அட! டா!! இந்தப் பாதையையும் விட்டு வைக்கவில்லையா?


அதிரையில் உள்ள தெருக்களில் ஒன்று தான் புதுமனைத் தெரு, இதை கிழக்கு மேற்காக நான்கு அல்லது ஐந்து லைனாக பிரிக்கலாம்.

இதில் நேராக மேற்கே சித்தீக் பள்ளியைக் கடந்து போனால் கடைசியில் வருவது, வலது பக்கம் திரும்பினால் மறைக்கா குளம் முனங்கு வரும், இந்தப் பகுதி கடந்த ராத்திரி (23/07/2015-வியாழக்கிழமை) பெய்த மழையினால் சேரும் சகதியுமாக இருக்குது, கடந்து போவதற்கு தோதுவாக இல்லை. damage

இதற்க்கு முன் சித்தீக் பள்ளிக்கு எதிர்தாற்போல் ஒரு குறுக்கு பாதை இருக்கும், இதுவும் தற்போது கடந்து போக முடியாத அளவுக்கு இருக்கின்றது. சிரமப்பட்டு நடந்து கடந்து போகலாம், ஆனால் வாகனங்களில் கடந்து போகமுடியாது.  damage.

இதற்க்கு முன் ஒரு பாதை இருக்கும், இதில் கடந்து போகலாம், ஆனால் கரடு முரடாக இருக்கும், ராத்திரி வேளையில் சரி வராது.

இதற்க்கு முன் ஒரு பாதை இருக்கும், அதுதான் செய்குணா வீட்டு சந்துப் பெரிய பாதை என்று சொல்வார்கள்.

இந்தப் பாதையில் முதல் கட்டம், இரண்டாவது கட்டம், கடந்து மூன்றாது கட்டத்தில் இப்படி மணல் குவியலை கொட்டி இருப்பது நியாமா?இந்தப் புகைப்படம் 24/07/2015-வெள்ளிக்கிழமை பின்னேரம் 08.00pmக்கு எடுக்கப்பட்டது.

நீங்களே சொல்லுங்க! இது எந்த வகையில் நியாயம்?

மணல் வியாபாரி, அவன் ஒரு வியாபாரி, அவனுக்கு தேவை காசு, எந்த இடத்தில் கொட்டினாலும் அவனுக்கு கவலை இல்லை, அவனுக்கு தேவை காசு, காசு வந்தால் போதும்.

உரிமையாளர் எங்கே சென்றார்?

இதுபோல் நமதூரில் பல இடங்களில் பல அரங்கேற்றங்கள், அரங்கேறி வருகின்றது. யாரு கேட்பது?

இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது