இதயங்களை இணைக்கும் இனிய விழா !


தமிழ்நாடுபத்திரிகையாளர்களின் சங்கத்தின் சார்பாக22.07.2015 அன்று மாலை 5 மணியளவில் ரமலான் பண்டிகையையொட்டி இதயங்களை இணைக்கு இனிய விழா சென்னை எழும்பூர் பைஸ் மாஹலில் (ஆல்பர்ட் திரையரங்கம் அருகில்) சிறப்பாக நடைப்பெற்றது.. 

மாநிலத் தலைவர் D.S.R.சுபாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ப்ளோரன்ட் பெரேரா, Dr.G.அழகர் ராமானுஜம், Dr.அசோக் ஜி.லோதா முன்னிலை வகித்தனர். தலைமை நிலைய செயலர் D.அல்லா பகேஷ் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மதங்களை கடந்த மனித நேயத்தை பற்றியும், சகோதரத்துவத்தை பற்றியும், மத நல்லிணக்கத்தையும் பறைசாற்றும் விதம் மிகவும் அருமையாக பேசினார்கள். மதம் ஒரு மனிதனை நல் வழி படுத்தவே தவிர, மதம் பிடித்த யானை போல் இருக்க கூடாது என்பதையும் தெளிவாக விளக்கினார்கள். சிறப்புரையாற்றியவர்கள், தொல்.திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர்கள் செ.கு. தமிழரசன், எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம். Dr.‘கவிகோ’. அப்துல் ரகுமான், ‘மல்லை’ சத்யா, நடிகர் எஸ்.வி.சேகர், A.M.விக்கிரமராஜா, Dr,K.V.S.ஹபீப் முஹம்மத், நடிகர் மன்சூர் அலிகான், S.A.N.வசீகரன், S.M.பாக்கர், K.K.S.M.தெஹ்லான் பாகவி, கே.நவாஸ்கனி, CMPA வெங்கட்ராஜ், Dr.D.S.மகிமை தாஸ், சசிகலா ரவீந்திர தாஸ் மற்றும் பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். 

முன்னதாக “பவர்” வசந்த், தன்னம்பிக்(கை) தான்சேன் கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. தலைமையிலிருந்து தலைமை நிலைய செய்தி தொடர்பாளர் சார்லஸ் .S.குணசேகரன்,மாவட்ட அமைப்பாளர் G.மேகராஜன், ‘நமது நகரம்’ S.சரவணன், V.அனந்தராமன, ‘தர்மபுரி’ R,சசிகுமார், ஆனந்தகுமார், I.ஆனந்தராஜ், K.R.கணேஷ், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது