Thursday, April 30, 2015

சூடான இறால் பிரியாணி ரெடி

அதிரை முஷ் கிச்சன் நெய்னா வழங்கும் இறால் பிரியாணி செய்முறை காணொளி விளம்பரபகுதி

அதிரையில் இரவு நேர மருத்துவர் எங்கே? பொதுமக்கள் குழப்பம்!!

கடந்த  சில தினங்களாக அதிரை ஊடகங்கள்  சாலை மறியல் பற்றிய செய்திகளையே பதிந்துவந்த நிலையில், நேற்று RDO தலைமயிலான அமைதி பேச்சுவார்த்தைக்குப்பின் இன்று 30:04:15 முதல் பகல் வேளைகளில் பணிபுரியும் மூன்று மருத்துவர்களில்  ஒருவர் இரவு நேரங்களில் பணி  புரிவார்கள் என்றும் இன்னும் ஒரு மாத கால அவகாசத்திற்கு பின் முறையாக அதிரை அரசு மருத்துவமனயை 24 மணி நேர மருத்துவமனையாக மாற்றி அமைக்கபடும் என இருதரப்பாரும் ஒப்புகொள்ளபட்டு கையெழுத்தானது . 

இதனை அடுத்து 30ஆம் தேதி நடக்க இருந்த சாலைமறியல் போராட்டம்  வாபஸ் பெறப்பட்டது .  இதன் தொடர்ச்சியாக  நேற்று இரவு  அதிரை சேர்மன் அஸ்லம் தலைமயில்  மெயின் ரோட்டில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.   இதில்  பேசியவர்கள்  இந்த 24மணி நேர மருத்துவமனை கொண்டுவர போராடிய அனைத்து நல்  உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துகொண்டதுடன். இந்த வெற்றியை நாம் அனைவரும் பகிர்ந்துகொள்வதாக கூறினர். 

மேலும் 30.04.2015 அன்று முதல் இரவு நேர மருத்துவத்திற்க்காக ஒரு மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார். என்றும் கூறப்பட்டது .

ஆனால் இன்று அதற்கான சாத்திய கூறுகள் எதுவும் இதுவரை தென்படவில்லை. 

முன்னதாக  அதிரை GHல் பணி  புரியும் மூன்று மருத்துவர்களில் சுழற்ச்சி முறையில் ஒருவர் இரவு பணிகளில் அமர்த்தபடுவார் என்று கூறப்பட்டது 

ஆனால் இன்று மூன்றில் ஒரு மருத்துவர் விடுப்பில்  சென்றுள்ளதாகவும் இதனால் இந்த சுழற்சி முறையில் மருத்துவர்கள் பணியில் அமர்த்துவது சாத்தியமா? என பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர் .

விளம்பரபகுதி

உல்லாச குளியலும் கூட்டங்சோறும்

அதிரையில் கோடை வெயில் வாட்ட துவங்கிய நிலையில்  நமதூர் மக்கள் கேரளா ,ஊட்டி ,போன்ற குளிர் நிறைந்த இடங்களுக்கு செல்வதை தொடர்ந்து அதிரை இளைஞர்கள் கோடையை தணிக்க நீர் நிறைந்த இடங்களுக்கு நண்பர்களுடன் சென்று உல்லாச குளியலை முடித்து நண்பர்களுடன் ஒன்று கூடி சமைத்து உண்டு மகிழ்ந்து  வருகிறார்கள் .
கடற்கரை தெருவில் உள்ள கழிவுநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் SDPI கோரிக்கை !

கடற்கரை தெரு 8 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது இது குறித்து பேரூர் நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றும் பலன் அளிக்காத காரணத்தால் SDPI  கட்சியின் சார்பில் நகர செயற்குழு உறுப்பினர் சலீம்  மாலிக்  மற்றும் நிர்வாகிகள் இன்று மாலை பேரூர் மன்ற செயல் அலுவலர் முனியசாமியிடம் மனு அளித்துள்ளனர் மனுவை பெற்றுக்கொண்ட அவர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

விளம்பரபகுதி

அதிரையில் அதிரடி சலுகை

அணைத்து மருந்துகளுக்கும் 10% தள்ளுபடி

அதிரையில் உள்ள கடைதெருவில் அமைந்துள்ள எங்கள் M.F.S மருந்தகத்தில் அணைத்து மருந்துகளுக்கு 10% தள்ளுபடி மற்றும் எங்களிடம் குழந்தைகளுக்கு தேவையா பால் பவுடர் ,செர்லாக் போன்ற வகைகள்  மிக குறைந்த விலையில் கிடைக்கும் .எங்களை தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்  :9500686856 ,9789160140, 9894854163 


‪மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் நியமனம்‬

மனிதநேய மக்கள் கட்சியின் கீழ்க்கண்ட மாவட்டங்களுக்கு பின்வருவோர்கள் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கட்சியினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1. வடசென்னை - எஸ்.ஏ. அஸீம் (90943 47818 )
2. மத்திய சென்னை - இ.எம். ரசூல் (94441 04381)
3. தென் சென்னை - அஹமது அலி ஜின்னா (99405 11973)
4. திருவள்ளூர் மேற்கு - ஏ. முகம்மது நாசர் (98409 88202)
5. காஞ்சி தெற்கு - யு. ரஹ்மத்துல்லாஹ் (98403 67102)
6. காஞ்சி வடக்கு - ஜே. சலீம் கான் (97103 36277)
7. திருவண்ணாமலை - ஏ. நஸீர் அகமது (98433 85170)
8. தர்மபுரி - சி. ஷயின்ஷா (94430 83782)
9. சேலம் கிழக்கு - எஸ்.ஆர். இமாம் முகைதீன் (94432 59786)
10. சேலம் மேற்கு - எம். அப்துல் ஜப்பார் (98944 01517)
11. விழுப்புரம் வடக்கு - எம். பாரூக் (99447 38870)
12. கடலூர் தெற்கு - ஏ. யாசர் அரபாத் (94436 42614)
13. சிவகங்கை - எஸ். அப்துல் மஜீது (99658 91602)
14. ஈரோடு மேற்கு - ஏ.கே. ஷாநவாஸ் (98420 98744)
15. ஈரோடு கிழக்கு - அமீர் (95009 07033)
16. திருச்சி தெற்கு - எம். பைஸ் அகமது (99446 88886)
17. தஞ்சை தெற்கு - எம். அஹமது கபீர் (77080 05173)
18. திருவாரூர் - பி.எம்.ஏ. சீனி ஜெகபர் சாதிக் (98425 89222)
19. புதுக்கோட்டை கிழக்கு - ஏ. அபுசாலிஹ் (98651 37686)
20. புதுக்கோட்டை மேற்கு - எம். ரஹீம் தாலிப் (98425 64009)
21. இராமநாதபுரம் கிழக்கு - பி. அன்வர் அலி (98948 87511)
22. இராமநாதபுரம் மேற்கு - எஸ். முகம்மது இக்பால் (94426 79419)
23. கோவை வடக்கு - ஏ. சாதிக் அலி (கவுன்சிலர்) (99947 51124)
24. திருப்பூர் வடக்கு - எம்.ஜே. அபுசாலிஹ் (97515 87037)
25. திருப்பூர் தெற்கு - பல்லடம் பீர்முகம்மது (78713 11190)
26. திண்டுக்கல் - ஜே. முகம்மது இப்ராஹிம் (99527 71684)
27. விருதுநகர் - ஐ. அஜ்மீர் கான் (94448 48551)
28. மதுரை வடக்கு - கே. பக்ருதீன் அலி அஹ்மது (94439 77182)
29. மதுரை தெற்கு - நூருல் ஹக் (95426 93889)
30. நெல்லை மேற்கு - ஏ. நெய்னா முகம்மது (9443 41411)
31. நெல்லை கிழக்கு - மில்லத் இஸ்மாயில் (96007 07007)
32. கன்னியாகுமரி - முகம்மது உவைஸ் (94423 03163)
33. காரைக்கால் - எம். நெய்னா முகம்மது (99407 55317)
34. புதுச்சேரி - என்.எஸ்.கே. அப்துல் சமது (89401 84100)
35. கரூர் - பி.ஆர்.எஸ். அபுதாஹிர் (99527 89385)
-எம். தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி
30.04.2015
விளம்பரபகுதி

அதிரையர்களிடம் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கும் அதிரை மின்சார வாரியம்.


(1)
கடந்த காலங்களில் செய்த சேவையை விட, நடப்புக் காலங்களில் அதிரை மின்சார வாரியத்தின் சேவைகள் அதிரை மக்களுக்கு கவலையைத் தருகின்றன.

(2)
தினம் தினம் அதிரையின் ஒவ்வொரு பகுதியிலும் மின் கம்பிகள் அறுந்து விழுந்த வண்ணம் இருக்கின்றது. நல்ல வேலை உயிர் சேதம் இதுவரைக்கும் இல்லை என்றாலும், உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. அதிரை கடல்கரை பகுதியாக இருக்கின்றது, உப்புக் காற்றினால் மின் கம்பிகள் பூத்துப்போய் வலுவிழந்து அறுந்து விழுகின்றது.

(3)
அதிரையில் எல்லா மின்மாற்றிகளும் (TRANSFORMER) முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது, இதன் காரணத்தினால் தான் லோவோல்டேஜ் பிரச்சனை வருகின்றது.

(4)
மின்சார ரீடிங் எடுப்பதில் பல முறை கேடுகள் நிகழ்கின்றன. காரணம் கேட்டால் கம்ப்யூட்டர் மிஸ்டேக், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்ற பதில் வருகின்றது.

(5)
ஏகப்பட்ட மின் கம்பங்கள் பழுது அடைந்து காணப்படுகிறது, அது எப்போது தலையில் விழும் என்று தெரியவில்லை. தலையில் விழும்முன் மாற்றுவதற்கு போதுமான ஊழியர்கள் கிடையாது.

(6)
அதிரை மின்சார வாரியத்தில் நிரந்தரமான (A.E) உதவி பொறியாளர் கிடையாது, தற்போதுள்ள உதவி பொறியாளர் நாடியம், அதிரை இப்படி இரண்டு ஊர்களை கவனிப்பதினால், அதிரையின் பல வேலைகள் தேக்கத்தில் கிடக்கின்றன.

(7)
இன்னும் ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டே போனாலும் இந்தப் பிரச்சனை எப்போது தீரும்?

(8)
அதிரை மின்சார வாரியம் இதை கவனத்தில் கொண்டு காலம் தாழ்த்தாது ஒவ்வொரு பிரச்சனைகளை சரியாக முறையாக முடிக்கும்படி அதிரை பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். தவறும் பட்ச்சத்தில் தமிழக மின் வாரிய உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்

விளம்பரபகுதி

Wednesday, April 29, 2015

அதிரை சேர்மனின் நன்றி அறிவிப்பு

அதிரையில் 24 மணி நேர  அரசு மருத்துவமனை இயங்குவதற்காக அதிரை பேரூர் மன்ற தலைவர் அஸ்லம் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொது மக்கள் ஆகியோரின் தீவிர முயற்சியில் கடந்த மாதம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு.சுப்பையன் அவர்களிடம் கோரிக்கை மனு வைத்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு இதற்காக எந்த ஒரு முயற்சி எடுக்காத காரணத்தினால் அதிரை பேரூர் மன்ற தலைவர் அஸ்லம் அவர்களின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் போராட்டம் பற்றி அரசு அதிகாரிகள் கவனத்திற்கு சென்று சமரச பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். மேலும்  அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டியும் இன்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதை தொடர்ந்து நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம்  ரத்துச் செய்யப்பட்டது.
 இதனைத் தொடர்ந்து இன்று இரவு அதிரை பேருந்து நிலைய பகுதியில்
ஏற்பாடு செய்யப்பட்ட நன்றி அறிவிப்பு  நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தனது நன்றியை  தெரிவித்துக்கொண்டார்.   இதில் எராளமானோர் கலந்து கொண்டனர்.

FLASH NEWS : அதிரையில் இன்று இரவு முதல் மருத்துவர்கள் பணி அமர்த்த படுவார்கள்

அதிரையில் உள்ள அரசு மருத்துவ மனையில் இன்று இரவு 9:00 மணிமுதல் இரவு நேர மருத்துவர்கள் நியமிக்க படுகிறார்கள் .மருத்துவர்கள் இரவு 9:00 மணிமுதல் அதிகாலை வரை மருத்துவ பணியை மேற்கொள்வார்கள் என்று செய்தி குறிப்பில் தெரிவிக்க படுகிறது .இது தொடர்பாக அறிவிப்புகள் பின்னர் வெளியிட  கூடும் என தெரிகிறது .
விளம்பரபகுதி

மறியல் போராட்டம் வாபஸ் ( update)

அதிரை சாலை மறியல் தொடர்பான அமைதி பேச்சு வார்த்தை இன்று காலை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது .இக்கூட்டத்தில் அதிரை பேரூர் மன்ற தலைவர் அஸ்லம்  அதிரைக்கு தேவையான மருத்துவ வசதி கூறித்து கும்பகோணம் வட்ட மருத்துவ இணை இயக்குனர் அவர்களிடம் எடுத்துரைத்தார் .இதனை கேட்டு கொண்ட இணை இயக்குனர் அதிரைக்கு தேவையான மருத்துவ வசதி செய்து தரப்படும் என உறுதி அளித்தார் .

கூட்டத்தின் முடிவில்  மருத்துவ இணை இயக்குனர் கூறியதாவது 

அதிரை உள்ள அரசு பொது மருத்துவ மனையில்  ஒரு மாத காலம் 24 மணி நேர மருத்துவ சேவை செய்ய தற்காலிகமாக மருத்துவர் சுழச்சி முறையில் நியமிக்கபடுவார்கள்  .அதனை தொடர்ந்து ஒரு மாத கால அவகாசத்தை தொடர்ந்து நிரந்தரமாக மருத்துவர்கள் பணி அமர்த்த படுவார்கள் .மேலும் அவசர சிகிச்சைக்கு முதலுதவி    உபகரணங்கள் அமைத்து தரப்படும் என கூறினார் .அதிரை தரப்பினர் வைத்த கோரிக்கைகளை அரசு  ஏற்றதால் நாளை நடக்க இருந்த சாலை  மறியல் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது . 


விளம்பரபகுதி

இழுபறியில் தொடங்கிய பேச்சு வார்த்தை

அதிரையில் 24 மணி நேர மருத்துவ சேவை மற்றும் அதற்கான மருத்துவர்களை பணி அமர்த்தும் கோரிக்கையை  கடந்த மாதம் 30.4.15 தேதி அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு .சுப்பையன் அவர்களை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை மனுவை அதிரை பேரூர் மன்ற தலைவர் அஸ்லம்  தலைமை ஏற்று சமூகஆர்வலர்கள்  ,முஹல்லா நிர்வாகிகள் ,கிராம பஞ்சயத்தர்கள் ஆகியோரின் முன்னிலையில் மனு கொடுக்கப்பட்டது .அதனை தொடர்ந்து அரசு  மனுவில் கூறப்பட்ட கோரிக்கைகளை செய்ய தவறினால் மறியல் போராட்டம் அதிரையில் நடைபெரும் என முடிவு செய்யப்பட்டது .

அதன் தொடர்ச்சியாக அரசு சார்பாக எந்த ஒரு முன்னெற்றம் இல்லாத நிலையை தொடர்ந்து அஸ்லாம் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது .இதன் விளைவாக பட்டுக்கோட்டை கோட்டசியர் அவர்கள் அதிரை பேரூர் மன்ற தலைவர் அவர்களுக்கு மறியல் போராட்டம் தொடர்பாக அமைதி பேச்சுவர்த்தை கூட்டதிற்கு அழைப்பு விடுத்து இருந்தார் .இது தொடர்பாக இன்று காலை 9:30 அதிரை பேரூர் மன்றதிலிருந்து தலைவர் அஸ்லம்  தலைமையில் கிராம நிர்வாகிகள் ,ஊர் முக்கியஸ்தர்கள் ,சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பட்டுக்கோட்டை கோட்டசியர் அலுவலகத்திற்கு பெரும் திரளாக சென்றனர் .பிறகு பேச்சு வார்த்தை கூட்டம் சரியாக 11:30 மணியளவில் நடைபெற துவங்கியது .இந்த பேச்சு வார்த்தையில்  முதல் கட்டமாக அரசு சார்பில் இன்னும் ஒருமாத காலம் அவகாசம் கேக்கப்பட்டது .இதை நிராகரித்த அதிரை வாசிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறர்கள் .

விரிவான தகவல்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ்யில் இனைந்து இருங்கள் 

விளம்பரபகுதி

இந்தப் பக்கம் மரநாய், ஓநாய் எல்லாம் வருதும்மா, நானும் உங்க கூட வர்றேம்மா.[உயிருள்ள புகைப்படங்கள்]


உம்மா! நீங்களும் அடுத்த வீட்டு கல்யாண கூப்பாட்டுக்கு போகப் போறீங்களா!?

ஏன் மகனே அப்படிக் கேட்க்கிரா?

நான் மட்டும் வீட்டில் தனியாக இருக்க பயமாக இருக்குதும்மா.

இங்கபாரு, அடுத்த வீட்டிலே கோழி மாமி, சேவல் மாமா, இவங்களுடைய குஞ்சுகள் எல்லோரும் இருக்கும்போது உனக்கு என்னடா பயம் இருக்குது. நீயும் அவங்க கூட போய் விளையாடு.

சரிம்மா, நீங்க போயிட்டு சீக்கிரமா வந்துடும்மா.

மகனே, நான் என்னடா செய்யுறது, கல்யாண கூப்பாட்டுக்காக வருகிற ஒவ்வொரு ஆளையும் கிளப்புரதுக்குள்ளே போதும் போதும் என்றாகிவிடுகிறது.

மேலும் கூப்பாட்டுக்கென்று நுழைகிற ஒவ்வொரு வீட்டிலேயும் கால்மணிநேரத்துக்கு மேல் செலவாகுது, இதற்கு இடையில் ஊரு உலகத்திலே நடக்குற செய்தி, வாட்ஸ்அப் மெஸ்ஸேஜ், ஸ்கைப்பே-யில் வருகின்ற அழைப்பு, ...............!?..........!?.....எப்படியும் நான் இரவு பதினொன்று அல்லது பன்னிரண்டு மணிக்குள் திரும்பி விடுவேன் மகனே.

உம்மா, நீங்க சொல்றதைப் பார்த்தால் எனக்கு ரொம்ப பயமாக இருக்குதும்மா. கோழி மாமி, சேவல் மாமா, அவங்க குஞ்சுகள் எல்லோரும் ஆறுமணிக்கெல்லாம் அவங்க கூட்டுக்குள் போய் அடைந்து விடுவாங்கம்மா, நான் மட்டும் தனியா இருக்க பயமா இருக்குதும்மா, இந்தப் பக்கம் மரநாய், ஓநாய் எல்லாம் வருதும்மா, நானும் உங்க கூட வர்றேம்மா.

உம்மா! உம்மா!! ப்ளீஸ்மா!!!

!?..............................!?..............................!?..............................

புகைப்படம் மற்றும் சிந்தனை.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.

விளம்பரபகுதி

Tuesday, April 28, 2015

அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் அதிரையர்கள் பங்கேற்க முடிவு

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர வசதி மற்றும்  அதற்காக  மருத்துவர்களை பணி அமர்த்தவும் ,உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரையில் வரும் 30-04-2015 தேதி  அன்று நடைபெற இருக்கும் சாலை மறியல் போராட்டம் அறிவிப்பை அடுத்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியார் தலைமையில் நாளை 29-04-2015 காலை 10 மணியளவில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்க பேரூர் மன்ற தலைவர் அஸ்லம் அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.
அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசனைகள் செய்வதற்கு  இன்று மாலை அதிரை பேரூர் மன்ற  அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு அதிரை பேரூராட்சி தலைவர் s .h அஸ்லம்  தலைமை வகித்தார். இதில் அதிரை உள்ள  மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் , சமூக ஆர்வலர்கள் ,ஊர் முக்கியஸ்தர்கள்  ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

கூட்டத்தின்  முடிவில்  பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியார் அலுவலகத்தில் நாளை காலை நடைபெற இருக்கும் அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான கூட்டத்தில் அதிரை பேரூர்  தலைவர் அஸ்லாம் அவர்களின்  தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர்கள் அரசு பிரதிநிதிகளோடு  விவாதிப்பது எனவும், கூட்டத்தில்அதிரை  முஹல்லா  நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள்  அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள்  ஊர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்களில் நாளை காலை  9 மணியளவில் அதிரை பேரூர் மன்ற  அலுவலகத்திலிருந்து புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பரபகுதி
புகைப்படம் :  (அதிரை நியூஸ் )

இந்த நிலை தொடர்ந்தால் ஊரில் இயக்க கபுருஸ்தான்கள் முளைக்கும்

தமிழகத்தில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் இயக்க வேற்றுமை நிலை தொடர்ந்து தான் கொண்டு இருக்கிறது என்பதற்கு சந்தேகம் இல்லை .கொள்கை பிடிப்பின் காரணமாக சுன்னத் ஜாமாத் ,தவ்ஹித் ஜமாஅத் என இரண்டன சிதறி இருக்கும் அவலநிலை ,கொள்கை பிடிப்பின் காரணமாக சகோதரத்துவத்தை இழந்து இருக்கிறோம் .தொழுகையில் வித்தியாசம் ,ஹதீஸ் கருத்துகளின் முரண்பாடு ,பெருநாள் கால மாற்றம் என நம்மிடத்தில் வேற்றுமைகளை அடிக்கி கொண்டு போகாலம் .தமிழகத்தில் இந்த நிலை பாசிச பயங்கர வாதிகளுக்கு வெற்றியின் படிகட்டுகள் என்பது மறைமுகமான உண்மை .தவ்ஹித் வாதிகள் இணைவைப்பு கொள்கையை தடுக்கும் நோக்கில் தர்கா வழிபாடுகளை தடுக்கும் போராட்ட நிலையை கையில் எடுத்து பல ஊர்களில் தர்கா வழிபாடுகள் இல்ல   நிலையை உருவாக்கினார்கள் என்பது மறுக்கபடாத உண்மை .அதே சமையம் மௌலதுகள் ஓதும் இமாம்களின் பின்னால் தொழுக மாட்டோம் என பல பள்ளிவாசல் களை  புறகனித்து வரும் நிலையும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது .

அது ஒரு புறம் இருக்க சுன்னத் ஜாமாத் அமைப்பினர் தவ்ஹித் அமைப்பின் இலக்கிற்கு மாறாக தர்கா வழிபாடுகள் ,மொளுதுகள் என வழிபாடுகளின் தங்களை முழுமையாக இணைத்து கொண்டு தர்காகளில் விழ கோலம் பூண்ட  செய்கிறார்கள் .இவர்களில் இந்த செயல்களுக்கு என காரணம் என்றால் தவ்ஹித் அமைப்பினர் இவர்களுக்கு எதிரான பிரசாரங்களை செய்வதுதான் .தவ்ஹித் அமைப்பிற்கு  கொள்கை பிடிப்பு மற்றும் சுன்னத் ஜாமாத் அமைப்பிற்கு பாரம்பரிய சடகுகளில் கவனம் என இரண்டும் நம் சமுதாய சொந்தங்களை எதிரி குணம் கொண்ட நிலைக்கு தள்ளப்படுகிறது .இந்த நிலை உஷ்ணம் கொண்டு சென்ற நாட்களில் தஞ்சை மாவட்டம் ராஜகிரி என்ற ஊரில் வேடித்தது .

சக முமினின் உடலை அடைக்கம் செய்ய மறுத்த சுன்னத் ஜமாஅத் கொள்கை பிடிப்பு கொண்ட பள்ளி நிர்வாகம் தங்கள் மையவாடியில் அனுமதிக்க மறுத்தது யாருடைய குற்றம்  ?இந்த நிலை ஏன் வந்தது தவ்ஹித் அமைப்பினர் சுன்னத் ஜாமாஅத் கொள்கை பிடிப்பு கொண்ட பள்ளி நிர்வாகத்தை குறை கூறியும் பள்ளிகளை புறகணிப்பு செய்தது நாலா ? சமுதாய அமைப்பிற்குள் இருக்கும் வேற்றுமை தொடர்ந்தால் ராஜகிரியில் நடந்ததை போல் நம் ஊர்களிலும் நடக்கும் என்பதற்கு சந்தேகம் இல்லை .இந்த நிலையை பிற மதத்தவர் கண்ணோட்டங்களில் இஸ்லாம் மார்கத்திலும் சாதி சண்டைகள் இருக்க தான் செய்கிறது போலும் என்ற நிலையை உருவாக்கு வதற்கு என்ன காரணம் என நம்மால் அறிய முடிகிறதா .

கொள்கை பிடிப்பு மற்றும் பாரம்பரிய சடங்குகள் என இரு வேறு பிரிவுகளால் நம்மை பிரிவினை வாதத்தை தூண்டும் விதத்தில் அமைய பெருகிறது.இஸ்லாம் மார்க்கத்தை மக்களுக்கு தெளிவு  படுத்த முறையான கட்டமைப்பு தமிழகத்தில்  இல்லை என்பத உண்மை இதை யாராலும் மறுக்க முடியாது .சக முமினின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு வருகிறது என்றல் நம் சமுதாய ஒற்றுமையை எந்த நிலையில் இருக்கிறது என்பதினை இயக்க வாதிகள் உணர வேண்டும் .இஸ்லாம் ஒற்றுமையை தான் முதலில் போதிக்கிறது .

இஸ்லாத்தின் பேரும் பாவம் இணை வைப்பது .அந்த பாவத்தை தடுக்க போராடும் தவ்ஹித் அமைப்பினர் ஒற்றுமை என்னும் பாதையை கூடுதலாக கையில் எடுப்பது சற்று உங்களுடைய கொள்கைக்கு பலம் .இணை வைக்கும் கொள்கை கொண்ட வர்களும் நீங்கள் கட்டும் ஒற்றுமையை பார்த்து  அவர்களே தர்காகளை உடைத்து எறிவார்கள்  .ஆனால் அதற்க்கு மாற்றமாக நடந்தால் ஊர்களுக்கு தனி தனி பிரிவாகஇயக்க  மையவடிகளை முளைக்கும் .புனித இஸ்லாத்தை பேணு வதற்கு நபிகள் கற்று தந்த  ஒற்றுமை கயிற்றை பற்றி கொண்டு இஸ்லாத்தை ஓங்க செய்ய அனைவரும் முன்வர வேண்டும்.

ஆக்கம் : ஜஹபர் சாதிக் 


விளம்பரபகுதி

அதிரை சாலை மறியல் அறிவிப்பு எதிரொலி பணிந்தது அரசு

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணிநேர  மருத்துவ வசதி வேண்டியும்  அதற்கான  கூடுதல் மருத்துவர்களை பணி அமர்த்தவும் ,  முதலுதவி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரை பேரூர் மன்ற  தலைவர் S .H அஸ்லம் அவர்களின்  தலைமையில் அதிரை உள்ள அனைத்து மஹல்லா ஜமாத் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் ,ஊர் முக்கியஸ்தர்கள் , ஆகியோரின்  ஆதரவோடு மாபெரும் சாலை மறியல் போராட்டம் வரும் 30-04-2015 தேதி  அன்று நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியாகியது. 
                                               
அதனை தொடர்ந்து  அதிரை பேரூர் தலைவர் அஸ்லம் தலைமையில் ஊர் முக்கிய முக்கியஸ்தர்கள் அதிரை காவல் நிலையத்திற்கு  சென்று மறியல் போராட்டம் குறித்து தகவலை தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக அதிரையின் அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் ஜும்மா தொழுகைக்கு பிறகு  பொது அறிவிப்பு செய்யப்பட்டன. மேலும் துண்டு பிரசுரங்கள், வால் போஸ்ட்டர் மூலமும் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதன் எதிரொலியாக  நாளை  29-04-2015  மாலை 4 மணியளவில் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் அரசு மருத்துவர்கள் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் தலைமையில் ஊர் பொதுமக்கள் காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற இருக்கிறது.இதனை தொடர்ந்து இன்று மாலை 4:30 மணியளவில் அதிரை பேரூர் மன்ற அலுவலகத்தில் மன்ற தலைவர் அஸ்லாம் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடை பெற இருக்கிறது .இந்த கூட்டத்தில் நாளை நடைபெற இருக்கும்  கோட்டாட்சியரின் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் தொடர்பான ஆலோசனைகள் ,மற்றும் முக்கய முடிவுகள் கூறித்து விவாதிக்க படுகிறது.இந்த கூட்டம் தொடர்பாக  முஹல்லா நிர்வாகிகள் ,சமூக ஆர்வலர்கள் ,ஊர் முக்கியஸ்தர்கள் ,கிராம பஞ்சாயத்தார்கள், மற்றும் பேரூர் மன்ற வார்டு உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கு பேரூர் மன்ற தலைவர் அஸ்லாம் சார்பில் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது .
தகவல் : தாரிக் 

விளம்பரபகுதி