Tuesday, March 31, 2015

அதிரையில் அம்மா தண்ணீர் பந்தல்

                                              
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் அண்ணா தி  மு  க   பொது செயலாளர் அவர்களின் ஆணைக்கிணங்க மாநிலம்  முழுவதும் பொது மக்களின் தாகத்தை தனிக்கும் விதமாக தண்ணீர் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில்  அதிரையில் அதிரை நகர  அதிமுக சார்பில் நீர் பந்தல்   பேருந்து நிலையம் அருகில்அமைக்கப்பட்டுள்ளது . 

முகநூளில் அடுத்தவர்களை கேலி செய்யும் அதிரை அமைப்புவாதிகள்

அதிரையில் சமிப காலமாக அதிரையர்கள் முகநூல்களில் அமைப்பு ரீதியான கிண்டல்கள் மற்றும் மனம் புண்படும் விதத்தில் கருத்துகளை பதிந்து வருகின்றனர் .கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிரை AL பள்ளியில் அதிரை தாருத் தவ்ஹித் அமைப்பு சார்பாக பெண்களுக்கு  கேள்வி பதில் நிகழ்ச்சி நடந்தது .இதில்  மவ்லவி அப்பாஸ் அலி MISC அவர்கள் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நவீன குழப்பங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார் . இந்த நிகழ்வில் நடந்ததை புகைப்படம் எடுத்து முகநூளில் பதிந்தனர். ஆனால் சில நபர்கள் இதை கேலி செய்யும் விதத்தில் புகைப்படங்களில் இருக்கும் நபர்கள் பேசுவதை போல் கற்பனை வார்த்தைகளை உருவாக்கி புகைப்படத்துடன் இணைத்துள்ளனர் .அது மற்றும் அல்லாமல் அடுத்தவர்களுக்கும் ஷேர் செய்து பரப்பி வருகின்றனர் .


அதிரையில் இருக்கும் சமுதாய அமைப்புகளிடம் சரியான ஒற்றுமை இல்லாத நிலை இருந்து வருகிறது .அதன் விளைவாக அந்தந்த அமைப்பினர் செய்யும் சமுதாய வேலைகளுக்கு எதிராக சில அமைப்பினர் சமூக வலை தளங்களில் கேலிகளையும் கிண்டல்களும் செய்கிறார்கள் .இஸ்லாமிய அமைப்பு என்று சொல்லிகொள்ளும் அமைப்பினர் தன் சகோதரனை கேலிகளும் கிண்டல்களும் செய்வது நியாமா ? இதை தான் இஸ்லாம் சொல்லி கொடுத்தா ? நமது தலைவர் கண்மணி முஹம்மது நபி (saw )அவர்கள் காட்டி தந்த செயலா ? சமுதாய அமைப்பில் இணைத்திருக்கும் அதிரை  நபர்களே தவ்ஹித் வாதிகளாக நீங்கள் இருந்தால் நீங்கள் இதை போல் காரியங்களை செய்து இருக்கமாட்டிர்கள் .நமது முஸ்லிம் சமுதாய அமைப்புகள் ஒற்றுமையாக இல்லாத காரணத்தினால் தான்  நம்மவர்களை நம் நாட்டிலேயே அடிமைப்படுத்திகிறார்கள்  இதை கண்டு உங்களுக்கு மனம் மாறவில்லையா ? கொள்கை கொள்கை என நாம் அமைப்பு ரீதியான செயல்களில் ஈடுபடுகிறோம் .அல்லாஹ் எதை பொருந்தி கொள்வான் என்று நமக்கு தெரியாது .நமதூரில் நடக்கும் இஸ்லாத்திருக்கான நிகழ்சிகளில் சொல்லும் கருத்துகளை நல்லதாக இருந்தால் எடுத்து கொள்ளுங்கள் முரணாக இருந்தால் கருத்து கூறியவரிடம் நேரடியாக சென்று விளக்கம் கேளுங்கள் அதை செய்யாமல் சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டல் செய்து நரக படுகுழிக்கு போகதிர்கள் .

ஆக்கம் : ஜாபர் சாதிக் 
விளம்பரபகுதி

செக்கடி மேடு அருகில் முதியவர் திடீர் பலி

அதிரை அடுத்து மன்னங்காடு பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் வேளார்  இவர் பட்டுகோட்டை தொகுதி முன்னாள் MLA காவன்ன அண்ணா துரை அவர்களில் உறவினர் . இன்று பிற்பகல் செக்கடி மேடு அருகில் மிதிவண்டியில் வந்துக்கொண்டிருக்கும் பொழுது எதிர்பாரமல் மயங்கி விழுந்தார்  .

எனவே கீழே விழுந்த முதியவரை அப்பகுதியில் இருக்கும்  மக்கள் சென்று முதலுதவி கொடுத்தனர் ஆனால் அவர் உயிர் பிரிந்தது என்பது பிறகு தான் தெரிந்தது  .அவரது உடல் உடனே  அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அவர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

 இந்த சம்பவத்தினால் செக்கடி மேடு பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

மரண அறிவிப்பு :வாவன்னா சார்

அதிரை நடுத்தெருவை சார்ந்த வாவண்ண குடும்பத்தை மர்ஹும் மு .வா செ அப்துல் ஹமிது அவர்களின் மகனும்  மர்ஹும் லெ மு செ இப்ராகிம் மரைகாயர் மருமகனும் வாவான்ன ஹாஜி மர்ஹும் மு வா செ உமர் தம்பி அவர்களில் மூத்த சகோதரருரும் A.K முகமது யூசுப்  A.K ஜமாலுதீன் அவர்களின் தந்தையுமான வாவண்ண அப்துல் காதர் (74)அவர்கள் பகல்12::30 மணியளவில்  அவர்களின் இல்லத்தில்  வஃபாத்தாகி விட்டார்கள் (இவர் நமதூர் காதர் முகைதீன் பள்ளியில் ஓவியம் மற்றும் வரலாற்று  ஆசிரியர் ராக பணியாற்றியது குறிப்பிடதக்கது )

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இரவு 8:30 மணிக்கு மரைகாயர் பள்ளி மையவாடியில்  நல்லடக்கம்   செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

விளம்பரபகுதி

அதிரை தமுமுகவின் மனித நேய செயல்

அதிரையில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருபவர் முஹம்மது காசிம். ( வயது 65 ). இவர் இன்று காலை உடல் நலக்குறைவால் மரணமடைந்து விட்டார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.தகவலறிந்த அதிரை பேரூர் தமுமுக நிர்வாகிகள் நேரடியாக இருப்பிடத்திற்கு சென்று உடலை மீட்டு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் தக்வா பள்ளிக்கு கொண்டு வந்தனர். ஜனாஸா கடமைகள் முடிந்தவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதிரை பேரூர் தமுமுகவினர் நேரடியாக களத்தில் இறங்கி ஜனாஸா நல்லடக்கம் செய்ய தேவைப்படும் அனைத்து பணிகளையும் உடனிருந்து செய்து முடித்தனர். ஓடோடி சென்று உதவும் இவர்களின் மனித நேயத்தை பலரும் வியந்து பாராட்டினர்.                                                                            தொகுப்பு adirainews தகவல் :மீரான்                                                                                                     
  
மேலாடைகள் மீது மையைத் தெளித்து விளையாடும் மாணவர்களே

பொதுவாக மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் பிறருடைய மேலாடைகள் மீது மையைத் தெளித்து அசிங்கப் படுத்துகின்றார்கள். இதை ஏப்ரல் ஃபூலின் ஓர் அடையாளமாக நினைத்து செய்கின்றனர். மையைத் தெளிக்கும் இந்த நடைமுறையானது ஒரு பிரிவினருடைய கலாச்சாரத்துடன் ஒத்துப் போகின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களை (கலாச்சாரத்தை) ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே! (நூல்: அபூதாவூத் 3512)
பொய்க் கலாச்சாரம்.
இதைத் தவிர மக்களில் பலர் மற்றவர்களை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்குவதற்காக பொய் பேசுகின்றார்கள். இது பெருங்குற்றம் ஆகும். பொய் சொல்லி தீமை செய்து கொண்டிருப்பதன் காரணமாக அல்லாஹ்வின் அருளும் அன்பும் இழந்து அவனது கோபத்திற்கு ஆளாகி விடுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யன் என்று பதிவு செய்யப்பட்டு விடுவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 6094

ஆக இந்தப் பொய்யர்கள் அதிகமான தீமைகளைச் செய்து நரகத்தை அடைகின்றனர். எனவே நாம் பொய் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பொய்ச் சத்தியம் செய்தல்
இன்னும் சிலர் பிறரை முட்டாளாக்குவதற்கு முயற்சி செய்யும் போது அவர் நம்ப மறுத்து விட்டால் உடனே பொய்ச் சத்தியம் செய்து நம்ப வைக்கின்றனர்.
இவர்களைப் பற்றி வல்ல அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:
அதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவன் எவனுக்கும் நீர் கட்டுப்படாதீர்! (அல்குர்ஆன் 68:10)


மேலும் இப்படிப் பொய்ச் சத்தியம் செய்வது யாருடைய குணம் என்றால் அல்லாஹ்விற்குப் பிடிக்காத நயவஞ்சகர்களின் குணமாகும்.
இவர்களுடைய இந்தச் சுபாவத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
அறிந்து கொண்டே பொய் சத்தியம் செய்கின்றனர். துன்புறுத்தும் வேதனையை அல்லாஹ் அவர்களுக் குத் தயாரித்துள்ளான். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 58:14,15)
எனவே நாம் ஒரு போதும் பொய்ச் சத்தியம் செய்யக் கூடாது.
பொய் சாட்சி கூறல்


ஏப்ரல் மாதத்தில் பிற மக்களை முட்டாளாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் சிலர் அந்தப் பொய்யர்களுக்கு ஆதரவு அளித்து, உதவி செய்யும் முகமாக பொய் சாட்சி பகர்கின்றனர். இதுவும் பெரும் பாவமான காரியமாகும்.
அபூபக்ரா (ரலி) கூறியதாவது: ""பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். ""ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்'' என்று நபித் தோழர்கள் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், ""அல்லாஹ்விற்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் தான்'' என்று கூறினார்கள். சாய்ந்து கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் பிறகு எழுந்து அமர்ந்து, ""அறிந்து கொள்ளுங்கள். பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்). பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் 

(பெரும் பாவம் தான்)'' என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்கள். (நூல்: புகாரி 5976, முஸ்லிம் 126)

ஏமாற்றுதல்

இன்னும் சிலர் உண்மையுடன் பொய்யும் புரட்டும் சேர்த்துப் பேசுவார்கள். இதற்குப் பெயர் ஏமாற்றுதல், மோசடி ஆகும். உதாரணமாக ஏப்ரல் மாதத்தில் ஏமாற்றுவதற்காக, விபத்து நடந்து விட்டது என்றோ, இன்னார் அபாயகரமான (சீரியஸôன) நிலையில் இருக்கிறார் என்றோ, மரணித்து விட்டார் என்றோ தொலைபேசி அல்லது தந்தி மூலமாகத் தகவல் அனுப்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஏமாற்றுகின்றானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல. (நூல்கள்: முஸ்லிம் 147, திர்மிதீ 1236)
""மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக் கொடி ஒன்று நட்டப்படும். "இது இன்னாரின் மகன் இன்னாரின் மோசடி' என்று கூறப்படும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 6178)


நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: மோசடி செய்யும் ஒவ்வொருவனுக்கும் ஒரு அடையாளக் கொடி உண்டு. அது மறுமையில் அவனது புட்டத்திடம் நட்டப்படும். (நூல்: முஸ்லிம் 3271)
முஸ்லிமின் அடுத்த அறிவிப்பில் அவனுடைய மோசடிகளுக்குத் தக்கவாறு அது உயர்த்தப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
எனவே வல்ல அல்லாஹ்வுக்குப் பயந்து ஏமாற்றுதல், மோசடி செய்தல் ஆகியவற்றிலிருந்து முழுவதுமாக விலகி உண்மையாளராக நாம் திகழ வேண்டும்.

கேலி செய்தல்
மக்களில் சிலர் சிலரை ஏப்ரல் ஃபூல் ஆக்கிய பிறகு ஏளனமாகச் சிரிப்பது, கிண்டல் செய்வது, ஆர்ப்பரிப்பது என்று எப்படியெல்லாம் அவமரியாதை செய்ய முடியுமோ அனைத்தையும் கையாளுகின்றனர். இந்தக் கெட்ட குணத்திற்குச் சொந்தக்காரர்கள் யார் என்றால் இறை நிராகரிப்பாளர்கள் தாம். 

(ஏக இறைவனை) மறுப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப் பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கை கொண்டோரைக் கேலி செய்கின்றனர். (இறைவனை) அஞ்சியோர் கியாமத் நாளில் அவர்களுக்கு மேலே இருப்பார்கள். அல்லாஹ், நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான். (அல்குர்ஆன் 2:212)
தாராளமாக (நல் வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண் டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதவர்களையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 9:79)
இந்த வசனங்களில் அல்லாஹ், நயவஞ்சகர்களின் பண்பைப் பற்றிக் கூறி விட்டு அவர்களுக்குரிய தண்டனையைப் பற்றியும் கூறுகின்றான். எனவே நாம் இந்தத் தீய பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

இழிவாகக் கருதுவது
இறுதியாக ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறரை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்கியவர்கள் ஏன் அவர்களைப் பார்த்து, கை கொட்டி ஏளனமாகச் சிரிக்கின்றார்கள்? ஏன் கேலி, கிண்டல் செய்து அற்ப சந்தோஷம் அடைகின்றார்கள்? என்று சிந்தித்தால் ஓர் உண்மை விளங்கும்.

அதாவது அவர்கள் தம்மைப் புத்திசாலியாகவும், உயர்ந்தவர்களாகவும் கற்பனை செய்து கொள்கின்றார்கள். எனவே ஆணவம் தலைக்கேறிய பிறகு மற்றவர்களை, தம்மை விட அறிவில் குறைந்தவர்கள், இழிவானவர்கள் என்று முடிவு செய்வதன் காரணத்தால் தான் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தாமல், அனாவசியமாகக் கருதி, கேவலமாக நடத்தி இழிவு படுத்துகின்றனர்.
இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பரிபூரண முஸ்லிம் யாரென்றால், எவரது நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்று இருக்கின்றார்களோ அவர் தான். (நூல்: புகாரி 10, 6484)
வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் குர்ஆன், ஹதீஸிற்குக் கட்டுப்பட்டு உண்மை விசுவாசிகளாக வாழ அருள் புரிவானாக!

Monday, March 30, 2015

அதிரை பேரூர் மன்றம் செய்த முறைகேடுகள் குறித்த ஆவனங்களை வெளியிட போகுவதாக MM இப்ராஹிம் அறிவிப்பு

அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் குறித்து IDMK வின் நிறுவனர் அதிரை இப்ராகிம் அவர்கள்  கூறியதாவது .அதிரையில் இருக்கும் அனைத்து தெருக்களிலும் குப்பைகள் சரியான முறையில் அள்ளுவதில்லை .அதை போல் சாக்கடை கழிவுநீர் செல்லும் கால்வாய்அடைப்புகளை சரிவர  சுத்தம் செய்யப்படாமல்  இருபதினால் கழிவு நீர் வலிந்து ரோடுகளில்  தேங்கிக் கிடக்கிறது .ஆதலால்  அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல அவதிகளுக்கு தள்ளபடுகிறார்கள் மேலும் டெங்கு, மலேரியா, பன்றிக் காய்ச்சல், சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது .


நமதூர் பேரூர்  கட்டுப்பாட்டில் இருக்கும் குளங்களில் மீன் வளர்ப்பதாக போடப்படும் பொருட்கள் சுகாதாராம் இல்லாமல் உள்ளதால் குளங்கள் துர்நாற்றம் வீசுவதுடன்  அதனை சுற்றி இருக்கும் மக்களுக்கு சுகாதார சீர்கேடு  ஏற்பட்டு பலவிதமான வியாதிகள் ஏற்படுகின்றன.நமதூர்  16 வது வார்டில் உள்ள செடியன்  குளத்தில் பல சமுதாய  மக்கள் காலை நேரங்களில்  குளிக்கிறார்கள். இதனை சரியாக பராமரிப்பு இல்லாத  காரணத்தால் கழிவு நீர் குளத்தில் கலக்கிறது .இதனால் குளத்து நீர் மாசுப்படுகிறது .அதிராம்பட்டினம் பேரூரில்  உள்ள அரசு பொது மருத்துவமனையில் இரவு நேரத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால் அவசர நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழப்பு ஏற்படுகின்றது. மேலும் பகல் நேரங்களிலும் நோயாளிகள் சரியாக கவனிக்கப்படுவதில்லை. ஆஸ்த்துமா, வேறி நாய்கடி போன்றவற்றுக்கு சரியான மருந்துகள் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் அவதிக்கு ஆளாகின்றனர்.

15  வது வார்டு கீழத்தெருவில் அமைந்து உள்ள செய்னா குளத்தை சுத்தப்படுத்த நபார்டு நிதி உதவியின் கீழ் குளத்தை புதுப்பிக்கும் பணிக்காக 50,00,000 மதிப்பீட்டில் ஒப்பந்தம் விடப்பட்டது. 25% சதவீத வேலைகள் முடிக்கப்பட்டது. மீதி உள்ள வேலைகள் நடைப்பெறாமல்  நிறுத்தப்படுப்பட்டு தற்போது  வரை வேலைகள் தொடங்கப்படவில்லை. ஒப்பந்தக்காரர் திரு.வீரையன் அவர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டதற்க்கு வேலைகள் முற்றிலும் முடிந்துவிட்டதாக கூறினார். ஆனால் குளத்தை சீரமைக்கும் மதிப்பீட்டில் உள்ள வேலைகள் முற்றுமாக முடியவில்லை. ஐயா அவர்கள் குளத்தை ஆய்வு செய்து வேலைகளை முடித்துத் தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.t

மேற்கண்ட முறைகேடுகளை பேரூர்  மன்ற தலைவர், துணை தலவர், நிர்வாக அதிகாரிகள் ஆகியோருக்கு பலமுறை தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.


                                

                                  


விளம்பரபகுதி

கள்ள சந்தையில் படுஜோராக நடக்கும் எல்.பி.ஜி. சிலிண்டர் விற்பனை

நம் நாட்டில் 1 கோடியே 30 லட்சம் பேரிடம் போலி கேஸ் இணைப்புகள் உள்ளன. பஹல் எனப்படும் பிரத்யக்ஷ் ஹஸ்தன்தரித் லாப் அதாவது நேரடி மானிய திட்டத்தின் மூலம் பயனாளிகளின் வங்கி கணக்கில் மானியத் தொகை நேரடியாக செலுத்தப்படுகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு துவங்கிய இந்த திட்டத்தை தற்போது மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. மானியத் திட்டம் என்றாலே அது ஊழலும், முறைகேடுகளும் நிறைந்தவையாக உள்ளது. முன்னதாக மகாராஷ்டிரா மாநில அரசு 53 லட்சம் போலி ரேஷன் கார்டுகளை ரத்து செய்தது என்று இந்தியாஸ்பெண்ட் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில் தான் அதிகபட்சமாக 18 லட்சத்து 70 ஆயிரம் போலி இணைப்புகள் உள்ளன. இதையடுத்து மகாராஷ்டிராவில் 13 லட்சத்து 50 ஆயிரம், அஸ்ஸாமில் சுமார் 10 லட்சம் போலி இணைப்புகள் உள்ளன.

இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் ஆகிய மூன்று முக்கிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தான் கேஸ் இணைப்புகள் வழங்குகின்றன. அதில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் 66 லட்சத்து 30 ஆயிரம் போலி இணைப்புகளை துண்டித்துள்ளது

விளம்பரபகுதி

நாடு முழுவதும் பசுவதை தடுப்பு சட்டம்

நாடு முழுவதும் பசுவதையை தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வரும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் சமண மத ஆன்மிக தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.  இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசுகையில், நாடு முழுவதும் பசுவதையை தடுக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ளும். இந்தியாவில் பசுவதையை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.  அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும். பசுவதை தடுப்பதை குறித்து யாரும் எங்களிடம் கேள்வி கேட்க முடியாது. மத்திய பிரதேசத்தில் இதற்காக கடுமையான சட்டங்களை மாநில பாஜ அரசு நிறைவேற்றியுள்ளது. 
அதே போல் மகாராஷ்டிராவிலும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார். நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஆன்மிக தலைவர்  ஆச்சார்ய சிவமுனி, ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை விடுத்தார். அப்போது ராஜ்நாத்சிங் பதில் அளிக்கையில், இதற்காக நாடாளுமன்றத்தில் பாஜ பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்பதை செய்திகளில் வெளியாகியுள்ளதை காணலாம். 

தற்போது நாங்கள் இதனை நாடாளுமன்றத்தில் எழுப்பிய போது எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. எனவே எங்களால் அதனை நிறைவேற்ற முடியாமல் போனது என்றும் ராஜ்நாத் சிங் சுட்டி காட்டினார். தற்போது பாஜ ஆளும் மாநிலங்களான அரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநிலங்களில் பசுவதையை தடுக்க சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த முயற்சிக்கு எதிர்கட்சிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள இறைச்சி வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இறைச்சி வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
விளம்பரபகுதி

அதிரை சேர்மன் பிரபல பத்திரிக்கை தொலைகாட்சிக்கு அளித்த பேட்டி ( காணொளி )

அதிரையில் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவவசதி இல்லாத காரணத்தினால் நமதூரில் இருக்கும் மக்களுக்கு மருத்துவ தேவைகள் கிடைக்க பெருவதில்லை .ஆகையால் அதிரை பேரூர் மன்ற தலைவர் அவர்கள் இன்று காலை அதிரை மக்களை ஒன்று திரட்டி தஞ்சைக்கு அழைத்து சென்று  மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தார் .இதில் அதிரை பொதுமக்கள் சுமார் 250 நபர்கள் கலந்து கொண்டனர் .இதில் பெண்களும் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.


விளம்பரபகுதி

அதிரை வரலாற்றில் முதல் முறையாக ஊர் மக்கள் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த நிகழ்வு

அதிரையில் சுமார் 75 ஆயரம் மக்கள் வாழும் ஊரில் முறையான மருத்துவ வசதி இல்லை .அதை போல் நமதூர் ECR ரில் அமைத்துள்ளதால் அதிகளவில் வாகன விபத்துகள் நடைபெருகிறது. .அது மற்றும் இல்லாமல் இரவு நேரங்களில் மருத்துவ தேவை உள்ளவர்களுக்கு அதிரையில் முறையான மருத்துவம் கொடுக்க முடியாத காரணத்தினால்  மருத்துவம் தேவைக்காக  பட்டுகோட்டை மற்றும் தஞ்சைக்கு அழைத்து செல்ல நிர்பந்தம் ஏற்படுகிறது.இதனால் பல உயிர்கள் போகும் வழியிலையே மரணத்தை தழுவும் நிலை  உள்ளது .
ஆதலால் நமதூர் அரசு மருத்துவமனையை  24 மணி நேரமும் செயல்படவும்,அதிகமான மருத்துவர்களை இடம் அமர்த்தவும்  மற்றும் அரசு சார்பாக அமைக்கப்பட்ட பொது கழிப்பறையை கட்டணம் இல்லா களிப்பறையகவும் அமைக்க மாவட்ட ஆட்சியரை அதிரை பேரூர் மன்ற தலைவர் அஸ்லம் அவர்களில் தலைமையில் அதிரையில் உள்ள அணைத்து முஹல்லா வாசிகளும் மற்றும் மற்றும் கரையூர் தெரு வாசிகளும் ,சமுக ஆர்வலர்களுடன் தஞ்சையில் கோரிக்கை மனுவை கொடுத்தனர் .இந்த கோரிக்கை மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் 250 இருக்கும் மேற்பட்டோர் சுமார் 15 வேன்களில் சென்று கலந்து கொண்டனர் .இதில் அதிகளவில்  பெண்களும் கலந்து கொண்டனர் .
மேலும் இந்த கோரிக்கை கொடுக்கும் நிகழ்வுக்கு அதிரை பேரூர் மன்ற தலைவர் மற்றும் சமூக் ஆர்வலர்கள்  கடந்த ஒரு வாரமாக அதிரை முஹல்லா வாசிகளை  மற்றும் கிராம மக்களை சந்தித்து அதிரைக்கு தேவையான மருத்துவவசதிகளை என்பதினை சொல்லி இந்த நிகழ்வுக்கு மக்களை அழைத்தார்கள் என்பது குறிப்பிட தக்கதுவிளம்பரபகுதி

சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டத்தில் சேருவதற்கான ‘கெடு’ 31/03/2015 நாளையுடன் முடிகிறதுசமையல் கியாஸ் நேரடி மானிய திட்டத்தில் இணைவதற்கான கருணை காலம் (கெடு’) நாளையுடன்(செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது.

நேரடி மானியம்
தமிழ்நாட்டில் மொத்தம் 1 கோடியே 50 லட்சத்து 41 ஆயிரத்து 65 பேர் சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளனர். இதில் 89 லட்சத்து 67 ஆயிரத்து 403 பேர் இந்தியன் ஆயில் கழகத்திலும்(இண்டேன்), 38 லட்சத்து 43 ஆயிரத்து 134 பேர் பாரத் பெட்ரோலிய நிறுவனத்திலும், 22 லட்சத்து 30 ஆயிரத்து 528 பேர் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்திலும் இணைப்பை பெற்றுள்ளனர்.

மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தை தமிழகத்தில் கடந்த ஜனவரி 1–ந்தேதி அமல்படுத்தியது. சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டத்தில் இணையாத வாடிகையாளர்களுக்கு ஜனவரி 1–ந்தேதியில் இருந்து மார்ச் 31–ந்தேதி வரை கருணை காலமாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்தன.

நாளை கடைசி நாள்
அதன்படி, நாளையுடன்(செவ்வாய்க்கிழமை) இந்த கருணை காலம் முடிவடைகிறது.

கருணை காலத்துக்குள் மானிய திட்டத்தில் இணையாதவர்களுக்கு ஏப்ரல் 1–ந்தேதி முதல் ஜூன் 30–ந்தேதி வரை சந்தை விலையில் தான் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என்றும், அவர்கள் மானிய திட்டத்தில் இணைந்த பிறகு மானிய தொகை தகுதியின் அடிப்படையில் அனுமதிக்கப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சிலிண்டர் எண்ணிக்கை
கருணை காலத்தில் சமையல் கியாஸ் நேரடி மானியத்தில் இணைந்தவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட சிலிண்டர் எண்ணிக்கை அடிப்படையில் வங்கி கணக்கில் மானிய தொகை மொத்தமாக சேர்க்கப்பட்டு விடும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.

விளம்பரபகுதி

Sunday, March 29, 2015

டாக்டர் பட்டம் பெற்ற முன்னாள் MPக்கு அதிரை முஸ்லீம் லீக்கர்கள் வாழ்த்து !

 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிரை அருகே உள்ள முத்துபேட்டையைசேர்ந்த சகோதரர்  அப்துல் ரஹ்மான் போட்டியிட்டு வெற்றி பெற்றார் .

இதனை அடுத்து தமது தொகுதி மக்களுக்கு நாடாளுன்ற உறுப்பினர் என்ற முறையில் தமது பணிகளை செம்மையாக செய்தார் , இந்நிலையில் இந்தியாவில் சிறப்பாக செயல்படும் எம்பிக்களில் இவர் ஆறாம் இடத்திலும் தமிழக அளவில் முதல் இடத்தில் இருந்துள்ளார். இதனால் முன்னாள் MP அப்துல் ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவிக்க உள்ளதாக அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் பல்கலைகழகம் அழைப்பு விடுத்தது.

அதன்படி இன்று மாலை மதுரையில் உள்ள அமெரிக்கா உலக தமிழ் பல்கலைக்கழகத்தால் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு  டாக்டர் பட்டம் இன்று கொடுக்கப்பட்டது .

கவுரவ டாக்டர்  பட்டம் பெற்ற முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்களை அதிரை இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் நிர்வாகிகள் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

விளம்பரபகுதி

அதிரை அருகே உள்ள சுற்றுலாமையத்தை காக்க வேண்டும் !

அதிராம்பட்டினம் அருகே உள்ளது சரபேந்திர ராஜன் பட்டினம் (மனோரா) இது 1814 ல் கடல் போரில் நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்றதைப் பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவினார்.

அந்நினைவுச்சின்னத்தை மனோரா என்று அழைக்கின்றனர். இந்த சுற்றுலா மையத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு வருகின்றனர் இந்நிலையில் பாத்திமா பீவி கவர்னராக இருந்த பொழுது புனரமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டது ஆனால் அதன் பின்னர் போதிய பராமரிப்பின்றி மிகவும் சேதமடைந்து உள்ளது இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த கடலை வியாபாரி முனியம்மாள் கூறுகையில்... கடந்த 2004 ஆம் வருஷம் சுனாமிக்கு அப்புறமா இந்த கட கரைய சுத்தம் செஞ்சாங்க ஆனா அதுக்கு அப்புறமா எந்த பராமரிப்பு வேலையை எதுவும் இந்த அரசாங்கம் செய்யல... இதனால் அடிக்கிற  காத்துல எல்லாம வீணா போச்சு ... இத உடனடியா சீர் செஞ்சி நாட்டின் சின்னங்களை காக்க வேண்டும் என ஆதங்கபட்டார் . 

இதே போல் அப்பகுதியில் உள்ள ஏராளமானவர்களின் கோரிக்கையை அரசு ஏற்று புராதான சின்னங்களை காத்திட வேண்டுகிறோம் .


விளம்பரபகுதி

நிமிடத்துக்கு 10 பைசா வரை செல்போன் கட்டணம் உயருகிறதுசெல்போன் கட்டணத்தை நிமிடத்துக்கு 10 பைசா வரை தொலைதொடர்பு நிறுவனங்கள் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தொலைதொடர்புக்கான ஸ்பெக்ட்ரம் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலம் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 109 கோடி லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் உரிமம் ஏலம் இதுவரை இல்லாத அளவுக்கு நடந்தது இல்லை.தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களிடையே இந்த ஏலம் எடுப்பதில் கடும் போட்டி ஏற்பட்டது. இதனால் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 68 சதவீத பிரீமியத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

19 நாட்களாக 115 சுற்றுக்களாக நடந்த இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேசன், ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடோபோன், டாடா டெலிசர்வீஸ், யுனினார், ஐடியா செல்லுலார், ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்ட காரணத்தால் அவற்றின் ஒட்டுமொத்த கடன் இரண்டரை லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் 2ஜி, 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுத்த நிறுவனங்கள் வரும் 31ம் தேதிக்குள் பணத்தை கட்டும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் 28 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டியதுள்ளது. அடுத்தகட்டமாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி ரூபாயை தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டும். எனவே கடன் சுமையை குறைக்க செல்போன் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலைக்கு தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

செல்போனில் பேசுபவர்களிடம் நிமிடத்துக்கு 5 பைசா முதல் 10 பைசா வரை கூடுதலாக வசூலித்தால் தான் ஏலம் எடுத்த தொகையை சமாளித்து லாபம் பெற முடியும் என்று தொலை தொடர்பு நிறுவனங்கள் கூறுகின்றன. எனவே செல்போன் கட்டணங்கள் ஓரளவு உயரும் என்று தெரியவந்துள்ளது.

இதனிடையே செல்போன் கட்டணத்தை கடுமையாக உயர்த்த கூடாது என்று மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார்.

செல்போன் கட்டணத்தை நிமிடத்துக்கு 1.3 பைசாவுக்கு அதிகமாக உயர்த்த கூடாது என்று அவர் அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ என்ற புதிய நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர புதிய சலுகை அறிவிப்புகளை வெளியிடும் என்று தெரிகிறது. அதை பொறுத்து மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் கட்டண உயர்வை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.

விளம்பரபகுதி

தனியார் அனல் மின்நிலைய கட்டுமான பணியின்போது தீ விபத்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்தனியார் அனல் மின் நிலைய கட்டுமான பணியின்போது பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்ததாக தெரிகிறது.

அனல் மின்நிலையம்
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்தில் தனியார் அனல் மின்நிலையம் அமைக்கும் பணி 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பகுதியில் தங்கி, பணியாற்றி வருகின்றனர்.

அனல் மின்நிலைய வளாகத்தில் மின்சாரம் தயாரிப்பதற்கு பயன்பட்ட நீரை குளிரூட்டி அனுப்புவதற்காக 500 மீட்டர் நீளம், 45 அடி உயரம் கொண்ட குளிரூட்டும் அலகு (கூலிங் யூனிட்) அமைக்கப்பட்டு உள்ளது. இதில் தண்ணீரை குழாய் மூலமாக செலுத்தி பைபர் வலைமூலம் குளிரூட்டப்படுகிறது.

வெல்டிங் வைத்தபோது தீ
இதற்காக பைபர் வலை பொருத்தும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் நேற்று 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். மதியம் 2.30 மணியளவில் பெரும்பாலான தொழிலாளர்கள் சாப்பிட சென்றுவிட்டனர். அந்த நேரத்தில் சில தொழிலாளர்கள் வெல்டிங் எந்திரம் மூலம் பைபர் வலையை பொருத்தினர்.

அப்போது ஒரு தொழிலாளி வைத்திருந்த வெல்டிங் எந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வெப்பம் தாங்க முடியாமல் அதனை விட்டுவிட்டார். அந்த எந்திரம் பைபர் வலையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. உடனே தொழிலாளர்கள், தீயை அணைக்க முயன்றனர். மளமளவென எரிந்த தீ, மற்ற இடங்களுக்கும் பரவியது. சிறிது நேரத்தில் கூலிங் யூனிட் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

பல கோடி சேதம்
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வீரர்கள் விரைந்து வந்தனர். 7 வாகனங்களில் 70 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 4 மணி நேரம் போராடி தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

இதில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நன்றி. தினத்தந்தி

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.


விளம்பரபகுதி