Sunday, August 31, 2014

ஆற்று நீரால் நிரையும் காட்டு குளம் (வீடியோ காணொளி)

ஆற்று நீரால் நிரையும் காட்டு குளம்


அதிரையில் விநாயக சதுர்த்தி ஊர்வலம்-பாதுகாப்பு கருதி பள்ளிகள் விடுமுறை

அதிரையில் இன்று மாலை விநாயக சதுர்த்தி ஊர்வலம் நடைபெறவுள்ளது.
எனவே பாதுகாப்பு கருதி அணைத்து பள்ளிகளும் அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

தஞ்சை மாவட்டம் இ.யூ முஸ்லீம் லீக் நிர்வாகம் கலைப்பு - பொதுக்குழு கூட்டத்தில் முடிவு!

தஞ்சை கவிதா திருமண மண்டபத்தில் நேற்றையதினம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்ப்பட்டன.


தஞ்சாவூரில் உள்ள கவிதா திருமண மண்டபத்தில் நேற்றையதினம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்குழு கூட்டத்தில் மாநில தலைவர் காதர் முகைதீன், மாநில பொதுசெயலாளர் அபூபக்கர், தஞ்சை மாவட்ட தலைவர் அப்துல் ஹமீது உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.

இதில் தஞ்சை மாவட்ட இ.யூ முஸ்லிம் லீக் நிர்வாகத்தை கலைத்துவிட்டு அதற்கு மாறாக தஞ்சை தெற்கு, வடக்கு என பிரித்து அதற்க்கான நிர்வாகிகளை தேர்வு செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி தற்பொழுது தஞ்சை மாவட்ட முஸ்லீம் லீக் நிர்வாகம் கலைக்கப்பட்டுவிட்டது. புதிய நிர்வாகிகள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது தஞ்சை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு விட்டதால் தெற்கு மாவட்ட முக்கிய பொறுப்புகளில் அதிரையர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதில் அதிரை முஸ்லீம் லீக் சார்பில் தம்பி மளிகை KK.ஹாஜா, வழக்கறிஞர் முனாப், மணிச்சுடர் நிருபர் சாகுல் ஹமீது, நகர செயலாளர் சேக் அப்துல்லாஹ், ஜமால் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.








விளையாட்டு துறையில் தொடர்ச்சியான சாதனைகள்! மாவட்ட அளவில் காதிர் முகைதீன் பள்ளி வெற்றி!


விளையாட்டு துறையில் தொடர்ச்சியாக சாதனைகள் படைத்துவரும் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளி தற்பொழுது மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியிலும் வெற்றியினை தன்வசம் படுத்தி தனது பத்தாண்டுகள் தாகத்தை தீர்த்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளி சமிபகாலமாக விளையாட்டு துறையில் பல சாதனைகள் படைத்து வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரைக்கும் கல்விக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ அதை அளவு உடற்கல்விக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 

இதன் காரணமாக கடந்த சில வாரங்களுக்குமுன்  கரம்பயம் அரசு பள்ளியில் நடைபெற்ற தஞ்சை மாவட்ட அளவிலான தடகள போட்டியில் ஓவர் ஆல் சாம்பியன் பட்டத்தை இதே காதிர் முகைதீன் பள்ளியின் மாணவர்கள் கைப்பற்றினர். இதற்கிடையில் நேற்று நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியிலும் முதல் இடம் பெற்று அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பள்ளி சாதனை படைத்துள்ளது.

தொடர்ச்சியாக மாணவர்களின் திறமைகளை இனம்கண்டு அவர்களுக்கு முறையான பயிற்ச்சி அளித்து இதுபோல் பல வெற்றி சாதனைகள் படைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நமதூர் பொதுமக்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறோம்.

அதிரையில் பொழுதுபோக்கு என்ற பெயரில் பல இலட்ச ரூபாய்கள் வீண்! (அதிர்ச்சி ரிப்போர்ட்)


அதிரையில் பொழுதுபோக்கு என்ற பெயரில் பல இலட்ச ரூபாய்கள் வீண் செய்யப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இளைஞர்கள் சார்பில் வருடாவருடம் பலவிதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதைபோல் 2௦13-2௦14 ஆண்டுகளில் கைப்பந்து, கால்பந்து, மட்டைப்பந்து போன்ற பலவிதமான விளையாட்டு போட்டிகள் பல ஆயிர ரூபாய் ரொக்கப் பரிசுகளுடன் நடத்தப்பட்டன. 

இவைகளின் மதிப்பு மட்டும் பல இலட்சியத்தையும் தாண்டும் என்ற அதிர்ச்சி தகவலை கேட்ட சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து பெயர் சொல்லவிரும்பாத ஒருவர் கூறுகையில் “விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது என்பது வரவேற்கக்கூடிய காரியமாக இருந்தாலும் அதிரையில் நடத்தப்பட்ட போட்டிகள் அனைத்தும் முற்றிலுமாக வீரர்களின் திறமைகளை ஊக்குவித்து அவர்களை ஒரு இலக்கை நோக்கி நகர்த்தாமல் எந்த ஒரு தொலைநோக்கு பார்வையும் இன்றி சாதாரனமாக பொழுதுபோக்கு என்ற ஒரு அற்ப காரியத்திற்காக பல இலட்ச ரூபாய் வீண் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் நமக்கு தலைகுனிவை ஏற்ப்படுத்தும் காரியமாகும். 

இதுவரைக்கும் நமதூர் அதிரையில் பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது அதற்காகவே பல இலட்சங்களும் செலவு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு செலவு செய்ய நமதூரில் ஆட்கள் இருந்தும்கூட இதுவரை எத்தனை பேர்கள் மாவட்ட, மாநில அல்லது தேசியளவில் சாதித்துள்ளனர் என்பது சந்தைகமே. இதற்கு காரணம் நமது இளைஞர்கள் அல்ல மாறாக ஒரு கட்டமைப்பு இன்மை தான். நமதூரில் இருக்கும் வீரர்களை முறையாக பயிற்ச்சி அளித்து  இலட்சியத்துடன் முன்னேற செய்தால் நாம் செய்த செலவிற்கான பயன்களை அடையலாம்”என்றார்.

இவர் கூறுவது போன்று அதிரையில் திறமைமிக்க வீரர்கள் இருக்க தான் செய்கின்றனர் ஆனால் அவர்களை அடையாளம் காண்பது என்பது ஒற்றுமையாக இருந்தால்தான் சாத்தியம். அது அதிரையில் உள்ள அனைத்து பிரிவுகளையும் ஒன்றாக கொண்ட அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பால் முடியும் என்பதே ஆழப்பதியும் உண்மை.

எனவே அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு விளையாட்டு துறையிலும் தனி கவனம் செலுத்தி முறையான தேர்வுகள் மூலம் ஊரில் உள்ள திறமைமிக்க வீரர்களை கொண்டு அதிரைக்கு என ஒரு பலமான அணியை உருவாக்கி அவர்கள் வெளியூர்களில் சென்று மாவட்ட மாநில தேசிய அளவிலான போட்டிகளில் நமதூரின் சார்பில் கலந்துக்கொண்டு விளையாடும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டிய தருணம் வந்து விட்டது என்பதை உணர்ந்து செயல்ப்பட வேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

காட்டு குளம் நிலவரம்

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட ஆற்று நீர் பல ஊர்களை கடந்து நேற்று இரவு 10 மணிக்கு அதிரை பகுதி காட்டு குளத்திற்கு வந்து அடைந்தது.மேலும் அதிரை பேருராட்சி தலைவர் அஸ்லம், துணை தலைவர் பிச்சை,சமூக ஆர்வலர் அமீன்  மற்றும் அதிரை இளைஞர்கள் ஆகியோர்   நேற்று இரவு முழுவதும் கண்விழித்து வழிகளில் கிராமத்தினர் திறந்து விடும் வாய்கால்களை அடைத்து சீரான ஆற்று நீரை காட்டு குளத்திற்கு வந்து அடைய செய்தனர். தற்போது காலை நிலவரப்படி ஆற்று நீர் அதிகரித்து தற்போது காட்டு குளம் நிரம்பி கொண்டு இருக்கிறது. காட்டு குளம் 20 வருடத்திற்கு பிறகு ஆற்று நீரால் நிரம்புவது குறிப்பிடத்தக்கது.






Saturday, August 30, 2014

அதிரைக்கு வந்து அடைந்தது ஆற்று நீர் (புகைப்படம்)

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட ஆற்று நீர் கடைமடைபகுதிகளை குளிர்வித்து வருகிறது. இந் நிலையில் தற்போது ஆற்று நீர் பல ஊர்களை கடந்து தற்போது 10 மணிக்கு அதிரை காட்டு குளத்திற்கு  வந்து அடைந்தது. 







அதிரையை நோக்கி ஆற்று நீர் (புகைப்படங்கள்)

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட ஆற்று நீர் கடைமடைபகுதிகளை குளிர்வித்து வருகிறது. இந் நிலையில் தற்போது ஆற்று நீர் பல ஊர்களை கடந்து இன்னும் சில மணி நேரங்களில் அதிரைக்கு வர இருக்கிறது.தற்போதைய நிலவரப்படி 7.00 மணிக்கு காட்டு குளத்திற்கு வந்து  அடையும் என்று  எதிர்ப்பார்க்கபடுகிறது.மேலும் ஆற்று நீர் அதிரை பகுதிக்கு விரைவில் வந்து அடையும் விதமாக வாய்கால் பாதையில் கிடக்கும் மரங்கள் குப்பைகளை அதிரை பேருராட்சி துப்புரவு ஊழியர்கள் மூலமாக ஆகற்றபட்டு வருகிறது.  இதற்கான முழு ஏற்படினையும் அதிரை பேருராட்சி நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.




அதிரையை நோக்கி ஆர்பரித்து வருகிறது ஆற்று நீர்!

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட ஆற்று நீர் கடைமடைபகுதிகளை குளிர்வித்து வருகிறது. அதனை எதிர்நோக்கும் விதமாக நமதூரில் உள்ள நீர் நிலைகளை எல்லாம் தூர்வாரி சுத்தம் செய்து ஆற்றுநீர் வருகைக்காக காத்து இருந்தது. 
இந்நிலையில் இன்று மதியம் அதிரைக்கு ஆற்றுநீரை திறந்து விட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை அடுத்து ஆற்றுநீர் திறந்து விடப்பட்டுள்ளது. சமிபத்திய தகவலின் படி  அதிரைக்கு சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில்  இந்த ஆற்றுநீர் வந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த ஆற்றுநீரை அதிரையில் உள்ள மக்களின் தாகங்களை தீர்க்கும் முக்கிய பகுதியான காட்டுக்குளத்தை நிரப்ப பேரூர் நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது ... இதனை அடுத்து படிப்படியாக ஊரில் உள்ள குளங்களுக்கு நீர் நிரப்ப முறை அமைக்கபட்டள்ளதாக தெரிகிறது. 

இதனிடையே ஊரில் உள்ளூர் அரசியலில் யாரும் ஈடுபடமால் ஒற்றுமையுடன் குளங்களையும் மனங்களையும் நிரப்பி கொள்ள கேட்டுகொள்ளபடுகிறது.  

சிறுபான்மை மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு செப்டம்பர் 30 க்குள் விண்ணப்பிக்கலாம்!

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் சிறுபான்மையின மாண விகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 30ம் தேதி என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

"கல்வியில் சிறந்து விள ங்கி வசதியின்றி கல்வியை தொடர இயலாத சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த மாணவிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு மௌலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சிகள், ஜெயின் மதங்களை சேர்ந்த 2014& 15ம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு மத்திய அரசின் மௌலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் 11ம் வகுப்பில் ரூ.6,000, 12ம் வகுப்பில் ரூ.6,000 என மொத்தம் ரூ.12 ஆயிரம் 2 தவணைகளாக வழங்கப்படுகிறது. இக்கல்வி உதவித் தொகை, கல்வி கட்டணம், பாடப்புத்தகம், எழுதுபொருட்கள் மற்றும் உண்டி உறையுள் கட்டணங்களுக் காக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 1,343 சிறுபான்மையின மாணவிகளுக்கு நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது.
இக்கல்வி உதவித்தொகை பெற 10ம் வகுப்பில் குறைந்தபட்சம் சிறுபான்மையின மாணவிகள் 55 சதவீதம் மதிப்பெண் பெற்று 2013&14ம் ஆண்டில் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் சேர்ந்து 11ம் வகுப்பில் பயில்பவராக இருக்க வேண்டும்.
சேர்க்கை அனுமதிச்சீட்டு கடிதம் நகல் இணைக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் அனைத்து வழிகளிலும் ரூ.1 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். வருமான சான்றிதழ், ஓய்வூதியம் ஆணை, ரூ.20 மதிப்புள்ள நீதிமன்றம் சாரா முத்திரைத்தாளில் உறுதி ஆவ ணம் அவசியம் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

மாணவிகள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங் களை இணைத்து தாங்கள் பயிலும் கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இக்கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் உறுதி ஆவணம் மற்றும் இதர விவரங்கள்


என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கல்வி நிலைய தலைமை ஆசிரியர், தாளாளர், தங்கள் கல்வி நிலையத்தில் 11ம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவிகளிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று சரிபார்த்து அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கை 1ல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் 1 மற்றும் 2ல் குறிப்பிட்டுள்ள படிவங்கள் ஆகியவற்றுடன் அசலாக  தி செகரட் டரி, மௌலானா ஆசாத் எஜுகேசன் பவுன்டேசன், (மினிஸ்ட்ரி ஆப் மைனாரி ட்டி அப்பையர்ஸ், இந்திய அரசு) செல்ம்ஸ் போர்ட் ரோடு, புதுடில்லி 110055 என்ற முகவரிக்கு வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் 12ம் வகுப்பு உதவித்தொகை பெற மாணவிகளின் 11ம் வகுப்பு தேர்ச்சி விவரங்களை உடனடியாக மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இக்கல்வி உதவித்தொகை திட்டத்தில் நடப் பாண்டுக்கு காலக்கெடுவுக்குள் சிறுபான்மையின மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்."

 இவ்வாறு கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

சாலையை சீர்செய்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றி

கடைத்தெருவில் இருந்து காலேஜ் ரோடு வழியாக காதர் முகைதீன் ஆண்கள் பள்ளி, கல்லூரி மற்றும் E C R க்கு வாகனத்தில் செல்பவர்களுக்கு, ஆதே போல் அங்கிருந்து இந்த வழியாக வருபவர்களுக்கும் நீண்ட நாட்களாக E C R சாலையை இனைக்கும் இடத்தில் குண்டும் குழியுமாக வாகனங்கள் சிரமம்யின்றி ரோட்டை அடைய முடியாத நிலை இருந்தன இதனால் பல வாகனங்களும் சைக்கிளில் செல்லும் மாணவ மாணவிகளும் சிரமத்திற்கு சில நேரங்களில் விபத்திற்கு உள்ளாயினர். இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பேரூராட்சி தலைவரை அனுகி அதிகமான விபத்துக்களை ஏற்படும் இந்த சாலை இனைப்பை சீர்செய்யும் படி கேட்டுக்கொள்ளப்பட்டன இந்த கோரிக்கையை ஏற்று பேரூராட்சி நிர்வாகம் இந்த சாலை இனைப்பை சீர் செய்வதற்கு ஏற்பாடு செய்து பணிகள் நடைபெறுகிறது இந்த சாலை இனைப்பை சீர்செய்த பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துனைத்தலைவர், செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துகொள்கிறது.


நன்றி:அதிரை ததஜ  

கடற்கரை தெருவுக்கு செப் 18 ல் தேர்தல்

அதிரை கடற்கரை தெரு பகுதி கவுன்சலர் ஷாகுல் ஹமீது (சுயட்சை) அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு இறந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் 18 ஆம் தேதி  இந்த வார்டுக்கு மீண்டும் தேர்தல் நடைபெற இருக்கிறது.
மேலும் திமுக கோட்டையாக இருந்து வரும்  கடற்கரை தெரு  தற்போது சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசின் விலையில்ல பொருட்கள் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது.இந்த தாக்கம் இந்த தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் அதிமுக வுக்கு சாதகமாக அமையும் என்று கூறபடுகிறது.   

திருவாரூர் - காரைக்குடி, பட்டுக்கோட்டை - தஞ்சை அகல ரயில் பாதை திட்டத்தை விரைவில் நடைமுறைபடுத்த வலியுறுத்தல்!

திருவாரூர் - காரைக்குடி, பட்டுக்கோட்டை -தஞ்சாவூர் அகல ரயில் பாதை திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று பட்டுகோட்டை வர்தகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பட்டுக்கோட்டை வர்தகர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில், 

திருவாரூர் & காரைக்குடி அகல ரயில்பாதை உள்பட தமிழகத்திற்கு கடந்த 2012 & 2013ம் ஆண்டு வரை அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு 2014 & 2015ம் ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கையில் போதிய நிதி ஒதுக்கீடு மத்திய அரசு செய்யவில்லை. எனவே கடந்த 2013 & 2014ம் ஆண்டு வரை அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு குறிப்பாக பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதியில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு மத்திய அரசின் துணை மானிய கோரி க்கைல் போதிய நிதி ஆதாரங்களை அளித்து பட்டுக்கோட்டை, தஞ்சை பகுதி நீண்ட நாளைய ரயில்வே திட்டங்களுக்கு புத்துயிர் அளிக்க வேண் டும்.

பட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நிறைந்த சில முக்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடை யூறாக டிஜிட்டல் போர் டு கள் வைக்கக்கூடாது என்று நகராட்சி மற்றும் காவல்துறையினர் அவ்வப் போது நடவடிக்கை எடுத்து வந் தாலும் டிஜிட்டல் போர்டு வைப்பதை முழு மையாக நிறுத்த முடியவில்லை. எனவே கோட்டாட்சியர் மற்றும் நக ராட்சி நிர்வாகம், காவல்துறையினர் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு டிஜிட் டல் போர்டு பிரச்சனையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

பட்டுக்கோட்டை வர்தகர் சங்க நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் ராமானுஜம் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் அப்துல்சமது வரவேற்றார். துணைத்தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, மணிகண்டன், பொரு ளாளர் சுரேஷ்கண்ணா, செயலாளர்கள் ராமதாஸ், விஜயரெங்கன் ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி சம்மந்தமாக கருத்துக்களையும், ஆலோசனை வழங்கினர். செயலாளர் தன்ராஜ் நன்றி கூறினார்.

Friday, August 29, 2014

முத்துப்பேட்டை அருகே விபத்தில் விவசாயி பலி - ஆம்புலன்ஸ் வராததால் பொதுமக்கள் மறியல்!

முத்துப்பேட்டை அருகே உள்ள மங்களூர் வடக்கு கிரா மத்தை சேர்ந்தவர்கள் துரை சாமி(55), சின்னையன்(60). விவசாயிகள். இவர்கள் இருவரும் நேற்றிரவு மங்களூரிலிருந்து தம்பிக்கோட்டைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதியதில் துரைசாமி, சின்னையன் படுகாய மடைந்தனர். இதுபற்றி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் 2 பேரையும் மீட்டு, அவ்வழியாக வந்த மினி லாரியில் ஏற்றி, முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர்களை திருவாரூர் கொண்டு செல்லும்படி டாக்டர்கள் கூறினர். அங்கும் ஆம்புலன்ஸ் வராததால் பொதுமக்கள் ஆதிரமடைந்தனர்.

பின்பு காவல்துறை தலையிட்டு அதன்பின் வந்த ஆம்புலன்சில் 2 பேரையும் ஏற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல் லும் வழியிலேயே சின்னை யன் இறந்தார். துரை சாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வந்திருந் தால், சின்னையன் உயிரை காப்பாற்றி இருக்க முடியும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனை கண்டித்து முத்துப்பேட்டை பழைய பஸ் ஸ்டாண்டு அருகே பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

அதிரை காட்டு குளத்திற்கு பிறந்தது விடிவு.... தூர்வாரும் பணிகள் தீவிரம்

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் ஆற்று நீர் கடைமடை பகுதிகளின் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் நமது பகுதிக்கு வருகை தரும் ஆற்று நீர் சீராக செல்வதற்கு வாய்க்கால்கள் சீர் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் அதிரை மக்களுக்கு குடி தண்ணீர் கிடைத்து வரும் காட்டு குளம் பகுதி தூர்வாரபடாமல்  பராமரிப்பு இன்றி காணப்பட்ட நிலையில் இருந்த வந்தது.சில நாட்களுக்கு முன்பு அதிரை எக்ஸ்பிரஸ்,அதிரை ததஜ இணையதளங்களில் பாரமரிப்பு இன்றி காணப்படும் காட்டு  குளம் என்கின்ற தலைப்புகளில் பதிவு வெளியிடப்பட்டு நமது இணையதள பதிவாளர்கள் இந்த பதிவினை கோரிக்கையாக அதிரை பேருராட்சி நிர்வாகத்திற்கு எடுத்து சென்றனர். 

எங்களுடைய கோரிக்கையை ஏற்ற அதிரை பேருராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் துணை தலைவர் பிச்சை ஆகியோர் உடனடி நடவடிக்கையாக இன்று ஜே சி பி இயந்திரம் மூலம் காட்டு குளம் தூர்வாரபடுகிறது.காட்டு குளம் பகுதிக்கு சுமார் 20 வருடத்துக்கு பிறகு ஆற்று நீர் வர இருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். குறிப்பாக ஆற்று நீரை எதிர்பார்த்து சிறுவர்கள் ஆவலுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

சி எம் பி லைன் பொதுமக்கள் சார்பாக  அதிரை பேருராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் துணை தலைவர் பிச்சை ஆகியோருக்கு  அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி குழு நன்றிதனை தெருவித்து கொள்கிறது.






தகவல் மற்றும் புகைபடம்: ஷாகுல் ஹமீது 
AX முதன்மை செய்தியாளர்

தமிழினத்தின் உரிமையை காக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்தது...


சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்துக்குள் உள்ள அரங்கில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு ஐகோர்ட்டு நீதிபதி அரிபரந்தாமன் சென்றிருந்தார். அவர் வேட்டி அணிந்து சென்றதால், எம்.சி.சி. கிளப்பின் விதிப்படி அவர் அனுமதிக் கப்படவில்லை. இது தமிழகத்தில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. பாரம்பரிய உடைகளை அனுமதிக்காத கிளப்கள் மீது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வேட்டி கட்டும் கலாசாரத்தை கட்டுப்படுத்தும் நிலையை நீக்குவதற்கான சட்ட மசோதாவை முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சட்டசபையில் தாக்கல் செய்தார்.



இதற்கு அனைத்து கட்சிகளும் ஏகோபித்த ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்டு 21-ந் தேதி முதல் சட்டமாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை கவர்னர் வழங்கியுள்ளார்.


அவரது ஒப்புதலோடு அந்த சட்டத்தை அரசிதழில் சட்டத்துறை செயலாளர் ஜெயச்சந்திரன் வெளியிட்டுள்ளார். மனமகிழ் மன்றங்கள், கிளப்கள், ஓட்டல்கள், பல அடுக்கு வர்த்தக வளாகங்கள், மைதானங்கள், கூட்ட அரங்குகள் போன்றவற்றில் வேட்டி போன்ற இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து செல்வதற்கு அனுமதி மறுக்கும் கட்டுப்பாடுகள் இந்த சட்டப்படி நீக்கப்பட்டுவிட்டன. இந்த சட்டத்தை மீறினால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அந்த நிறுவனத்தின் உரிமமும் ரத்து செய்யப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

தினத்தந்தி

தொனாகானா முத்து மரைக்காயர் மரணம்

அதிரை மேலத்தெருவை சேர்ந்த தொனாகானா.என்கின்ற முத்து மரைக்காயர் அவர்கள் இன்று பகல் வபாத்தாகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 6.30 மணிக்கு பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 IMAGE FILE
தொனாகானா பற்றி ஒரு சிறு குறிப்பு.... 

அதிரைவாசிகளுக்கு நன்கு பரிச்சயமான உரையாடல்தான் இது. கொரியர் சர்வீஸும் டோட்-டு-டோர் டெலிவரியும் நமதூர் மக்களுக்கு அறிமுகமாகும் முன்பே,நன்கு அறிமுகமான நடமாடும் தபால்காரர்.வெளிநாட்டு கடிதங்களுக்கு AIRMAIL தபால்தலை (Stamp) 11 ரூபாயாக இருந்தபோது, வெரும் 3 ரூபாய் கொடுத்தால் கொரியரைவிட விரைவாகச் சேர்க்கும் தொழில் நுட்பத்தை அறிந்து, குறைந்தபட்ச எழுத்தறிவு இருந்தாலேபோதும் உள்ளூரில் உழைக்கமுடியும் என்பதற்கு உதாரணமாக விளங்கியவர். 

புதிய வடிவில் செக்கடி குளம்

அதிரையின் முக்கிய அடையாளமாக திகழும் செக்கடி குளம் தற்போது தூர்வாரப்பட்டு குளம் மேல் பகுதியில் 5 டிராக்டர் மூலம்  மண்கள் கொட்டப்பட்டு  நடைமேடை  அமைக்கும் பணி நடைபெற வருகிறது.காலையில் நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தொலைதூரம் சென்று நடைபயிற்சி மேற்கொள்ளும் போது ஒரு சில இன்னல்களை சந்திக்கின்றனர்.இதனை கருத்தில்கொண்டு குளம் மேல் பகுதியில் நடைபாதை மற்றும் குளம் சீரமைப்புகள் நடைபெற்று வருகிறது.  

முஷ் கிச்சன் - ஜல் புரோட்டா (ஜால்ரா புரோட்டா)

 உங்கள் முஷ் கிச்சனின் இன்றைய ஸ்பெஷல் ரஷ்பி ஜல் புரோட்டா ( ஜால்ரா புரோட்டா )

தஞ்சை ரயில்வே மேம்பாலம் - வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் திறந்து வைத்தார்!

தஞ்சை - நாகை பைபாஸ் சாலையில் ரூ.27 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை சென்னை தலைமை செயலகத்திலிருந்து வீடியோ கான்பரன்சிங்கிலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து தஞ்சையில் இப்பாலத்தில் கலெக்டர் சுப்பையன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் எம்பி பரசுராமன், எம்எல்ஏக்கள் தஞ்சை ரங்கசாமி, திருவை யாறு ரத்தினசாமி, பாப நா சம் துரைக்கண்ணு, மாநகர மேயர் சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சி தலை வர் அமுதா ராணி ரவிச்சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம், மாவட்ட பால் கூட்டுறவு சங்க தலைவர் காந்தி, மொத்த கூட்டுறவு பண்டக சாலை தலைவர் பண்டரிநாதன், துணைத்தலைவர் வேங்கை.கணேசன், துணை மேயர் மணிகண்டன், முன் னாள் எம்எல்ஏ பஞ்சவர்ணம், நிக்கல்சன் வங்கி துணைத்தலைவர் புண்ணியமூர்த்தி, நகர நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், அரசு வழக்கறிஞர் தங்கப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் குருசேவ், கோட்ட பொறியாளர் வளர் மதி, உதவி கோட்ட பொறி யாளர் மணிவண்ணன் கலந்து கொண்டனர்.

Thursday, August 28, 2014

சனிக்கிழமை திருச்சி விமான நிலையம் மூலம் துபாய் செல்பவர்கள் கவனத்திற்கு

அதிரையிளுருந்து நாளை மறுதினம் சனிக்கிழமை (30-08-14) துபாய் செல்வதற்காக காலை  திருச்சி விமான நிலையத்திற்கு நமது ஊர் சகோதரர் செல்கிறார்.அவருடன் இணைந்து திருச்சி விமான நிலையம்  செல்பவர்கள் கிழ்காணும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

ஷேக் அப்துல் காதர் 8870932369 

https://www.facebook.com/adiraixpress

அதிரை அருகே 4ஆசிரியர்கள் சென்ற வாகனம் விபத்து

அதிரை to பட்டுகோட்டை செல்லும் வழியான முதல்ச்சேரி  அருகே ராஜாமடம் அண்ணா பல்கலைகழக ஆசிரியர்கள் நான்கு பேர் சென்ற காரும் எதிரே வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.  இதில் ஆசிரியர்களுக்கு  காயம் எதுவும் ஏற்படவில்லை .

இந்த விபத்து குறித்து விசாரித்ததில் பைக்கில் வந்தவர் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தகவல்&புகைபடம் ஷாகுல் ஹமீது 
AXமுதன்மை செய்தியாளர் 

செக்கடி குளம் தூர்வாரும் பணி மும்முரம்

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் ஆற்று நீர் கடைமடை பகுதிகளின் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் நமது பகுதிக்கு வருகை தரும் ஆற்று நீர் சீராக செல்வதற்கு வாய்க்கால்கள் சீர் செய்யப்பட்டு வருகிறது.மேலும் இன்று காலை முதல் ஜேசிபி இயந்திரம் மூலம் செக்கடி குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.