அதிரை நகர முஸ்லீம் லீக் நிர்வாகிகள் தேர்வு !

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் வழக்கறிஞர் முனாஃப்  இல்லத்தில் நடைபெற்றது  மாநில துணைத்தலைவர் SSB நசுருதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர் .

இதில் நகர தலைவராக KK ஹாஜா நஜ்முதீன் மீண்டும் தேர்வு செயப்பட்டார் . நகர முஸ்லீம் லீக்கின் செயலளாராக வழக்கறிஞர் முனாஃப் அவர்களும் பொருளாளராக A ஷேக் அப்துல்லா தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் இதேபோல் நகர துணை தலைவராக KSA அப்துல்ரஹ்மான்,கவிஞர் தாஹா ,MK அபூபக்கர் ,SMA அக்பர் ஹாஜியார் ஆகியவர்கள் ஆகியவர்கள் தேர்தெடுக்க பட்டனர் 

நகர துணை செயலாளர்களாக OKM சிபகத்துல்லாஹ் ,அன்சாரி ,Dஅமீன் ,ரஃபி அகமது ஆகியோர் தேர்வாகினர் .நகர இளைஞர் அணி செயலாளாராக தரகர் தெருவை  சேர்ந்த ஷாகுல் ஹமீது அவர்களும் தொழிலாளர் அணி செயலாளராக முஹம்மது இப்ராஹீம் தேர்வாகினார் . 

மாவட்ட பிரதிநிதியாக SSB நசுருதீன் ,மணிச்சுடர் ஷாகுல் ஹமீது ,M R ஜமால் முகம்மது ஆகியோர் நகர முஸ்லீம் லீக் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர் 

இந்த நிகழ்ச்சியில் முக்கிய தீர்மானங்கள் நிர்வேற்றபட்டன அதில் குறிப்பாக தஞ்சையில்  வரும் 31 ஆம் தேதி  நடைபெறவுள்ள பொதுகுழு கூட்டத்தில் திரளாக கலந்துகொள்வது என தீர்மானிக்கபட்டுள்ளது .மேலும்  மறைந்த முஸ்லீம் லீக்கின் நக்ரநிர்வாகி ஷேக்கா மரைக்காயர் மறைவுக்கு பிரார்த்தனை செய்வதுடன் அவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறுவது என தீர்மானிக்கபட்டுள்ளது ,இனி வரும் காலங்களில் அதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக்கை பலமிக்க அணியாக மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிரிவேற்றபட்டன.

 இதேபோல் மத்திய பாஜக அரசால் தமிழகத்தில் சன் டிவி குழுமத்தை முடக்கும் நடவடிக்கை பாஜக அரசின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது என்றும் 2016ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்ற கொள்கையை வரவேற்பதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்..

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது