அதிரையில் பெருநாள் தினத்தன்று தொடர்ச்சியான சாலை விபத்துகள்!அதிரையில் இன்று பெருநாள் தினம் அனுசரிக்கப்பட்டுவருகின்ற நிலையில் காலை முதலே தொடர்ச்சியான சாலை விபத்துகள் நடைபெற்றுவருகின்றன. 

இதுவரையில் மட்டும் அதிரையில் மூன்று சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதில் 7பேர் பலத்தகாயங்கள் அடைந்து சிகிச்சைக்காக வேண்டி தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெருநாள் தினத்தில் இவ்வாறான தொடர்ச்சியான சாலை விபத்துகளால் அதிரை நகரமே சோகத்தில் உள்ளது. 

மேலும் சாலை விபத்துகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் வழக்குகள் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். இந்த விபத்துகள் நடக்க காரணமாக இருந்தவர்களில் பெரும்பாளானோர் இளைஞர்கள் என்பது சற்றுவருத்தமான தகவல்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது