அதிரை பள்ளிவாசல்களில் ஹத்தமுல் குர்ஆன் நிகழ்ச்சிகள்!அதிரையில் பெருவாரியான பள்ளிவாசல்களில் இன்று ரமலான் பிறை 29 ஹத்தமுல் குர்ஆன் நிகழ்ச்சி மிகசிறப்பாக நடைபெற்றது. ஆண்டுதோறும் அதிரையில் ரமலான் பிறை கடைசி பத்துகளில் பெருவாரியான பள்ளிவாசல்களில் ஹத்தமுல் குர்ஆன் என்னும் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று செக்கடி பள்ளி, புதுப்பள்ளி, கடற்கரை தெருபள்ளி, தரகர் தெரு பள்ளி, பெரிய ஜும்ஆபள்ளி, உள்ளிட்ட பெருவாரியான பள்ளிவாசல்களில் இன்று ஹத்தமுல் குர்ஆன் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. இதனால் அதிரையே விழா போன்று காட்சியளித்தன.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது