நோன்புக்குப் பின்னால் ஏனிந்த மாற்றம்? ஏமாற்றம்!


முசல்லாக்களின்
முனகல்கள’
தஸ்பீஹ் மணிகளின்
தாகங்கள்;
திருமறையின்
திறக்காத பக்கங்கள்;
தனிமையின்
தனிமைகள்
மன்ஜில்கள் தோறும்
மஃரிபில் ஓதிய
”மன்ஜில்” கிதாபின்
மடிப்புகள்;
வித்ருத் தொழ
விழித்த கண்கள்
விடுபட்டுத் தூக்கம்
வீழ்த்திய நிலைகள்

இன்னும் பல பல
மாற்றம்;
நோன்பின் எதிர்பார்ப்பில்
ஏனிந்த மாற்றம்
ஏமாற்றம்!


“கவியன்பன்” கலாம்


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது