கூகுள் பிளஸ் போட்டோஸூக்கு மூடுவிழா


கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிளஸ் போட்டோஸ் சேவையை நிறுத்தப்போவதாக இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூகுள் பிளஸ் போட்டோஸூக்கு  பதிலாக 'கூகுள் போட்டோஸ்' என புதிய பிரத்யேக அப்ளிகேஷனை வெளியிட்டிருந்தது கூகுள். இந்நிலையில், வரும் ஆகஸ்டு 1-ந்தேதி முதல் பழைய கூகுள் பிளஸ் போட்டோஸ் சேவைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. 

முதலில் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் நிறுத்தப்படும் இந்த சேவை பிறகு படிப்படியாக ஐ.ஓ.எஸ் மற்றும் வெப்சைட்டுகளிலும் நிறுத்தப்படுகிறது. எனினும், புதிதாக வெளியிடப்பட்டுள்ள 'கூகுள் போட்டோஸ்' அப்ளிகேஷன் பழைய சேவையை போல இருக்காது. இதில் நுழைவதற்கு கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தில் 'சைன் அப்' செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், இந்த அப்ளிகேஷனை ஆன்ட்ராய்டு, ஆப்பிளின் ஐ.ஓ.எஸ் மற்றும் வெப்சைட்டுகளில் தாராளமாக தடையின்றி பயன்படுத்த முடியும். 16 மெகா பிக்சல்கள் கொண்ட தெளிவான போட்டோக்களையும், ஹை டெபனீஷன் வீடியோக்களையும் எவ்வளவு வேண்டுமானாலும் (அன்லிமிடெட்) சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதேபோல், போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஆன்லைனிலேயே எடிட்டிங் செய்யவும், எளிதாக ஷேரிங் செய்யவும் வசதிகள் தரப்பட்டுள்ளன.


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது