Sunday, May 31, 2015

மின்னொளி தொடர்போட்டியில் கோப்பையை கைபற்றிய அதிரை டைமண்ட்ஸ் அணி!அதிரை பீச் கிரிக்கெட் கிளப் நடத்திய 18ஆம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மின்னொளி கிரிக்கெட் தொடர் போட்டி நேற்று இரவு கடற்கரை தெரு விளையாட்டு திடலில் துவங்கியது.

இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு அணிகள் கலந்துகொண்டு விளையாடினர். இரவு நேரம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து அணிகள் தொடர்ச்சியாக வருகை தந்தமையால் மின்னொளி தொடர்போட்டி களைக்கட்டியது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் வீடுகளுக்கு செல்லாமல் விளையாட்டு போட்டியினை ஆர்வமுடன் கண்டுகளித்தனர். 

இரவுநேரம் முழுவதும் நடைபெற்ற லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்ற அணிகளுக்கான அடுத்தடுத்த காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் பகல் நேரம் வரையில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. 

கடைசியாக இறுதிபோட்டி இன்று மாலை நடைபெற்றது. இதில் விளையாடிய அதிரை டைமண்ட்ஸ் அணி வெற்றிவாகை சூடியது இரண்டாமிடத்தை அதிரை பீச் அணியும், மூன்றாம் இடத்தை அதிரை சுரைக்காய்கொள்ளை அணியும் நான்காம் இடத்தை அதிரை பீச் பெல்பொன் அணியும் கைபற்றினர்.


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


நாளை பள்ளிகள் திறப்பு -முதல் நாளன்றே பாடப் புத்தகங்கள் விநியோகம்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக் கப்படுகின்றன. முதல் நாளன்றே மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீருடைகள், நோட்டுப் புத்தகங்களும் அடுத் தடுத்து வழங்கப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் அனைத்து தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1-ம் தேதியும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களுக்கு ஏப்ரல் 23-ம் தேதியும் கோடை விடுமுறை தொடங்கியது. கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக் கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த வாரத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளிப்போகலாம் என்ற எதிர் பார்ப்பில் மாணவர்கள், பெற் றோர் இருந்தனர். ஆனால், அறிவிக்கப்பட்டபடி பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை திட்டவட்டமாக அறிவித்தது. அதன்படி, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (திங்கள் கிழமை) திறக்கப்படுகின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு முதல் நாளான நாளையே பாடப் புத்தகங் கள் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறியதாவது:பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படுகின்றன. மாணவர் களுக்கு வழங்குவதற்கான பாடப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் ஏற் கெனவே பள்ளிகளுக்கு அனுப் பப்பட்டுவிட்டன. 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் மாதமே புத்தகங்கள் வழங்கப் பட்டுவிட்டன. ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கு, பள்ளி திறக்கும் நாளன்றே பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து சீருடைகள், நோட்டுகள் விநியோகிக்கப்படும். விலையில்லா பாடப் புத்தகங்கள் மூலம் சுமார் 55 லட்சம் மாணவ, மாணவிகளும், சீருடை மூலம் 40 லட்சம் பேரும், நோட்டுப் புத்தகங்கள் மூலம் 60 லட்சம் பேரும் பயன்பெறுவார்கள்.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


வார்டு பிரச்னை கண்டுகொள்ளாத உறுப்பினர் - கொதிக்கும் மக்கள்

அதிரை நகர கிளை திமுக தலைவரும் பேரூர் மன்ற 13வது வார்டு உறுப்பினருமாக இருந்து வருகிறார் அப்துல் காதர் .இவர் கடந்த இரண்டு முறை 13 வது வார்டு உறுப்பினராக தேர்வு செயப்பட்ட போதிலும் அப்பகுதி வாசிகளுக்கு அரசு சார்ந்த நல பணிகளை செய்து தரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை .இன்னும் விளக்கமாக சொல்லப்போனால் 13 வது வார்டு எல்லைக்கு உட்பட்ட வாய்க்கால் தெரு ஊராட்சி பள்ளிக்கு அருகே கொட்டபடுகின்ற குப்பைகளை சரிவர பேரூர் ஊழியர்களை கொண்டு அள்ளுவதற்கு எந்தஒரு முயற்சிகளை எடுக்க தவறியதாகவும் , அரசு சார்பாக அறிவிக்கப்படுகின்ற மானிய உதவிகளை மக்களுக்கு முறையை எடுத்துரைக்க தவறியதாகவும் கூறப்படுகிறது .

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் (பெயர் சொல்லவில்லை )  நபரிடம் விசாரித்த வகையில் அப்துல் காதர் கடந்த இரண்டு முறை வார்டு உறுப்பினராக இருந்து வருகிறார்  பதவிகளை மட்டும் சுமந்து வருவது தான் அவருக்கு வாடிக்கை .மக்களை சிந்திக்காமல் மக்கள் கொடுத்த பதவிகளை சுயநலத்திற்கு பயன்படுத்தி வருகிறார் .வார்டுகளுக்கு முறையாக தெரு விளக்குகள் அமைத்து தர மறந்தவர் .ஊராட்சி பள்ளிகூடத்துக்கு அருகே கொட்டபடுகின்ற குப்பைகளை முறையாக அள்ளுவதற்கு எந்தஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார் .வார்டு மக்கள் பேரூர் மன்றத்திடம் முறையிட்டு வார்டு சம்பந்தமான பிரச்சனைகளை இதுவரைக்கும் தீர்த்து வருகிறோம் என்று கூறினார் .

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


மூன்று மாதத்தில் சாலை அமைத்து தருகிறேன்! அதிரை சேர்மன் உறுதி!

இன்னும் மூன்று மாதத்திற்குள் சாலை அமைத்து தருவதாக அதிராம்பட்டினம் பேரூராட்சியின் தலைவர் அஸ்லம் அவர்கள் பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
அதிராம்பட்டினம் 7வது வார்டில் அமைந்துள்ள ஆறுமுகம் கிட்டங்கி தெரு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல ஆண்டுகாலமாக முறையாக அரசுக்கு வரிகள் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் இப்பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தினால் முறையான சாலை, கழிவுநீர் வாய்க்கால் போன்ற அடிப்படை வசதிகள் அமைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவரை நேரில் சந்தித்து சாலை அமைப்பது குறித்து பொதுமக்கள் முறையிட்டனர். இதனையடுத்து சம்மந்தப்பட்ட பகுதியில் இன்னும் மூன்று மாதத்திற்குள் சாலை அமைத்து தருவதாக பேரூராட்சி தலைவர் உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறுகையில் " நாங்கள் இப்பகுதியில் சாலை அமைப்பது தொடர்பாக பலமுறை வார்டு உறுப்பினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இன்று வரையில் எங்கள் பகுதி தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இனியும் எங்கள் பகுதிக்கு சாலை அமைத்து தராவிட்டால் பேரூராட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்படுவோம்." என்றனர்.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


அய்மான் நிர்வாகக்குழுவின் அவசரக் கூட்டம்

அய்மான்  நிர்வாகக்குழுவின் அவசரக் கூட்டம் நமது பொதுச் செயலாளர் SAC அதிரை சாகுல் ஹமீது அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது அய்மான்  முன்னாள் தலைவர்கள் அல்ஹாஜ் காதர் பக்‌ஷ் ஹுசைன் சித்தீக்கி, அல்ஹாஜ் ஷம்சுத்தீன், அல்ஹாஜ் செய்யது ஜாஃபர் ஆகியோர் முக்கிய ஆலோசனைகள் வழங்கினார்கள்.

எதிர் வரும்  ரமலான் மாதத்தில்  நிகழ்ச்சிகள்  நடத்துவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் பொருளாளர் கீழை ஜமாலுத்தீன் அவர்களுடன் சேர்ந்து மேலும் சிறப்பாக பணியாற்றும் பொருட்டு துணைப் பொருளாளர்களாக சகோதரர்கள் லால்பேட்டை முஹம்மது அப்பாஸ், கொள்ளுமேடு முஹம்மது ஹாரிஸ், மற்றும் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதிர் ஆகியோர் கூட்டாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.சமுதாய சேவையில் இறைவனருளால் 35 வருடங்களை தொட்ட அய்மான் சங்கம் மென்மேலும் உற்சாகத்தோடும், 

முழுபலத்தோடும் தொய்வின்றி மக்கள் பணியை தொடரும் என்று உறுதி கூறப்பட்டது..மேலும் எல்லா மக்களோடும் இணக்கத்துடனும் சகோதர வாஞ்சையோடும் செயல்படும் அதே வேளை அய்மான் தனது தனித்தன்மையையும் எல்லா நிலைகளிலும் தொடர்ந்து கட்டிக் காக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


வங்கிகளில் பேனாக்களுக்கு கொண்டாட்டமும், திண்டாட்டமும், ஏமாற்றமும்.


ஏதாவது ஒரு பொருளை இரவல் (LOAN) வாங்குவது பழங்காலத்திலிருந்து நம் மத்தியில் இருந்து வரும் ஒரு பழக்கமாகும், தங்கநகை, சைக்கிள், கைக் கடிகாரம், அலாரம், ஏணி மரம், அடுப்புக் கல்லு, பெரிய சமையல் பாத்திரம், பணம், இன்னும் அனேக வீட்டு உபயோகப் பொருள்கள் இருக்கின்றன், ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போகலாம்.

இரவல் என்றால் அதாவது “பொருள், நேரம், இடம் இவைகளைப் பொறுத்து சிறிது நேரம் அல்லது ஓரிரு நாட்கள் உபயோகித்து விட்டு திருப்பிக் கொடுப்பதையே இரவல் என்று சொல்லுகின்றோம். இது வாடகை, வட்டி போன்ற தடை இல்லாத ஒரு சிறந்த உதவியாக இருந்து வந்தது அந்நாட்களில்.

அதே இரவல் தான் இந்நாட்களில் இரண்டு பேர்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டு பண்ணுகிறது, காரணம் இரவல் வாங்கினவன் அதை திருப்பிக் கொடுப்பது இல்லை, இன்னும் மேலே சொல்லப்போனால்! திருப்பிக் கொடுக்க மனம் வருவது இல்லை என்றே சொல்லலாம். கொடுத்ததை திருப்பிக் கேட்டால் கச்சேரிதான் நடக்கும், இதனாலேயே சிலர் திருப்பிக் கேட்காமலேயே இருந்து விடுகின்றனர். (கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை)

தற்போது வசதிகள் பல வரவுகளினால் எல்லோரிடமும் எல்லாம் இருக்குது என்று சொல்லலாம், இல்லாதவர்கள் கூட எப்படியாவது எப்பாடு பட்டாவது அந்தப் பொருள் தங்களிடமும் இருக்கணும் என்று மனதார நினைத்து வாங்கி வைத்துள்ளனர்.

ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் இன்னும் மாறவே இல்லை. அதாவது, வங்கிகளுக்கு வருவோர் எல்லா பொருள்களையும் மறக்காமல் எடுத்து வருகின்றனர், அப்படி வருகின்றவர்கள் பேனாவை மாட்டும் தங்களிடம் எடுத்து வருவது கிடையாது. பேனாவுக்காக வங்கிகளில் திண்டாடும் மக்கள் அதிகம். பேனாவைக் கொடுத்துவிட்டு ஏமாற்றம் அடையும் மக்களும் உண்டு.

வாடிக்கையாளர்களின் உபயோகத்திற்கு வங்கிகளில் பேனாக்கள் வைக்கப்படுகின்றது என்றாலும், அதை உபயோகப்படுத்தும் மக்களில் பலர் எடுத்த இடத்தில் திருப்பி வைக்காமல் தங்களுடனேயே எடுத்துச் சென்றுவிடுகின்றனர்.

மேலும், யாரிடமாவது பேனாவை இரவலாக வாங்கி நெடுநேரம் உபயோகிக்கின்றனர், அது ஒரு கை மாறி இன்னொரு கைக்கு வேறு மாறுகிறது, இதனால் இரவல் கொடுத்தவர் தேவை இல்லாமல் நெடுநேரம் வங்கியினுள் நிற்க வேண்டியிருக்கின்றது.

வங்கிகளில் பிதுங்கி வழியும் மக்கள் கூட்டம் வேறு, இதில் பேனாவை இரவல் கொடுத்தவர் திரும்பி வாங்கும்வரை அங்கேயே நிற்கும் நிலைமை வேறு.

பேனாவை இரவல் வாங்கியவருக்கு அப்போதுதான் மூக்கு துவாரங்களிலும், காதுகளிலும், கழுத்துப் பகுதிகளிலும் ஏதோ நமச்சல் மாதிரி அரிப்பு வரும், உடனே அவர் இரவல் வாங்கிய பேனாவை வைத்தே சொரிந்து கொள்வது. ச்சே! எவ்வளவு மோசமாக காரியம் இது?

பொதுவாக ஒரு பொருள் ஒரு கைப்பட இருந்தால் தான் சரியாக உருப்படும், இல்லை, பல கைப்பட்டு இருந்தால் தவறாக உருப்பட்டுப் போய்விடும்.

பலக் கைப்பட்ட பேனாவை பலர் தொடும்போது நோய் கிருமிகள் பரவுவதற்கு வசதியாக இருக்கின்றது. பேனாவை தொட்ட விரல்களைக் கொண்டு வாயில் எச்சிலை தொட்டு பண நோட்டுகளை எண்ணுவது. இதுமாதிரி வேலைகளை வாடிக்கையாளர்கள் தவிர்க்க வேண்டும்.   

வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒரு பேனாவை தங்களுடன் மறவாமல் சுமந்து வர வேண்டும், பேனாவுக்காக வங்கிகளில் அங்கும் இங்கும் அலைய தேவை இல்லை.

உங்களுக்கு பேனாவை சுமந்துவர கஷ்டமாக இருக்குதா? அப்படி என்றால் உங்களை என்னென்று நினைப்பது! பேசாமல் அதை தூக்கிவர ஒரு வேலையாளை அமர்த்த வேண்டியதுதான்.

பேனாவை இரவல் கொடுக்காதீர்கள்! பேனாவை இரவல் வாங்காதீர்கள்!!

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Saturday, May 30, 2015

எழுச்சியுடன் நடைபெற்ற மக்கள் சங்கமம் !

பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பில் அதிரை சித்தீக் பள்ளிவாசல் அருகில் எழுச்சியுடன் மக்கள் சங்கமம் என்ற தலைப்பில் மாநாடு இன்று மாலை நடைபெற்றது  இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக குறும்படம் , நாடகம் உள்ளிட்டவைகளை தத்ருபமாக நடத்தி காட்டினர்.மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த சிறப்பு பேச்சாளர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். 
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


துபையில் நடைபெற்ற அதிரை ததஜ அமீரக ஒருங்கிணைப்பு கூட்டம்!

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை அமீரக ஒருங்கிணைப்பு கூட்டம் துபை தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸில் நேற்று 29-5-2015 வெள்ளிகிழமை மதியம் 2:00 மணியளவில் அல்லாஹ்வின் கிருபையால் அமீரக பேச்சாளர் சகோ. சாஜிதுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. 

இதில் அபுதாபி சார்ஜா அஜ்மான் போன்ற பகுதிகளிலிருந்து அதிரை சகோதர்கள் பலர் கலந்து கொண்டனர். அதிரையில் ஏகத்துவ பணிகளை வீரியப்படுத்துவது பற்றியும் அல் ஹிக்மா பெண்கள் மதரசா பற்றியும் ஆலோசித்து பல தீர்மானங்களோடு முடிவு செய்யப்பட்டு இறுதியாக அமீரக பேச்சாளர் சகோ. சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் தர்பியா நிகழ்த்தி நிறைவு பெற்றது. ---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


அதிரையில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், ஃபேன் விநியோகம் !

 
தமிழகத்தில் ஜெ ஜெயலலிதா எட்டு மாதங்களுக்கு பின்னர் முதலமைச்சராக பதவி ஏற்தவுடன்  தமிழகம் முழுவதும் அரசு சார்பாக கொடுக்க படவேண்டிய விலையில்லா  பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் ஏற்பாடுகள் முழுவிச்சில் நடந்து வருகிறது அதனை தொடர்ந்து அதிரை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று  பொருட்கள் விநியோக்கிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுபையன் தலைமை தாங்கினார்.தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் பரசுராமன் பொது மக்களுக்கு பொருட்களை வழங்கினர் .மேலும் அதிரை நகர அதிமுக செயலர் பிச்சை ,துணை  செயலாளர் அஹ்மத் தமீம்,பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் சரோஜா மலைஅய்யன் ,தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபன்மைனர் நல பிரிவு செயலர் அப்துல் அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .இந்நகழ்வில் ,அதிரை நகர வார்டு உறுப்பினர்கள் அதிமுக நகர கழகத்தினர் ,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் .
 


 
 

அதிரையில் இன்று நடைபெறும் மாபெரும் மின்னொளி கிரிக்கெட் தொடர்போட்டி!

அதிரை பீச் கிரிக்கெட் கிளப் நடத்தும் 18ஆம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மின்னொளி கிரிக்கெட் தொடர் போட்டி இன்று கடற்கரை தெரு விளையாட்டு திடலில் நடைபெற உள்ளது.

அதிரையில் தலைசிறந்த அணிகளுள் ஒன்றாக கருதப்படும். அதிரை பீச் கிரிக்கெட் கிளப் கடந்த 18 ஆண்டுகளாக கிரிக்கெட் தொடர் போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் குறிப்பாக அதிரையில் கடந்த மூன்று வருடங்களாக இரவு நேர போட்டிகளையும் நடத்திவருகின்றனர். மேலும் இதுபோல் வெளியூர்களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்குபெற்று பல வெற்றிகளையும் பெற்று உள்ளனர்.  

இந்த போட்டிகளில் கடந்த ஆண்டுகளை போன்று வெளியூர் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் அணியினர் விளையாட உள்ளதால் அதிரை பீச் கிரிக்கெட் கிளப் இன்று  நடத்தும் மின்னொளி தொடர்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


செய்து விட்டார்கள்! செய்து விட்டவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்!! {படங்கள்}

கடந்த 25/01/2015-ஞாயிற்றுக் கிழமை அன்று, “செய்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா? என்ற தலைப்பில் புகைப்பட ஆதாரங்களோடு சில காட்டுப் புதர்களை அழிக்க ஒரு வேண்டுகோளை அதிரையில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுக்காக இந்தத் தளத்தின் வாயிலாக ஒரு பதிவு மூலம் கேட்டுக் கொண்டோம்.


முன்புள்ள தோற்றம். (முன்பு பதிவில் புகைப்படங்களின் வரிசை 13 மற்றும் 14)


அந்தப் பதிவைப் பார்த்த அப்பகுதி மக்கள்களில் ஒருவர் மட்டும் முன்வந்து, தன் வீட்டுக்கு அருகில் உள்ள காலிமனையில் வளர்ந்து இருந்த காடு, செடி, கொடி இவைகளை அப்புறப்படுத்தி உள்ளதை இப்புகைப்படங்களில் காணலாம்.

தற்போதுள்ள தோற்றம்.


பெருந்தன்மை கொண்ட தம்பி “அஹமது மொய்தீன் மற்றும் அவர் குடும்பத்தார்களுக்கு பொதுமக்கள் சார்பாக நன்றி கலந்த பாராட்டுக்கள் எப்போதும் உண்டு.

இதுபோல் ஒவ்வொருத்தரும் தன் வீட்டுக்கு அருகில் காடுகளோ, காட்டுச் செடிகளோ, பயன் தராத செடிகளோ, கொடிகளோ, அசுத்தங்களோ ஏதேனும் காணப்பட்டால்! அதை சிரமம் பாராமல் அப்புறப்படுத்தினால்!! இந்த அதிரையே சூப்பர் சின்ன சிங்கப்பூராக மாறும் என்பதில் சற்றும் ஐயமில்லை.

குறிப்பு:- உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டாத எனக்கு தாமதமாகத்தான் தெரிய வந்தது, அழித்த காடுகள், செடிகள், கொடிகள் மீண்டும் முளைக்காமல் இருக்க அதை வேரோடு முற்றிலும் அழித்து விடுவது நல்லது.

புகைப்படம் மற்றும் ஆக்கம்.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Friday, May 29, 2015

அதிரை மக்களின் கவனத்தை ஈர்த்த கல்வி மாநாடு-புகைப்படங்கள்

அதிரை கடற்கரைத்தெரு ஜமாஅத் மற்றும் அமீரக அமைப்பு ஆகியோர் இணைந்து நடத்தும் 4 ஆம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மாநாடு இன்று மாலை கடற்கரைத் தெரு ஜும்ஆ  பள்ளி வளாகத்தில் மாலை துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்  கடற்கரைதெரு ஜமாஅத்  கெளரவ ஆலோசகர் ஜனாப் அக்பர் ஹாஜியார்  தலைமை வகித்தார்.
மேலும் கடற்கரைதெரு ஜமாஅத் தலைவர் அகமது  அலி மற்றும் அதிரை பேரூர் தலைவர்  அஸ்லம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும்  சிறப்பு விருந்தினராக  சென்னை காயிதே மில்லத் கல்லூரி பேராசிரியர் ஹாஜா கனி அவர்கள் கலந்து கொண்டு கல்வியின் தேவை குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியின் இறுதியாக அதிரை அளவில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ/மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கபட்டது. மேலும் அதிரை கடற்கரை தெரு பகுதி மாணவ/மாணவிகள் கடந்த பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஊக்க பரிசுகள்  வழங்கபட்டது.  இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


பர்மா புத்த மதத்தினரை கண்டித்து அதிரையில் ஆர்ப்பாட்டம்

பர்மாவில் முஸ்லீம்களை கொன்று குவிக்கும் புத்த மதத்தினரை கண்டித்து  அதிரையில் இஸ்லாமிய ஜனநாயக முன்னணி சார்பில் இன்று மாலை கண்டன  ஆர்பாட்டம் நடைபெற்றது.இதில் மதுக்கூர் மைதீன் கண்டன உரை நிகழ்த்தினார்.இதில் ஏராளமான அதிரையர்கள் கலந்து கொண்டனர்.