அதிரையில் AFCC நண்பர்கள் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!அதிரையில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் ஒற்றுமையை பறைசாற்றும் வண்ணமாக இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி உள்ளூர் விளையாட்டு வீரர்கள் சார்பில் நடத்தப்படும். அந்த வகையில் இன்று இஃப்தார் நிகழ்ச்சி அதிரையின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக கருதப்படும் AFCC நண்பர்கள் சார்பில் நடத்தப்பட்டது. இதில் இஸ்லாமியர்கள் பலரும் கலந்துகொண்டு நோன்பு திறந்தனர். இன்நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவரையும் AFCC நண்பர்கள் வரவேற்று உபசரித்தனர். மேலும் அங்கேயே மைதானத்தில் மகரிப் தொழுகை ஜமாத்துடன் நடைபெற்றது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது