துபையில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி நடத்திய சிறப்புரையில் ஏராளமானோர் பங்கேற்ப்பு .!

                      

10/07/2015 வெள்ளிக் கிழமை இரவு 10 மணியளவில் டேரா துபாயிலுள்ள த.மு.மு.க மர்க்கசில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாப் M.தமீமுன் அன்சாரி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்

தமிழகத்தில் தற்போது நடக்கக்  கூடிய அரசியல்   சூழ்நிலையை விளக்கிப் பேசினார்கள்.நிகழ்ச்சியின் இறுதியாக அரசியல் ரீதியான கேள்விகளுக்கும் பதிலளித்தார்கள். இந்நிகழ்ச்சியின்போது மனிதநேய மக்கள் கட்சியின் அடையாள அட்டையை வந்திருந்த சகோதரர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு அமீரக மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் இஸ்மத் அவர்கள் தலைமை தாங்கினார்கள். சிறப்பான முறையில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு  த. மு. மு க. துபாய் மண்டல செயலாளர் அதிரை அப்துல் ஹமீது அவர்கள் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு  ஏராளமான தமிழ் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல் மற்றும் புகைப் படங்கள் நூர்முகம்மது [ நூவன்னா ]

                       

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது