துபாயில் நடந்த TIYA-வின் 3ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி ! [ புகைப் படங்கள் இணைப்பு ]


இன்று [ 10/07/2015 ] வெள்ளிக்கிழமை  மாலை  டேரா துபாய் ஹம்ரியா லேடிஸ் பார்க்கில் அமீரகத்தில் இயங்கி வரும் அதிரை தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் [ TIYA ] சார்பாக மேலத்தெரு மஹல்லாவாசிகளின் பங்களிப்போடு  3ஆம் ஆண்டு இஃப்தார்  நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்தது.

வந்திருந்த அனைவரையும் TIYA வின் அமீரகத்தலைவர் அப்துல் மாலிக், பொருளாளர் அப்துல் காதர் உள்ளிட்ட சக நிர்வாகிகள் அனைவரும் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.

இஃப்தார் உணவுக்காக அதிரையின் பிரத்தியேக சுவையுடன் கூடிய நோன்புக்கஞ்சியுடன் கடப்பாசி, சமூசா, பழவகைகள், ஜூஸ், மினரல் வாட்டர் ஆகிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மஹல்லாவாசிகள் மற்றும் பிற நண்பர்கள் கலந்து கொண்டு இஃப்தார் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

அதன் புகைப்படங்கள் இதோ....... 
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது