பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்


 பெட்ரோல் மற்றும் டீசல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன.

சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து வந்தன.

ஆனால் சமீபத்தில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. இந்நிலையில், தற்போது மீண்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.18ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.09ம் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.இந்த விலை உயர்வு இன்று (28ஆம் தேதி) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரபகுதி
Share:

மத்திய அரசின் மதவெறி நடவடிக்கைகளை கண்டித்து பிரம்மாண்ட தொடர் முழக்க ஆர்பாட்டம்.!!!

மத்தியில் பாஐக ஆட்சி அமைத்ததிலிருந்து சங்பரிவார்கள் இந்தியா முழுவதும் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் முகமாக தொடர் தாக்குதலையும்,பொருளாதார சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர்.நாட்டின் விடுதலைக்காக பாடுப்பட்ட காந்தியை சுட்டுக்கொன்ற பயங்கவாதி கோட்சேவின் சிலையை வைப்போம் எனக்கூறி நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

அமைதி பூங்காவான தமிழகத்திலும் இதுபோன்று மத துவேசங்கள் மற்றும் பாசிச நடவடிக்கைகள் மூலம் வன்முறை நிகழ்த்த திட்டமிடப்படுகிறது.மத்திய பிஜேபி அரசு மற்றும் அதன் ஆதரவு தீவிரவாத இயக்கங்களின் மதவெறி நடவடிக்கைகளை கண்டிக்கும் முகமாக இந்து,இஸ்லாமிய,கிருஸ்தவ மக்களின் கூட்டமைப்பான "தேச ஒற்றுமை இயக்கம்"சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் பிரம்மாண்ட தொடர் முழக்க ஆர்பாட்டம் இன்று(28.02.15)நடைபெற்றது.இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள்,இஸ்லாமிய அரசியல் கட்சிகள்,இந்து மற்றும் கிருஸ்தவ அமைப்புகள்,மதவெறியை எதிர்க்கக்கூடிய மதசார்பற்ற அரசியல் கட்சிகள் கலந்துக்கொண்டு தங்களின் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர்.இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.
Share:

மலேசியாவில் 35 வருடங்களாக தொழில் செய்துவரும் அதிரையர்!


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதியை சேர்ந்த நெய்னா முகம்மது என்பவர் கடந்த 35 வருடங்களாக மலேசியாவில் கடல்பாசி பால் விற்பனை செய்து வருகிறார்.

பெரும்பாலும் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த பலர் இன்று உலகில் உள்ள பல நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இன்னும் சிலர் வெளிநாடுகளில் தாமாகவே சொந்த தொழிலும் செய்து வருகின்றனர். அந்த வகையில் அதிராம்பட்டினம் ஹாஜா நகரை சேர்ந்த நெய்னா முகம்மது என்பவர் மலேசியாவில் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா அருகே நாட்டு கோழி முட்டை பால், பனங் கற்கண்டு பால், கடல்பாசி போன்ற மனித உடலுக்கு இயற்கையாக ஊட்டமளிக்கும் வகையிலான மருத்துவ குணம் கொண்ட பால் விற்பனையில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுப்பட்டு வருகிறார். 

இவர் விற்பனை செய்யும் பால் மற்றும் உணவு வகை இங்குள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இதனால் கடந்த 35 ஆண்டுகளாக இவர் இந்த தொழிலை செய்து வருகிறார். இன்றைய சூழலில் அதிரையர்கள் பலர் தமது சொந்த நாட்டிலேயே சுயதொழில் தொடங்கி நடத்தி வரும் நிலையில் இவர் 35 ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாட்டில் சுயதொழில் தொடங்கி நடத்திவருவது இங்கு குறிப்பிடத்தக்க கூடுதல் தகவலாகும்.
விளம்பரபகுதி
Share:

பாஸு நீங்க எங்க இருக்கீங்க

கடந்த சில தினங்களுக்கு முன்பு  மத்திய அரசின் இரயில்வே பட்ஜெட் தாக்கல் செயயப்பட்டதை .அனைவரும் அறிவீர்கள்.இதில் புதிதாக திட்டம் சொல்லும்படி இல்லையென்றாலும் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட  திருவாரூர் - காரைக்குடி மார்க்க அகல ரயில் பாதையின் முதற்கட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், பட்டுகோட்டை - தஞ்சை ,பட்டுகோட்டை - மன்னார்குடி,தஞ்சாவூர்-அரியலூர் ஆகிய புதிய வழித்தடங்கள் ரத்து செய்யபட்டது தஞ்சை டெல்ட பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.பட்டுகோட்டை -தஞ்சை வழித்தடங்கள் கைவிடபட்டது ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.கடந்த நாடாளுமன்ற தேர்தல் ரயில் தடங்களை ஒரு வாக்குறிதியாக வைத்து ஒட்டு வாங்கி அதிமுக வேட்பாளர் சு.பரசுராமன் அவருடைய தஞ்சை தொகுதிக்கு கைவிடப்பட்ட    இந்த திட்டத்திற்காக நாடாளுமன்றத்தில் பேசி இருக்கலாம் என்பது பொதுமக்களின் கவலையாக இருந்து வருகிறது.பட்டுகோட்டை - தஞ்சை வழிதடம் பேருந்து நிறுவனங்களுக்கு கல்லாக்கட்டும் பகுதியாக இருக்கிறது. 

பாஸு இருக்கின்ற திட்டதயாவது வேகமா போடா  சொல்லுங்க 

கண்ணீருடன்  
சுனாபானா  
Share:

ஏழைகள், விவசாயிகள், பெருநிறுவனங்களை இலக்கு வைத்த 'ஜேட்லி பட்ஜெட்'

                                                 மத்திய பட்ஜெட்- 2015
 1. -ஏழைகள், விவசாயிகள், பெருநிறுவனங்களை இலக்கு வைத்த 'ஜேட்லி பட்ஜெட்'
 • -தனி நபர் வருமான வரி செலுத்துவோருக்கு ரூ. 4,44,200 வரை வரி விலக்குகள் அறிவிப்பு- ஜேட்லி.
 • -மாத ஊதியம் பெறுவோருக்கான பயண அலவன்ஸ் உச்சவரம்பு ரூ. 800ல் இருந்து ரூ. 1,600 ஆக அதகரிப்பு.
 • -மருத்துவ காப்பீட்டு பிரீமியத்துக்கான வரி விலக்கு ரூ. 15,000ல் இருந்து 25,000 ஆக அதிகரிப்பு.
 • -தூய்மை இந்தியா திட்டத்துக்கு நிதி வழங்கும் நிறுவனங்களுக்கு முழு வரிவிலக்கு.
 • -சேவை வரி 12.34%-ல் இருந்து 14% ஆக அதிகரிப்பு.
 • -செல்வந்த வரி விதிப்பு முறை கைவிடப்படுகிறது.
 • -ஆண்டு வருமானம் ரூ1 கோடிக்கு அதிகம் பெறுவோர் 2% வரி செலுத்த வேண்டும்.
 • -மாத ஊதியம் வாங்குவோரின் வருமான வரியில் மாற்றம் இல்லை.
 • -ரூ1 லட்சத்துக்கும் அதிகமான பணபரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயம்.
 • -மொத்த வரி வருவாய் ரூ. 14.49 லட்சம் கோடியாக இருக்கும்.
 • -இந்த ஆண்டு மொத்த செலவு ரூ. 17.77 லட்சம் கோடியாக இருக்கும்.
 • -திட்டச் செலவுகள் ரூ. 4.65 லட்சம் கோடி, திட்டம் சாரா செலவுகள் ரூ. 13.12 லட்சம் கோடி.
 • -ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் பினாமிகள் பெயரில் சொத்துகள் வாங்கி குவிப்பதைத் தடுக்க சட்டம்..
 • -வெளிநாட்டு முதலீடு, வங்கி முதலீடுகளை ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
 • -வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது இதை அவசியம் செய்ய வேண்டும்.
 • -கருப்பு பணம் பதுக்கினால் 10 ஆண்டு சிறை.
 • -கருப்பு பணம் பதுக்கலை தடுக்க வரி விதிப்பில் திருத்தம்.
 • -வெளிநாட்டு சொத்துகளை மறைத்தால் 7 ஆண்டுகள் சிறை.
 • -வெளிநாட்டு முதலீடுகளை கணக்கில் காட்டாவிட்டால் கடும் நடவடிக்கை.
 • -வெளிநாட்டில் கருப்புப் பணத்தை மறைத்து வைத்தால் 10 ஆண்டு சிறை.
 • -வெளிநாட்டில் பதுக்கிய நிதியைப் போல் 300 சதவீதம் அபராதம்.
 • -இதற்காக புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.
 • -தனிநபர் வருமான வரி விலக்கு சலுகை தொடரும்: அருண் ஜேட்லி
 • -கார்ப்பரேட் வரிக் குறைப்பு அடுத்த ஆண்டு முதல் அமலாகும்.
 • -பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 25 சதவீதம் அதிகரிப்பு.
 • -வர்த்தக நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பு.
 • -கார்பரேட் வரி குறைப்பு 4 ஆண்டுகள் அமலில் இருக்கும்.
 • -பாதுகாப்புத் துறைக்கு ரூ2,46,727 கோடி ஒதுக்கீடு.
 • -கல்வி, மதிய உணவிற்கு ரூ. 68,968 கோடி நிதி.
 • -சுற்றுச் சூழலை பாதிக்காத மின்சார கார்கள் உற்பத்திக்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு.
 • -பீகார், மேற்கு வங்கத்துக்கு சிறப்பு நிதி உதவி வழங்கப்படும்: அருண் ஜேட்லி.
 • -தமிழகம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல், அஸ்ஸாமில் எய்ம்எஸ் மருத்துவமனைகள்
 • -டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்
 • -இந்திய தங்க நாணயங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் நாணய இறக்குமதி குறையும்
 • -அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள் வெளியிடப்படும்
 • -தங்க பத்திரத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் தங்கத்தை அடகு வைப்பது குறையும்.
 • -மின்சார கார்கள் உற்பத்திக்கு ரூ75 கோடி ஒதுக்கீடு.
 • -நிர்பயா திட்டத்துக்கு கூடுதலாக ரூஆயிரம் கோடி ஒதுக்கீடு
 • -150 நாடுகளைச் சேர்ந்தோர் இந்தியாவுக்கு வந்து விசா பெற்றுக் கொள்ள அனுமதி.
 • - இப்போது 43 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கே இந்த வசதி உள்ளது.
 • -100 நாள் ஊரக வேலை திட்டத்திற்கு 34,699 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
 • -அசோகச் சக்கரம் பொறித்த தங்க நாணயம் வெளியிடப்படும்.
 • -தங்க பத்திரத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
 • -கூடங்குளம் 2வது அணு உலையானது 2015-16ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கும்: அருண் ஜேட்லி.
 • -தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
 • -நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ. 340 பில்லியனாக உள்ளது.
 • -புதிய சாப்ட்வேர் நிறுவனங்கள் தொடங்க ரூ. 1,000 கோடி நிதி.
 • -சுயதொழில் தொடங்குவோருக்கு உதவ ரூ. 1,000 கோடி.
 • -4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுடைய 5 பெரும் மின் திட்டங்கள்.
 • -ரயில்வே, சாலை திட்டங்களுக்கு நிதி திரட்ட வரியில்லா பத்திரங்கள்
 • -பள்ளிகளில் டி.சி பெறாமல் வெளியேறும் சிறுபான்மையினர் இன இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற புதிய சான்றிதழ் அறிமுகம்.
 • -உள்கட்டமைப்பு வசதிக்கு ரூ70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
 • -சிறுபான்மை இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கு 'நயி மன்சில்' திட்டம்.
 • -முதியோர் பென்சன் திட்டம் அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் அமலாகும்
 • -இதற்கான நிதி பிஎப் கணக்குகளில் கேட்பாரற்று கிடக்கும் பணம் மூலம் பெறப்படும்.
 • -உரிமை கோரா பி.பி.எப். தொகை ரூ3 ஆயிரம் கோடி மற்றும் ஈ.பி.எப். தொகை ரூ6 ஆயிரம் கோடி முதியோர் நலனுக்கு ஒதுக்கீடு.
 • -நாடு முழுவதும் அனைவருக்கும் இன்சூரன்ஸ் திட்டம் அமலாக்கப்படும்
 • -ஆண்டுக்கு ரூ. 12 செலுத்தினால் விபத்தில் பலியானவருக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.
 • -முதியோருக்கு பென்சன் வழங்கவும் திட்டம். இதற்கான பிரீமியத்தில் 50 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும்.
 • -தபால் நிலையங்களை வங்கிகளாக மாற்ற நடவடிக்கை.
 • -நாடு முழுவதும் அனைவருக்கும் இன்சூரன்ஸ் திட்டம் அமலாக்கப்படும்
 • -ஆண்டுக்கு ரூ. 12 செலுத்தினால் விபத்தில் பலியானவருக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.
 • -முதியோருக்கு பென்சன் வழங்கவும் திட்டம். இதற்கான பிரீமியத்தில் 50 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும்.
Share:

தாஜுல் இஸ்லாம் சங்கம் அமைத்த மணிகூண்டு

அதிரை மேலத்தெருவில்உள்ள  தாஜுல் இஸ்லாம்  இளைஞர்கள் சங்கத்தின் சார்பாக புதிதாக மணி கூண்டு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதிரையில்  அமைந்த முதல் மணிகூண்டு என்று சொள்ளலாம்.

இந்த மனிகூண்டைஏராளமான சிறுவர்கள்  கண்டு ரசித்து செல்கின்றனர் ,  மணிகூண்டு அவ்வழியில் வரும் வாகன ஓட்டிகளை வெகுவக கவர்ந்து உள்ளது .மேலும் மணியை பொழுதை அறிய உதவியாக இருக்கிறது என்ன அத்தெருவாசிகள் கருத்து கூறிகிறார்கள்.  இந்த மனிகூண்டை  மேலத்தெரு இளைஞர்கள் உதவியுடன் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

 Share:

எங்களை ஏமாற்ற நினைப்பது ரொம்ப தப்புங்க!?. அதிர்ச்சியாக இருக்குதுங்க. <படங்கள்>


நுகர்வோர்களுக்கு தரமான சாமான்களை தகுந்த முறையில் வரவழைத்து கொடுப்பது (விற்பது) ஒவ்வொரு கடைகாரரின் கடமை. சில வேளைகளில் சில சாமான்களுக்கு. உணவு சாமான்கள் உள்பட குறிப்பிட்ட நாட்களுக்குள் உபயோகித்துவிட வேண்டும் என்று தயாரிப்பாளர்களால் அறிவிக்கப்படுவதும் உண்டு.

அப்படி அறிவிக்கப்பட்டும் விற்கப்படாமல் இருந்தால், அந்தப் பொருளை திரும்ப தயாரிப்பாளர்களிடம் கொடுத்து விடவேண்டும், அதுவரையில் அந்தப் பொருளை தனியாக வேறு ஒரு இடத்தில் வைத்து யாரும் எடுத்துவிடாமல் பாதுகாப்பது கடைக் காரரின் கடமை.

நடந்தது என்ன தெரியுமா?
இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள சிப்சை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள், இதை சாப்பிட ஆசைப்பட்டு வாங்கினேன், நான் எந்தப் பொருளை வாங்கினாலும் நன்றாக பார்த்துதான் வாங்குவேன்.

நன்கு தெரிந்த கடை, பழகின கடை, நன்றாக நம்பலாம் என்ற அடிப்படையில் 27/02/2015-அன்று ஆறு பாக்கெட் சிப்சை “செக்கடிக் குளத்திற்கு தெற்கே, மரைக்கா பள்ளிக்கு கிழக்கே, வாய்க்கால் தெருவுக்கு மேற்கே, தக்வா பள்ளி முக்கத்துக்கு வடக்கே.இந்த நான்கு எல்லைகளுக்குள் அமையப்பெற்ற பகுதியில் உள்ள கடைகளில் ஒரு கடையில் வாங்கி வந்தேன்.

வீட்டுக்கு வந்து அதை பிரித்து ஒரு சிப்சை எடுத்து வாயில் வைத்தால் ஒரு மாதிரியான இனம் தெரியாத சுவை, பூசன நாற்றம், அப்படியே துப்பிவிட்டு, பேக்கிங்கை கவனித்தால் அப்படியே அசந்து போய்விட்டேன்.

NET WT; 20Gms. MRP: Rs:6.00
Packed on:……….. ./2014,
BEST BEFORE 20 DAYS FROM PACKAGING
இப்படி எழுதப்பட்டு இருந்தது.

இது ஒரு குடிசைத் தொழில், தயாரிப்பாளர் கூற்றுப்படி பார்த்தல், இந்த உணவுப் பொருளை பிளாஸ்டிக் பையுக்குள் அடைக்கப்பட்ட தினத்திலிருந்து 20-நாட்களுக்குள் சாப்பிட்டு விடவேண்டும். மேலும் அந்த தினத்துக்குள் கடைக் காரர் விற்றுவிட வேண்டும். இதுதான் உண்மையான முறை.

20-தினங்கள் சரி, எந்த நாளிலிருந்து 20-தினங்கள்?

தயாரிப்பு தேதி, முடிவுபெறும் தேதி, தொலைபேசி எண், போன்ற முழு விபரங்கள் அதில் இல்லை. முகவரி மட்டும் இருக்கின்றது.

முழு விபரங்கள் தராதது தயாரிப்பாளரின் தவறு.
முழு விபரங்கள் இல்லாத பொருளை வாங்கி விற்பது கடைக் காரரின் தவறு.
கவனிக்காமல் வாங்கினது என்னுடைய தவறு.

இந்த தவறுக்கு என்னை யாரும் தண்டிக்க முடியாது.

கடைக்காரர், தயாரிப்பாளர், இந்த இரண்டு பேர்களையும் தண்டிக்க சந்தர்ப்பம் இருக்குது.

குடிசைத் தொழில் என்ற பெயரை வைத்துக்கொண்டு பல கோல்மால் நடக்கலாம், முகவரி போலியாக இருக்கலாம், முதலாளிக்கு தெரியாமல் தொழிலாளி இப்படி செய்யலாம், வரி கட்டாமல் அரசை ஏமாற்றலாம்.

இன்ஷா அல்லாஹ், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்ற விபரங்கள் இதே தளத்தில் தொடர்ந்து வரும்.


இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
kmajamalmohamed@gmail.com


விளம்பரபகுதி
Share:

அதிரைக்கிளையின் ஆலோசனைக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரைக்கிளையின் ஆலோசனைக்கூட்டம் 27.2.2015 வெள்ளிக்கிழமை சுபுஹு தொழுகைக்கு பிறகு தவ்ஹீத் பள்ளியில் கிளைத்தலைவர் பீர் முகம்மது தலைமையில் நடைபெற்று இதில் விரைவில் துவங்கவுள்ள அல்-ஹிக்மா இஸ்லாமிய பெண்கள் கல்லூரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

1) கல்லூரி நடைபெற இருக்கும் கட்டிடத்தில் மின்சாரம் வேலைகள்  தண்ணீர்  வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்வது
2) கல்லூரி பற்றி இரண்டு இடங்களில் பேனர் வைப்பது
3) உணர்வில் விளம்பரம் செய்வது
4) கல்லூரியின் சேர்க்கை வின்னப்பத்தை உடனடியாக பொதுமக்களிடம் வினியோகம் செய்வது
5)கல்லூரிக்கு கூடுதலாக ஆசிரியர்களை நியமிப்பது

6)அல்-ஹிக்மா பெண்கள் கல்லூரிக்கு மௌலவி அஸ்ரப்தீன் பிர்தவ்ஸியை முதல்வராக நியமிப்பது

7) கல்லூரிக்கு வெளியே கல்லூரி நிர்வாக பொறுப்புகளை கவனிப்பதற்கு சகோதரர் கிளை செயலாளர் பக்கீர் முகைதீனை நியமிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
நன்றி அதிரை tntj 
விளம்பரபகுதி
Share:

அமிரகத்திள் ஓதப்படும் ஜீம்மா உரை 27-02-15தலைப்பு : நடுநிலையாக நடந்து கொள்வோம்!
                      மனித நேயத்தை காப்போம்!விளம்பரபகுதி

Share:

அதிரை வாலிபரை காணவில்லை

அதிரை காலியார் தெருவை சார்ந்த முஹம்மது இஸ்மாயில். இவரது மகன் ஜமால் முஹம்மது  வயது 38  நமதூர்  ரஹ்மானியா மதராஸாவில் ஆலிம் பட்டம் பெற்றவர். காலியார் தெருவில் தமது இல்லத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சற்று உடல் நிலை பாதிப்படைந்து காணப்பட்டார்.

மருத்துவ சிகிச்சைக்காக இன்று மதியம் பட்டுக்கோட்டை சென்றவர் இதுவரையில் ஊர் திரும்பவில்லை. இவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக அதிரை காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருக்கின்றனர். இவரை பற்றிய தகவல் கிடைத்தால் கீழ்கண்ட தொலைபேசி  எண்ணுக்கு உடனடியாக தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க அன்புடன் கேட்டு கொள்ளிகிறோம் .
                                                தொடர்புக்கு 7418596423

விளம்பரபகுதி
Share:

நெய்சோறு கூட்டாளி தேங்காபால் ரசம் செய்முறை

அதிரை திருமண வீடுகளில் மிக பிரபலமாக விளங்கும் நெய்சோறு தேங்காபால் புளியாணம்.செய்முறையை நமது அதிரையை சேர்ந்த சமையல் நிபுணர் முஷ் கிச்சன் நெய்னா அவர்களின் காணொளி விளக்கம் இதோ உங்கள் பார்வைக்கு 


Share:

வீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா?


’டேய் மச்சான் உனக்கு வீடியோ வந்துச்சா..?’ - இன்றைய தேதிக்கு இளசுகள் பலரும் கேட்கும் கேள்வி இதுதான். முன்பெல்லாம் ஆபாச வீடியோக்களை மறைமுகமாக, ப்ரௌசிங் சென்டரிலோ அல்லது கொஞ்சம் வசதியானவர்கள் வீடுகளில் உள்ள தங்களது கம்ப்யூட்டரின் மூலமாகவோ யாரும் இல்லாத போது பார்ப்பார்கள். இப்போது நிலைமை வேறு. டெக்னாலஜி வளர்ச்சி என உலகமே சுருங்கி பாக்கெட்டில் மொபைலாக மாறிவிட்டது.
சாதாரண மனிதன் துவங்கி அசாதாரண மனிதன் வரை ஆண்ட்ராய்டு போன் இப்போது எல்லா மக்களிடமும் உள்ளது. இந்நிலையில் வாட்ஸப் , முகநூல் என அனைத்தும் இப்போது கையில். ஆபாச வீடியோக்களை, தேடி சென்று பார்த்த காலம் போய் இப்போது கொஞ்சம் நவீனத்துவமாக நம் கையிலேயே கிடைத்து விடுகிறது. இது தவறு என நினைத்து ஒதுக்கினால் கூட, வாட்ஸப்பில் வம்படியாக வந்து வவிழுகின்றன.

அப்படித்தான் சமீபகாலமாக ஹீரோயின்களின் வீடியோக்கள், புகைப்படங்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. இது மார்ஃபிங்கா, இல்லை உண்மையான வீடியோக்களா என சிந்திப்பதற்கு முன்பு, அவர்கள் ஹீரோயின்கள் என்பதால் அது அனைவரின் பார்வைக்கும் வந்துள்ளது. ஆனால் உண்மையில் இது பொதுவாக பெண்கள் சார்ந்த ஒரு அபாயம் என்றே சொல்ல வேண்டும். இதுபோல் எத்தனையோ பெண்கள், எத்தனையோ முறையில் வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் தினமும் லட்சங்களில் பரிமாறப்படுவது உங்களுக்கு தெரியுமா?

இது உண்மை எனில்... இந்த வீடியோக்கள் எப்படி உருவாகியிருக்கும்?

தனிமை. தனிமையில் ஒவ்வொரு மனிதனும் தங்களது உடல் அழகை ரசிப்பது சாதாரண விஷயம்தான். முன்பு கண்ணாடியில் பார்த்தோம், இப்போது டெக்னாலஜி வளர்ச்சியால்   செல்ஃபிக்கள், வீடியோக்கள் என எடுத்து பார்ப்பது வழக்கமாகிவிட்டது. அதை அழிக்காமல் நம் மொபைல்தானே என நினைத்து அப்படியே விட்டுவிட்டால், நம் மொபைலுக்குள் ஆக்கிரமித்து இருக்கும் அப்ளிகேஷன்களே அவ்வீடியோக்களை தற்காலிக சர்வருடன் இணைத்து விடும். கை தவறி போகலாம். அல்லது மொபைல் ரிப்பேர், யூஎஸ்பி கனெக்ஷன் என பல வழிகள் உள்ளன பரவுவதற்கு. மேலும் நாம் அழித்துவிட்ட இதுபோன்ற பைல்களும் மேற்கூறிய வழிகளில் பரவுவதற்கான ஆபத்து உள்ளது. 

இன்னொருபுறம், நமக்கு நெருங்கிய வீட்டில் உள்ள வேலையாட்கள் மூலமாகவோ அல்லது நண்பர்கள் மூலமாகவோ படம் பிடிக்கப்பட வாய்ப்புகளும் உள்ளன. மேலும் பாய் ஃப்ரண்ட், கேர்ள் ஃப்ரண்ட் , காதல் என்ற பெயரிலும் இப்போதெல்லாம் ஆண் , பெண்கள் தங்களது அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்ள துவங்கிவிட்ட நிலையில் அப்படியும் போகலாம்.பொய்யெனில் எப்படி உருவாகியிருக்கும்?


நாம் எடுக்கும் சாதாரண செல்ஃபி மற்றும் செல்ஃபி வீடியோக்கள்தான் காரணம். நம் முகத்தை வேறு ஒரு பெண்ணின் உடலில் அப்பட்டமாக நாம் போன்றே மார்பிங் செய்ய முடியும் . எனவேதான் பெண்கள் தங்களது செல்ஃபிக்கள், போட்டோக்களை முடிந்தவரை சமூக வலை தளங்களில் தவிர்த்து விடுங்கள் என பல சமூக அமைப்புகள் வலியுறுத்துகின்றன. 

இதில் பெண்கள் மட்டும்தான் பாதிப்படைகின்றனரா?

இல்லை. ஆண்களுக்கு வேறு விதமாக. சில ஆண்களுக்கு ஆபாச வீடியோக்கள், சைட்டுகள் என்றாலேஎன்னவென்று தெரியாமல் இருக்கும். ஆனால் அவ்விடத்தில் நண்பர்கள் மூலமாக நல்லவர்களும் பாதிக்கப்படுகின்றனர். நம் முந்தைய தலைமுறைக்கு இந்த டெக்னாலஜிகள் மிகவும் புதிது. என்பதால் அவர்களுக்கு தன் பிள்ளைகள் இப்படி ஒரு புது விதத்தில் பாதிக்கப்பட்டு வருகிறான் என்பது அறிய வாய்ப்புகள் குறைவு. இது போன்ற விஷயங்களில் சமீபகாலமாக டீன் ஏஜ் வயதினரே அதிகம் பாதிக்கப்படுவதாக ஒரு சர்வே சொல்கிறது.

விளம்பரபகுதி 
Share:

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டத்தின் நிலை? அப்துல் ரஹ்மான் அவர்களுடன் சந்திப்பு

முத்துப்பேட்டை - அதிரை - பட்டுக்கோட்டை - பேராவூரணி உள்ளிட்ட பகுதியை இணைக்கும் திருவாரூர் - காரைக்குடி ரயில் சேவை நிறுத்தப்பட்டு 9 வருடமாகிறது. இதற்கு பிறகு தமிழகத்தில் புதிய திட்டங்கள் போடப்பட்டு ரயில் தொடர்பு நடந்து வருகிறது.

நூறு ஆண்டுகளுக்கு பழமையான நமதூர் ரயில் சேவையை 9 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதால் நமது பகுதி மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி தந்துள்ளது.

இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு புதிய ரயில்கள் விடப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

பாஜ அரசு 2014ம் ஆண்டு மத்தியில் பதவியேற்றுதும் முதல் ரயில்வே பட்ஜெட்டை சதானந்த கவுடா தாக்கல் செய்தார். அப்போது தமிழகத்துக்கு 2 ரயில்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன.

ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து ரயில்களும் புதிய பட்ஜெட் தாக்கல் செய்வதற்குள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன்படி குறுகிய நாட்களில் பல ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் சென்னை - பெங்களூர் ரயில் இன்னும் இயக்கப்படவில்லை. இதுவரை ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்தபடி கூட புதிய ரயில்கள் விடப்படுவதில்லை.

அமைச்சர் சுரேஷ் பிரபு, தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதில், தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று தமிழக மக்கள் ஆவலுடன் உள்ளனர்.

ரயில் போக்குவரத்தையே பெரிதும் நம்பியுள்ள தமிழக மக்கள் பல்வேறு புதிய திட்டங்களையும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு உரிய நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
முத்துப்பேட்டைக்கு வருகை வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் அவர்களை, சமூக ஆர்வலர் 'சுனா இனா' என்கிற சுல்தான் இப்ராஹீம் அவர்கள் சந்தித்து நமதூரை இணைக்கும் திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம் குறித்த விபரங்களை கேட்டார்.


நன்றி  சமூக ஆர்வலர் 'சுனா இனா
தொகுப்பு : முத்துபேட்டை நியூஸ் .காம் 
 விளம்பரபகுதி

Share:

ஐ.தே.ம.க. முன்னாள் நகர செயலாளர் முகம்மது யுசுப் பரபரப்பு பேட்டி

அதிராம்பட்டினத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய தேசிய மக்கள் கட்சி தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது இதன் நகர செயலாளராக செயல்பட்டு வந்தார் .இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவரின் அறிக்கையில் முகம்மது யுசுப் கட்சியின் நகர செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்திருந்ததை நமது  இணைய தளத்தில் வெளியிட்டிருந்தோம். இதனைத்தொடர்ந்து முகம்மது யுசுப்  அதிரை இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

 நான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் நகர செயலாளராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தேன் .எனது நிர்வாகத்துக்கு கீழ் கட்சியின் கொள்கைகளை பிறருக்கு எடுத்து சொல்லி கட்சியை வலுப்படுத்த அயராது பாடுபட்டேன் ,இருபினும்  எனது சொந்த பணிகளையும் கவனித்து வந்தேன் . பணிச்சுமை மற்றும் கட்சியில் கருத்து வேறுபாடு அதிகமாதல்  கட்சியை விட்டு நானாக விலகினேன்  ,  என்னை யாரும் நீக்கவில்லை என தெரிவித்துக்கொள்கிறேன் விரைவில் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் எனவும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
adiraivanavil


விளம்பரபகுதி

Share:

அதிரைக்கு ஆறுதலளிக்கும் அட்டகாசமான கரு மேகங்கள். (படங்கள்)


மழைக்காலம் ஒதுங்கி வெயில் காலம் ஆரம்பிக்கும் முன்பே அதிரை மக்களில் பலர் வெயில் தாக்கத்தை குறித்து கவலையோடு பேசும் இந்த நேரத்தில், அதாவது இன்று 26/02/2015 நண்பகல் முதல் கருமேகங்களில் சில அதிரைநகரை வட்டமடித்து வந்ததை காண முடிந்தது.

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
kmajamalmohamed@gmail.com


விளம்பரபகுதி
Share: