செக்கடி பள்ளியில் ஜும் ஆவா?

அதிரையில் ஏறத்தாழ 32 க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்கள் உள்ளன.
அதில் 5 பள்ளிகளில் வெள்ளிக்கிழமையன்று ஜும் ஆ தொழுகை நடைபெற்று வருகிறது.இதில் செக்கடி மோடு அருகில் உள்ள முஹைதீயப்பா பள்ளியிலும் ஜும் ஆ தொழுகை நடைபெற்று வந்த நிலையில் கூட்டம் அதிகம் வரவே அங்கு தொழுவதற்கு போதிய இட வசதி இல்லை ஆதலால் செக்கடிப் பள்ளியையும் ஜும் ஆ பள்ளியாக மாற்றி ஜும் ஆ தொழுகை நடத்தப்பட வேண்டும் என்று ஒரு சிலரிடையே கருத்து எழுந்தது.


இதனையடுத்து இன்று செக்கடிப் பள்ளியில் லுஹர் தொழுகைக்கு பிறகு ஜும் ஆ விஷயமாக முஹல்லாவாசிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

காரசாரமாக நடைபெற்ற கருத்து கேட்பு ஆலோசனைக் கூட்டத்தில் அருகில் ஒரு ஜும் ஆ பள்ளி இருக்கும் போது மற்றொரு ஜும் ஆ செக்கடி பள்ளிக்கு வேண்டாம் என்று கூடியிருந்த கூட்டத்தில் அனைவரும் ஒருமித்த குரலில் கூறவே ஏக மனதாக செக்கடிப் பள்ளியில் ஜும் ஆ வேண்டாம் என்று முடிவெடுத்து கையெழுத்திடப்பட்டது குறிப்பிடதக்கது.
Share:

8 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும்

  அன்பார்ந்த சகோதரர்களுக்கு,

  // முஹைதீயப்பா பள்ளியிலும் ஜும் ஆ தொழுகை
  நடைபெற்று வந்த நிலையில் கூட்டம் அதிகம் வரவே அங்கு தொழுவதற்கு போதிய இட வசதி இல்லை//

  செக்கடிப்பள்ளியில் போதுமான இடவசதிகள் எதிர்கால மக்கள் பெருக்கத்தையும் தாங்கும் அளவில் இருந்தால் அங்கேயே ஜும்ஆ நடத்த எதிர்காலத்தையும்(சுமார் 25 வருடங்கள்) கவனம் கொண்டு திட்டமிட்டு வசதிகளை எற்படுத்தலாம்.

  அமீரக துபாயிலிருந்து ப அஹ்மத் அமீன்

  ReplyDelete
 2. இறைவனை வழிபடும் இந்த விஷயத்தில் பரந்த, அரசியலற்ற நிய்யத் முதல் தேவை.

  ஒவ்வொரு அதிரைவாசியும் எந்த ஜும்ஆ பள்ளியில் தொழ வேண்டும் என்பதை தங்கள் போய் வரும் வசதிகள், அனுபவம், திருப்தி ஆகியவைகள் மூலம் தீர்மானிக்கிறார்கள் என நம்புகிறேன். இறைவனுடைய திருப்திக்காக பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சுமூகமாக சிறந்த முடிவுகள் எடுத்து செயல்பட வேண்டுகிறேன்.

  அமீரக துபாயிலிருந்து ப அஹ்மத் அமீன்

  ReplyDelete
 3. சகோ அமீன் அவ்ர்களே, பக்கதில ஒரு ஜும்மா பள்ளி இருக்கும் போது இங்க தேவதானா? இட வசதி இல்லனா மைதியப்பா பள்ளீ நிர்வாகம் தான் சரி செய்ய வேண்டும் அதற்காக செக்கடி பள்ளிகு ஜும்மா கொண்டு வருவது முறையற்றது

  மாறாக ஜும்மா தொழுகை தூரத்தில் நடந்து சென்று தொழுவது தான் சிறப்பு அதை விட்டுபுட்டு தெருவுக்கு தெருவு கொண்டு வந்தா விளங்கிடும் இந்த நம்மூரு.

  ஏற்கனவே வாழுது இதுல இது வேறயா..

  ReplyDelete
 4. சகோதரர்களுக்கு,
  ஒருங்கிணைந்த ஜமாத்தை பிரிப்பவர்கள் நாசமாட்டும் என நபி (ஸல் )
  அவர்கள் கூறியுள்ளார்கள்.
  எனது கருத்து கொஞ்சம் கடினமாக இருக்கலாம் ஆனால் இதுவே சிறந்தது.

  முகைதீன் ஜும்மா பள்ளியை விஸ்தீரணம் செய்ய போதிய இடமில்லை ஆனால் செக்கடி பள்ளியை விஸ்தீரணம் செய்ய நமக்கு குளம் நிறையவே உள்ளது .

  முன்பு ஊரில் இருக்கும் அனைத்து மக்களையும் சந்திக்கும் ஒரு பள்ளியாக பெரிய ஜும்மா பள்ளி இருந்து வந்தது .அதன் பிறகு தெரு மக்களை சந்திக்க தெருவிற்கு ஒரு ஜும்மா பள்ளி வந்தது தற்போது போதாத குறைக்கு சந்தில் உள்ளவர்களை மட்டும் சந்தித்துக்கொள்ள ஒரே தெருவில் இரண்டு ஜும்மக்கள் நிச்சயம் கூடாது .

  நான் பள்ளியில் படித்து வந்த காலங்களில் கடல்கரை தெரு பெருமக்கள் மிகுந்த சிரமத்துடன் அங்கே மேலேத் தெரு ஜும்மா பள்ளிக்கு தொழ வருவார்கள் அப்போது அட்டோகளோ இரு சக்கர வாகனங்களோ இல்லாத காலம் ஆகவே கடல்கரை தெருவுக்கு ஜும்மா பள்ளி அவசியமானது.

  நடுத்தெரு மக்களுக்கு ஒரே இடமாக செக்கடி பள்ளியை மட்டும் ஜும்மா பள்ளியாக தேர்ந்தெடுத்து இடம் பற்றாக்குறை என்றால் அதிலே இரண்டு ஜும்மா தொழுகைகளை அடுத்து அடுத்து வைக்கலாம் மேலும் செக்கடி பள்ளியை விரிவுபடுத்த நமக்கு குளம் நிறையவே உள்ளது .

  ஆரம்பம் முதலே முகைதீன் ஜும்மா பள்ளியில் இடவசதிகள் குறைவு ஆகவே அங்கு நடைபெறும் குத்பாக்களை நிறுத்திக்கொள்ளலாம் .

  ReplyDelete
 5. Brother Aboobakr, pls focus, because aarambam nallathan irunthathu, but last il sothappiteenga.

  ReplyDelete
 6. புதிதாக ஜும்ஆ பள்ளிகளை ஏற்படுத்துவதை விட பெரிய ஜும்ஆ பள்ளிக்கு அனைவரும் சென்றுவரும் வகையில் சுழற்சியாக வாகன வசதியை ஏற்படுத்தலாம். இதை துபைவாழ் TIYA நிர்வாகிகளிடம் பலமுறை நேரிலும் வலியுறுத்தியுள்ளேன்.

  பெரிய ஜும்ஆ பள்ளியில் எதிர்காலத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டாலும் அருகிலுள்ள மைதானத்திலும் தொழுகை ஏற்பாடு செய்ய போதிய இடவசதி உள்ளது.

  ஊர்மக்களை ஒன்றிணைக்கும் தலமாக விளங்குபவை ஜும்ஆ பள்ளி மற்றும் பெருநாள் தொழுகையே என்பதைக் கருத்தில் கொண்டு நீண்டகால நோக்கில் திட்டமிடுவது அவசியம்.

  அவ்வகையில்,மேற்சொன்ன கருத்தை சம்பந்தப்பட்டவர்கள் பரிசீலிக்கலாமே.

  ReplyDelete
 7. ஒருமனதாக முடுவு எடுக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது