Friday, October 31, 2014

மன்னப்பாங் குளம் தூர் வாரும் பணி மும்முரம்

 அதிரை குளங்களுக்கு ஆற்று நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் கருவேல் மரத்தால் காடு மண்டி கிடக்கும் மன்னபாங் குளத்தை அதிரை பேரூர் நிர்வாகம் சார்பில் காடுகள் அழிக்கப்பட்டு தூர் வாரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.மேலும் பணி முடிந்து ஆற்று நீர் திறந்து விடப்படும் என்று பேருராட்சி நிர்வாகிகள் தெருவித்தனர்.அதிரை குளங்களுக்கு நீர் நிரப்பும் பணி 2 மாதத்திற்குள் முடிவு அடையும்

அதிரை பேருராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரின் தீவிர முயற்சியில் வீணாக கடலில் கலக்கும் ஆற்று நீரை பம்பிங் முயற்சியில் கருசல் மணி குளத்தில் நிரப்பினர்.இந்நிலையில் இதனை பார்வையிட நேற்று முன்தினம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு சுப்பையன் அதிரைக்கு வருகைதந்தார்.இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு.   


மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் -அதிரையர்கள் பங்கேற்ப்பு


பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் இந்திய நாட்டில் உள்ள கணிம வளங்களை அந்நிய நாட்டின் நிறுவனங்களுக்கு விற்பது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி ஆளும் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தகவல்:சாஜித்  

அதிரை அருகே கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய்கள் அமைக்கும் பணி தீவிரம்

தமிழ்நாடு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அதிரை அருகே உள்ள மதுக்கூர் பகுதியில் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இன்னும் சில தினங்களில் அதிரை பகுதியில் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெறும் என்று அதிகாரிகளால் கூறபடுகிறது.


பாசி பருப்பு கொழுக்கட்டை செய்முறை விளக்கம்

அதிரை முஷ் கிச்சன் வழங்கும் "பாசி பருப்பு கொழுக்கட்டை" செய்வது குறித்து பிரபல சமையல் கலைஞர் நெய்னா அவர்கள் செய்முறை காணொளி விளக்கம் தருகிறார் ...இதோ உங்கள் பார்வைக்கு 

ஜாவியா நிறைவு நாள் -பொதுமக்களுக்கு அழைப்பு
அதிரை அஜ்ஜாவியதுஷ் ஷாதுலியாவில் நடைபெற்று வரும் புஹாரி ஷரிப் மஜ்லிஸ்,இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹிஜ்ரி 1436 முஹர்ரம் மாதம் பிறை 12 வியாழகிழமை (06-11-14 ) சுபுஹு தொழுகைக்குப் பின் திக்ரு மஜ்லிஸ் நிறைவு பெற்றவுடன்,புஹாரி ஷரீப் துவங்கி துஆ ஓதி நிறைவு பெற இருப்பதால் உள்ளூர் வெளியூர் முஸ்லிம் சகோதரர்கள் அனைவரும் தவறாமல் இப்புனிதமிகு மஜ்லிஸில் கலந்து கொண்டு சிறப்பித்து,எல்லாம் வல்ல அல்லாஹுவின் நல் அருளைப் பெற அன்போடு அழைக்கிறோம். 

இப்படிக்கு,

புஹாரி ஷரீப் கமிட்டி 
ஜாவியா பள்ளிவாசல், ஜாவியா ரோடு 
அதிரை 

Thursday, October 30, 2014

அதிரை 8 வது வார்டு பகுதி ஆய்வு

அதிரை 8 வது வார்டு கடற்கரை தெரு பகுதியில் சில நாட்களாக பெய்த மழையால் ஒரு சில பகுதிகள் மழை நீர் தேங்கி  இருப்பதால் வெள்ளம் போல் காட்சி தருகிறது.மேலும் இந்த தண்ணீரால் கொசுக்கள் உர்பத்தி ஆகும் நிலையில் இருந்தது.அதனை வடிகால் அமைக்கவும் மேலும் குப்பைகள் தேங்குவதால் அதனை சுத்தம் செய்வதற்கும் அப்பகுதி இளைஞர்களால் கோரிக்கை மனு வைக்கப்பட்டது.இந்நிலையில் இதனை ஆய்வு செய்வதற்காக அதிரை பேரூர் மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோர் அப்பகுதியில் பார்வையிட்டனர்.


    

அதிரை மரைக்கா குளத்திற்கு ஆற்று நீர் திறப்பு (வீடியோ காணொளி)

அதிரை குளங்களுக்கு ஆற்று நீர் நிரப்பும் முயற்சியில் அதிரை பேரூர் நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில் தாஜுல் இஸ்லாம் சங்க துணை தலைவர் PMK தாஜுதீன் அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க இன்று மதியம் 1.00 மணியளவில் அதிரை பேரூர் மன்ற தலைவர்அஸ்லம் ,துணை தலைவர் பிச்சை,திமுக பிரமுகர் A. அப்துல் அலீம்,அதிமுக பிரமுகர் தமீம்  MM.அப்துல்லா M.பகுருதீன் ஆகியோரின் முன்னிலையில் மரைக்கா குளத்திற்கு ஆற்று நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
அதிரை பேருந்து நிலையம் சாலை சீரமைப்பு

நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான அதிரை பேருந்து நிலையம் ரோடு பகுதியில் குண்டும் குழியுமாக காணப்பட்ட நிலையில் அதிரை பேரூர் நிர்வாகம் சார்பில் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 


தகவல் எமது முதன்மை செய்தியாளர்: ஷாகுல் ஹமீது 

அதிரை முஸ்லிம் லீக் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரம்

அதிரை முஸ்லிம் லீக் கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது.இதில் ஏராளமான பெரியோர்கள்,இளைஞர்கள் ஆர்வமுடன் இக் கட்சியில் உறுப்பினர்களாக சேர்ந்து வருகின்றனர். 


Wednesday, October 29, 2014

கீழக்கரை மாப்பிள்ளை ஆகும் காலிக்


தமிழக சினிமாவில் மிக பிரபலமான இசை அமைப்பாளராக இருந்து வரும் யுவன் சங்கர் ராஜா என்கின்ற அப்துல் ஹாலிக் சில மாதங்களுக்குமுன் இஸ்லாத்தை தழுவினார்.
இவருக்கும் கீழக்கரையை சேர்ந்த ஜப்ருன்னிஸா என்கின்ற பெண்ணிற்கும் டிசம்பர் மாதம் முதல் வாரம் திருமணம் நடைபெற இருக்கிறது. இத் திருமணம் துபையில் நடைபெற இருக்கிறது. மேலும் திருமணம் முடிந்து மணமக்கள் கீழக்கரைக்கு வரவழைக்கப்பட்டு திருமண வலிமா விருந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.   

மன்னப்பாங் குளத்திற்கு ஆற்று நீர் வருகை

அதிரை பகுதியில் வறண்டு கிடக்கும் அணைத்து குளங்களையும் நிரப்பும் முயற்சியில் அதிரை பேரூர் நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது மன்னாபாங் குளத்திற்கு ஆற்று நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
ஆற்று நீர் வருகையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.மேலும் அப்பகுதி நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.   

பலஞ்சுரில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி -அதிரை பிரமுகர்கள் பங்கேற்ப்பு


அதிரையை அடுத்த பலஞ்சுர் ஊராட்சியில் "தூய்மை இந்தியா இயக்கம்" மற்றும் முழு சுகாதார தமிழக இயகத்தின் கீழ் நடத்தப்பட்ட சுகாதார விழிப்புணர்வு, பிளாஸ்டிக் ஒழித்தல் ,வீடு,பள்ளிகளை சுத்தமாக வைத்து கொள்ளுதால்,அணைத்து வீடுகளில் கழிப்பறை அமைதல் மற்றும் பொது சுகாதார விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.இதில் பலஞ்சுர் ஊராட்சி தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அதிரை எவர் கோல்டு காம்ப்ளெக்ஸ் உரிமையாளர் திரு பலஞ்சுர்.செல்வம் ,திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன் கிராம நிர்வாகிகள்,உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அதிரைக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர்


அதிரை சிஎம்பி வாய்கால் புதுப்பித்து தரும்படியும் மற்றும் புதிய சாக்கடை கால்வாய் அமைக்க கோரி நேற்று முன் தினம் அதிரை பேருராட்சி தலைவர் தலைமையில் அப்பகுதி இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர்.

மேலும் வீணாக கடலில் கலக்கும் ஆற்று நீரை பம்பிங் முறையில் கருசல்மணி குளத்திற்கு அதிரை பேரூர் நிர்வாகம் ஆற்று நீரை நிரப்பியது.இந்நிலையில் பம்பிங் முறைக்கு இலவச மின்சாரம் வழங்கும் படி கோரிக்கை வைக்கப்பட்டது. 

இது தொடர்பாக அதிரைக்கு வருகை தந்து ஆய்வு செய்வதாக அறிவித்து இருந்தார்.தற்போது அதனை பார்வையிடுவதற்காக அதிரை பகுதிக்கு இன்று காலை 11.00 மணிக்கு சிஎம்பி வாய்கால்,பம்பிங் முறை ஆகியவற்றை பார்வையிட்டார்.இதில் அதிரை பேருராட்சி தலைவர் அஸ்லம், துணை தலைவர் பிச்சை, வார்டு கவுன்சிலர்கள் இப்ராஹீம்,குமார்,பேருராட்சி நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.        
ஆற்று நீரால் ஜொலிக்கும் செக்கடி குளம்

அதிரை குளங்களுக்கு ஆற்று நீரை நிரப்பும் முயற்சியில் அதிரை பேரூர் நிர்வாகம் செயல்பட்டு வரும் நிலையில் சேண்டா கோட்டை வழியாக ஆற்று நீர் 5 நாட்களாக அதிரை பகுதிக்கு வந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் செக்கடி குளத்திற்கு ஆற்று நீர் திறந்து விடப்பட்டு தற்போது செக்கடி குளம் நிரம்பி கொண்டு இருக்கிறது.குளம் முழுவதும் நீருடன் காணப்படுவதால் செக்கடி பள்ளியின் அழகான தோற்றம் தண்ணீரில் விழுந்து ரம்மியமாக காட்சி தருகிறது.மேலும் குளம் தூர்வாரபட்டு இருப்பதால் மக்தப் செல்லும் குழந்தைகள் குளத்தின் ஓர பகுதியில் நிற்கவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.     

அதிரையில் நீர் மட்டம் உயர்வு

அதிரை பகுதியில் உள்ள குளங்களுக்கு ஆற்று நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்ய துவங்கி உள்ளது.
இதனால் பூமியில் நீர் மட்டம் 150 ஆக இருந்த நிலையில் 90 ஆக உயர்ந்து உள்ளதாக அதிரை பகுதி மக்கள் தெருவிக்கின்றனர்.

அதிக ஹிட் வாங்கிய அதிரையர்களின் குறும்படம் !

அ - திரை குழுமத்தினரால்  வெளியிடப்பட்ட முகங்கள் எனும் குறும்படம் இன்று அதிரையின் அனைத்து முக்கிய வலைப்பூக்களிலும் வெளியிடப்பட்டது .

இதுபோக முகநூல் , டிவிட்டர் , வாட்ஸ் ஆப் , டெலிகிராம் உள்ளிட்ட சமூக தளங்களிலும் வேகமாக பரவி  வருகிறது. இதனால் இந்த படத்தை உருவாக்கியவர்களை நாட்டின்  பல்வேறு பகுதிகளில் வசிக்கும் அதிரையர்கள் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள நன்  மக்கள் பாராட்டி ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளதாக பட குழுவினரில் ஒருவர் தெரிவித்தார். 

மேலும் அவர் தெரிவிக்கையில்... இன்னும்   சமூகத்தில் உள்ள அவலங்களை தத்ரூபமாக தோலுரித்து காட்டபோவதாகவும், இதற்க்கான பணிகளில் ஈடுபட்டு   வருவதாகவும்   தெரிவித்தார்.

உள்ளூரில் உள்ள இதுபோன்ற மீடியா சிந்தனை உள்ள மக்களின் திறமையை கண்டறிந்து பொதுத்தளத்தில் அறிமுகம் செய்திட வேண்டும் என்பதே இன்றைய தேவை !

Tuesday, October 28, 2014

வெள்ளை குளத்திற்கு ஆற்று நீர் வருகை

அதிரை வண்டி பேட்டை பகுதியில் இருக்கும் கருசல் மணி குளம் தற்போது ஆற்று நீரால் நிரம்பி வழிந்து செல்வதால் வெள்ளை குளத்திற்கு ஆற்று நீர் திரும்பி விடப்பட்டு உள்ளது.தற்போது ஆற்று நீர் வாய்கால் அமைக்கும் பணியை அதிரை பேருராட்சி நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.நிரம்பி வழியும் கருசல்மணி குளம் புகைபடங்கள்

அதிரை வண்டிபேட்டை பகுதியில் அமைந்து இருக்கும் கருசல்மணி குளம் பல வருடங்களாக தூர்வாரபடாமல் வறண்ட நிலையில் காணப்பட்ட கருசல்மணி குளத்தை அதிரை பேரூர் நிர்வாகம் சார்பில் தூர்வாரப்பட்டு வீணாக கடலில் கலக்கும் ஆற்று நீரை பம்பிங் மூலம் குளத்தில் ஆற்று நீரை நிரப்பிய நிலையில் காசலா ஏரி யிலருந்து கடலில் கலக்கும் ஆற்றி நீரை வாய்கால் அமைத்துகருசல்மணி குளத்திற்கு நிரப்பியது. இந்நிலையில் தற்போது முழு குளமும் நிறைந்து வெள்ளை குளத்திற்கு ஆற்று நீரை திருப்பி விடப்பட்டு உள்ளது.தற்போது வெள்ள குளம் ஆற்று நீரால் நிரம்பி வருகிறது.

குறிப்பு:நீங்கள் பார்க்கும் இந்த குடிசை பகுதி முழுவதும் ஆக்கிரமிப்புகள்  
தகவல் மற்றும் புகைபடங்கள்:
 எமது முதன்மை செய்தியாளர் ஷாகுல் ஹமீது  

நடிகர் விவேக்குடன் அதிரையர் சந்திப்பு

சென்ற ஞாயிறு கலிபோர்னியா மாகாண ஹேவார்டில் ஷாபொட் கல்லூரி ஆடிடோரியத்தில் கலாலயா USA மற்றும் லக்ஷ்மன் ஸ்ருதியுடன் பாரதி தமிழ்ச் சங்கம் இணைந்து வழங்கும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி. கலைமாமணி கங்கை அமரன் & பத்மஸ்ரீ சின்ன கலைவாணர் விவேக் அவர்களும் இணைந்து வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி. இனிதே நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட விவேக்கை நமதூரை சேர்ந்த எம்.எம்.எஸ்.பகுருதீன் சந்தித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவு திட்டமான கிரீன் கலாம் 10 கோடி மரம் நடும் திட்டத்தை தமிழகத்திலும் புதுவையிலும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி திட்டத்தை முழுமை அடைய அயராது பாடுபடும் விவேக்கிற்கு நன்றியை தெரிவித்து கொண்டார்.