Monday, August 31, 2015

சென்னையில் உதயமாகியது லிக்கா ட்ராவல்ஸ்!!

சென்னை நகரம் பல்வேறு மக்களை கொண்ட மாநகரமாகும் இந்நகரத்திற்கு பல்வேறுபட்ட மக்கள் , குறிப்பாக இலங்கை பர்மா போன்ற நாடுகளில் இருந்து தொழில்முறை பயணமாக சென்னை வருகின்றனர் இவர்களில் பெரும்பாலானோர் சென்னை மண்ணடியை விரும்பி வருகின்றனர். இவர்களுக்கு பயண சேவையை துரிதமாகவும் நம்மபிக்கையுடன் சேவை செய்திட வேண்டும் என்ற நன்னோக்கில் இன்று காலை 11 மணிக்கு உதயமாகியது லிக்கா ட்ராவல்ஸ் & ஃபாரக்ஸ்  நிறுவனம் இதில் விமான  முதல் ,ரயில்,பஸ் டிக்கட் உள்ளிட்டவைகளுடன் ஹஜ் உம்ரா சேவையை குறைந்த செலவில் வழங்கிட காத்துள்ளது .மேலும் அயல் நாட்டு பணங்களை நல்ல விலைக்கு மாற்றிக்கொள்ளாம் என இந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்.


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


யார் காரணம்..?


ஒரு குழந்தை இந்த பூமியிலே பிறப்பெடுக்கும் போது, 
இந்த தேசத்தில் தான் பிறக்க வேண்டும் என்றும்,

இந்த மொழி பேசும் மக்களிடம் தான் பிறக்க வேண்டும் என்றும்,
 
இந்த மதத்தை, மார்கத்தை, வழியை பின்பற்றும் பெற்றோரிடம் தான் பிறக்க வேண்டும் என்றும்,
 
இந்த இனத்தைச்சேர்ந்த தாய் தந்தையரிடம் தான் பிறக்க வேண்டும் என்றும் கேட்டுப் பிறப்பதில்லை.. இது தற்செயல் நிகழ்வு..

அதே போன்று மாட மாளிகைகளைக் கொண்ட செல்வந்தர்கள் வீட்டில் பிறப்பதும்,

நடுத்தர வர்கத்தில் பிறப்பதும் அல்லது ஓலைக் குடிசையில் ஏழையாக பிறப்பதும் தற்செயல் நிகழ்வே..!!

மத நம்பிக்கைகளின் படி பார்த்தால் இதற்கு பல காரணங்கள் கூறுகிறார்கள்.. ஆனால், விஞ்ஞானப்பூர்வமாக சிந்தித்தால் இவைகள் அனைத்தும் தற்செயல் நிகழ்வுகள்தான்..!!

ஒரு குழந்தை இந்த பூமியில் பிறக்கும் போது எந்த தேசத்தில் பிறக்கிறதோ அந்த தேசத்தின் பிரஜையாகிறது..
 
எந்த மொழி பேசும் மக்களிடம் பிறக்கிறதோ அந்த மொழி பேசுகிறது..

அந்த குழந்தையின் தாய் தந்தையர் எந்த மதத்தை, மார்க்கத்தை, வழியை பின் பற்றுகிறார்களோ அந்த மதத்தை, மார்க்கத்தை, வழியை பின்பற்றுகிறது..
 
பெற்றோர் எந்த கலாச்சாரத்தை, என்ன பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கிறார்களோ அதையேதான் அந்த குழந்தையும் கற்று வளர்கிறது..!!

நிஜம் இப்படியிருக்க, ஒரு மனிதன் இந்த தேசத்தை சேர்ந்தவன் என்பதற்காகவோ,
 
இந்த மொழி பேசுகிறான் என்பதற்காகவோ,
 
இன்ன மதத்தை, மார்கத்தை, வழியை பின்பற்றுகிறான் என்பதற்காகவோ,
 
அல்லது இந்த இனத்தைச் சேர்ந்தவன் என்பதற்காகவோ வெறுப்பதும் ஒதுக்குவதும் ஏன்?

ஒரு மனிதன் இந்த மண்ணில் பிறக்கும் போது ஒன்றும் அறியாமல் தான் பிறக்கிறான்..
 
ஆனால் வளரும்போது நல்லவனாகவும், கெட்டவனாகவும், அறிவாளியாகவும், மூடனாகவும், உழைப்பாளியாகவும், சோம்பேறியாகவும், தேச பக்தனாகவும்,  தேச துரோகியாகவும், சமூகநல ஆர்வலனாகவும், மாறுவதற்கு யார் காரணம்..?

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Centre.---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Sunday, August 30, 2015

தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் சென்ற கார் விபத்துக்குள்ளாகியது.!

தமுமுகவின் மூத்த தலைவரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் Dr.MH..ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ராமநாதபுரத்திலிிருந்து  புதுக்கோட்டை செல்லும் வழியில் திருமயம் என்ற இடத்தில் எதிரே வந்த லாரி திருப்பக்கூடிய சமயத்தில் அவரது கார் விபத்துக்குள்ளாகியது.  இதில் அவரது கார் லேசாக சேதம் அடைந்தது இதில் எவ்வித காயமும் இன்றி ஜவாஹிருல்லாஹ் உயிர் தப்பினார்.

--அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


புதுபள்ளி அருகே கண்டெடுக்கப்பட்ட ATM கார்ட் !

ஆஸ்பத்திரி  தெரு  புதுபள்ளி அருகில்  சாலை  ஓரமாக கனரா வங்கியின்  ATM கார்ட் ஒன்று  கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் இந்த  உரிய அடையாளத்தை கூறி கீழ் காணும் தொலைபேசியை தொடர்பு கொண்டு  பெற்றுகொள்ளவும் .
தொடர்பு கொள்ள வேண்டிய எண்:  74185 47850


சென்னையில் புதிதாய் உதயமாகும் லிக்கா நிறுவனம் !


பட்டுகோட்டையில் வெற்றிகராமாக செயல்பட்டு வரும் ஆயத்த ஆடை நிறுவனத்தின் மற்றொரு மயிக்கல்லாக  சென்னை அங்கப்ப நாயக்கன் தெரு அஷரஃப்  பள்ளி எதிரே லிக்கா  ட்ராவல்ஸ் & ஃபார்க்ஸ் நிறுவனம் நாளை காலை 11 மணிக்கு திறப்பு விழா காண உள்ளது . 

இதில் உள்ளூர் முதல் உலக நாடுகளுக்கு டிக்கட் மற்றும் விசா சர்வீஸ் ஆகியவை மிக குறைந்த சேவை கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்க உள்ளதாக அதன் உரிமையாளர்களில் ஒருவர் அர்சத் நம்மிடம் கூறினார் அவர் மேலும் கூறுகையில் நாளையதினம் உதயமாகும் இந்நிறுவனத்தின் திறப்பு விழாவில் அனைவரும்   தவறாது கலந்துகொண்டு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுகொண்டார் .

---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


5 ரன் வித்தியாசத்தில் அதிரை AFCC தோல்வி

தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷேன்  (TNCA) டிவிசன் ஒன்றிகான இறுதிப்போட்டிக்கு அதிரை AFCC தேர்வு செய்யப்பட்டு இன்றுஅருண் நெட்ஸ் அணிக்கும் அதிரை AFCC அணிக்கும் இறுதி போட்டி நடைபெற்றது.இப்போட்டியின் முதல் பேட் செய்த  அருண் நெட்ஸ் அணி 134 ரன் அடித்தனர்.

இதில் அதிரை AFCC அணி இம்ரான் 5 விக்கெட்டுகள் எடுத்து  சாதனை படைத்தார்.பின்னர் களம் இறங்கிய அதிரை AFCC அணி   129 எடுத்து 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து உள்ளது. ---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்கள் பலி (புகைப்படங்கள்)

குளித்தலை அருகே, காவிரி ஆற்றில் மூழ்கி, கல்லுாரி மாணவர்கள் மூன்று பேர் பலியாயினர்.கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்த ஆசிக், திருச்சி ஜமால் முகமது கல்லுாரியில், எம்.ஏ., அரபி, இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விடுதி நண்பர்கள், 15 பேருடன், நேற்று, குளித்தலைக்கு வந்தார். மதியம் சாப்பிட்ட பின், அனைவரும், குளித்தலை கடம்பர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.அப்போது, 20 வயது முதல், 23 வயது வரை உள்ள, மூன்று மாணவர்கள், ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதால், தண்ணீரில் மூழ்கினர்.குளித்தலை தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் சிலர் ஆற்றில் குதித்து, ஒரு மாணவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்; ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்ற இரண்டு மாணவர்கள், இறந்த நிலையில் மீட்கப்பட்டனர்.இது குறித்து, குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர். source:dinamalar 
-

ஐஸ் ஹவுஸ் பள்ளிவாசல் வழியாக விநாயகர் ஊர்வலத்தை அனுமதிக்க வேண்டும் .!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமையகத்திற்கு இன்று வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் இராம. ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், INTJ மாநில தலைவர் எஸ்.எம். பாக்கர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளை சந்தித்து பேசினர்.
அப்போது,சென்னை திருவல்லிக்கேணி காயிதே மில்லத் நெடுஞ்சாலை (ஐஸ் ஹவுஸ் பெரிய பள்ளிவாசல்) வழியாக மீண்டும் விநாயகர் ஊர்வலம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

அவர்களிடம் பேசிய INTJ தலைவர் எஸ்.எம். பாக்கர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், "இஸ்லாம் சமூக நல்லிணக்கத்தை பேண சொல்கிறது.சமூக நல்லிணக்கத்தையே நாங்களும் விரும்புகிறோம். உங்களது வருகையை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

அதே நேரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியாக இருக்கும் திருவல்லிக்கேணி பகுதியில் இந்த (விநாயகர்) ஊர்வலத்தை நடத்துவதன் மூலம் மீண்டும் பதட்டத்தை உருவாக்கி விட வேண்டாம்.எந்த தலைவர்களாவது அப்படி வாக்குறுதி அளித்தால் அது நிறைவேற்ற முடியாத,சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்ற செயலாகவே இருக்கும். எனவே இந்த முயற்சியை நீங்கள் தவிர்த்திடுங்கள்...'' என்று அவர்களிடம் வலியுறுத்தி பேசினர்.

வருகை தந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


ஒரு எளிமையான வியாபாரியின் விழிப்புணர்வு


ஒரு இளநீர் வியாபாரியின் செய்கை வித்தியாசமாக இருந்தது. குடித்த இளநீர்களை ரெண்டு துண்டாக வெட்டுவதற்கு பதிலாக நான்கு துண்டுகளாக வெட்டி வீசினார்.

ஏண்ணே எப்பவும் ரெண்டா பொளந்துதானே வீசுவீங்க! இப்ப நான்கா போடறிங்க !

அது ஒண்ணுமில்ல தம்பி! வரபோறது மழைக்காலம் பாருங்க! ரெண்டா போட்டால் மழைத் தண்ணி சேர்ந்து அதுல கொசு நிறைய உற்பத்தி ஆகும்! இப்பதான் கொசுவால் புதுசு புதுசா நோய் வருதாமே! அதனாலே இப்படி நான்கு துண்டாய் போட்டால் தேங்காய் மூடியில தண்ணி நிற்காது பாருங்க என்றார்.

ஒரு சாமானியனின் சமூக அக்கறை வியக்க வைத்தது.. வாழ்க ஜனநாயகம்.."அனைவரும் இப்படி நினைக்கனுமே!!

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Centre.


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Saturday, August 29, 2015

அபுதாபி மெரினா மாலில் 1876 ஆண்டுஅலங்கரிக்கப்பட்ட கஃபத்துல்லாவின் கதவு பகுதி கிஸ்வா.!

அபுதாபி மெரினா மாலில் 1876 ம் ஆண்டு அன்றைய எகிப்து மன்னரால் வழங்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட கஃபத்துல்லாவின் கதவு பகுதி கிஸ்வா மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.  

புனித கஃபாவை அலங்கரிக்கப்பட்ட கிஸ்வா கதவு பகுதி.

அல்லாஹ் இவ்விறை இல்லத்தை கட்டப் பணித்த போது கிஸ்வாவைப்பற்றி ஏதும் குறிபபிடவில்லை எனினும் பண்டை காலம் தொட்டே கிஸ்வா போர்த்துவதை ஒரு வைபவமாகப் பல அரசர்களும் நடத்தி வந்ததாக வரலாற்றிலே காண முடிகிறது.
அதைப்பற்றிய ஒரு சிறு வரலாறு:
கறுப்பு நிற கிஸ்வா
கலீபா அல் நாஸிருல் அப்பாஸி காலத்தில் தான் (ஹிஜ்ரி 575 – கி.பி.1179) முதன் முதலில் கறுப்புநிறம் பயன்படுத்தப்பட்டது. அதுவே இன்று வரை தொடர்கிறது.
கி.பி.1342 – ஹிஜ்ரி 743 ல் எகிப்தை ஆண்ட சுல்தான் கலாவூன் கிஸ்வா தயாரிப்பிற்காகவும் கஃபாவின் பராமரிப்புக்காகவும் எகிப்து நாட்டு மூன்று விவசாய கிராமங்களின் வருமானத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
சுல்தான் கலாவூன் ஆட்சிக்கு 300 ஆண்டுகட்கு பிறகு வந்த உத்மானிய சுல்தான் சுலைமான் மேலும் ஏழு கிராமங்களின் வருமானங்களை வழங்கினார். கஃபாவுடன் மதீனா ரௌலா ஷரீபும் பராமரிப்பில் சேர்க்கப்பட்டது.
பல நூறு ஆண்டுகளாக கிஸ்வாக்கள் எகிப்திலிருந்து மக்காவிற்கு கொண்டு வரப்பட்டன. இவைகளை கொண்டுவர 15-க்கு மேற்பட்ட ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டன.
‘மஹ்மல்’ என்று அழைக்கப்படும் அழகிய பல்லாக்குகளை ஒட்டகங்கள் மேல் வைத்து அவைகளில் கிஸ்வாவின் பகுதிகளை கொண்டு வருவர்.
இந்த ஊர்வலம் புறப்படும் போது எகிப்தே விழாக்கோலம் பூணும், அது மக்கா வந்தடைந்ததும் இசைத் தாளங்களுடன் ஆடிப்பாடி மக்கா வாசிகள் அந்த ஒட்டகங்களை வரவேற்பர்.
ஹிஜ்ரி 843 – (கி.பி 1924) ல் மன்னர் அப்துல் அஸீஸ் இப்ன் ஸவூது இப்படி ஆடிப்பாடி கிஸ்வாவை கொண்டுவரும் நிகழ்ச்சி இஸ்லாத்திற்கு முரணாகயிருப்பதைக் கண்டித்ததால் மீனாவில் வைத்து எகிப்தியர்களுடன் மோதல் ஏற்பட்டது. அடுத்த ஆண்டு முதல் கிஸ்வாவை எகிப்து அனுப்புவதை நிறுத்திக் கொண்டது.


புதிய கிஸ்வாக்கள்
ஹஜ்ஜுக்கு முன்பாக கழுகும்போது புதிய கிஸ்வா அணிவிக்கப்படும்.
கிஸ்வா பல சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டு முஸ்லிம் பிரதிநிதிகள், இஸ்லாமிய கலாசாலைகள், தொல் பொருட்காட்சியங் களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்படுகிறது.

UNO வில் கிஸ்வாவின் ஒரு புகுதி
கஃபாவின் வாசல் திரையினைப் போன்ற வேலைப்பாடுகள் அமைந்த (9 ஒ 2.5 மீட்டர்); அளவுடைய திரைச் சீலையை 1983-ம் ஆண்டு சவூதி மன்னர் ஃபஹ்து உலக முஸ்லிம்கள் சார்பில் அமெரிக்காவில் உள்ள உலக நாடுகள் மன்றத்து (UNO) வரவேற்பு அறையில் தொங்விட அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார்.


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


நல்ல மனைவியின் அடையாளங்கள்

மனைவியின் அடையாளங்கள்
தன்னுடய விஷயத்தில் கணவருக்கு உதவி செய்தல்
கணவன் மனைவியை பார்தால் அவர்களுடய குணங்களால் பார்வையால் சந்தோஷப்படுவார்கள்
கணவனுக்கு கட்டுபடுவாள்
தனது மானத்தையும், மரியாதையும் , கணவருடைய பொருள்களையும் பாதுகாப்பாள்
அல்லாஹ்வை புகழ்ந்த வண்ணமாக சமைப்பாள்
வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்வாள்
மற்ற பெண்களை பற்றி(நல்லதும் , கெட்டதும்) கணவரிடம் சொல்லமாட்டாள்
கணவரை வீட்டின் வாசல் வரை வந்து(பர்தாவுடன், துஆவுடன் வழியனுப்புவாள்
கணவர் வீட்டிற்கு வருவதர்கு முன் தன்னையும், வீட்டையும் சுத்தமாக வைத்திருப்பாள்
உரவினர் வீட்டிற்கும், மற்ற வெளி இடங்களுக்கு செல்லுகையில் பர்தாவை பேணுவாள்
நல்ல விஷயங்களை செய்வதற்கு முன் சதகா(தர்மம் ) கொடுப்பதற்கு கணவருக்கு ஆர்வமூட்டுவாள்
வீட்டில் தொழுகைக்காக ஒரு இடத்தை ஓதுக்கிவைப்பாள்
கணவருடய பார்வையில் தனது மதிப்பை தாழ்த்திவிடமாட்டாள்
குழந்தைகளின் விஷயத்தில் ஒவ்வொன்றையும் கணவரிடம் ஆலோசனை செய்வாள்
கணவருடய தேவையை பூர்த்தி செய்வதில் தாமதிக்கமாட்டாள்
கணவரின் கஷ்டமான நேரத்தில் ஆறுதலாக இருப்பாள்
தன்னுடய தப்பை ஓப்புக்கொள்வாள்.
தன்னுடய கவலையை அல்லாஹ்விடம் மட்டுமே சொல்வாள்
கணவருடய உறவினர் இடத்தில் நல்ல முறையில் நடந்துகொள்வாள்
அல்லாஹ்வுக்கு மாற்றமான விஷயத்தில் யாருக்கும் கட்டுபடமாட்டாள்
கணவரை கண்ணியமான வார்த்தைகளை கொண்டு அழைப்பாள்
எந்த கஷ்டத்திலும், சிரமத்திலும் அல்லாஹ்வுக்காக பொறுமையாக இருப்பாள்
போதும் என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்துவாள்
ஒவ்வொரு நிலையிலும் கணவருக்கு உதவியாக இருப்பாள்
கணவர் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து நடப்பாள்
எப்போதும் முகம் சுழிக்கமாட்டாள்
கணவர் எந்த பொருளை (மட்டமானதும்) கொடுத்தாலும் அதை மதிப்பாள்
கணவனின் முன்னால் எப்போதும் Fresh ஆக இருப்பாள்
கணவரை தீனுடய விஷயத்தில் ஆர்வமூட்டுவாள்
கணவரிடத்தில் மட்டும் தன்னை அலங்கரித்துகொள்வாள்
கணவருடய குறைகளை பார்க்காமல் நிறைகளை மட்டுமே பேசுவாள்
கணவரின் உத்தரவு இல்லாமல் எங்கும் செல்லமாட்டாள்
கணவரின் வருமானத்திற்கு ஏற்ற படி தனது வாழ்கையை சிக்கனமான முறையில் நடத்தாட்டுவாள்
எப்பொழுதும் தன்னுடய உடல் மற்றும் உடையில் சுத்தமாக இருப்பாள்
கணவரை விட எவ்வகையிலும் தன்னை சிறப்பாக , உயர்வாக நினைக்கமாட்டாள்
கெட்ட நடத்தை உள்ள பெண்களிடம் எந்த தொடர்பும் வைத்துகொள்ளமாட்டாள்
இல்லம் எப்பொழுதும் சந்தோஷத்துடன் இருக்கவேண்டும் என்று நினைக்கும் பெண்கள்அங்கே கொடுக்கப்பட்டுள்ள விஷயத்தில் சரியானமுறையில் இருக்கிரோமா என்று பார்த்துக்கொள்ளவும்
என்ன சகோதிரிகளே உங்களுக்கு  இந்த  விஷயம் பிடித்திருந்தால் உங்கள் தோழிகளுக்கும் தெரியபடுத்த முயற்சிப்போம் நன்மையை நாமும் பெற்றுகொள்வோம்

தொடர்ச்சியான புறக்கணிப்புகள்! மேலத்தெரு வாசிகள் குற்றசாட்டு!அதிரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியான மேலத்தெரு மேல்புறம் (அல் பாக்கியத்துல் சாலிஹா பள்ளிபின்புறம்) முறையான குடிநீர் விநியோகம், மற்றும் குப்பைகள் அள்ளப்படாமல் அனைத்து மட்டத்திலும் தொடர்ச்சியான புறகணிப்புகளை சந்தீத்து வருகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  

அதிரையில் மற்ற பகுதிகளை ஒப்பீடு செய்யும் பொழுது இப்பகுதி அரசு அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் தரப்பிலிருந்து கண்டுக்கொள்ளாத பகுதியாகவே கருதுவதாக இப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இங்கு நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து பல நாட்களாக நாங்கள் புகார் அளித்தும் கூட இன்று வரையிலும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை எனவும் தங்களது ஆதங்களை வெளிப்படுத்தினர். 

இப்பகுதியில் குப்பைகளை அகற்றுதல் என்பது கிடையாது என தங்களது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தனர். 30திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் இப்பகுதியினை பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கான காரணங்கள் என்னவென தெளிவுபடுத்த வேண்டியது பொறுப்பில் உள்ளவர்களின் கடமை. மேலும் இனியாவது இவர்களுக்கு விடிவு பிறக்குமா? என பொறுத்திருந்து பார்போம்! 
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---