அதிரை எக்ஸ்பிரஸின் பகிரங்க அறிவிப்பு!

அதிரையில் நடக்க கூடிய அனைத்து நிகழ்வுகளை உன்மை தன்மை மாறாமல் நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் பதிந்து வருகிறோம். இருப்பினும் இன்று அதிரையில் நடைப்பெறும் கந்தூரி மற்றும் மார்க்கதிற்க்கு எதிரான எந்த செய்தியும் நமது தளத்தில் பதியப்படமாட்டாது என இதன் மூலம் தெரியப்படுத்துகின்றோம்.
Share:

வறட்சியின் பிடியில் சென்னைமக்கள் !

தண்ணீர் இன்றி தவிக்கும் சென்னை வாழ் அதிரையர்கள்..... 

முன்பெல்லாம் கோடை விடுமுறைஎன்றால் ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர் சென்னைவாழ் அதிரைவாசிகள் ஆனால் சமிப காலமாகவே ஊரின் உறவு அற்று போய் சென்னையிலேயே செட்டிலாகி விட்ட நம்மவர்களின் இறந்த உடல்கள் கூட ஊருக்கு வருவதில்லை . இது ஒருபுறமிருக்க தற்பொழுது கோடை கால விடுமுறை என்பதால் இன்னும் பலர் சொந்த ஊரான அதிரைக்கு செல்லாமலேயே உள்ளனர் இது குறித்து நமக்கு  நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் விசாரித்த பொழுது ....

என்ன காக்கா... பள்ளிக்கூடம் எல்லாம் லீவு உட்டாசே ஊருக்கு போவலையா?....

போவனும் தான் ஊருல வெயிலு மண்டைய ஓடைக்கிதாம் ... பத்தாகொரைக்கு தண்ணி பஞ்சம் வேற ... 

(இடைமறித்த  நாம்) இங்கே மட்டும் என்ன வாழுதாம் காக்கா?...

அங்கேயும் இங்கேயும் ஒண்ணுதான் என்னா ஊருக்கு புள்ளகுட்டியல்வோல கூட்டிகிட்டு போறதுக்கு ஏகப்பட்ட செலவு ஆகும் அது மிச்சமாகுமே ... 
சரி காக்கா ... 

நீங்க இருக்கிற லிங்கிசெட்டி தெருவுல தண்ணி பிரச்னை எப்புடி இருக்குது?
அத யான் கேக்குறா... 

இப்போ என் மொவ புல்லையல்வோல கூட்டிகிட்டு என் தங்கச்சி வீட்டுக்கு தலமுழுவாட்ட போயிக்குது . நான் இங்க என் கூட்டாளி ரூமுக்கு போயி குளிசிடுவேன் . இப்போ போனாக்கா வாச்சி மேனு என்னை வாச்சி பண்ணிடுவான் அதுக்காக அவன் அங்கிட்டு இங்கிட்டு போனவோடனே உள்ளே போயிடுவேன்  அதுக்குதான் இங்கே நிக்கிறேன். 

Share:

கந்தூரியை முன்னிட்டு மின் வெட்டு கூடாது - மின் வாரியத்திற்கு கடிதம்!

கந்தூரியை முன்னிட்டு பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் மின் வெட்டு ஏற்படுத்தக் கூடாது என்று அதிரை தாருத் தவ்ஹீத் அதிரை மின் வாரியத்திற்கு எழுதிய கடிதம்.


தகவல்: அதிரை தாருத் தவ்ஹீத்

Share:

அதிரையை ஏமாற்றும் மழை துளி

அதிரை சுற்று வட்டார பகுதிகளில் மழை இல்லாமால் வெயில் வாட்டும் வேலையில் சுமார் 5 நாட்களாக அதிகாலை 5.00மணிக்கு கரும் மேகமூட்டமாக காணப்பட்டு 6.00 மணிக்கு அழகான மண்வாசனையோடு தூரல்  மழை போடுகிறது.
இருப்பினும் பொதுமக்கள் மழை வருகிறது என்று ஆவலாக இருக்கும் வேலையில் வெயில் எட்டிப்பார்க்க மீண்டும் பொதுமக்களை கவலையுர செய்கிறது.பிறகு நேரம் செல்ல செல்ல வெயிலின் வாட்டம் அதிகரிக்க பூமி சூடுபறக்க ஆரம்பிக்கறது.அதிரைக்கு மழை ஒரு கானல் நீர்ராகவே இருந்து வருகிறது.  
Share:

அதிரை காட்டுப்பள்ளி கந்தூரி விழாவை முன்னிட்டு சமாதான கூட்டம்!

அதிரையில் 30.4.2014இல் தொடங்கும் காட்டுப்பள்ளி தர்கா கந்தூரியைத் தடை செய்ய வேண்டி, மாவட்ட ஆட்சியருக்கு அதிரை தாருத் தவ்ஹீத் மனு ஒன்றை அனுப்பியது .அதைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணி அளவில் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் 'சமாதானக் கூட்டம்' ஏற்பாடு செய்யப்பட்டு, கந்தூரிக் கமிட்டியினரும் கந்தூரியை எதிர்க்கும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினரும் அழைக்கப்பட்டிருந்தோம்.

கலந்து கொண்டவர்கள்:
அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக
1. எம்.பி. அஹ்மத் (அமீர்)
2. ஜமீல் எம் ஸாலிஹ் (செயலர்)
3. நிஜாமுத்தீன் (பொருளாளர்)
4. கமாலுத்தீன் (இஸ்லாமியப் பயிற்சி மையப் பொறுப்பாளர்)
5. அஹ்மது ஹாஜா
6. மாஜுதீன்

கந்தூரிக் கமிட்டி சார்பாக
1. எம்.எம்.எஸ் ஷேக் (அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்புத் தலைவர்)
2. சுல்தால் அப்துல் காதர்
3. மஸ்தான் கனி
4. பத்ருஸ் ஸமான் ( மதார் சா)
5. அப்துல் வாஹித் (கித்தில்)

தொடக்கமாக, கோட்டாட்சியரின் முன்னுரையை அடுத்து எங்களிடம் கருத்துகள் கேட்டபோது, தாருத் தவ்ஹீத் தொடங்கப்பட்ட 1982லிருந்து 32 ஆண்டுகால தாருத் தவ்ஹீதின் பிரச்சாரங்களில் இதுவரைக்கும் எந்தவொரு சிறு அசம்பாவிதமும் நடந்ததில்லை என்பதையும் சட்டம்-ஒழுங்குக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இதுவரை நாங்கள் நடந்துகொண்டதில்லை என்பதையும் தகவலாகப்  பதிவு செய்துகொண்டு, "எங்களுடைய கருத்துகளைக் கேட்டுப் பதிவு செய்து அதை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும் என்று நகரக் காவல்துறை ஆய்வாளர் எங்களை அழைத்தார். கந்தூரி என்பது இஸ்லாத்துக்கு எதிரானது; அதற்குத் தடை வேண்டும் என்ற எங்களுடைய உறுதியான கருத்துகளை ஏற்கனவே மாவட்ட ஆட்சியருக்கு எழுத்து மூலமாக அனுப்பிவிட்டோம்" என்றும் சுட்டிக் காட்டினேன். "லா இலாஹ இல்லல்லாஹ்வின் பொருள் உங்களுக்கே தெரிந்திருக்கும். வழிபாடுகள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே என்று அதற்குப் பொருள். கந்தூரியை வழிபாடு என்று நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள். கந்தூரிக் கமிட்டியினரும் வழிபாடு என்றே குறிப்பிடுகின்றனர்.  இரண்டு பேருக்கு வழிபாடுகள் என்பது இஸ்லாத்தில் கிடையாது. உள்ளூரிலும் வெளியூரிலும் வசூல் செய்து, ஒருவருடைய இறந்த தினத்தை மேள தாளங்களோடு மகிழ்ச்சியோடு கொண்டாடுவது என்பது கந்தூரிக் கமிட்டியாரின் வழக்கமாக இருக்கிறது. இது எவ்வளவு மோசமான செயல்?

சட்டம்-ஒழுங்கைப் பற்றி மட்டும் உங்களுக்குப் பிரச்சினை. எங்களுடைய பிரச்சினை என்னவென்றால், கந்தூரி என்பது இஸ்லாத்தில் உள்ளதுதான் என்பதை நிறுவச் சொல்லுங்கள்; நாங்களும் சேர்ந்து செய்கிறோம். கந்தூரி என்பது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதை நாங்கள் நிறுவுகிறோம்; நிறுத்திவிடச் சொல்லுங்கள்" என்று தீர்வு சொன்னேன்.

நாகூரிலும் அஜ்மீரிலும் முத்துப்பேட்டையிலும் போய் நிறுத்திவிட்டு வரும்படி அதிமேதாவித்தனமான பதிலை மதார் சா வைத்தார்.

"நாகூர் கந்தூரியைப் பற்றி நாகப்பட்டின ஆர்டிஒ ஆஃபிசிலும் முத்துப்பேட்ட கந்தூரியைப் பற்றி திருவாரூர் ஆர்டிஓ ஆஃபீஸிலும் பேச்சுவார்த்தை நடக்கும். பட்டுக்கோட்டை ஆர்டிஓ ஆஃபீஸில் நாம் உட்கார்ந்திருப்பது அதிராம்பட்டினத்துக் கந்தூரியைப் பற்றிப் பேசுவதற்காக" என்று விளக்கினேன்.

கந்தூரியை நிறுத்துவதற்குத் தமக்கு அதிகாரம் இல்லை என்று கோட்டாட்சியர் கூறிவிட்டு, கந்தூரியை அமைதியாக நடத்துவதற்கு உங்களுடைய கண்டிஷன் என்ன? என்று கேட்டார். அதற்கு, "கந்தூரியே கூடாது என்பதுதான் அவர்களுடைய கண்டிஷன்" என்று காவல்துறை ஆய்வாளர் பதிலளித்தார். நாங்கள் ஆமோதித்தோம்.

எம்.எம்.எஸ் ஷேக் அவர்கள், கந்தூரிகள் ஆல் ஓவர் இந்தியாவில் நடப்பதாகக் குறுக்கிட்டார்.

அதுவரை பொறுமையாக இருந்த அமீர் அவர்கள் தம்மை ஆங்கிலத்தில் கோட்டாட்சியரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு, "இந்தியா முழுக்கவும் நடந்தாலும் கந்தூரி என்பது இஸ்லாத்துக்கு முரணானது" என்பதை ஆங்கிலத்தில் எடுத்துக் கூறினார். கந்தூரி எதிர்ப்பாளர்களின் வீட்டுக்கு எதிரே வேண்டுமென்றே பாட்டும் கூத்தும் நெடிய நேரம் நடத்துவது வழக்கமாயிருக்கிறது என்ற அமீரின் குற்றச்சாட்டுக்கு, "பெண்கள் கூட்டம் நின்றால், கூத்து நடக்கத்தான் செய்யும்" என்று மஸ்தான் கனி கூறியதும் ஹாஜாவுக்குப் பற்றிக் கொண்டது. மறைந்த சகோ. அபுல்ஹஸன் அவர்களின் வீட்டுக்கு எதிரே நடந்த நீண்ட நேரக் கூத்தும் அதற்கு எதிர்வினையாக மிளகாய்த் தண்ணீர் அபிஷேகமும் நடத்தப்பட்டதை எடுத்துச் சொல்லி, யார் வீட்டுப் பெண்கள்? முஸ்லிம் வீட்டுப் பெண்கள் வீட்டுக்கு எதிரே கூத்துப் போடுவதுதான் வழிபாடா? அப்படி நடந்தால் கலவரம் ஏற்படாதா? எனப் பொங்கிவிட்டார். கோட்டாட்சியர் அமைதிப்படுத்த முயன்றபோது, தான் இரண்டாண்டுகளுக்கு முன்னர் இதே மேலத்தெரு கந்தூரி ஊர்வலத்தில் கொலைவெறியுடன் தாக்கப்பட்டதையும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியால் பாதிக்கப்பட்டு இன்றுவரை ச்சார்ஜ் ஷீட் போடப்படாமல் காவல்துறை இழுத்தடிப்பதையும் தான் ஹஜ்ஜுக்குப் போவது தாமதப்படுவதையும் எடுத்துரைத்தார்.

மேலத்தெருவில் கந்தூரிக்கு எதிர்ப்பு பலமாக இருப்பதாக நிஜாமுத்தீன் கூறியபோது எம்.எம்.எஸ் ஷேக், மேலத்தெரு கமிட்டிதானே கந்தூரி நடத்துகிறது? மேலத்தெருவில் எதிர்ப்பு எப்படி வரும்? எனக் கேட்டார். அதற்கு, "நாளைக்கு மேலத்தெரு ஜமா அத் கூட்டத்தைக் கூட்டுவோம். அப்போது தெரியும் எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறதென்று" என்று நிஜாமுத்தீன் புள்ளி வைத்தார். கந்தூரி முடிந்து கூட்டுவோம் என்று எம்.எம்.எஸ் ஷேக் பதிலளித்தார். நிஜாமுத்தீன் விடாமல், "நாளைய கந்தூரிக்கு எதிர்ப்பு எவ்வளவு எனத் தெரிந்துகொள்வதற்குக் கந்தூரி முடிந்தபின் கூடி என்ன பிரயோஜனம்?" என்று எதிர் கேள்வி கேட்டபோது பதில் சொல்லாமல் சம்பந்தமில்லாத பேச்சுகள் குறுக்கிட்டன.

அல் பாக்கிதத்துஸ்ஸாலிஹாத் பள்ளி அருகில் பதட்டம் இருப்பதை நிஜாமுத்தீன் பதிவு செய்தபோது, மதார் சா "அவர்களில்தான் யாராவது சிலர் பிரச்சனை உண்டாக்குவார்கள்" எனப் பழியை எங்கள் மீது சுமத்தப் பார்த்தார். அதற்கு, "L&O பிரச்சனை வரக்கூடாது என்பதால்தான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளோம். L&O problem உண்டு பண்ணிதான் தீர்வு என நாங்கள் நம்பினால் அதையும் நாங்கள் செய்வோம்.  இரண்டாம் தர வேலை செய்ய மாட்டோம். நீங்கள் அதை விரும்பினால் அமைதிப் பேச்சு வார்த்தை மெத்தேடை மாற்றிக்கொள்வோம். எப்படி வசதி?" என நிஜாமுத்தீன் எதிர்க் கேள்வி வைத்தார்.

"மழையில்லாமல் செடிகளெல்லாம் கருகிக் கிடக்கின்றன. எங்கள் வீட்டுக்கு அருகில் வைத்துதான் வெடி விடுகிறார்கள். தீ விபத்து நடப்பதற்கு முன்னெப்போதையும்விட இந்த வறட்சி காலத்தில் வாய்ப்புகள் அதிகம்" என்பதை மாஜுதீன் பதிவு செய்தார்.

இறுதியாக சமாதானக் கூட்ட நடவடிக்கைகள் ப்ரிண்ட் செய்து வந்தது.

அதிலிருந்த 'மேலத்தெரு ஜமாஅத்தினரும்' என்பதை நிஜாமுத்தீன் எதிர்த்ததில் அது முழுதும் நீக்கப்பட்டது. காட்டுப்பள்ளிவாசல் என்பது காட்டுப்பள்ளி தர்கா என்று திருத்தப்பட்டது. கடைத்தெரு சாலையின் வடக்குப் பக்கம் முழுமையாகக் கந்தூரி ஊர்வலம் போகாது என்று கந்தூரிக் கமிட்டியினரால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட உறுதியை எழுத்தில் (ஆறாவது ப்பாயிண்ட்டாக) இணைக்க வலியுறுத்தினோம் (இணைப்பு).


-அதிரைத் தாருத் தவ்ஹீத்
Share:

Flash News: அதிரை WCC அணி தோல்வி!

அதிரை AFCC நடத்தும் மாவட்ட அளவிலான APL T20 கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் அதிரையின் நட்சத்திர அணிகளுல் ஒன்றான அதிரை WCC Vs SGC தஞ்சை அணியினர் மோதினர். இதில் முதலில் களமிறங்கிய SGC அணியினர் 125 ரன்கள் எடுத்தனர். 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய அதிரை WCC அணி 120 ரன்கள் எடுத்து 6 ரன்கள் விதியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் அதிரை ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
Share:

அதிரையில் ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

அதிராம் பட்டினம் கடைதெருவில் உள்ள ரேஷன் கடையில் கடந்த சில நாட்களாக நுகர் பொருட்கள் வழங்க வில்லை என கூறபடுகிறது இந்நிலையில் இன்று மதியம் மூன்று மணிக்கு நுகர் பொருள் வழங்கப்படும் என நேற்று அறிவித்துள்ளனர் அதனால் இன்று மதியம் முதல் நுகர்வோர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 


ஆனால் இந்த நிமிடம் வரை அதிகாரிகள் வராத காரணத்தால் 12ஆம் வார்டு கவுன்சிலர் செய்யது அவர்களின் இல்லத்தை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர் அதன் பிறகு அந்த கடையின் அதிகாரி சண்முகத்தை தொடர்புகொண்ட செய்யது இது பற்றி கூறியுள்ளார் ஆனால் உரிய பதில் ஏதும் தரதாதால் பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர்.

Share:

அதிரையில் இலவசமாக ஜனாஸா குளிப்பாட்டும் கட்டில்

அதிரை தவ்ஹீத் பள்ளிக்கு ஜனாஸா குளிப்பாட்டும் கட்டிலை ஒருவர் இலவசமாக தந்துள்ளார்கள் எனவே ஜனாஸா குளிப்பாட்டுவதற்கு கட்டில் தேவைப்படுபவர்கள் தவ்ஹீத் பள்ளி நிர்வாகிகளிடம் தொடர்புக்கொண்டு கட்டிலை பயன்படுத்திக்கொள்ளுங்கள்

தொடர்புக்கு  9566104755

adiraitntj
Share:

அதிரை பிரமுகருடன் அய்டா நிர்வாகிகள் சந்திப்பு!

உம்ரா பயணம் மேற்கொண்ட அதிரை வக்கில் ஏ.ஜே.அப்துல் ரஜ்ஜாக் அவர்களை ஜித்தா அய்டா நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.

அப்போது ஊர் நிலவரம் ஷிஃபா நிலவரம் மற்றும் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிக்கப் பட்டது. அப்போது தமிழக வஃபு வாரியத் தலைவராக இருந்தபோது செய்த சேவைகள் மற்றும் சென்னை நியூ காலேஜின் பொருப்பாளராக இருந்தபோது ஏழை மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் போன்ற உதவிகள் கிடைக்க வழி செய்தமை உள்ளிட்டவைகள் குறித்து நினைவு கூறப்பட்டது.


இச்சந்திப்பின்போது அய்டா தலைவர் ரஃபியா, செயலாளர் ஜஃபருல்லாஹ், பொருளாலர் அப்துல் அஜீஸ் மற்றும் அய்டாவின் மூத்த உறுப்பினர் ஹபீப் ரஹ்மான் உள்ளிட்ட அதிரை சகோதரர்கள் உடனிருந்தனர்.

Share:

மரண அறிவிப்பு (ஹாஜிமா பாத்திமா சி.எம்.பி.லேன்)

அஸ்ஸலாமு அலைக்கும் 

சி.எம்.பி.லேனைச் சேர்ந்த(ஏ.எல்.எம்.பள்ளி எதிரில்) மர்ஹூம் முஹம்மது அலியார் அவர்களின் மகளும், மர்ஹூம் செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் மனைவியும், சாகுல் ஹமீது(முன்னாள் நிஹாத் அரப் ஜித்தா) அவர்களின் மாமியாவுமாகிய ஹாஜிமா பாத்திமா அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 09:30 மணி அளவில் பெரிய ஜும்ஆ பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Share:

மறுமணம் தொடர்பாக சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு

சம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு உட்பட்ட முஹல்லாவாசிகள் ஏவேரேனும் மறுமணம் (நிக்காஹ்) நடத்துபவர்கள் கண்டிப்பாக சங்கத்தில் NOC  வில்லங்க சான்றிதழ் பெற்று கொண்டு பிறகு திருமணத்தை முடிவு செய்யுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்.

இப்படிக்கு
சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகம்   
Share:

நாளைக்கு இல்ல பவர் கட் !!


மதுக்கூர் மின் பகிர்மான வட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளைய தினம் நமதூர் பகுதியில் மின்தடை செய்யப்படும் என அதிரை மின்சார வாரியம் அறிவித்திருந்தது இந்நிலையில் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளரை தொடர்புகொண்ட மின்வாரிய ஊழியர் நாளை நடைபெறுவதாக இருந்த மின் தடை அலுவல் காரணங்களுக்காக வேறு ஒருநாளைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார் . 
Share:

மருத்துவ உதவி !

அதிராம்பட்டினம் தரகர் தெருவை சேர்ந்த ஒரு பெண்மணிக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது இதனை கருத்தில் கொண்ட சமூக ஆர்வலரும் லண்டன் வாழ் அதிரையருமான இம்தியாஸ் அவர்கள் பாதிகப்பட்ட அந்த பெண்மணிக்கு உதவ முன்வந்தார் இவருடன் இனைந்து தங்களது பங்கிற்க்கு லண்டன் வாழ்வாசிகளும் தங்களால் இயன்ற பண உதவிகளை செய்தனர். அதன்படி இன்று மாலை முதற்கட்டமாக 15,000 ரூபாய் ரொக்க பணத்தை நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கேகே ஹாஜா மற்றும் மணிச்சுடர் செய்தியாளர் ஷாகுல் ஹமீது ஆகியோர் நேரில் சென்று அந்த பெண்மணிக்கு வழங்கினர் .

Share:

அதிரை மீன் மார்கெட் நிர்வாகத்தின் சார்பில் மழைவேண்டி பிராத்தனை !

அதிராம்பட்டினத்தில் நிலவி வரும் வரலாறு காணாத வறட்சியால் அதிரை பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன இதனை கருத்தில் கொண்டு அதிரையில் உள்ள பல்வேறு அமைப்புகள் சார்பில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

                           அதன் பலனாக  இன்று காலை லேசான மழை சாரல் விழுந்துள்ளது இந்நிலையில் இன்று கடைதெரு தக்வா பள்ளி மீன் மார்கெட்டின் நிர்வாகத்தின் சார்பில் அசர் தொழுகைக்குப்பின் மழை வேண்டி பிராத்தனையில் ஈடுபட்டு வருகின்றனர் .
Share:

ஜும்ஆ தொழுகைக்கு வருபவர்களுக்கு மோர் வினியோகம்

கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயிலின் காரணமாக அதிரை தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு ஜும்ஆ தொழுகைக்கு வரும் ஆண்கள் பெண்களுக்கு மோர் வினியோகம் செய்து வருகிறோம் இது தொழுகைக்கு வருபவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு வாரத்திற்கு மோர் தயாரிப்பதற்கு ரூ 800 செலவாகிறது விருப்பம் உள்ளனர்கள் கிளை நிர்வாகிகனை தொடர்பு கொண்டு தங்களுடைய பங்களிப்பை செலுத்தலாம்.

  தொடர்புக்கு  : 8015379211, 9629115317, 9944824510

(மதினாவில்) எங்களிடையே பெண்மனி ஒருவர் இருந்தார் அவர் தமது தோட்டத்தின் வாய்கால் வரப்பில் தண்டு கிரை செடியை பயிர் செய்வார் வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அவர் அந்த கிரையின் தண்டுகளை பிடிங்கிவந்து ஒரு பாத்திரத்தில் போடுவார் அதில் ஒரு கையளவு வார் கோதுமையை போட்டு கடைவார் அந்த கிரை தண்டுதான் எங்கள் உணவில் மாமிசம் போன்று அமையும்  நாங்கள் ஜும்ஆ தொழுகை தொழுதுவிட்டு திரும்பிவந்து அவருக்கு சலாம் சொல்லுவோம் அந்த உணவை எங்களுக்கு பரிமாறுவார் அதை நாங்கள் ருசித்து சாப்பிடுவோம் அவருடை அந்த உணவுக்காக நாங்கள் வெள்ளிக்கிழமையை எதிர்பார்த்துக்கொண்டு இருப்போம்  புஹாரி 938

.
Share:

மோட்டார் இன்றி நீர் உமிழும் ஆழ்துளை கிணறு! (வீடியோ)

அதிரையில் அதிசயம் ! மோட்டார் இன்றி நீர் உமிழும் ஆழ்துளை கிணறு !! 
என்ற தலைப்பில் நாம் சில புகைப்படங்களை வெளியிட்டு அது குறித்த தகவல்களையும் வெளியிட்டிருந்தோம். 

இந்த செய்தி அதிரையில் காட்டு தீ போல் பரவியது. இத்துடன் சில பொய்களும் இனைந்துக்கொண்டன. இது குறித்த தகவல் நமது அதிரை எக்ஸ்பிரஸ் குழுவினருக்கு தெரிந்தவுடன் உன்மையை பற்றி ஆராய அந்த இடத்திற்க்கு விரைந்தோம். மேலும் இது போல் தமிழகத்தில் வேறு எங்கும் நடந்துள்ளதா என நாம் விசாரித்தவகையில் அதிரைக்கு மிகவும் அருகில் உள்ள கட்டுமாவாடியிலும் சில வருடங்களுக்கு முன் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிய வந்தது.

900 அடி ஆளத்திற்க்கு மேல் ஆழ்துளை கிணறு அமைத்தால் சிலநேரங்களில் இதுபோல் நடப்பது உண்டு எனவே இந்த செய்தியை பற்றியாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.


Share:

பவர் ஷட் டவுன்மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக நாளை 29/ஏப்ரல்/2014 செவ்வாய்கிழமை காலை 9.00 மணி முதல், மாலை 6.00 மணி வரை, அதிரையில் மின் விநியோகம் இருக்காது.

பொதுமக்களின் வசதிக்காக இந்த அறிவித்தல்.

இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights
Thanjoor District Organizer.
Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.comShare:

ஜித்தா:இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி - அனைத்து சமுதாயத்தினர் பங்கேற்பு!

ஜித்தா, தமிழ் தஅவா குழு நடத்திய ஒன்பதாம் ஆண்டு "இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி" கடந்த வெள்ளிக்கிழமை(25/04/14) நடைப்பெற்றது. 

மாலை 4:30 நான்கு 6:30 மணிவரை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது.

மக்ரிப் தொழுகைக்குப்பின் "ஆதி மார்க்கம் " என்ற தலைப்பில் அஷ்ஷேக். அப்துல் வதூத் ஜிப்ரி அவர்களும், "இஸ்லாத்தில் பெண்கள்" என்ற தலைப்பில் அஷ்ஷேக். இப்ராஹீம் மதனி அவர்களும், "அல்லாஹ்வை அறிந்துக்கொள்ளுங்கள்" என்ற தலைப்பில் அஷ்ஷேக்.முஜாஹித் பின் ரஸீன் அவர்களும் உரையாற்றினார்கள். ஒவ்வொரு பேச்சாளர்கள் பேசிய உரையிலிருந்து சில கேள்விகள் கேட்டு அதற்கு சரியான பதில் கூறிய பார்வையாளர்களுக்கு பரிசளிப்பு வழங்கப்பட்டது..

அனைத்து மதத்தவரும் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பித்துக்கொடுத்தனர். ஆடவருக்கும், மகளிருக்கும் தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இனிதாய் நிறைவுற்றது..
அதிரையில் பெரும்பாலானோர் இதில் கலந்துக்கொண்டும், தன்னார்வ சேவை புரிந்தும் இந்நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்..

வசலாம்,
மீராஷாஹ் ரஃபியா
Share:

அதிரை நகர முஸ்லீம் லீக்கின் ஆலோசனை கூட்டம் !

இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் அதிரை கிளையின் மாத்திர ஆலோசனை கூட்டம் இன்று மாலை பழஞ்செட்டி தெருவில் உள்ள முஸ்லீம் லீகின் பிரமுகர் தியாகி இப்ராஹிம் ஹாஜியார் இல்லத்தில் நடைபெற்றது .
நடந்து முடிந்த தேர்தல் தொடர்பான ஆலோசனைகளும் TR பாலுவின் வெற்றிக்காக பாடுபட்ட முஸ்லீம் லீகினருக்கு நன்றி தெரிவிக்கும் முகாமாகவும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது மேலும் நகரில் முஸ்லீம் லீகை வழு படுத்தவும் முஸ்லீம் லீகில் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது இதில் மாநில இளைஞர் அணி செயலாளர்  வக்கீல் முனாஃப் ,நகர முஸ்லீம் லீக் தலைவர் கேகே ஹாஜா , நகர இளைஞர் அணி செயலாளர் சாகுல் ஹமீது, அக்பர் ஹாஜியார் ,சேகு அப்துல்லா,தாஹா சார் ,மாவட்ட பிரதிநிதி ஜமால் உள்ளிட்ட ஏராளமான முஸ்லீம் லீக்கினர் கலந்து கொண்டனர் . 

Share:

அதிரையில் புதிய உதயம் சன் ஆட்டோ மொபைல்ஸ் !

தொழில் வளர்ச்சியில் அபார முன்னேற்றம் கண்டு வரும் நமது ஊரில் தற்பொழுது சன் ஆடோ மொபைல்ஸ் எனும் புதிய தொழில் நிறுவனத்தை நமதூரை சேர்ந்த வாப்பு மரைக்காயர் என்பவர் தோற்றுவித்துள்ளார் .

இதில் அனைத்து வாகங்களுக்கும் தேவையான ஆயில் கிரீஸ் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் மலிவாகவும் தரமாகவும் கிடைக்கும் என்கிறார் இந்நிறுவனத்தில் உரிமையாளர்.

மேலும் புகழ் பெற்ற பாரத் பெரோலியம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் மேக் MAK எஞ்சின் ஆயில் கிடைக்கும் என தெரிவிக்கிறார்.

எனவே வாடிக்கையாளர்கள் தொடர்ந்து நல்ல ஆதரவை வழங்கிட வேண்டுமாய்  கேட்டு கொள்கிறார் அந்நிறுவனத்தில் உரிமையாளர் வாப்பு மரைக்காயர் .

சன் ஆட்டோ  மொபைல்
அல் அமீன் ஜாமியா பள்ளி வளாகம் 
மெயின் ரோடு 
அதிராம்பட்டினம் 
போன்: 99445 88689
Free Advt*

Share:

நெய்னா'ஸ் முஷ் கிச்சன் (ஆப்பிள் பர்ஃபி)

சகோதரர் நெய்னா வழங்கும் ஆப்பிள் பர்ஃபி  செய்முறை விளக்கம் Share:

ஜப்பான் தப்லீக் இஜ்திமாவில் அதிரையர்கள் பங்கேற்பு

ஜப்பானில் உள்ள Ibraka ken என்ற ஊரில் ஜப்பானின் முதல் இஜ்திமா ஏப்ரல் 25-27, 2014 அன்று சிறப்பாக நடைபெற்றது இதில் ஜப்பான் வாழ் அதிரையர்கள் உள்பட உலக மற்றும் ஜப்பானிய முஸ்லிம்கள் என  சுமார் 3000 பேர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர் . 

மார்க்க அறிஞர்களின் சிறப்பு பயன்களும் அதன் மொழிபெயர்ப்புகளும் தங்கும் இடம் மற்றும் உணவுவகைகளும் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது . 

ஜப்பானில் ஒரே இடத்தில் முஸ்லிம்கள் அனைவர்களும் ஒரே ஜமாஅத்தாக தொழுததும் மாநாட்டில் கலந்து கொண்டதும் இதுவே ஜப்பானிய வரலாற்றில் முதன் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
குறைந்த முஸ்லிம் எண்ணிக்கையை  கொண்ட ஜப்பானில் ஜப்பானிய மக்களிடம் இஸ்லாத்தையும் தவ்ஹீது மற்றும் தாவத்துடைய பணிகளை எத்திவைத்து அவர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களை தெளிவு படுத்துவது போன்ற முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.

அல்ஹம்துலில்லாஹ்.

ஜப்பானில் இருந்து
அபூபக்கர்.கேன்   
Share:

இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி,ஜித்தா (புகைப்படங்களுடன்)

ஜித்தா, தமிழ் தஅவா குழு நடத்திய ஒன்பதாம் ஆண்டு "இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி" கடந்த வெள்ளிக்கிழமை(25/04/14) நடைப்பெற்றது. மாலை 4:30 நான்கு 6:30 மணிவரை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது.

மக்ரிப் தொழுகைக்குப்பின் "ஆதி மார்க்கம் " என்ற தலைப்பில் அஷ்ஷேக். அப்துல் வதூத் ஜிப்ரி அவர்களும், "இஸ்லாத்தில் பெண்கள்" என்ற தலைப்பில் அஷ்ஷேக். இப்ராஹீம் மதனி அவர்களும், "அல்லாஹ்வை அறிந்துக்கொள்ளுங்கள்" என்ற தலைப்பில் அஷ்ஷேக்.முஜாஹித் பின் ரஸீன் அவர்களும் உரையாற்றினார்கள். ஒவ்வொரு பேச்சாளர்கள் பேசிய உரையிலிருந்து சில கேள்விகள் கேட்டு அதற்கு சரியான பதில் கூறிய பார்வையாளர்களுக்கு பரிசளிப்பு வழங்கப்பட்டது..

அனைத்து மதத்தவரும் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பித்துக்கொடுத்தனர். ஆடவருக்கும், மகளிருக்கும் தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இனிதாய் நிறைவுற்றது..
அதிரையில் பெரும்பாலானோர் இதில் கலந்துக்கொண்டும், தன்னார்வ சேவை புரிந்தும் இந்நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்..

வசலாம்,
மீராஷாஹ் ரஃபியா
Share:

அதிரையில் அதிசயம் ! மோட்டார் இன்றி நீர் உமிழும் ஆழ்துளை கிணறு !!

அதிராம்பட்டினம் அருகே முத்துபேட்டை சாலையில்  புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இளங்கோ நகரில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு ஆழ்துளை கிணறு போடப்பட்டது. 
50சதவீத குளம் இந்த ஆழ்துளை கிணறில் இருந்து வெளியாகும் நீரால் நிரம்பியுள்ளது வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது .

சுமார் 1000 அடி நிர்ணயிகபட்டு போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் 950 அடி ஆழத்தில் பாறை ஒன்று இருந்துள்ளது இதனை போர்வெல் இயந்திரம் கடுமையாக போராடி அதனை உடைத்த அடுத்த கணமே அதிலிருந்து சூடான நீர் குபீரென பொங்கி இன்று வரை நிற்காமல் நீர் ஓடி கொண்டுள்ளது  . எந்த வித மோட்டாரும்  இன்றி நீர் வெளியேறி கொண்டுல்லாதால் அந்த பகுதி மக்கள் தினமும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர் இதிலிருந்து வெளியாகும் நீரை அந்த இடத்தின் உரிமையாளர் அருகில் உள்ள குளத்திற்கு விட்டுள்ளார் இந்த குளம் கடந்த 5 நாட்களுக்குள் 50சதவீதம் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
Share: