Sunday, November 30, 2014

அமீரக தேசிய விழா-அதிரை அபூபக்கர்

அமீரகத்தில் களை கட்ட துவங்கிய 43 வது தேசிய விழா வருகின்ற 2-12-14 செவ்வாய்கிழமை அன்று கொண்டாப்பட இருக்கிறது.
இதற்காக அரசு ஊழியர்களுக்கு விடுமுறை 5 நாட்களும் தனியார் நிறுவனங்களுக்கு 1 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த தேசிய தின விழாவை கொண்டாட ஒட்டு மொத்த அமீரகமும் தயாராக இருக்கிறது.மேலும் அமீரக காவல்துறை பிரிவில் பணியாற்றும் அதிரை அபூபக்கர் அவர்கள் அமீரக மக்களுக்கும், துபாய் வாழ் அதிரை மக்களுக்கும் தேசிய தின வாழ்த்துக்களை தெருவித்து கொண்டார்.   

அதிரையில் அதிகரிக்கும் வட்டி! பெண்களின் பிடிவாதம் காரணம்!

அதிராம்பட்டினத்தில் தற்பொழுது பரவலாக வட்டி பலவடிவில் பொதுமக்களை வதைத்து வருகிறது. கடந்த சில வருடங்களாகவே வட்டியின் மோகம் இந்த ஊரில் அதிகரித்துள்ளது. இதற்கு என்ன காரணம் என பலரும் பல கோணத்தில் ஆய்வுகள் நடத்த தற்பொழுது இதற்கு முக்கிய காரணம் பெண்கள் தான் என்ற அதிர்ச்சி தகவல் நம்மை ஒருநொடி அதிரவைத்துவிட்டது. 

அதுவும் இஸ்லாமிய பெண்கள் தங்களது கணவன் அல்லது சகோதரர்கள் வட்டியின் கொடுமையில் சிக்க காரணமாக அமைகிறார்கள். அதனை இவர்கள் எப்படி செய்கின்றனர் தனது கணவன் அல்லது சகோதரர்கள் தங்களின் சொந்த தேவைக்காக இவர்களிடம் கடன் கேட்கும்போது இவர்கள் தங்களிடம் உள்ள தங்க நகையினை கொடுத்து இதனை விற்று பணமாக மாற்றாமல் வங்கி அல்லது அடகு கடையில் வைத்து பின் எனக்கு மீட்டுத்தர வேண்டும் என கூறி கொடுக்கின்றனர். 

வட்டியின் கொடுமையில் சிக்க வேண்டாம் என என்னும் கடன் கேட்பவர் பைத்துல்மால் போன்ற இஸ்லாமிய பொது அமைப்புகளிடம் கடனாக பணம் கேட்க அவர்களோ ஓர் குறிப்பிட்ட சிறிய தொகையினை மட்டும் தான் எங்களால் கடனாக தரமுடிவும் என்ற தங்கள் நிர்வாக கொள்கையினை தெரிவித்து விடுகின்றனர். 

வேறுவழியின்றி அந்த பணம் தேவைப்படும் நபரும் முன்பு அந்த பெண் சொன்ன நிபந்தனையினை ஏற்று வட்டிக்கு அடகு வைத்து பணத்தை பெற்று கொள்கிறார். இதனால் அவர் வட்டியின் கொடுமையில் சிக்கி பலவிதமான மன கஷ்ட்டங்களையும் அனுபவிக்க இவர் வட்டியில் சிக்கியதற்கு அந்த பெண்ணின் பிடிவாதம் மற்றும் நகை ஆசை காரணமாக அமைகிறது.

தாங்கள் கொடுக்கும் நகையினை அவர்கள் வட்டிக்கு வைக்க சொல்லுவதற்கான காரணம் நம் மனித சமூகத்தில் உள்ள அடிப்படை கொள்கையை கேள்வி குறியாக மாற்றுகிறது. என்னமோ இந்த உலகில் பிறந்த நாம் இந்த உலகிலேயே நிரந்தரமாக வாழ போவதை போன்று சித்தரிக்கப்படுகிறது. மேலும் இது எங்களது குடும்ப நகை இதனை எனது தாய் எனக்கு கொடுத்தது எனவே இதனை அடகு வைத்தாலும் விற்க கூடாது என கூறி விடுங்கின்றனர்.

இஸ்லாமியர்கள் அதிமாக வசிக்கும் இந்த ஊரில் வட்டியில் ஈடுப்படுவோர் மீது இறைவனும் அவனது தூதரும் போர் பிரகடனம் செய்ததையும் இவர்கள் மறந்து வாழுகின்றனர் என்றால் இவர்களை யாரால்தான் திருத்த முடியும்.

-Z.முகம்மது சாலிஹ்

அதிரை ததஜ நடத்திய இரத்ததான முகாம்

அதிரையில் அதிரை ததஜ மற்றும் தஞ்சை காளி இரத்த வங்கி ஆகியோர் இணைந்து இரத்ததான முகாம் நடுத் தெருவில் அமைந்து உள்ள ஆய்ஷா மகளிர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.இதில் ஏராளமானோர் இரத்தம் வழங்கினர்.


சிலவரிகள் வாழ்வது எப்படி! ஹாஜா நஜ்முதீன்

வாழ்வது வரலாறு அல்ல!
வாழ்ந்தபின் தான்....
எழுதப்படுகிறது வரலாறு!
அது நீங்கள் வாழ்வதை
பொறுத்து....
செய்வது யாருக்கானாலும்
பலன் உங்களுக்காகட்டும்!
நன்மையில் மட்டுமே....!
-ஹாஜா நஜ்முதீன்

காவல்நிலையத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி!


தஞ்சை மாவட்டம் முழுவதும் சுமார் 3 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகின்றன, அதன்படி அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லைக்குபட்ட பகுதிகளில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி இன்று முதல் நடைபெற்றுவருகிறது. 

இதில் முதல்கட்டமாக பேரூராட்சி அலுவலம், அரசு பொதுமருத்துவமனை, காவல்நிலையம் போன்ற அரசு நிலையங்களில் அங்குள்ள அதிகாரிகளின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. அதிராம்பட்டினம் காவல்நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆய்வாளர் ரவிச்சந்திரன், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர், மன்ற உறுப்பினர்கள், செயல் அலுவலர் ஆகியோர் கலந்துக்கொண்டனர். 

அதிரையில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்!


அதிரையில் காவல் துறை சார்பில் பாதுகாப்பு பணிக்காக ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிரையில் சமீபகாலமாக திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகயளவில் நடந்துவருகிறது. இதனை கட்டுப்படுத்த காவல் துறை சார்பில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறன.

அதில் ஒருபகுதியாக அதிராம்பட்டினம் காவல்துறை சார்பாக தற்பொழுது முக்கிய இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பகுதிகளில் நடைப்பெற கூடிய குற்ற செயல்களை பெருமளவில் தடுக்கலாம் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Saturday, November 29, 2014

அதிரையில் பலத்த காற்றுடன் மழை


அதிரையில் சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில் தற்போது 10.30 மணி நிலவரப்படி பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.மேலும் தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.  

கவிதை இறைமறை! செய்யது அபு தாஹிர்!


இறைமறை
இறைவனின்,மகத்துவத்தை உணர்த்த
நபிகளாரின் வாழ்வில் மிளிர்த்த
சீரிய சிந்தனையின் ஊற்றாய் பாய்ந்த
படைபினங்களுக்குகிடையே சவாலாய் திகழ்ந்த
மனிதனின் அகந்தை,கர்வத்தை உடைத்த...
இறைமறையாம், திருக்குர்ஆன்!
உன்னதமிகுந்த அருள் மறையே...!
உண்மை மிக்க ஞான உரையே!
நாள்தோறும ஓதி ஒழுக........
அருள்புரிவாய்......... ரகுமானே.!
-செய்யது அபு தாஹிர்

"புரோ "கடை அதுக்கு ஏற்ற கடை! உண்மை ரிப்போர்ட்

அதிரை இளைஞர்களை சீர்கெடுக்கும் விதமாக திகழும் இந்த சகோதர பாசத்துடன் வாடிக்கையாளர்கள் அழைக்கும் கடை பற்றி இங்கு நாம் விரிவாக பார்ப்போம். அதிராம்பட்டினம் மிகவும் ஒழுக்க நெறிமுறைகள் கொண்ட ஊர் என்று அதனை சுற்றி உள்ள ஊர்களில் பரவலாக பேச நாம் கேட்டிருப்போம். அதுக்கு தற்பொழுது வேட்டு வைக்க துளிர்விட்டு வளர்ந்துள்ளது இந்த கடை.

மூன்றாண்டுகளுக்கு முன்வரை இது வெறும் சாதாரன பெட்டி கடையாகவே இருந்து வந்தது ஆனால் தற்பொழுது இங்கு மினி பாரே நடத்தப்படுகிறது. இந்த கடையில் கூடும் கூட்டம் மது, சிகிரெட் போன்ற பல கடும் போதை தரக்கூடிய பொருட்களையும் சூதாட்டத்திலும்   எந்த ஒரு அட்சமும் இன்றி பயன்படுத்துகின்றனர். 

அதில் பெரும்பாலும் 17 முதல் 25வயது மதிக்கத்தவர்கள் தான் அதிகம். இவர்கள் டாஸ்மாக் கடைகளிலிருந்து வாங்கிவரும் சாராயத்தினை இங்கு வைத்து நண்பர்களுடன் அருந்துகின்றனர். இவர்களுக்கு வசதியாக தற்பொழுது இங்கு புரோட்டா கடையும் துவங்கிவிட்டனர். அதுவும் அதிராம்பட்டினத்திலேயே இங்குள்ள சால்னா தான் அதிக காரம் என்று பலராலும் பரவலாக சொல்லப்படுகிறது. 

இங்கு திருவிழா கால விற்பனையினைக்கு ஈடாக வெளிநாடு மற்றும் சென்னை போன்ற ஊர்களில் வசிக்கும் அதிரை இளைஞர்கள் விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும்போது கல்லாப்போட்டி எகுரும். வீட்டிற்கு தெரியாமல் பல சிறார்களும் இங்கு தான் தங்களது தவறான வாழ்க்கை பாதையினை துவங்குகின்றனர் என்ற தகவல் நம்மை அதிர்ச்சியடைய செய்கிறது. 

தங்களது உடல்களை வருத்தி பெற்றோர்கள் சம்பாரிக்கும் பணம் அவர்களது எதிர்காலத்தை வளப்படுத்தும் என்று எண்ண இங்கு தனது மகன் சீரழிவும் நிலையை அறியாமல் மாதாமாதம் செலவிற்கு என பணம் அனுப்ப அதனை அவர்கள் தவறான வழியில் செலவு செய்கின்றனர். 

இதேநிலையில் அதிரையில் தொடர்ந்தால் இன்னும் சில வருடத்தில் இங்குள்ள பெரும்பாலானோர் போதை பழக்கத்திற்கு ஆளாவார்கள் என்பதும் சிதர்சனமான உண்மை. இவ்வாறான நிலை உருவாகாமல் இருக்க வேண்டும் என்றால் ஊரில் உள்ள பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆகியன இணைந்து நடவடிக்கை எடுத்தால் தான்  எதிர் கால சமுகத்தை ஒழுக்கமுடைய சமூகமாக பாதுகாக்கலாம்.

மேலும் இந்த கடையின் பின்புறத்தில் தான் உச்சக்கட்ட சமூதாய சீர்கேடுகளும் அரேங்கேற்றப்படுவதாக கூறபடுகிறது. .

அதிரை பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை

அதிரை பகுதியில் சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது மேக மூட்டதுடன் காற்றும் வீசிவருகிறது இதனால் இன்று மதியம் இமாம் ஷாபி ,காதர் மொய்தீன் உட்பட பல பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 

ஷரியத் சட்டப்படி மியூச்சுவல் பண்ட்எஸ்.பி.ஐ., வங்கியில் துவக்கம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்கள் கடந்த காங்கிரஸ் ஆட்சியில்நாடாளுமன்ற கூட்டத்தில் இந்தியா முழுவதும் வட்டியில்லாத இஸ்லாமிய மக்களுக்கான, மியூச்சுவல் பண்டு திட்டத்தைசேவையை துவங்க கோரிக்கை விடுத்தார்.இதனை எஸ் பி ஐ வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது. 
இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படி, முஸ்லிம் மக்களுக்கான, மியூச்சுவல் பண்டு திட்டத்தை, முதல் முறையாக, எஸ்.பி.ஐ., வங்கி, அடுத்த மாதம் துவக்குகிறது.ஷரியத் சட்டத்தின்படி, முஸ்லிம் மக்கள், தாங்கள் செய்யும் முதலீடுகளில் இருந்து வட்டி பெறுவதோ அல்லது தருவதோ கூடாது. 

இதன் காரணமாக, அவர்கள், வட்டி வரும் வகையிலான முதலீடுகளை செய்வதில்லை.முஸ்லிம் நாடுகளில் உள்ள இஸ்லாமிய வங்கிகள் கூட, வட்டி தொடர்புள்ள, எந்த முதலீடுகளையும் ஊக்குவிப்பதில்லை.நாடு முழுவதும் உள்ள, 17 கோடி முஸ்லிம் மக்களின் நலன் கருதி, அவர்கள் சட்டப்படி, புதிய முதலீட்டு திட்டத்தை, அரசு வங்கியான எஸ்.பி.ஐ., துவக்குகிறது. இத்திட்டத்திற்கு மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் அளித்துள்ளன.எஸ்.பி.ஐ., வங்கியின், இந்த புதிய முதலீட்டு திட்டத்தில், எத்தகைய வட்டியும் இல்லை என்பதால், இதற்கு, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஆதரவு தெரிவித்து உள்ளது.

தகவல்:AX முதன்மை செய்தியாளர் ஷாகுல் ஹமீது  
தினமலர் அதிரைக்கு பெருமை சேர்த்த நேர்மையாளர் சகோதரர் இலியாஸ் (படங்களுடன்)

எதிர்வரும் அமீரகத்தின் 43வது தேசிய தின கொண்டாட்டங்களில் ஒன்றாக அதிரை சகோதரர் ஒருவர் நேர்மைக்காக பாராட்டப்பட்டுள்ளது அமீரக வரலாற்றில் ஒன்றாகிபோனது.

நமதூரை சேர்ந்த மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகனும் ஜாகிர் ஹீசைன், அப்துல் காதர் ஆகியோரின் சகோதரருமான இலியாஸ் அவர்களின் நேர்மையான ஓரு செயல் நாங்களும் அதிராம்பட்டிணம் தான் என நம்மையும் உளம்மகிழ செய்துள்ளது.

அப்படி என்ன செய்தார்
மிகச்சில இடங்களில் சில்லறைகளுக்காக கொலை வரை செல்லும் ஒரு தேசத்திலிருந்து வந்துள்ள நமக்கு, காசு பணத்தை சம்பாதிப்பதை மட்டும் இலட்சியமாக கொண்டு கடல் கடந்து வந்துள்ள நமக்கு திடீரென ஒர் பணப்பை கிடைத்தால் இயற்கையாய் என்ன செய்வோம், குறைந்தபட்சம் மனதளவிலாவது சலனப்படுவோம் ஆனால் சகோதரர் இலியாஸ் அவர்களுக்கு அப்படி ஒரு நிலை ஏற்பட்ட பொழுது தான் அல்லாஹ்வுக்கு பயந்தவன் என்பதை செயலில் நிரூபித்தார்.

கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி துபை கிளாக் டவர் அருகேயுள்ள EMIRATES NBD பேங்க் வெளிப்புறத்தில் ஒரு பையை கண்டெடுக்கின்றார், உள்ளே திறந்து பார்த்தால் 1000 திர்ஹம் நோட்டு கட்டுக்களாக 50,000 திர்ஹம் அனாதையாக கிடக்கின்றது. (சுமார் 7 ½ லட்சம் இந்திய ரூபாய்) பையுடன் பணத்தை கண்டெடுத்தவரின் கால்கள் உடன் முரக்கபாத் போலீஸ் ஸ்டேசனை நோக்கி விரைந்தது, அங்கே போலீஸாரிடம் பணத்தை ஒப்படைத்த பின்பே நிம்மதியை உணர்ந்துள்ளார்.

2014 நவம்பர் 25 ஆம் தேதி திடீரென முரக்கபாத் போலீஸ் ஸ்டேசனிலிருந்து அழைப்பு வர முரக்கபாத் போலீஸ் ஸ்டேசன் சென்றவருக்கு 43 வது தேசிய தின கொண்டாட்ட நிகழ்வில் இலியாஸ் அவர்களுக்கு போலீஸ் தலைவர் (முதீர்) அவர்கள் கையால் பாராட்டு சான்றிதழும் மொபைல் போன் ஒன்றையும் பரிசாக வழங்கி கவுரவித்தனர். அன்றைய நிகழ்வில் கவுரவிக்கப்பட்ட ஒரே வெளிநாட்டினர் இவர் ஒருவரே.

இவரது நேர்மையை கொண்டாட இந்தியனாக, தமிழனாக, தஞ்சை தரணியனாக, அதிரை மைந்தனாக ஒவ்வொருவருக்கும் உரிமையிருக்கிறது. இஸ்லாம் கற்பித்த வழியில் பிறருக்கு முன் மாதிரியாய் அமைந்த இந்த அழகிய நிகழ்வை போற்றும் விதமாக நாமும் அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் ஏகன் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போமாக!

அதிரை அமீன்


courtesy:adiraiaim

Friday, November 28, 2014

அதிரை ஆயிஷா மகளிர் அரங்கில் மாபெரும் இரத்ததானம் முகாம்

அதிரை ஆயிஷா மகளிர் அரங்கில் மாபெரும் இரத்ததானம் முகாம் 

அதிரையில் SAMSUNG TAB 4 விற்பனைக்கு உள்ளது


அதிரையில் புத்தம் புதிய SAMSUNG TAB T 231 மொபையில் விற்பனைக்கு உள்ளது.
தொடர்புக்கு:9791013168 

அதிரையில் தொடர் மழை

அதிரையில் இன்று அதிகாலை 3 மணி முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது.
மேலும் தொடர்மழையால் அதிரை பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.இதனால் நமதூர் தக்வா பள்ளி மார்கெட் பகுதியில் மீன் வரத்து குறைவாக காணப்பட்டு வியாபாரம் மந்தமாக நடைபெறுகிறது.    

Thursday, November 27, 2014

நெய்னாஸ் கிச்சன்-மசாலா இட்லி செய்முறைநெய்னா'ஸ் முஷ் கிச்சனின் இன்றைய விஷேசமாக மசாலா இட்லி செய்முறை. 


பார்த்து, சமைத்து, ருசித்து மகிழுங்கள்.


மக்கள் சேவைகாக விரைவில் அதிரையில் புதிய கட்சி உதயம்

 அதிரை M.M.இப்ராஹீம் தலைமையில்  சேது ரோடு காம்ப்ளெக்ஸ்யில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

1. விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில துணைத்தலைவர் அதிரை M.M.இப்ராஹீம் மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஆலிம் M.முகம்மது காசிம் உள்பட அனைத்து நிர்வாகிகளும் ஒட்டமொத்தமாக விடுதலை தமிழ்புலிகள் கட்சியிலிருந்து விலகுவது என ஒரு மனதான முடிவு செய்யப்பட்டுள்ளது. 

2. வரும் காலங்களில் மக்கள் சேவை செய்வதற்கு புதிய அமைப்பை ஜனநாயக முறைப்படி தொடங்கி செயல்படுத்த மாநில அளவில் M.M..இப்ராஹீம் தலைமையில் 25 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 

3.அமைப்பின்  பெயர் மற்றும் கொடி பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். 

பேரூராட்சிக்கு எதிராக அறிவிக்கப்பட்ட சாலைமறியல் ஒத்திவைப்பு!

அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்படிருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளான 11வது வார்டில் புனரமைக்கப்படாத வாய்கள் அனைத்தும் முன்பு வாக்குறுதி கொடுத்தது போல் உடனடியாக புனரமைத்து தர வேண்டும் என்பதை வலியுறித்தி பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் செய்ய போவதாக துண்டு பிரசுரங்கள் மிகவும் பரவலாக விநியோகம் செய்யப்பட்டன.

இதனை கவனத்தில் கொண்ட அதிரை காவல்துறை சார்பில் தற்பொழுது இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாகவும் எனவே தற்காலிமாக சாலை மறியலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சம்மந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிரம்பும் செடியன் குளம்

அதிரை பேரூர் நிர்வாகத்தின் முயற்சியில் செடியன் குளத்திற்கு ஆற்று நீர் தற்போது மூன்று நாட்களாக வந்து கொண்டு இருக்கிறது.இன்னும் சில தினங்களில் குளம் நிரம்பும் என்று எதிர்பார்க்கபடுகிறது.மேலும் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் குளத்தில் குளிக்க துவங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.Wednesday, November 26, 2014

பட்டுகோட்டை திமுக ஒன்றிய செயலாளர் அதிரை வருகை

தஞ்சை மாவட்டம் முழுவதும் திமுக ஒன்றிய செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.இதில் பட்டுகோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலு அவர்களின் மகன் தமிழரசன் என்கின்ற ராமநாதன் வெற்றி பெற்றார்.இவர் பட்டுகோட்டை மேற்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள நகராட்சி பேருராட்சி ஊராட்சி ஆகிய பகுதிகளில் சென்று பார்வையிட்டு வருகிறார்.இந்நிலையில் இன்று மாலை அதிரை திமுக கட்சி அலுவகத்திற்கு வருகை தந்தார்.இதில் அதிரை திமுக பிரமுகர்கள் பொண்னாடை போற்றி வரவேற்றனர்.
   

அதிரையில் இரத்ததானம் முகாம்


அதிரை நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கத்தில் வருகின்ற 30-11-14 ஞாயிற்றுகிழமை அன்று தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அதிரை கிளை  மற்றும் காளி இரத்த வங்கி ஆகியோர் இணைந்து இரத்ததானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெறுகிறது. 

Tuesday, November 25, 2014

அதிரையில் பெண்கள் அரபிக்கல்லூரி


தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் ஆலோசனை கூட்டம் 22.11.2014 அன்று தவ்ஹீத் பள்ளியில் தலைவர் பீர் முகம்மது தலைமையில் நடைபெற்றது இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

1) வருகின்ற 30.11.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 2.00 வரை தஞ்சை காலி இரத்தவங்கியுடன் இனைந்து  நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் இரத்ததானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் நடத்துவது

2) வருகின்ற 2015 கல்வி ஆண்டில் இருந்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண் அரபிக்கல்லூரி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது


அதிரையின் மண்ணறை நிலை!


உலகத்தில் பிறக்கும் எல்லா உயிர்களும் இறப்பது நிச்சயம். இதை முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் கூட ஏற்றுக் கொள்கின்றார்கள். எப்போதாவது ஒரு நாள் இறப்போம் என்பதை எல்லோருமே நம்புகின்றார்கள். ஆனால் அவர்கள் நம்பக்கூடிய மரணத்திற்கும் நாம் நம்பக்கூடிய மரணத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அதாவது 'மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை இல்லையெனஅவர்கள் கூறுகின்றார்கள். நாமோ 'மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை இருக்கின்றதுஎன நம்புகிறோம். நாம் மரணித்துவிட்டால் நம்மை கப்ரில் அடக்கம் செய்வார்கள் அங்கே நமக்கு உயிர் ஊட்டப்படும். அதன்பின் இரு மலக்குகள் நம்மிடம் மூன்று கேள்விகள் கேட்பார்கள் சரியான விடை சொல்பவர்களுக்கு சுவர்க்கமும் தவறான விடை சொல்பவர்களுக்கு நரகமும் என முடிவு செய்யப்படும் எனவும் நம்புகிறோம்.
இன்று நமதூரில் மஸ்ஜிது அதிகம் இருப்பதை நாம் பார்த்து வருகிறோம் (அல்ஹம்துலில்லாஹ்) அதே போல் நமதூர் மக்கள் பல நாடுகளில் வசித்துவருகிறார்கள்.அதே போல் நமதூர் மக்கள் மிகவும் அழகான வீட்டை கட்டியிருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ் மேலும் பரக்கத்து செய்வானாக ஆமீன்
ஆனால் இன்று பல மஸ்ஜிதுகள் பல லட்சம் பல கோடி ரூபாய்கள் செலவில் கட்டப்படுகிறது அதில் தேவையான செலவும் உள்ளது தேவையில்லாத செலவும் செய்யப்படுகிறது.
நம்முடைய வீட்டில் அழகுபடுத்த எத்தனையோ செலவு செய்கிறோம் மின்சாரம் இல்லாவிட்டால் மின்சாரம் வருவதற்க்கு எத்தனையோ முயற்சி செய்கிறோம்.ஆனால் நம்முடைய உண்மையா வீட்டை  (கப்ரு)அழகுபடுத்த என்ன முயற்சி செய்தோம்?
இன்று நமதூரில் ஒரு சில மைய்யவாடி மட்டுமே இருக்கிறது அதுவும் நம்முடைய ஊர்மக்களுக்கு மிக குறைவே அந்த மைய்யவாடி சுமார் 75 வருடங்களுக்கு மேல் உருவாக்கப்பட்டது அதை உறுவாக்கியவர்களின் கப்ரை அல்லாஹ் சுவர்கத்தின் பூஞ்சோலையாக ஆக்கிவைப்பானாக ஆமீன்! இன்று இது போன்ற நிலங்கள் வாங்கினால் எவ்வளவு சிரமம். மேலைநாடுகளில் ஒருவர் மரணித்தால் எவ்வளவு சிரமம் அவருக்காக அவருடைய பெயரில் நிலங்கள் வாங்க வேண்டும் ஆனால் நமக்கெல்லாம்எந்த கஷ்டம் இல்லை இன்று நமதூர் மக்கள் தொகை படி சுமார் 10க்கும் மேற்பட்ட மைய்யவாடி தேவை!
 இன்று எத்தனை மஸ்ஜித் உள்ளதோ அதே போன்று அத்துனை மைய்யவாடி அவசியமே! அதே போன்று இருக்கிற மைய்யவாடியின் நிலை மிகவும் பரிதாவமாக உள்ளது மழை காலங்களில் ஒருவர் மரணித்து விட்டால் குழி தொண்டுவது மிகவும் சிரமமான காரியம் எத்தனையோ இடங்களில் குழி தொண்டவே முடியவில்லை எதோ கடமைக்காக செய்கிறார்கள்  நம்முடைய தாய் தந்தை நமக்காக எத்தனையோ அழகான வீட்டை நமக்கு கட்டிதந்தார்கள் நாம் அவர்களுக்காக எந்த வீட்டை கட்டி கொடுத்தோம்.மேலும் நமதூரில் ஒரு சில கப்ரூஸ்தானில் காமோன்ட் சுவரே இல்லை இதனால் எத்தனையோ மிருகங்கள் சென்று அந்த ஜனாஸாவை தின்றுவிடுகிறது ஜனாஸாலை சேதப்படுத்துகிறது. மேலும் ஒரு சில கப்ரூஸ்தானில் காடுகளாக இருந்து வருகிறது அங்கு செல்வதே மிகவும் அச்சமாக உள்ளது.
இன்று இதற்காக யார் நிலங்கள் வாங்கி கொடுக்கிறார்கள் இதனுடைய நன்மை நிற்தரமாக வந்து கொண்டே இருக்கும் கியாமத் நாள் வரைக்கும் எத்தனை ஜனாஸா அடக்கம் செய்யப்படுகிறதோ அத்துனை நன்மைகள் வந்து கொண்டே இருக்கும் வசதி படைத்த உள்ளங்களே முந்துங்கள் நன்மைகளை அள்ளி செல்லுங்கள்
ஜியாரத் செய்வது எப்படி??
கப்ருகளை ஜியாரத் செய்வதாக இருந்தால் பொதுவான கப்ருகள்(பொது மையவாடி) இருக்கும் இடத்துக்கு சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்களுக்காக இறைவனிடம் துஆ செய்யவேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் (தம் இருதி நாட்களில்)என்னுடன் தங்கியிருந்த ஒவ்வொரு இரவின் பிற்பகுதியிலும் (மதினாவில் உள்ள)பகீஉல் கர்கத் பொது மையவாடிக்குச் சொல்வார்கள்.அறிவிப்பவர்:ஆயிஷா(ரலி)அவர்கள்:நூல்:முஸ்லிம்
இவ்வாறு செய்வதின் மூலம் நமக்கு மறுமை சிந்தனை மற்றும் மரண சிந்தனை அதிகரிக்கும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.கப்ருகளைப் பார்க்கும் போது நாமும் மரணிக்கக்கூடியவர்கள் தான் நமக்கும் மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் இந்த உலகில் நாம் நிரந்தரமாக வாழப்போவது இல்லை என்று மரண சிந்தனை வரும்.அந்த அச்சம் அவனை தவருகள் செய்வதை விட்டும் தடுக்கும் நபி(ஸல்)அவர்கள் காட்டித்தந்த அடிப்படையில் தன் வாழ்கையை அமைத்துக் கொள்ள உதவும்.

கப்ரு ஜியாரத்தின் போது ஓதும் துஆ.
கப்ருகளை ஜியாரத் செய்யும் போது ஓதுவதற்கு நபி(ஸல்)அவர்கள் துஆக்களைக் கற்றுத் தந்துள்ளார்கள்.அந்த துஆக்களை நாமும் கப்ருளை ஜியாரத் செய்யும் போது ஓதவேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன வஇன்னா இன்ஷா அல்லாஹ் பிகும் லாஹிகூவ்ன்.
என்ற துஆவை நபி(ஸல்)அவர்கள் கப்ருகள் இருக்கும் இடத்துக்குச் சென்றால் கூறுவார்கள்.
(பொருள்: இறை நம்பிக்கை கொண்ட கப்ரு வாசிகளுக்கு அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.அல்லாஹ் நாடினால் நாமும் உங்களை சந்திக்கக்கூடியவர்களே!) அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி)அவர்கள் நூல்: முஸ்லிம்
ஜனாஸாவை பின் தொடர்வதின் சிறப்புகள்
யார் ஈமானுடனும் அல்லாஹ்விடம் நற்கூலியை ஆதரவு வைத்தவராகவும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்றுஇ ஜனாஸா தொழவைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் வரை அந்த ஜனாஸாவுடன் இருக்கிறாரோ அவர் இரண்டு 'கீராத்நன்மைகளைப் பெற்றுத் திரும்புகிறார். ஓவ்வொரு கீராத்தும் உஹது மலையைப் போன்றதாகும். யார் அந்த ஜனாஸாவின் தொழுகையில் (மட்டும்) கலந்து கொண்டுவிட்டு (நல்லடக்கத்துக்கு முன்) திரும்பி விடுகிறாரோ அவர் ஒரு 'கீராத்நன்மையைப் பெற்றுக் கொண்டு திரும்புகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
கப்ரின் வேதனைக்குக் காரணம் என்ன?
கப்ரின் வேதனைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
1. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளை விடுவது.
2. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளைச் செய்வது.
கப்ரின் வேதனையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு என்ன வழி?
1. செய்த தவறுகளுக்காக அல்லாஹ்விடம் உண்மையான தவ்பாச் செய்ய வேண்டும்.
2.  அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளில் முடியுமானவைகளைச் செய்ய வேண்டும்.
3. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளை முற்றாக விட்டுவிட வேண்டும்.
கப்ரைப்பற்றிய சில நபி மொழிகள்
நீங்கள் (ஜனாஸாவை) அடக்கம் செய்யமாட்டீர்கள் என்ற பயம் இல்லையென்றிருந்தால் எனக்கு கேட்கும் கப்ருடைய வேதனையை உங்களுக்கும் கேட்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் நான் துஆச் செய்திருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்)
மண்ணறையில் காலையிலும் மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகத்திலுள்ள அவனது இடம் அவனுக்குக் காட்டப்படும். 'மறுமை நாளில் இறைவன் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடம்என்று அவர்களிடம் கூறப்படும். (புகாரிஇ முஸ்லிம்)
ஒரு ஜனாஸாவை (இறந்தவரின் உடலை) மனிதர்கள் சுமந்து செல்லும் போது அவர் ஒரு நல்லடியாராக இருந்தால்இ '(நான் தங்குமிடத்துக்கு அவசரமாக) என்னை எடுத்துச் செல்லுங்கள்'எனக்கூறும். அவன் பாவியாக இருந்தால்இ '(எனக்கு) என்ன கேடுதான் பிடித்து விட்டதோ!என்று கூறியவாறு அலறும். இந்த ஓசையை மனிதர்கள்இ ஜின்கள் தவிர எல்லா உயிரினங்களும் செவிமடுக்கும். மனிதன் அச்சத்தத்தைக் கேட்டால் மயங்கிக் கீழே விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி)

''ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பதுநோயாளியை விசாரிப்பதுஜனாஸாவப் பின்தொடர்வது,விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.
நஜ்முதீன் (தீனியாத்ஆசிரியர்) 
காதீர்முகைதீன்ஆண்கள்மேல்நிலைப்பள்ளிஅதிரை

கவிதை தனிமை! அபுபக்கர்

தனிமை 
தனிமையின் கொடூர வலியில்...
வாழ்க்கையின் வழியை தேடினேன்!
இதயமே! சிந்தியது உதிரத்தை...
சுவைத்தேன் தனிமையின் நஞ்சயே!
தனிமை, தனிமை... நடந்தேன் எண்ணியே! நிழல்...
அருகாமையில் தனிமை எங்கே ? என்றே...

- Er.Z.முகம்மது அபுபக்கர் 


Monday, November 24, 2014

ரியாத் விளையாட்டு போட்டிகளில் அதிரை மாணவன் F.ராஷித்

சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்த அனைத்து பள்ளிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் நமதூர் ஆஸ்பத்திரி தெரு மாணவன் F.ராஷித் 100, 200 4 x 100 மற்றும் 4 x 400 ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்து கொண்டு 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மூன்றாமிடம் பெற்றார்.

ஜுபைல் இண்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூலில் படிக்கும் ராஷித், OKM ஃபத்ஹுத்தீன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: N.ஜமாலுதீன்

வெளிநாட்டில் பணிபுரிய ஆட்கள் தேவை!

மஸ்கட்டில் உள்ள ஒரு கம்பனிக்கு கேட்டரிங், ஹார்பர் கீலிங், சவுதி அரபியா ஜித்தா, குவைத் போன்ற நாடுகளிலும் பணி செய்ய ஆட்கள் தேவை .

தொடர்புக்கு
 அஜ்மீர் டிராவல்ஸ் ஏஜென்சீஸ் 31A கடைத்தெரு அதிராம்பட்டினம், தொலைபேசி எண்: 98945 5582, 95513 10938

அதிரையில் நாளை மின்தடை


அதிரை மின்சார வாரியத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளையதினம் (25-11-14) செவ்வாய்கிழமை  காலை 9 மணி  முதல் மாலை 6.00 மணி வரை நடக்கிறது.
இதனால் அதிரை சுற்று வட்டார பகுதிகளில் நாளையதினம் மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரிய அதிகாரிகளால் கூறப்படுகிறது.

செடியன் குளத்திற்கு ஆற்று நீர் செல்லும் காட்சிகள் (புகைபடங்கள்)

அதிரையில் உள்ள குளங்களுக்கு ஆற்று நீர் நிரப்பும் முயற்சியில் அதிரை பேருராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் தீவிரமாக செயல்பட்டனர்.இதில் அதிரையில் உள்ள காட்டு குளம்,மரைக்கா குளம்,செக்கடி குளம்,ஆலடி குளம் மன்னப்பாங் குளம் போன்ற குளங்கள் நிரப்பட்டது.

இந்நிலையில் மேலத் தெரு வார்டு மெம்பெர் அப்பியான் யூசுப் மற்றும் அதிரை ததஜ அமைப்பினர் ஆகியோர் அதிரை பேருராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் துணை தலைவர் பிச்சை ஆகியோரை சந்தித்து செடியன் குளத்திற்கு ஆற்று நீர் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர்.

இதனை அவரச கவனத்தில் எடுத்து கொண்டு அதிரை பேருராட்சி தலைவர் மற்றும் து.தலைவர் ஆகியோர் பொதுமக்களின் நலன் கருதி சமூக ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் செடியன் குளத்திற்கு நேற்று காலை முதல் சேரி வாயிலாக ஆற்று நீர் கொண்டு வரப்பட்டு பெத்தான் குளம் வழியாக இரவு 11.30 மணிக்கு ஆற்று நீர் செடியன் குளத்திற்கு ஆற்று நீர் வந்து அடைந்தது.தற்போது ஆற்று நீர் சீரான முறையில் செடியன் குளத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது.  

செடியன் குளத்திற்கு ஆற்று நீர் வாய்கால் மூலம் ஆற்று நீர் செல்லும் காட்சி 

செடியன் குளத்திற்கு பெத்தான் குளம் வழியாக மற்றும் தோப்பு வழியாக வாய்க்கால் அமைத்து ஆற்று நீர் செல்லும் காட்சிகள் செடியன் குளத்திற்கு அற்று நீர் செல்லும் பாதை