கல்விக்கே களங்கம்


 கடைச்சரக்கு அல்ல;
ஆனால், கல்வியும் கிடைக்கிறது - எப்படி, எப்படி வேண்டுமானாலும். ஆசிரியர்களுக்கு அடிபணிந்து மாணவர்கள் கல்வி கற்ற காலம் அது.

இப்போது, பிரம்பைக் கண்ணால் காட்டினாலே ஆசிரியர்களுக்கு ஆபத்து. நவீனக் கல்வி உலகம், ஆசிரியர் - மாணவர் உறவைக் கரைத்திருக்கிறது. ஆசிரியர்களும் மாறியிருக்கிறார்கள் - எல்லாரும் அல்ல. மாணவனை அடிக்காமலே அடிக்கப் பழகிக்கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள் சிலர்.

மாணவர்களுக்கு டியூஷன் டார்ச்சர், பள்ளிகளில் பிரசித்தம். மதிப்பெண் வழங்குவதில் கூட பாரபட்சங்கள். பொதுத்தேர்வில் இது செல்லுபடியாகாது என்றாலும், உள்ளீடு மதிப்பெண்களைக் காட்டி மாணவர்கள் பலர் மிரட்டப்படுவதுண்டு.

கும்பகோணம் அருகே டியூஷனில் சேராத மாணவன், ஆசிரியரால் தாக்கப்பட்டார். இதுபோல், அறியப்படாத சம்பவங்கள் ஏராளம். இருப்பினும், பள்ளிகளில் உள்ளீடு மதிப்பெண்களில் ஆசிரியர்களால் அதிகம் கைவைக்க முடியாது. ஆனால், கல்லூரிகளில் மாணவர்களின் உள்ளீடு மதிப்பெண்களில் எளிதில் கைவைக்க முடிகிறது. சில நேரங்களில் நன்கு படிக்கும் மாணவர் கூட இதனால் பாதிக்கப்படுகிறார். ஆசிரியர்கள் சிலர் இவ்வாறு நடந்துகொள்வதால், ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயத்துக்கும் கெட்ட பெயர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், ஆங்கிலத்தில் பி.எச்டி பெற, ‘ஓர் இரவு பகிர்தல் +  ரூ.1.5 லட்சம் கையூட்டுஎன்று துறைத்தலைவர் பேரம் பேசியதாக மாணவி அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த மாணவி, பல்கலைக்கழக அளவில் முதுகலை ஆங்கிலத்தில் முதலிடம் பெற்றவர். கணவனை இழந்து வாடுகிறார். மனிதாபிமானமே இல்லாமல் துறைத்தலைவர் நடந்துகொண்டதாக கதறியழும் மாணவி, இதேபோல் வழிகாட்டியாக இருந்து மற்ற மாணவிகளையும் துன்புறுத்துவதாகவும், அவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். புகாரைத் துறைத்தலைவர் மறுத்திருக்கிறார். மாணவி கொடுத்த புகார் தவறானது என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. பல்கலைக்கழகக் குழுவின் விசாரணை எந்தளவு நியாயமானதாக இருந்திருக்கும் என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க் முடியவில்லை.

ஆராய்ச்சிப்படிப்புகளின் தரம் குறைந்துகொண்டிருக்கிறது என்று கல்வியாளர்கள் கூறிவருகின்றனர். இப்படியிருக்க, ஆராய்ச்சிப்படிப்புகளில் பணமும், காமமும் விளையாடினால்விளைவு எப்படியிருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆராய்ச்சிப்படிப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக மாணவனோ, மாணவியோ தன்மானத்தையே அடகு வைக்க வேண்டியிருந்தால், எத்தனை பேர் ஆராய்ச்சிப்படிப்பைத் தொடர விரும்புவார்கள்?

தரமற்ற மாணவனோ, மாணவியோ தகுதியே பெறாமல் சாதித்தால் அது பேராபத்து. எதிர்காலத்தில் அவர்கள்தானே ஆசிரியர்களாகவும் வருவார்கள்? தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளைச் செதுக்குபவர்கள் ஆசிரியர்கள். ஆசிரிய சமுதாயம் போற்றத்தக்கது. அதில் களங்கம் ஏற்படுவதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது