தஞ்சையில் காமராஜர் பிறந்தநாள் விழா!


தஞ்சை தீவு திடலில் இன்று மாலை காமராஜரின் பிறந்த நாள் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது.

சுகந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்பட்டவர் காமராஜர். நேரு, இந்திரா காந்தி போன்றவர்கள் மத்தியில் தமிழகத்தின் கருமை சிங்கமாகவும் திகழ்ந்தார். இவ்வாறு பல சிறப்புகளுக்கு உரியவரான காமராஜரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி இன்று மாலை தஞ்சை தீவு திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் மாநில தலைவர் ஜி.கே.வாசன், மாவட்ட தலைவர் ரங்கராஜன் எம்.எல்.ஏ உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் இதில் அதிரையை சேர்ந்த கட்சி தொண்டர்களும் கலந்துகொண்டனர். 


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது