அதிரையில் திடீர் போக்குவரத்து நெரிசல்! (படங்கள் இணைப்பு)அதிரையில் நாளையதினம் நோன்பு பெருநாள் கடைபிடிக்க வாய்ப்புகள் உள்ளதால் பொதுமக்கள் இன்றே தங்களது தேவைகளை நிறைவேற்றி கொள்ளவேண்டி ஓரே சமயத்தில் கடைத்தெரு பகுதியில் திரண்டனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் தொடர்ச்சியாக அரைமணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இதனால் பொதுமக்கள் செய்வதெரியாது தினறினர். இந்நிலையில் அவ்வழியாக சென்ற சமூக ஆர்வலர்களான அதிரை புதியவன் ஹசன் மற்றும் சுலைமான் ஆகியோர் இணைந்து போக்குவரத்தினை ஒழுங்கு படுத்தினர். இதனால் நீண்ட வரிசையில் சிக்கிதவித்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சிவிட்டனர். மேலும் இவ்வாறான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட சாலையில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை காரணம் எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். எனவே இவைகளை அரசு உடனே கவனத்தில் கொண்டு சட்டவிரோதமான முறையில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Share:

2 comments:

 1. பதிவுக்கு நன்றி.
  EID MUBARAK.

  நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
  2015-1436

  இப்படிக்கு.
  கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
  த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது