அவசரம் இரத்தம் தேவை!


கூடுவாஞ்சேரி அடுத்துள்ள காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டு இருக்கும் சகோதரி பர்வீன் அவர்களுக்கு அவசரமாக 1 யூனிட் AB நெகட்டிவ் இரத்தம் தேவைப்படுகிறது, இந்த வகை இரத்தம் உள்ளவர்கள் இந்த சகோதரிக்கு தந்து அவரின் அறுவை சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிரேம்..

தொடர்புக்கு 


தகவல்பதிவு செய்த நாள் : 29-06-15
Share:

15 தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து அதிரைக்கு செல்ல விரும்புவோர் கவனத்திற்கு

அஸ்ஸலாமு அலைக்கும் 
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 15.07.15 தேதி அன்று சென்னைக்கு எமிரேட்ஸ் விமானத்தில் காலை 9:00 மணியளவில்  அதிரையை சேர்ந்த நபர்  வருகை தர வுள்ளார் .இவர் டவேரா காரில் அதிரைக்கு செல்லவுள்ளார் .  இந்த நாளில் அதிரை வாசிகள் சென்னை விமான நிலையத்தில்  இருந்து  அதிரைக்கு செல்ல  விரும்புவோர் இந்த தொலைபேசி எண்ணை  தொடர்பு கொள்ளவும் .
 தொடர்பு எண் : 9840066996 

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Share:

அந்த சமாச்சாரத்தை இந்தியாவில் அமல்படுத்துவோம்-பிஜேபி அமைச்சர் உறுதி

இயற்கைக்கு மாறாக உறவு கொண்டால் குற்றம் இல்லை என புரட்சிகர சட்டம் கொண்டவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சட்ட அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதற்கு ஏதுவாக இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவை நீக்க மத்திய அரசு ஆலோசித்து வருவவதாக தெரிவித்துள்ளார். இதனால் ஓரினச் சேர்க்கை சட்டபூர்வாக அனுமதிக்கப்படும் நிலை ஏற்படும் என்றார் அவர். 


அதேபோன்று ஓரினச் திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரவும் வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். ஓரின திருமணத்திற்கு அமெரிக்காவில் நாடு தழுவிய அனுமதி அளித்து அண்மையில் வெளியான நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய சதானந்த கவுடா அதற்கு இந்தியாவில் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் விரிவான ஆலோசனைகளுக்கு பிறகே இது தொடர்பான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடும் என்று அவர் விளக்கம் அளித்தார். 

திருநங்கைகள் நலன் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா கொண்டுவந்த தனிநபர் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர் இது மக்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறும் போது 377-வது குற்றவியல் தண்டனை பிரிவு தானாகவே செல்லாததாகிவிடும் என்றார். எனினும் திருச்சி சிவா கொண்டு வந்த தீர்மானத்தில் இந்த பிரிவு குறித்து ஏதும் கூறப்படவில்லை என்பதால் மத்திய அரசின் இந்த முடிவு சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Share:

இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்

 வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக காவல்துறை அதிகாரி சமில் என்ற வாலிபரை விசாரணைக்கு அழைத்து சென்று பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது .அதன் பின்னர் சமில்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உயிர் இழந்தார் .சமில் இறந்ததை கண்டித்து முஸ்லிம் சமூக அமைப்புகள் ஆர்பாட்டங்கள் நடத்தி வந்தது.இந்நிலையில்  நேற்று ஆம்பூரில் காவல்துறையினர் 200 மேற்ப்பட்ட இஸ்லாமியர்களை கைது செய்தது .மேலும் பொது சொத்துக்கு பங்கம் விளைவித்ததாகவும் காவல் துறை அதிகாரிகளை கொலை வெறி தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய விஜயா பாரத மக்கள் கட்சி தலைவர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் .

மேலும் புனிதமிக்க ரமலான் மாதத்தில் இது போன்று தடை கோரிக்கையை வைத்து ஒற்றுமையாக வாழும் மக்களிடம் சலசலப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்து உள்ளது இந்த கோரிக்கை மனு. 

Share:

ஹலோ விகடனில் அதிரை நகைச்சுவை கவிஞர்

அதிராம்பட்டினத்தை சேர்ந்த கவிஞர் அண்ணா சிங்காரவேலு ஹலோ விகடனில் பல்வேறு குட்டிக்கதைகள் பயனுள்ள தகவல்களை ஹலோ விகடனில் என்கின்ற நிகழ்ச்சியில் பேசுகிறார் 044 66802913 என்ற நம்பருக்கு கால் செய்யுங்க  3 நிமிடங்கள் கொண்ட குட்டிக்கதைகள் கேளுங்க 06.07.2015 வரை 
அதிரை வானவில் Share:

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்திற்கு சிங்கப்பூர் அமைச்சர் லாரன்ஸ் வோங் பாராட்டு


திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற சனிக்கிழமை 27-06-2015 அன்று சிங்கப்பூர் பென்கூலன் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு மற்றும் சமய இன நல்லிணக்க நிகழ்ச்சியை நடத்தியது.

சிங்கப்பூரின் ஒற்றுமை, சமய மற்றும் இன நல்லிணக்கத்தைப் பறைசாற்றிய இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலாசார, சமூக, இளையர் ஆகிய துறைகளுக்கான மாண்புமிகு அமைச்சர் திரு லாரன்ஸ் வோங் கலந்து கொண்டார்.

ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்களைப் போன்ற கல்வியாளர்களும், பணியாளர்கள் ஒவ்வொருவரும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்ய வேண்டும். திறன் சார்ந்த தொண்டூழியத்தில் ஈடுபட அதிக அளவில் சிங்கப்பூரர்கள் முன்வர வேண்டும். ரமலான் மாதத்தில் மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் இச்சங்கம் பல்வேறு சமூகப்பணியாற்றி வருகிறது. சிண்டாவுடன் இணைந்து பின்தங்கிய மாணவர்களுக்கான இலவச கணிதப் பட்டறைகளை இச்சங்கம் நடத்தியது பாராட்டுக்குரியது. இதுபோன்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளால், நம் சமூக உறவுகள் மேம்பட்டு, நாம் அனைவரும் ஒன்றுபட்ட பலஇன சமூகமாகத் தொடர்ந்து திகழமுடிகிறது என்று குறிப்பிட்டார் அமைச்சர் திரு லாரன்ஸ் வோங்.

நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்காக, சிங்கப்பூரிலுள்ள ஜாமியா குழந்தைகள் இல்லத்தில் வசிக்கும், 68 ஆதரவற்றக் குழந்தைகளுக்கு இலவசப் புத்தாடைகளை இச்சங்கம் வழங்கியது. இதுபோன்ற நற்பணிகள் பாராட்டுக்குரியது என்றார் அமைச்சர்.

வரவேற்புரை வழங்கிய சங்கத்தின் தலைவர் கணக்காய்வாளர் முனைவர் ஹாஜி முஹிய்யத்தீன் அப்துல் காதர், சிங்கப்பூர் எதிர்நோக்கும் சவால்களையும், மிரட்டல்களையும் இளையர்களுக்கு எடுத்துச்சொல்லி, சிங்கப்பூரின் பாதுகாப்பிற்கும், அமைதிக்கும் நாம் ஒவ்வொருவரும் நம் கடமையைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

எம்.இ.எஸ். (MES) குழுமத்தின் தலைமை நிர்வாகி அல்ஹாஜ் எஸ். எம். அப்துல் ஜலீல், அமைச்சருக்கு பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார். தமிழர் பேரவையின் தலைவர் டாக்டர் ஆர். தேவேந்திரன் அமைச்சருக்கு நினைவுப்பரிசு வழங்கினார். சங்கத்தின் செயலவை உறுப்பினர் கணிதப் பேராசிரியர் ஹாஜி அமானுல்லா நிகழ்ச்சியை வழிநடத்தினார். சங்கத்தின் செயலவை உறுப்பினர் ஜனாப் ஃபரீஜ் முஹம்மது இறை வசனங்களை ஓதினார். சங்கத்தின் செயலவை உறுப்பினர் ஜனாப் அப்துல் நஜீர் நன்றியுரை கூறினார். சிங்கப்பூர் பென்கூலன் பள்ளிவாசலின் இமாம் ஹாபிழ் மௌலவி கலீல் அஹ்மது ஹசனி நோன்பின் மாண்புகளை எடுத்துரைத்தார்.

சிண்டா, ஜாமியா சிங்கப்பூர், இந்திய முஸ்லிம் பேரவை, நற்பணிப் பேரவை, வளர்தமிழ் இயக்கம், தமிழர் பேரவை, தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம், சிங்கை தமிழ் சங்கம், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக், சிங்கப்பூர் தென்காசி முஸ்லிம் நலனபிவிருத்தி சங்கம், ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம், தமிழர் பேரவை பன்னோக்குக் கூட்டுறவுக் கழகம், தமிழ் பட்டிமன்றக் கலைக் கழகம், நாகூர் சங்கம், காயல்பட்டின நலஅபிவிருத்தி சங்கம், முத்துப்பேட்டை சங்கம், கூத்தாநல்லூர் சங்கம், பொதக்குடி சங்கம், தோப்புத்துறை முஸ்லிம் சங்கம்,  மற்றும் பல சமூக அமைப்புகளிலிருந்து சமூகத் தலைவர்களும், சமூகப் பிரமுகர்களும், சங்க உறுப்பினர்களும் சுமார் 300 பேர்  கலந்து கொண்டனர். ஒற்றுமையையும், சமய இன நல்லிணக்கத்தையும் பறைசாற்றிய வண்ணம், இந்நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.


K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Share:

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ! ஒன்றுபடுவார்களா சமுதாய மக்கள் .!?!?

முன்பொருகாலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் எவ்விதபாகுபாடுமின்றி ஊர் நலனுக்காக எத்தனையோ பொதுச் சேவைகள் செய்து இருக்கிறார்கள் எவ்வளவோ நல்ல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அக்கரைகாட்டி நமது ஊருக்காக நல்லபல பயனுள்ளவைகளைச் செய்து இருக்கிறார்கள்.அதையொட்டி சுற்றுவட்டார கிராம மக்களும் பயனடைந்து இருக்கிறார்கள் 

ஆனால் இந்தகாலகட்டத்தில் உள்ளதுபோல அன்று இத்தனை அமைப்புகள் உட்பிரிவுகள் ஈகோ ஏதும் இல்லாமல் நமது சமுதாயம் நமது மக்கள் என்ற பார்வையும் சுயநலமில்லாத நல்ல நோக்கம் மட்டும்தான் இருந்தது. பொதுமக்களுக்கும் ஊரின்மீது அக்கரையும் இருந்தது.

ஆனால் அன்றிருந்தவைகளெல்லாம் இன்று எங்கோ சென்று ஓடிமறைந்து விட்டது. ஒற்றுமையாய் வாழ்வது என்பதெல்லாம் எட்டாக் கனியாகிக் கொண்டிருக்கிறது. நாளடைவில் ஒருத்தருக்கொருத்தர் புரிந்துணர்வு இல்லாமல் நம்மனதில் விஷச் செடிகள் வளர்ந்து நம்மை பிரித்துக் கொண்டிருக்கிறது என்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. 

மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்று சொல்வதுபோல மனம் வைத்து நாம் ஊர் நலன்கருதி ஊருக்கு ஒரு பிரச்சனையென்றால் அனைவரும் பாகுபாடின்றி கைகோர்த்து ஓரணியாய் நிற்ப்பதுதான் பலம் சேர்ப்பதாக இருக்கும். இப்படி பல பிரிவினைகள் நமக்குள் பல்கிப் பெருத்ததுதான் மிச்சம். அன்று எந்த அமைப்பும் இல்லாமல் செய்த நற்காரியங்களை ஊர் நலன்களை இப்போது இத்தனை அமைப்புக்கள் வந்தும் ஒன்றும் ஊருக்கு உருப்படியாய் செய்தபாடில்லை. செய்யவும் நாதியில்லாமல் போவிட்டது என்பதுதான் உண்மை. அப்படியே யாராவது எதையாவது செய்ய முன்வந்தாலும் அதில் குறைகாண்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள்.இந்தப்போக்கு முதலில் அனைவர்களின் மனதிலிருந்து மாறவேண்டும்.

அதுமட்டுமல்ல. அனைவரிடத்திலும்.காசுபணம் பெருகப் பெருக அத்தோடு பல உட்பிரிவுகளும் பல அமைப்புக்களும் உருவாகி இறுதியில் நமக்குள் நீயா நானா ? நீபெரியவனா ? நான் பெரியவனா ? என்கிற போட்டி வந்து தலைவிரித்தாட ஆரம்பித்து விட்டதுதான் இன்றைய நிலையில் உச்சகட்ட நிலையாக இருக்கிறது. இந்த நிலையைப் போக்குவதற்கு நாம் அனைவரும் மனத்தால் ஒன்றுபடவேண்டும். மனத்தால் ஒன்றுபடுவதாக இருந்தால் முதலில் நமக்குள் சில திருத்தங்களை செய்துகொள்ளவேண்டும்.

1,நமதூர் வளர்ச்சியடைய வேண்டுமென்றால் முதலில் நமக்குள் நீயா நானா ? என்கிற நிலை மாறவேண்டும். 

2, ஊர் நலனில் பொதுச் சேவைகளில் பாகுபாடின்றி எல்லோரிடத்திலும் அக்கரை இருக்கவேண்டும். 

3,யார் எந்தக் கட்சி எந்த அமைப்பை சார்ந்து இருந்தாலும் ஊருக்கு ஏதாவது ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் அனைவரும் ஓர் அணியில் கைகோர்த்து நிற்க்க வேண்டும்.

4,ஒவ்வொரு முஹல்லா வாசிகளும் அவரவர் தலைமையை மதித்து அவர்கள் சொல்லும் ஆலோசனைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

5,தனிப்பட்ட எந்த ஒரு சொந்தப் பிரச்சனையையும் அரசியலாக்கி தெருப் பிரச்சனை ஊர்ப்பிரச்சனை என்று ஆக்கி விடக்கூடாது.

6,தெருவாரியாக வேற்றுமை பார்ப்பதை மனதிலிருந்து அடியோடு அறுத்து வீச வேண்டும்.

7,ஜாதிமத பேதமில்லாமல் அக்கம்பக்கத்து கிராம மக்களையும் அரவணைத்து அவர்களுக்கும் நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டும்..

இப்படி நாம் அனைத்து விஷயங்களிலும் பேணி நடந்து வந்தொமேயானால் நம்ம அதிராம் பட்டினம் இந்த தஞ்சை ஜில்லாவிலேயே தலை சிறந்த பூமியாக அனைத்து வசதிகளுக்கும் பஞ்சமில்லாத ஊராகா அமைதிப் பூங்காவாக திகழும் என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை. 

வறுமையில் நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த ஒற்றுமை இப்போது ஓரளவு வசதிவாய்ப்பை பெற்றதும் நமக்குள்ளான ஒற்றுமை தூர விலகிச் சென்று கொண்டிருக்கிறது.இதற்க்குக் காரணம் ஈகோ எனும் காழ்ப்புணர்ச்சியே காரணமாக இருக்கிறது. அடுத்து சுயநலம் தலைதூக்கி விட்டது. இவைகள் அனைத்தையும் ஒவ்வொருவரது மனதிலிருந்து களைந்து விட்டால்தான் நாம் ஒன்றுபட்டு வாழமுடியும்.! ஒன்றுபடுவார்களா சமுதாய மக்கள்.!?!?

ஆக்கம்: அதிரை மெய்சா
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Share:

அதிரையில் மினி வேன் கவிழ்ந்து விபத்து!

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகே இன்று மாலை மினி வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகே இன்று மாலை ரிவேர்ஸ் கீர் எடுத்த மினி வேன் ஒன்று எதிர்பாராத விதமாக அருகே இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் எதுவும் ஏற்ப்படவில்லை. மேலும் பள்ளி அருகே இந்த விபத்து ஏற்ப்பட்டதினால் சற்று பரபரப்பாக காணப்பட்டது.


Share:

H .ராஜாவின் பர்தா பேச்சுக்கு பதிலடி கொடுத்த அதிரை வழக்கறிஞர் (காணொளி )

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொது செயலாளர் H .ராஜா பத்திரிக்கையாளர் நிகழ்ச்சியில் கூறியதாவது இஸ்லாமிய பெண்கள் கல்லூரிகளில் பர்தா அணிய கூடாது .எனவும் இஸ்லாமிய மாணவிகள்  கல்லூரிகளில் பர்தா அணிவதால் தேர்வுகளில் காப்பி ,பிட் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் இதனை தடுக்க கல்லூரிக்குள் பர்தாவை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டு கொண்டார் .அவர் பேச்சால் பெரும் சர்ச்சை எழுந்தது .அதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் H .ராஜா பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் .மேலும் காம்பஸ்  பிரான்ட் ஆப்  இந்திய அமைப்பின் தலைமை நிர்வாகியும் அதிரையை சேர்ந்தவருமான  Z .முஹமது தம்பி BA.BL ராஜாவின் சர்ச்சை பேச்சிக்கு பதிலடி கொடுத்துள்ளார் .

.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Share:

இந்த குழந்தையின் தாரு மாறு பேச்சை கேளுங்க

இந்திய  அரசியலில் நிலையினை அக்கு வேரா ஆணி வேற சும்மா கிலி கிலி இன்னு கிழிக்கும் சிறுமி .

Share:

அதிரையில் மின் தடை வெறும் 50 நிமிடங்கள் மாத்திரமே.நமது கோரிக்கைக்கு மதிப்பு கொடுத்த தமிழ்நாடு மின்வாரிய உயர் அதிகாரிகள் அதிரைக்கு இன்று 29.06.2015 - திங்கள் கிழமை நடக்க இருந்த மின் தடையை 100% சதவிகிதம் வாபஸ் வாங்கிக் கொண்டனர்.

AE Town Adirampattinam town and rural.
TNEB – Adirampattinam.

Chief Engineer,
TNEB – Thruchirappali.

ADE Town (Pattukkottai and Adirampattinam)
TNEB – Pattukkottai.

ADE Town (Madukkur and Vadikkaadu Sub Station)
TNEB – Madukkur.

மதுக்கூர் வாடியக்காடு துணை மின் நிலையத்தில் தவிர்க்க முடியாத சில வேலையின் காரணங்களால் இன்று காலை மணி 11.05am முதல், 11.55am மணி வரை அதிரையில் மின் தடை இருந்தது.

இன்ஷா அல்லாஹ், அதிரையில் அடுத்த மின் தடை ஜூலை மாதம் 29.07.2015 அன்று நடைபெறும்.

இது வரை நமக்கு உதவியாக இருந்த தமிழ்நாடு மின் வாரிய உயர் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் அதிரை நோன்பாளிகள் பொது மக்கள் சார்பாக நன்றிகளும் பாராட்டுக்களும்.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Share:

சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!


சுலைஹா, போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் பெருநாளைக்கு சேலை எடுக்க மதுரைக்கு போகலாம்னு இருக்கோம். நீயும் வாறீயானு? தனது உயிர் தோழியை அழைக்கிறாள் பரிதா.

தோழி பரிதாவின் அழைப்புக்கு உடனே பதில் அளிக்க முடியாமல் திணறிய சுலைஹா எதுக்கும் எங்க உம்மா வாப்பாகிட்ட கேட்டு சொல்றேன்டினு பதில் கூறிவிட்டு பெரும் யோசனையில் ஆழ்ந்தாள் சுலைஹா.

இராமநாதபுரத்தின் கடலோர பகுதியில் தென்னை மரத்தின் சுற்று சூழலில் ரம்மியமாய் காட்சி தரும் அழகான கிராமத்தில் பிறந்து வளர்ந்து அதே ஊரில் வாக்கப்பட்டு வாழ்ந்து வரும் சுலைஹாவும் பரிதாவும் தொடக்கப்பள்ளி காலத்திலிருந்து உயர்வகுப்பு வரை ஒன்றாக படித்து உற்ற தோழியானவர்கள்.

எந்த விசயமானாலும் ஒளிவு மறைவில்லாமல் மனம் விட்டு பேசிக்கொள்ளும் நம்பிக்கைக்குரிய தோழிகள். இவர்களின் நட்பில் லயித்து போன அவ்வூர் இளம்பெண்கள் இவர்களின் நட்பில் இணைவதையே பெருமையாக நினைப்பார்கள்.

சொல்லி வைத்தாற்போல சுலைஹாவின் கணவனும், பரிதாவின் கணவனும் வளைகுடாவில் வேலை பார்ப்பவர்கள். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை விடுப்பில் வந்து செல்லும் தமது கணவன்மார்களுக்கு எவ்வித குறையும் இல்லாமல் கவனித்து கொள்வதிலும் இருவரும் சளைத்தவர்களில்லை.

ஒவ்வொரு வருசமும் நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ்ஜு பெருநாளைக்கு இராமநாதபுரத்தில் சேலை துணி எடுக்கும் இந்த தோழிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக 120 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மதுரைக்கு போய் சேலை துணி எடுத்து வருகிறார்கள்.

தாங்கள் மட்டும் செல்லாமல் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களையும் ஆசை காட்டி வாடகைக்கு வேன் பிடித்து ஆளுக்கு இவ்வளவுனு சேரிங் செய்து மதுரை போய் வருவார்கள்.

காலையில் 9மணிக்கு கிளம்பும் இவர்கள் மதுரையின் பிரதான துணிக்கடைகளில் ஏறி இறங்கி மனதிற்கு பிடித்த ஆடைகளை வாங்கி கொண்டு இரவு 10 மணிக்கு ஊர் வந்து விடுவார்கள். அந்த ஒரு நாள் மட்டும் இவர்களுக்கு நோன்பு பிடிப்பது விதி விலக்காகி விடும்.

கடந்த இரண்டு வருடமும் பரிதா அழைத்த போது சம்மதம் சொன்ன சுலைஹாவை பார்த்து ஏம்மா அந்த பொண்ணுதான் மதிகெட்டு கூப்பிடுதுன்னா உனக்குமா புத்தி இல்லை?.

பக்கத்து வீட்டு சுந்தர் 20ஆண்டு துபாய் உத்தியோகத்தை முடித்து விட்டு வந்து தனது சக துபாய் தோழர்களுடன் பார்ட்னராகி இராமநாதபுரத்தில் துணிக்கடை வைத்திருக்கும் போது நாம அவர்களிடம் துணி எடுப்பதுதானே தர்மம்? நம் வசதிக்காகத்தானே பல லட்சம் ரூபாய்களை முதலீடு செய்து கடை போட்டுள்ளார்கள்.

பக்கத்து வீட்டு மனுஷா நாமளே அவர்களை புறக்கணிப்பது தப்புமா. எதற்காக அவ்வளவு தூரம் போய் துணி வாங்கணும்? விலையில் கொஞ்சம் நூறு இருநூறு வித்தியாசம் இருந்தாலும் வேனுக்கு செலவழிக்கும் பணத்தை ஒப்பிட்டு பார்த்தால் எல்லாம் சரியாத்தான் இருக்கும்.

பெருநாளைக்கு புது துணி எடுக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ ஏழைகளுக்கு மத்தியில் அல்லாஹ் இந்த அளவுக்காவது நம்மை வைத்திருக்கானேனு சந்தோஷப்படணும்.

புது துணி எடுக்க போறேன்னுட்டு ஒரு நாள் நோன்பையே பிடிக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய அநியாயம்? இதை அல்லாஹ் மன்னிப்பானா? கொஞ்சம் யோசித்து பாரும்மான்னு தனது தரப்பு அறிவுரையை தவறாமல் கொடுத்து விடுவார் சுலைஹாவின் வாப்பா.

தனது வாப்பாவின் அறிவுரைகளை ஒதுக்கி விட்டு மதுரையில் துணி எடுப்பதை சமூக அந்தஸ்தென கருதிய சுலைஹா இரண்டு ஆண்டும்  பரிதாவோடு மதுரை போய் துணியெடுத்து வந்து தமது  உறவினர்களிடம் காண்பித்து பெருமைப்பட்டு கொண்டாள்.

தற்போது இந்த வருட பரிதாவின்  அழைப்புக்கு எப்படி பதில் சொல்வதென்று புரியாமல் தவித்தாள்  சுலைஹா. என்னடி எப்பவும் கூப்பிட்டால் சட்டென வருகிறேனு பதில் சொல்லும் நீ இப்போ மட்டும் உம்மா, வாப்பாக்கிட்ட கேட்டு சொல்றேன்கிறே?

உன்புருஷன் கிட்ட இருந்து இன்னும் பணம் வரலையா? கவலையை விடு நான் தாறேன். பணம் வந்ததும் திருப்பிகொடுனு உற்சாகமூட்டிய பரிதாவின் வார்த்தையில் கொஞ்சமும் ஈர்ப்பு காட்டாமல் மௌனம் காத்தாள் சுலைஹா.

சரிடி நாம மதுரை போக இன்னும் ஒருவாரம் இருக்கு அதுக்குள்ளாற யோசித்து சொல்லுனு கூறிவிட்டு போனை துண்டித்தாள்  பரிதா.

தனது மகளின் போன் உரையாடலை ஓரளவுக்கு புரிந்து கொண்ட சுலைஹாவின் வாப்பா ஏம்மா பரிதா மதுரைக்கு கூப்பிடுறாளா? கடந்த இரண்டு வருசமா உம்மா, வாப்பாக்கிட்ட கேட்டுட்டா நீ மதுரை போனே? இந்த வருசம் மட்டும் ஏம்மா இப்படி பதில் சொன்னேனு கேட்ட வாப்பாவை ஒருமுறை ஏற இறங்க பார்த்த சுலைஹா கொஞ்சம் நிதானமாய் சொன்னாள்.

இல்ல வாப்பா, பக்கத்து வீட்டு சுந்தர் அண்ணனின் கடையில் துணி வாங்காமல் மதுரை போய் எடுத்தது மிகப்பெரிய தவறு என்பதை உணர்ந்து விட்டேன். என்ற தன் மகளின் கூரிய வார்த்தையில் மறைந்துள்ள ஆயிரமாயிரம் அர்த்தங்களை புரிந்து மௌனமாய் புன்னகைத்தார் சுலைஹாவின் வாப்பா.

சுலைஹாவின் கணவன் வளைகுடா வாழ்க்கையை முடித்து விட்டு இன்னும் ஓராண்டில் ஊர் வந்து இராமநாதபுரத்தில் ரெடிமேட் கடை வைக்க போகும் கடிதத்தின் உண்மை சுலைஹாவுக்கும் அவளது வாப்பாவுக்கும் மட்டுமே தெரியும்.

இந்த உண்மை தெரியாமல் இன்னும் ஒரு வாரத்துக்கு சுலைஹாவின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பாள் பரிதா.
நன்றி. கீழை. ஜகாங்கீர் அரூஸி

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Share: