பசுமையாக மாறி வரும் கடற்கரை தெரு

அதிரை கடற்கரை பகுதி முழுவதும் மர கன்றுகளை அப்பகுதி வாழும் சமூக நலம் அக்கறையுள்ள இளைஞர்கள் நட்டு உள்ளனர்.இது அப்பகுதி பொதுமக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளது.  இதனை நாமும் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் சம்மந்தப்பட்ட  இளைஞர்களை பாராட்டி மகிழ்கிறோம். குறைந்த விலையில் ஆஸ்த்ரேலிய செல்ல ஒரு அறிய வாய்ப்பு


Share:

குறைந்த விலையில் ஆஸ்திரேலியா செல்ல ஒரு அறிய வாய்ப்பு !

ஆஸ்திரேலியா  நாட்டில் நடைபெறும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியினை நேரில் பார்க்க குறைந்த விலையில் செல்ல ஒரு அறிய வாய்ப்பு

go easy trip 
தொடர்புக்கு:9940409534,9500007338,+91 4442321100

கிழ்காணும் விபரங்களை கிளிக் செய்து பார்க்கவும் 


நான்கு நாட்கள் பேகேஜ்:2,07000(இரண்டு லட்சத்து  ஏழு ஆயிரம் மட்டுமே) 

ஆட்டம் :இந்தியா  vs பாகிஸ்தான் 

இந்த  ஆட்டத்தை பார்க்க, போட்டி டிக்கெட் கட்டணம் ,உணவு, தங்கும் விடுதி,விமான டிக்கெட் கட்டணம்   விசா கட்டணம் , அணைத்தும் 2,07000 ரூபாயில் அடங்கும்.

பத்து நாட்கள் பேகேஜ்:3,17500 மூன்று லட்சத்து பதினேழு ஆயிரம் மட்டுமே 

ஆட்டம்:இந்தியா  vs பாகிஸ்தான் மற்றும் இந்தியா  vs  தென் ஆப்பிரிக்க 

இந்த  ஆட்டத்தை பார்க்க போட்டி டிக்கெட்கட்டணம் ,உணவு,தங்கும் விடுதி,விமான டிக்கெட் கட்டணம்   விசா கட்டணம் , அணைத்தும் 3,17500 ரூபாயில் அடங்கும்.

Share:

அதிரையில் கேன்சர் கண்டறிதல் முகாம்-அதிரை இளம் மருத்துவர் பங்கேற்ப்பு

அதிரை காதர் மொய்தீன் பெண்கள் பள்ளியில்  அதிரை லயன்ஸ் சங்கம் , மற்றும் தஞ்சை கேன்சர் சென்டர்,காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம்  ஆகியோர் இணைந்து நடத்திய புற்றுநோய் கண்டறிதல் முகாம் இன்று காலை நடைபெற்றது.இதில் தலைசிறந்த மருத்துவர்களான அப்துல் ஹக்கீம், பாலகிருஷ்ணன், மருதுதுரை, விஜயா, கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் சீனாவில் மருத்துவம் படித்து பட்டம் பெற்ற அதிரையின் இளம் மருத்துவர் முஹம்மது  காமில் த/பெமுஹ்சின் (மொய்ணப்பா) கலந்து கொண்டார்.இம்முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Share:

மகாத்மா காந்தி நினைவு தினம்

 பட்டுக்கோட்டையில் அனைத்து நர்சிங் கல்லூரியில் இன்று  மாணவிகளுக்கு நடைபெற்ற தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை நடத்திய தொழுநோய் ஒழிப்பு பிரச்சாரம்.

பூச்சி மற்றும் நீரினால் பரவக்கூடிய நோய்களை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் NR ரெங்கராஜன் MLA, பட்டுக்கோட்டை நகர்மன்றத்தலைவர் சகோதரர் ஜவகர்பாபு, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் விவேகானந்தர், JCI தலைவர் வெங்கடேஷ் மற்றும் காதர் மொய்தீன் கல்லுரி பேராசிரியர் செய்யது அஹ்மத் கபீர் ஆகியோர் கலந்து கொண்டனர். 


Share:

தேச தந்தையை கொன்றவனுக்கு நம் தேசத்தில் சிலையா?

நாட்டின் பல்வேறு பகுதிகளில் SDPI  கட்சியினர் ஆர்பாட்டம்  !!
 நாட்டின் தேச பிதா என போற்றப்படும் அண்ணல் மகாத்மா காந்தியின்  நினைவு நாள்  முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் அண்ணல் காந்தியடிகளை கொன்ற கோட்சேவுக்கு நாட்டில் பல்வேறு பகுதிகளில் சிலையமைக்க ஆளும் பாஜக அரசு முயற்சித்து வருகிறது . இதனை பல்வேறு  அமைப்பினர் மற்றும் நடுநிலையாளர்கள் எதிர்த்து வருகின்றனர். 

அந்த வகையில் SDPI கட்சியின் சார்பில் சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. தஞ்சை மாவட்ட கிளையின் சார்பில் பட்டுகோட்டை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் இலியாஸ் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர் .மேலும் ஆர்ப்பாட்டத்தின் போது தேச துரோகி கோட்சேவின் உருவ பொம்மையை ஆர்ப்பாட்ட காரர்கள் தீயிட்டு கொளுத்தினர் . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது .
Share:

டிஸ்கோ டான்சா? என்னமா இப்டி பண்றிங்களே மா

தனியார் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளைத் தணிக்கை செய்வதற்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜி.அலெக்ஸ் பென்சீகர், ஏ.ஆரோக்கியதாஸ் உள்பட நான்கு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், தனியார் தொலைக்காட்சிகளில் ஆபாசமான நடனங்கள், தரக்குறைவான, வன்முறை அதிகம் நிறைந்த நிகழ்ச்சிகள் அதிகமாகஒளிபரப்பப்படுகின்றன.
இதில், குறிப்பாக பெண்கள், குழந்தைகளைப் பாதிக்கும் விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இதனால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி, தணிக்கை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.ந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு.

இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகள் முன் தணிக்கை செய்யப்படுவதில்லை. இருந்தாலும், கேபிள் டிவி நெட்வொர்க் சட்டம் 1995-ன் படி, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது கண்காணிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்படி, விதிமுறைகள் மீறப்பட்டால் தானாகவோ அல்லது புகார் ஏதேனும் அளிக்கப்பட்டாலோ, இந்த சட்டப் பிரிவு 20-ன் படி செய்தி, ஒலிபரப்புத் துறை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கிறது. திரைப்படத்துக்குச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, சினிமாச் சட்டம் 1952-இல் சில வழிமுறைகளை அரசு வெளியிட்டது. இதே போன்று, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்காணிப்பதற்கு எலக்ட்ரானிக் மீடியா கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

படத்தை இயற்றுமாறு அரசுக்கு நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பிரச்னைகளை உருவாக்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருந்த போதிலும், இது தகவல் தொழில்நுட்பக் காலம். இதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவது என்பது முடியாது ஒன்று. இந்த அனைத்து விஷயங்களும் சமூகப் பிரச்னைகளுடன் தொடர்புடையது. இது தொடர்பாக சட்டங்கள் தேவையா? இல்லையா? என்பது அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் முடிவு செய்ய வேண்டியது. எனவே, மனு முடித்து வைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

Share:

அதிரையில் குடிநீர் குழாய் சீரமைப்பு

அதிராம்பட்டினம் பேரூராட்சி 8 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதை கண்டித்து கடற்கரை தெரு ஜமாத் மற்றும் அதன் சார்ந்த அமைப்புகள் சார்பில் துண்டு பிரசுரங்கள் மூலம் எதிர்வரும்02-02-2015அன்று பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே கண்டனம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற இருந்த நிலையில் அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர.தொகுப்பு :அதிரை வானவில் 
Share:

அவசர பதிவு

தஞ்சையில் நாளையதினம் (31.01.2015) நடைபெற உள்ள அறுவை சிகிச்சைக்கு A1B Negative வகை இரத்தம் தேவை. இந்த வகை இரத்தம் தானம் செய்ய முன் வருவோர் கீழ் காணும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தொடர்புக்கு -ஜமால் 
9894500545Share:

சென்னையில் 10 நபர்களை மதம்மாற்றுவதற்கு யாகம் நடத்திய இந்து மக்கள் கட்சி

பிற மதங்களில் இருந்து தாய்மதமான இந்து மதத்துக்கு 10 பேரை மதம் மாற்றுவதாகக் கூறி இந்து மக்கள் கட்சியினர் யாகம் மற்றும் சடங்குகள் நடத்தியதால் சென்னையில் இன்று பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மேற்கு மாம்பலம் காஞ்சி காமகோடி பீடம் சங்கட மட கோவிலான காமாட்சி கோவிலில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த சுமார் 100 பேர் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதங்களில் இருந்து விலகி மீண்டும் தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்ப உள்ளதாக இந்து மக்கள் கட்சி தெரிவித்திருந்தது.  10 பேர் 'இந்து மதம்' திரும்பும் நிகழ்ச்சி- சென்னையில் பரபரப்பு!
ஆனால் திருவள்ளூர் மாவட்டம் மிஞ்சூர் ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் சேர்ந்த 10 பேர் மட்டுமே இந்நிகழ்ச்சிக்கு ஒரு காரில் அழைத்து வரப்பட்டனர். அவர்களது இயற்பெயர் ராஜேந்திரன்-அன்னக்கிளி, ஜெயராமன்-லட்சுமி, சேகர்-தெய்வநாயகி, சுப்பிரமணி- நாகம்மாள், ஜமுனா, மவுலி என்றும் கூறப்பட்டது.10 பேர் 'இந்து மதம்' திரும்பும் நிகழ்ச்சி- சென்னையில் பரபரப்பு!
இந்த 10 பேரையும் இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ராமரவிக்குமார் காலில் விழுந்து வணங்கி வரவேற்றார். பிறகு 10 பேரும் கோவிலுக்குள் அழைத்து செல்லப்பட்டனர். காமாட்சி அம்மன் சன்னதி முன்பு 10 பேரும் அமர வைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து 10 பேரையும் மீண்டும் இந்துக்களாக மாற்றுவதற்காக சடங்குகள் நடத்தப்பட்டன .
இது குறித்து இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹிம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மனு ஒன்றை அளித்தார். அதில், 'இந்து மக்கள் கட்சி நடத்தும் 'தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சிக்கு' தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனிடையே இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், 'தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக சென்னை அண்னாநகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கட்சியின் மாநில நிர்வாகிகள் 3 பேருடன் புறப்பட தயாரானார். அப்போது போலீசார் அவர்களை நிகழ்ச்சி செல்ல திடீரென தடை விதித்தனர். பின்னர் அர்ஜூன் சம்பத் உள்பட 4 பேரையும் கைது செய்து விட்டு காவலில் வைத்தனர்

Share:

மரண அறிவிப்பு


நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம்  நெ.மு.செ முஹம்மது ஹுசைன் அவர்களின் மகனும், மர்ஹூம் நெ.மு.செ அஹமது கபீர், தாஜுதீன், மர்ஹூம் அன்சாரி ஆகியோரின் சகோதரரும், சாகுல் ஹமீது, முஹம்மது ஹுசைன், முஹம்மது இப்ராஹீம் ஆகியோரின் தகப்பனாருமாண  ஹாஜி முகைதீன் சாஹிப் அவர்கள் இன்று  காலை வபாத்தாகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Share:

ஐக்கிய அரபு அமிரக ஜீம்மா உரை 31.01.2015Share:

முஷ் கிச்சன் வழங்கும் பீட்ரூட் ஹல்வா செய்முறை விளக்கம்.

அதிரை நெய்னா வழங்கும் முஷ் கிச்சன் வழங்கும் பீட்ரூட் ஹல்வா செய்முறை விளக்கம். பீட்ரூட் ஹல்வா செய்முறை விளக்கம்.


Share:

அதிரையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

தமிழக முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் அதிரையிலும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி அதிரை சேது ரோடு பகுதியில் இன்று முதல் நடைபெற்று வருகிறது.
 இதில் ஒன்றிய தலைவர் இளவரசன் ஒன்றிய பொதுச் செயலாளர்  பால்சாமி ஜீ ஒன்றிய செயலாளர் ரமேஷ்குமார் ஒன்றியதுணை தலைவர் சண்முகசுந்தரம் ஜீ உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் அதிரை  திருமுருகன் விஜயன் சிவா கோபு ஆகியோர் கலந்துகொண்டனர் .
Share:

அதிரை பகுதியில்அதிகளவில் குவியும் பறவைகள்


அதிராம்பட்டினத்தில் இயற்கை எழில் சூழ்ந்த  நீர் நிலைகளுக்கு பஞ்சமில்லை. ஏராளமான குளங்கள் உள்ளன. ஆறுகளும் ஓடுவதால். இங்குள்ள குளங்கள், ஆறுகளை யொட்டி ஏராளமான பசுமையான மரங்களும் உள்ளதால் குளு, குளு கால நிலை நிலவுகிறது பறவை இனங்களை கவர்ந்து இழுப்பதாக உள்ளது. வழக்கமான குளிர்காலமான செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வெளிநாட்டு பறவை இனங்கள் அதிகளவில் படையெடுப்பு வழக்கம். 
சுமார் 42–க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவை இனங்கள் சீசன் காலங்களில் வருகை தரும். தற்போது நீர் நிலைகளில் கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தண்ணீர் ஓரளவு காணப்படுவதால் பறவைகள்  உப்பளங்களிலும், குளங்களிலும் வெளிநாட்டு பறவைகளும் உள்நாட்டு பறவைகளும் திரண்டு நிற்கும் அழகை காண கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

 அதிரை நசுவினி ஆற்று பகுதியில்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் வாகனங்களை நிறுத்தி பறவைகளின் அழகை ரசித்து செல்கிறார்கள். நாமக்கோழி என்று அழைக்கப்படும் பறவைகள் அதிரை பகுதியில்பகுதியில் அதிகளவில் காணப்படுகிறது. இதுபோல கூழாக்கிடா, செங்கால் நாரை, சாம்பல் நாரை, நடுத்தர கொக்கு உள்பட கொக்கு வகைகளும் அதிகளவில் காணப்படுகின்றன. செய்தி அதிரை வானவில் 
Share:

தஞ்சையில் லயன்ஸ் மாநாடு-அதிரையர்கள் பங்கேற்ப்பு

தஞ்சையில் லயன்ஸ் கிளப்  மண்டல மாநாடு நடைபெற்றது.இதில் அதிரை நிர்வாகிகள்  ஹாஜி ஜனாப்.அப்துல் ஹமீது,ஹாஜி ஜனாப் முஹம்மது மொய்தீன்,  காதர் மொய்தீன் ஆசிரியர் அஹ்மது  கபீர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில்அதிமுக கழக பேச்சாளர்  நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

Share:

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நல்லாசிரியர் அதிரை மீரா!

இன்று (28.01.2015) மாலை இந்திய நேரப்படி மாலை 5.30 மணிமுதல் 6 மணிவரை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ள 'கற்க கசடற' என்ற நிகழ்ச்சியில் 'அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி? (HOW TO SCORE MORE MARKS/) என்ற பொருளின் கீழ் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்கள் அதிரை மேலத்தெருவை சேர்ந்தவரும், சென்னை திருவல்லிக்கேணியில் செயல்படும் முஸ்லீம் உயர்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியருமான 'மீரா' என்கிற F.சாகுல் ஹமீது அவர்கள்.

இந்த நிகழ்ச்சி நாளை (29.01.2015) வியாழன் அன்று அதிகாலை 5.30 மணிமுதல் 6 மணிவரை மறுஒளிபரப்பு செய்யப்படும்.

'நல்லாசிரியர்' விருதை சென்ற மாதம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற விழாவில் KSR GROUP OF INSTITUTION மற்றும் TIMES OF INDIA இணைந்து வழங்கிய விழாவில் இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் (INSA) தலைவர் டாக்டர் ராகவேந்திரா கடாகர் அவர்களாலும், சென்னை மயிலாப்பூரில் இயங்கும் SRINIVASA YOUNGMEN ASSOCIATION என்ற அமைப்பினராலும் 'SYMA' என்ற விருதை மயிலாப்பூர் போலீஸ் துணை ஆணையர் மூலமும் பெற்று தனது கல்விப்பணிக்காக சிறப்படைந்துள்ளார்கள்.


ஒரு முஸ்லீமாக மார்க்கத்தை பின்பற்றியும், தோற்றத்தில் வெளிப்படுத்தும் நிலையிலும் பல சிறப்புக்களை பெற முடியும் என சக முஸ்லீம்களுக்கும் நல் உதாரணமாக திகழும் 'நல்லாசிரியர்' மீரா என்கிற சாகுல் ஹமீது அவர்கள் மென்மேலும் சிறப்புற ஏகன் அல்லாஹ் துணை நிற்பானாக!

K.M.N. முஹம்மது மாலிக்
தலைவர் / TIYA
Share:

அதிரை பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம்

அதிரை அருகில் உள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

குறிப்பாக  ஏரிப்புறக்கரை பகுதி  கீழத்தோட்டம் சாலையில் உப்பள பகுதியில் சிறுத்தைபுலி உறுமல் சத்தம் கேட்டு ஒருவர் பயமடைந்து அருகில் இருந்த  மற்றொருவரை அழைத்தார்.இந்நிலையில் ஆள் நடமாட்டம் வர துவங்கியவுடன் சிறுத்தை புலி ஓடிவிட்டதாக கூறபடுகிரது.இந்நிலையில் தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அப்பகுயில் மயில் உட்பட பல விலங்குகளின் உடல்கள் கடித்து குதறப்பட்ட நிலையில்  இருப்பதால் சிறுத்தை புலி அடித்து கொன்று இருப்பதாக பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். 

Share:

மோடியின் மேக் இன் இந்தியா திட்டம்...!!!

மேக் இன் இந்தியா என்று ஊர் முழுக்க விளம்பரம் செய்யும் மோடி செய்த வேலை என்ன தெரியுமா...??
இந்தியாவின் 66வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் பெரிதும் சர்ச்சையை கிளப்பியது மோடி அணிந்திருந்த ஆடை.
நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ற தனது முழு பெயரையும் கோடுகள் போன்று எழுதப்பட்டிருந்த ஆடை.உலகிலேயே இந்த ஆடைக்கு தேவையான துணியை வழங்குவது லண்டனை சேர்ந்த Holland & Sherry Fabrics என்ற நிறுவனம். இது உலக புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பு நிறுவனம். இந்த நிறுவனம் பிரத்யேகமாக பல வகை ஆடைகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வரிசையில் அந்த நிறுவனம் வேளியிட்ட ஓர் ஆடைதான் "Signature Fabric". இது பல ரகங்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ஒரு மீட்டர் துணி 300 பவுண்டுகள்.இதன் சிறப்பம்சமே துணியில் கோடுகள் போன்று தனிமனிதர் பெயரோ அல்லது ஒரு நிறுவனத்தின் பெயரோ நெய்து தரப்படும்.இந்த ஆடையை தைப்பது சிட்னியை சேர்ந்த உலக புகழ் பெற்ற நிறுவனமான Tom James என்ற நிறுவனம்.
மோடி நேற்று அணிந்திருந்த ஆடையின் துணி மட்டும் 7 மீட்டர் நீளம் கொண்டது. அதன் மதிப்பு மட்டும் 3000 பவுண்டுகள்(2,78,200 ரூபாய்). இதனை தைப்பதற்க்கும் சேர்த்து ஆன மொத்த தொகை 10,000 பவுண்டுகள்(9,27,332 ரூபாய்).
எளிமையான தலைவர்,தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இந்திய கலாச்சாரத்தை காப்பாற்றும் மிக அற்புதமான தலைவர் செய்த வேலை தான் இது..!!
லண்டனில் இருந்து துணி...!!
அதனை தைக்க ஆஸ்திரேலிய கம்பெனி...!!
Share:

அதிரையில் நாளை மின் தடை

அதிரை மின்சார வாரியத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளையதினம் (29-1-15) வியாழன்கிழமை  காலை 9 மணி  முதல் மாலை 6.00 மணி வரை நடக்கிறது.

இதனால் அதிரை சுற்று வட்டார பகுதிகளில் நாளையதினம் மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரிய அதிகாரிகளால் கூறப்படுகிறது.

Share:

வளைகுடாவை ஆண்ட இந்திய ருப்பியாக்கள்-அதிரை அமீன்


பெட்ரோலும், தங்கமும் உலக பொருளாதாரத்தின் நேரடி செலாவணியாக இருக்க வேண்டிய இடத்தில் மறைமுகமாக திணிக்கப்பட்ட டாலரும், யூரோவும் இன்று கோலோச்சிக் கொண்டுள்ளதை கண்டுவருகிறோம் ஆனால் ஒரு காலத்தில் தந்திரமான நிர்ப்பந்தங்கள் ஏதுமின்றி இந்திய ரூபாய்கள் பல வளைகுடா நாடுகளில் பண்டைய காலம் தொட்டு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை டாலர், யூரோக்களுக்கு இணையாக அந்தந்த நாட்டு அதிகாரபூர்வ வளைகுடா ருப்பியாக்களாக அங்கீகரிக்கப்பட்டிருந்தன.


1965 ஆம் ஆண்டு தான் முதன்முதலாக, துபை தனிநாடாக (ஐக்கிய அரபு கூட்டு நாடுகளாக இணையுமுன்) இருந்தபொழுது தங்களுக்கென தனியான கரன்சி நோட்டுக்களை 'ரியால்' என்ற பெயரில் கத்தார் நாட்டுடன் இணைந்து அச்சிடத் துவங்கினர் இன்னும் சில வளைகுடா நாடுகள் 1970/71 ஆம் ஆண்டுகளில் தான் ருப்பியாக்களுக்கு மாற்றாக சுய கரன்சிகளை அச்சிட்டனர். 1972 ஆம் ஆண்டு முதல் தான் அமீரகத்தில் இன்றுள்ள வலுவான திர்ஹங்கள் தோன்றின.
 துபையும் கத்தாரும் இணைந்து 1965ல் அச்சிட்ட ரியால்கள் மற்றும் முதலில் அச்சிடப்பட்ட திர்ஹம்கள்
நமது பாட்டன் முப்பாட்டன் கால பொத்தல் காசு, வீசை, தோலா, அணா என அரசர்கள் கால, ஆங்கிலேய மற்றும் சுதந்திர இந்திய அச்சிட்ட இந்திய நாணயங்கள் மற்றும் நோட்டுக்கள், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலும் இங்கும் புழக்கத்தில் இருந்த 1 காசு, 2 காசு, 3 காசு, 5 காசு, 10 காசு, 20 காசு, 25 காசு, 50 காசு, 1 ரூபாய் நாணயம், ரூபாய் தாள்களாக 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் என நாம் கேள்விப்பட்ட, படாத அனைத்தும் சேகரிக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டுள்ளன அதாவது துபையில் இவை அனைத்தும் புழங்கிய பணங்கள் என்ற உயரிய அந்தஸ்துடன், இன்றைக்கு உள்ள இந்திய பணத்தை எக்ஸ்சேஞ்காரன் கூட வாங்க மறுத்து மூஞ்சை திருப்பிக் கொள்கிறான்.
 துபை அருங்காட்சியகங்கள் தொடர்பான பதிவுகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம், அதன் தொடர்பில் முக்கியமான ஷேக் சயீத் அல் மக்தூம் அவர்களின் மாளிகை சம்பந்தமாக விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும் என முன்பு அறிவிப்பு செய்திருந்தோம். அந்த மாளிகை தான் இந்தியா ருப்பியாக்களின் அருமை பெருமைகளை தன்னத்தே சுமந்து கொண்டுள்ளது.
 ஷேக் சயீத் அல் மக்தூம் மாளிகை
இன்றைய துபையின் ஆட்சியாளரும் அமீரகத்தின் துணை அதிபரும் பிரதமருமான ஷேக் முஹம்மது அவர்கள் இந்த மாளிகையில் தான் 1949 ஆம் ஆண்டு பிறந்தார்கள், காலப்போக்கில் சிதிலமடைந்த இந்த மாளிகை மீண்டும் 1983 ஆம் ஆண்டு மீண்டும் புனர்நிர்மானம் செய்யப்பட்டு இன்று ஓர் அருங்காட்சியமாக மாறி துபையின் பண்டைய வரலாற்றையும், அரச பரம்பரையின் குடும்ப வரலாற்றை எடுத்தியம்பும் புகைப்படங்களையும், 1965 ஆம் ஆண்டு வரை புழங்கிய மதிப்புமிக்க இந்திய கரன்சிகளையும் சேகரித்து வைத்துள்ளனர்.

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க, வாங்க! துபை வரலாற்றையும் சுருக்கமாக பார்த்து விடுவோம். 1833 ஆம் ஆண்டு அபுதாபி பிரதேசத்திலிருந்து வந்த 'பின் யாஸ்' குடும்ப வழித்தோன்றல்களான அல்மக்தூம் அரச பரம்பரையினர் துபை பிரதேசத்தை கைப்பற்றி சுமார் 180 ஆண்டுகளாக இன்றும் ஆட்சி செலுத்தி வருகின்றனர்.

துபை பிரதேசம் பண்டைய வணிக கடல்வழியின் பிரதான தடத்தில் அமைந்திருப்பதால் பல நாடுகளும் இதை தங்களின் வணிக விருத்திக்காக கைப்பற்ற முயன்றுள்ளனர் என்பதால் அன்றைய துபை ஆட்சியாளர்கள் பிரிட்டீஷ் அரசாங்கத்துடன் ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக தான் பிரிட்டீஷ் இந்தியாவின் கரன்சிகள் வணிகம் மூலம் இப்பிரதேசத்தின் உள்ளே புகுந்து விளையாடியுள்ளது மேலும் சுதந்திர இந்தியாவிலும் பல ஆண்டுகள் தொடர்ந்த 'துபை அஞ்சல்துறை' போன்ற அரசு நிறுவனங்களையும் பிரிட்டீஷ் இந்திய அரசாங்கமே நடத்தி வந்துள்ளது.

ஆர்வமுள்ள மகாஜனங்களே! 3 திர்ஹம் செலுத்தி உள்ளே வந்துதான் பாருங்களேன், இன்னும் நெறைய தெரிஞ்சுகுவீங்க!

அதிரைஅமீன்

 துபையில் பல்வேறு காலகட்டங்களில் குறிப்பாக விக்டோரியா மகாராணி, ஐந்தாம் மற்றும் ஆறாம் ஜார்ஜ் மன்னர்கள், ஏழாம் எட்வர்ட் காலத்திய பிரிட்டீஷ் இந்திய காசுகள் (இன்னும் உண்டு ஏராளம்)
 ஸ்டாம்ப் கலெக்ஷன்ஸ்


குறிப்பு: 
புகைப்படங்கள் அதிகமாகிவிட்டதால் அரச குடும்பத்து படங்களை பதிய இயலவில்லை
Share: