நாகை,தஞ்சை,புதுக்கோட்டை மாவட்டங்களில் நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை நன்கு செழிப்புடன் இயங்கி வருகிறது. நெடுஞ்சாலைகளும் பயணிகளுக்காக சொகுசு பேருந்துகளும் சரக்கு அனுப்ப லாரி சர்வீஸ்களும் ஏராளமாக இயங்கி வருகிறது.

எனவே ரயிலின் தேவை என்பது வியாபாரிகளைப் பொருத்தவரை சரக்கு ரயில்தான். அதிரைவாசிகள் சொகுசாக குடும்பத்துடன் சென்னை செல்லத்தான் ரயிலை எதிர்பார்க்கிறார்கள். இது எப்படி ரயில்வே நிர்வாகத்தை திருப்திப்படுத்தும். பாலு அல்ல வேறு யார் ஜெயித்து வந்தாலும் இவ்வழித்தடத்தை நியாயப்படுத்தினால் மட்டுமே திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படும். திட்டம் ஏற்கெனவே ஒப்புதல் பெற்றிருந்தால் அதன் போக்கில் (நிர்வாகத்தின் மெத்தனம், பணியாளர்களின் சோம்பல், நிதிப்பற்றாக்குறை ஆகிய தடைகளை கடந்து) நிறைவுபெறும்.

நியாயப்படுத்தப்படாத எந்த திட்டமும் எக்காலத்திலும் அமலுக்கு வராது.  மந்திரியானாலும் அவர் தன் செல்வாக்கை தனக்கு பயனில்லாவிட்டால் காட்டமாட்டார். அப்படி காட்டி வலியுறுத்தினாலும் அதிகாரிகள் பல கட்டங்களில் அதை கேள்வி எழுப்பி முடக்கி விடுவார்கள். அதை தூசு தட்டி எடுப்பதற்குள் மறு தேர்தல் வந்துவிடும்.

இந்த நிதர்சனத்தை புரிந்து கொள்ளாமல் ரயில் விட்டால் ஓட்டுப்போடுவோம் என்று நாம் கோரிக்கை வைப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது தான்.

அகலரயில் பாதை என்பது அதிரைக்கான திட்டமல்ல. அது மூன்று,நான்கு மாவட்டத்துக்கான திட்டம். அதில் ஒன்றுக்கு மேற்பட்ட எம்பி தொகுதிகள் வருகின்றன. ஒரு தொகுதியில் திமுகவும் மற்றதில் அதிமுகவும் ஜெயிக்குமானால் ஒருவர் திட்டத்தை மற்றவர் முடக்கவே முனைவர்.

எனவே அகலரயில் பாதையை முக்கிய கோரிக்கையாக வைக்காமல் நமது பகுதிக்கு பயன்தரும் இதர விஷயங்களை வலியுறுத்துவதுதான் அறிவுடைய செயல்.

அதிரையைப் பொறுத்தவரை 

  • சீரான சாலைகள்


  • தடையில்லா மின்சாரம்


  • மத்திய பேருந்து நிலையம்


  • பட்டுக்கோட்டை, தஞ்சை வட்டாரத்தில்


  • அரசு பொறியியல் மருத்துவ கல்லு{ரிகள்


  • பட்டுக்கோட்டை-தஞ்சை பைபாஸ் ரோடுமுத்துவாப்பா

Thursday, March 27, 2014

கன்ஃபியூஸ் கமாலு!!


வருகிற ஏப்ரல் 24 ம் நாடாளமன்ற தேர்தல் நடக்க  உள்ள நிலையில் பட்டிதொட்டி எங்கும் தேர்தல் பிரச்சாரங்கள் அலைஅலையாய் வீசிகொண்டிருக்கிறது..

முன்பொரு காலங்களில் தேர்தல் வந்து விட்டாலே அதிரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும், ஒரு பக்கம் தொடர் பிரசாரங்கள், இன்னொரு பக்கம் வீதியெங்கும் தேர்தல் அலங்கார தோரணைகள், போஸ்டர்கள் என அதிரையையே அதிர வைக்கும் அளவிற்கு இருக்கும்..

ஆனால்  தற்பொழுது நாடாளமன்ற தேர்தல் வந்துவிட்ட நிலையிலும் நம்ம ஊர் மக்கள் தேர்தலை பெரிதுபடுத்திக் கொள்ளாமல் கப்சிப் என்று வாய் மூடி விரல் வைப்பது எதற்காக??

அதிரை மக்கள் தேர்தல் நேரத்தில் மௌனம் சாதிப்பது என்னவாக  இருக்கும்??   
கடந்த  காலங்களில் எல்லாம் முத்தான  வாக்குகளை அளித்து முகம் சுளிக்க வைத்து விட்டார்களே என்கின்ற புலம்பலா? 
நம்ம ஊர் மக்களின் இந்த மௌனம் தேர்தல் முடிவுக்கு பின்   எதிரொலிக்குமா?? அட ஒரே கொழப்பமா இருக்கேப்பா....
         ஏங்க இந்தாங்க.. உங்களைதான்.., நீங்க சொல்லுங்களேன் ப்ளீஸ்.......

ஆக்கம்,
S.அப்துல் வஹாப்.

அதிரையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

அதிரை ஜமாத்துல் உலமா சபை சார்பாக மழை இல்லாமல் வறண்டு கிடக்கும் நமது அதிரைக்காக மழை வேண்டி சிறப்பு தொழுகை நமது பெரிய ஜும்ஆ பள்ளியில் வருகின்ற ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை  காலை 8:30 மணியளவில் நடைபெறும் என தெருவிக்கப்பட்டுள்ளது.  

யாருக்குதாங்க வோட்டு போடுறது?

“சார்! எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும்”

“சொல்லுங்க” பாஸ் 

“வரப் போற தேர்தல்ல  எங்க குடும்பம் யாருக்கு ஒட்டு போடணும்னு நீங்கதான் சொல்லணும்”

அத  நான் ஏன் சொல்லணும்? எனக்கு என்ன தெரியும்”

“என்ன சார்? ப்ளாக் எல்லாம் எழுதுறீங்க. உங்களுக்கு தெரியாதது வேற யாருக்கு தெரியும்”

“யோவ்! அது எதோ எனக்கு தெரிஞ்ச விஷயத்த ஒரு குத்து மதிப்பா எழுதுறேன் ”

“ரொம்ப தன்னடக்கமா பேசுறீங்க சார். ஆனா தயவு செஞ்சு இந்த உதவியை எனக்கு செய்ங்க. தப்பா யாருக்கும் ஓட்டு போடக் கூடாதுன்னுதான் உங்ககிட்ட கேக்குறேன்.”

“சரி! நீ முதல்ல யாருக்கு ஒட்டு போடலாம்னு யோசனைல இருக்க சொல்லு”

“காங்கிரஸ்?

“ஏன்யா! பத்து வருஷம் பட்டும் உனக்கு புத்தி வரலியா?”

“அப்போ பிஜேபி போட்டுடவா? மோடி பெரிய தலைவர்னு சொல்றாங்க”

“அது மட்டுமா சொல்றாங்க.குஜராத்துல அப்புடி ஈக்கிது இப்புடி ஈக்கிதுன்னு சொல்லுறாங்களே  அதெல்லாம் மீடியா கிளப்பி விடுறதுன்னும் சொல்றாங்க. அது மட்டும் இல்ல. அவர் வந்தா அமைதி பூங்காவா இருக்கிற மாநிலங்கல கலவர பூமியா மாத்திடுவாங்களே..மேலும் ஹிந்தியை திணிப்பார்னு வேற சொல்றாங்க. சொல்லு இந்த வயசுக்கு மேல ஹிந்தி கத்துப்பியா?”

“மாட்டேன் மாட்டேன். ஆனா அது எப்பிடிங்க ஹிந்தியை திணிக்க முடியும்?”

“ரொம்ப பேசாத. மத்தவங்க சொல்றதை நான் உனக்கு சொல்றேன். சரி உங்க குடும்பம் யாருக்கு ஓட்டு போட போறாங்க?”

“எங்க மாமி  அரவிந்த் கேசரிவால்னு யாருக்கோ ஓட்டு போடப்போகுதாம்”

“அது அரவிந்த் கெஜ்ரிவால்யா”

“அது வட மொழில. தமிழ்ல கேசரின்னுதான் சொல்லணும்”

“எப்படியோ சொல்லி தொல”

“அவருக்கு போடலாமா?”

“ஏன்யா! அவரே  எதுக்கெடுத்தாலும் போராடுவாரு. நாளைக்கு பிரதமர் ஆனதுக்கு அப்புறம் சர்வதேச மாநாடு எங்கயும் போயிட்டு அங்க சாப்பாடு சரி இல்லன்னு வெளிய வந்து போராட ஆரம்பிச்சா நம்ம நாட்டுக்கு எப்படிபட்ட அவமானம்? அந்த அவமானத்துக்கு உங்க மாமியும்  காரணம் ஆகணுமா?”

“அதுவும் சரிதானுங்க. அப்போ கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓட்டு போட சொல்லிடவா?”

“எதுக்கு? இந்தியா சீனா ஆகவா? நாளைக்கே அவங்க பேஸ்புக், ட்விட்டர் ,ப்ளாக் எல்லாம் தடை செஞ்சுட்டா நான் எழுதறதை எல்லாம் எங்க போய் படிப்ப? நான் எழுதலன்னா நாட்டுக்கு எத்தனை பெரிய பேரிழப்பு.”

“வாஸ்தவம்தானுங்க. அப்போ திமுகதான்”

“திருந்தவே மாட்டீங்களா?”

“அப்போ ஆதிமுகவுக்கு வோட்டு போடவா? முதல்வரை பிரதமர் ஆக்கிடலாம்”

“ஆக்கலாம்தான் . ஆனா காஷ்மீர் பிரச்சனைக்கு யாரு காரணம், பொருளாதார சரிவுக்கு யாரு காரணம்னு வரலாறு பாடம் நடத்தியே அஞ்சு வருஷம் ஓட்டிடுவாங்க. நீ அவங்க செய்வாங்களா? எதுவும் நல்லது செய்வாங்களான்னு யோசிச்சுகிட்டே காலத்தை ஓட்ட வேண்டியதுதான் ”

“சரி அப்போ கூட்டணி எல்லாம் பாக்காம  வைகோவுக்கு ஓட்டு போட வேண்டியதுதான். நல்ல மனுஷன்.”

நல்ல மனுஷன்தான். ஆனா ஈழ தமிழர் பிரச்னை பற்றி பேசியே கட்சி வளர்த்த அவரு இப்போ தனி ஈழத்துக்கு எதிரான அணியோட கை கோர்த்து உள்ளாரே ?  அவர் மேல நம்பிக்கையே போச்சு.”

“அப்போ மனசை திடப்படுத்திகிட்டு எங்க சின்ன மாமியை  விஜயகாந்த் கட்சிக்கு குத்திட சொல்லிடவா.”

“சொல்லு. ஆனா அவங்க கட்சிக்காரங்க ஒருவேளை மந்திரி ஆனதுக்கப்புறம் அவங்க பேசுறது பிடிக்காம கேப்டன் அவங்க மூஞ்சில குத்திடாம. இருக்கணுமே அப்படி செஞ்சா  அவமானம் ஆயிடுமே”

“அப்போ யாருக்குதாங்க ஓட்டு போடுறது? பேசாம நோட்டா அப்பிடின்னு சொல்றாங்களே. அதுக்கு போட்டுடவா?”

“நீயும் நானும் மட்டும் அதுக்கு போட்டு என்ன ஆக போகுது.”

“அப்போ எதுக்குதான் போடுறது?”

“அது தெரியாமதான இத்தனை நேரம் உன் கூட மொக்கை போட்டேன், இதை படிக்கறாங்களே அவங்களை வேணும்னா கேளு. சொல்வாங்க”

“அவருக்குதான் தெரியல. ஏங்க படிக்கிறவங்களே நீங்களாச்சும் சொல்லுங்க. யாருக்குதாங்க வோட்டு  போடுறது?” 

Flash News: SDPI கட்சி திமுக-விற்க்கு ஆதரவு!


தமிழகத்தில் SDPI கட்சி ராம்நாடு, நெல்லை மற்றும் வட சென்னை ஆகிய  மூன்று தொகுதிகளில் தனித்து களம் காண்கிறது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீதம் உள்ள 37 தொகுதிகளில் திமுக-விற்க்கு அதரவு தெரிவித்து உள்ளதாக அதிகார பூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிரையில் நாளை அதிமுக வேட்பாளர் 21 வார்டுகளிலும் தேர்தல் பிரச்சாரம்!

அதிரையில் சில தினங்களாக தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ள நிலையில் தற்பொழுது அதிமுக-வின் தஞ்சை தொகுதி வேட்பாளர் திரு.பரசுராமன் அவர்கள் நாளை மாலை 3 மணி முதல் அதிரையில் உள்ள 21 வார்டுகளிலும் நேரில் சென்று வாக்கு சேகரிக்க உள்ளதாக அதிரை நகர அதிமுக சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

சமூக மேம்பாட்டில் நாம் – இஸ்லாமிய மாலை அமர்வு

அல்லாஹ்வின் திருப்பெயரால்….

வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலாளர்களுக்கு நல்ல பல சேவைகளை செய்துவருகின்றது இந்தியா பிரடர்னிடி போரம் (IFF). மேற்கு மாகாண இந்தியா பிரடர்னிடி போரத்தின் தமிழ் பிரிவின் சார்பாக கடந்த 21-3-2014 வெள்ளிக்கிழமை மாலை 07:30 மணிக்கு ஜித்தா, ஸரபிய்யாவிலுள்ள இம்பாலா திறந்த வெளி அரங்கில் தமிழ் மக்களுக்கானஇஸ்லாமிய மாலை அமர்வுஎன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

முன்னதாக IFF-ன் மாணவப்பிரிவு உறுப்பினர் இளவல் முனீர் திருமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். IFF ஆற்றிவரும் பணிகள் குறித்து சுருக்கமான அறிமுகத்தையும் வரவேற்புரையையும் IFF-ன் செயற்குழு உறுப்பினரும் தொழிற்பேட்டை வட்டத் தலைவருமான சகோதரர் ஜமீல்தீன் வழங்கினார்.

IFF-ன் செயற்குழு உறுப்பினர் சகோதரர் மஹ்பூப் ஷரீப் அவர்கள்  ”உள்ளத்தை தூய்மையாக்குவோம்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அவர் தனதுரையில், குர்ஆன் ஹதீஸ் மேற்கோளோடு உள்ளம் என்றால் என்ன அதன் நிலைபாடுகள் என்னென்ன அது சீர்கெட்டால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பது பற்றி விளக்கினார்கள். இன்று உள(மன) நோயாளிகள்தான் அதிகமெனவும் அதற்கு தற்போதுள்ள மருத்துவத்துறையால் முறையாக குணப்படுத்த முடிவதில்லை, மாறாக முடியவும் செய்யாது. காரணம் அதற்குரிய நிரந்தர தீர்வு இறைவனின் அருட்கொடையாகிய அல்குர்ஆனில் தான் உள்ளது என தெளிவுபட விளக்கினார். அத்தோடு உள்ளத்தின் (நப்ஸ்) வகைகள் பற்றியும் நாம் அடையவேண்டிய நப்ஸ் பற்றியும் அதற்கான வழிமுறைகளையும் தெளிவுபட விளக்கினார்.


இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக தாயகத்திலிருந்து வருகைபுரிந்துள்ள SDPI  கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் கலந்துகொண்டுசமூக மேம்பாட்டில் நாம்என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். இன்று முஸ்லிம் சமூகம் பல்வேறு துறையில் பின்தங்கியுள்ளது, அதிலும் குறிப்பாக அரசியல் துறையில் எவ்வித விழிப்புணர்வின்றி மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே இந்த அரசியல் துறையில் மேம்பாடு அடைவது எவ்வாறு அதற்காக நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் என்வென்பதை விளக்கிப் பேசினார். அத்துடன் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் அரசியல் கட்சிகள் நம்மை எவ்வாறெல்லாம் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதையும் உதாரணத்துடன் விளக்கினார்.


ஏனைய காலங்களில் ஒரே நாளில் நிறைவேற்றக்கூடிய இடஒதுக்கீடு மசோதாவை தேர்தல் காலங்களில் மட்டும் விவாதப் பொருளாக்கி முஸ்லிம்களின் வாங்கு வங்கியை பயன்படுத்திக் கொள்கின்றனர். அத்தோடு தேர்தல் வாக்குறுதியில் உருது மொழி மேம்பாடு, வக்பு சொத்து பாரமரிப்பு போன்றவைகளையும் சேர்த்துக் கொள்கின்றனர். இவைகளா முஸ்லிம்களின் பிரச்னைகள் என பார்வையாளர்களை நோக்கி கேள்வி கேட்டார் பொதுச் செயலாளர் அவர்கள், பார்வையாளர்களிடமிருந்து இல்லையென பதில் வரவே…. முஸ்லிம்களின் உண்மையான பிரச்னைகள் என்னென்ன என்பதை கேட்க கல்வியில் பின்னடைவு, முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை, வேலைவாய்ப்பின்மை, சதவிகித அடிப்படையில் இடஒதுக்கீடு, காவல்துறை அராஜகம், போலி கைது நடவடிக்கை என பார்வையாளர்களே பட்டியலிட்டனர். இவைகளையெல்லாம் தீர்க்க எந்த கட்சிகளாவது வாக்குறுதி அளித்துள்ளார்களா என கேள்விகளை தொடுத்தார். இவைகளுக்காக போராடி வருவதுதான் SDPI கட்சி என்ற அறிமுகத்தோடு, முஸ்லிம் சமூகத்தின் உண்மையான பிரச்னைகளுக்காக நேர்மறை அரசியல் கருத்தை முன்னெடுத்து SDPI கட்சி கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருவதை எடுத்துக்கூறினார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 3 தொகுதிகளில் SDPI கட்சி தனித்து போட்டியிடுகின்றது. எனவே தாங்கள் SDPI கட்சிக்கு அனைத்து ஆதரவுகளையும் தருமாறு வேண்டிக்கொண்டார். இறுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை, மாற்று அணி, கூட்டணி, SDPI கட்சியின் பிறமத வாழ்த்து நோட்டீஸ்  போன்றவைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது.

மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்களின் தெளிவான பதில்கள் மூலம் மாற்று சிந்தனையுடையோரும் தெளிவு பெற்றனர். மேலும் ஊரிலுள்ள தங்களது குடும்பத்தாருக்கு SDPI போட்டியிடும் தொகுதியில் வாக்களிக்க வலியுறுத்துவோம் எனவும் வாக்குறுதியளித்தனர்.

இறுதியாக IFF-ன் ஜித்தா பகுதி உறுப்பினர் சகோதரர் ரபீக் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

சிறுவர்களுக்காக படம் வரைதல், இஸ்லாமிய கேள்வி பதில்கள் என சிறுவர் நிகழ்ச்சிகளை IFF செயற்குழு உறுப்பினர் சகோதரர் இப்னு அப்பாஸ் அவர்கள் நெறிபடுத்தினார். இந்நிகழ்ச்சியினை
  
IFF செயற்குழு உறுப்பினர் சகோதரர் அமீர் சுல்தான் தொகுத்து வழங்கினார். கப்பாராவுடன் இந்நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஆண்கள் பெண்கள் உட்பட 150-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வந்திருந்தோரிடமிருந்து நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள் எழுதி பெறப்பட்டது. வந்திருந்தோர் அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உள்ளம் பற்றிய விளக்கமும் அரசியல் விழிப்புணர்வும் அடைந்ததை எண்ணி மன நிறைவோடு அனைவரும் கலைந்து சென்றனர்.

தொகுப்புஅபூ முஸ்அப்
படங்கள் பூ ஷாமில்