சிறையில் இருந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதிரை தௌபீக் -ப்ளாஷ் பேக்

கடந்த 2002ஆம் ஆண்டு கொடுங்கையூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாற்பது டெட்டனேட்டர்களைக் காவல்துறையினர் 'கண்டு' எடுத்தனர். அவற்றை மறைத்து வைத்திருந்ததாகக் கூறி, தவ்ஃபீக்கை 26 நவம்பர் 2002இல் கைது செய்து சிறையில் அடைத்து, மூன்று நாட்கள் கழித்து, 29 நவம்பர் 2002இல் நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் தவ்ஃபீக்கைக் காவல்துறை விசாரணைக் கைதியாக (வழக்கு எண் 681/2002) சிறையில் அடைத்தது. 

நவம்பர் 26இல் சென்னைக் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்குள் இருந்த தவ்ஃபீக்கை, டிசம்பர்  2இல் நடந்த காட்கோபர் பேருந்து குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக மும்பைக் காவல் துறை குற்றம் சுமத்தி, தன் வழக்கில் புத்திசாலித் தனமாகச் 'சேர்த்து'க் கொண்டது.
பின்னர் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிறையில் இருந்தவாறே பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பட்டுகோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 3500க்கும் அதிகமான வாக்குகள் பெற்றார்.இந்த தேர்தலில் அதிராம்பட்டினம்,மதுக்கூர் போன்ற ஊர்களில் கணிசமான வாக்குகள் இவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.    


அதிரை தௌபீக் விடுதலை


Share:

3 comments:

 1. பொய்யர்களின் புஸ்வானம் சவுத்து விட்டது .
  அனைத்து அதிரையர்களும் ஒரு சத்தியத்திற்கு கட்டுப்பட்டவர்கள் இதே சூழலில் அதிரையை சார்ந்த ஒரு மாற்று மத சகோதரன் இவ்வாறு விடுதலை பெற்றாலும் முதலில் சந்தோஷ படுபவனும் நானே ..
  மாறாக அதிரையர்கள் ஒருபோதும் தீய வழியில் செல்லாதவர்கள் .
  அதிரையின் ஒரு பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தவர் தான் அதிரைதெவ்பீக்
  இவர் ஊரில் எப்படி வளந்தார் என்பதை அதிரையர்கள் அவரின் பெற்றோர்களின் பாரம்பரியத்தில் இருந்து புரிந்து கொள்வார்கள்.

  ReplyDelete
 2. ALHAMDHULILLAH... MEDIA is the world most terrorist.. PLEASE SEAL ALL MEDIA

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது