இனிதாக நிறைவு பெற்ற இரண்டாம் நாள்

அதிரையில் பைத்துல்மால் சார்பாக 14வது திருக்குரான் மாநாடு ஆலடி தெரு மொய்தீன் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.மேலும் இரண்டாம் நாளான இன்று காலை முதல் மாணவ/மாணவிகளுக்கு பல் வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.மாலை பொழுதில் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்ற பின்னர் தலைச்சிறந்த  மார்க்க அறிஞர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்கள் ,பெண்கள் கலந்து கொண்டனர்.     Share:

திருக்குரான் மாநாடு:பரிசு பெற்ற மகிழ்ச்சியில் குழந்தைகள்

அதிரை மாநாட்டில் பல் வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு இன்று மாலை 5.00 மணியளவில் பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் பரிசு பெற்ற அணைத்து குழந்தைகள் முகத்திலும் மகிழ்ச்சியை காண முடிந்தது.   Share:

நீங்கள் ஒரு செய்தியாளர் தானா????
ஊடகம் என்பது எல்லா காலத்திலும் மக்களிடையே செய்திகளை அளிப்பதில் பெரும் பங்காற்றுகிறது. இதன் தாக்கம் இன்று மக்களிடையே அதிகரிப்பதை பார்க்கும் பொது ஒரு புறம் சந்தோசம் என்றாலும் மறுபுறம் மறுக்க முடியாத ஒரு உண்மை இருப்பதை உணர முடிகிறது.

அதிரை பொறுத்தவரை செய்திகளை அளிக்கும் ஊடகங்களில் இனைய வழி ஊடகங்கள் நிரம்பி வழிகின்றன. இது தொலைதொடர்பின் ஆதிக்கமே இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிய மாணவர்கள் முதல் அனைவரும் தனக்கென்று ஒரு இணையதளத்தை நிறுவி அதிரை பற்றிய செய்திகளை அளிப்பதில் அளப்பரிய பணியை செய்துவருகிறார்கள்.  இது முற்றிலும் பாராட்டுதளுக்குரியதாகும். இருந்தாலும் அவர்கள் ஊடகத்துறையை உடைத்து விடுவார்களோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்கிறது.

அனால் ஊடகத்துறை என்பது மக்களிடம் செய்தி சேர்ப்பது மட்டும் கடமையில்லை. அது உண்மையாக இருக்கும் பச்சத்தில் மட்டுமே மக்களிடத்தில் தெரிவிக்க முனைய வேண்டும். அது மக்களிடத்தில் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தும் என்பதை அறியவேண்டும். ஊடகம் என்பது நடந்ததை நடந்தவாரே மக்களிடத்தில் தெரிவிப்பதே அதன் கடமையாகும்.

எந்த இடத்திலும் தனக்காகவோ அல்லது தங்களது நெருங்கியவர்களுக்காக  வளைந்து நெளிந்து மக்களிடம் உண்மையை மறைக்க முயல்வது ஊடகத்துறையை உடைப்பது போன்றதாகும்.

தெளிவாகும் நேராகவும் மக்களிடம் உண்மையை தெரிவிப்பதே ஊடகத்துறையின் வேலையாகும்.

 இன்றைய ஊடகங்கள் அவ்வாறு இருக்கிறதா??? என்பதே எமது கேள்வி .....
Share:

மாநாடு நேரலை தொடர்பாக

அதிரை திருக்குரான்  மாநாடு  இன்னும் சில நிமிடங்களில் நேரலை செய்யப்படும். 
Share:

திருக்குர்ஆன் மாநாடு: பேச்சு போட்டியில் கலக்கிய குழந்தைகள்!

அதிரை பைத்துல்மால் திருக்குர்ஆன் மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற பேச்சு போட்டியில் சிறப்பாக பேசிய குழந்தைகள் 


Share:

அஜீஸ் அவர்களின் வீட்டிற்கு தஞ்சை MP வருகை (புகைப்படங்கள்)


இந்திய தேசம் முழுவதும் நடைப்பெற்ற 16வது மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு 37 தொகுதியை லேடி அலை சுருட்டி மோடி அலையையும் டாடி அலையையும் உருத்தெரியாமல் ஆக்கியது. இந்நிலையில் கடந்த பல ஆண்டு காலங்களாக திமுகவின் கோட்டை என பெயர் பெற்று புகழோடு விளங்கிய தஞ்சை தொகுதியினை இந்த முறை அதிமுக கைப்பற்றி அமோக வெற்றிபெற்று திரு.பரசுராமன் அவர்கள் MP-யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நமக்கு வாக்களித்து வெற்றிபெற செய்த வாக்களர்களுக்கு முழுமையாக சேவையாற்ற வேண்டும் மற்றும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்படி நமது தமிழ் நாட்டின் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் கூறியதற்கு இணங்க நமது தொகுதியின் புதிய மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரு.பரசுராமன் அவர்கள் அதிரையின் முக்கிய பகுதிகளுக்கு சென்று வாக்களித்து வெற்றிபெற செய்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதன் பின் அதிமுகவின் தஞ்சை மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அதிரை அஜீஸ் அவர்களின் வீட்டுக்கு சென்ற திரு.பரசுராமன் அவர்கள் அங்கு மதிய உணவு சாப்பிட்டு ஓய்வு எடுத்தார்.
முன்னதாக அதிராம்பட்டினம் ஜந்தொழில் விஸ்வகர்மா சங்கம் சார்பில் K.பாஸ்கர், வாசுதேவன்,மூர்த்தி மற்றும் காமாட்சி ஆகியோர் MP அவர்களுக்கு பொன்னாடையைப் போற்றி சிறப்பித்தனர்.
Share:

மல்லிப்பட்டினம் தாக்குதல் SDPI கண்டனம் ! (காணொளி )

தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினத்தில் அப்பாவி  இளைஞர்கள் மீது நடத்திய  கொலைவெறி தாக்குதலை SDPI கட்சியினர் கண்டித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினத்தில் கடந்த 28 ஆம் தேதி மல்லிபட்டினம் பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 20 க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் அங்கு நின்று கொண்டிருந்த  இளைஞர்களை கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 4 இளைஞர்கள் பலத்த காயம் அடைந்து தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூரில் சிகிச்சை  பெற்று வரும் இளைஞர்களை சந்தித்த எஸ் டி பி ஐயின் மாநில செயலாளர் அப்துல் ஹமீது செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது இந்த கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் இதற்க்கு பின்புலமாக இருந்து செயல் படும் கருப்பு முருகானந்தம் மீது வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்தபட வேண்டும் என கேட்டுகொண்டார். 

இந்த சதிப்பின் பொழுது தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இலியாஸ் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.Share:

அதிரைக்கு தஞ்சை MP வருகை

தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் உயர் திரு பரசுராமன் அவர்கள் அதிரைக்கு வருகை புரிந்து வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்து வருகிறார். 

Share:

உஸ்வத்துர்ரஸுல் பெண்கள் மதரஸா பட்டமளிப்பு விழா!அதிரை உஸ்வத்துர்ரஸூல் பெண்கள் மதரஸாவின் ஆலிமா, ஹாபிள் பட்டமளிப்பு விழா இன்று 31.05.2014 சனிக்கிழமை காலை நடைபெற்றது.

மதரஸா வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் முஹம்மது குட்டி ஹஜரத் அவர்கள் மற்றும் உலமா பெருமக்கள்,முன்னிலையில் மாணவிகளின் பெற்றோர், பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

உள்ளூர் மற்றும் வெளியூர் உள்ளிட்ட ஆலிமா, ஹாபிள்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
Share:

பார்வையாளர்களின் மனங்களை வென்ற AFFA

உலகில் பல நாடுகளில் அதிக ஆர்வத்துடன் அதிக மக்கள் பார்க்க விரும்பும் விளையாட்டு எது தெரியுமா? கிரிக்கெட்? இல்லவே இல்லை. அதிக மக்கள் பார்க்க விரும்புவது, ஃபுட் பால் எனப்படும் கால்பந்து விளையாட்டைத்தான்.

ஐ.பி.எல் எனப்படும் கிரிக்கெட் ஜுரத்திற்கு மத்தியில் அதிரை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர் மக்களை மகிழ்விக்கும் விதமாக அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோஸியேஷன்(AFFA) நடத்தும்  கால் பந்து தொடர் போட்டி கடந்த சில தினங்களாக அதிரை ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்திருந்தது.

இதன் இறுதிப் போட்டி நேற்றோடு நிறைவடைந்தது. தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து மிகச்சிறந்த அணியினரை வரவழைத்து, போட்டிகளை நடத்தியதோடு, பார்வையாளர்களுக்கு இலவசமாகவும் காட்சி தரும் வகையில், இதனை AFFA அமைத்துக் கொடுத்தது.

எந்த பாகுபாடுமின்றி போட்டிகளை நடத்தியதோடு சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இப்போட்டிகள் அமைந்திருந்தன.

ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவிலுள்ள நாடுகளின் கால்பந்து சங்கங்களில் எட்டு வயது முதல் சிறார்களை எப்படி ஈடுபடுத்தி கால்பந்து முன்னெடுப்புகளைச் செய்கிறார்களோ, அதே அளவில் அதிரையிலும் இதற்கு மவுசு அதிகம்தான். முன்பு அதிரையின் கால்பந்து சிகரங்களாக விளங்கிய மூத்த கால்பந்து வீரர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என அனைவரும் இந்த போட்டிகளில் கவுரவப் படுகின்றனர்.

பல ஊர்களுக்கு விளையாடச் சென்று வெற்றிக் கோப்பைகளை தட்டிச் செல்லும் AFFA தன்
சொந்த மன்னிலும் தன் திறமையைக் காட்டத் தவறுவதில்லை, அரையிறுதிப் போட்டி வரை முன்னேறி பார்வையாளர்களை மகிழ்வித்ததோடு, தனது சிறப்பான நிர்வாகத்தின் மூலமும் கை தேர்ந்த நடுவர்களை அழைத்து எந்த பாகுபாடுமின்றி திறமைக்கு முக்கியத்துவம் தரும் AFFA அனைவரின் மனங்களையும் வென்றது என்றால் அது மிகையில்லை.

அதிரை கால்பந்து விளையாட்டுக்கு இவர்கள் செய்யும் அற்பணிப்பு தொடர வாழ்த்துக்கள்.

Share:

துபையில் நடந்த அதிரை அனைத்து மஹல்லா செயற்குழு

30/05/2014 இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் அமீரக AAMF அமைப்பின் செயலாளர் V.T.அஜ்மல்கான் அவர்கள் இல்லத்தில் AAMF துணைத் தலைவர் P.முகம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமையில் கூட்டம் இனிதாய் நடை பெற்றது. 

இக்கூட்டத்தில் ஊர்நலன் குறித்து பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. இன்னும்பல நலத்திட்டங்கள் விவாதிக்கப்படுவதாக இருந்தன. ஆனால் சில முஹல்லா நிர்வாகிகள் வராத காரணத்தால் விரிவாக பேசமுடியவில்லை.

ஆகவே இன்ஷா அல்லாஹ் வரும் கூட்டத்தில் அனைத்து மஹல்லாவின் நிர்வாகிகளும்  கலந்து ஊர்நலன் வேண்டிய நல்லமுடிவுகள் எடுக்கப்படும் என்பதாக தீர்மானிக்கப் பட்டது.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போன  மஹல்லா நிர்வாகிகள் அனைவர்களும் அவசியம் வரும் கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு தாங்களின் மேலான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
அமீர அனைத்து மஹல்லா  நிர்வாகிகள்
துபாய் கிளை    நன்றி:TIYA வலைத்தளம்
Share:

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - பிரபல நடிகை மோனிகா வாக்குமூலம்


பிரபல முன்னாள் சினிமா நடிகை மோனிகா, தாம் ஏன் இஸ்லாத்தை  ஏற்றேன் என்று தெளிவு படுத்தியுள்ளார். தற்போது ரஹீமா என்று பெயரை மாற்றியுள்ளதோடு, இனிமேல் சினிமாவிலும் நடிக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.இவர் தன்னுடைய திரை வாழ்க்கையை தமிழ் மொழிப் படங்களில் துவங்கினார். 1990களில் குழந்தை நட்சத்திரமாகவும், 2000ல் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். 

அழகி திரைப்படம் மூலமாக புகழ்பெற்ற நடிகையானார். அதையடுத்து இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்) மற்றும் சிலந்தி ஆகிய படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். சமீபத்தில் தன்னுடைய பெயரை பார்வனா என்று மாற்றம் செய்துள்ளார்.

2:256   لَا إِكْرَاهَ فِي الدِّينِ  ۖ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انفِصَامَ لَهَا ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
Share:

கோப்பையை கைப்பற்றியது தஞ்சை அணி (புகைப்படங்கள்)

அதிரை AFFA கால்பந்து கழகம் சார்பில் நடந்து முடிந்த கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நாகூர் கௌதிய கால்பந்து அணியும் அருள் கால்பந்து அணியும் மோதினர்.இதில் தஞ்சை அருள்  கால்பந்து அணி 1-0 என்கின்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.போட்டி முடிவில் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.இந்த பரிசளிப்பு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக அதிரை பேரூர் மன்ற தலைவர் அஸ்லம், அஹ்மது  பஜால்,அதிரை காவல்துறை ஆய்வாளர், முன்னால் காதர் மொய்தீன் உடற்கல்வி ஆசிரியர் ராமச்சந்திரன்,முன்னால் ஒய்வு பெற்ற உடற் கல்வி ஆசிரியர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Share:

Flash News: நாகூர் அணி தோல்வி!


இன்று மாலை நடந்த கால்பந்து இறுதி   ஆட்டத்தில்  நாகூர் கௌதியா  அணியும் தஞ்சை அணியினரும் மோதினர். இதில் தஞ்சை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தற்பொழுது பரிசளிப்பு விழா நடைபெற்று வருகிறது. மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள்.
Share:

AWO இணையதளங்களில் அதிரை திருக்குர்ஆன் மாநாடு நேரலை! ( LIVE)


அதிரை முகைதீன் ஜும்மா பள்ளி அருகில் இன்று மாலை முதல் நடைப்பெறும் திருக்குர்ஆன் மாநாட்டின் சிறப்பு பயான்கள் நமது AWO கூட்டமைப்பு வலைதளங்களில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும் என்பதனை இதன் மூலம் தெரியப்படுத்தி கொள்கிறோம்.

நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும் AWO கூட்டமைப்பு வலைத்தளங்கள் விபரம்:

Share:

கிராத் போட்டியில் குழந்தைகள்(புகைப்படங்கள்)

14 ஆம் ஆண்டு பைத்துல்மால்  நடத்தும் திருக்குர்ஆன்  மாநாடு இன்று காலை 10.00 மணியளவில் ஆலடி தெரு மொய்தீன் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. கிராத் போட்டியில் குழந்தைகள் பங்கேற்று சிறப்பித்து வருகின்றனர். Share: