அதிரை எக்ஸ்பிரஸ் பதிவாளரின் பயண அனுபவம்

நேற்றைய  எனது பயணம் சற்று ஓர் புதிய அனுபவத்தை ஏற்படுத்தியது. இரவுநேர பொழுதில் ரஹ்மத் பேருந்தில் மாற்றுமத சகோதர்களும் பயணம் செய்தனர். இது இஸ்லாமியர்களுக்கு நோன்பு காலம் என்பதால் அவர்கள் சஹர்வேளை உணவு சாப்பிடுவதற்காக வேண்டி பேருந்து சற்று உள் மின்விளக்குகளை ஒளிரவிட்டவாறு மெதுவாக தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது. 
இந்நிலையில் எனது இருக்கைக்கு பின்புறம் இருந்த இருமாற்றுமத சகோதரர்கள் முஸ்லீம்கள் உணவு சாப்பிட்டு முடிக்கும்வரையில் வண்டியை சாலையின் ஓரத்தில் நிறுத்த சொல்லி முதலில் அவர்கள் நோன்பு பிடிக்கட்டும் பின்பு பயணத்தை தொடரலாம் என கூறி அங்கு இருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தனர். தமிழகத்தில் இனியும் ஃபாஸிச சிந்தனைகள் கொண்ட பிரிவினைவாதிகள் கால் பதிக்க முடியாது என்பதற்கு இது ஓர் சிறந்த எடுத்துக்காட்டு...

சாலிஹ் 


Share:

1 comment:

 1. பதிவுக்கு நன்றி.
  சங்கை மிகு சஹர் ரமலான்.

  அருமை என்று சொல்லுவதைவிட, இந்த இடத்தில் அவர்கள் நடந்து கொண்ட விதத்தை பார்க்கும் போது, தூய்மையான பசுமை உள்ளத்தில் இருக்கும்வரை கண்ணியம் கலை கட்டும், சமத்துவம் தலை தூக்கும், சகோதரத்துவம் சரியாமல் இருக்கும்..

  இப்படிக்கு.
  கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
  த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது