நான் மனிதனை தேடுகிறேன்...


மனிதனே மதுவை குடித்து கண்முடி நிம்மதியாக சுடுகாட்டில் உறங்குகிறாய், ஆனால் உன்னை இழந்த உன் தாய், தந்தை, மனைவி, மக்கள் அனாதையாக தெருவில் உறக்கம்.

மதுவை குடித்து மனைவியை இழந்த உன் மனைவி, மக்களுக்கு, இந்த அரசாங்கம் ரேசன் கடைகளில் புடவையும், 20 கிலோ அரிசியும், 500 ருபாய் கொடுத்தால் மட்டும் அந்த குடும்பத்துக்கு நிம்மதி கிடைத்து விடுமா? வீட்டு தலைவர் தினமும் உழைத்து கொண்டு வரும் அந்த 200 ருபாயில் கிடைக்கும் நிம்மதியை இந்த அரசாங்கத்தால் கொடுத்திட முடியுமா?

வீட்டு தலைவனை இழந்து அனாதையாக நிர்கதியானவர்கள் வயிற்று எரிச்சல், சாபம் அது எந்த அரசாக இருந்தாலும் சரி இந்த மதுவை அமல்படுதியவர்களை சும்மா விடாது. இன்று அல்ல நிச்சயமாக ஒருநாள் உங்களை சும்மா விடாது.

பெற்றால் தான் பிள்ளையா? நீங்களும் ஒரு தாய் தான் உங்கள் ஆட்சியில் மது தெருக்களில் ஆராய் ஓடுகிறது. இந்த மதுவால் கிடைக்கும் லாபத்தை கொண்டு மக்களுக்கு எவ்வளவு தான் இலவச பொருள் கொடுத்தாலும் அந்த மது குடித்து அனாதையான குடும்பம் அதிகம். இது அவசியம் தானா?

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் காமராஜ் அவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு கல்வி அறிவை கொடுத்தார். பள்ளிகளில் மதிய உணவு என்பதை அமல்படுத்தினார். அந்த மதிய உணவு இன்று சத்துணவு ஆகிவிட்டது. அரபு நாட்டில் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த பூமியில் மதுக்கள் ஆராய் ஓடியது. அதை அவர்கள் மக்கள் மத்தியில் தடை செய்தார்கள். சூதாட்டம், மதுவினால் சிலருக்கு நன்மை ஏற்பட்டாலும் அதில் அளிமானங்கள் தான் அதிகம் அரபுலகம் முழுவதும் அந்த இரண்டையும் தடை செய்தார்கள். இந்த மதுவால் கிடைக்கும் லாபத்தை மக்களுக்கு எவ்வளவு தான் நன்மை செய்தாலும், இந்த மது பழக்கத்தால் அதிகமான ஏழை, எளிய மக்கள் தான் அதிகம் பாதிக்க படுகின்றனர். இதனால் சிறு பிள்ளைகள் தான் பாதிக்கபடுகின்றனர். மக்களுக்கு இதனால் முழு வயிறு  உணவு கொடுக்காவிட்டளாலும் கால் வயிறு கஞ்சி கொடுப்பதே மேலானதாக இருக்கும்.சிந்திர்பிர்களா? செயல்படுவீர்களா? அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே.
அன்று வெள்ளக்காரன் மதுவை கொடுத்து தனக்கு இந்தியாவை அடிமையாக்கினான். ஆனால் இன்று ஆட்சியாளர்கள் ஆட்சியை பிடிப்பதற்கு மக்களுக்கு மதுவை கொடுத்து அவனை மதி மயங்க செய்து ஆட்சியை பிடிக்கிறான். அரசாங்கம் மக்களை சிந்திக்க விடாதபடி மதுவை கொடுத்து அடிமையாக்குகிறது. மனிதன் சிந்திக்க தொடங்கினால் எந்த வித மதுவுக்கும் அடிமையாக மாட்டார்கள்.

மது குடித்த மகனே நீ நிம்மதியாக ரோட்டில் உறங்குகின்றாய், ஆனால் உன் வீட்டில் உன் மனைவி உன் மக்கள் பசியோடு உறக்கம்.

உன் செயலால் உன் தாய், தந்தை, மனைவி, மக்களை அனாதையாக்கி விடாதே. உன் தாய், தந்தையின் சாபம் உன்னை சும்மா விடாது.

விவசாயம் இல்லாமல் வானம் பார்த்த பூமி ஆகிவிட்ட நிலத்தை கந்து வட்டி காரனிடம் அடகு வைத்துவிட்டு மது கடையில் கும்மாளம் அடித்துவிட்டு வீட்டுக்கு வரும் வழியில் வாகனத்தை அடிபட்டு செத்தால் யாருக்கு நஷ்டம்? மதுவை குடிக்கும் முன், உன்னை நம்பி உன் வீட்டில் உள்ளவர்கள் கதி என்னவாக இருக்கும் என்பதை என்னிப்பார்.

இதைத்தான் பார்க்குள் நல்ல நாடு நம் பாரதநாடு என்று பாடினாரா?

இந்த மதுவால் அரங்காத்திற்கு எவ்வளவு தான் கோடிகணக்கில் பணம் கிடைத்தாலும், குடும்ப தலைவனை இழந்து கோடியில் கையேந்துபவர்களை மனசாட்சியுடன் உதவி செய்வார்கள் இந்த நாட்டில் யாராவாது உண்டா? கோடிகணக்கில் பணம் படைத்தவர்கள் பஞ்சணையில் உறக்கம், ஏழை, எளிய மக்கள் பசி பட்டினியால்(மது போதையில்) உறக்கம்.

இந்த அராசங்கம் மனிதனுக்கு நன்மை செய்ய முடியாவிட்டாலும், ஏழை, எளிய மக்கள் பிச்சை எடுக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டாம்.

மதுவை விற்றுத்தான் இந்த அரசாங்கத்தை நடத்த முடியும் என்கிற சூழ்நிலை இருக்குமானால் அப்படிப்பட்ட அரசாங்கம் மக்களுக்கு தேவை இல்லை.

ஐந்து அறிவுள்ள மிருங்கங்கள் தன் வாழ்கையை அதன் வரையறைகுள் கட்டுப்பட்டு நடக்கிறது. ஆறு அறிவுள்ள மனிதன் தன் வரையறையை மீறி, தனக்கு தானே பாவத்தை தேடி கொள்கிறான்.

நீ நஷ்டம் அடித்தால் உன் வீட்டுக்கு கேடு, உன் நாட்டுக்கு கிடையாது. 

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது