தொடர்ந்து புறக்கணிக்கப்படும் புதுக்குடி ! ஆத்திரத்தில் அப்பகுதிமக்கள்!!

அதிரை கீழதெருவில் உள்ளது புதுக்குடி (பழைய ஓட்டான்காட்டான் தெரு) அப்பகுதியில் ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர் . இந்த பகுதி 15வது வார்டுக்கு உட்பட்ட பகுதியாகும் . இந்நிலையில் அப்பகுதியில்  சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அப்பகுதியை சேர்ந்த கவுன்சிலர் முறையாக பெற்று தருவதில்லை என கூறப்படுகிறது . 

இதனால் அப்பகுதியின் சாலை குண்டும் குழியுமாக பயன்பாட்டுக்கு தகுதியற்ற நிலையிலே உள்ளது இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த  யூசுப் என்பவர் நம்மிடம் கூறுகையில்... அதிமுகவை சேர்ந்த இப்பகுதி கவுன்சிலர் எங்கள் தெருவை வேண்டும் என்றே புறக்கணித்து வருகிறார் என ஆவேசபட்டார் .    இதேபோல் இந்த பகுதியில் முறையாக சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் முறையாக கட்டமைத்து தருபவருக்கே வரும் தேர்தலில் வாக்களிக்க உள்ளதாக அப்பகுதி வாசியான அஸ்ரப் என்பவர் நம்மிடம் கூறினார் 

மேலும் . அப்பகுதியில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கடிக்கு ஆட்படுவதாக தெரிவித்தார் . இதேபோல் அப்பகுதியை சேர்ந்த மரியம் பீவி என்ற பெண்மணி கூறுகையில்..... தற்போதுள்ள கவுன்சிலரிடம் இதுகுறித்து புகார் அளித்தும் மெத்தன போக்காக கண்டுகொள்வதில்லை என குற்றம் சாட்டினார்.

இதேபோல் அப்பகுதியை சேர்ந்த மொய்தீன் மற்றும் நிஜாம்  கூட்டாக  கூறுகையில்.... இப்பகுதிக்கு சாலைபனிகள் நடைபெற்று கடந்த 15 வருடங்களாக  கண்டதில்லை என்றும் இந்த பகுதிக்கு உடனடியாக சிமெண்ட் சாலை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்ற அவர் , இப்பகுதியில் உள்ள குளத்தை புணரமைக்க ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என்றும் இதனால் குளத்தை சுற்றி புதர்கள் மண்டியுள்ளதாகவும் இதனால் விஷ ஜந்துக்கள் மற்றும் நாய் தொல்லை  அதிகரித்துள்ளது என்றார் . 
இதனை பொதுநல அமைப்புகள் முன்வந்து போராடி நீதி பெற்று தரவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாகும் .


  

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது