Thursday, July 31, 2014

துபாயில் உடனடியாக வேலை வாய்ப்புகள்

Sales Co-ordinator மற்றும் Sales Representative க்கு உடனடியாக ஆட்கள் தேவை.
விசிட் விசா மற்றும் இதர விசாகளில் உள்ளவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்
(தமிழ் முஸ்லிம் நண்பர்களுக்கு மட்டும்)
நல்ல சம்பளம்
உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

AGT International Services
Mobile No. 0097155-4720124 

சாலை விபத்தில் 5 மாணவிகள் படுகாயம்-முதலுதவி அளித்த அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள்

பட்டுகோட்டையை அடுத்த அறந்தாங்கி பகுதியில் நேற்று மாலை நமது செய்தியாளர்கள் இரண்டு பேர் பைக்கில் சென்று கொண்டு இருந்த போது  அவருக்கு முன்னே சென்ற நான்கு சக்கர வாகனம் பள்ளி விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்த 5 மாணவிகள் மீது மோதியதில் மாணவிகள் பலத்த காயம் அடைந்தனர். உயிருக்கு போராடி கொண்டு இருந்த அவர்களை அப்பகுதி மக்கள் மற்றும் நமது அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள் முதல் உதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். நெய்னாஸ் முஷ் கிச்சன் அராபியன் ஸ்வீட்

முஸ் கிச்சனின் இன்றைய ஸ்பெஷல் ரஷ்பி அரபியன் ஸ்வீட் பகலவ கிரீம் ...

அதிரை செய்தியாளர் விபத்தில் படுகாயம்

தமிழன்  தொலைகாட்சியின் அதிரை பகுதி செய்தியாளராக இருப்பவர் ரமேஷ்.இவர் காலை ecr முத்தம்மாள் தெரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது கேரளாவை நோக்கி சென்று கொண்டு இருந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக மோதியதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு காது வழியாக இரத்தம் வந்தது.உயிருக்கு போராடி கொண்டு இருந்த அவரை மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர்.
pic:theadirainews

அவசர இரத்தம் தேவை

அவசர இரத்தம் தேவை 

பட்டுகோட்டையை சேர்ந்த சகோதரருக்கு A 1 B POSTIVE இரத்தம் தேவை

தொடர்புக்கு:9965491487 

மரண அறிவிப்பு (சுல்தான் இப்ராஹீம் ஆலடித்தெரு)

அஸ்ஸலாமு அலைக்கும்

ஆலடித் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செய்குனா அவர்களின் பேரனும். மர்ஹூம் முஹம்மது சாலிம் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி முஹம்மது செய்யீது, ஹாஜி அஹம்மது அமீன், மர்ஹூம் ஹாஜி அஹமது தாஹா, ஹாஜி அஹம்மது ரஷாத் ஆகியோரின் முத்த சகோதரரும்,  ஆபிதின் அவர்களின் தகப்பனாரும், முஹம்மது புஹாரி அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி சுல்தான் இப்ராஹீம் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 5:30க்கு மரைக்கா பள்ளியில் நடைபெறும்.

Wednesday, July 30, 2014

அதிரையில் மந்தி விருந்து

அதிரை செக்கடி மேடு நண்பர்கள் சார்பாக மந்தி விருந்து இன்று பகல் அதிரை EB அருகே உள்ள தோப்பில் நடைபெற்றது.இதில் 400க்கும் மேற்பட்டோர்  கொண்டனர்.  
பிரபல மார்க்க அறிஞர் "செங்கோட்டைச் சிங்கம்" மவ்லானா ஆவூர் அப்துஷ் ஷக்கூர் ஹழ்ரத் மரணம்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றி வரும் தமிழ்நாடு மாநில ஜமாஅ(த்)துல உலமா சபை துணைத் தலைவரும், திருவாரூர் மாவட்டம் ஆவூர் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலின் தலைமை இமாமுமாகிய மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் 'செங்கோட்டைச் சிங்கம்' மு. அப்துஷ் ஷக்கூர் ஃபாஜில் மன்பயீ ஹழ்ரத் அவர்கள், இன்று (செவ்வாய் 29.07.2014) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு கோவையில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஹழ்ரத் அவர்களுக்கு வயது 65.

அன்னாரின் ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (புதன் 30.07.2014) லுஹர் தொழுகைக்குப் பிறகு திருவாரூர் மாவட்டம் ஆவூரில் நடைபெறும்.

சிந்திக்க வைக்கும் சொற்பொழிவுக்கு சொந்தக்காரரான ஆலிம் பெருந்தகையான ஹஜ்ரத் அவர்களின் மரணச் செய்தி ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் குலுக்கி எடுக்கும் துக்கச் செய்தியாகியுள்ளது.

செங்கோட்டை சிங்கம் என்று உலக தமிழ் முஸ்லிம் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர்கள். அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்களை மக்களுக்கு விளக்கியவர்கள். சன்மார்க்க விளக்கம் தருவதில் முன்மாதிரியான அறிஞராகவும், சிக்கலான மார்க்க விஷயங்களைக் கூடப் பாமரரும் புரிந்திடும் வகையில் விவரித்துக் கூறுவதில் வல்லவராகவும் திகழ்ந்தவர்கள் ஹஜ்ரத் அவர்கள்.

தமிழகத்தில் மீலாது விழாக்களிலும், ஷரீஅத் மாநாடுகளிலும், கல்லூரி விழாக்களிலும், ஹஜ்ரத் அவர்களின் உரை என்றால் அதனைக் கேட்கும் கூட்டம் தனியே தெரியும். இதயங்களை ஈர்க்கும் இனிய சொல்லரசாக விளங்கினார். ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவுகள் பல்லாயிரக்கணக்கில் ஒளி, ஒலிப் பேழைகளாக உலகம் முழுவதும் பரவியுள்ளன.

மிகச்சிறந்த நாடறிந்த நாவலரும், சுன்னத்து வல் ஜமாஅத் கொள்கை கோட்பாடுகளில் மிக உறுதி மிக்கவருமான கண்ணியத்துக்குரிய ஹஜ்ரத் அவர்கள் மிகவும் அற்புதமான பேச்சாற்றல் கொண்ட நல்ல ஒரு மனிதர்.  இஸ்லாமிய சரித்திரத்தின் கருவூலத்தை மனக்கண் முன் கொண்டு வரும் ஆற்றல் மிக்க சொல்லின் செல்வர். சொல்லேர் உழவர் அவர்கள். மாற்றுக் கருத்து உள்ளவர்களும் அவர்களின் அற்புதமான பேச்சை கேட்க குழுமியிருப்பார்கள். தமிழும் அரபியும் குர்ஆனும் ஹதீசும் அவர்களுக்கு கை வந்த கலை. கனீரெனும் குரலில் ஹதீஸ்களை சொல்லும் பேச்சாற்றல் மிக்க பெருந்தகை.

தமிழக மக்களின் இறைநம்பிக்கை(ஈமான்)யை தகர்த்தெறிந்த நவீன குழப்பவாதிகளின் முகத்திரைகளை கிழித்தெறிந்தார்கள். சத்திய மார்க்கத்தை தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள். ஃபிக்ஹ் சட்டங்கள் குறித்து எழுந்த முறையற்ற விமர்சனங்களுக்கும், குழப்பவாதிகளால் தவறாக சித்தரிக்கப்பட்ட சட்டங்களுக்கும் ஆதாதங்களுடன் பதில் கொடுத்து குழப்பவாதிகளின் வாய்களை அடைத்தார்கள்.

யாருக்கும் பயப்படாமல், எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சிவிடாமல் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மார்க்கப் பணியாற்றினார்கள். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் பழக்கமில்லாத மார்க்க மேதை. எதையும் இதயத்தைத் தொடும்படியாக எடுத்துக் கூறும் இயல்புள்ள அறிஞர். சிந்தனையாளர்களுக்கு தூண்டுகோல், செயல் வீரர்களுக்கு துணைவர். மொத்தத்தில் சமுதாய ஒற்றுமைக்கும், சன்மார்க்க எழுச்சிக்கும் பாடுபட்டு மறைந்துள்ள பண்பட்ட தாயி, அவர்களின் மறைவு, உண்மையில் அறிவுலகத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.

அறிஞரின் மறைவு அகிலத்தின் மறைவு என்னும் பழமொழிதான் இங்கே நினைவுக்கு வருகிறது.

ஹஜ்ரத் அவர்களின் சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டம் மேலச்சாலை நகரில் 24.11.1949 அன்று பிறந்த ஹஜ்ரத் அவர்கள், தன்னுடைய மார்க்கக் கல்வியை 1969ம் ஆண்டு லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் மவ்லவீ ஆலிம் மன்பயி பட்டத்துடனும், 1971ம் ஆண்டு ஃபாஜில் மன்பயீ பட்டத்துடனும் நிறைவு செய்தார்கள். அதனைத் தொடர்ந்து திருவாருர் மாவட்டம் ஆவூர் நகரில் அமைந்துள்ள ஜாமிஆ மஸ்ஜிதில் தலைமை இமாமாக பொறுப்பேற்றார்கள். அதே ஊரில் அமைந்துள்ள தாருஸ்ஸ‌லாம் அர‌பிக் க‌ல்லூரி முத‌ல்வ‌ராகவும் பணியாற்றியுள்ளார்கள்.


 உலகின் பல்வேறு நாடுகளுக்கும், தமிழகத்தில் ஹஜ்ரத் அவர்கள் செல்லாத இடங்களே இல்லை எனும் அளவுக்கு பல்வேறு இடங்களுக்கும் சென்று சிறப்புரையாற்றியுள்ளார்கள். இதுவரை ஏறக்குறைய 10,000க்கும் மேற்பட்ட மார்க்க சொற்பொழிவுகளை ஹழ்ரத் அவர்கள் நிகழ்த்தியுள்ளார்கள்.

ஒருங்கிணைந்த தஞ்சை, நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளாராக பத்து ஆண்டுகள், பொருளாளராக பத்து ஆண்டுகள், தலைவராக பத்து ஆண்டுகள் சேவையாற்றியவர்கள். தமிழ்நாடு மாநில ஜமாஅ(த்)துல உலமா சபை துணைத் தலைவராகவும், மன்பயீ ஆலிம்கள் பேரவையின் பொருளாளராகவும் தற்போது பொறுப்புகளை வகித்து வந்தார்கள்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் அரபி மொழித்துறையில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும் பிரபல மார்க்க சொற்பொழிவாளர், எழுத்தாளர், இளம் முனைவர் 'செங்கோட்டை இளஞ்சிங்கம்' மவ்லவீ அ. முஹம்மது இஸ்மாயீல் ஹஸனீ M.A., M.Phil., அவர்கள், மர்ஹூம் ஹஜ்ரத் அவர்களின் மகனார் ஆவார்.

மேலும் அதிரையில் பல வருடங்களுக்கு முன்பு ஆஸ்பத்திரித் தெரு ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மீலாது விழாவில் பங்கேற்று ஹஜரத் அவர்கள் சிறப்புரை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரது மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Tuesday, July 29, 2014

அதிரை சுட்டிகளின் புகைப்படங்கள் தொடர்கிறது.....


அதிரை சுட்டிகளின் புகைப்படங்கள் தொடர்கிறது..... மகிழ்ச்சி நாளில் அதிர்ச்சி தரும் அதிரை இளைஞர்கள்

புனித மிக்க ரமலான் நோன்பு பெருநாளை நமதூர் மக்கள் கொண்டாடி வருகின்ற நிலையில்  பெரும்பான்மையான  இளைஞர்கள் தங்களது மாலை நேரங்களில் மல்லிபட்டினம் மனோரா , ராஜாமடம் பாலம் , பட்டுகோட்டை உணவகம்,போன்றவற்றிக்கு செல்வது அதிரையில் பல வருடங்களாக நடந்து வருகிறது.
இருப்பினும் ஒரு சில  இளைஞர்கள் தங்களது பெருநாளை கொண்டாடும் விதமாக சினிமா தியேட்டர், மது போன்ற வற்றை குடித்து கொண்டாடி வருவது அதிர்ச்சி தகவலாக இருக்கிறது.  
அதுமட்டும் இல்லாமல் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று இணைந்து பைக் வாகனங்களில் போட்டி நடத்துவதும் வாடிக்கையாகி வருகிறது. மேலும் அதிரை பகுதிகளில் பெருநாள் நேரங்களில் அதிகளவில் பைக் விபத்துக்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

அதிரை தமுமுக சார்பில் வாழ்வாதார உதவியாக தையல் மிஷின் வழங்கல்

அதிரை சகோதரியின் ஏழ்மை நிலை கருதி அவருக்கு வாழ்வாதார உதவியாக அதிரை தமுமுக சார்பில் தையல் மிஷின் நேற்று வழங்கப்பட்டது. 

updated அதிரையில் களைகட்டியது பெருநாள் கொண்டாட்டம்UPDATED அதிரை சுட்டி குழந்தைகளின் பெருநாள் கொண்டாட்டம்

அதிரை சுட்டி குழந்தைகளின் பெருநாள் கொண்டாட்டம்