சில பேர்களின் வதந்திகளும், பல பெற்றோர்களின் பீதிகளும்.

பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை வருடா வருடம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவித் தொகையை பெறுவதற்காக ஒரு சில துணை ஆவணங்களாகிய “வருமானச்சான்று Income Certificate, வகுப்புச்சான்று Community Certificate, பிறப்பிடச்சான்று Nativity Certificate போன்ற ஆவணங்களை பள்ளியில் குறிப்பிட்ட நேரத்தில் சமர்பிக்க வேண்டும்.

இந்த ஆவணங்களை பெறுவதில் ஒரு சில கால தாமதம் ஏற்பட்டதினால்! பெற்றோர்கள் மற்றும் தாய்மார்கள் மத்தியில் வதந்திகளும் பீதிகளும் நிலவுகின்றன.

தற்போது, ஆவணங்கள் துரிதமாக வெளி வரத் தொடங்கி விட்டன, மேலும், மேலே சொல்லப்பட்ட ஆவணங்களை சமர்பிக்க கடைசி தேதி அடுத்த மாதம் “ஆகஸ்ட் 15/2015” வரை உண்டு என்று நமதூர் “இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பெற்றோர்கள் பார்வையில் நன்றாக தெரியும் வகையில் தெளிவாக ஒட்டப்பட்டுள்ளது.ஆகவே, பெற்றோர்கள், தாய்மார்கள் இது குறித்து பீதி அடைய வேண்டாம் என்று இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன். மேலும், மேலே சொல்லப்பட்ட ஆவணங்களை பெறுவதில் துரிதம் காட்ட வேண்டும்.

இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது