முதல்வர் பதவியை காலி செய்த 1 ரூபாய்

தமிழக முன்னாள் முதலவர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு வருடத்தில் செப்டம்பர் மாதம் அதிக கசப்பான மாதமாக இருக்க கூடும்.அந்த வகையில் இதே செப்டம்பர் மாதம் தான் டான்சி நில வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஜெ அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.பிறகு குற்ற வழக்குகளை எதிர்த்து வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதலவர் ஆனார் ஜெ .
இப்போது உள்ள சொத்து குவிப்பு வழக்கின் முக்கிய காரணமாக 1 ருபாய் திகழ்ந்தது. மாதம் 1 ருபாய் சம்பளம் பெரும் முதலவர் 5 வருடத்தில் 60 ருபாய் தானே இருக்கும் ஆனால் 66 கோடி மதிப்பில் சொத்து சேர்த்தது எப்படி? என்று சுப்பிரமணி சுவாமியால் போடப்பட்ட வழக்கு.அதனை திமுக இருக்கி பற்றிக்கொண்டு 18 வருடம் மெதுவாக கொண்டு சென்று நீதிக்கு பெயர் பெற்ற மைக்கல் டி குன்ஹாவிடம் ஒப்படைத்தது.

பிறகு என்ன குன்ஹாக்கு முன் நிறுத்தப்பட்டார் ஜெ, விசாரணை துவங்கிய 15 நிமிடத்தில் ஜெ குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை ,100 கோடி அபராதம் என்று தீர்ப்பை சொல்லி இந்திய அரசியல் வாதிகளுக்கு ஒரு பாடமாகவும் எச்சரிக்கையாகவும் அமைந்தது இந்த தீர்ப்பு.  

----முபீன் 
Share:

அதிரையில் வெளுத்து கட்டிய மழை

அதிரையில் தற்போது 3 நாட்களாக மிதமான மழை பெய்து வரும் நிலையில் இன்று காலை சுமார் 10.00  மணியளவில் இருந்து 12.30 மணி வரை பலத்த மழை பெய்தது.தற்போது தொடர்ந்து மழை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Share:

சேக்காமரைக்காயர் உடலுக்கு பிறை கொடி போர்த்தி இரங்கல்!

நகர முஸ்லீம் லீக் பிரமுகர் சேக்காமரைக்காயர் இன்று அதிகாலை காலமானார். இந்த செய்தியை அறிந்த பலரும் மறைந்த அன்னாரின் இல்லத்தற்கு சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
இந்நிலையில் மாநில துணை தலைவர் SSB நசுருதீன் அவர்களின் தலைமையில் ஏராளமான முஸ்லீம் லீகர்கள் சேக்காமரைக்காயர் உடலுக்கு பிறை கொடி போர்த்தினர். இந்த நிகழ்ச்சியில் நகர முஸ்லீம் லீக் தலைவர் KK ஹாஜா நஜ்முதீன் , மதுக்கூர் முஸ்லீம் லீக் தலைவர் , கவிஞர் தாஹா , ஷேக் அப்துல்லா நகர இளைஞரணி செயலளார் இதிரிஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர் . முன்னதாக இவரின் மறைவையொட்டி முஸ்லீம் லீகின் கொடிகள் அறைகம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது . 
Share:

அதிரையில் குர்பானி ஆடுகள் கிடு கிடு விலை உயர்வு

அதிரையில் ஹஜ் பெருநாளில் ஆடு குர்பானி அதிகளவில் குறிப்பாக ஒரு வீட்டிற்க்கு 2 அல்லது மூன்று ஆடுகள் குர்பானி கொடுப்பது வழக்கமாக இருந்த நிலையில் இந்த வருடம் குர்பானி ஆடுகளின் விலை உயர்வால் குர்பானி ஆடுகள் கொடுப்பவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து இருப்பதாக கூறபடுகிறது.
ஒரு ஆட்டின் விலை சராசரியாக 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை விற்க்கப்படுகிறது.இதனால் பெரும்பான்மையான அதிரையர்கள் கூட்டு குர்பானியை விரும்புகின்றனர். 

Share:

மறைந்த சேக்கா மரைக்காயர் வீட்டிற்கு முஸ்லீம்லீக்கர்கள் நேரில் சென்று இரங்கல் !

அதிரை ஆலடி தெருவை சேர்ந்தவர் ஹாஜி .ஜனாப் சேக்கா மரைக்காயர். 

அதிரையில் தொழில் செய்து வளர்ந்தவரும் பொதுமக்களிடையே நன்கு அறிமுகமானவ்ருமான  இவர்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் தன்னை இணைத்து கொண்ட நாள் முதல் அதன் வளர்ச்சிக்காவும் .முஸ்லிம் லீக்கின் தின ஏடான மணிச்சுடர் பத்திரிக்கையை அதிரை நகர் முழுவதும் அறிமுகம் செய்து வைத்து விநியோகம் செய்துவந்தவர் ஆவார்.

இவர் நீண்ட காலமாக நன்கு ஆரோக்கியத்துடனே இருந்து வந்த  இவர் சமிப காலத்திற்கு முன்பு உடல் நல குறைவால் நடம்மாட்டம் இன்றி வீட்டிலேயே முடங்கினார் .

இருப்பினும் தனது  தள்ளாத வயதிலும் மணிச்சுடர் பத்திரிக்கையை தனது உறவினர்களிடம் படித்துகாட்ட சொல்லி செய்திகளை தெரிந்து கொள்வார்.

முன்பு ஒரு காலத்தில் மணிச்சுடர் விநியோகிக்கும்  ஊழியர் வராத காலத்திலும் கூட இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று வீடு வீடாக விநியோகித்தவர்.

இந்நிலையில் சேக்கா மரைக்காயர் அவர்கள்  இன்றுகாலை எதிர்பாராத விதமாக இறைவனடி சேர்ந்தார் . இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

மறைந்த அன்னாரை அதிரையின் உள்ள முஸ்லீம்லீக்கர்கள் மட்டுமின்றி அனைவரும் அவரை தியாகி என்றே செல்லமாக அழைத்து வந்தனர் என்பது குறிப்படத்தக்கது .

இவரின் இழப்பு முஸ்லீம் லீக்கிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என அதிரை நகர முஸ்லீம் லீக்கின் தலைவர் கேகே ஹாஜா நஜ்முதீன் தெரிவித்தார். மேலும் இவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்திற்கு அழகிய பொறுமையை வழங்கிட தாம் இறைவனிடம் பிரார்த்திப்பதாக தெரிவித்தார் .

இதேபோல் நகர முஸ்லீம் லீக்கர்கள் மறைந்த அன்னாரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதனிடையே சேக்கா மரைக்காயர் அவர்களின் மருமகனார் அஸ்ரப்பை தொடர்பு கொண்ட மாநில முஸ்லீம் லீகின் தலைவரும் தேசிய செயலாளருமான காதர் முகைதீன் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்ரகுமான் மாநில பொது  செயலாளர் அபூபக்கர் , மணிச்சுடர் ஆசிரியர் காயல் மகபூப் , உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் தொடர்புகொண்டு தங்களது இரங்கலை தெரிவித்து கொண்டனர் .


Share:

மரண அறிவிப்பு


ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.அ.மு.அப்துல் வஹாப் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் அன்வர்தீன் அகமது கபீர், ஆகியோரின் சகோதரரும், ஹாஜி ஜனாப்.அப்துல் வஹாப், அப்துல் அஜீஸ் ஆகியோரின் தகப்பனாரும், அகமது அஷ்ரப் அவர்களின் மாமனாருமான  ஹாஜி செ.அ.மு. சேக்கா மரைக்காயர் அவர்கள் இன்று காலை வபாத்தாகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Share:

ஜெ, தீர்ப்பை கண்டித்து தஞ்சையில் உண்ணாவிரதம் -அதிரை அதிமுக பிரமுகர் பலி

அதிரை பிள்ளையார் கோவில் தெரு மன்னபாங் குளம் தென்கரை பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 55)இவர் கம்பி கட்டும் வேலை (சென்ட்ரிங்)செய்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவிற்கு (முன்னாள் முதல்வர்) அவர்களை குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியது குன்ஹா தலைமையிலான நீதிமன்றம்.
இந்த தீர்ப்பின் எதிரொலியாக தமிழகத்தில் பல் வேறு பகுதிகளில் போராட்டங்கள் கடையடைப்பு போன்றவைகள் நடந்தன.இது தொடர்ச்சியாக  தமிழகம் முழுவதும் திங்கள்கிழமையான இன்றும் உண்ணாவிரதம்  நடைபெற்று வந்த நிலையில் தஞ்சையிலும் நடைபெற்றது.
இதில் அதிரையில் இருந்து அதிமுக தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.அப்போது உண்ணாவிரதம் முடியும் நேரத்தில் தஞ்சை ஆற்று பாலம் அருகில் 3 அதிமுக தொண்டர்கள் எதிர்பாராத விதமாக பாலத்தில் விழுந்ததில் அதிரையை சேர்ந்த அதிமுக பிரமுகர் மணி பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் 2 பேர் காப்பாற்றப்பட்டு தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.    

தகவல்:OKM சமீர்   

Share:

நாளைய தமிழ்நாடு? தீர்ப்பும் எதிர்பார்ப்பும்


நேற்று ஜெயலலிதாவிற்கு வழங்கபட்ட தீர்ப்பு காலம்கடந்து வந்திருந்தாலும் சரிந்துகொண்டிருந்த இந்திய சட்டத்தின் மதிப்பை சிறிது கூட்டியது. 

தீர்ப்பின் விளைவு:-

இந்த தீர்ப்பு அதன் எதிர்கட்சியும் எதிரி கட்சியுமான திமுகவிற்கு கூட அதிகப்படியான சந்தோசத்தை ஏற்படுத்தவில்லை அதற்கு காரணம் அடுத்து நாம்தான் என்பதாலோ என்னவோ?
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த வரை அக்கட்சிக்கு ஜால்ரா சால்ஜாப்பு செய்து திமுகவுக்கு எதிரான வழக்குகளின் தீவிரத்தை குறைத்தார் கலைஞர். 

அதேபோல் மூன்று வருஷமாக முயற்சி செய்து மங்கள்யான் விண்கலத்தை நிலைநிறுத்தியதற்கு, ஆட்சிக்கு வந்து நூறுநாள் ஆன பாஜகவின் மோடியை வாழ்த்தினார் கலைஞர். 

காங்கிரஸ் மீது ஏற்பட்ட பிணக்கமும் திமுக மீதுள்ள ஊழல் வழக்குகள் மீதான பயத்தையே இது காட்டியது. 

இவ்வாறாக அதிமுக, மோடி ஆட்சிக்கு மங்களம் பாடியிருந்தால் ஒருவேளை ஜெயலலிதா மீதான தீர்ப்பு இன்னும் சிலகாலத்திற்கு தள்ளிபோயிருக்கலாம். 

‪‎யாருக்கு லாபம்‬?

இத்தீர்ப்பினால் மற்ற எல்லா கட்சியை விடவும் சந்தோசத்தோடு அதிக எதிர்பார்ப்பை
எதிர்பார்ப்பது ‪ பாஜக‬ வே. காரணம் மதவெறியூட்டும் விஷம பிரச்சாரத்தினால்
கலவரங்களை ஏற்படுத்தி அதில் குளிர்காய்ந்து வடமாநிலங்களில் கோலோச்சிய சங்பரிவார கட்சியும்,இயக்கங்களும் தமிழ்நாட்டில் தலையெடுக்க முடியாமலே போயின. அதற்கு தடையாய் திராவிட இயக்கங்கள், தமிழின அமைப்புகள்,சில கட்சிகள் இருந்தாலும் மிகப்பெரும் தடையாக திமுக,அதிமுக இருந்தன. 

‪தேர்தல்களும் திராவிட கட்சிகளும்‬:-
முன்கால தேர்தல்களில் மத்தியில் ஆட்சி கூட்டுக்காக பாஜகவை திமுக, அதிமுக ஆதரித்தாலும்,, மாநில அரசியலில் தேசிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி தங்களையே மக்கள் மத்தியில் முன்னிலைபடுத்திக்கொண்டனர்.  அதனால்தான் காமராஜர்,மூப்பனாருக்கு பிறகு காங்கிரஸ் கட்சி பலமிழந்தும்,  பாஜக தமிழ்நாட்டில் அட்ரஸே இல்லாமலும் போயின.
இதில் பலராலும் ஒரு மாற்றாக எதிர்பார்கபட்ட தேமுதிக‬ திறமையான தலைமையின்மையாலும், தெளிவான எதிர்கால சிந்தனையின்மையாலும் மக்களால் மறக்கபட்டனர். 

தமிழ்நாட்டு அரசியலில் திமுக, அதிமுகவுக்கு மாற்றே இல்லை எனும் நிலையில் சட்டமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைத்த ‪திமுக‬, ‪அதிமுக‬ அணியிடம் மண்ணை கவ்வியது. அதற்கு பிறகான பாராளுமன்ற தேர்தலில் திமுக சில கட்சிகளோடு கூட்டணியும், மூன்றாவது பலமான மாநில கட்சியாக கருதப்பட்ட தேமுதிகவோடு இன்னும் சில கட்சிகளையும் ஒன்றிணைத்து‪ மிக பலமான‬ கூட்டணியுடன் பாஜக களமிறங்கியது.

ஆனால் அதிமுக தனித்தே போட்டியிட்டது. அந்த தேர்தலில் தன் தகிடுதத்தங்களால் வடநிலங்களில் மோடி தலைமையிலான பாஜக அரசு பெரும்பான்மையாய் வெற்றிபெற்றாலும் தமிழக அளவில் ஒரேஒரு Mp தொகுதியையே தேசியகட்சியான பாஜகவால் கைபற்ற முடிந்தது. 

பெருவாரியான தொகுதிகளை அதிமுக கைபற்றி தன்னை தமிழகத்தில் அசைக்க முடியாத கட்சியாக வெளிப்படுத்தியது.
இது பாஜகவுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
‪‎அண்ணண் எப்போ சாவான்‬?‪‎திண்ணை எப்போ காலியாகும்‬? என்று சங்பரிவார இயக்கங்கள் தமிழகத்தை நோக்கி தன் பார்வையை செலுத்திக்கொண்டிருந்த வேளையில்தான் ஜெயலலிதாவின் தீர்ப்பு பற்றிய செய்தி இனிப்பாக வந்திறங்கியது சங்பரிவாரங்களுக்கு.

‪‎உள்ளாட்சி தேர்லும் பாஜகவின் முன்னறிவிப்பும்‬:-

சிலநாட்களுக்கு முன்னர் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுகவே வெற்றிபெறும் என உணர்ந்து மாநிலகட்சிகளே தேர்தலைவிட்டு விலகிவிட்டவேளையில் பாஜக போட்டியிட்டது. அடிக்கிறார்கள்,வேட்பாளர்களை விலைக்கு காங்குகிறார்கள் என அதிமுக மீது பலபுகார்கள் அளித்து பாஜக கூவிய போதிலும் அதிமுகவே பெருபான்மையிடத்தில் வென்று பாஜகவின் முகத்தில் கரியை பூசியது.  எனினும் அதிமுகவிற்கு அடுத்து தமிழகத்தில்  சக்திவாய்ந்த கட்சி பிஜேபிதான் என வெட்கமே இல்லாமல்  தமிழிசை புழுகும்போதே சந்தேகம் எழுந்தது. ரஜினி புதிய கட்சி தொடங்கபோவதாக வந்த செய்தி,  தமிழகத்தில் பிஜேபியே அதிமுகவிற்கு எதிரான மாற்று சக்தி என்ற செய்திகளுக்கும், 18 வருடமாக இழுத்தடிப்புடன் நடைபெற்ற ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கும் தொடர்பு இருப்பதாகவே அரசியல் விமர்சகர்களுக்கு படுகிறது.

‪‎பாஜகவின் பகல்கனவும் நாம் செய்ய வேண்டியதும்‬:-

இந்த தீர்ப்பை வைத்து திமுகவை பயம்காட்டி, அதிமுகவை டம்மியாக்கி தமிழகத்தில் கால்பதித்துவிடலாம் என்ற சங்பரிவாரங்களின் பகல்கனவை முறியடிக்க, இனியாவது நேர்மையாக நடந்து மக்களிடம் நன்மதிப்பை பெற மாநிலகட்சிகள் முற்படுவதும், தமிழ்,தமிழர்,திராவிடம்,தமிழ்தேசியம் பேசும் கட்சிகளும் இயக்கங்களும் தங்களுக்குள் சண்டையிடாமல் விழிப்போடு இருக்க வேண்டும்.

மக்களை பிரிக்க நினைக்கும் கட்சிகளை இனம்கண்டு தமிழகத்தில் கால்பதிக்கவிடாமல் தன் வாக்குகளால் துரத்துவது தமிழகமக்களின் கடமையும்கூட !  நடக்குமா?

அதிரை உபயா

Share:

மக்கா மற்றும் மதினாவின் பாதுக்காப்பு பற்றிய காணொளி !


பல லட்சம் மக்கள் கூடும் மக்கா மற்றும் மதினாவில் அந்நாட்டு நிர்வாகம் எவ்வாறு பாதுக்கப்பு பணிகளை செய்கிறது என்பதை சமிபத்தில் டிஸ்கவரி தொலைகாட்சி ஆவணபடுத்தியது .அதனை நமது அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களின் பார்வைக்கு தர வேண்டும் என்பதநோக்கமாக கொண்டு பதியப்பட்டுள்ளது .

Share:

தொடரும் டீ கடை செண்டிமெண்ட் - பி எம் டூ ஓ பி

 ஒரு வார்த்தையால் பெரும் மாற்றத்தை கண்ட இந்திய நாடு.ஆம் சில மாதங்களுக்கு முன்னாள் காங்கிரஸ் ஆட்சியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளாராக அறிவித்தை கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சியினர் "ஒரு சாதாரண டீ கடை காரர் பிரதமர் ஆவதா" என்று கேலி செய்தனர்.அந்த வார்த்தை இந்தியாவில் உள்ள மூளை முடுக்கு சந்து பொந்துகளிலும் கூட எதிரொலித்தது.இந்த கிண்டல் வார்த்தை பிரதமர் மோடிக்கு அனுதாப அலையாக மாறியது.
அதுபோல் நமது தமிழ்நாடு புதிய முதல்வராக பதவி ஏற்று இருக்கும் மாண்பு மிகு ஓ.பன்னீர் செல்வம் கூட ஒரு டீ கடை நடத்தி வந்தவர் தான்.அவரது வாழ்க்கை மிகவும் எளிமையான முறையில் துவங்கி தற்போது பிரமாண்டமாக உள்ளது.இவரது பணிவும்,அடக்கமும் இவரை முதல்வர் என்கின்ற அரிய சிம்மாசனத்தில் உட்கார வைத்து இருக்கிறது.

இனி வரும் காலங்களில் டீ கடை வைத்து இருந்தாலும் சரி  டிப்பன் கடை வைத்து இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் உயர்ந்த பதவிக்கு வரலாம் என்பதை தற்போதை காலம் நமக்கு உணர்த்துகிறது. 

----முபீன் 

Share:

காலாண்டு தேர்வு விடுமுறை -அதிரையில் குவியும் சென்னை வாழ் அதிரை வாசிகள்

தமிழக முழுவதும் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் எதிர் வரும் ஹஜ் பெருநாளை ஊரில் கொண்டாடும் விதமாக சென்னை வாழ் அதிரை வாசிகள் அதிரையில் வர துவங்கிவிட்டனர்.
மேலும் ஜெ சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பின் எதிரொலியாக கடந்த சனிக்கிழமை அன்று போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் நிலைமை சீராக வந்த நிலையில் சென்னை வாழ் அதிரை வாசிகளின் வருகை அதிகரித்து உள்ளது. 
Share:

(தீ)ர்ப்பு !

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரில் தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நேற்று முன்தினம் கூறப்பட்டது. அந்த தீர்ப்பில் ஜெயலிதா உள்ளிட்ட நால்வருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த பெண்கள் அழுதபடியே தரையில் உருண்டனர். இந்நிலையில் ஜெயலிதாவின் தீர்ப்பை எதிர்த்து கடலூரில் அதிமுக தொண்டர் பாலகிருஷ்ணன் என்பவர் தீக்குளித்து 65% தீக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். 

இதேபோல் திருச்சியை அடுத்த லால்குடியில் 19 வயது நிரம்பிய பள்ளி மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார் . மேலும் தமிழகத்தில் இந்த தீர்ப்பின் எதிரொலியாக இதுவரை பதினான்கிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படம் : சோசியல் மீடியா மணி.

யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Share:

அதிரையில் முற்றுகை போராட்டம்


Share:

அதிரையில் நாளையதினம் மின் தடை


அதிரை மின்சார வாரியத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (30-09-14) செவ்வாய்கிழமை அன்று காலை 9 முதல் மாலை 6.00 மணி வரை நடக்கிறது. இதனால் அதிரை சுற்று வட்டார பகுதிகளில் நாளை ஒரு நாள் மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரிய அதிகாரிகளால் கூறப்படுகிறது. வாசகர்கள் கவனத்திற்கு :இந்த செய்தி பதிவின் நோக்கம் மின்சாரத்தை பற்றி கேலி பின்னோட்டம் இடுவதற்கு அல்ல. அதிரை மக்கள் முன் ஏற்பாடாக தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் பார்த்து கொள்வதற்கு. 


Share:

இறுதி கட்ட அதிரை ஹஜ் பயணிகள் பயணம்

அதிரையில் இருந்து 5 கட்டமாக ஹஜ் பயணிகள் சென்று வரும் நிலையில் இறுதி கட்டமாக சென்னையில் இருந்து 30க்கும் மேற்பட்ட அதிரை ஹஜ் பயணிகள் இன்று மாலை மக்காவுக்கு விமானம் மூலம் பயணம் செய்து உள்ளனர். 


Share:

அதிரையில் பெய்த மழையின் வீடியோ காணொளி


அதிரையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக நள்ளிரவுகளில் இடியுடன் பலத்த மழை பெய்து வந்த நிலையில் சற்று முன் மாலை நேரம் சுமார் 6.30 மணிக்கு நல்ல மழை பெய்தது. மேலும் தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Share:

அதிரையில் 2வது நாளாக மழை


அதிரையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக நள்ளிரவுகளில் இடியுடன் பலத்த மழை பெய்து வந்த நிலையில் தற்போது மிதமாக மழை பெய்து வருகிறது.தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


Share:

FLASH NEWS: ஓ பன்னீர் செல்வம் முதலமைச்சராக தேர்வு!தமிழக முதலமைச்சராக ஒ பன்னீர் செல்வம் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் . சற்றுமுன் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் சென்னையில்  நடைபெற்றது இதில் நிதியமைச்சர் பன்னீர் செல்வத்தை முதலமைச்சராக நியமித்துள்ளனர் . இவர் நாளைகாலை முதல்வராக பதவி ஏற்பார் . என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .
Share:

ஜெ, தீர்ப்பை வசமாக பயன்படுத்திகொண்ட கார் வேன் ஓட்டுனர்கள் !

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்து கர்நாடக மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் . இதை அடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. 

இதனால் தமிழகத்தின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதுடன் பொதுமக்களும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகினர் . இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்தும் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இன்று இரவு சிறப்பு விமானம் செல்ல உள்ளது ஆனால் நேற்றிரவு அனைத்து பேருந்துகளும் தடை பட்டதால் அதிர்ச்சியடைந்த புனித பயணிகள் ஊரில் உள்ள கார் வேன்களை நாடினர் இதனை வசமாக பயன்படுத்திகொண்ட ஓட்டுனர்கள் அதிகளவு கட்டனங்கள் வசூல் செய்து உள்ளனர். அந்த வகையில் அதிரையில் இருந்து புறப்பட்ட வாகனங்களும் இதிலிருந்து தப்பவில்லை . 
Share:

அதிரையில் மின் கசிவு -பொருட்கள் சேதம்


அதிரையில் நேற்று நள்ளிரவு பெய்த பலத்த மழை காரணமாக போஸ்ட் ஆபிஸ் பகுதியில் அமைந்து இருக்கும் B S N கம்யூனிகேஷன் என்கின்ற கடையில் மின் கசிவு ஏற்பட்டு பொருட்கள் எரிந்து நாசமாகின.

மேலும் அருகில் உள்ள பல கடைகளில் உயர் மின் அழுத்தம் காரணமாக மின் விசிறி,மின் விளக்குகள் பலது ஏற்பட்டு உள்ளது.   

Share:

அதிரையில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் மழை


அதிரையில் தற்போது இரண்டு நாட்களாக இரவில் நல்ல மழை வருகிறது.இன்று நள்ளிரவு 2.30 மணிக்கு துவங்கி சுமார் ஒரு மணி நேரம் பலத்த இடி காற்றுடன் மழை பெய்தது.
இதனால் அதிரையில் பல இடங்களில் மரங்கள் விழுந்து உள்ளது.  மேலும் தொடர்ந்து மழை வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.   
Share:

இயல்பு நிலைக்கு திரும்பிய அதிரை ....

அதிமுக பொது செயலர் ஜெயலலிதா அவர்களுக்கு எதிரான தீர்ப்பை கண்டு அதிமுக கட்சியினர் அதிர்ச்சி அடைந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் மற்றும் உருவ பொம்மை எரிப்பில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து அதிரையிலும் மாலை 3 மணியளவில் அதிமுக கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் உருவ பொம்மையை எரித்தனர்.முக்கிய விதிகளில் உள்ள கடைகளை அடைக்க வற்புற்த்தினர்.இதனால் அதிரையின் முக்கிய பகுதிகளான கடைதெரு,பேருந்து நிலையம்,சேர்மன் வாடி,வண்டிப்பேட்டை போன்ற பகுதிகள் மிகுந்த பதற்றதுடன் காணப்பட்ட நிலையில் தற்போது முதல் பதற்றம் குறைந்து அதிரை பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியது.    


Share:

அதிரையிலுருந்து சென்னை செல்லும் தினசரி பேருந்துகள் நிறுத்தம்

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வழங்கி 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.மேலும் தமிழக முழுவதும் அதிமுகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் தமிழகம் முழுவதும் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது.
மேலும் அதிரையிளுருந்து தினசரி சென்னை செல்லும் ஆம்னி பேருந்துகளான ரஹ்மத்,ராஹத்,யாஸ்மின் போன்ற பேருந்துகள் இன்று இயக்காமல் நிறுத்தப்பட்டு உள்ளது.அதுபோல் சென்னையிளுருந்து அதிரை செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு உள்ளது.      
Share:

அதிரையில் வெறிச்சோடிக் கிடக்கும் வீதிகள் - கடைகள் அடைப்பு!

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வழங்கி 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.மேலும் தமிழக முழுவதும் அதிமுகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிரையிலும் தொடர்ந்து போராட்டம் ,முழு கடையைப்பு மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால் தற்போது அதிரை பேருந்து நிலையம் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி இருக்கிறது.


Share:

18 ஆண்டுகள் இழுத்தடித்து கடுமையான நீதிபதியிடம் தானே மாட்டிக் கொண்ட ஜெ


சொத்துக் குவிப்பு வழக்கை 18 ஆண்டுகளாக எவ்வளவு இழுத்தடிக்க முடியுமோ இழுத்தடித்த ஜெயலலிதா, தம் மீதான தீர்ப்பு மிகக் கடுமை காட்டக் கூடிய ஒரு நீதிபதியிடம் சிக்கும் என்று அவரே நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு போடப்பட்டு 18 ஆண்டுகளாகிவிட்டது. 

ஆனால் எத்தனை வாய்ப்புகள் இருக்கிறதோ அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி இந்த வழக்கை இழுத்தடித்தது ஜெயலலிதா தரப்பு. ஒவ்வொருமுறையும் சிறப்பு நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று மாற்றி மாற்றி வழக்குப் போட்டு இழுத்தடித்துப் பார்த்தார். அட தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட எத்தனையோ மனுக்களைத் தாக்கல் செய்துப் போட்டுவிட்டார். 

உச்சநீதிமன்றத்தில் நேற்றும் கூட ஒரு வழக்கைப் போட்டு தீர்ப்பை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் பார்த்தது ஜெயலலிதா தரப்பு. ஆனால் எதுவும் நடைபெறவில்லை. இத்தனை போராட்டத்துக்கும் இழுத்தடிப்புக்கும் பயனில்லாமல் ஊழல் வழக்குகளில் மிகக் கடுமையான தீர்ப்பளிக்கக் கூடிய நீதிபதி குன்காவிடம் போய் தானே சிக்கி, தற்போது 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஒரு தீர்ப்பை ஜெயலலிதாவே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. 

Share:

அதிரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் (வீடியோ காணொளி)

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது இதில் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுகவினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டு வருவதை தொடர்ந்து தற்போது அதிரையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
Share:

அதிரையில் கருணாநிதியின் உருவபொம்மை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் !

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது இதில் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுகவினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் ஈடு பட்டு வருகின்றனர் . 
இதேபோல் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவின போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டுகோட்டையில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பஸ்சுக்காக காத்தருந்த அதிரையர்கள் பெண்கள் உட்பட அனைவரையும் ஆட்டோக்கள் மூலம் சமூக ஆர்வலர் ஒருவர் ஊருக்கு அனுப்பிவைத்தார்.
Share:

ஜெ தீர்ப்பு எதிரொலி!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை !


சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வெளியானது இதனை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை நடைபெற்று வருகிறது . குறிப்பாக மதுரையில் கலவரம் பூண்டுள்ளது இதில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது . சென்னையில் பெருமபாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன . முன்னால முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டை கல்வேஏய் தாக்குதலில் ஈடுபட்டனர் அதிரையர்கள் அதிகம் வசிக்கும் மண்ணடியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது . 
Share:

ஜெ தீர்ப்பு எதிரொலி- அதிரை பகுதியில் மின் துண்டிப்பு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமனறத்தில் கடந்த 18ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில் தற்போது குற்றவாளி என்று தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில் அசம்  பாவிதங்கள்\ ஏதும் நடைபெறாமல் இருக்கும் வண்ணமாக அதிரை பகுதி முழுவதும் ம்ன்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. 
Share:

ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு --3ஆண்டுகள் சிறை ?


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமனறத்தில் கடந்த 18ஆண்டுகளாக நடைபெற்று வந்தன இந்நிலையில் இந்த வழக்கு மீதான தீர்ப்பு இன்று வழங்கபடும் என பெங்களூரு நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை 8.40 மணியளவில் பெங்களூருக்கு தனி விமானம் மூலம் பெங்களூர் சென்றார் இதனை அடுத்து இன்று காலை 11மணியளவில் தீர்ப்பு வழங்கபடும் என செய்திகள் வெளியானது ஆனால் நீரம் தளத்தி சற்று முன்னர் இந்த வழக்கு மீதான தீப்பை நீதிபதி வழங்கினார் அதில் ஜெயலலிதா குற்றவாளி என்றும் . மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது .


Share:

தமிழகத்தில் பல்வேறு பகுதியில் கலைஞர்,ஸ்டாலின் உருவ பொம்மை எரிப்பு


தமிழக முதல்வர் மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 3.00 மணிக்கு அறிவிக்கப்படும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் கலைஞர்,ஸ்டாலின் உருவ பொம்மையை அதிமுகவினர் எரிப்பதாக தகவல்கள் வெளியாகின்றனர்.இந்நிலையில் திமுகவின் உயர்மட்ட குழு தற்போது சென்னையில் கூட இருக்கிறது.     

Share:

ஜெ வழக்கு -அதிரையர்களுக்கு அவசர வேண்டுகோள்....

இன்னும்சில நிமிடங்களில் ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது எனவே இதனை அடுத்து சட்ட சிக்கல்கள் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன எனவே பெருநாளை கொண்டாட பொருட்கள் வாங்க வெளி  ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ள படுகிறார்கள் .


Share:

ஜெயலலிதாவை குற்றவாளியாக அறிவித்ததாக செய்தி ஒளிபரப்பும் கன்னட சேனல்கள்

சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கபட்டுள்ளதாக கன்னட தொலைகாட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது . ஜெயலலிதா கோர்ட்டுக்குள் காலை 11 மணிக்கு சென்றார். இந்நிலையில், சிறிது நேரத்திலேயே தீர்ப்பு வாசிக்கப்பட்டுவிட்டதாகவும், அதில் ஜெயலலிதா மீது சட்டப் பிரிவு 13 (1) இ படி குற்றவாளி என நீதிபதி அறிவித்ததாகவும் கன்னட சேனல்களில் செய்தி ஒளிபரப்பாகிறது.கோர்ட் வட்டார தகவல்கள் தெரிவித்ததாக கன்னட டிவி சேனல்களில் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே ஜெயலலிதாவின் காரில் உள்ள தேசிய கொடி அகற்றப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

ஸ்வீட் எடு கொண்டாடு ?


தமிழக முதல்வர் மீது சொத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று மதியம் வர விருக்கும் நிலையில் அதிமுக தொண்டர்கள் தீர்ப்புக்கு முன்பே சென்னையில் ஸ்வீட் கொடுத்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுகவினரின் ஒரு பிரிவினர் தீர்ப்புக்கு பின்பே இனிப்பு என்ற கொள்கையில் உறுதியாக உள்ளனர் . அதன்படி நமது காமிராவின் கண்ணில் பட்ட காட்சி இதோ...


Share: