அதிரையில் தொடரும் சோகம் - ஒரே நாளில் 12 விபத்துக்கள்

அதிரையில் நேற்று நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டது மகிழ்ச்சியான இந்த தருணத்தில் வேதனைகளும் அதிர்ச்சிக்களுமாகவே  இருந்தன . நேற்று மட்டும் 12 விபத்து மேல் ஏற்பட்டு உள்ளது. இதில் சிறுவர்களே அதிகம், பெரும்பாலான சிறுவர்கள் லைசென்ஸ் இல்லாமல் பயணம் செய்கின்றனர், இதற்கு காரணம் யார்? பைக் கில் 3 நபர்கள் அதிகமாக காணப்பட்டனர், கட்டுபாடு இல்லாத வேகம். அதிரையில் ஏற்கனவே விபத்தில் சிறுவர்கள் காயப்பட்டு உள்ளனர் மேலும் பலரும்  உயிர் இழந்து உள்ளனர்.
அனால் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பது கவலைக்குரிய விஷயம். நேற்று 14, 15வயது மதிக்கத்தக்க சிறுவர்கள்  பல்சர் பைக் ஒட்டிசெல்கின்றான். இதை பார்த்து பாராட்டுவதா? கவலைபடுவதா? அதிரையில் சாலை விபத்துகள் குறைய வேண்டும் என்றால் முதலில் பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு ஏன் பைக் என்ற எண்ணம் உருவாக வேண்டும்.

file image


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது