Friday, January 31, 2014

அதிரை சகோதரர் தலைமையில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கம்

சென்னையில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நாள் சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சியில் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி , மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் M. தமீம் அன்சாரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

 இந்நிகழ்ச்சி  மாணவர் இந்தியா அமைப்பின் செயலாளர் புதுமடம் அனீஸ், மாணவர் இந்தியா அமைப்பின் துணை செயலாளர் அதிரை சேக் அப்துல் காதர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இதில் பலரும் கலந்து கொண்டனர்  
மீண்டும் நினைவூட்டல்


நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்த அடிப்படையில்

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் சனிக்கிழமை (01/02/2014) அன்று, தண்ணீரின்றி வறண்டு கிடக்கும அதிரைக்கு மழை தேடித் தொழுகை' நடத்த முன்னேற்பாடுகளை அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) செய்து வருகின்றது.

இடம்:செடியான் குளம்  நேரம் :காலை 9:மணி 

அனைவரும் திரண்டு வாரீர் என அன்போடு அழைக்கின்றோம்.மேலும் விபரங்களுக்கு:

சகோதரர் ஜமாலுதீன் 9488111121

தகவல் : அதிரை அமீன்

அதிரையில் நீர் சிக்கன பயிற்சி

அதிரையில்  நீர் வள ஆதாரத் துறை சார்பில் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் பொறுப்பாளர்களுக்கான நீர் சிக்கன சிறப்பு பயிற்சி நடைபெற்றது.    அதிராம்பட்டினம் அருகே உள்ள ஆண்டிகுளம் ஏரி, வெளிவயல் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் பொறுப்பாளர்களுக்கு 2 நாட்கள் சிறப்பு பயிற்சி நடைபெற்றது.

நீர் மேலாண்மை, நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதன் மூலம் அதிக மகசூல் பெற வழிமுறைகள் மற்றும் வாய்க்கால் பராமரிப்பு பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இப்பயிற்சியில் பலரும் கலந்து கொண்டனர். 

மரண அறிவிப்பு வெளியிட்ட தளங்களுக்கு நன்றி !

அன்புக்குரிய அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு [ AAF ]  நிர்வாகிகள் மற்றும் அனைத்து சகோதரர்கள்-சகோதரிகள் மற்றும் அதிரை வலைத்தளங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த பத்து தினங்கள் என் மாமா நெய்னா முஹம்மது அவர்கள் திடீர் சுகவீனப்பட்டு,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நாட்டப்படி மரணமடைந்தது வரை, எங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் நீங்கள் அனைவரும் காட்டிய பாசம்,நேசம்,உபசரிப்பு,உதவி,துஆ இப்படி எங்களை ஆறுதல் படுத்தினீர்கள்.மருத்துவமனை,ஜனாஸா தொழுகை,நல்லடக்கம் என்று பெருந்திரளாக கலந்து கொண்டீர்கள்.உங்கள் வேலைகளை ஒதுக்கினீர்கள்,தூக்கம் தொலைத்தீர்கள்.இப்படி எல்லா வகையிலும் ஆறுதல் தந்தீர்கள், இதற்கு கைமாறு கிடையாது.மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன், இறைவனுக்கு நன்றி செய்ய முடியாது.

இதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கும்,உங்கள் குடும்பங்களுக்கும் இரண்டு உலகிலும் வெற்றி தருவானாக,ஆமீன்.

இன்ஷா அல்லாஹ்,இன்னும் இந்த அமைப்பை அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு [ AAF ]  கட்டி எழுப்ப வேண்டும்.நாமும்,நம் சந்ததிகளும் பயன் பெற வேண்டும்,இன்ஷா அல்லாஹ் முஸ்லிமாக வாழ்ந்து,முஸ்லிமாக மரணிக்க வேண்டும்.ஆமீன்.

மேலும், அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை போஸ்ட், அதிரை நியூஸ் போன்ற தளங்கள் மரணம் பற்றிய செய்தியை வெளியிட்டு,உலக முழுதும் உள்ள அதிரை மக்களின் துவாக்கள் கிடைக்க காரணமாக அமைந்தன,அவைகளுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் மக்ஃபிரத்துக்கு துவா செய்யுங்கள்.

அல்லாஹ் மட்டுமே என்றென்றும் உயிரோடு இருப்பவன்,நாம் அனைவரும் மரணமடைய வேண்டியவர்களே.அல்லாஹ்வுக்காக,இந்த மரணத்தை-இழப்பை பொருந்திக் கொண்டோம், அல்லாஹ் நமக்கு முன் சென்ற அன்னாரையும்,பிறகு போக போகிற நம்மையும் மன்னிப்பானாக,ஆமீன்.

அர.அப்துல் லத்தீப் 

ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் நாளை முதல் விண்ணபிக்கலாம் !


தமிழக அரசு அறிவிப்பு!!

2014 ஆம் ஆண்டுக்கான புனித  ஹஜ் பயணம் செல்ல விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஹஜ் 2014–ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, சில விதி முறைகள் மற்றும் வரையறைகளுக்குட்பட்டு, மும்பை இந்திய ஹஜ் குழு சார்பில் ஹஜ் விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது. சென்னை, எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸிடவர், மூன்றாம் தளத்திலுள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடமிருந்து ஹஜ் 2014–ற்கான விண்ணப்பப் படிவங்களை பிப்ரவரி 1–ந் தேதியில் (நாளை) இருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விண்ணப்பப்படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மனுதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15 ஆகும்.

வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. மார்ச் 15–ந் தேதியன்று அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்டு, குறைந்தது 31.3.15 வரையில் செல்லத்தக்க பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்கவேண்டும். ஐ.எப்.எஸ். குறியீடு உடைய வங்கியிலுள்ள தங்களின் கணக்கு விவரங்களை மனுதாரர்கள் அளிக்கவேண்டும். ஹஜ் 2014 பற்றிய விவரங்களுக்கு ஹஜ் 2014–ற்கான வழிமுறைகளைப் படிக்கவும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் மேற்கூறப்பட்ட இணையதளத்தை அணுக வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு 300 ரூபாயை திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியின் இணைப்பு வங்கி திட்டத்தின் மூலம் இந்திய ஹஜ் குழுவின் கணக்கு எண். 33564923057–ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகலை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு மார்ச் 15–ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில்  கூறப்பட்டுள்ளது.

ஹஜ் பயணத்திற்கான படிவம் பதிவிறக்கம் செய்ய கீழ்காணும் பொத்தானை சொடுக்கவும் 
என்று மாறும் இந்த இழி நிலை ...?

சீரழிந்த சமூகமாய் 

மாறிக்கொண்டிருக்கிறது 

திருமறையில் புகழப்பட்ட 

தலை சிறந்த சமுதாயம் ...

ஈயத்தால் வார்க்கப்பட்ட

இஸ்லாமியர்களின் கோட்டைகளில்

கருத்து வேறுபாட்டின் 

ஆயிரமாயிரம் ஓட்டைகள் ...

நடுநிலையில் நடக்க வேண்டியவர்கள்

சமநிலை தவறி தடம் மாறும் 

அவல நிலை ....

ஓரிறைக் கொள்கையை 

உச்சரித்துக்கொண்டு 

ஓராயிரம் கொள்கைகளின் பின்னால் 

ஊர்வலம் போகும் உம்மத்துகள் ...

வழிபாடு முடிந்தவுடன் 

மார்க்கத்தை மூட்டை கட்டி விட்டு 

வாழ்வியலில் 

சைத்தானின் கோட்பாட்டை 

சுமந்து நடக்கும் 

இஸ்லாத்தின் சொந்தங்கள் ...

சமூக வலைத்தளங்களில் 

சகோதரர்களின் மானத்தை 

விலை பேசும் 

மார்க்க வியாபாரிகள் ...

இறைவா ...!

எங்கள் தலைவர்கள் 

ஒற்றுமை கயிற்றினை 

அறுத்து விட்டு... 

கண்ணை மூடி 

இழுத்துக்கொண்டிருக்கிறார்கள் 

வேற்றுமை கயிற்றினை ...

என்று மாறும் 

இந்த இழி நிலை ...?

- கலீல் ரஹ்மான் H


நன்றி: முகநூல்

Thursday, January 30, 2014

காட்டுக் குளத்தை வந்து பாருங்க.ப்பாட, ஒரு வழியாக வண்டிப்பேட்டை வந்து இறங்கியாச்சு, பஸ் கண்டக்டர் இங்குதான் இறங்கச்சொன்னார், காட்டுக் குளத்தைப்பற்றி யாரிடம் விசாரிப்பது? அந்த ஆளிடம் கேட்போம், ஹலோ சார், இந்த ஊர் பகுதியில் காட்டுக் குளம் என்ற பெயரில் ஒரு குளம் இருக்குதாமே அது எங்கே சார் இருக்கின்றது, எப்படி சார் போகுறது?.

காட்டுக் குளமாங்க, இப்படியே சி.எம்.பி.லைன் வழியா நேரா போங்க, நேரா போய்க்கொண்டே இருங்க, நான்கு சாலைகள் சந்திக்கின்ற வாய்க்கால் மதகு வரும், அதலிருந்து வலது பக்கமாக திரும்பி போனால் கொஞ்ச தூரத்திலே காட்டுக் குளம் வந்துடும்.

ரு வழியா மதகுக்கு வந்தாகி விட்டது, இதிலிருந்துதான் வலது பக்கம், சரி வலது பக்கம் போவோம், கொஞ்ச தூரம் வந்தாகி விட்டது, காட்டுக் குளம் எங்கே காணோமே, இந்தப் பக்கம் வந்துபோய் பல வருடங்கள் ஆகிவிட்டது, அதனால் சரியான அடையாளம் தெரியவில்லை, யாரிடம் கேட்பது, அக்கம் பக்கம் யாரும் இல்லையே, ஆ! அதோ!! ஒரு ஆள் வருகிறார் அவரிடம் போய் கேட்போம். சார் ப்ளீஸ் சிறிது நேரம் நில்லுங்க, நான் வெளியூரிலிருந்து வருகின்றேன், இந்தப் பகுதியில் காட்டுக் குளம் இருந்துச்சே அது எங்கே சார் இருக்குது?.

காட்டுக் குளமா? நீங்க யாருன்னே தெரியலையே, வெளியூர் ஆள் மாதிரிதான் தெரியுது, வயசை பார்த்தால் கிட்டதட்ட நாற்பது-நாற்பதைந்தை நெருங்குது,  அதுசரி, குடிக்க ஏதாவது டீ காபி தண்ணீர்? சாப்பிட்டீங்களா? இல்லையா?

தெல்லாம் ஒன்றும் வேண்டாம் சார், நான் பட்டுக்கோட்டையிலே எல்லாத்தையும் முடித்து விட்டேன் சார்.

ப்படியா சரி,  இப்போ சொல்லுங்க, நீங்க யாரு? எங்கிருந்து வருகிறீர்? இந்த ஊரில் உங்களுக்கு  யாரைத் தெரியும், எதுக்காக காட்டுக்குளத்தை தேடுகிறீர்? இந்த ஊரில் இப்படியொரு குளம் இருப்பதை எப்படி அறிந்தீர்? முதலில் விபரத்தை தாருங்கள்.

னது  பெயர் குங்குமச்செல்வன், சொந்த ஊர் திருச்சி, சிறுவயதில் என் அப்பாகூட இந்த ஊருக்கு பல தடவைகள் வந்திருக்கின்றேன், அந்த சமயத்தில் இந்த குளத்தில் வந்து குளித்து இருக்கின்றேன், இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது, எனக்கு சம்பவங்கள் ஞாபகம் இருக்குது, குளம் இருந்த அடையாளம் தெரியவில்லை, தற்போது அதிரை எக்ஸ்பிரஸ் என்று ஒரு வலைத்தளம் இணையத்தில் வளம் வந்து கொண்டு இருக்கின்றது, நானும் தவறாமல் பார்த்து படித்து வருகின்றேன், சில வாரங்களுக்கு முன் குளத்தில் தண்ணீர் நிரப்புவது குறித்து செய்திகள் அதிகமாக வந்த வண்ணம் இருந்தது, அதில் காட்டுக் குளமும் அடிபட்டது, இந்தச் செய்தியை பார்த்தவுடன் எனக்கு என் அப்பாகூட அன்று வந்த ஞாபகம் வரவே மீண்டும் என் மனதில் பழையன திரும்பி எழவே அந்த காட்டுக் குளத்தைப் போய் பார்த்து விட்டு அதில் குளித்து விட்டும் வரலாம் என்ற ஆர்வத்தில் இங்கு வந்தேன் சார்.

கே! அப்படியா!! இவ்வளவு விஷயம் இருக்கா? சரி என்னுடன் வாங்க, இதோ தெரியுதுலே இதுதான் காட்டுக் குளம், இதுதான் குளக்கரையில் இருக்கின்ற பெரிய மரம் இந்த மரத்தடியிலேயே உட்காருவோம், இந்த இரண்டு கரைகளில்தான் நீங்கள் உங்கள் அப்பாவுடன் குளித்து நீராடி இருப்பீர்கள்.

மாம் சார், இந்த இரண்டு கரைகளும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கு, என்ன சார் இது? இந்தக் குளம் இருந்த அடையாளம் தெரியாமல் அப்படியே சிதைந்து கிடக்கின்றது, முட்செடிகளும் காட்டுச்செடிகளும் வளர்ந்து கிடக்கின்றது, சுற்றி பச்சை பசேல்ன்ற காடுகள் இருப்பதினால் காற்று மட்டும் ஜில்லென்று வீசுகின்றது,  இணையத்தில் வந்த போட்டோக்களில் தண்ணீர் அப்படியே தல தலவென வந்ததே அந்த தண்ணீர் எல்லாம் எங்கே சார்?

ண்ணீர் வந்தது என்னவோ உண்மைதான், வந்த தண்ணீர் தங்குகிற மாதிரி வரவில்லையே, அது தானே பிரச்சனை.

ன்ன பிரச்சனை சார் அது?

பிரச்சனை என்ன? தெரியாதா? எல்லா இடத்திலேயும் நடக்கின்றதுதான், இங்கும் நடந்திருக்கு, அதைப்பற்றி பேசினால் நமக்குத்தான் நேரம் வேஸ்ட். நீங்க இவ்வளவு தூரம் கடந்து இங்கு வந்ததினால் உங்களிடம் ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று விரும்புகின்றேன், இந்தக் காட்டுக் குளம் பல வருடங்களுக்கு முன் அதாவது ஒரு நூற்றாண்டை தாண்டுமாம் அப்போது உருவாக்கப்பட்டதாகவும் பல மக்கள் இக்குளத்தை உபயோகித்து வந்ததாகவும் இப்பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர். மேலும் சொன்னார்கள் எங்கு தண்ணீர் வற்றினாலும் இது மட்டும் நீர் வற்றாமல் இருக்குமாம்.

ன் சார், அவ்வளவு பழமை வாய்ந்த குளமா?

வர்கள் சொல்வதைப் பார்த்தால் இருந்தாலும் இருக்கும், அப்படிப்பட்ட குளம் இப்போது வறண்டு காணப்படுகின்றது, இந்த காட்டுக் குளத்தைச் சுற்றி நிறைய ஆழ்துளை கிணறுகள் 300அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு இருக்கின்றது, இதிலிருந்து பெறப்படுகின்ற தண்ணீர் இந்த ஊர் முழுக்க அதாவது நாளா பக்கமும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு குடி நீராகவும் மற்ற தேவைகளுக்கும் பயன்பட்டு வருகின்றது. இருந்தாலும் இப்பொழுது இந்தப் பகுதியில் அடிக்கடி தண்ணீர் தட்டுப்பாடு உருவாகி மக்களை பாடாய் படுத்தி வருகின்றது, இதை இப்படியே விட்டு விட்டால் வருங்காலங்களில் அறவே தண்ணீர் இல்லாமல் போய்விடும் அபாயம் நிலவுகின்றது.

மா சார், இப்போது பேய்ந்து முடிந்த மழையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மிக மிக குறைவு என்று செய்திகள் வாயிலாக அறிந்தேன், ஆனால் திருச்சி மாவட்டத்திலும் மற்ற மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது. நான் சிறு வயதாக இருக்கும் சமயத்தில் உங்கள் ஊருக்கு வருவேன், அப்போதெல்லாம் கண் கண்ட இடமெல்லாம் பச்சை பசேல் என்று இருக்கும், இப்போ அந்த பசுமை எல்லாம் போய் வெறும் வெண்மையாக காட்சி அளிக்கின்றது.

குங்குமச்செல்வன் இன்னும் கேளுங்க, இப்போ எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக இறங்கி விட்டது, எல்லா குளங்களும் வற்றிவிட்டது, எல்லோருக்கும் எல்லாக் குளங்களும் நிறைய வேண்டும் என்று ஆசைதான், ஒரு சில காரணங்களால் நிறையாமல் போய்விட்டது, இந்தக் காட்டுக் குளமும் வற்றி விட்டதால் இரவு நேரங்களில் சில சமூக விரோதிகள் நடமாடுவது இப்பகுதிவாழ் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது, இப்போ இருக்கின்ற சூழ்நிலையில் பார்த்தோம் என்றால் நீர் பற்றாக் குறை ஒரு பெரும் குறையாக இருக்கின்றது, இதுபோல் மற்ற எல்லா குறைகளும் போகணும் என்றால் ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி ஆலோசித்து முயற்சி செய்து இந்தக் காட்டுக் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்து ஆண்டு முழுவதும் வற்றாத நீர்நிலையாக கொண்டு வந்தால் ஒழிய இந்த குடிநீர் பற்றாக் குறையை ஒருக்காலும் தீர்க்க முடியாது. இதை நீங்களும் நானும் பேசி என்ன பயன்? இந்த ஊரில் உள்ள எல்லா மக்களும் பேசி ஒரு முடிவுக்கு வரணுமே! எப்போது நம்மிடத்தில் ஒற்றுமை இல்லையோ எந்த ஒரு காரியத்தையும் வெற்றி கொள்ளமுடியாது. 

மா சார், நீங்கள் சொல்வது சரிதான், இந்தக் காலத்தை எடுத்துக் கொண்டால் நம்பிக்கை, நாணயம், பொதுநலம், விட்டுக்கொடுக்கும் தன்மை, தாராள மனப்பான்மை, இன்னும் மனிதனுக்கு இருக்க வேண்டிய அனேக நல்ல நல்ல தன்மைகள் செயல்கள் எல்லாம் அடியோடு இல்லாமல் போய்விட்டது சார், இன்னொரு விஷயத்தையும் நான் உங்களிடம் சொல்லணும் சார், அதாவது இப்போ நாம் இவ்வளவு நேரம் பகிர்ந்து கொண்ட இந்த விஷயத்தை அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் பதிந்தால் என்ன? இந்த விஷயம் எல்லா மக்களையும் போய் சேர்ந்து விடும்.

நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் அதிரை எக்ஸ்பிரஸில் ஒரு பதிவாக பதிந்து எல்லோரும் பார்க்கும் வண்ணம் செய்வேன், எனக்கு நம்பிக்கை இருக்கு, அதாவது அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை, நிச்சயமாக இந்த ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று கூடக்கூடிய நாளும் நேரமும் மிகவும் சமீபத்தில் இருக்கின்றது. அப்போது மக்கள் எல்லோரும் உணருவார்கள், நன்மைகளும் நடந்து கொண்டே இருக்கும். இறைவன்மீது நம்பிக்கை வைத்து செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் நன்மையாகவே முடியும்..

ன்ன குங்குமச்செல்வன் அப்படியே அசந்து போய்ட்டீங்க!

ன்னும் இல்லே சார், நமக்கு பிறகு வரும் சந்ததிகள் எல்லாம் எப்படி வாழ்ப்போராங்களோ தெரியலே சார்.

நாம் என்னத்த சொல்ல முடியும், எல்லாம் அந்த இறைவன் நாட்டப்படி நல்லதாகவே நடக்கட்டும்.

ரி சார், நீண்ட நேரம் நாம் நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டோம், உண்மையில் இந்தக் காட்டு குளத்தில் குளித்தது மாதிரி இருக்கு, உங்களுக்கும் வேலைகள் இருக்கும், இதோ என்னுடைய முகவரி நீங்கள் மறக்காம எங்க வீட்டுக்கு அவசியம் வரணும், நானும் என் ஊருக்கு திரும்பிப் போகின்றேன்.

ரி குங்குமச்செல்வன் ஒரு நிமிஷம், நீங்கள் என் வீட்டில் மதிய உணவை பருகிவிட்டு பின்பு செல்லலாம், வாருங்கள் என் வீட்டுக்கு போவோம்.

கே, நன்றி சார்.
இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். கோ.மு. முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை 13வாடி, வண்டிப்பேட்டைநமதூர் சட்டமன்ற உறுப்பினர் சட்டசபையை புறக்கணிப்பு

சென்னை: தங்களுக்கு கட்சி் பதவி கொடுக்காததால் அதிருப்தியடைந்த சட்டசபை காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி உள்ளிட்ட நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் இன்று சட்டசபைக்குப் போகாமல் புறக்கணித்தனர். நான்கு பேரும் சத்திய மூர்த்தி பவனிலேயே இருந்தனர். 
 தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. அதில் பலருக்குப் பதவி கிடைக்கவில்லை. இதையடுத்து மீண்டும் ஒரு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாகவும் பலர் அதிருப்தி அடைந்தனர். எம்.எல்.ஏக்கள் விஜயதாரணி, பிரின்ஸ், ரெங்க ராஜன், ஜான்ஜேக்கப் ஆகிய 4 எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கும் நிரந்தர செயற்குழு உறுப்பினர் பதவி வழங்க கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் கட்சி மேலிடம் அவர்களுக்கு செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கவில்லை. அதற்கு பதிலாக சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர். 

இதனால் இவர்கள் அதிருப்தி அடைந்தனர். இன்று (30-01-14) கூடிய சட்டசபைக் கூட்டத்திற்கு அவர்கள் போகாமல் சத்தியமூர்த்தி பவனில் அமர்ந்திருந்தனர். கட்சித் தலைவர் ஞானதேசிகனைச் சந்தித்து தங்களுக்கு நிரந்தர செயற்குழு உறுப்பினர் பதவி தர வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.

ரெங்கராஜன் பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எனபது குறிப்பிடத்தக்கது.

கண்கலங்க வைக்கும் மூதாட்டியின் தாயன்பு....!

ம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கிய பெற்றோர் நான்கு நாள் காய்ச்சலில் விழுந்து விட்டாலே... 'உனக்கு தெரிஞ்ச முதியோர் காப்பகம் ஏதாவது இருக்கா..?' என சில பாசக்காரப் பிள்ளைகள், தங்களது நண்பர்களிடம் விசாரிக்க தொடங்கி விடுகின்றனர்.

நாம் கருவான போது நமது தாய் அடைந்த ஆனந்தமும், நம்மை பிரசவித்தபோது அவள் அடைந்த வேதனையும், இந்த பாசக்காரப் பிள்ளைகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும், 'நமக்கு புகட்டிய ஒவ்வொரு துளி தாய்ப்பாலுக்கும் 10 லட்சம் வெள்ளை ரத்த அனுக்களை நமது அன்னை தியாகம் செய்திருக்கிறாள்' என்பதை புரிந்து கொள்ளவும் சிலருக்கு புத்தி இருப்பதில்லை.

இதன் விளைவாகவே, வயோதிக நிலையை எட்டிய பெற்றோரை சிலர் பாரமாக கருதி, 'எங்கே கழற்றி விடலாம்', 'எப்போ விலக்கி விடலாம்' என்று நன்றி கெட்டத்தனமாக யோசிக்க தொடங்கி விடுகின்றனர்.
ஆனால், 'மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு கிளை பாரமா? கொடிக்கு காய் பாரமா? பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?' என்ற பழைய தமிழ் திரைப்பட பாடல் வரியைப் போல், பல அன்னையர்கள் எந்த நிலையிலும் தங்களது பிள்ளைகளை பாரமாகவே கருதுவதில்லை.

இதற்கு சமீபத்திய கண்கண்ட உதாரணமாக திகழ்கிறார், சீனாவை சேர்ந்த 'ஸ்ழாங்' என்ற 98 வயது மூதாட்டி.

கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் வசிக்கும் இவரது 60 வயது மகன், கடந்த 40 ஆண்டுகளாக பக்கவாத நோயால் (பெரலைஸிஸ்) பாதிக்கப்பட்டு, படுத்தப் படுக்கையாக கிடக்கிறார். இத்தனை ஆண்டுகளாகவும் 'தாயன்பு' என்ற உன்னத மந்திரம் மட்டும் தான் அவரை வாழ வைத்து வருகிறது.
மகனுக்கு உணவு ஊட்டுவது, அவரது மல-ஜலத்தை துடைத்து சுத்தம் செய்வது என இந்த தள்ளாத வயதிலும் தாய்ப்பாசத்தின் புத்தகராதியாக திகழும் அந்த மூதாட்டியை 'தாய்மையின் அடையாளம்' என்று சீன மக்கள் போற்றிப் புகழ்கின்றனர்.

இவரைப்பற்றி கேள்விப்பட்ட சில சமூக ஆர்வலர்கள், தாங்களாகவே முன்வந்து, நிதி திரட்டி, 1 லட்சம் யுவான்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 13 லட்சம் ரூபாய்) அந்த குடும்பத்துக்கு அன்பளிப்பாக வழங்க சென்றனர். ஆனால், வறுமை நிலையில் வாழ்ந்துவந்த போதிலும், தனது சொந்த பணத்தில் வாழ்வதையே விரும்பும் தன்மானம் மிக்க அந்த சீன மூதாட்டி, பணத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து, நிதி வழங்க வந்தவர்களை ஆசீர்வதித்து, வழியனுப்பி வைத்தார்.


தகவல்: அஷ்ரஃப்கான்

ஆளூர் ஷா நவாஸ்க்கு மூத்த பதிவாளர் வாழ்த்து

விடுதலை சிறுத்தை கட்சியில் மாநில துணை பொது செயலாளராக ஆளூர் ஷா நவாஸ் அவர்கள் நேற்று முன் தினம் தேர்தேடுக்கப்பட்டார்.இதனை அறிந்து அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக தளத்தின் மூத்த பதிவாளர் ஹசன் அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் சார்பாக வாழ்த்துகளை தெருவித்து கொண்டார்.

அப்பொழுது ஆளூர்ஷாநவாஸ் கூறியதாவது:

அதிரை எக்ஸ்பிரஸ் தளத்திற்கும் ஹசன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொண்டு ஆயிரத்துக்கும் மேல் உள்ள  வாசகர்கள் பார்க்கும் இந்த இணைய தளத்தில் நானும் ஒரு வாசகன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் நானும் இந்த தளத்தின் நிர்வாகிகளும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம் என்றும் இந்த தளத்தின் பெற்ற பயிற்ச்சியின் மூலமாக காட்சி ஊடகத்தில் கால் பதித்துள்ள சகோதரர் ஹசனை போல் மற்ற பதிவர்களும் மீடியா துறையில் ஆர்வமிக்கவராக வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும்  தற்போது இருக்கும் இளைய பதிவாளர்களுக்கு கூறி கொள்வது எந்த ஒரு பலனையும் எதிர்ப்பாக்காமல் நடுநிலையோட செயல்பட்டு உங்களது தளத்திற்கு பெருமை சேருங்கள்.உங்களது பணிகள் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் என்று அவர் கூறினார்.  

நெய்னா'ஸ் கிச்சன் (மாம்பழ தோசை)

தோசை தெரியும், மாம்பழம் தெரியும்! இரண்டையும் சேர்த்து செய்யப்படும் மாம்பழ தோசை தெரியுமா?

நமது வாசகர்களுக்காக ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான உணவுகள் செய்முறையை காணொளியாக வழங்கிவரும் சகோ.நெய்னா முஹம்மது அவர்களின் மற்றுமோர் சுவையான ரெசிப்பி.குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிடித்தமான மாம்பழ தோசை குறித்த உங்கள் கருத்துக்கள் பின்னூட்டங்களாக வரவேற்கப்படுகின்றன.

Wednesday, January 29, 2014

காதிர் முஹைதீன் பள்ளி 65 ஆம் ஆண்டு விளையாட்டு விழா பரிசளிப்பு (புகைப்படங்கள்)!!

காதிர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 65 ஆம் ஆண்டு விளையாட்டு விழா இன்று காலை 9 மணிக்கு துவங்கி நடைபெற்று வந்தது.

இந்த விளையாட்டு விழாவில் நீளம் தாண்டுதல், அஞ்சல் ஓட்டம், சாக்கு ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், போன்ற விளையாட்டுகளில் பள்ளி மாணவர்கள் கலந்துக் கொண்டு  தங்களது திறமைகளை வெளிக்காட்டி பரிசுகளை வென்றெடுத்துள்ளனர். 

  மாணவர்களின் கூட்டுப் பயிற்சி, யோகாசனம், பிரமீடு போன்றவைகளும் இந் நிகழ்ச்சியில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு பெற்றோர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் முன்னாள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


பள்ளி ஆசிரியைகளுக்கு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டி


பள்ளி விளையாட்டு விழாவில் கலந்துக் கொண்ட மாணவ கூட்டத்தின் ஒரு பகுதி

முன்னாள் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்

கேட்பரீஸ் சாக்லேடுக்குள் குளவி !


ஆசை ஆசையாய் சாப்பிடப் போன சாக்லேடுக்குள் குளவி குடியேறியுள்ளதை கண்ட வாடிக்கையாளர் இது தொடர்பாக அந்த சாக்லேட் நிறுவனத்துக்கு புகார் அனுப்பியுள்ளார்.


இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை சேர்ந்த ஜேக் கியேட்டிங்(20) என்பவர் அப்பகுதியில் உள்ள சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் 'கேட்பரீஸ் டெய்ரி மில்க் சாக்லேட்’ ஒன்றை கடந்த வாரம் வாங்கினார். அதன் மேலுறையை பிரித்துவிட்டு சாப்பிட முயன்ற அவர், சாக்லேட்டின் ஒரு பகுதி மட்டும் வழக்கத்துக்கு மாறாக புடைத்துக் கொண்டிருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தார்.


அந்த பகுதியை இரண்டாக உடைத்த ஜேக் கியேட்டிங் அதிர்ச்சியால் உறைந்துப் போனார். உடனடியாக அந்த சாக்லேட்டை தனது செல்போன் கேமரா மூலம் படம் பிடித்த அவர், கேட்பரீஸ் நிறுவனத்தின் ‘டுவிட்டர்’ பக்கத்துக்கு அதை அனுப்பி வைத்து விளக்கம் கேட்டுள்ளார்.


'இந்த சாக்லேட்டுக்குள் இறக்கை, கால் மற்றும் தலையுடன் ஒரு முழு குளவி செத்துப்போய் கிடக்கிறது. இது குறித்து உங்கள் நிறுவனத்தின் விளக்கம் என்ன? என அவர் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, தங்கள் நிறுவனத்தின் சார்பில் ஒரு உயரதிகாரியை ஜேக் கியேட்டிங்-கிடம் அனுப்பி வைத்த கேட்பரீஸ் நிறுவனம் அந்த சாக்லேட்டை பரிசோதனைக்காக வாங்கி வைத்துள்ளது.


பரிசோதனையின் முடிவுக்கு பின்னர் இந்த தவறு எங்கு? எப்படி நேர்ந்தது? என்பதை கண்டறிந்து, அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்பரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.எச்சரிக்கை 
Source: Maalaimalar 

வென்றது AFCC !

அதிரையில் நடைபெற்று வந்த கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. அதில் அதிரை நண்பர்கள் கிரிகெட் குழு AFCC முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்று பரிசு தொகையான 8014ஆயிரம்  ரூபாய் பரிசை வென்றுள்ளது இதே போல் இரண்டாம் இடம்பெற்ற ASC அணியினர் 7014 ஆயிரம் ரூபாயையும் வென்றுள்ளார்கள் மூன்றாம் இடத்தை ASC.B அணியினர் வென்றுள்ளனர் .

காதிர் முஹைதீன் பள்ளியின் விளையாட்டு விழா (புகைப்படங்கள்)!!

நமதூர் காதிர் முஹைதீன் (ஆண்கள்) மேல்நிலைப் பள்ளியின் 65 ஆம் ஆண்டு விளையாட்டு விழா இன்று 9 மணிக்கு துவங்கியது,

இந்த விளையாட்டு விழாவிற்கு காதிர் முஹைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் A.ஜலால் M.com., MBA., M.phil., Phd அவர்கள் நாட்டின் தேசிய கொடியினை ஏற்றி வைத்தும், காவல்துறை ஆய்வாளர் திரு.M.இராமச்சந்திரன், B.com  அவர்கள் ஒலிம்பிக் தீபம் ஏற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுகொண்டார்.

 இதனையடுத்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.

நிகழ்ச்சியின் இறுதியாக மாலை திரு.C .நரேந்திரன் M.Sc., M.Ed., M.phil.,  (மாவட்டக் கல்வி அலுவலர், பட்டுகோட்டை)அவர்களால் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடை பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுகொள்கிறார் காவல்துறை ஆய்வாளர்.6 ஆம் வகுப்பு மாணவர்களின் சாக்கு ஓட்டப் போட்டி அதிரை  எக்ஸ்பிரஸ் 
வெற்றிக் கனியை பறிக்க சீறி ஓடும் மாணவன்

வெற்றி பெற்ற மாணவர்களின் பரிசளிப்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் விரைவில்....  இணைந்திருங்கள் நமது அதிரை எக்ஸ்பிரஸ் வளைதளத்தில்...